Wednesday, December 22, 2004

வலி தரும் நிவாரணிகள்

"டாக்டரு முட்டி வலிக்குதுங்கோ"

ஹிந்திலே மருத்துவம் வேணுமுன்னா அதிகமா 'முட்டி மாராதீங்கோ' அப்படீன்னு சொல்லலாம். ஆனா அமெரிக்காவுல முடியாதீங்கண்ணா!

வயாக்ஸ் மாத்திரை போடுண்ணாங்கோ! அப்புறம் வேணாம். மாரடைப்பு வரும்ணாங்கோ.

சரி. செலிபெரெக்ஸ் போடாலாம்னு பாத்தா... அதுக்கும் அடிக்கிராங்க ஆப்பு. மாரடைப்பு வருமாம்.

ஏம்ப்பு... முட்டி வலிக்கு வழி கேட்டா மாரு வலிக்கு வழி சொல்றீகளே...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா

நம்ம தில்லியில பதினொன்னாம் வகுப்பு படிக்கறவா ரெண்டு பேரு எக்கு தப்பா விசேஷம் செஞ்சு, அதை செல்பேசி கேமராவுல பதிவு செஞ்சி, உலகம் பூரா இணையத்துல பரவ விட்டது பழைய சேதி. அந்த படத்துல தெளிவா பொண்ணு முகம் தெரியுது. ஆனா படம் முச்சூடும் பயலோட குரலும், குறியும் தான் இருக்குது. ஊடகத்துல கர்ச்'சீப்' கட்டுன அவனோட தீவிரவாத முகந்தான் தெரியுது. படத்துல முகமில்லாம பையனோட குரலை வைச்சு அவனுக்கு தண்டனை கிடைக்குமா? (மிமிக்கிரி வல்லுநர்கள் மன்னிக்க) கேஸ¤ அவுட் ஆயிடுங்கோ... ஆனா அந்தப் பொண்ணு? அதோட வாழ்வு? அதைப் பத்தி அந்தப் பொண்ணுக்கே கவலையில்லை போலிருக்கே?

அடுத்து நம்ம திரிஷா மாமி குளிக்றா மாரி பிட்டுப் படம் ஓடுதாம் நெட்லே. அதை மறுத்து அவாளோட அம்மா டீடெயில்ஸ் குடுக்றா! எப்படி... என் பொண்ணு குளிக்க போறதுக்கு முன்னாடி உடைகளை தூக்கி எறிய மாட்டா. ஒழுங்கா கழட்டி வைச்சுட்டுதான் குளிக்கப் போவா...இப்பிடி அப்படி...அச்சு பிச்சு பேட்டி வேற...

அதாவது ஒழுங்கா (அடுத்தவாள வச்சு) பிட்டு படம் எடுக்கறவாக்கு ஐடியாவ திரிஷா அம்மாவே கொடுத்திருக்கா... அட கஷ்ட காலமே... இதெல்லாம் தேவையா? சர்க்குலேஷனுக்காக பத்திரிக்கைதான் கேக்குதுன்னா அம்மாவுக்கு புத்தி எங்கன போச்சுதுலே?

ஸாரி ரொம்ப(வே) ஓவர்

நம்ம ஜோக்குகளுக்கு படம் போட மதன் சார கேட்டேன் .அவரு பிஸியாம். அதனால படமில்லாம ஜோக்கை படிங்க.

(மட வாசலில் இருவர்)

ஏங்க இந்த சாமியாருக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்?

இவரு பட்டை போட்டிருக்காரு. அவரு நாமம் போட்டிருக்காரு. அவ்வளவுதான்.

அப்படின்னா ரெண்டு பேரும் சேர்ந்து மக்களுக்கு 'பட்டை நாமம்' போட்டிருக்காங்கன்னு சொல்லுங்க.

(கிராமத்தில் இருவர்)

ஏங்க அந்த பாதிரியாரை எல்லாரும் சேர்ந்து அடிக்கிறாங்க?

ஏற்கெனவே ஆடு திருட்டு அங்க அதிகம். அவிங்ககிட்ட போயி 'ஆடுகளை என்னிடத்தில் வரவிடுங்கள்'ன்னு சொன்னா...கும்மிட்டாய்ங்க

(கிறிஸ்துவரும் இந்து நண்பரும்)

எங்க பாதிரியார் உங்க சாமியார் மாதிரியில்ல. பொம்பளைங்களோட தைரியமா சந்திச்சு ஆசிர்வாதம் வாங்கலாம்.

அதெல்லாம் சரி. புள்ளைங்களத்தான் நம்பி அனுப்ப முடியாது. சரிதானே?

(கிறிஸ்துவரும் இந்து நண்பரும்)

மத நல்லிணக்கம் வளர்க்க அந்த சாமியார் சர்ச் போக நினைச்சாரே...என்ன ஆச்சு?

கன்னியாஸ்ரீகள் ரொம்ப பயந்ததால விஸிட் கேன்சல் ஆயிடுச்சாம்

(தவமிருந்து வரம் பெறும் பக்தர் மற்றும் கடவுள்)

பக்தா மெச்சினேன் உன் தவத்தை. வேண்டும் வரம் கேள்.

நடிகை X எனக்கு உடனே கிடைக்க வேண்டும்.

ஐயகோ ஏற்கெனவே சாமியார் Y கஸ்டடியில் கொடுத்து விட்டேனே. வேறு வரம் கேள்.

சரி நடிகை Z எனக்கு உடனே கிடைக்க வேண்டும்.

அடப்பாவி ஏற்கெனவே அந்த சாமியாரோட பக்தன் கஸ்டடியில் கொடுத்து விட்டேனே. வேறு ஏதாவது வரம் இருந்தால் கேள்.

இதெல்லாம் எனக்கு தெரியும். பெண்கள் இல்லாத இடத்தில் பிறக்க வரம் தாரும்.

(கொஞ்சம் லேட்டாக புரிந்த கடவுள்) அடப்பாவி அவனா நீ (மயங்கி விழுகின்றார்)

Wednesday, December 15, 2004

காரு வாங்கலியோ காரு

நம்ப நேரம் பாருங்கோ கண்ணுல இப்படிப்பட்ட செய்தி/விளம்பரந்தான் விழுந்து தொலைக்கிறது. இப்பெல்லாம் அமெரிக்கா விமானத்துல கொரிக்க கடலையும், ஒரு மிடக்கு சோடாவையும் கூட நிறுத்திட்டா. நம்ம ஊரு சகாரா பிளேனு ஞாபகம் வருது. அடடா என்ன உபசரிப்பு.

டெல்டா விமான கம்பெனி டல்லாஸ் இல்லேன்னா இன்னோரு பெரிய இடத்தை மூடறதாம். அதாவது 7,000 பேருக்கு வேலைலேர்ந்து ஆப்பு. இப்படி வெண்ணிற ஆடை நிர்மலா மாதிரி 'மஞ்சக் கடுதாசு' கொடுக்கிற டெல்டா நிலைமைதான் மத்தவாக்கும்.

அப்பத்தான் இந்த செய்தி முடிஞ்சி விளம்பரம் வந்திச்சு. "எங்க ஷோ ரூமுக்கு வாங்க. கோர்மே காப்பி மற்றும் Small Snak (ஙொப்ரான கடலை அல்லது மல்லாக் கொட்டைப்பா) தரோம்". அது டயோடா ஷோ ரூம். காரு பேரு லெக்ஸஸ் LX I 2005. விலை சுமார் முப்பது லட்ச ரூபாய்க்கு மேல்.

C:\Documents and Settings\Sam\Desktop\Blog\Kusumban\lexus

ஒரு காப்பி, கடலை பாக்கெட் விலை உமக்குத்தான் தெரியுமே?

அட ஈஸ்வரா...இந்த மார்க்கெட்டிங் பேரு என்னாப்பா?

இந்த வாரம் இவர் - மாயூரனார்

பிடித்தது - தலைவர் ரஜினிகாந்த்
'பிடி'ப்பது - பெரிசு கருணாநிதி
படித்தது - மாயூரம் (மயிலாடுதுறைன்னு யார்ப்பா பேரை மாத்தினது? நல்லவேளை பெரிசில்லை? ;-))
பிடிக்காதது - முரசொலி
பார்ப்பது - சன் டிவி
கனவு - சந்திரமுகி
நண்பர்கள் - ஏனைய ரஜினி ரசிகர்கள்
எதிரிகள் - கருணாநிதியை அண்டியிருப்பவர்கள்
நிரந்தர எதிரி - ஐய்யா ராமதாஸ்
வீட்டுக் குசும்பர் - Master R. சந்தோஷ் (வீட்டில் கணிணியின் பவர் ஆப் பட்டனை அடிக்கடி அமுக்குவதால்!)
புதிய நண்பர் - போட்டுத்தாக்கு விஜய்
எப்போதும் நண்பர் - ரஜினி ராம்கி
விரும்பும் வாசஸ்தலம் - இமயமலை
வழக்கம் போல - 'ஊருக்குத்தானா உபதேசம்'

நமக்கப்புறம் வலைப்பூவுக்கு ஒருமாசம் அப்புறமா வந்து டகால்ட்டி வேலை காட்டி மாயூரத்தார் குசும்பனை கவர்ந்துவிட்டார். ('லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா?'). அதற்காக இணைய குசும்பன் பேரவை (?) சார்பாக இவ்வார 'குசும்புத் திலகம்' பட்டம் பெறுபவர் நமது பெருமதிப்பிற்குறிய அண்ணன் கி.ரமேஷ் குமா(சும்ப)ர்!!!

அப்பப்போ பட்டம் வழங்கி வலைப்பூ மக்களை அசத்தலாம்னு திட்டம். ஆனா காசு கொடுத்து வாங்கற விருதில்ல இது. அதுனால காசனுப்பி ஏமாறாதீங்க. திருப்பி அனுப்ப மாட்டேன்!!!

ஸாரி கொஞ்சம் ஓவர்

சொந்த சாமியார் ஜோக்குகள். அடிக்க வர்றதுக்குள்ள வுடு ஜீட்டேய்...

1. (போலீஸ் கஸ்டடியில் சாமியார்)

ஏட்டய்யா...சின்ன வயசிலேயே நான் சாமியாராயிட்டேன். அதனாலதான் நான் 'குட்டி'சாமியார். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி 'குட்டி'யெல்லாம் இல்ல...

2. (மன்னரவையில் இருவர்)

நம்ம ராஜா பயங்கர உஷார் பேர்வழிதான்

எப்படி சொல்ற?

இந்தச் சாமியாரைப் பார்த்ததும் அந்தப்புர பாதுகாப்பைப் பலப்படுத்திட்டாரே!

3. (ஆசிரம வாசலில் இருவர்)

ஏம்ப்பா...பெண்களுக்கு அனுமதியில்லைன்னு போர்டு போட்டிருக்கே...ஒருவேளை ஒரிஜினல் சாமியாரா இருக்குமோ?

அட நீங்க வேற. அவரு பொண்ணுங்களை நீலாங்கரை சொகுசு பங்களாவுலதான் சந்திப்பாராம்.

4. (பஸ்ஸ்டாண்டில் இருவர்)

ஏன் ஸார்? செல்வராகவன் சாமியாரை மையமா வைச்சி படம் எடுக்கிறாரே...டைட்டிலு என்னங்க?

மன்மதராஜா

5. (அருள்பாலிக்கும் கூட்டத்தில் இருவர்)

ஏங்க என்ன கேட்டாலும் 'எல்லாம் அவன் பாத்துப்பான்னு' மேல நோக்கி கை காட்டாம, கிழக்குப் பக்கமா சாமியார் கை காட்டுராரே...ஏன்?

அங்கதானே தேனாம்பேட்டை 'பங்க் குமார்' இருக்கான்.

Friday, December 10, 2004

ஆஹா கிளைம்பிட்டாய்ங்கடா...

அது ஏனோ பாசு...எக்குத்தப்பு மேட்டரா நம்ம கண்ணுல படுது. ஏற்கெனவே 'செல்பேசி' பிரச்சினையை சொல்லியிருந்தேன். இப்போ புச்சா Laptop சேந்துடுச்சு கண்ணா...

மடியிலே வைச்சி (அப்புறம் அதை எங்கன வைக்கிறதுன்னு என்னை வையாதீக!!!) யூஸ் பண்ணா விரை வெப்பம் (ஆஹா தமிளு...) ஜாஸ்தியாயி கெர்ப்ப அணுக்கள் (உபயம்: சிட்டுக்குருவி லேகிய காளிமுத்து வைத்தியர் விளம்பரம்) கொறைஞ்சுடுமாம்.

பூச்சி மருந்தடுச்சி சாப்பாடே பாதி விஷமாக்கினீங்க..இப்போ செல்போன் வைச்சுக்காதே, லேப்டாப் யூஸ் பண்ணாதே...கொயந்தை பொறக்காதுன்றீங்க...

சின்னப்புள்ளீங்களை இப்டிகா பயமுறுத்தாதீங்க... சாமியாருங்ககிட்டதான் புள்ள வரம் கேட்டுப் போகோணும்...அங்கே போனா 'இலவசமா' தராங்கன்னு 'இணையம்' சொல்லுது...

Wednesday, December 01, 2004

போடாங் ஙோ

இன்ன்னிய தேதிவர ஒரு மக்காவும் சாமி சைடுல வரல. நேசமோடு வெங்கடேஷ் கூடவா? அல்லாரும் சேம் சைடு கோலு போடணுமா? சாமி தகுதியை வுடுங்கோ... வயசுக்குமா மர்யாதை இல்லே?

பாரா கோவுச்சிக்கினாரு... சுவர்ணமால்யாவோவோட ஜல்சான்னு நெற்றிக்கண் எய்தலாமான்னு? பத்ரி சாரு மதன் கார்ட்டூனு போட்டேன்னு ஜஹா வாங்கிட்டாரு...

200 கோடி சொத்தை 2600 கோடி ஆக்குறது துறவியோட வேலையா? இராம.கி. கேள்வி கேக்குறார்.

எல்லாஞ் சரி. 70 வயசு சாமி அனுராதா ரமணன் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சாரா? சாமிக்கே 'வயாக்ரா' தந்ததாரு?

