Tuesday, May 23, 2006

நண்பர்/நலம்விரும்பிகளுக்கும்

*** புதிய திருத்தம் ***

இது உங்களுக்குத் தேவையாவென்று தொலைபேசியும், மின்னஞ்சல்களிலும் பல நண்பர்கள் இடித்துரைத்தார்கள். இளவஞ்சியின் பதிவுகளுக்கு போட்டியாக நீங்களும் இறங்கினால் அவருக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று வினவியிருந்தார்கள். உங்கள் கேள்விகளில் இருக்கும் நியாயம் எனக்குப் புரிகின்றது. தொடுத்தது முதலில் இளவஞ்சியேயானாலும், நான் எனது பதிவுகளை எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி போடுகின்றேன். இனிமேலாவது அவதூறுகளை அங்கதம் என்று பதிவுகள் வராமலிருக்குமென்று நம்புகின்றேன். நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது நன்றி. சாக்கடைச் சண்டைக்காக குசும்பனை வழமையாய் வாசிப்பரிடத்தும், நண்பர்களிடத்தும் மன்னிப்புக் கோருகின்றேன். பொறுத்துக் கொண்டதற்கு நன்றி !!!

*** திருத்தம் முடிவு ***

Wednesday, May 10, 2006

2006 தேர்தல்

சன் (10:15 AM IST)

DMK Alliance 169
AiADMK Alliance 62
suyEdsai 2

2006 தேர்தல்

சன் (10:00 AM IST)

DMK Alliance 167
AiADMK Alliance 58

Tuesday, May 09, 2006

மு.வ.வ.மா தொடர்கின்றது

(இம்முறை பார்த்திபன்+வடிவேல்+ கூடவே எச்ட்ராவா லொடக்குபாண்டியும்* ஆஜர்)

லொபா: சேச்சேச்சே வரவர மனுஷன நிம்மதியா இருக்க வுடமாட்டேன்ராங்களே. Catch Rabbit three legs say
பார்: டேய் இரு இரு இப்ப என்ன சொன்னே?
லொபா: (காலரைத் தூக்கியபடி) ஹூம்... புடிச்ச முயலுக்கு மூணு காலுங்றான்
வடி: இது 'ஏப்ரல் மாதத்தில்" இல்லியே. "மே மாதம்" வந்தாச்சுங்றத எப்பிடிச் சொல்லி புரியவைக்கிறது?

(முற்போக்குக் கூட்டணித் தலைவரான கோயம்பேடு சின்ராசு என்ற கோசி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி 3 பெரியவா பவ்யமாக அமர்ந்திருக்கின்றனர்)

