Wednesday, July 27, 2005

ஊசிப்போன உப்புமா - கிண்டுதல் ஒன்று

அன்புள்ள பனாரஸ் பிரகாஷத்திற்கு,

வணக்கம்.

வலைப்பூவில் ஊசிப்போன உப்புமாவை கிண்டியுள்ளீர்கள். இது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அ. வலைப்பூக்களில் உப்புமா குறித்து திரு. பூண்டி புஸ்பராசு ஒரு பதிவிலிட்டிருக்கின்றார். அது கிரியா-ஊக்கியால் வெளியானது. பயிற்றம் பருப்பு, பயித்தம் பருப்பு என்று உப்புமாவாக்கம் (நன்றி திரு.சங்கட்) செய்யப்பட்டு, அச்சிறு சொல் பல பெரிய பத்திரிக்கைகளில் கையாளப்பட்டுகிறது. 1980 களிலும் பின்னரும் மீந்தஇட்லியிஸம் குறித்தும் அதனை வைத்து இட்லி-உப்புமா கிண்டுவதை பற்றியும் சிறுபத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதியிருக்கின்றீர்கள். உசிலியிசம், அதன் நீட்சியான மீந்தஇட்லியிஸம் என்ற சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது நீங்கள் கொடுத்துள்ள சொல் (ஊசிப்போனயிஸம்) பொருத்தமானதாக இல்லை.

ஆ. நீங்கள் ஊசிப்போனயிஸம் தெரிந்தது போல அடிப்படையை விளக்குகிறேன் என்று கிண்டியிருப்பவை குமட்டுதற்குரியவை. ஏனெனில் பருப்பு, சமாச்சாரம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு புது விளக்கம் தர முனைந்துள்ளீர். அந்த விளக்கம் அசுத்தமாக இருக்கிறது. பருப்பு, பருத்தல் போன்றதே உப்புமா உப்புமா? (பெயராகவும், வினையாகவும் ஒரே சொல் என்பதையே தத்துவக் கண்ணோட்டத்தில் சமாச்சாரம் என்றேன்) எந்தக் கண்ணோட்டத்தில் காண்கின்றோம் (குவியமா குழியமா என்ற ஆடிகளின் (வ)கையிலும் வேறுபடலாம்) என்ற தெளிவு வேண்டும். உங்களிடம் அது இல்லை. மாறாக நீங்கள் உப்பு தேவையான அளவு எடுக்கச் சொல்லியிருப்பினும் அதைச் சமைக்கும் போது கலக்கச் சொல்லாத உங்கள் மனம் போன போக்கில் உப்பு-சப்பின்றி கொண்டு விளக்க முயல்கின்றீர்.

இ. சைடு-டிஷ் குறித்து எழுதியுள்ளதும் பொருத்தமற்றதாக உள்ளது. சைடு-டிஷ், ஆர்லிக்ஸ் பையன் முன் வைக்கும் தத்துவ பதார்த்தங்களை ஒரிரு வாக்கியங்களில் விளக்குவது கடினம். ஒரே கல்ப்பில் ஆரஞ்சு ஜூஸ¥ அடித்து விட்டு எழுப்பும் கேள்விகள், சைடு-டிஷ்ஷின் பிண்ணனி, போன்றவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஆர்லிக்ஸ் பையனைப் போல் ஒரே வாக்கியத்தில் 'அப்படியே சாப்பிடுவேன்' என்று உ(கி)ளறுவதாலோ, பாபுவின் அறுசுவை டாட் காம் குறித்த புகழ் பெற்ற உப்புமாவ¨ குறிப்பிடுவதலோ தெளிவான புரிதல் கிடைத்துவிடாது. நீங்கள் செய்துள்ளது காரட் அல்வாவை கால் நிமிடத்தில் (காரட்டை நறுக்கிக் கொட்டு... ஜீனியைக் கொட்டு... கிண்டு... கிட்டியதே அல்வா என்று கூறி) செய்வதெப்படி என்று பிதற்றுவதற்கு ஒப்பாகும். பிரச்சினை என்னவென்றால் அல்வாவின் அரசியல் கோட்பாடுகளை பற்றிய ஒரு குறைந்தபட்ச புரிதல் பெற வேண்டுமானால் ஹல்வாசிட்டி பாபு, ஹல்வாசிட்டி கம்மி, திருநெல்வேலி அயங்கரன் போன்றோர் கிண்டுதல் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். உமக்கு உப்புமாவும் கிண்டத் தெரியவில்லை. அல்வாவும் கிண்டத் தெரியவில்லை. சும்மாவா சொன்னார்கள் கால் நிமிடத்தில் காரட் அல்வா கிண்டத் தெரியாதவன், உத்திரம் மீதேறி உசிலை உப்புமா கிண்டப் போனானாம்...உமக்கு கிண்டுவது போல் நடிக்கத்தான் தெரிந்திருக்கின்றது

ஈ. மீந்தஇட்லியிஸம் வேஷ்ட் செய்யா பொறுப்புகளையும், மறுபயன்படுத்தல் (reuse?) அறநெறிகளையும் குறித்துப் கிண்டிய/கிண்டும் தத்துவம், இட்லி உப்புமா வேண்டுமா என்ற தனிமனித சுதந்திரம், அட உப்புமாதானே தெரிவு, இருப்பு(மா), மதியீடுகள் போன்றவை முக்கியமானவை. உப்புமாவாதிகளை உசிலிசார் உப்புமாவா(வியா)திகளாகவும், உசிலி நம்பிக்கையற்ற, உசிலி வெறுப்பு இயல்பான ரவா நேசமிக்க உப்புமாவா(வியா)திகளாகவும், பிரிக்கலாம். உப்புமாவாதிகளை வெறும் கிண்டுபவர்கள் என்று சொல்வது அறிவிலித்தனம். அது அவ்வாறு கிண்டியவரின் பொறுப்பற்றதன்மையினை, அறியாமையினைக் காட்டுகிறது.