இம்மாநாளு கம்முன்னு அனுராதா சும்மா இருந்த காரணம் என்னா? குரு சிஷ்யை உறவு சொல்ற உஷா நிலைமை என்னா?

சதுர்வேதி சாமி மண்டை காயறதுக்குள்ள உம்மை ஷொல்லிடுங்கோ!!!

ஙொய்யா மக்கா....

சினிமாவுல மொத்தம் ஒன்பது கருதானாம். காதல், பாசம், விட்டுக் கொடுத்தல், தியாகம், சந்தேகம், பிரிந்தவர் சேர்தல், பழிவாங்குதல், வறுமையிலிருந்து முன்னேறுதல் & தெய்வீகம்.

ஆமாம்... நேக்கொரு சந்தேகம்...

காதல் பாசமில்லையா? காதல் விட்டுக்கொடுத்தலில்லையா (காதலுக்கு மரியாதை போல?) காதல் தியாகமில்லையா? காதல் சந்தேகம் தருவதில்லையா? காதல் பிரிந்தவர் சேர்வதில்லையா? காதல் தெய்வீகமில்லையா?

ஆக மொத்தத்தில் காதல், வறுமையிலிருந்து முன்னேறுதல் (காதல் வறுமையில் தள்ளளலாம்!!!) என்று இரட்டை கருக்களே சினிக்கதைகளுக்கு மிஞ்சுகின்றன. என்னப்பு நாஞ் சொல்றது?

Saturday, November 13, 2004

மட விவகாரம்

தனி மனித துதியோ, மிதியோ நமக்கு ஆவாதுங்கோ...(நடுநிலையா எழுதப் போறேங்கறதை சூசகமா சொல்லியாச்சுங்கண்ணா)

இணையத்துல எல்லோரும் பூந்து கலக்கிட்டபின்னே நமக்கென்னா வேலைங்கறேளா? அதுவும் சரிதான். ஏதோ நம்மாலான பத்து காசு இதோ:

1. கருணாநிதி கைதையும், சாமிகளோட கைதையும் ஒப்பிடலாமா? முதல் கைது 'கில்லி' பட ஸ்பீடு. ரெண்டாவது 'ஆட்டோகிராப்' மாதிரி ஸ்லோ மோஷன். கைலி, முண்டா பனியனோட, கால்ல செருப்பில்லாம, கோழிக் குஞ்சை தள்ளிக்கினு போறமாதிரி முத கைது. ஆனா தனி செஸ்னா விமானத்துல ஆந்ராவிலிருந்து வந்து, போலீஸ் வேன்ல கூட ஏறாம டயோட்டா குவாலிஸ், டாடா சுமோன்னு சொகுஸா வேலூர் வரை வந்தது ரெண்டாவது கைது. வேலூர் சிறை சூப்பிரடெண்ட் சொல்லிட்டார். சாமிகளின் பூசை, புனஸ்காரம் தொடரும். சிறையின் சீருடை கிடையாது. தண்டம் வைத்திருக்கலாம். போன்ற சில சலுகைகள். அரசு வழக்கறிஞரோ சாமிகள் குற்றஞ் சாட்டப்பட்ட கிரிமினல். அதனால் பிரத்தியேக சலுகைகள் கிடையாதுங்றார். என்னாப்பா நடக்குது? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

2. சங்கரராமனுக்கு (அவாளா இருந்தாலும்) கருணாநிதி காட்டிய கரிசனம் (?) புல்லரிக்க வைத்தது. வாழ்நாளில் பாதி திமுக கட்சி வளர்ச்சிக்கு அர்ப்பணித்த சிவகங்கை சிங்கமான தா.கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டதற்கு ஆறுதல் கூட சொல்லவில்லை தன்மானத் தலைவர். இப்போ சங்கரராமனுக்காக உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கின்றார். காலக் கொடுமையே...சரி விடுங்க...அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

3. கொலைக்கான பணத்தை சீலோடு யாராவது கொடுப்பார்களா? கொலை செய்தவரோடு செல் போனில் பேசுவார்களா? இவ்வழக்கு ஜோடனை செய்யப்பட்டதாக இருக்கலாமென்று சந்தேகத்தை SK அண்ணா எழுப்பியிருக்கின்றார்கள் . அதே வாதம் அழகிரிக்கும் பொருந்துமென்னும் கருத்தும் நிலவுகின்றதே? அதாவது ஒரு கட்டத்தில் 'இந்தாளு (தா.கி.) செத்தாத்தான்யா நிம்மதி', என்று ஓப்பனாக கோபப்பட்டார் அழகிரி. அப்போது அவருக்கு தெரியாதா தாகி கொல்லப்பட்டால் தனக்குத்தான் போலீஸ் முதல் ஆப்படிக்குமென்று. அதென்ன சாமிகளையும், அழகிரியையும் ஒரே தட்டில் வைக்கிறேனென்று கோபப்படாதீர்கள். சாமிகளுக்கு 'இம்மாதிரி' கேஸ் புதிது. திட்டத்தில் தப்பு நடக்க சான்ஸ் உண்டு. ஆனால் அழகிரி 'கில்லாடியாயிற்றே'. அவருமா இப்படி தப்பு பண்ண முடியும்?

4. பத்ரியோட பதிவு ஆச்சரியமாயிருந்தது . தலைவரு முடிவே பண்ணிட்டார். வீரப்பனே தேவலாமென்று. எனக்கென்னமோ 'எல்லாமே' இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாத்தான் படுது. 'சூப்பர் ஆதாரம்'னு இருக்குன்னு சொல்லி ராத்திரியோட ராத்திரியா சம்மி கூட்டிட்டுப் போயி கருணாநிதியை 'அம்மா' என்னா பண்ணாங்க? பாவம் ஆதாரம் தேடி பாலங்களை உதைச்சு உதைச்சு முகமது அலி காலு வலி கண்டதுதான் மிச்சம். கேஸையே இப்போ டிராப் பண்ணிட்டா. வளர்ப்பு மகன், எம்ஜிஆரின் முன்னாள் டிரைவர், செரினா, சின்னம்மாவின் பெரியப்பா(?) அல்லாரு மேலும் 'அம்மா' கஞ்சா கேஸ¤ போட்டாக...இப்போ என்னாச்சு? யாருக்கும் தெரியுமோ?முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி மீது 'முறை கேடாக' நடக்க முயற்சி செய்ததாய் புகார், எல்லாம் செய்து கொடுத்த முன்னாள் சென்னை கமிஷனர் முத்துக்கருப்பன் மீது 'சொத்துக் குவித்த' புகார், முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் மீது 'செக்ஸ்' புகார் என்று 'அம்மா'வின் புகார்/கைது/சஸ்பெண்ட்/வாபஸ் படலங்களை நாம் பல வருடங்களாய் கண்டு களிக்கின்றோம். அதுபோல் இவ்வழக்கும் 'புஸ்'வாணம் ஆக சாத்தியக்கூறுகளுண்டு. மெட்ராஸிலுள்ள நிலம் கைமாறததால்தான் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி உள்ளே போனாரென்ற வதந்தியுண்டு. இப்போ ஜீனியர் விகடனும், தினகரனும் 'மெடிகல் காலேஜ்' விஷயம்தான் தான் மடத்துக்கும், அரசுக்குமிடையே கசப்பை ஏற்படுத்த காரணமாயிருக்கலாமென்கிறது. உண்மை அப்படியென்றால்...'அடப் பாவிங்களா... இப்படியெல்லாமா பழி வாங்றது?'

5. எத்தனையோ பதிவுகளைப் படிச்சாலும், 'இல்லைய்யா. சாமிகள் அப்படி செய்திருக்க வாய்ப்பேயில்லை'ன்னு ஒரு பதிவும் சொல்லலே. இதுதான் இணைய நியாயமோ? வீரப்பனைக் கூட சுட்டதற்கு எதிரா கார-சார விவாதங்களைப் பதிஞ்சாளே!!! ஒருவேளை 'முத்திரை' குத்திடுவாளோன்னு பயமா இருக்கலாமோ? அப்புறம் எதுக்குவே எல்லாரும் கூசாம 'தங்கு தடையற்ற இணைய சுதந்திரம்' பத்தி மார் தட்டுறீங்க? தமிழ்மணத்துல ரெஜிஸ்டர் ஆன 259 மனங்களும் ஒரே மாதிரி சிந்தனை செய்யுதா? நம்ப முடியலியே பாசு !!! அப்படியே இருந்தா இந்தா குசும்பன் கூவுறான் "வாள்க இணைய ஒத்துமை".

6. பாவம் நம்ம அருண். அவரோட கனவுகளுக்கு ஒரு வரைமுறையே இல்லாம ஆட்டோ மீட்டர் போல தறி கெட்டு எகிறிக்கொண்டிருக்கின்றது. அவரோட பதிவைப் படிச்சேன். //சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஆன்மீகவாதிகளுக்குப் பொருந்துவது போல், அரசியல்வாதிகளுக்கும் பொருந்துமல்லவா?! அப்படிப் பொருந்த வேண்டும் என்பது தான் எனது பிரார்த்தனைகளும்!//. தாகி மற்றும் அண்ணா நகர் ரமேஷ் கொலைகளும், சங்கரராமன் கொலையும் ஒன்றா? ஒரே மாதிரி விசாரிக்கப்படணுமா? ஆன்மீகவாதிகளும்/அரசியல்வாதிகளும் சட்டத்தின் முன் சமமா? ஆஹா குசும்பில் நம்மை மிஞ்சி விடுவார் போலிருக்கின்றதே!!! ;-)

7. கடேசியா ஆச்சிமகனோட சங்கல்பம் //எஞ்சியிருக்கும் வாய்ப்பிலும் நிச்சயமாக ஜெயேந்திரர் பற்றியெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடித்து விடமாட்டேன்//. . ஏங்க அப்படி?

Tuesday, November 09, 2004

வாங்க தமிழ் வளர்ப்போம்

தமிளு தமிளுன்னு மக்கள் கூவிக்கினு இர்க்காங்கோ. சினிமா டைடிலு, ஷாப்புக்கடை போர்டு'ன்னு தமிளகமே திமிலோகப்படுது. டாக்டர் ஐய்யாவும், சமீபத்து உடன்பிறவா சகோதரன் திருமாவும் கூத்துக்கட்டி அடிக்றாங்கோ.

செம்மோழி சகோதரர்களே! சமீபத்துல வந்த விகடன் படிச்சேளா? சும்மா சூப்பரா தமிழ் வளர்க்கறா...டைடில்ஸ் மட்டும் படிங்கோ...சும்மா சுகுற்ரா தமிளு வளருது...

கார்ட்டூன்
க்ளிக்ஸ்
இந்தியாவின் இளமை ராக்கெட்
ஸ்பாட்லைட்
ஐ லவ் யு விகடன்
லவ் பண்ணுடா மவனே
லவ்வோகிராபி
ஐ லவ் ராம்போ
லவ்வர் பாய்
ஜோக்ஸ்
பிட்ஸ் (யோவ் பிட்டுப் படம் இல்லையா)
காமெடி கிளப்
புது டிரஸ் புது டிப்ஸ்
குட்டி விஐபி
பலகாரம் உங்கள் சாய்ஸ்
கிச்சன் ஷோ
ஹாய் மதன்
உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்
விகடன் புக் கிளப்

இதுல என்னமோ குமுதம் பத்திரிக்கை ஒரு சோமாறி...குங்குமம் ஒரு முடிச்சுமாறி (நன்றி சு.ரா.) அப்படின்னு குய்யோ முறையோ'ன்னு கத்தல். பாய்ஸ் படத்துக்கு 'சீய்'னு விமர்சனம் போட்டா சரியாயிடுமா? ஜூனியர் விகடன் போட்டோவெல்லாம் சும்மா கும்முன்னு தூக்கல? சிட்டுக்குருவி லேகிய வைத்தியர் விளம்பரம் வரல?

தமிளு பத்திரிக்கை, குடும்ப பத்திரிக்கை அப்படின்னு டகால் பாஜி வேலெ வேணாம்லே... சர்க்குலேஷன் தான் முக்கியம். எல்லோரும் அதைத்தான் பண்றாங்கோ..

அருமையான பத்திரிக்கையா விகடன்... வாசன் ஸாரோட வாசனை மங்கிப்போச்சி...

அட காலி பெருங்காய டப்பாதான். ஆனா வாசனையும் (டபுள் மீனிங்) தொலை(ச்)ஞ்சிப்போச்சே...

கஸ்டமா கீதுபா...

:-(

Tuesday, November 02, 2004

போதை எதிர்ப்பு

ஒரு காட்டிலே முயலொன்று சந்தோஷமாக துள்ளித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஒட்டகச் சிவிங்கி கஞ்சா அடிப்பதற்காக, ஜாயிண்டை சுற்றிக்கொண்டிந்தது. பதறிப்போன முயலானது,"ஒட்டகச் சிவிங்கியே! போதைப் பொருள் தீங்கு விளைவிக்கும். வா என்னுடன். சந்தோஷமாக காட்டைச் சுற்றி ஓடிவருவோம்", என்றது. சிவிங்கியும் மனது மாறி கஞ்சாவை எறிந்து விட்டு முயலுடன் ஓட ஆரம்பித்தது.

அவையிரண்டும் ஒரு யானையைச் சந்தித்தன. அப்போது யானை சுகமாக கோகெயினை உறிஞ்சும் முயற்சியிலிருந்தது. முயலோ வழக்கம் போல யானையிடம், "போதைப் பொருள் வேண்டாம். வா எங்களுடன். சந்தோஷமாக காட்டைச் சுற்றி ஓடிவருவோம்", என்றது. யானையும் சம்மதித்தது. மூன்று மிருகங்களும் ஓட ஆரம்பித்தன.

அப்போது ஒரு சிங்கம் போதை ஊசியை போட்டுக் கொள்ள தயாரானது. உடனே முயல் தனது பல்லவியை ஆரம்பித்தது. நிமிர்ந்து பார்த்த சிங்கம் ஊசியை கீழே வைத்து விட்டு முயலை சாத்து சாத்தென்று சாத்த ஆரம்பித்தது.