கோசி: எனக்கு இலக்கியம் தெரியாது
வடி: ஆஹா கடைசியா ஒருத்தராவது உம்மையைப் பேசுறாருப்பா
கோசி: ஆனால் தொழில்நுட்ப வித்தை தெரியும். உலக உருண்டையையே அது சிறிதாக்கியிருக்கிறது. எடுத்துக்காட்டாக தமிழ்மண...
லொபா: (சப்தமாக) அதான் எனக்குத் தெரியுமே. World in the Palm
பார்: இப்ப என்னடா சொன்னே?
லொபா: என்னண்ணே... உலகமே உள்ளங்கையில்'ன்னேன்
வடி: அப்பிடின்னா உன் உள்ளங்கை என்ன?
லொபா: ம்ம்ம்ம் உள்ளங்கைதான் உலகமே
பார்: அதெப்பிடி ரெண்டும் ஒண்ணில்லையே
வடி: (வெற்றிக்களிப்புடன் மெதுவாய்) நல்லவேளை இவன் கிட்ட நான் மாட்டல
லொபா: அண்ணே குழப்பாதீங்கண்ணே. உலகமே உள்ளங்கையில். அப்பிடின்னா உள்ளங்கை என்ன? உள்ளங்கைதான் உலகமே.
ரெண்டுமே ஒண்ணுதானே?
வடி: என்னது இது செந்தில் வாழைப்பழ ஜோக்கு மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற?
பார்: அவன் செந்தில் மாதிரின்னா நான் கவுண்டமணியா?
வடி: ஹூம்... நமக்கு வாயக் குடுத்து அத்த புண்ணாக்கிக்கிறதே வேலையாப் போச்சி
லொபா:: ஹெஹ்ஹெஹ்ஹே... எனக்கு அப்பவே தெரியும் World in the Palm means Palm is the World
கோசி: ஏனப்பா இப்படி அவதூறு செய்கிறாய்?
லொபா: இல்லீங்க ப்ரோபைல்படி நகைச்சுவை புடிக்கும்னு யாரோ சொன்னாங்க... அதான். Good Things Time No.
வடி: என்னாது நல்லதுக்குக் காலமில்லையா? மவனே இன்னொரு தபா சொன்ன இங்கேயே வகுந்து போடுவேன். கவரேஜைப் பாருடா ராஸ்கல்
(கூட்டத்தில் குட்டையாய் சோடாபுட்டியுடன் ஒருவர்): ஏங்க என்னையக் கூப்டீங்களா?
பார்: இல்லங்க அவரு ராஸ்கலைக் கூப்டாரு. ஆமாம் ராஸ்கலைக் கூப்டா நீங்க ஏன் ஓடியாறீங்க? நீங்க போயி நிகழ்ச்சியப் பாருங்க.
லொபா: Raaskals cut cut grow
வடி: டேய் இன்னும் பேசுனா வெட்டுனா எது வளராதோ அத வெட்டிப்புடுவேன் ஜாக்ரதை
பெரியவா1: அய்யா எப்பிடியோ நான் ஒரு வருஷமா கேட்டுண்டு இருந்ததை நிறைவேத்திட்டீங்க. நன்றி
பெரியவா2: ஆமாம். எனக்குக் கூட மூணு மின்னஞ்சல்கள் வந்தது. எப்பிடியோ நினைச்சதை நடத்திக் காட்டீங்க. நன்றி
கோசி: ஏன்யா எனக்குன்னு சொந்தமா மூளையே இருக்காதா? என்னமோ உங்களுக்காக நான் செஞ்ச மாதிரி. என் நிலைமையே நாறிப்போச்சி. நட்சத்திரமா வளத்த நான்...
லொபா:: வெயிட்டீஸ். Grow Goat Chest Strike
பார்: அதாவது வளத்த கிடா மார்புல பாய்ஞ்சுதுங்றே?
லொபா: Yeah அண்ணே நீங்க தெய்வமுண்ணே
வடி: என்னடா பெரியவா3 மாதிரி பேசுற? இன்னும் அவரோட கவரேஜயே ஆரம்பிக்கலியே?
பார்: அதெப்பிடி உனக்கு முன்கூட்டியே தெரிஞ்சுது? அடுத்தது பெரியவா3'ன்னு?
லொபா:: இதுக்கெல்லாம் ஜோசிஸம், எண்கணிதமா போட முடியும்? Snake Leg Snake knows
வடி:
அய்யய்யோ கொல்றானே. இதுக்கு முற்போக்குவாதிங்களே தேவலாம் போலிருக்கே. ஏய் சொக்கா?
சொக்கன்: இந்த முற்போக்கு, பிற்போக்கு போன்ற மாயைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாமென்றுதானே நான் எப்போதோ இணையத்திலிருந்து வனவாசம் சென்று விட்டேன். என்னை ஏன் இழுக்கின்றீர்கள்?
பார்: அட ஜீன்ஸ் போட்ட சாமியார். இது கூட முற்போக்குத்தானே?
(சொக்கன் ஆளை விடுவென்று தெறிக்கின்றார். கூட்டத்தில் புதிதாக ஆஜானுபாகுவாய் ஒரு உருவம் எழுகின்றது)
உருவம்: ஹலோ ஒண்ணு மட்டும் சொல்றேன். அந்த டமாஸ் கேரக்டர பாத்தா சொல்லுங்க. மவனே அப்புறம் இருக்குது பாரு வேடிக்கை
லொபா: ஏம்ப்பா இந்தாளப் பாத்தா முற்போக்கு மாதிரியே தெரியிலியே?
(உருவம் முகமூடி, மாறுவேடம் கலைத்த போது கூட்டமே ஆஹாகாரம் செய்கின்றது. பெயர் இக்னோர் பிரஷாந்த்)
இபி: இப்பிடித்தாங்க அவரு என்னோட தண்ணியடிச்சப்போ சொன்னாரு. கூடவே வந்த இன்னொரு இலக்கியவாதியும் சும்மா இல்ல (சும்மா டேப்ரெக்கார்டர் போல் தொடருகின்றார்)
வடி: என்ன எளவுடா இது? இப்பிடிப் போட்டுக் குடுக்கிறாய்ங்க. படிக்காதவனெல்லாம் தாயா புள்ளையா பளகுறான். படிச்சவனுங்க இப்பிடி அடிச்சிக்கிட்டு நாறுராய்ங்க. சரி சரி சட்டுபுட்டுன்னு முடிச்சிட்டு கெளம்ப வேண்டியதுதான்
பார்: என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச பேரு வரவேண்டியதிருக்கு. வேணுமுன்னா தொடரும் போட்டுட்டுப் போ. வந்து கவனிச்சிக்குவோம்
லொபா:: Late Come Latest
வடி: என்ன பஞ்ச் டயலாக்கா? இரு வந்து உன்னைய பஞ்சராக்குறேன்.

(தொடரும்)

லொடக்குபாண்டி* இவர் கருணாஸ் என்றழைக்கப்படும் காமெடியன். "ஏப்ரல் மாதத்தில்" என்ற படத்தில் சொலவடைகளை ஆங்கிலப்படுத்தி கலாய்த்தவர்.