உ. கொள்ளுகாரப் பருப்பு, துளஸிஸ் ஸ்பெஷல் குருமா, முத்துப் புலவு, கோழிக்கறி பிரியாணி இவை குறித்தெல்லாம் விரிவாக எழுதியவர் பாபு. இன்னும் சொல்லப்போனால் கோங்குரா, கிச்சடி சோறு ஏன் காரட் பொங்கலையே கிண்டியவர் பாபு. ஆனால் உங்களுக்கு உப்புமா கூட சரிவர கிண்டத் தெரியவில்லை. கிண்ட முடியவில்லை என்றால் கூட பர்ருவாயில்லை. ஆனால் உப்புமா குறித்து ஏனிப்படி தப்பும் தவறுமான புரிதல்கள்? இந்த லட்சணத்தில் முக்கியமான ஷோ'பிஸ்ஸான' சேங்கர் சமூக விஞ்ஞானி குறித்து வேறு எழுதுகிறார்.

ஊ. (ஊஊஊஊஊ இன்னும் கொஞ்சம் ஊளைகள்)

எ. (என்னயென்ன என்னயென்ன பெயர்களை உதிர்ப்பது என்னயென்ன என்னயென்ன)

ஏ. ஏன்னா மொத்ததில் நீங்கள் எழுதியுள்ளது உளறல். தமிழில் அதிகம் பேர் படிக்கும் நடுநாயகமான உங்கள் பூவில் இப்படி ஒரு குறிப்பு வெளியாகியிருப்பது வெட்கக்கேடு.

நான் எழுதியுள்ளது குறித்து உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கலாம். தயவு செய்து நான் தனியஞ்சலிலே கொடுக்கப் போகும் இணைய முகவரிகளில் உள்ளவற்றைப் பாருங்கள். நான் சொல்வது எந்த அளவு சரி என்பது உங்களுக்குப் புலப்படும். பாபுவின் வலைப்பதிவினையும் பாருங்கள். அதில்பாபுவின் வலைப்பதிவினையும் பாருங்கள். அதில் புளி அவல் உப்புமா குறித்து ஒரு அத்தியாயம் உள்ளது. மேலும் மனோகரா போளி, கருப்பட்டிக் களி ஏன் பிள்ளை அல்வா குறித்தும் அவர் அதில் எழுதியிருக்கிறார்.

நீர் கிண்டியுள்ளது பதிவாகி வாசக/வாசகியர் வாயிலும் வயிற்றிலும், எழுதியுள்ளதில் பிழைகள்,தவறுகள் இருப்பதால் அதைப் பொருட்படுத்தி கிண்டாமல் கிளறாமல் இருக்க வேண்டாம் என்றும், இத்தகைய குறிப்பு வெளியானது குறித்து வருத்தம் தெரிவித்தும் கிண்டியவர் என்ற முறையில் நீங்கள் மீண்டும் கிண்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (அட நொக்காமக்கா :-) மீந்தஇட்லியிஸம், ஊசிப்போனயிஸம் குறித்து வலைப்பூவில் யாரேனும் போட்டி வைக்கலாம். இக்கடிதம் என் தனிப்பட்ட முறையில் எழுதப்படுகிறது. இதற்கு எந்த ஒரு அமைப்பிற்கும், நிறுவனத்திருக்கும் தொடர்பில்லை.

இதைப் படித்தமைக்கு நன்றி
இவண்
Kவி கருணாதாஸ்

இக்கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பபட்டது.
------------------------------------------------------------------------------------------
இது போன்று எழுதுவது மகிழ்ச்சியினைத் தரும் காரியமல்ல. தமிழ் வலைப்பதிவுகளில் யாரேனும் இது குறித்து எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.யாரும் எழுதவில்லை. பனாரஸ் பிரகாஷத்தின் பதிவு வெளியாகி 24 மணி நேரங்கள் கழித்(ந்)தே இதை எழுதி அனுப்பினேன். நேற்று வலைப்பதிவாளர் ஒருவர் முகமூடிக் கதிரில் கோஸ்ட்டா ராஜா என்பவர் எழுதியிருந்த கட்டுரையினை இட்டிருந்தார். அதிலும் இது போல் பல உப்புத், தப்புப் பிழைகள். அக்கட்டுரை ஒபன் கு(தி)ருமா குறித்தும், கூண்டு ரவா குறித்தும் தவறான தகவல்களைத் தருகிறது. இப்படிப்பட்ட சப்பை மேட்டரை தமிழில் வெளிவருவது வாசகர்கள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும். எளிமையாக கிண்டுகின்றேன், சாப்பிட சுவாரசியமாக பரி'மாறுகின்றேன் என்று எழுதும் போது பொறுப்புடன் தகவல்,கருத்துப் பிழைகள் இன்றி கிண்ட வேண்டும். நாம் கிண்டியது சரிதானா என்பதை குறைந்தது இரு முறையாவது ருசி பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட கேட்டுரைகள் வெளியாவதை விட தமிழில் இவை குறித்து எழுதப்படாமல் இருப்பதே ஒருவிதத்தில் மேல்.தவறான கிண்டுதலை விட கிண்டாமையே பரவாயில்லை என்று கருக'க் கூடிய வகையில் கிண்டுதல்கள், கிளறுதல்கள் தமிழில் எழுதப்படுவதும், அவை வெளியாவதும் கேலிக்கூத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

Tuesday, July 26, 2005

நம்பிக்கை

நம்பிக்கை***

ஆனந்த விகடன் ஆசிரியருக்கு
சாதனைச்சிறுவன் ஜனா!
பரட்டையன் டூ வேட்டையன்
இரண்டு மனைவி வேண்டுமா...?
மனைவியின் சொத்தை திருடிய கணவன் கைது...
பின்புலம் அறுந்த உருவகங்கள்
வலைப்பூக்களில் நம்பிக்கைத் தேடி
டிஸ்கவரி விண்ணோடம் - ஒரு முடிவின் ஆரம்பம்

பினா.குனா 1: ***நம்பிக்கையான பின்னூட்டங்கள் நம்பிக்கை தருகின்றன. "நம்பிக்கை பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்"ன்னு குசும்பன் நான் சொல்றேன். வெறும் எட்டு நம்பிக்கைகளை எனக்கு முன் வைக்க உதவிய வலைப்பூவற்கட்கு நன்றிகள். நம்பிக்கைகள் கூட :-)

ஐடியா உபயம் கரும்பு ஜீஸார் (அவர் வலைப்பூக்கள் பதிவுகள் வைத்து கவிதை சொ(கொ)ன்னார். நான் வெறும் தலைப்பூக்களை சுட்டுட்டேன். அம்புடுதேன்.