பதறிப் போன சிவிங்கியும், யானையும்," சிங்க ராஜாவே! முயலை ஏன் அடிக்கின்றீர்கள்? நமக்கு நல்லதற்குதானே சொல்லுகின்றது" என்று கோரஸ் போட்டன. சிங்கம் சொன்னது," என்னாது? இந்த முயலா? நமது நன்மைக்கா? எப்போ 'எக்ஸ்டஸி' போட்டாலும் முயல் இப்படித்தான். ஒரு அடிமுட்டாள் போல என்னை காட்டையே சுற்றி சுற்றி ஓட வைக்கும் படவா ராஸ்கல் இது" என்றது.

பி.கு. எக்ஸ்டஸி அமெரிக்காவில் மிகப் பிரபல்யமான போதைப் பொருள்.

Thursday, October 28, 2004

கண்றாவி கண்றாவி

எகனாமிக்டைம்ஸ் கட்டுரை படிங்கோ. காறி துப்புங்கோ.

ஹாட்டு கண்ணா ஹாட்டு

இன்னாப்பா இம்மாம் நாளா எழுதறோம். மக்கா ஒருத்தரும் நம்மளை கண்டு(டி)க்களையேன்னு வருத்தமா கீதா? இந்தா புடிங்க...டேவிட் லெட்டர்மேன் கணக்குல கவுண்ட் டவுன். இதெல்லாமே ஹாட் தலைப்புகங்கறதால நம்பர் ஏதும் போடல. இதெல்லாம் சும்மா எழுதுனா ஜிவு ஜிவுன்னு கூட்டம் மொய்க்கும்.
அப்பால நம்ம டாபிக்கை பயன்படுத்தினா காப்புரிமை கேசெல்லாம் போடமாட்டேன். அதனால கலாய்ங்க...

செம்மொழி ஜிந்தாபாத்

எப்பவுமே சூடான டாபிக் இது. மொழி தெரிஞ்சவா, தெரியாதவா எல்லாருமே ஜல்லியடிக்கலாம். ஒரு பக்கம் 'தமிழ் படிச்சா வேலை கிடைக்குமா'
கஸ்மாலம்பாங்க. 'பழமைவாதிம்பாங்க'. இன்னோரு பக்கம் வணக்கம் தலைவரேன்னு பதிகம் பாடுவாங்க. ஆகமொத்தத்துல ரஜினி படத்துக்கான மினிமம் கியாரண்டி போல இந்த ஹாட் டாபிக். தயக்கமில்லாம யூஸ் பண்ணுங்கோ.

வார்த்தை War

கமெண்டுப் பொட்டி கலகலக்கணும்னா இத விட சிறப்பா ஒண்ணுமே இல்ல. பிளாக்குல ஒரு குறிப்பிட்ட 'சிலரை'த் தேர்ந்தெடுத்து, வார்த்தை செட்டுகளைப் போட்டு ஒரு கும்மு கும்முங்க. யாரு கண்டா ட்ராக் பேக்கும், எதிர் வினையும் உங்களை எங்கேயோ கொண்டு போயிடும். எதுக்கும் முதலுதவிப் பொட்டிய ப(க)க்கத்துல வெச்சுக்கிறது ஷேமம்.

இலக்கிய அபிஷ்டுக்கள்

அடா அடா இதப் பத்தி பத்தியா நெடுங்கதையாடலாம். எழுதுறதுக்கு முன்னாடி காலச்சுவடு, உயிர்மை'ன்னு படிச்சுட்டு எழுதுங்கோ. சாருமதியோட கோணல்
பக்கங்கள் ஒரு அட்சய பாத்திரம். அள்ளிண்டு வந்து கொட்டுங்கோ. உள்ள(த்)தை சொல்கிறேன்னுட்டு குழுஊக்குறி (நம்ம நாடன் சார் எழுதின கட்டுரை)
போட்டு வெளுத்து வாங்குங்க. ரெஸ்பான்ஸ் வந்து ஜில்பான்ஸ் மாதிரி கெடைக்கும்.

கவிதாயினிகள் கலாசல்

இது மேற்படி தலைப்புக்கான உப தலைப்புதான்னாலும் தனி ஸ்பெஷாலிடி உண்டு. யெலெக்கியவாதிங்கள ஊடு கட்டி அடிக்கலாம். டகீலா போட்டுட்டு ஷகீலா படம் பாத்த மாதிரி இருக்குன்னு கவிதயா பெனாத்தலாம். என்ன... பின்னூட்ட பொட்டியில விளக்கமாறு வந்தா நான் பொறுப்பில்லைங்கண்ணா முன்னாடியே சொல்லிப்புட்டேன்.

கீதா கீர்த்தனாக்கள்

இது வேற கீதா. பகவத் கீதா. சும்மா பட்டய கிளப்பலாம். லைட்டா 'வர்ணம்' பூசி எழுத தெரிஞ்சா உத்தமம். இல்லேன்னா 'யேய் நான் தெரியாம எழுதல. வம்பிழுத்தே டின்னு கட்டிடுவேன்'ங்ற தொனியில எழுதினா இன்னும் சூப்பரு. அப்படியே சைடுல போனா 'அவதாரங்களையும்' லேசா போட்டுப் பாக்கலாம். இராமரோட சாதகம் பாத்து புறந்த எடத்தை எழுதலாம். இல்ல மறுக்கலாம். இன்னும் கொஞ்சம் சைடுல போனா ஆரியன், திராவிடன், தீவாளி'ன்னு இந்த சரத்துக்கு முடிவேயில்ல. கொஞ்சம் கற்பனையை அவுத்து வுட்டா உம்மள புடிக்க முடியாதுங்கோய்.

Female Kind

முச்சங்கரி அணி போட்டு முச்சங்கர்களோடு அடித்துப் பிடித்து விளையாடலாம். ஏதோ ஆம்பளைன்னா அப்புரானின்னு அழுகுணி ஆட்டம் ஆடறதா பூகம்பம் கிளப்பலாம். நேரா மோத தயக்கம்னா முகமூடி போட்டுகிட்டு ஆம்பளைங்களே இந்த ஆட்டம் ஆடலாம். சுவாரஸியமா இருக்கும். முக்கியமா முச்சங்கர் சின்னம் (logo) பத்தி பிரச்சினை கிளப்பலாம். ஆமாப்பா மலர்கள் பொம்பளைங்களோட சின்னம்தானே! ஏதோ குட்டையை நல்லா கலக்குங்கோ. மீனு தானா மாட்டும்.

கதே, கவிதே

ஒரு இழவும் புரியாத மாதிரி கதே போடலாம். இல்லேன்னா இருக்கவே இருக்கு கவித. படிக்கறவா முடியைப் பிச்சிண்டு அலையணும். கமெண்ட் போட சொன்னா, எழுதறவங்க ஒரு நல்ல கருத்தா சொல்லிட்டா ஹிட்டு தான். ஊக்கத்திற்கு குங்குமம் மாதிரி நல்ல கமெண்ட்டுக்கு தலைமுடி தைலம் இலவசமாய்த் தர்றதா விளம்பரம் கொடுக்கலாம்.

மனித உரிமை Murder

தூக்கு தண்டனை தேவையா? என்கவுண்டர் அவசியமா? மனித உரிமை, மண்ணாங்கட்டின்னு பெனாத்தறதுக்கு பொருத்தமான டைட்டில் இது. ரெண்டு சாரரா பிரிஞ்சிக்கிட்டு மாத்தி மாத்தி (புஷ்-கெர்ரி மாதிரி) சேறு அடிச்சு களிக்கலாம். எக்குதப்பா யாராவது பேசினா பெர்சனலா அட்டாக் பண்ண சரியான சந்தர்ப்பம் இது. வுடாதீங்கோ.

பெரிய மனித Review

லட்டு மாதிரியான டாபிக் இது. பேரு தெரிஞ்சவங்க கொடுக்கும் பேட்டி, எழுதின பொஸ்தகம், பாட்டு, கட்ளைன்னு திரும்புன பக்கமெல்லாம் கெடைக்கும். பாஞ்சு புடிக்கணும். கொஞ்சூண்டு படிக்கணும். ஐடியா அப்படியே வந்து விழும். மறை கழண்டு போச்சு, வயோதிகம் வந்துடுச்சு, செலக்டிவ் அம்னீஷியா, நட்டு கேசுன்னு மரியாதையா சொல்லிட்டு பல பதிவுகள் போடலாம். தெகிரியமிருந்தா பதில் போடுன்னு மடலாற்குழுவுல ஓப்பன் சேலஞ்ச் உடலாம். யாரு கண்டா நம்மை வைச்சு நாலு பேரு அடிச்சிக்குவாங்க.

Deep Writing

முன்னமே சொல்லிப்புடுறேன். இது கொஞ்சம் கஷ்டம். பத்து நாளு படிச்சிப்பிட்டு ஆழ, அகலமா எழுதுறது. இன்ஸ்டண்ட் பேரு கிடைக்காது. மொதல்ல கொஞ்சூண்டு பேரு வருவாங்க. அப்புறமா தெரியாது. நமக்கு இதெல்லாம் ஒத்து வராது பாசு.

பினா.குனா. இதல்லாம் வெறும் டிப்ஸ்தான். குத்து வெட்டுக்கு ஆளான நான் பொறுப்பில்ல!!!

Friday, October 22, 2004

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும் - 3

சுஜா'தா(த்தா) சொன்னாலும் சொன்னார். 15 நிமிஷப் புகழுக்கு எழுதுராளாம் வலைப்பூவில. வீரப்பன் விவகாரம், கீதை விவகாரம், இலங்கை விவகாரம், அரசியல் அடிதடி'ன்னு நான் போற பக்கமெல்லாம் ஒரே 'டிஷ்யூம்-டிஷ்யூம்' சத்தந்தான் கேக்குது.

இன்னும் சிலரோ புகழா மாதிரி தூத்துறா!!!

அப்புறமா யாராவது எங்கிட்ட சண்டைக்கு வந்தேள்னா கூலா சொல்லிப்புடுவேன். "ஆமா இவரு பெரிய வெ.சா. நான் ஒரு சு.ரா. திண்ணைல அடிச்சுக்கிறதுக்கு" அப்படின்னு!!! (இதை அப்படியே உதயகீதம் கவுண்டமணி ஸ்டைல்ல படிங்கோ. நச்சுன்னு இருக்கும்).

15 நிமிஷ புகழத்தான் நானும் தேடிண்டே இருக்கேன். இன்னும் கிடைக்கல. கிடைச்சவா இல்லேன்னா தெரிஞ்சவா ஷொல்லுங்கோ. கோடிப் புண்ணியம் !!!

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும் - 2

சில நேரம் சிலரோட இம்சை தாங்க முடியலப்பா!!! நானே பரவாயில்ல போலருக்கு ;-)

ஏதோ ஆருமே அறியாதப்போ, பாக்காதப்போ எல்லே ராம் சொல்றாப்ல, அக்குளில் சொறியும் சுகம் போல, ஏதோ எழுதுறோம். ராஜ் கிரண் (அட ஒரு காலத்துல தியேட்டரையே அழ வெப்பாரே?) மாதிரி ஆத்ம திருப்திக்கு இல்லே.

இவா இவா இப்படித்தான் எழுதுணும்னு 'எக்ஸ்பெக்டேஷன்' வேற 'பிரஷரை' கூட்டுது. பத்ரி சாருன்னா இப்படித்தான் கிரிக்கெட், உலக நடப்புகள் மட்டும்தான் எழுதுணும்னு சொல்றா. அட வுடுங்கப்பா...அப்பப்போ எடுப்பு, தொடுப்பு, ஆசை நாயகி'ன்னும் எழுதட்டும். அப்பப்போ ரஜினி, கமல், சத்யராஜ்'ஐம் தொட்டுக்கட்டும்.

பரியும், சங்கரும் (சுவடு) மரபுக் கவித எழுதட்டும். கிருபா புதுக் கவிதைன்னு ப(க)டிக்கட்டும்.

நம்ம ஆல்-இன்-ஆல் அழகுராஜா மீனாக்ஸ் மாதிரி எல்லாரும் எல்லாமும் எழுதுங்க. படிக்கிறவா தலைவிதியை நம்மால நிர்ணயிக்க முடியுமா?

Thursday, October 21, 2004

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும்

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும்

இணையத்தில் உறவுமுறை

பாரா சாரு கட்ளை போட்டாரு. மாமா மச்சான் உறவுமொறை இணையத்துல வெச்சுக்காதேன்னு...நம்மளை பொறுத்த வரை இது ஆவறத்துக்கில்ல பாசு...

நாந்தான் ஆரம்பத்துலேயே சொன்னேனே? நமக்குத் தேவை பிரண்ட்ஸ். அதுக்காக தோழா, தோழின்னு ஒரே மாதிரி சொன்னா போரடிக்காது? எனக்கென்னவோ சியாட்டல் செல்வியார், மதி அக்கார், பரி பாசு, பாரா சாரு, (பாட்டில்) பாலா புள்ளாண்டான், சங்கர் மருமான் அப்படின்னு சொன்னா ஒரு திருப்தி. அவா காயப்படாத வரை. ஆமா அல்லாரும் ஏன் கோவிச்சுக்கப் போறா? மாம்ஸ், மச்சி அப்படின்னு ஆம்பளைங்களும், அக்கா அப்படின்னு பொம்மனாட்டிகளும் காலேஜ் படிக்கறச்சே கூப்டிக்கலியா? தங்கச்சி அக்காவ கட்டி கொடுக்கவா போறோமின்னு யோசிச்சமா? இல்ல உடன் பிறவா சகோதரின்னு கோவப்பட்டோமா? ஈழநாதன் கூட நான் குமரனா இருக்கணும்னு அனுமானம் போட்டார். நான் என்றும் 22 பாட்டில் பாலாவை கிண்டலடிப்பேன். அட...இணையத்துல இதெல்லாம் சகஜமப்பா...

