Monday, November 24, 2014

Monday, October 24, 2011

Sunday, January 02, 2011

சித்தப்பாவும் சில அப்ரசெண்டிகளும்

"ல்தமோ சைஆ" என மூத்தவலை பதிவர் பஞ்ச் டயலாக்குடன் தொடங்கியது எலக்கிய பொஸ்தக வெளி"ஈட்டு" விழா! ரெமி மார்டீன் சித்தப்பு "யாவரும் கேளீர்" என்று நர்சிம்ம"ராவா"க கூவ களை கட்டியது அரங்கம். கூடவே கும்மியடிக்க அப்ரசெண்டிகள் கொமெரா மற்றும் இத்யாதிகளுடன் ஆஜர். அப்புறம் BLOG'ட்டு பொதி போடணுமில்லே!

 பொஸ்தகம் லிஸ்ட்டில் ஒன்றான "பூ மாது"வின் வாசம் தூக்கம் என்பதால் "தேக" வதையை பொருட்படுத்தாமல் வாதையுடன் ஈக்களும் அங்கே ஆஜர். "தனித்திரு விழித்திரு பசித்திரு" என்று திரு திரு வென சமோசாவை சவைச்சபடி கண்களில் கனலுடன் செங்கனல் சேட்டாவும் ஆஜர்! "தம்பி டீ இன்னும் வரல" என்றவுடன் லக்கி அடிச்ச லுக்குடன் நவயுக கிருஷ்ணனும் ஆஜர். ரெமி மார்டினுக்கு சைட்டிஷ்கின் ஆஜராக இதோ விழா கவரேஜ்.

சித்தப்பா:  ஆஜர் ஆஜர் ஆஜர். இது பொஸ்தக வெளி"ஈட்டு" விழாவானு. மலையாளத்தில் பரஞ்சேங்கில் வல்லிய யுக்தியானு. இவிட புதியதாயிட்டு பணி கிட்டி. இவிட என்னை "புத்த நச்சி" போழ் கொண்டாடும் சொர்க்கமாணு! அடேய் அப்ரசெண்டிகளா சத்தம் போடாம இருந்தா எப்பிடி? "ச்சீ"லேவின் சில்வண்டுகள் தெரியுமா?

Corkஇ:
சரக்கு வைச்சிருக்கேன்
இறக்கி வைச்சிருக்கேன்
சாளரத்தை தொறந்து வைச்சி
கொமெண்ட் வேண்டியிருக்கேன்

சௌஜன்யா:

இந்த விழாவைப்போல்
எத்தனைபேர் காய்கிறார்களோ
இந்தக் இடையைப்போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் கட்டையைப்போல்
எத்தனைபேர் நலுங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி

நவகிருஷ்ணா:

ஆஹா கவுஜ கவுஜ! மனச தொட்டீங்க! ஆனா "அடிக்கும்" போது தொட்டீங்க!

செங்கனல்: நல்லதோர் ஆரம்பம். ஸ்வீட் எடு கொண்டாடு.

சித்தப்பா: அடேய் அப்பரசிண்டிகளா...இது புதிய முயற்சிடா. பொஸ்தகத்த மாத்திரம் பேசுங்கடா. என்னோடத மறுபடியும் நா"வள்" வெளியீடு ஆக்கிடாதீங்க. ஏய் இது நைட் நேரம். நீ கூலிங் கிளாஸை கழட்டு

சைட்டிஷ்கின்:

கோலிவுட் சர்க்கிளிலே நொந்தலாலா
உந்தன் கிக்குஜிரோ தெரியுதில்லே நொந்தலாலா
எடுத்த காட்சியெல்லாம் நொந்தலாலா
தகேஷி கிட்டானோ தெரியுதில்லே நொந்தலாலா

நவகிருஷ்ணா: அப்போ இது உங்கதை இல்லையா? "மேட்டருக்கு வா!"

சைட்டிஷ்கின்: இது ஒரு "பூமாது" கதையாணு. நீங்கள் அதை வீட்டில் வைத்துப் படிக்க முடியாது.

ஜட்டி சுட்டதடா
கை விட்டதடா
லாலாக்கு நொந்தலாலாமா!


செங்கனல்: என்னாது "பூமாது" கதையா? அதாவது பூக்காரி(கை) கதையா? எங்க கொஞ்சம் ஊது....