பினா.குனா 2: நொக்கா மக்கா இனிமே இப்பிடி கவித எய்துற உத்தேசமே இல்லே :-)

Friday, July 22, 2005

இஸ்கா மத்லஃப் க்யா ஹை

இதுவொரு தமிழ்ப்பதிவா? ஞானத்தின் பீடங்கள் கூறுகின்றது. தூய தமிழை தார்பூசி யாம் வளர்க்கும் நேரத்தே பின்னூட்டங்களில் பேதமை வளர்க்கும் ஏஜண்ட் பீடங்களை நினைத்தால் எமக்கு சிரிப்பு வருகின்றது. பேதமை பேதமை...

ரமேஷ் பாசு... ஷாந்தி ஷாந்தி ஷாந்தி...

கொஞ்சம் நிதானமா பேசுவோம்

அநாகரிக பின்னூட்டங்களை வேண்டி விரும்பியவர் வலைப்பதிவில் யார்? அதை எதிர்த்து குற்றம் சாட்டவில்லை என்ற ஒரே காரணத்திற்காக புஷ்ஷைப் போல் "Either you are with US or with them" என்று பொத்தாம் பொதுவாக கூறுதல் என்ன நியாயம்?

பரி "என்பவரோடு" இணையத்தில் எனக்கு பரிச்சயம் உண்டென்பதால் (உடனே அவர் வீட்டில் தக்காளி ரசம் சாப்பிட்டேன் என்னும் பின்னூட்டு வரக்கூடும் !!!) இவ்விடயத்தைக் கூறுகின்றேன். ஒருவகையில் உமது பின்னூட்டம் "எரிதம்" தான். என்னைப் பொறுத்த வரையில் உமது பின்னூட்டம் ஜீஜுபி... ஆனால் பரிக்குப் பிடிக்கவில்லை என்பதைத்தான் அவர் வெளிப்படுத்தியதாக நான் உணர்கின்றேன். அவரது புழக்கடையில் அவர் புழங்குவதின் விதிகளை நாம் மதிப்போம். அ·து அனைவர்க்கும் பொருந்தும். எனக்குத் தெரிந்தவரை ஆபாசத்தை அடியோடு வெறுப்பவர் பரி. ஆகையால் கண்டிப்பாக அவரது பதிவின் நோக்கம் ஓரிடம். உங்களுடைய எதிர் வினை ஓரிடம்.

மாயவரத்தாரே... உமது பதிவுகளையும், உமது பின்னூட்டங்களையும் தொடர்ந்து வாசித்து வருகின்றேன். உங்களது நேர்மையையும் அறிவேன். பரியையும் இணையத்தின் வாயிலாகவே அறிவேன். அவரும் என் மதிப்பில் உள்ளவர்.

Shake Hands BUDDIES !!!!

நான் சொல்ல வந்ததில் தவறிருப்பின் என்னை நீங்கள் இருவரும் மன்னிக்கவும்.

இணைய வலைப்பூவில் நட்பூ வளர்ப்போம் !!!

Wednesday, July 20, 2005

சோதனையுடன் சடை பின்னுகின்றேன்

தமிழ்சாம்பு: என்னை ஒட்டுக் கேக்குறாங்க. உளவு பாக்குறாங்க. கொஞ்சநாள் புத்துல பதுங்கிக்கிறேன். அப்புறமா பாக்காலாம். (புஸ்ஸ்ஸ்ஸ்....)

என் பின்னலுக்கு வெளியே: ரெமோ பார்ஸிசம், சூர வணக்கம், பசைத் தொற்று, எச்ச மொழி, கபம்சகம், மைனர் குஞ்சுகள், என்னுடைய தங்கத் தாரகை நேரத்தை இனி(மேலாவது) ஆக்கப்பூர்வமாக 320 பாகை திரும்பி யாகூவுடன் விடை பெறுகின்றேன்.

விடாது கறு(ரு)ப்பு: தமிழ்சனத்துக்கு இறுதி வார்த்தைகள்...பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே. (கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு). எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள். Love You All.

காஞ்சிப்(போன) பிலிம்கள்: மங்களம் சுப மங்களம். அடுத்த ஷோ காட்டும் வரை வரை மங்களம் சுப மங்களம். இதுவே இப்படத்திற்கான கடைசி சிலைடு. நன்னி. வணக்க்கம்.

சட்டியை தீச்சுடினும்: அல்வா கிண்டுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து புதுவீடு குடிபோகும்வரை காத்திருப்பேன். மனிதக் கடவுளாம் கிருமி போஜனமாம் வைக்கிறேண்டி அல்வா.

பெண்ணோட்டம்: ஸ்தீரி'னிவாஸ்ஸ¤ன்னு ஷொல்லிட்டாளே! விசி'(த்)தா அழவேண்டும்? அப்பவே அடிச்சுண்டேண்.. கேட்டேளா? ஐபி'யாம் கருமமாம்... தமிழ்சாம்பு விட்டுட்டு போகாதீங்காணும்... ஏடு கொண்டல வாடா... ஸ்பெஷல் தரிசனுத்துல அட நீ வாடா...