Monday, May 08, 2006

உச்சகட்டம்

" அஞ்சு கிலோ அரிசி வாங்கி (ஜஞ்ஜஞ்ஜாம்)
பஞ்சு பஞ்சா வேக வைச்சி (ஜஞ்ஜஞ்ஜாம்)
பானையில ஊத்தி அத
புதைச்சி வைச்சோம் மண்ணுக்குள்ளே (ஜஞ்ஜஞ்ஜாம்)
போதையில சுண்டைக்கஞ்சி புதைச்ச இடம் தெரியலியே (ஜஞ்ஜஞ்ஜாம்)


(ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ)

வடபழனி முருகா

அட்றா மச்சி

சோடா பாட்டில் கையிலே சைக்கிள் செயினு பையிலே
தோடா வாரு பாருடா
ஆறுமுகம்
வாடா வாடா மாப்பிள வகுந்துருவேன் கேப்புல
மெய்யாலுமே எனக்கு
நூறுமுகம்
வெட்டுக் குத்து கத்திக் கம்பு புடிச்சுப் பாருடா
நான் கம்பியெண்ணி கணக்குப்பாடம் கத்துக்கிட்டேண்டா
வருசத்துல எல்லா நாளும் பொறந்த நாளுடா
நாங்க வெட்டுறது கேக்கு இல்ல கைகாலுடா
என்பேரு ஆறுடா ஊரு அடையாறுடா
டீலுன்னு வந்தாக்கா டார் டார் டார்

கூவ நதி ஓரத்துல
அட குந்திக்கினு கூவிக்கினோம்
சாயங்கால நேரத்துல அட சுண்டக்கஞ்சி ஊத்திக்கினோம்
"

மக்கள்ஸே! தோடா... ஆறு படப்பாடலோட ஞானபீடம் பதிவு போடறேன்னு டவுட்டா கீதா? டைட்டிலுக்கும் பாட்டுக்கும் சம்பந்தம் என்னங்காணும் ஓய்? அட இப்ப மேட்டருக்கும், மீட்டருக்கும் கேப்பே இல்லைங்காணும் ஓய்!!!

நீங்கெல்லாம் கைதட்டி தட்டி ஓயப்போறதுக்குள்ளே ஷொல்லிடுறேன் மேட்டர. இது என்னோட இருநூறாவது பதிவு. இதுவரை என்னத்த கிழிச்சேன்ங்றது நேக்கு தெரியல. ரொம்ப நாளா சதமடிச்ச பின்னாடி வெயிட்டீஸ் விட்டு டெண்டில்யா போட்ட ரெட்டை சதம் ஞாபகத்துக்கு வர்றது.

இப்ப மீட்டரு. குசும்பனுக்கு ஒரு தனிமடல். என்னடா தனிமடல் மேட்டர பொதுவுல மீட்டரு உடறானேன்னு மக்கள்ஸ்க்கு கோவம் வரலாம். நியாயம்தான். பாஸு நமக்கு மேட்டரோ மீட்டரோ பொதுவுல வைச்சுத்தானே பழக்கம்.

ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணத்தினை நடத்தி வரும் ஆறுமுகம் (மூலம் நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்) என்பவர் தனிமடல் எனக்கு அனுப்பியிருக்கின்றார். ஆங்கிலத்திலிருந்த மடலின் சாரம்சம்:

"அன்பு குசும்பன்,

வணக்கம். உங்களின் வலைப்பதிவு தமிழ்மணத்தை அவதூறாகச் சுட்டியுள்ளது. நாம் நமது பாதைகளில் குறுக்கிடும் வழியில்லாதபோது, இத்தகைய அவதூறாக சுட்டி கொடுக்க வேண்டிய அவசியம் எனக்குத் தோன்றவில்லை. எனவே தக்க மாறுதல்களைச் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.

நல்லாசிகளுடன்,
-காசி
www.thamizmanam.com
www.blogdesam.com
"

அவதூறு என்பதற்கு ஆங்கிலத்தில் Defamation என்பார்கள். அது லீகல் டெர்மினாலஜி என்பதை நானறிவேன். அப்படியென்றால் தக்க மாறுதல்களைச் செய்யாவிட்டால்... என்ற அதிகாரத் தோரணைகள் தொக்கி நிற்கின்றன. அப்படி தமிழ்மணத்திர்கு எதிராக நான் செய்த blasphemy என்னவென்று தெரியவில்லை.

ஒருவேளை இதுவும் போலியின் மடலோ என்ற எண்ணமும் எழுந்தது. இதுவரை எனக்கும் காசிக்கும் எந்தவிதமான தனிமடல் போக்குவரத்தும் இல்லை. இது உண்மையான காசியிடமிருந்தே வந்ததாக வைத்துக் கொள்ள, எனக்குத் தெரிந்த இரண்டு காரணிகளும் எனக்கு நம்பிக்கைத் தருவதாக இல்லை. வெறும் மின்னஞ்சல் முகவரி, VSNL ஐபீ அட்ரஸ் இவை மட்டுமே போதுமான முகாந்திரமில்லை இம்மின்னஞ்சல் தமிழ்மண காசியிடமிருந்து வந்தவை என்பதற்கு.

அப்படியே இம்மின்னஞ்சல் உண்மையான காசியிடமிருந்தே வந்ததாக வைத்துக் கொள்வோம். மேட்டரோ, மீட்டரோ பொதுவில் நடத்தவும், தேவைப்பட்டால் அவரது அடுத்த நடவடிக்கையை எனது நிஜமுகத்தோடு சட்டத்தின்படி எதிர்கொள்ளவும் நான் தயார்.

இனி பொதுவில்தான் காசியுடன் வாதமோ/விவாதமோ இன்ன பிறவோ. ஏனெனில் காசியின் பின்னூட்டத்தில் நான் கேட்ட முந்தைய நேரடி வினாக்கள் இன்னும் விடையின்றி தொக்கி நிற்கின்றன.