குழல் ஈ: இதை நான் வன்மையாக ஆதரிக்கின்றேன்

Corkஇ: நண்பேண்டா

சௌஜன்யா: "பூமாதா" எங்கள் குலமாதா

செங்கனல்: மாது மதுவென்று இணையத்தில் ஏற்கெனவே க(பு)தைக்கப்பட்ட ஸங்கதிகளாணு. "மாஸ்க்"கிட்டு டாஸ்மாஸ்கிட்ட ஒரிஜினல் குசும்பிட்ட ரெண்டு புள்ளிகாரன்களைகண்ட இணையமாணு இது

நவபாரதி: நர்ஸிம்மா தீர்ப்பை மாத்து

Corkஇ: ஆ"ங்". அவாளை மாத்தச் சொல்லு. நான் மாத்துறேன்

சித்தப்பா: ஆணிய புடுங்க வேண்டாம். டேய் இது என்னோட பொஸ்தக வெழாடா

சைட்டிஷ்கின்: இதை பற்றி ராவுல ரெமி மார்டினுடன் பறையலாம்

சித்தப்பா: ஆதிவாசி. தினவை அடக்கி வாசி.

நர்சிம்ம"ராவ்": பேட்டி கொடுப்பவர் நாங்கள். தினவெடுத்து வருகிறது வரிப்பட்டாளம்

நவகிருஷ்ணா: என்னாது "தினவா?" பேட்டியா?

சித்தப்பா: அட ஆச்சரியத்துக்கு பொறந்தவனே! சீனியர் பதிவர்களைப் பாரு

குழல் ஈ: இதை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். ஏனிந்த கொலை வெறி?

சித்தப்பா: டேய் ஸாகி பாம்பர் வேணும்டா. முடியலடா

அத்திரி புத்திரி பார் டெண்டர்: யார் ஸார் அந்த ரைட்டர்? மதுரைக்காரரா?

சித்தப்பா: டேய் அப்ரஸெண்டிகளா. போதும் இத்தோட நிறுத்திக்கலாம். ரொம்ப நல்லவனாக்கீட்டீங்கடா. உங்க எல்லாருக்கும் "படைப்புபுரம்" நாவல் பார்சலேய்...

Friday, December 31, 2010

உங்களவரின் G ஸ்பாட்டைக் கண்டுபிடியுங்கள்

கண்ட கண்ட வைத்தியர்களிடம் லோ LOW வென அலைஞ்சி "கரக்கி குத்து"வதை விட இதோ எளுப்பமான மார்க்கங்களானு:

ஸ்டெப் 1: ராடியாவை விளி

ஸ்டெப் 2: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

ஸ்டெப் 3: ராஜா கையை வைச்சா? சொர்க்கம் இவிடயானு

ஸ்டெப் 4: யோவ் அவா BJP எப்பிடி கண்டுபிடிச்சாளோ அப்பிடித்தான்யா நாங்களும் கண்டுபிடிச்சோம்

ஸ்டெப் 5: சந்தேகம் உண்டெங்கிள் இவிட விளிச்சு கேள்க்குக...
ஸ்டெப் 6: ஸங்கதி ஹாட்டானு.ஞான் அறியும் சேட்டா...
ஸ்டெப் 7: திராவிடத்துல G SPOT'ஆ? கலாஷி கொட்டு

ஸ்டெப் 8: ஒரு G இல்ல ரெண்டு G இல்ல...ரெண்டு G கண்டுபிடிச்சா 3 G சௌஜன்யமானு...

ஸ்டெப் 9: யென்னாது ரெண்டே தாங்கல...இதுல மூணா? போடாங்கோ...

Thursday, December 30, 2010

G Spot

"இன்னாத்த சொல்வேணுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ
வலைப்பதிவு ரெடி பண்ணுங்கோ"

ஜூட் மக்களே
ஒன்லி ஒன் ஒரிஜினல்
இணைய குசும்பன் ஆஜர்
அஜால் குஜால் கேரண்ட்டீடு
இப்போள் யெப்போளும்

ஸங்கதி செம ஹாட்டாணு!