குசும்பன்: நியூ ஹாம்ப்ஷயராம். பெயரிலி அண்ணாச்சி. உம்மோட மோப்ப நாய்க்கு வயசாயிடுத்து. கண்டத' மோப்பம் பிடிக்கறது. பல்லாவை மாத்துங்கோ. இல்லேன்னா நியூ ஹாம்ப்ஷயருக்கு மாற இடமாற்று படி (relocation allowance) கொடுங்கோ !!! நோக்கு புண்ணியமாப் போகும்
!!! வெறும் ஸ்மைலி போட்டே வாழறது போரடிக்கலியா நோக்கு !!! அபிஷ்டு (செல்லமாய்) :-)

பினா.குனா.டைம்ஸ் டாப் வலைப்பதிவுகள்ல இணையகுசும்பன் வந்ததாய் ஒரு (கெட்ட) கனா. அதான் அச்சு பிச்சுன்னு உளறிட்டேன். ஹிஹி...ஹிஹி...

Tuesday, July 19, 2005

டில்லி, பாம்பே, கல்கத்தா

இது நிற்காது.

எல்லா கொசுக்களுக்கும் ஊற்றுக்கண் நகராட்சிகள் தன் ஏரியாவிலும் மற்ற ஏரியாக்களிலும் அடிக்கும் கொசுமருந்தே காரணவென்பது என் சமீபத்திய கண்டுபிடிப்பு. அப்படிப் பார்க்கும்போது பல நூறு வருடங்களாக நகராட்சி/பேரூராட்சி/ஊராட்சி பதவிகளில் இருந்தவர்கள் தன் ஏரியாவிலும் மற்ற ஏரியாக்களிலும் கொசுக்கள் மீது எண்ணற்ற அட்டூழியங்களை கட்டவிழ்த்துள்ளனர். உலகில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் கொசுப்பிரச்சினைகளுக்கான காரணம் மேற்கூறியவாறு அவற்றுக்கு போஷாக்களிக்கும் மருந்து. மீதிக்கு அம்(ரு)மருந்து அடிப்பவர். இக்காரணங்களையே சமீபத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு காரணிகளாகக் கூறலாம்.

கொசுவழிப்பு தொழில்நுட்பம் பரவப்பரவ (கொசுமருந்து, கிரீம், காயில், வில்லை etc.,) பாதிக்கப்பட்டவர்கள் - மக்களோ, மாக்களோ (OTL உபயமண்ணா...) - தாங்களும் கொசுக்களை போட்டுத் தாக்க முடியும் என்று காண்பித்து வருகின்றனர். டில்லி, பாம்பே, கல்கத்தா - நகரங்களை முழுமையாக ஆக்ரமிப்பு செய்ய முடியும் என்று கொசுக்கள் காண்பித்துள்ளது. கொசுக்களையும் மிஞ்சும் பயங்கரப் பிராணிகள்(?) நாளை தோன்றும்.

இன்று கொசு கடித்த கோபத்தில், வீங்கிய முகத்துடன் பேசும் டில்லிவாசி ஒருவர் தமது நகராட்சியுடன் உதவிகளை மீறித் தாம் எத்தனை கொசுக்களை அடித்துக் கொன்றோம் என்பதை இன்று தூங்கப் போகும்போது நினைத்துப் பார்ப்பாரா? பூட்டாசிங்கை விட புத்திசாலியானவரான டில்லிவாசி, இதை யோசித்துப் பார்ப்பது நல்லது.

தனது சுய-நலத்தை நிலைநாட்ட பிற கொசுவினங்களை அடியோடு அழித்துக் கொல்வது பாவமல்ல என்கின்ற policy of exigency என்னும் சர்வைவலிஸத்தை முன்னிறுத்திய கொஸ்(சு)ஸிங்கர், ரெமோ-அந்நியன்கள் ஆகியோரே உலகில் கொசுவாதம் அழியக் காரணமானவர்கள்.

டில்லிக் கொசுக்களைக் கழுவேற்ற, கும்பகோணம் கொசுக்களை குஷிப்படுத்துவது, அதனால் கும்பகோணம் கொசுக்கள் லோக்கலில் செய்யும் அட்டகாசத்தை கண்டிக்காமல் விட்டது, சென்னைக் கூவத்தை கொசுக்களின் கூடாரமாக மாற்றியது, நதித்துவாரங்களையெல்லாம் நாகரிகத்தின் வாயில் என்பதைவிட கொசுக்களின் வாயி'லாய் நாசமாக்கிக் கொண்டிருப்பது, கோயம்புத்தூரில் கொசுக்கள், அயோத்தியாவில் கொசுக்கள், காஷ்மீரில் கொசுக்கள் என்று கொசுக்களை வளர்த்து விடாத ஆக்களே கிடையாது. (நாமொன்றும் பரிஷ¤த்தமில்லை. உள்ளூரிலேயே வட்டதுக்கு வட்டம் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடும் கொசுக்கள் ஏராளம். அதைவிட அடுத்த ஊருக்குள் ஏவிவிட்டும் அல்லது ஏற்றுமதி செய்து குசும்பு செய்வதும் நிச்சயமாக குத்துமதிப்புடன் இருக்கும்)

இன்றளவிலும் கொசுக்களால் பல சாவுகள். இறந்தவரென்ன இன்னா செய்யாதவரா? மலேரியா போன்ற வியாதிகளைத் தடுக்காத, அநியாயமான கொசுப்போரை தடுக்காத குற்றம், ரோட்டோரத்தில் உச்சா (மூச்சா?) போகும் வயதிலுள்ள அத்தனை பேர்களும் உண்டு. இது எல்லோருக்கும் பொருந்தும். நம்மூரில் ஒவ்வொரு முறையும் ஒரு கொசு முட்டை பொறியும்போது அதற்கு நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் (நிலம் ஆறு வகைப்படுவன; அ·தாவன குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை மற்றும் அல்-கொசு'தா) காரணம். அதைப்போலவேதான் ஒவ்வொரு சென்னைவாசியும் கூவத்திற்கு காரணம். ஒவ்வொரு நாட்டுக்காரனும் இன்றைய கொசுத்தாக்குதலுக்குக் காரணம்.