இது தவிர்த்து சட்டப்படி நடவடிக்கை இன்ன பிற பூச்சாண்டி அவர் காட்ட நினைத்தாலும் நான் ரெடி! நிஜமுகத்தோடு!


இது உச்சகட்டம்.

திட்றாங்க... திட்றாங்க...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்கேயோ கேட்ட கானங்கள்ல ஒரு பாட்டு இதுங்ண்ணா. எதுக்கெடுத்தாலும் திட்றாங்கன்னு விடலைப்பசங்க ஜாலியா பாடி ஆடுற காட்சி சமீபத்தில் சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும் படிக்கும் போது ஞாபகம் வந்து தொலைச்சிது பாஸு.

மேட்டரு வேற ஒண்ணுமில்ல. கருணாநிதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துனதால பலரால ஹிந்தி படிக்க முடியாமப் பூடிச்சாம். அதுனால வேலை பாக்குற இடத்துல கூட மரியாதை இல்லியாம். அதுக்கு மறுவிமர்சனம் இன்னமும் பலே ஜோர். அதாவது கலைஞர் பண்ணியது ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமாம். அதுனால தமிழ்நாட்டுல ஹிந்தி படிக்கத் தடை என்னிக்குமே இருந்ததில்ல. ஹிந்தி படிக்கிறவுங்கள கலைஞர் கைதா பண்ணுனார் (அட நௌக்காமக்கா இது வேற வேணுமா?)... அப்பிடி இப்பிடின்னு...

இப்ப நான் கேக்குறதெல்லாம் இதுதான். கலைஞர் ஹிந்தி எதிர்ப்போ, அல்லது ஹிந்தி திணிப்பு எதிர்ப்போ பண்ணாம இருந்தாருன்னு வெச்சிக்குவோம். இப்போ இதைப் பத்தி கொறை சொல்லும் மக்கள்ஸ் அல்லாரும் ஹிந்தி பண்டிட்டாகி, மத்திய அமைச்சர்களா ஆகியிருப்பாங்களா? இதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்ல? அய்யா நானும் அரசுப் பள்ளியிலதான்யா படிச்சேன். அப்பவே ஆப்ஷனல் சப்ஜெக்டா ஹிந்தியையோ ஏன் சமஸ்கிருதத்தையோ இன்னும் ஏன் ·பிரஞ்ச்சையோ எடுத்துப் படிச்சாங்கய்யா. நாங்க கூட ஹிந்தி பரீட்சைக்கு ஏன் பிரதீபா, மஹிமா'ன்னு பொம்பளைப் பேரா வைச்சிருக்காய்ங்கன்னு கலாய்ச்சதுண்டு.

அதுசரி பள்ளிக்காலத்துல, கல்லூரிக்காலத்துலதான் கலைஞர் உங்க ஹிந்தி படிப்புல மண்ணை அள்ளிப் போட்டாரு. வேலைக்குப் போன இடத்துல கத்துக்க என்ன கேடு? பொஸ்தகக் கடையில பாலாஜி பப்ளிகேஷன்ஸ்னு தேடுங்க. முப்பது நாளுல என்ன பாஷை வேணுமோ கத்துக்கலாம். அருகிலேயே அந்த பாஷை தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் இருந்தா போதுங்கணா இன்னமும் வசதி. எந்த பாஷையையும் ஈஸியா கத்துக்கலாம். தேவை ஒரு ஈடுபாடு. அம்புட்டுதேன். எத்தனையோ அதிகம் படிக்காத கூலி வேலை செய்யும் தமிழர்கள் கூட அந்தந்த இடத்திலிருக்கும் பாஷைகளை ஈஸியாகப் பேசுவதை நேரில் பார்த்திருக்கின்றேன். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபாதை மசாலா தோசைக்கடைகளுக்குப் போனால் அங்கே பணிபுரியும் தமிழர்கள் அசால்ட்டாக ஹிந்தி/குஜராத்தி பேசுகின்றனர். ஏன் மிடில் ஈஸ்ட் கதையும் அவ்வாறே. அப்படியிருக்க படித்த மக்கள்ஸ் புலம்புவது சத்தியமா ரொம்பவே ஓவருங்க.

இராமேஸ்வரம் வரும் வட-இந்திய சுற்றுலாப் பயணிகளிடத்தில் ஓரிரு ஹிந்தி வார்த்தைகள் மட்டும் கற்றுக் கொண்டிருந்த நான், கொஞ்சம் கொஞ்சமா வடநாட்டில் வேலையில இருந்தப்போதான் தடங்கலின்றி பேசக் கற்றுக் கொண்டேன்.