"புத்த நச்சி புறப்புரம் தூக்கும்" எந்தா மனசிலாயோ?
ஓ புதிய வெளக்குமாறு பத்தி கூறியளோ?
அட கூறு கெட்ட குசும்பா! இது மலையாளமானு. அறிஞ்சோ?
கொறச்சு மலையாளம் ஞாங்கள்க்கு விவேக்கு பறஞ்சல்லோ?

பறைஞ்சு விட்டது ஸாரே
ஓ "கொச்சச்சன்" மாத்திரம் அறிஞ்சோ?
அடப்பாவிங்ளா? முடிலடா சாமி?
 
டைட்டில் எந்தானு? "அஞ்சரைக்குள்ள வண்டி" பறைஞ்சுவிடு!
ஞான் பறையும். பறையும்.
ஓ எக்கோ அல்லே

Wednesday, October 07, 2009

சராசரி எழுத்தாளன் For Dummies

வெகுசன ஊடகம், வெளங்காத சி(கு)த்திலக்கிய ஊடகம் என்று இரண்டு ஜாதி உண்டு. இதில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள். அப்படியிருக்க இந்த டிஜிட்டல் கேமரா வந்தவுடன் அனைவரும் போட்டோகிராபர்கள் ஆகிவிட்டது போல், இணையம் வந்தாலும் வந்தது ஆளாளுக்கு ஒரு பூக்கடை (அட வலைப்பூங்க!) திறந்து, எழுத்தாளர்கள் ஆகிவிட்டார்கள். இருப்பினும் இணையத்தில் இலக்கியம் இல்லை, அங்கே எழுதுபவன் எழுத்தாளன் இல்லை என்று மேற்கூறிய ஊடக ஜாதியியலாளர்கள் பிரஸ்தாபிக்க பலரது உள்ளம் தொய்ந்து போனது. ஏதோ எழுத்தாளனாவது சாத்தியமோ இல்லையோ ஒரு சராசரி எழுத்தாளனாக வேண்டுமென்ற வீணாய்ப் போன ஆசை கொண்ட வலைப்பதிவர்களுக்கு இந்த பூ சமர்ப்பணம்.

1. எழுத்தாளனும் சராசரியும் வேறு வேறு. வில்லை எடுத்தவன் வில்லன் அல்ல என்பது போல் எழுதுபவர் அனைவரும் எழுத்தாளர் அல்ல என்பதை உணரவும். எந்த குப்பையை வேண்டுமானாலும் எழுதித் தொலைக்கலாம். ஆனால் சஹ-எழுத்தாளர்களை விமர்சனம் செய்யுமுன் ஒரு விண்ணப்பம் போட்டுவிட்டு, முடிந்தால் "டிராப்ட்" காப்பி அனுப்பி "அப்ரூவல்" வாங்கி விட்டு பதிவேற்றலாம்.

2. எழுத்தாளர்கள் கொலை வெறியுடன் சண்டை போடும் போது "கிராஸ்-பயரில்" மாட்டிக் கொள்ளாமல் இருப்பது சராசரிகளின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. கருத்து கந்தசாமியாக முயற்சித்தால் அந்த "கந்தசாமியே" உங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்க!

3. வேப்பேரி ரிக்ஷமாமா, பிரெஞ்ச் மாமி, பிலிஸ்டைன் சமூகம், வாழ்வது எப்படி, இன்டலெக்ச்சுவல் இம்பேலன்ஸ் போன்ற சொல்லாடல்கள் எழுத்தாளர்களுக்கே உரிமம் ஆனவை. எடுத்தாள்வது என்பது மொன்னை கத்தியை வைத்து மொட்டை அடிப்பதற்கு சமானம். அயன் பற்றி வேண்டுமானால் எழுதலாம். ஆனால் அயன் ராண்ட் பற்றி எழுதினால் எழுத்தாளர்களின் "காண்ட்" ஆகி விடுவார்கள்.

4. பின் நவீனத்துவம், பின் நவீன மீள்பொருண்மை பக்கமெல்லாம் தலை என்ன உடலின் எந்த பாகத்தையும் நீட்ட வேண்டாம். சிக்கி சின்னா பின்னமாகி சீரழிவது நிச்சயம். எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டனேன்னு வருத்தப்பட வேண்டியிருக்கும்.