பினா.கூனா. இன்னைக்கு கொசுத்தொல்லை தாங்க முடிலைண்ணா... கரும்பு ஜீஸ் கிளாஸ் மேல மொய்க்கிற ஈக்களைப் போல எம்மேல கொசுக்கள். அதுனால போ(பொ)த்திண்டு தூங்கப்போறேண்ணா. இல்லாங்காட்டி இன்னும் நீட்டி முழக்கி 'பாம்பைப் பாத்தாலும், கொசுவைப் பாத்தாலும், பாம்பை விடு. கொசுவை அடி' அப்பிடின்னு ஏகப்' பட்டதுக்கு பினாத்தலாம்னு இருந்தேன். வர்ணம் பூசாம சொல்லிட்டேங்ணா. '''குசும்பு பிரம்மாதம்''' (யோவ் பெயிண்டு விளம்பரத்த சொல்றேன்யா!)

Wednesday, July 06, 2005

முழுக்க விழுந்தபின்

Thursay, June 30, 2005

ஜெயலட்சுமியின் செவ்வியைப் படிக்க நேர்ந்தது.

குவியப்படுத்தப்பட்ட வியாபார யுக்தியொன்று வீழ்ந்தபோது அது எனக்கு மிக ஆழமான வேதனையை, தவிப்பை, நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது; இத்தனைக்கும் அதுவும் தனிமனித வியாபாரத்தையும், வர்த்தக சுரண்டலையும் ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட எந்த ஒரு கொள்கையையும், மைக்ரோஸாப்ட் போன்ற ஒரு காழ்ப்புணர்வு அரசையும் போல வெட்கமின்றி, தயக்கமின்றி, கொடுங்கோன்மையுடன் நிறைவேற்றி வந்த ஒரு அமைப்புதான் என்று அறிந்திருந்த போதும் அவ்வேதனை இருக்கவே செய்தது. அதுபோல சமீப காலங்களில் ஜெயலட்சுமியின் வியாபாரப்பற்று, மேலாண்மை விரோத மனப்பான்மை, காவல்துறை மோகம் இவைகளின் (ஆமாம்... இவைகள், அவைகள் தூய தமிழ்ப்பதங்களா? பாரா'மல் போய்விடுங்கள்) தடங்களை அவரது பிற்காலத்திய ப(து)டைப்புகளில் இருந்து உருவியெடுக்க(?) முடி'ந்திருந்தும் அவரது இன்றைய வீழ்ச்சி அடைந்த தோற்றம் பரிதாபம் ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அவரது இந்தச் செவ்வி அதன் உச்சம். இவ்வளவு கோமாளித்தனமாக அவரே இன்னொரு முறை செவ்வி கொடுக்க ஏலாது.

வெற்று சமாளிப்புகள், எந்தத்தரவுகளும் இன்றி சொல்லமுடியாத அங்க(த)ங்கள், பாமரத்தனமான ஒப்பீட்டின் கீழ் உண்டாக்கும் எங்கேயோ இள(ங்)கியகோவனுக்குண்டான கிசுகிசு மூட்டல்கள், பொய்யான சவடால்கள், அற்பத்தனமான தீர்மானங்கள், இவைதான் அவரது செவ்வி.

சபலிஸ்ட், பேராசைலிஸ்ட் இவர்கள்தாம் MLM'மை (Multi-Level Marketing) கடவுள் என்கிறார். இது போன்ற ஒப்பீடுகளை செரீனா (கஞ்சா அழகி), மற்றும் தனுஜா, சுகன்யா போன்ற நடிப்புலக செம்மல்களின் செவ்விகளிலோ, மாளவிகா போன்ற திறந்'தோய்ந்த மாய்மால திரைப்படங்களிலேயோ மட்டும் தான்(?) காணமுடியும். கடவுள் என்ற கருத்தாக்கம் தனி
நபரின் (ர.ராம்கி மன்னிக்க) தலை'வீக விழைவில், நிறுவனப்படுத்தப்பட்ட நடிப்பின் அரசியலில் எந்த இடங்களை ஆக்கிரமிக்கிறது, அது தனிமனிதனிடத்தில், சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன இவைகளை மேலே குறிப்பிட்டவர் அறியமாட்டார்கள்; ஆனால் ஜெயலட்சுமி அறிவார். ஆனாலும் பின்னர் நக்கீரன் இதழில் குறிப்பிட்டபடி இந்த கேவலமான பொய்மை கலந்த, கைத்தட்டலை நேசிக்கும் முன்வைக்குமளவுக்கு நேர்மை குன்றியவராக ஆகிப்போயிருக்கிறார். பாமர(ரை)க்கனி ஒருமுறை சொல்வார், "நான் யாருக்கும் மூடியில்லை. திறந்திருப்பவர்க்கும் கூட. இன்னும் சொல்வதானால் ஆணழகனும், இன்பத்தில் தமிழனுமான பெரியபிள்ளையானுமோன அப்படி ஒரு பிள்ளை இல்லையே என்றே நான் வருந்துகிறேன். என்னுடைய உழைப்பாலும், சக்தியாலும் அப்படியொரு பிள்ளையை உண்டாக்க முடியுமானால் அதற்காக நான் உழைக்கத் தயங்கமாட்டேன்" என்று.