'நம்ம எல்லாத்துக்கும் இங்லீஷ் தெரியுமில்ல. அப்புறம் ஏண்டா ஹிந்தியைக் கொல்றே?' அப்பிடின்னு சக ஹிந்தி நண்பர்கள் என் கால்ல வுழுந்தாலும், சற்றும் மனம் தளராத குசும்பன் 'ஹலோ உன்னோட தாய்மொழியில நான் இவ்வளவு பேசறேனே... எங்கே என்னோட தாய்மொழியில நீ ஏதாவது பேசு பாக்கலாம்'ன்னு கூலா டபாய்ச்சுட்டு போய்க்கினே இருப்பேன். என்ன ஹிந்தி கத்துக்கிறதுக்காக குப்பைத் திரைப்படங்களையெல்லாம் பார்க்க நேர்ந்தது. அட பரவாவில்லப்பா கோவிந்தா, அஜய் தேவ்கன், கபூர் காந்தான் (பரிவாரம், கூட்டம்) எல்லாம் அறிமுகமானது இன்னிக்கு பதிவு போட்டு பொழுது ஓட்ட வசதியா இருக்குல்ல...?

சும்மா அவனால நான் கெட்டேன்; இதை அழிக்கணும்; அதை ஒழிக்கணும்'ன்னு முற்போக்கு பிலிமு காட்டாம உருப்படியா ஆகவேண்டிய காரியத்தைப் பார்ப்போம். நாமும் உருப்படுவோம். அடுத்த சந்ததிக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டுவோம்.

அத வுட்டுப்போட்டு உணவுப் பஞ்சம் காலத்துல மொரார்ஜி தேசாய் சொன்ன தீர்வைச் செயல்படுத்தியதால் நாங்கள் இன்னமும் ***** (பூர்த்தி செய்து கொள்ளவும் ;-)'ன்னு ஜல்லி அடிச்சா ஆளை வுட்டுடுங்க பாஸு. உங்களைக் குணப்படுத்த சூரணமேயில்ல.

Thursday, May 04, 2006

மு.வ.வ.மா

{செவ்வகமேசை மாநாடே சிறந்தது என்று முகமூடியார் திருவாய் (பீர் ஊற்றிக்கொள்வதற்காக) திறந்தவுடன் முற்போக்கு வலைப்பதிவர்களுக்கு பொத்துக் கொண்டு வந்துவிட்டது. இதோ வட்டமேசை மாநாடே சிறந்தது என்று நிலை நாட்ட முற்போக்கு வலைப்பதிவர் வட்டமேசை மாநாடு. வழமை போல பார்த்திபன்+வடிவேல் ஆஜர்}

வடி: அடி ஆத்தீ... தமுக்கம் மைதானத்தையே வளைச்சுப் போட்டிருக்காய்ங்க. அம்பூட்டு முற்போக்கு ஆளுங்களா?
பார்: அடச்சீ நல்லா பாரு... அதோ தூரத்துல ஒரு சின்ன மரத்தடி தெரியுது பாரு. கீழ 10-15 சேரு இருக்குதுல்ல. அவ்வளவு பேர்தான். கவலைப்படாத
வடி: அதுசரி... சரி வாப்பா... கவரேஜ் பொழப்பப் பாக்கலாம்.

(மாநாட்டுத் தலைவரான அலாஸ்கா மணி கணீர்க்குரலில் தொடங்குகின்றார்)

மணி: சாதிகள் இல்லையடி பாப்பா
வடி: ஆஹா அப்பிடியே முண்டாசு பாரதி நேர்ல வந்த மாதிரி இருக்குப்பா
பார்: டேய் அடங்கு. மேல கவனி
மணி: சாதிகள் ஒழிய இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்
(பிகில் பறக்கின்றது. சத்மா என்பவர் "நன்றி" என்று உரத்துக் கூவுகின்றார்)
வடி: அட என்னாப்பா இது சிலேட்டுல எச்சித் துப்பி அழிக்கிற மாதிரி சின்னப்புள்ளதனமால்ல இருக்கு
மணி: மனு சொன்ன சாதிகள் இந்து மதத்தில் மட்டும் இருப்பதினால்...
வடி: அண்ணே மத்த மதத்திலும் சாதி இருக்குறதா மா. வெங்கடேசன் புக்குல படிச்சு இருக்கேனே
பார்: பாத்தியா கொஞ்சம் படிச்ச உனக்கே புரியுது. பாரு இந்தாளைச் சுத்தி இருக்கிறவனுங்களை...
மணி: சாதி அடிப்படையில் தொழில் செய்வது இந்து மதத்தில் மட்டுமே...
வடி: அடப்பாவிங்களா அப்பிடி கூட இருக்குதா? அண்ணே அப்ப நம்ம ஜாதி என்னாண்ணே?
பார்: ம்ம்ம் நடிக்கிற ஜாதி. இப்ப ரொம்ப முக்கியம்.
வடி: அண்ணே எனக்கென்னவோ அந்தாளுதான் நம்மை விட நல்ல பெர்பார்மென்ஸ் கொடுக்கிறாப்புள. உன்னோட பச்சமண்ணு படத்துல சான்ஸ் குடேன்பா
பார்: ஏண்டா எனக்கே ஆப்பா? நான் நல்லா இருக்குறது புடிக்கல?

(அடுத்ததாக சிங்கைக் காட்டான் எழுகின்றார். "தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது..." என்ற 'ஜெய்ஹிந்த்' படப்பாடல் ஒலிக்க...)