5. சுயசரிதைக்கும், நாவலுக்கும் குறைந்தபட்சம் அடிப்படை வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். ஆனால் சிக்கிக் கொண்டால் "அது என்ன என்னுடைய சுய சரிதையா? நாவல்யா நாவல்" என்று சொல்லி தப்பிக்க முயலக் கூடாது. ஏனென்றால் அது எழுத்தாளர்களுக்கே உரிமமான "சாக்கு-போக்கு"! நீர் ஒரு சராசரி என்பதை நினைவில் நிறுத்தித் தொலைக்கவும்.

6. முடிசுருள், பிலிம் சுருள் இத்தோடு சுருள்களை மூடிக் கொள்தல் நலம். உள்சுருள் உள்ளே போனால் உரோமம் கூட மிஞ்சாது என்று தெளிக! உதாரணமாக நீங்கள் 104 டிகிரி காய்ச்சல் என்ற நூல் எழுதியிருந்தால் அதில் உள்சுருளாக இப்படிப்பட்ட அறிவு செறிந்த கவிதைகள் எழுதியிருக்கலாம். உதாரணமாக:

வார்த்தைகள் அல்குதலாகி
அறுகிச் சிறுத்தது
வார்த்தைகளா
வடிவத்தின் படிமமா
படிமத்தின் பரிமாணமா
பரிமாணத்தின் பரிணாமமா
அல்குதலான அல்குலா


(பக்கம் 1005)
*****

பாசமாய் நான் வளர்த்த
பாச்சைப் பூச்சியின்
மீசைமயிரின் குறுகுறுப்புகள் ஊடே
உறைந்துவிட உள்விருப்பமுற்று
பாச்சையின்
அவுசை வாடை பட்ட
சுற்றுக் காற்று
அண்டமெங்கும் அடைந்து கிடப்பதாய்
அர்த்தங் கொண்டு
அலசிய போது
சாக்கடை புழுக்களூடே
கரப்பொன்று
மீசையாட்டியபடி
ஊரக் கண்டேன்

(பக்கம் : 2005)

******

இப்படி நீங்கள் கெக்கே பிக்கே என்று உளறியிருந்தாலும் உள்சுருளென்று உதார் விடக்கூடாது. உரிமம் இல்லாததால் உரித்து உப்புக் கண்டம் தடவி விடுவார்கள்!

7. நமக்கும் கொஞ்சம் இங்கிலிபீஸ் தெரியுமென்றாலும், படா படா எழுத்தாளர்களை மேற்கோள் காட்டக் கூடாது. அப்படி காட்டினாலும் அவர் புலிட்ஸர், எலிட்ஸர், நோ"பல்" போன்ற அவார்டுகள் அள்ளி குமித்திருக்கிறாரா என்று தெரிந்திருக்க வேண்டும். அல்லது அத்தகைய அவார்டுக்கு "ஈக்குவலாக" ஒரு அவார்டு வாங்கியிருக்கின்றாரா என்று அறிந்திருக்க வேண்டும். கலைமாமணி, கலாபவன் மணி, சாகித்ய அகாடமி, சங்கீத அகாடமி போன்ற அவார்டுகள் கணக்கில் கொள்ளப்பட மாட்டா!

8. சினிமா, இசை போன்ற விஷயங்களை எழுதும் போது அதீத ஜாக்கிரதை அவசியம். முக்கியமாக வசனம் எழுதியது யாரென்ற அடிப்படை விஷயத்தில் கோட்டை விட்டு விடாதீர்கள். உங்களது விமர்சனத்திற்கு முன்னர் எழுத்தாளர்கள் கருத்து என்ன என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறிவிட்டு இளையராஜா ஒரு குப்பை என்று ஜல்லியடிக்க முடியாது. ஏனெனில் நீர் ஒரு சராசரி!

9. ஙௌக்கா மக்கா தண்ணியடிச்சது பத்தியாவது எழுதித் தொலையலாமென்றால் அங்கேயும் "பொலிறிக்ஸ்" பொலி போட்டு விடும். சாராயம், கள், பிரெஞ்சு ஒயின், ஸ்காட்ச் விஸ்கி இப்படி ஒவ்வொரு பானத்திலும் ஒரு பாணம் ஒளிந்து கொண்டிருப்பது அறிக!

10. இத்த எயுதுன நானும் ஒரு "ஆவரேஞ்" தான்! பாருநிவேதித/நைவேத்திய கொள்கைக்கும் இதுக்கும் காத தூரமென்று அறிக! :-)