ஆனா மூர்த்தியண்ணாவும், மதியக்காரும் ஏன் உடன்படலை? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Tuesday, October 12, 2004

ரெண்டுமே இறக்குமதி ஜோக்குகள்

வலி

மிருகக் காட்சி சாலையில் ஒரு ஜோடி. ஒரு சிம்பன்ஸியோ உராங்குட்டானோ ஏதோ நமது முன்னோர்களில் ஒன்று கூண்டில் இருந்தது. கணவன் தனது மனைவியை கூண்டினுள் இருந்த மனிதக் குரங்கைப் பார்த்து கண்ணடிக்கச் சொன்னான். மனைவியும் செய்தாள். குரங்கு உற்சாகமானது. திருமலை சிம்ரன் போல் இடுப்பை ஒரு வெட்டு வெட்டேன். வெட்டினாள். குரங்கு துள்ளிக் குதித்தது. ரம்பா மாதிரி ஒண்ணரைக் கண் கிறக்கத்தில் ஒரு பறக்கும் முத்தம் குடேன். கொடுத்தாள். குரங்கு கூண்டை உலுக்க ஆரம்பித்தது. கூந்தலை ஜோதிகா மாதிரி அப்படி இப்படி ஆட்டி கோணல் சிரிப்பு சிரியேன். சிரித்தாள். இப்போது குரங்கிற்கு ஹிஸ்டீரியாவே வந்து விட்டது.

திடீரென்று கூண்டின் கதவைத் திறந்த கணவன் மனைவியை உள்ளே தள்ளி விட்டான். "இப்போ குரங்கிடம் சொல்லு செல்லமே...தலை வலிக்குதுன்னு!!!"

கணிணி

ஏதோ ஒரு பார்க். சோடா புட்டி கண்ணாடியுடன் ஒரு பெருசு தீவிரமாக பெரிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தது. கடந்து போன வாலிபன் புத்தகத்தை எட்டிப் பார்க்க அதிர்ச்சியோ அதிர்ச்சி. C++ For Dummies.

"என்னா பெருசு... டிக்கெட் எப்ப எடுப்பேன்னு தெரியாது. உனக்கெதுக்கு C++?"
"பேராண்டி...சொர்க்கத்துல இப்போ C++ லாங்வேஜுலதான் பேசறாளாம்"


"தாத்தா அதெப்படி சொர்க்கம்தான் போவேன்னு நினைக்கிறே? மாறா நரகம் போயிட்டேன்னா என்னா செய்வே?"

"ஹி...ஹி... பேராண்டி எனக்குதான் ஜாவா தெரியுமே!"

Saturday, October 09, 2004

விரதம் முடிந்தது

அப்பப்பா...நேக்கு ஒரே களைப்பா இருக்கு. பாராவும், ஐகாரஸ் பிரகாஷ¤ம் வலைப்பூவில் மீண்டும் எழுத ஆரம்பிக்கும் வரை நானும் எழுதுவதில்லை என்று (அட சும்மானாசுக்கும் தாங்க!!!)

நம்ம ஞானதேவன் சார் சென்னைக்குப் போன சம்பவம் படிச்சவுடனே பயம் வந்துடுச்சு பாசு. எங்கே நமக்கும் ஆபீஸ¤லேர்ந்து ஆப்பு அடிச்சுடுவாளோன்னு... அதான் கொஞ்ச நாளு 'மறைந்திருந்து பார்க்கும்' மனிதாயிருந்தேன்.

இன்னொரு சுவாரசியமான விசயம். கவிதை ஒண்ணு எழுதினேன் பாசு. நம்ம பரி கடியாயுட்டு 'குசும்பு மட்டும் செய்தல் நலம்' அப்படின்னு செப்டம்பர் 13 சொல்லிட்டுப் போயிட்டாரு.

ஆனா அதே பரி பேர்ல இன்னோரு பின்னூட்டம். அக்டோபர் எட்டுல 'குசு விடாமல் இருத்தல் நலம்' அப்படின்னு சொல்றா.

பின்னூட்ட அறையில 'குசு' விடுமளவுக்கு நாகரிகம் தெரியாதவரில்லை பரி'ன்னு நம்பறேன். தொடக்கத்திலேர்ந்து ஊக்கப்படுத்திண்டு வந்த்தவா உண்மையிலேயே விட்ட பின்னூட்டமா (குசுவா) இது?

நாஞ்சில் நாடன் சார் சொல்வது போல் 'பீ', 'மூத்திரம்' அப்படின்னு எழுத விரும்புற யாரோ ஒரு 'இலக்கியவாதி' தான் பின்னூட்டம் கொடுத்திருக்கணும். அது கண்டிப்பா பரியா இருக்காதுண்ணு வேண்டிக்கறேன்.

அப்புறம் ஹேலோஸ்கேன கொஞ்சம் கிண்டிப் பாத்தேன். முதல் பரி கமெண்டு வந்த IP Address: 66.26.48.41 Raleigh North Carolina
ரெண்டாவதா வந்தது 65.69.81.2 St.Louis Missouri

ஹாலோஸ்கேன் பின்னூட்டத்தில் விரும்பும் பெயர், மின்னஞ்சல் முகவரி, இணையதள முகவரி தர முடியும். அதைப் பயன்படித்திட்டாளா? இல்லை பரியே அமெரிக்க ஜனாதிபதி விவாதம் பார்க்கப் போயி கடியாயி பின்னூட்டம் விட்டாரா?

அட தேவுடா!!! ரொம்ப நாளு கழிச்சு நல்லதா குசும்பு பண்ணாலாம்னா 'குசு' பத்தி எழுத வைச்சுட்டாளே???

தெகிரியமா உம்மையா மன்ஸ¤ல மாஞ்சாவோட வா பாசு... யாருன்னாலும்... கலக்கிப்புடுவோம்...

Monday, September 13, 2004

VIP வலைவலம் - 2

VIP வலைவலம் - 2

குசும்பன் VIP வலைவலம் வர என்னைக் கேட்டாரா? சொந்த வேலை, அலுவல் அழைக்கின்றது என்று எவ்வளவு நாள்தான் கடத்த முடியும். குசும்பனின் தொல்லை தாங்க முடியாமல் நண்பனை 2 மணிநேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு கணிணி முன்னே அமர்ந்தால் மின்சாரம் போய்விட்டது. நடப்பதெல்லாம் நன்மைக்கேவென கயிற்றுக் கட்டிலில் படுத்து கனவு காணலாமென்றால் மணி மதியம் இரண்டு. சரி நமக்கு இன்று மின்வாரியம் இலவசமாய் மலை நாமம் போட்டுவிட்டார்கள் என்று புலம்புமுன் மீண்டும் மின்சாரம் வந்தது.

சரி யார் வலைப்பதிவை விமர்சிக்கலாமென்றால் குழப்பமாக இருந்தது. உடனே ஞாபகத்தில் வந்தது இவர்தான். ஒரு இனிய சினிமா மாதத்தில் தனது வாழ்வின் இன்பத்தை தொலைத்ததுடன், அடிக்கடி அவ்வப்போது காணாமல் போனாலும் தனது மானசீக குரு முதல், கவர்ந்தோரின் பின்னூட்டத்தில் கவனமாய் பின்னூட்டம் பதித்து வருபர்தான் அந்த பாக்கியவான். ஜெயம் பட ரவி போல் கடைசியாய் வெற்றி கொண்டானாய் வந்து பலரின் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் இவர்.

என்ன வலைப்பூவின் பழைய புராணத்தில் வழமைபோல் ஒரு குவா(ர்)ட்டர் காணாமல் போய்விட்டார். சிறிய வயதிலும் பசங்க மாதிரி இல்லாதது மனத்திற்க்கு சரியாய்ப்படவில்லை. ஆனாலும் சுள்ளானாய் இல்லாதது சந்தோஷமளிக்கின்றது. புத்தாண்டு கன ஜோராய் பலரையும் கவர்ந்திழுக்க அடுத்த குசும்பனின் விஐபி அவராகக்கூட இருக்கலாம்.

எனக்கு கணிணியில் அதீத மேலாண்மை நிபுணத்துவமில்லையென்பது எனது வலைபூவைப் படிப்பவர் அவதானிக்கக்கூடியதுதான். ஆனால் இவருக்கு சந்தோஷ் சிவன் குறும்படம் போல 'காணுதல்' அதுவும் 'அடிப்படை'யில் தான் ஆர்வமதிகமோவெனத் தோன்றுகின்றது. சுமத்திராத் தீவில் காபி குடிக்கமாட்டார். மேலும் குடிப்பவரையும் பிடிக்காதென மனத்திற்க்கு தோன்றுகின்றது. ஆனாலும் அகராதியில்லாத மனிதராகத்தான் என் பார்வையில் தோன்றுகின்றார் சம்மந்தமேயில்லாமல்.

ஊரு ஊரா சுத்தி ஓரிடத்தில் நிலையாய் கலக்கிக் கொண்டிருக்கும் வலைப்பூ நண்பரை வாழ்த்துகின்றேன். வீட்டு நண்பர் முறைப்பதால் செல்ல வேண்டும். ஏதோ 2 மணிநேரமே படித்தாலும் நிறைய புரிந்தது போல தோன்றுகின்றது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெண்கிடைப்பது பேஜார்தான் என்பது புரிய என் யமகா சூடாய் விரைய ஆரம்பித்தது. காரணம் புரியாமல் வெளிநாட்டு நண்பன் பில்லியனில் பம்மினார்.

Friday, September 10, 2004

வர்ணஜாலம்

வாடாமல்லியில் வாசமில்லைதான்
வெளிர்ந்த அதன் காட்சியும் கவரவில்லை
ஆகாயமும் அடற்கடலின் நிறமீறறிந்ததுதான்
இளவேனிற்காலத்து பசுமை பரவாயில்லை
தகிக்கும் அரேபியத் தங்கம் இயலாமையால் இகழும்
வாடியுதிரும் மாலைச்சூரியனை மதிக்கவில்லை
குருதியெடுக்கும் ஊசி வலிக்கின்றது

vibgyor வானவில் பார்த்தவுடன்
வர்ணங்கள் இனிக்கிறது

பிகு: என்னடா ஆச்சு குசும்பனுக்கு'ன்னு கவலைப்படாதீங்கோ. சங்கர்கிருபா மரத்தடியில வானவில் கவிதை போட்டாரோயில்லியோ? கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டன்.

Thursday, September 09, 2004

தமிழ்மணம்

அடடே, இம்மாம் நாளா தெரியாமப் பூடிச்சே!!! எம்மாம் பெரிய செய்தி திரட்டி. வலைப்பூக்களை தமிழ் மணமாய்த் தொடுக்க திறமை வோணும்பா...

போய்ப் பாத்தா நம்ம ஞானதேவன் ஐயா, குசும்பன் எங்கே தெரியலே'ன்னு மிரட்ட(?), காசியண்ணே நான் பதிவே செய்துக்கலன்னு வருத்தப்பட்டிருக்கார். வருத்தப்பட்டா காசிக்குப் போய் கேள்விப்பட, காசியே கவலைப்பட்டா...(கிருபா சங்கர்வாள் மன்னிக்க ;-)

இதோ பதிஞ்சாச்சு. தமிழ்மண சுட்டியும் கொடுத்தாச்சு. காசியண்ணா சந்தோஷம் தன்னே?

அப்புறமென்ன தமிழ்மணத்தில் இப் பொன்மலரும் (வலைப்பூவப்பா!) 'நாற்ற'முடைத்து!!!

குசும்பன்.
குசும்புகள் ஆயிரம்

1. சமீபத்தில் அருண் வைத்தியநாதன் தனது வலைப்பூ பெயரை 'அகர தூரிகை' ஆக்கினார். அதேபோல் தணிகை உலகநாதன் என்ற பெயரைக் கொண்டவர் என்ன பெயர் இட்டிருப்பார்? (வேணாங்க இது ஓவர் குசும்பு)

2. பிறக்கும்போதே பேனாவுடன் தொட்டிலில் இருந்து வலைப்பூ ஆசிரியரானவெர் என்ன பெயரில் எழுத ஆரம்பிப்பார்? - ஏணைப் பெயரிலி? :-)

3. வத(னா) வதவென வலைப்பூக்கள் தொடங்கி சலிக்காமல், சளைக்காமல் எழுதும் பிரியர்க்கு என்ன பட்டம் வழங்கலாம்? - சந்திரபிளாக்னா?

4. குப்பை, குப்பை மட்டுமல்ல என்றால் என்ன அர்த்தம்? அவர் எழுதுவதை குப்பை என்கிறாரா? இல்லை மற்றவர் எழுதியதை சுட்டிகள் கொடுத்து சொல்கிறாரா?

5. இனிய தமிழில் எளிய 'மார்க்கெட்டிங்'? இடிக்குதே. எளிய 'மேலாண்மை' ஐயய்யோ பயமுறுத்துதே...அப்போ 'எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்' அட இனிக்குதே...மீனாக்ஸ் அண்ணா மாறுவீயளா?

வாரக்கடைசியில் விஐபி வலம்...

குசும்பன்.

Monday, August 30, 2004

அன்புடன் அந்தரங்கம்

சும்மா குசும்பு பண்ணலாம்னு வலைய மேஞ்சுகிட்டு இருந்தேன். துணுக்கு மூட்டை பொன்னையா'வை (அதாங்க தினமலர்-வாரமலர் சினிமா கிசுகிசு அவுத்துவிடுவாரே) படிக்கப் போனா 'அன்புடன் அந்தரங்கம்' பகுதி கண்ணுல மாட்டுனது. ஆஹா விஸேஷமாயிருக்குமேன்னு படிக்க ஆரம்பிச்சா...அட சூப்பரா அட்வைஸ் பண்றா அனுராதா ரமணன். கொஞ்சு(ணூண்டு) தமிழ்ல 'பெப்சி'ப் பொண்ணு குமுதத்துல பேத்திண்டு இருந்தது. இந்த மாதிரி அட்வைஸ் தொடரே வேஸ்டோன்னு நினைக்கிறச்சே அனு மாமி கலக்கறாங்கோ!!!

நடுநிலைமையோட, பிராக்டிகலா பேசறவா கம்மியாயிண்டே வரச்சே, அனு வித்தியாசமானங்கதான்.
வி ஐ பி யார்?