சிகா: ஜெய்ஹிந்த்!
வடி: ஆஹா ஆஹா என்னா நாட்டுப்பற்று என்னா நாட்டுப்பற்று
பார்: டேய் அடங்க மாட்ட நீ
சிகா:
'கருநாடகம்
காவிரிநீர் தரவில்லை
ஜெய்ஹிந்த்'

(ஹைக்கூ கேட்டு கூட்டத்தின் கரகோஷம் விண்ணைப் பிளக்கின்றது. சத்மா என்பவர் "நன்றி" என்று பரபரக்கின்றார்)
வடி: ஏம்ப்பா இதுக்கு என்னாத்துக்கு ஜெய்ஹிந்த்?
பார்: அதாவது தண்ணி தராத அந்த ஸ்டேட்டோட சேந்து இந்தியாவுல நாம ஏன் இருக்கோணுமின்னு நக்கல்
வடி: இதப்பார்டா வென்ரு. ஏண்டா முத்தம் கேட்டு பொண்டாட்டி குடுக்கலேன்னா அது ஊடலாக் கூட இருக்கலாமுல்ல. சும்மா ஒரு முழம் மல்லீப்பூ, கால்கிலோ அல்வா கொடுத்து அதுவும் முடியாட்டி அட்லீஸ்ட் அன்பா பேசினாவாவது மீட்டருதானப்பா. அதுக்காக டைவர்ஸா பண்ண முடியும்?
பார்: டேய் நீ ஓவரா புரிஞ்சு பேசுற. இது முற்போக்கு இடம். ஞாபகம் இருக்கட்டும். அல்வா கொடுத்தேன்னு சத்தமா சொன்னே (கக்)கூஸாவஸந்த் வந்துடுவாரு. அப்புறம் பொழப்பு நாறிடும்
சிகா: கொஞ்ச நாட்களாக நான் ஏர்போர்ட்டைச் சுற்றி வந்தவரை எனக்குத் தெரிந்து 95% விமானங்கள் வெள்ளையாக உள்ளன. 3% சிவப்பு வர்ணமடித்தும், 2% பச்சை வர்ணம் அடித்தும் இருந்தன. மீதி 1% கூட இவற்றின் கலவையாகவே இருந்தன.
வடி: சரி அதுக்கென்ன இப்போ?
சிகா: திராவிட நிறமான நமது நிறத்தில் ஒரு விமானம் கூட விடக்கூடாதா? ஏனிந்த ஆரிய நிறவெறி பிடித்து அலைகின்றனர்? ஜெய்ஹிந்த்.
வடி: அட வீணாப்போனவனுங்களா... இப்பிடியெல்லாம் கூட யோசிக்க முடியுமா? ஜெய்ஹிந்த்
பார்: பாரு பாரு உனக்குக் கூட ஒட்டிக்கிடிச்சு. எப்பிடியோ இப்பிடியாவது இந்த நாதாரிங்க ஜெய்ஹிந்த் சொல்லட்டும்

(கூஸாவசந்த் செருமியபடி)
கூஸா: ஜலம், திருக்கன்னமுது, சாத்தமுது, ஆத்து போன்ற நீச பாஷையை இளவயதிலேயே விஷவித்தாக பதியவைக்கும் அவாள்களை அடித்துத் துரத்த வேண்டும்

(கூட்டம் குன்ஸாகக் கத்துகின்றது. சத்மா என்பவர் "நன்றி" என்று உரத்துக் கூவுகின்றார்)

(வழியில் போய்க்கொண்டிருந்த போக்கன் ஒருவர் வெகுண்டு "டேய் நான் உன் கிட்ட கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாம என்னா மறுபடியும் மறுபடியும் இங்க பிலிம் காட்டுறியா. நீ **** பொய்யா... நீ **** பொய்யா எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும்" என்று எகிற அவரை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்துகின்றார்கள். கூஸா கூலின்றி சைலண்ட் ஆகின்றார்)

வடி: அண்ணே யாருண்ணே அந்த டென்ஷன் பெர்வழி?
பார்: யாரோ பாவம் வழிப்போக்கன்னாம். கூஸாவோட என்ன காண்டோ தெரியல. கூஸா சவுண்ட் வுட்டாலே ஆஜராகி பேஜார் பண்றாரு

(குறுந்தாடியுடன் பெயரின்றி ஒருவர் எழுகின்றார்)

பெய: அதிகாலைச் சலசலப்பு; பகல் நேரங்களில் பல்லிகள் கிறீச்சிடும்; விழித்தெழுந்து அறிந்த ஒரு செயல் அதுவேயென அலறுகின்றன சேவல்கள்; எரியும் வயிறோடு நான் பசியுடன் நினைவுகள் கிளறி அழுகின்றேன்; நானிட்ட மீதத்திற்காக பட்டப்பகலில் பாதாளக் கண்களுடன் அலைகின்றன தெரு நாய்கள். அவசரமான அவசரம்; வேண்டாதோர் எறிந்த எச்சிலின் எச்சங்களை நாடவும்; வெற்று இலைகளில் ஒட்டிய உணவுத்துகள்களை ஓரவும்; வெறியைப் போர்த்துக்கொண்டு ஆடுகின்றன அம்பலமான துன்பியல் நிருத்தம் வைரவன்கள்; அது கண்டு...