என் மார்க்கெட்டிங்கையே நேசிப்பதும், என்னுடைய கஸ்டமர்களையே நேசிப்பதும் மானுட இயல்பானதாக இல்லையே, அது இயந்திரத்தனமாகவல்லவா இருக்கிறது என்கிறார். அப்படி நேசிப்பவர்களாக தமிழர்களை (குறிப்பாக மதுரையையும், மதுரையை சுற்றியும்), மார்க்கெட்டிங்யுரிமை குறித்து பேசுபவர்களை குறை சொல்கிறார். ஆனால் நேர்மையுடன் சொல்வதானால் ஒரு வியாபார யுக்தியை (ஜெயலட்சுமியியத்தை) வேறு வியாபாரிகள் விற்றுவிடக்கூடாதென்பதை தீவிரமாகக் கைக்கொண்டதினால் அந்த யுக்தியையே அழித்தவர்களையும், வேறு யுக்திகளை குறிப்பாக ஜெயலட்சுமியியத்தை பேசுவது தீண்டத்தகாதது என்பதாக தீவிரமாக நம்பி ஒழுகி வந்த இளங்கோக்களுக்கும்தான் இவர் இந்த அறிவுரையைச் சொல்லவேண்டும். தமிழர்கள் ஏற்கெனவே சொரணை அற்றவர்கள். மரியாதை தெரியா(இல்லா)தவர்கள், மற்ற (ஆங்கில, வாந்தி, சமஸ்கிருத) மொழியறிவை ஞானபீடத்தின் (நீ வாடீ வா) குறி'யீட்டாகக்கருதி, அம்மொழி பேசுபவர்களை பேரறிஞர்களாகக் கருதும் அளவுக்கு மனம் நோய்மை அடைந்தவர்கள். இவர்களிடம் போய் தமது மார்'கட்டிங்கையே நேசிக்கும் மிருக உணர்ச்சி கொண்டவர்கள் என்று சொல்வது வேடிக்கை மட்டுமல்ல, விபரீத நோக்கம் கொண்டதுமாகும்.

கணேசன் என்றொரு சிவகங்கைக்கு அருகிலுள்ள சாலூர் கிராமத்தைச் சேர்ந்தவன். கணேசன் நிறுவனப்படுத்தப்பட்ட வணிகவியலைப்பற்றி பேசும்போது பாடமொழி மட்டுமல்ல, பள்ளிக்கழிவறைகட்டிடங்கள் கூட வாஸ்து முறைப்படியே கட்டப்பட்டிருக்கவேண்டுமல்லாது, அவு(ஸ்)த்தேரிலியா முறைப்படி க(¡)ட்டப்பட்டிருக்கக்கூடாதென வலியுறுத்துவான். அன்றைய அரசையும், தமிழர்களையும் குறித்துப்பேசும் போது தமிழின் மீது நம்பிக்கைஇல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு இசைவு, களிபாடு, வசை, வலை, கலவி இப்படி எல்லாத் துறைகளிலும் இணையத்தமிழே தமிழ் நாட்டில் முதன்மையாக இருக்கவேண்டும் என்று சீறியும் சினந்தும் சொல்வான்.

ஜெயலட்சுமி கா(?)நேசனின் அம்மிருகத்தனமான உணர்ச்சி குறித்து என்ன நினைப்பாரோ? இல்லை தமிழின் இழிநிலை, தமிழர்களின் மனப்பான்மை மாறிவிட்டதா? அதுவும் மேலாண்மை தளத்தில் வியாபாரத்தை திணிக்க, அதன்மூலம் தனது தன்னை மேன்மைப்படுத்திக்காட்டிக்கொல்ல, வருட, வருடிப் படுக்கும் 'முனைவர்' காலடியில் கிடந்தும், பொலீஸ் தளத்தில் சபலத்தை தி(த)ணித்து, தனது பெண்ணீயத்தை வைத்து ஒரு காலனி மனப்பான்மையை வளர்க்கவும், பண அடையாளத்தை அழிப்பதன் மூலம் அடுத்தவர் வளங்களை சுரண்டவும் முனைவரின் தோளோடு தோள் நின்றும் ஜெயலட்சுமி மற்றவரை நேசிக்கும் மனித குணத்தை மேடையேறி தமிழர்களுக்கு போதிக்கிறார். இது சூழ்ச்சியன்றி வேறென்ன?

தமிழர்களின் சான்றாக, கணேசனின் சார்பாக இப்போரை, வணிகத்தின் பாதுகாவலர்களை அவர் குற்றம் சொல்ல, கண்டிக்க, அவர்கள் நோக்கம், வழிமுறைகளில் இருக்கும் தவறை சுட்டிக்காட்ட அவருக்கு நியாயமான எல்லா உரிமைகளும் இருக்கின்றன. அவர் தம்மீதுள்ள நம்பிக்கையின்பால் உள்ள பேரன்பினாலும், சான்றாண்மையாலும், இக்கேடுகெட்ட மக்களின் எதிர்காலம் கருதும் முன்னோக்காலும், கெட்டிப்படுத்தப்பட்ட வியாபார யுக்தியின் முன்னோக்காலும், இளங்கோ'வழிப்பை முன்னெடுக்கும் சதிகாரர்களின் வழிமுறைகளை உணர்ந்துகொள்கிற சாதூர்யத்தாலும் இன்னும் சரியான, முறையான, எளிதான, அழகான வழிகளில் எப்படி மார்க்கட்டிங்கை காப்பாற்றுவது என்பதை சொல்லியிருந்தால், அதை முன்னெடுத்து உழைத்திருந்தால் அவருக்கு இன்றைய MLM'மை பேசுபவர்களை விமர்சிக்கும் தகுதி தன்னால் வாய்த்திருக்கும். நாமும் அவரையும் அவரது கண்டனங்களையும் கணேசனின் கண்டனங்களை எப்படி புரிந்துகொள்கிறோமோ அப்படி மரியாதையுடன் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.