ஏய் யவ்னிகா
Crete'டிலிருந்து வந்தவுடன் எழுதுகிறேனென்றேன்.
அச்சமுண்டு அச்சமுண்டு அச்சமான அச்சமுண்டு.
ஒரு போத்தல் ஒயின்
அலெக்ஸ் பாயில்
பேப்லோ நெருடா

போன்ற பல க்ளுக்கள் கொடுத்தும் யாருமே விஐபியை கண்டுபிடிக்கலியே...அவரு பேரு 'சாரு நிவேதிதா'.

இட்லிவடையை சரியா கண்டுபிடிச்ச பரிக்கு ஒரு 'ஓ'.

அடுத்த வலம் விரைவில்...

Monday, August 23, 2004

VIP வலைவலம் - 1

எதிர் பார்த்தேன். இப்படி ஏடாகூடமாக ஏதாவது செய்வார்கள் என்று. ரொம்ப நாளாச்சே அப்படின்னு chat பண்ணப் போனா விநோதமான புனைப் பெயரில் ஒரு உருவம் 'அரட்டை அழைப்பு' விட்டிருந்தது. என்னையும் நண்பனாய் ஏற்பாயாவெனெ. இதே 'குசும்பி' என்றால் உடனே ஏற்றுக் கொண்டிருப்பேன். ஏய் யவ்னிகா ஏன் பல்லைக் கடிக்கின்றாய்? 'குசும்பன்' என்றதும், யோசித்துதான் 'yes' என்றேன்.

உடனே அரட்டைக்கு ஆள் வந்தாயிற்று. சும்மா சொல்லக்கூடாது. குசும்பு பரவாயில்லை. net'ல தமிழ் பிளாக்ஸ் இருக்கிறதா சொன்னவுடன் ஒரு சிறிய ஆச்சரியம். அதுவும் நூற்றுக்கு மேற்பட்டவர் தொடர்ந்து எழுதுகிறார்கள் என்பது வியப்பின் உச்சம்.

குசும்பனோ உடனே 'விமர்சனம் செய்யுங்கள்' என்றவுடன் யோசனையாயிருந்தது. Crete'டிலிருந்து வந்தவுடன் எழுதுகிறேனென்றேன். மனிதன் விடவேயில்லை. சரி ஒழிந்து போகட்டுமென்று செய்வதாய் சொல்லித் தப்பித்தேன். ஒன்றிரண்டு விமர்சனத்துடன் தப்புவதாய் சித்தம். எதிர்(ரி)வினைகள் மற்றும் பின்னூட்டத்தில் எனக்கு எப்போதுமே அச்சமுண்டு அச்சமுண்டு அச்சமான அச்சமுண்டு.

குசும்பன் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெயர் ஊர் மறைத்து என் வலத்தைத் தொடங்குகின்றேன்.

========================================================
இவருடைய பழைய குப்பையைக் கிளறிப் பார்த்தால் ஏகப்பட்ட மாணிக்கங்கள். இப்போது ஏனோ வேகம் குறைந்துவிட்டது. நேப்பிள்ஸில் இருக்கும் நண்பர் முருகனிடம் சொல்லி ஒரு போத்தல் ஒயின் அனுப்பச் சொல்ல வேண்டும். கிரிக்கெட் குரு சொன்னபடி எழுத்துப் பிழையை குறைக்கச் சொல்ல வேண்டும். அலெக்ஸ் பாயில் கூட ஆரம்பத்தில் பிழையோடுதான் எழுதுவார். பின்னர் திருத்திக் கொள்ளவில்லையா?

கவிப்பேரரசின் கவிதையை கைமா செய்து காட்டிய கைவரிசையைப் படித்தவுடன் 'வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வாக்கு ஞாபகத்துக்கு வந்தது.

New Roman Empire என்பார்கள். There is nothing new and nothing Roman in it. ஆனால் எழுத்து ஜிகிடியால் சிரிக்க வைத்து, செய்தியாய் மாறிப் போய்விட்டது பேப்லோவுக்கும் பொறுக்காது. இவரது சேகரிப்புகளைப் (பேப்லோவின்) பார்த்துவிட்டு ஒரு நண்பர் குறிப்பிட்டது: 'இந்த உலகிலேயே இவ்வளவு அதிகமான குப்பைகளை ஒரே கூரையின் கீழ் பார்ப்பது இதுவே எனக்கு முதல் முறை!'

பி.கு. VIP யார்? (ஐய்யா VIP நடைய காப்பியடிச்சு நாந்தான் எழுதினேன்) அப்புறம் விமர்சனம் செய்யப்பட்ட வலைப்பூ யாது?
புதிய முயற்சி

இது புதுசு கண்ணான்னு சொன்னா பிலிமு காட்றதா பரி பாசு சொல்லிட்டார். ஆரம்பத்திலேயே பின்னூட்டமா? பலே பலே...

சமீபத்தில் ஒரு VIP'யின் தொடர்பு கிடைச்சது. பேசிண்டே இருக்கிறச்சே தமிழ் ப்ளாக்ஸ் பத்தி சொன்னேன். ஆளுக்கு பயங்கர ஷாக். உடனே நம்ம

லீலைகளை சும்மா அவுத்துவுட்டேன். மனுஷன் 'ஒரு மாதிரி' குசும்பர்தான். ரொம்ப ரசிச்சார்.

அவர் வலை வலம் வரப்போவதாய் சொன்னோன்னெ நேக்கு ஐடியா பிளாஷியது. நமக்குத் தெரிந்த VIP'க்களை வலைப்பக்கம் வலம் வரவைச்சா? ஓப்பனா இவா இவா இன்னின்ன பண்றா'ன்னு சொல்றதுக்குப் பதில் சூசகமா எழுதினா?...அதுவும் என் பதிவிலேயே...கொஞ்சம் 'ஹிட்ஸ்' (தர்ம அடிகள்பா) கூடுமே!

முதல் VIP நறநற'த்தபடி ஒத்துண்டுட்டார்.

ஆமாம் VIP(க்கள்) யாரு? எப்படி வலை மேயப் போறாரு(ங்கோ)?

உஷ்...பாக்கத்தானே போறேள். சீக்கிரம் சூப்பர் சூப்பரா எழுதுங்கோ. யாரு கண்டா? You are being read as I blog (we speak?).

Sunday, August 22, 2004

முற்றிலும் புதுமையான முயற்சியில் குசும்பன். அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும். பின்னூட்ட சக்தி பெரும்பாலும் வேண்டுகின்றேன்.

Wednesday, August 18, 2004

உஷாரான சீன அதிபர்

சீன அதிபர் அமெரிக்கா வந்தப்போ:

bush

அமெரிக்க அதிபர் சீனா சென்றப்போ:

bushjiang1412

உஷார் பார்ட்டிதான் !!!
அக்கம் பக்கம்

பீகார் பிரண்ட் வந்திருந்தார். சும்மா ஜோக்கு மேலா ஜோக்கா போட்டுத் தாக்கிட்டார். அதிலே ஒண்ணு உங்களுக்கு:

லல்லூவும் ராப்ரியும் தமது கல்யான நாளை கொண்டாடும் வேளை (குசும்பா ... ஆனலும் ஓவர் பிட்-அப்)

லல்லூ கொஞ்சலாய் கெஞ்சலாய் கேட்டார். ராப்ரியம்மா வாழ்க்கையில எப்பவாவது "அப்படி யிப்படி"ன்னு இருந்தியா?

ராப்ரி "சொன்னா கோவிக்க மாட்டியளே"

லல்லூ "இல்லடி செல்லமே"

"மூணு தபா இருக்கும்"

"சொல்லும்மா"

"ஞாபகமிருக்கா...நம்ம வீட்டு லோன் பிரச்சினை வந்துதே...அப்ப பேங்க் பிரசிடெண்ட் கிட்ட பேசப் (?) போனேனே? அப்புறம் பிரச்சினையே தீந்துடுத்தல்லவா?"

"என் செல்லமே (கில்லி பிரகாஷ்ராஜ் போல) அது நம்மோட வீட்டை காக்க காக்க அல்லவா? அடுத்தது?"

"உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ ஆபரேஷனுக்கு காசு பத்தாம போச்சே. அப்புறம் காசே வாங்காம ஹெட் டாக்டர் ஆபரேஷன் பண்ணினாரே?"

"அடடே அது என் உயிரை காப்பாத்த அல்லவா? பரவாயில்லை. கடைசியா?"

"அது வந்து...வந்து..."

"பரவாயில்லை சொல்லும்மா"

"பார்டி பிரசிடென்ட் ஆக உங்களுக்கு 174 வோட்டு தேவப்பட்டதே...?"

Sunday, August 15, 2004

காணாமல் போனவர் அறிவிப்பு - ரெண்டு

தமிழ்குடில்

கருணாகரமூர்த்தி என்ன ஓய் வாடகைக்கு விட்டு விட்டீரா? உம்ம வலைப்பூ பேரையும் விட்டுப்போன திகதியும் (13 டிசம்பர் 03) சந்தேகப்பு(கி)லி கிளப்புதும் ஓய்...

தேர்தல் 2004


மாலன்னய்யா மறுபடி பார்ப்பம். 2009'ல. இல்லன்னா சீக்கிரமே. 10 மே 04 காணவில்லை. முகமூடிடோய்...

முத்துப் பனிப்பூக்கள்

அய்யா முத்தய்யா...பனி காஞ்சு காலமாகுது...22 மார்ச் 04 கோடீஸ்வரன் கருத்தோட காணாம போயிட்டீரே?

கட்டைப் பஞ்சாயத்து

ஐயா பிராது கொடிக்கோணுமையா? எங்க போயிட்டீக? பொறணி எக்கிப்போச்சய்யா?

ஹீம்...இருக்கீயளா...தொலைஞ்சீட்டியளா?

ராஜா

ஒண்ணுமே வரல...சுட்டும் போது... என்னாச்சுபா????

மழைச்சாரல்

ரா.சுப்புலட்சுமியம்மா சுகுற்ரா பின்னூட்டம் விட்டதோட சரி...25 ஜூலை சின்னச் சின்ன தழும்புகளோட காணாமப் பூட்டாங்க...அம்மா வாங்க...நிறய எழுதுங்கோ...அதான் ஸ்மைலி பரிமாறிட்டோமே?
காணாமல் போனவர் அறிவிப்பு - ஒன்று

கீழ்க்கண்டவா ரொம்ப நாளாக் காணவில்லை. கண்டுபிடிச்சா நேக்கு பின்னூட்டம் போடுங்கோ.


ஆப்பு
வயது தெரியாது. கடைசியாய் ஹாலிவுட் நகரில் "வில்லுடன்" பார்த்ததாய் செய்திகள் கசிகின்றன. கற்பிற்கு பெயர்போன கதாபாத்திரத்தின் நாயகன், ஏக பத்தினி அவதாரத்தின் பேர் கொண்டவரென்னும் நம்பப்படுகின்றது. டி.ராஜேந்தரே...மன்னிக்க விஜய ராஜேந்தரே மயங்கும் வகையில் டங்டனக்கா போட்ட இவர் 19 மே 04'லிருந்து காணவில்லை.

பாட்டில் பாலா

"மை டூம்" என்று 28 ஜூலை கடைசியாய் கடிதமெழுதிவிட்டு இவரைக் காணவில்லை. இவர் வயது 22 (கடைசியாச் சொன்னப் பொய்). கூடவே சிக்(கன்) இருக்கலாமென நம்பப்படுகின்றது. ஹட்சன் மற்றும் கூவம் நதிக்கரைகளில் தேடுதல் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

மன்மதன் (அவ்வப்போது அடிக்கடி காணாமல் போபவர்)

தனது புரட்சி(???)கரமான காதல் கவிதைகளால் காமினி மற்றும் சுடலைமாடசாமி போன்றோரைக் கவர்ந்தவர். நான்கு மாதத்தில் மூன்றே கடிதம் போட்டிரிக்கும் இவர் காதல் நெருப்பில் வீழ்ந்ததாய் சொல்வது நம்புமாறு இல்லை. கடைசியாகப் பார்த்தது 06 ஆகஸ்ட் 04.

தும்பை

தும்பை விட்டு வாலை பிடிக்கும் இந்தப் பாலா கடைசியாக "Spontaneous Emission" (தப்பா நினக்கிறீளே...அவரோட கடேசிக் கடிதமப்பா) செய்தது 20 பிப்ரவரி 04.

சேரலாதன்

இந்த சைவமின்பிள்ளை அடிக்கடி திருவிழாவில் காணாமல் போய்விடுகிறது. இணைய விக்ரம்/12 மாதிரி மாதமொரு (அட 12'ண்டால வகுத்திருக்கேன்பா) பதிவு செய்றாரு போல. அதுவும் வலைப்"போ"ங்றாமாரி சுட்டிகளாத் தரார். கடைசியா இவர் இலவச மென்பொருட்களைத் திருடுவது (download) எப்படின்னு கடுதாசி போட்டிருந்தாரு.

ஓடை

பாலம் கட்டிட்டாளா? பாபா கடேசிப் பின்னூட்டத்துல சிரிக்கிறார். துரைசாமியய்யா ரிப்போர்டிங் ஆபீஸர் வந்தாரா இல்லையா? பத்து நாள் இடைவேளை கேட்டக் கடைசிக் கடிதம் 07 ஜூன் 04.

தமிழ்க்கொங்கு

கரடி முழுத்தேனையும் குடிச்சிடுச்சா? 23 மே 04 முதல் என். (யோவ் இனிஷியல் ...) கணேசனைக் காணலைங்கோவ்

நினைவுகள்

கணேசா??? வாருமய்யா. ஜூலை 16 பாத்தது...

எண்ணங்கள்

என்னாங்க...30 மே'லேர்ந்து அம்போன்னு உட்டுட்டு போயிட்டீக...அசரீரி (யோவ் கடேசி பதிவு) சொல்லுது நீர் என் போல முகமூடிதான்...

நேர நிர்வாகம்

என்ன கடியாரம் காணாமப் போடிச்சா? போங்கடாங்கோ...