(இதற்கு மேல் பொறுக்க முடியாமல் கூட்டம் கைதட்ட, சத்மா என்பவர் "நன்றி" என்று மறுபடியும் உரத்துக் கூவுகின்றார்)

வடி: அண்ணே புள்ளியே வைக்காம, மூச்சு முட்ட பேசுறானே இந்தாளு பேசினது என்னா பாஷை? தமிளா? எழவு எனக்குத்தான் புரியலியா?
பார்: இது முற்போக்கின் முன்நவீனத்துவம். அவருக்கே புரியுமாங்றது கஷ்டம். சும்மா புரியாவதி மாதிரி தொணதொணக்காதே
வடி: அது சரிப்பா. நன்றி நன்றி'ன்னு ஒரு பொம்பளை ஏன் எப்பவுமே கூவிக்கினே இருக்கு?
பார்: அதுவா? அது வந்து முற்போக்கின் முன்விமர்சனம்
வடி: அது என்னா எழவு?
பார்: இந்த மாதிரி இடத்துல "உள்ளேன் ஐய்யா" போட்டா நீயும் முன்னேறிய முற்போக்குவாதிதான் புரியுதா?
(மயங்கிய வடிவேலுவிற்கு நீர் தெளிவிக்கப்படுகின்றது)
பார்: பாத்தியா இதுக்கே அசந்துட்டியே. இம்மாம் நாள் இவிங்களோட அட்டகாசத்தை பொறுத்துக்கிட்டு இருக்கானுங்களே அவனுங்களுக்கு என்னாத்த தெளிக்கிறது?
வடி: அத வுடுப்பா. அதாவது பரவாயில்ல. இவனுங்களோட கூடவே இருந்து குலவை போடுறவனுங்களுக்கு என்னா குலை அடிச்சு தெளிவிக்கிறது?
பார்: கஷ்டம்தான். சரி சரி வா. நாளைக்குதான் மாநாடு முடியுதாம். கவரேஜ் கொடுக்கலின்னா ஜனங்க கோவிச்சுவாங்கள்ல
வடி: (நொந்தபடி) அது சரி....

(தொடரும்)

Wednesday, May 03, 2006

சில பல இணைய அரசியல்கள்

1. சகவலைப்பதிவர்களுடன் கலந்துரையாடல் செய்வது ஆரோக்கியமான விதயமே. அவ்வப்போது கூடிச்சேர்ந்து சரக்கடித்தலும் ஓக்கேதான். ஆனா மட்டையாயிட்டு, மட்டையடிக்கக்கூடாதென்று அறிக. கூட்டத்தோட கூட்டமா கோயிஞ்சாமி ஆகிறதுல தப்பில்ல. ஆனா சட்டையைக் கிழிச்சிக்கிட்டு கூடத் தண்ணியடிச்சவரோட பதிவுல பின்னூட்டம் போட்டா, சோபராயிட்டு வாடா சோமாறின்னு சுகுற்றா பதிலு ஹாட்டா கிடைக்குமில்ல...

2. கூடுமானவரை ஒரு அண்டர்ஸ்டாண்டிங், ஒத்த மனம் கொண்ட பதிவுகளில் ஜால்ரா பின்னூட்டம் விடுவதே முற்போக்கு என்பதறிக. அதுவும் முற்போக்குப் பதிவுகளில் முற்போக்கு பின்னூட்டங்கள் உங்களை இன்னமும் எங்கேயோ எடுத்துச் செல்லும். ஆத்துல ஆசாரமாயிருந்தாலும் (இணைய) அரங்கத்தில் அப்படிக் காட்டிக் கொள்ளவே கூடாது. அடுத்தவங்களைப் பார்த்து கத்துகலென்னா எப்பிடிங்க? இது தெரியாம கெக்கேபிக்கே'வென்று மதியில் பட்டதைச் சொல்கின்றேன் என்று 'படாபடா' விஷயங்களைப் பேசினால் பெயரில்லாதவர்கள் கூட சம்மி விடுவார்கள். அப்புறமென்ன? ஒருபாட்டம் ஓவென்று அழுதுவிட்டு, அடுத்த நுனிப்புல் மேயப் போக வேண்டியதுதான்.

3. அந்நியனுக்கே 3 வேஷந்தான். ஆனா இணையத்துல கண்டதைச் சொல்ல எத்தினி வேஷமடா ஷாமி? ஆஹா என்னமா தமிழ் பேசுறார்? அய்யகோ இவருக்கு முன்னாடி எதுவுமே ஈடு இணையில்ல! அவர் சொல்றதுலயும் ஒரு மேட்டர் இருக்குதுப்பா! இது சொன்னியே அது பாயிண்ட்டு! அவங்க சைடுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா! (என்ன இன்றைய வலைப்பதிவர் ஷ்டைலுல கீதா நைனா?) அப்பப்பா... இந்த நியூட்ரல் கியர்லேயே இந்த ஸ்பீடுன்னா, மத்த கியருல இவரு போனா இன்னாபா ஆகும்? எல்லோர்க்கும் நண்பரே நீ வாழி வாழி!