ஆனால் ஜெயலட்சுமி எதிரிகளின் பக்கமிருந்து கொண்டு குறைவான ஆயுதங்களோடும், ஆட்படைகளோடும் போராடுகின்றார். எள்ளி நகையாடுகிறார். அவர்களிடம் இருக்கும் போலித்தனங்களை சுட்டிக்காட்டி அந்நோக்கங்களின் நியாயங்களையும் எதிரிகளின் வழிமுறைப்படியே கேலிசெய்கிறார். அதற்காக அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், தனது சாதுர்யத்தையும் பயன்படுத்துகிறார். இந்தக் கயமையே அவர் மீது அருவருக்கத்தக்க உணர்வை ஏற்படுத்துகிறது. மற்ற வழிகளை வளர்த்தெடுத்தால் மார்க்கெட்டிங் வளரும் என்கிறார்; அது சரிதான். ஆனால் அதற்கும் முறையிருக்கிறது. நிச்சயம் ஜெயலட்சுமி செய்வதும் சொல்வதும் அம்முறைகளின் பாற்பட்டதல்ல. அதுவும் இன்றைய நிலையில்.

அவர் மார்க்கெட்டிங் பற்றி, யுக்தியைப் பற்றி அவர் சொல்கிற கருத்துக்கள் தேர்ந்தெடுத்த கயமைத்தனமானவைகள். மார்க்கெட்டிங், ஏஜண்ட் ஏமாற்றுவதால் வாழ்வதில்லையாம், இவர்
போன்றவர்கள் மார்க்கெட்டினால்தான் வாழ்கிறதாம். எவ்வளவு கயமைத்தனம் நிறைந்த தற்பெருமை? MLM'ல் இல்லாத வியாபார விற்பன்னர்களா? பொருட்களா? இல்லையில்லை வஸ்துக்களா? அப்படி இருந்தும் ஏன் அழிந்தது (என நான் நினைக்கின்றேன்)? அது மக்களிடமிருந்து, அவர்கள் வாழ்வுக்கு தேவையானது என்ற இடத்தில் இருந்து விலகியதால் தான். இது ஜெயலட்சுமிக்குக்கு தெரியாதென்றா நினைக்கிறீர்கள்?

MLM'பற்றி அவர் சொல்வது அவரது மார்க்கெட்டிங் வெறியைத் தெளிவாகக் காட்டுகிறது. 'பொதுவாக அது ஒரு நல்ல திட்டம்னாலும், இப்ப நெறைய பேர் மக்களை ஏமாத்ததான் பெரும்பாலும் பயன்படுத்துறாங்க. பெரிய பெரிய மல்ட்டி நேஷனல் கம்பெனிகள் நடத்துற இந்தத் திட்டத்துல கடுமையான உழைப்புக்கு அஞ்சாதவங்களும், ஆர்வம் உள்ளவங்களும் சேர்ந்தாத்தான் லாபம் பாக்க முடியும்' என்று யாரோ சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்.

அப்போது கணேசனின் '‘‘என்னைப்போல இன்னும் நிறைய பேர் எம்.எல்.எம். பிஸினஸ்ல மாட்டிக்கிட்டு வெளியில வரமுடியாம நிக்கிறாங்க. ஆசைவார்த்தைக்கு மயங்கி இதுக்குள்ள தலைக்குடுத்து, இப்ப சொத்தையும் வாழ்க்கையையும் சேத்து தொலைச்சுட்டு நிக்குறேன். இந்த வியாபாரத்துல பெண்கள் பலபேர் ஈடுபட்டுருக்காங்க. அவங்கள்ல பலபேர் தவறான பாதைக்கு தள்ளப்படுற கொடுமையையும் நான் பாத்துருக்கேன். அதுக்கு உதாரணம் சிவகாசி ஜெயலட்சுமி.' என்று கணேசனுக்குத்தான் MLM இல்லை என்று சொல்லி புடம் போட்ட வியாபார சூழ்ச்சியுடன் முறையற்ற உவமைகள், மேற்கோள்களுடன் ஜல்லியடிக்கிறார்.

இது கணேசன் "எதிர்காலத்துல எதையாவது சாதிக்கணும்னு நெனைக்கிற என்போன்ற இளைஞர்கள இப்படி மூளைச்சலவை பண்ணி சாகடிச்சுக்கிட்டிருக்காங்க. கிட்டத்தட்ட இதுவும் ஒரு வழிப்பறி மாதிரிதான். என்னை மாதிரி யாரும் மாட்டிக்கக் கூடாது’’ என்ற 'ஓடுமுறைப்போராட்டத்தின்' மூலமாகத்தான் முறியடிக்க முடியுமென்றால் அப்படித்தான் செய்யவேண்டும் என்று சொன்னதை வசதியாக மறந்துவிடும் கயமைத்தனம். திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம். அதற்கு கணேசனையும் துணைக்கழைத்துக்கொள்ளும் வஞ்சகம்.

அடுத்தது அவர் சொன்னதில் கண்டிக்கத்தக்கதும், அவரது உண்மை முகத்தை உரித்துக்காட்டுவதும் அவர் குறிப்பிட்ட, "இதுல நாம நமக்கு கீழே 'சேத்து விடுறவங்களுக்கு' நாமதான் ஜாமீன் போட்ட மாதிரி. அவுங்க நம்மளைவிட பயங்கரமா வேலை பார்க்கணும். அப்படி அமையுறது ரொம்ப கஷ்டமான விஷயம். நாம எவ்வளவுதான் கஷ்டப்பட்டு அலைஞ்சு திரிஞ்சு ஆள் சேத்தாலும், நீங்க சேத்து விட்ட ஆளுங்க சரியில்லாததால்தான் கமிஷனே கிடைக்க மாட்டேங்குதுனு அசால்ட்டா சொல்லிருவாங்க. நாம யாரையும் போய் நோக முடியாது" ஏன் 'கீழே சேத்து விடுறவங்களுக்கு' எதிராக இருக்கிறது? ஏன் கணேசன், இளங்கோ, இன்னபிற கா(ஏ)வளார்கெலாம் MLM'களுக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்று நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்றால் ஜெயலட்சுமி இப்படி பேசுவது உங்களுக்கு ஆச்சர்யமாய் இருக்காது.