கார்த்திக்ரமாஸ்

ஏம்பா அடுத்த காண்ட்ரோவெர்சிக்காக காத்திருக்காதேப்பு. நன்னா எழுதுற. அடுத்து எழுது. 29 ஜூலைல போட்டுப்பாத்த. வா திரும்பி மோதுவம்.

தெர்மாமீட்டர்

ஏம்பா எம்மா நாள் சோதனை? பாத்து தெர்மாமீட்டர் பின்னாடி வெடிச்சிரப் போவுது??? ஹி ஹி என்னோட "நீங்கள் செய்யும் வேலை போரடிக்கிறதா?" பதிவு ஞாபகம் வந்திடுச்சி...
ஷாராக்னோ என்றால் என்ன?

அப்படின்னா ஒளிக்கற்றை. மேலும் இளமை, செக்ஸி, இன்னும் பல...

பேஷன் டிசைன் கம்பெனினியின் கான்செப்ட்: "உலகிற்கு நலமும், மகிழ்ச்சியும் இவ்வாறு ஆடை தந்து பரப்ப வேண்டும்"
sharango
ஆமாம் அம்மணியைப் பாத்தா தெரியல...

அப்புறம் கேர்ல் பிரண்டுக்கு (யோவ் எரிச்சலைக் கிளப்பாதேன்னு திட்டாதீங்க...) வாங்கிக் கொடுக்கலான்னு நினச்சா சாக்கிரதை. அம்மணி மேல போட்டிருக்கிறது (வேண்டாம் பாசு...அந்தக் கேள்விய நானே கேட்டுக்கிட்டேன்) மட்டும் $100.

வுடு ஜீட்...
நீங்கள் செய்யும் வேலை போரடிக்கிறதா?

அடப்பாவி...MS உதயமூர்த்தி, லேனா லெவல்லுக்குப் பேசறான்னு தப்பா நீனக்காதீங்கோ. ஆபீஸ்லேர்ந்து வர்றச்சே J & J (ஜான்ஸன் & ஜான்சன்) ரெக்டல் தெர்மாமீட்டர் வாங்கிட்டு வாங்கோ. அப்புறம் நிதானமா குளிச்சி முடிச்சி, சாப்டுட்டு ராத்ரி டிரஸ் போட்டுக்கோங்கோ.

அப்புறம் வசதியான பொசிஸன்லே உக்கார்ந்துண்டு தெர்மாமீட்டர் பேக்கிங்கை கவனமா பிரிங்கோ. பிரிச்சப்புறம் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எல்லாத்தையும் கவனமா படிங்கோ. க்வாலிட்டி அறிக்கைதான் முக்கியம். ஒவ்வொரு தெர்மாமீட்டரும் ஜான்ஸன் & ஜான்சன் இன்ஸ்பெக்டர்களால் பெர்ஸனலாக சோதிக்கப்பட்டது.

இப்ப மல்லாக்க சாஞ்சி யோசிச்சுப் பாருங்க. உங்க வேலை அவாளைவிட அவ்வளவு வலி தர்றதா என்ன?
இரவல் குசும்பு

ஒரு இறுதி ஊர்வலம். சும்மா 200 பேர் கறுப்பு கோட்டோட போறாங்க. முன்னாடி 2 சவப் பொட்டிங்க. அப்புறம் ஒரு நாயோட ஒருத்தர். அவர் பின்னாடி மத்தவாள்ளாம். நம்மைப் போல ஒர்த்தர் ஓடிப்போய் நாய் வச்சிருக்றவா கிட்ட,"சார் முத சவப் பொட்டியில யாரு?" ன்னாரு.

அவர்,"என் மனைவி"

"எப்படி இறந்தாங்க?"

"என்னோட நாய் கடிச்சி"

"இரண்டாவதுல?"

"என் மாமியார்"

"எப்படி இறந்தாங்க?"

"என்னோட நாய் கடிச்சி"

ஒரு நிமிஷம் கழிச்சி ரகஸியமாய் கேட்டார், "சார் ஒரு நாளைக்கு உங்க நாய் வேணுமே"

பதில் "யோவ் போய் பின்னாடி கியூவுல சேருய்யா"
ஆறு வேண்டாத வேலைகள் (?)

ஹி...ஹி...புரியுமே உங்களுக்கு (ரொம்ப நாளாச்சேன்னு)

1. ஏரோப் ப்ளேன் பாத்ரூமில்

வேண்டாப்பா...அப்புறம் சுளுக்கெடுக்கவே சொத்தழிஞ்சிடும்

2. பீச்ல

போல்ட் அண்டு பியூட்டிபுல்தான். ஆனா "அதுவும்" ஸேண்டும் (மண்ணும்) ஒத்துப்போகாது

3. காம சூத்ரா படிச்சுண்டே

முதல் பதில் படிக்கவும்

பி.கு. என்ன வேலைன்னு ஜொள் விட்டுண்டே கேட்காதேள். அப்புறம் மீதி மூணை சென்ஸார் பண்ணிட்டேன். வழக்கம் போல இது வெளி நாட்டுச் சரக்கு. "கிளாமர்லேர்ந்து" உருவினது. வர்ட்டா...
அமரிக்க "அங்கிள்கள்" (தொடர்ச்சி)

நம்ம பிரண்டு பெரிய ஐஸ்பாக்கெட்டை கண்ணைச் சுத்தி பொத்திக்கிட்டிருந்தார். தள்ளி விட்டுப் பார்த்தா சும்மா பாட்டில் சரக்க உட்டா மாதிரி கண்ணு ஜிவுஜிவுன்னு வரமொளகா கலருல. சுத்தி ஆரியோல் மாதிரி கரும் வளையம். தண்ணிலேர்ந்து தூக்கிப் போட்ட மீன் மாரி உடம்பு துடிச்சிக்கிட்டே (தூக்கிவாரி) போட்டிக்கினு இருந்துச்சி.

நம்ப மெக்ஸிகன் போலீஸ் வயக்கமான விசாரணை நடத்த, வெள்ளக்காரன் வித்தியாஸன் காட்னான். இதே ஆக்ஸிடெண்ட் ஆனப்புறம் இன்னொரு வெள்ளைக்காரர் (கவனிக்க: மரியாதை) விசிட்டிங் கார்டு கொடுத்து. "யப்பா அவசரமா போறேன். அந்த பொம்பளை மேலதான் தப்பு. போலீஸ் வந்தா என்னைக் கூப்பிடு. சாட்சி சொல்றேன்னு" போயிட்டார்.

வெள்ளைப் போலீஸ¤, குதிரை மாதிரி நின்ன பொம்பளைகிட்ட பத்து தடவையாவது "ஏம்மா நன்னாயிருக்கியா? ஏதாவது வேண்டுமா?" அப்பிடினு கெக்கே பிக்கே பேச, நம்ம தலீவரை கண்டுக்கவே இல்ல. ஏம்பா சட்சி கிட்ட பேசுன்னப்ப வேண்டா வெறுப்பா நம்பரை வாங்கி, அந்தப்பக்கம் பிஸின்னு சொல்ல எனக்கு டாப் எகிறியது. என்னோட செல்லில் நம்பரைப் போட்டு, சாட்சிக்காரரை மெக்ஸிகன் போலீஸோடு பேச வச்சேன்.

இடிச்சம்மாவோட சாட்சி யாரு தெரியுமா? பக்கத்திலே உட்கார்ந்திருந்த இன்னொரு அம்மா. இதென்ன நியாயம்? படமெல்லாம் போட்டிக்கினு, ரிவ்யூ கமிட்டி 2 வாரத்துல தீர்ப்பளிக்கும். சாட்சிகள் (?) கோக்கு மாக்கா (?) இருக்கறதால நான் யாருக்கும் டிக்கெட் தரல'ன்னு பெருந்தன்மையா சொல்லி போலீஸ் ஜீட் விட்டுச்சி.

2 வாரங்கழிச்சி இப்போதான் தீர்ப்பு வந்துச்சி. "Failed to yield Left Turn". அதாகப்பட்டது பிரண்டு பொண்ணோட காருக்கு வழி தரலையாம். பாவிங்களா...ரெட் லைட் ஜம்ப் பண்ணும் போது வழியெப்படிடா கொடுக்றது?

வக்கீல்ண்ட கேட்டா லெப்ட் டர்ன் கேஸ்ல எப்பவுமே இப்படித்தான். கோர்ட்டுக்குப் போனா ரெண்டு பேருக்கும் டிக்கெட் தருவா. தேவையா?

காரு போச்சி. கண்ணு நொள்ளைக் கண்ணாகயிருந்து தப்பிச்சுது. போலீஸ் புத்தி பயமாயிருக்கு.

வேற யாருக்கோ நடந்திருந்தா, "Stray Incident" அப்படின்னு விட்டுடலாம். ஆனா நானே பார்த்ததாலே லேசா "புட்டுக்கிச்சி".

அமெரிக்க அன்பர்களே...ஜாக்கிரதையாயிருங்கோ...

Saturday, August 14, 2004

அமரிக்க "அங்கிள்கள்"

ஏதோ நம்மவூர்ல இருக்கிற போலீஸை நக்கலடிப்பவாரா நீர்? இப்போ மேலே படியும்...

அமெரிக்காவில் போலீசைக்கண்டா "புட்டுக்கும்" அல்லாருக்கும். அவா நீதி/நேர்மை (கறுப்பர்கள் தவிர்த்து) பிரபல்யம். ஷெரீப், பார்டர்/ஹைவே பெட்ரோல், லோகல் போலீஸ் இப்படீன்னு வித விதமான போர்டு காராப் பாத்தாலே கண்ணு ஸ்பீடாமீட்டர் மேல ஆட்டோமேடிக்கா போகும்.

நம்ம பிரண்டுக்கு போன வாரம் ஒரு ஆக்சிடெண்ட் ஆயிப்போச்சி. நம்மவூரு மாரி இல்லாம இங்க டிராபிக் எல்லாமே "Keep Right". அப்படின்னா தலைகீழே (எல்லாமே).

பிரண்ட் லெப்ட் எடுக்கக் காத்திருக்க, எதிர்புறம் சிவப்பாக மாற திரும்பினார். விதி யாரை விட்டது? வெள்ளைக்காரியொருத்தி சட்டென்று ரெட் லைட் ஜம்ப் செய்ய நடுரோட்டில் பயங்கர மோதல். மோதியது வேன். நண்பரோடது மிட் சைஸ் கார். மூன்று முறை ரோட்டைச் சுற்றியபின் நின்றது.

நல்லவேளை உயிர் சேதமில்லை. ஏர் பேக் வெடித்துக் கிளம்ப மனிதனுக்கு தலை கிர்ரடித்து நடு ரோட்டிலேயே அமர்ந்துவிட்டார். புத்திசாலித்தனமாய் காரிலிருந்து செல்லை எடுத்துக் கொண்டே வெளியே வந்த்தால் முதல் போன் நமக்குப் போட்டார்.

ஸ்பாட்டுக்குப் போனா 2 போலீஸ் கார் இருந்துச்சு. ஆம்புலன்சும் கூடவே...ஒரு போலீஸ் வெள்ளைகாரர். இன்னொருத்தர் மெகிகன் (அட மெக்ஸிகனப்பா). அடுத்து நடந்ததை அடுத்த பதிவில சொல்றேன்.

Friday, August 13, 2004

கிருபா சங்கரர்

ஒரு வாரமா ஊர்ல இல்லை. வந்து பழைய கமெண்டைப் பார்த்தா கரும்பு சங்கரர் நமது லின்க்ஸ் தொகுப்பை ரசிச்சதோட தனது பதிவில போட்டுக்கலாமான்னு கேட்டிருக்கார். தன்னியனானேன். தாராளமா போட்டுக்கோங்கோ. அட...என்னை மாதிரி அறிவிலிகளிடம் அழகு இருக்கிறதா?

பாசு கிண்டலா கேட்டிங்களா? நெசம்மாவா?

குசும்பன்

Friday, August 06, 2004

ஆங்கிலம் வளர்ப்பது எப்படி?

என்ன இழவுடா இது? ஆச்சரியப்படுபவர்கள் தொடர்ந்து படிக்கவும்...

1. ஆங்கிலம் இங்லீஷ்காரன் கண்டுபுடிச்சதுன்னு ஷொல்லுங்கோ. மேல் நாட்டு மோகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஆங்கிலம் மணக்கும்.
2. அப்புறம் தொண்டரடிப்பொடியான், காக்கைப்பாடினியார் அப்படின்னு நச்சுன்னு புனைபெயர்லே, தப்பும் தவறுமா ஆங்கிலக் கட்டுரை போடுங்கோ. ஆங்கிலம் நச்சுன்னு வளரும்.
3. செம்மொழியில எவனாவது கட்டுரை போட்டா, சட்டையை உருவி அவன் நடுமுதுகை எப்படி சொரியிறான், கால்ல சப்பாத்து போட்டிருக்கானா என்று புலம்/குலத்தையே குடைஞ்சு வெள்ளாடுங்க. ஆங்கிலம் தகதகன்னு வளரும்.
4. ஆங்கிலத்துல இலக்கியம் படிக்கச் சொல்ல ஆளில்ல, ஆங்கிலத்துல படிச்சா கம்ப்யூட்டர்/டாலருன்னு அள்ளலாம், போன்ற சரித்திர உண்மைகளை புட்டு புட்டு வைங்கோ. சும்மா சூடு வெச்ச ஆட்டோ மீட்டர் மாதிரி ஆங்கிலம் ஜிவ்வுன்னு வளரும்.
5. இங்லீஷ் புலமை வேணுமின்னா ஷேக்ஸ்பியர் படிப்பா, கம்யூட்டருக்கும் ஆங்கிலப் புலமைக்கும் என்னா சம்பந்தம்? ஜாவா படிக்க இங்லீஷ் புலம என்னாத்துக்கு? அப்படின்னு எவனாவது நக்கலடிச்சா, அவனை உட்டுடு. ஏன்னா அதைக் கேக்கறது நாந்தான். குசும்பிடுவேன்.

ஆங்கிலம் தான் ஜோரா வளருதே? அப்புறமெதுக்கு குசும்புங்கிறீங்களா? அவா அவா ஏதோ தமிழ் தர்மாஸ்பத்திரியில் ஐசியு'ல அவஸ்தைப் படறா மாதிரி எழுதுறாளே?