4. வலைப்பதிவர் கூட்ட ஒருங்கிணைப்பாளர் என்பது ஒரு நல்ல தனக்குத் தானே தலைவர் பதவி. சில பல வலைப்பதிவர்கள், கூடவே சில கொசுறுகளை ஒன்றிணைத்து, அவ்வப்போது மாநாடுகளைக் கூட்டிப், பெருக்கி, படம் காட்டுவது பிரதானமான, இலவசமாய், ஆதாயாமின்றி செய்யும் பணி. சென்னை ஒருங்கிணைப்பாளரும், பிரபல எழுத்தாளரும், தீவிர ரசிகருமான ஒருவர் தற்போது ஓரவஞ்சனையாய் செயல்படுவதாய் நியூஸ்பா. ஒரு சிலர் வந்தா பார்ட்டி. வேற சில பேர் வந்தா கல்தான்னு. அட அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா'ன்னு சொல்றீங்களா? அதுவுஞ் சரிதான். தேவுடா தேவுடா!

5. வெள்ளைக்காரவுக நாட்டுத் தலைநகர்லேர்ந்து அம்மாவுக்கு 'ஜெயஜெய' போடும் நபரின் அரிதாரத்தைக் கலைத்தால் படா பேஜாராக் கீதாம். என்னாடா மாம்ஸு விஷயம்'னு கேட்டா "வராண்டா" (அட இங்லீஷ் வராண்டா) மேல சத்தியமா ஆதாரங் கீதாம். அடப்பாவிங்களா? சவுண்ட் ஜாஸ்த்தியா வரும்போதே நெனைச்சேன். என்னடா ஓட்டைப்பானைக்குள்ளே நண்டை உட்ட மாதிரி இருக்கேன்னு. நாராயண! நாராயண!

6. "சிறுத்தைகள் நடமாடும் போது சிங்கங்கள் நடமாடக் கூடாதா" என்று தலைவர் கேட்டதும் நேக்கு ஞாபகம் வந்தது. ஒக்கடி+ஒக்கடி=ரெண்டு. அட அவரு கூட போலிகிட்ட சிங்கம்னு தானே சிலுத்துக்கிட்டாரு. அதுசரி தலீவரோட நாஷ்டாவையே புட்டு புட்டு வைக்கும்போது இது ச்சும்மா ஜீஜீபி.

7. ஆழமாக எழுதுவதெப்படின்னு கையேடு போட்ட ஆழ்குத்தெழுத்துசித்தனே கலங்கிப்போகுமளவிற்கு ஒரு வலைப்பதிவர் அதீத ஹார்லிக்ஸால் வளர்ந்து வருவதாய் கேள்வி. எழுதத் தெரியாதுன்னு ஷொல்லிக்கிட்டே இவர் போடும் குத்தாட்டத்தினைக் காணக்கண் கோடி வேண்டும். அவர் சொல்லும் ரகஸியம். "அதிகமில்லை ஜெண்டில்மேன். ரெண்டே ரெண்டு புக் அதுவும் டைடில்ஸே போதும்". ரெண்டே வார்த்தைகள்ல நாமும் "வாழ்க! வளர்க!!"

8. மாயவரம் மாபியா குசும்பினை மிஞ்சும் வகையில் மதுரக்காரய்ங்க குசும்பு கூடிப்போச்சு பாஸு. பன்னீர் சோடா என்ன, ஜில்ஜில் ஜிகர்தண்டா என்ன, கொத்து பொரோட்டா என்ன எல்லாரும் வைகைப்புயலாய் கூடி கைமா பண்றாங்கப்பு. எனக்குத் தெரிஞ்ச இன்னும் சில மதுர பாஸுக்கள் கலந்துகிட்டா போதுங்ணா. வலைபதிவையே கபளீகரம் செஞ்சுடுவாய்ங்க. நடாத்துங்கப்பு.

9. அல்டிமேட் காமெடியா அவா அவா சொந்த கருத்துத் தி(க)ணிப்பு போடுறது சூப்பரா கீதுபா. லேப்டாப்பும் கையுமா சில பேர், இது எதுவுமே இல்லாம சில பேர்'னு கலக்குறதக் கண்டா கதியே கலங்குது. தெனாலி ராமன் ஊருல எத்தினி காக்கா'ன்னு கேட்ட அக்பருக்கு ஆப்படிச்சது போல் அவங்க அவங்க ஒரு கணக்கு சொல்லும் போது, கண்ணுல தண்ணி தளும்புதுங்ணா. வரட்டும் 5/11 அப்ப இருக்குது...

10. முகமூடி மெட்ராஸுல கிழிஞ்சு போச்சாம். அப்ப நான் முகமூடின்னு ஒரு நாதாரி சொன்னதை நம்பி, கரப்பான் பூச்சியாய் மல்லாக்கப் போட்டுக் குத்தணும்'னு நாகரிகமா எழுதின நாதாரிக்குஞ்சு இப்ப எங்கே? ஆன்னாவூன்னா என்னா ஏதுன்னு வெவரமா புரிஞ்சுக்காமா திராபையாய் இணையப் பெருசை ராங்காய் போட்டுத்தாக்கி, அது அவரது பின்னூட்டமல்ல என்று இருமுறை தெரிந்தும் இன்னமும் கனத்த மௌனத்தையே சுவாசிக்கும் தி ரா'வுக்கு உம்மையிலேயே கடேசி எச்சரிக்கை. ராங்கா கையை வைச்சா அது வீங்க வைச்சுப்புடும்!