வியாபாரத் திரிபுடைய மாந்தருக்குத்தான், "கொஞ்சம் அசந்தாகூட கடல்ல போட்ட பெருங்காயம் மாதிரி காசு காணாமப் போயிடும். அந்தச் சாமர்த்தியம் இல்லாம இந்தத் திட்டத்துல சேர்ந்தா, நம்மளுக்கு நாமே நாமம் போட்டுக்குறோம்னு அர்த்தம்", கொஞ்சம் அசந்தாகூட கடல்ல போட்ட பெருங்காயம் மாதிரி காசு காணாமப் போயிடும். அந்தச் சாமர்த்தியம் இல்லாம இந்தத் திட்டத்துல சேர்ந்தா, நம்மளுக்கு நாமே நாமம் போட்டுக்குறோம்னு அர்த்தம் பொருத்தமானதாம், மற்றவர்களுக்கு இல்லையாம் (இதைச் சொல்லும் போது அவர் செவ்வியில் இருந்த சீற்றத்தை, வெறுப்பை கவனிக்கிறேன்; கிடைத்த ஆஹாகாரத்தை எண்ணிப் பார்க்கின்றேன்).

இப்போது இந்தியா என்பது அரசியல் கருத்தா(கர்த்தா கூட இல்லை சாமியோவ்!), ஆன்மீக வடிவமா, நிலப்பரப்பா என்று எதன் அடிப்படையிலும் அணுகாமல் வியாபாரத் திரிபுடைய மாந்தர்களின் பால் கொண்ட வெறுப்பை மட்டும் காட்டும் பேரினவாத மனப்பான்மையோடு அணுகும் தன்மையையே காட்டுகிறார்.

எனக்கு டெல்லி CBI'யை விட சேதுசமுத்திர நீரிணைப்பை கடந்து வாழும் தமிழர்கள் தான் பக்கத்தில் இருக்கிறார்கள். அந்த'மானை விட இவர்கள் எனக்கு அருகில் இருக்கிறார்கள். இந்த நாடென்ற அரசியல் அமைப்பை விட அதிக நூற்றாண்டுகள் தொடர்புடையோராய் இருக்கிறார்கள்.

பசுதேவ குடும்பகம் பால்கறக்காதது போல இவரது 'பகைவனை போட்டுத் தாக்காய் கூட' இப்போது கடைச்சந்திக்கு வரவில்லை. சுடுபவர் எல்லாம் பகைவனாய் இருந்தாலும் அருளவேண்டும் என்று கனிந்த உள்ளம் தமிழனுக்கு மட்டும் ஏன் சுருங்க மறுக்கின்றது? MLM'ல் நாம் படும் பாட்டை, "அதாவது முப்பது பேர் சம்பாதிக்க கிட்டத்தட்ட இருபதாயிரம் பேர் இழக்கிறார்கள். தடை செய்யப்பட்ட லாட்டரி வேறு வடிவத்தில் பிஸினஸ் போர்வை போர்த்திக் கொண்டு வந்திருக்கிறது. ஆண்கள் இழந்தால், குடும்பம் தெருவுக்கு வருகிறது. பெண்கள் இழந்தால், ஜெயலட்சுமிகள் ஆகிவிடுகிறார்கள்",என்று குறை(ரை)த்ததெங்கே? மற்றபடி அவர் செவ்வியெல்லாம் அபத்தம் என்று ஒதுக்கமுடியாது. அதை தமிழர்கள்(!) என்று நவிலும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அவர் நமது எதிரிகளின் குரலை மிகத்தெளிவாக, வெளிப்படையாக பேசுகிறார். நாம் எதிரிகளை நேசிக்கவேண்டும்; அதனினும் அதிகமாக அவர்களது செவ்விகளை.

மற்றபடி ஜெயலட்சுமியின் செவ்வியோடு நான் உடன்படுகிறேன். அவர் புறக்கணிக்கப் படவேண்டியவர் தான். அவருக்கு கிடைக்கும் கண்டனத்தைக்கூட தனது வியாபாரத்துக்கு பயன் படுத்திக்கொள்வதில் அவரும் அவரது அடிப்பொடிகளும் வல்லவர்களே என்பதும் உண்மைதான். ஆனால் அவருக்கு பின்னுள்ள சக்திகள், அவர்களது நோக்கங்கள், அவர்களது வழிமுறைகள் புறக்கணிக்கத்தக்கவை அல்ல. ஒரு 'சே' சங்கரை எப்படி புரிந்துகொள்கிறோமோ, எப்படி எதிர்கொள்கிறோமோ அப்படியே அணுகப்பட மட்டுமே ஜெயலட்சுமியும் தகுதி படைத்தவராகிறார்.

நன்றியறிவித்தல் (acknowledgement):

செவ்வியை தனது தளத்தில் கொடுத்து ஏ(கே)னையோர் படிப்பதற்கு வழிஏற்படுத்தியமைக்காக ஜூ. விகடனார் அவர்களுக்கு நன்றிகள்.

Monday, July 04, 2005

காணாமல் போன பதிவு

எப்பவோ ஒருமுறை என் வலைக்குறிப்பில் எழுதிய " என் முதல் ஹைக்கூ கவிதை" என்ற பதிவு, டிராப்ட் முறையிலேயே திடீரென்று மாயமாய் மறைந்து விட்டது. ஆகையால் கணிணியில் சேமித்து வைத்திருந்த அந்தப் பதிவை இங்கே இடுகிறேன். அசௌகர்யத்துக்கு நண்பர்கள் மன்னிக்கவும்.

அன்புடன்
குசும்பன்.

Wednesday, July 04, 2005

என் முதல் ஹைக்கூ கவிதை...

பார்வை

அ ஆ இ ஈ
க ங ச ஞ

மூணாவது வரிசை கண்ணுக்குத் தெரியலே டாக்டர்

இது எப்படி இருக்கு? :-)