இந்த மாதிரி கட்டுரை எழுதி தமிழை கருணைக்கொலை சேய்யாதீர்கள். கரம் சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்(ல்)கிறேன்.
குழந்தைங்க சமாச்சாரம்
==========================

கடந்த அஞ்சு நாளா ஒரே பிஸி. வழக்கம் போல கோக்கும் கையுமா, டிவி முன்னாடிதான்...ஒரே ஒரு வித்தியாசம் நான் பார்த்த சேனல்களைச் சொன்னால்

நம்பமாட்டேள்... ஷொல்றேன்.

போனவாரம் குழந்தை குட்டியோட பேஷா வாழற நண்பர் கூப்பிட்டிருந்தார். ஆஹா சோறு கண்ட இடம் சொர்க்கமல்லவா? உடனே ஒட்டிக் கொண்டேன்.

தமிழ்க் குடும்பம்தான். பிரீ ஸ்கூல் செல்லும் பெரிய பிள்ளை அருகே வந்து "அமீகோ"ன்னு சொல்லி கைகுடுக்க ஆச்சரியம். கொஞ்சம் ஸ்பானிஷ் (5
வார்த்தைகளே அறிந்தாலும்) தெரியுமாதலால் குழந்தையிடம் போட்டுப் பார்த்தேன் (குசும்பன் புத்தி சும்மா இருக்குமா?).

1-10 வரை கவுண்டிங், நடைமுறைச் சொற்கள், அடிப்படைக் கேள்வி/பதில் என்று பின்னியெடுத்தான். ஆனா தமிழ் மட்டும் தட்டுத் தடுமாறி...ஏம்பான்னு என் அமீகோவை (நண்பன்) கேட்க, கிடைத்த பதில் வித்தியாசமாயிருந்தது. "பெற்றோர் கற்றுக் கொடுப்பதை விட அண்டை வீடு, தாத்தா/பாட்டி இல்லாவிட்டால் டிவி இதில்தான் ஈடுபாட்டோடு கற்றுக் கொள்கிறார்கள் குழந்தைகள். என் பையன் ஸ்பானிஷ் கற்றுக் கொண்டது டோரா - தி எக்ஸ்ப்ளோரர் (Dora - The Explorer) என்னும் குழந்தைகள் நிகழ்ச்சி பார்த்துத்தான்".

வேற என்னென்ன குழந்தைகள் நிகழ்ச்சின்னப்போ, சாமி தலையே கிர்ரடிச்சிப் போச்சி...PBS Channel (ஆர்தர், பார்னி, பெரென்டைன் பியர்ஸ், கிலிப்போர்டு,

டிராகன் டேல்ஸ், செசாமெ ஸ்டீர்ட், டெலி டப்பிஸ்...) பார்னி என்கிற டைனாசோர் மூலம் குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை சொல்லிக் குடுக்கிறாங்க.

Sesame Street லாஜிக்கான சமாச்சாரத்தை அழகா சொல்லுது.

டிஸ்கவரி ஸ்கூல், நாக்கின் (புளூஸ் குளூஸ், ஊபி, டிவீனிஸ்), கார்ட்டூன் நெட்வொர்க், நிக்டூன்ஸ், நிக்கலோடியன், டிஸ்னி சேனல், இப்படி பல சேனல்கள், ஆயிரக்கணக்கான ப்ரொகிராம்கள்...

நம்ம ஊர நெனச்சா பத்திண்டு வரலே???
பாலியல் கல்வி
=================

Safe Sex is no Sex --- இதெப்படி இருக்கு? டெக்ஸாஸ் மாநிலத்தின் மேல்நிலை பள்ளிகளில் பாலியல் பாடமாய் வைக்கப் போகும் புத்தகங்கள் பற்றி மேலும் படிக்க இங்கே சுட்டுங்கோ...

Tuesday, August 03, 2004

புதிதாக வலை பதிபவர்களுக்கு

ஒரு 50 பதிவு போட்டுட்டா பெரியவனாயிட்டதா நினைப்பான்னு முணு-முணுக்காதேள். இது டெக்னிகல் விஷயமல்ல. சொ(நொ)ந்தஅனுபவ விஷயம்.

சிவப்பு விளக்கு:
=================

புதிய பதிவுன்னு ஊருக்குக் காட்ட வலைப்பூக்களின் வலைபூ பதிவுல உங்க பேருக்குத் தாண்டி சுத்தும். ப்ளாக் போட்ட ஜோரில ஆராவது நம்ப சைட்டுக்கு வரமாட்டாளான்னு மனசு அடிச்சிக்கும். கவுண்டர் போடுவேள். அப்புறம் கடைசி 24 மணி நேரம், 5 நாள் அப்படி யிப்படின்னு ட்ராக் பண்ணுவேள். ஒரு மண்ணும் நடக்கலேன்னா வெறுத்துப் போய் மத்த சிவப்பு விளக்கு பதிவுகளைப் (!@#) படிச்சுட்டு கமெண்ட்ஸ் விடுவேள். ஆனா இந்த பாயிண்டுலதான் சாக்கிரதையா இருக்கோணும்.

இப்படித்தான் உணர்ச்சி வசப்பட்டு வதனா அப்படிங்கறவங்க ப்ளாக்குல, "மிக நல்லா எழுதிறீங்க. வாழ்த்துக்கள். வலைப்பூவிற்கு வருக!", அப்படின்னு போடலாம்னு பார்த்தேன். நல்லவேளை, இதே பேர்ல இன்னொரு ப்ளாக் பாத்தா மாரி இருந்துச்சு. எட்டிப் பார்த்தா ஏழு பூக்கள். மவனே குசும்பன் கதை நாறியிருந்திருக்கும். இப்படித்தான் இன்னும் நிறைய பேர்: மீனாக்ஸ், சந்திரமதி, ரமணீதரன்,....கமெண்ட் போடறச்சே பாத்துப் போடுங்கோ... இவாள்ளாம் இணையத்துல பழம் தின்னு கொட்டையும் ஜீரணம் பண்ணவா...

முகமூடித் தொல்லை:
======================

அப்புறம் பின்னூட்டத்துல முகமூடித் தாக்குதலோ/தொல்லையோ (பாவி இதை நானா சொல்றது???) இருந்தா கவனமா பாருங்க. என்னை மாதிரி சில்லுவண்டுகளை விட்டுடுங்க. ஆனா வெயிட்டான ஐட்டங்கள் முகமூடி பேருல வந்தா அது எங்களுக்கு ஒரு அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்த பெயரிலி ஐயாவா இருக்கலாம். அவர் வந்தார்னா ஏதோ விசயம் இருக்கும். எப்படி வருவாரு, எந்த பேருல வருவாருன்னு அவருக்கே சில சமயம் தெரியாது. அதுனால சாக்கிரதையா முகமூடிகளுக்கு பதில் போடுங்க. யாரு கண்டா உங்க பக்கத்துல இருந்துகிட்டே முகமூடி தாக்குதல் நடக்கலாம்...

டெஸ்க்ரிப்ஷன்:
================

இங்கே சுட்டுங்கோ...

சுட்டிகள்:
==========

அதிதீவிரமா தேவைப்பட்டாலொழிய சுட்டிகள் கொடுக்காதீங்கோ. சுட்டிகள் வேண்டுவோருக்கென்று ஒரு வலைபோ (ஆமாம் அங்கே போனாலே போ'வெனத் துரத்திடுவாரு லின்க் போட்டு) இருக்கிறது. இங்கே சுட்டுங்கோ...

இரவல் சமாச்சாரங்கள்:
========================

இணையத்தில் பார்த்ததை, படித்ததை தமிழிலேயே கொடுங்கோ. பன்மொழி வித்தகனாக நீங்களிருக்கலாம். படிப்பவரை சோதிக்கவேண்டாம். ஆப்படிக்கிறாங்கோ !!!

வலைப்பூ சுட்டிகள்:
====================

நிறைய, நன்னா எழுதவா இருக்காங்கோ. அவா சுட்டிகளைக் கொடுங்கோ உங்க ப்ளாக்குல. தப்பித் தவறி உங்க ப்ளாக் பாத்தவாக்கு ஒரு நல்ல விஷயமாவது வேண்டாமா?

மேலே சொன்னதெல்லாம் சொந்த அனுபவம்தாம். மத்தபடி ப்ளாக்'ங்றது உங்க இடம். பூந்து வெள்ளாடுங்கோ !!!

Monday, August 02, 2004

போதுமடா சாமி

காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின்மேலே
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின்மேலே
ஆரிரொ ஆரோரோ ஆரிரொ ஆரோரோ

இது மூக்கரின் பதிவு.

வந்துத்துப்பா அரிப்பு, சுப்பம்மா சொரி(றி)யும் விளக்கம்

இருட்டறையில் பிணம் தழுவி
கலவிச் சுகத்திற்கு கட்டாயப்படுத்தி
இன்புறும் ஈன மனிதர்களின்
இரக்கமற்ற இச்சைகள்

சுப்பம்மா அவர்களே,

இடம்/பொருள்/ஏவல்'ன்னா என்னான்னு திரும்பி படிங்க (ERC' சோதரி). "If Rape is inevitable..." அப்படின்னு (மூக்கர் வேறு விதத்தில் சொன்னதை) உஷா என்பவர் சொல்லி தோழியரில் பின்னூட்டம் கொடுத்து, பிறகு பொழிப்புறை கொடுத்தபோதுதான் உண்மையான கருத்து விளங்கியது.

நான் நீங்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன். சொன்ன (சொறிஞ்ச) இடத்தைத்தான் இடிக்கிறேன்.

குழந்தை யோனியை கிழித்துவருவதைப் பார்க்க முடியாத இளகிய மனம் படைத்து, அதற்காக பிள்ளையின் ப்ருஷ்டத்தில் போடுவேனென குடும்பக் காதல் காட்டிய பதிவிலா பிணம் தழுவி, கலவிச் சுகம், ஈன மனிதர்கள்....இன்னும் பல CRAP.....

சொறிந்த இடம் தப்பு சுப்பம்மா. பொழிப்புறை இல்லாமலே புரிந்த கார்திக்ரமாசுக்கும், பொழிப்புறை எழுத வைத்த சொப்புலொட்சுமிக்கும், அள்ளிப் போட்டு அமைதி காக்கும் மூக்கருக்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்.

வைதேகி காத்திருந்தாள் வசனம் போல.....

போங்கடா உங்க பிரவக் காட்சியும்..பின்னூட்டமும்...

Thursday, July 29, 2004

கம்யூனிகேஷன் குசும்பு

நம்ம பிரண்டு சொன்னாப்ள. பேஷறப்போ/எழுறச்சே ரொம்ப சிம்பிளா இருக்கணுமாம். தங்கத்துல செம்பு சேர்த்தால்தான் ஆபரணம் வருமாம். அப்புறம் பெயிண்ட்லே தின்னர் சேர்க்கணுமாம். ஆபீஸ்ல எனக்கு பக்கத்துல வடகிந்தியாவைச் சேர்ந்தவர். (நமக்கு வடக்கு, தெற்கு பீலிங்ஸ்ல்லாம் கிடையாது).

மனுஷன் பேஷ ஆரம்பிச்சா முற்றுப்புள்ளியே வெக்க மாட்டார். அதுவும் ஹிந்தி பேஷறா மாதிரி குழகுழான்னு. தெரியாம ஒருவாட்டி பக்கத்துல இருக்கிற ரெஸ்டாரெண்ட் போனோம் (ஹி ஹி கோக் குடிக்கத்தான்...). சாப்டோன பில்லு வந்தது. குசும்பன் தான் பயங்கர டீஸண்ட் பார்டியாச்சே ;-) பாய்ஞ்சு எடுத்தேன். வடக்குப் பார்ட்டி ஒரே அடம். தான்தான் பில்லு கட்டுவேன்னு. என்னடா இது இன்ப இம்சைன்னு நானும் விட்டுட்டேன். பார்ட்டி வாயத் தொறந்துச்சு. "டாலர் ரொம்பக் கம்மிதானே. நானே பே பண்றேன் (பைசா கம் ஹேன்னா, இஸ்லியே"). சுள்ளுன்னு எனக்கு ஏறிச்சு. சரி அப்புறம் பாத்துக்கலாம்னு வுட்டுட்டேன்.

அன்னைக்கு ஆரம்பிச்ச "சனி" திசை இன்னும் முடியவேயில்லை. போட்ட இருபது டாலரை எப்படியாவது திரும்ப வாங்கோணுமின்னு "வசூல்ராஜா"வா அலய ஆரம்பிக்க, "மவனே நடக்காதுண்ணு" நான் டபாய் ராஜாவானேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மல்யுத்தம் தான்:

வரா (வசூல் ராஜா); டரா (டபாய் ராஜா)

வரா: சும்மா சந்திப்போமா (அய்சேகி மில்த்தே ஹேன்)
டரா: சரிதாம்பா. எங்கே? (டீக்கே. லெகின் கிதர்)
வரா: எங்க வேண்டுமானாலும் ஓகே (கிதர் பி சலேகா)
டரா: நல்லது. இருந்தாலும் எங்கே? என்ன பண்றது (அச்சா. பிர்பி கிதர்? கியா கர்னா ஹே?)
வரா: என்ன வேணுமின்னாலும் செய்யலாம் (குச் பீ கரேங்கே)
டரா: சரி எத்தனை மணிக்கு? (கப் கர்னா ஹே?)
வரா: எப்ப வேணுமின்னாலும் (கபிபீ)
டரா: ரொம்ப நல்லது (பகூத் அச்சா)

(பல்லை நற நற'ன்னு நீங்க மட்டுமில்ல. எழுதுற நானும் தான்). அப்பப்ப யோசிக்கிறது. இந்தக் கொடுமைக் குசும்பிலேர்ந்து தப்பிக்க $20 மொய் எழுதலாமின்னு. இருந்தாலும் நம்ம குசும்பு புத்தி தடுக்குது.

செம்போ, தின்னரோ இந்த மாதிரி குழப்பரவாளைத் திருத்த ஐடியா தாரேளா???

பி.கு 1. வடக்கும் தெற்கும் சந்தித்தால்? இந்தப் பார்ட்டி, ஒரு மலையாளியோட நடத்தின உரையாடலின் தமிழாக்கம் அடுத்த பதிவில்....

பி.கு. 2.இந்த மாத பதிவுகள் டாப் 10 வரிசைல குசும்பனைச் சேர்த்துள்ளார் திவாகரனார். நன்றி. இதெல்லாம் தேவையான்னு நீங்க செல்லமா கோபிக்கிறது தெரியுது. என்ன பண்றது. குக்கி கிடச்ச குழந்தை மாதிரி ஒரு குதூகலம் தான்.
எதிரெதிர் வினை

பத்து வரிப் பாட்டெழுதி பத்தி பத்தியா பொழிப்புரை எழுதின ரூமி சாரோட நிலைமை நேக்கு புரிஞ்சிபோச்சிப்பா. பாட்டில் பாலா, பரி அப்புறம் கார்த்திக் அல்லாருக்கும் அநேக கோடி நமஷ்காரங்கள். கோடு போட்டா ரோடு போடுவேள், சந்து முனையில் சிந்து பாடுவேள்'ன்னு நினச்சுட்டன். இதோ என் பதிவிற்கான என்னோட பொழிப்புரை...குசும்பன் (கோனார்) நோட்ஸ்???

பாலாத் தம்பி...//அசிங்கமா பேசினா தப்பில்லைன்னு நினச்சாத்தான் மனப்பான்மை மாறும்//'ன்னு சொல்றேள். இதுக்கு உதாரணம் தரேன்.

எய்ட்ஸ் பத்தி எழுதும்போது "ஏம்பா அரிப்பெடுத்தா விலைமாதுகிட்டத்தான் போகணுமா? ஏன் கைத்தொழில் ஒன்றும் கத்துக்கலையா?"ன்னு கேட்கலாம். "அரிப்பு", "கைத்தொழில்" போன்ற கெட்ட வார்த்தைகள் "எய்ட்ஸ்" போன்ற அதி-தீவிர நோயைக் கண்டிப்பதானால் "பதப் பிரயோகம்" தப்பில்லை கண்ணா. நேக்கு.

அதே வகையில் சுகிர்தாராணியின் "புணர்ச்சி"ப் பிரயோகம் நோக்குங்கோ.

நிஜம் பொட்டில் அடித்த மாதிரி இருக்கும். அப்படின்னா, கவிதையைப் படிச்சிட்டு, நிஜம் நெஞ்சைச் சுட்டது மாதிரி. "கனவு கேள் என்று சாயத் தோள் கேட்கும் பெண்ணை புணர்ச்சிக்கு அழைகிறாளென தப்பர்த்தம் கொள்ளாதே", சுகிர்தாராணியின் வெளிப்பாடு படு நியாயமானது. இன்னும் மேலே சென்று சுயபுணர்ச்சி, பன்னாடை, பரவியபோது மனம் களித்தவன் நீதானே, என்று விளாசுகிறார். முற்றிலும் விரசமே இல்லாமல். கருத்துடன் சாடுவது சாட்டையால் விளாறுவதற்கு சமம். இதைப் படிக்கும்போது எழுதியவரைப் போற்றத் தோன்றும். கைதட்டிக் கூப்பிடத் தோன்றாது. தூற்றத் தோன்றாது.

அடுத்து ஈழத்து கொடுமைகளில் உச்சமாய், தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவம் பாலியல் பலாத்காரம், கூட்ட கற்பழிப்பு செய்தபின் "யோனியில்" குண்டு வைத்து கொன்றதை கவிதையாய் படித்தது. பெண்கள் யோனி'யென்று எப்படி எழுதலாமென்ற விவாதம் எனக்கு இங்கு பைத்தியக்காரத்தனமாய் பட்டது. கவிதையைப் படித்தவுடன் ஈரக்குலை நடுங்கியதென்றால் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி... "யோனி" என்ற வார்த்தைப் பிரயோகத்தால் அல்ல.

இம்மையிலிருந்து மறுமை வேண்டிய பட்டினத்தார் பாடல்களில் இல்லாத ந(ளின)யமான கெட்ட வார்த்தைகளா? ஏன் பெண்புலவர்கள் அக்காலத்திலே சுகிர்தாராணி போல் எழுதவில்லையென அடிக்கடி தோன்றியதுண்டு. ஆண் சுகம் தவிர்த்தால் பெண்களுக்கும் மறுமை கிட்டுமென ஒரு காரைக்கால் அம்மையாரோ , ஔவையாரோ (இருவரும் பாவம் அழகிய உருவத்தை கடவுளை வேண்டிப் போக்கிக் கொண்டார்கள்) ஏன் எழுதவில்லை?

//ஆனா அரிப்பு சகிக்கலை//

அப்படின்னா "புணர்ச்சி", "யோனி" போன்றவற்றை ஒத்துக்கிட்ட குசும்பனுக்கு "அரிப்பு" சொல்லப்பட்ட இடம்/பொருள்/ஏவல் சகிக்கலை.மூக்கர் எழுதினது பிரசவம் பற்றி. அதன் வலி, மகத்துவம், பக்கத்திலிருந்து பார்க்க கணவனால் முடியுமாவெனும் உணர்வுப்பூர்வமான கேள்வி, பெண்ணின் வலி தாங்கும் பெருமை, நேசித்த மனைவிக்கு வலி தந்தாயே என்று பிள்ளக்கு பிருஷ்டத்தில் ரெண்டு வைப்பேன் என்னும் குடும்பக் காதல்...ஆஹா மஹோன்னதம். இந்த இடத்துல "அரிப்பு" எங்கப்பா வந்தது?

//எனக்கென்னவோ இந்த ஏற்பாட்டை நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என தோன்றுகிறது. காரணம் பெருகி வரும் மக்கள்தொகை. ஒரு பிரசவம் என்பது பெண்ணை பொருத்தமட்டில் மறுபிறவி. ஆனால், நிறைய ஆண்களுக்கு அது புரிவதில்லை, தெரிவதில்லை. அதனால்தான் ஒரு வருட இடைவெளி கூட இல்லாமல் வாரிசுகளாய் பெற்றுத் தள்ளுகிறார்கள். பிரசவ வேதனையையும் அவஸ்தையையும் அருகில் இருந்து பார்ப்பவனுக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு "அரிப்பு" வராது, மக்கள்தொகையும் மட்டுப்படும்.//

//அருகிலிருந்து பார்ப்பவனுக்கு அரிப்பு//

பார்ப்பவன் கணவன். பார்க்குமிடம் மனைவியின் யோனி (சிசேரியன் இல்லை என்றால்). யோனியைக் கிழித்துவரும் அவன்/அவள் சிசு. அதனால் ஆறு மாதம் அரிப்பு வராது. ஆகா..என்ன ஒரு புரட்சிகரமான சிந்தனை வெளிப்பாடு? என்னே ஒரு ஈனத்தன்மை?

மயான வைராக்கியம் ஆம்பிளைக்கு, பிரசவ வைராக்கியம் பெண்களுக்கு'ன்னு சொல்வா. அது கூட விரசமில்ல. வாழ்வின் பற்றுதலில் இதெல்லாம் சஜமப்பா. இதே பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததை வெறுப்புடன் பார்த்த கணவனை "பரவிய போது மனம் களித்தவன்" என்கிறார் சுகிர்தாராணி. ஆனால் சுப்புராணியோ??? கண்டிப்பாய் அப்பிராணியில்லை.

ஐயய்யோ....ரெண்டு படம் போட்டு ஆறு வித்தியாசம் காமிக்க வைச்சுட்டாளே...ஈ(ஏ)சுவரா...

ஒரு நல்ல பதிவு கேனத்தனமான பின்னூட்டத்தால் திசை திரும்புமென்பதற்கு மூக்கரின் "பிரசவ காட்சி" பதிவு சிறந்த எடுத்துக்காட்டு. புணர்ச்சி, யோனி ஒத்துக்கிட்ட குசும்பன் அரிப்புக்கு ஜகா வாங்கின காரணம் இதுதான்.

பரி பாசு... நீரும் புரிஞ்சிண்டேளா??? "அரிப்பு" தப்பில்ல கண்ணா...சுப்புலொட்சுமி "சொறிஞ்ச" இடம்தான் தப்பு.

கார்த்திக்காரு... நீரு என்னோட பெரிய கமெண்டைப் பார்க்கலை போலிருக்கு. அதான் ஆணாதிக்கம், ஆண் பதிவாளர் எழுதியிருந்தா, அப்படி யிப்படின்னு பதில் பதிவுல சொல்லியிருக்கேள்.

நாந்தான் சொன்னேனையா "பாட்டுப் பாடியிருப்பேன்"ன்னு. நம்பிக்கையில்லன்னா மூக்கரோட பதிவுல "அரிப்பு சொறிஞ்சு" பாரும். அந்தாதி எழுதுறேன். அ(ஆ)ப்புறம் சொல்லுங்கோ குசும்பனோட ஆணாதிக்கத்தை...

Wednesday, July 28, 2004

பிரசவ வலி

பிரசவக்காட்சியின் வலியை மூக்கர் எழுதியிருக்காரு. படிச்சுட்டு பின்னூட்டம் போங்க...

சுப்புலட்சிமியம்மா சூப்பரான கமெண்ட் விட்டிருக்காங்க. அசிங்கமா எழுதுறது ஆம்பளைங்க சொத்தா? எங்களாலும் முடியுமுன்னு வரிஞ்சு கட்டிட்டு எழுதுனாப்ல தோணுது.

கொஞ்ச நாளக்கி முன்னாடி "புணர்ச்சிக்கு கூப்பிடுவதாய் நினக்காதீர்கள்"னு ஆசிரியம்மா எழுதியிருந்தாங்க. நிசம் பொட்டுல அடிச்ச மாரி இருந்துச்சி. "யோனியில் குண்டு"ன்னு ஈழ தமிழச்சி கவித படிச்சப்போ ஈரக்குலை நடுங்கிச்சு.

ஆனா "அரிப்பு"? சகிக்கலை. கும்பிடும் தாம்பத்யத்தை கைதட்டி அழைக்கிற தன்மை கொடுமைக் குசும்பு. பெண் விடுதலைக்கு குரலு வுட்ட ராசா ராம் மோகன் ராய், பாரதி ஆத்மாக்கள் தூக்கு மாட்டிக்கும்.

ரொம்ப நல்லா எழுதுற பொண்ணு. நல்ல விதமாவும் எழுதுனா சந்தோஷம்.

Tuesday, July 27, 2004

எடையைக் குறைக்க வேண்டுமா?

பலரின் தணியாத ஆசை வெயிட் குறைச்சி சிக்'னு ஆகணுமின்னு. குசும்பனும் பல இடங்களில் வழி தேடுனப்ப ஒரு படா சைட் கிடைச்சது.
சாவகாசமாய் சவாரி போய்வறேளா?

பி.கு. Flash enable பண்ணிடுங்கோ. சாவகாசமாய்...புரிஞ்சிக்குங்க...

Friday, July 23, 2004

ஐதராபாத் மக்களு ஷமிஞ்சண்டி...

U know u r a HYDERABADI, if

Your address reads as 23-404-32/67A-43 (New MCH number 56-678/4A/B-22) while you actually live in the second house beside Zamzam cafe in lane behind Anand Theatre on SP Road.
You end up buying only a salwar kameez, whether it is a theatre workshop, food mela, consumer expo, designer jewellery show, science show or an automobile convention.
Your street has at least one roadside mobile hotel that serves Chinese delicacies such as "Vegetable soft needles", "Navrotten Kurma", "Chicken Manchewurea" or "American Chompsee".
Your answer is "seedha chale jao" when somebody asks you for directions,whether it is to Malakpet, Masab Tank, Malkajgiri or Moosapet.
You come across tailors sporting the board: "Immidiot delivery in two days onli".
You can speak Hindi, Urdu, hyderabadi hinglish, except Telugu fluently.
You ask the waiter to get you some Mango pickle even if you are sitting at a lavish continental banquet dinner with exotic Chinese, Mexican,Italian and Lebanese cuisines.
You order for a tea just after having had a Caramel custard.
And you ask the waiter to make it "one by two".
You have at least one Srinivas,Prasad, Raju or Venkatesh within six square feet.
OR you have at least one cousin, friend, colleague or acquaintance with these names.
You have at least one cousin, friend, colleague or acquaintance in the US in software.
Everytime somebody gives you a piece of good news, the first thing you ask them is Party kab hain?
Refer to any past as parso, be it yesterday or long before three hundred years.
You call 11 AM as subah subah.
You label your boss as "Dimakh Kharab".
You are 15 minutes late and you feel you are on time.
You look at the fixed price stand and still ask "dene ka bolo".
You are reading this and secretly admitting that you are, after all, a true blue Hyderabadi.

you know one thing..... Once a Hyderabadi, always a Hyderabadi.
இது எலா உந்தி?

Once it so happened in a flight, that, James bond was sitting besides a Telugu guy from India. Both were travelling to the United States. Smart Telugu guy initiates a conversation.

Telugu Guy: "Hello, May I know your good name please?"
James Bond: "I am Bond. James Bond."
James Bond: "and you?"
Telugu Guy: "I am Sai...
Venkata Sai...
Siva Venkata Sai...
Laxminarayana Siva Venkata Sai...
Srinivasula Laxminarayana Siva Venkata Sai...
Rajasekhara Srinivasula Laxminarayana Siva Venkata Sai...
Sitaramanjaneyula Rajasekhara Srinivasula Laxminarayana Siva Venkata Sai...
Bommiraju Sitaramanjaneyula Rajasekhara Srinivasula Laxminarayana Siva Venkata Sai."

James Bond FAINTS!!!

Tuesday, July 20, 2004

எகனாமிக்ஸ் குசும்பு

பணக்காரா வரிக்-குறைப்பாலே பலனடையறா...மத்தாவாளுக்கெல்லாம் அல்வாதான்ன்னு புலம்பற அமெரிக்கர்களுக்கும், அமெரிக்காவில் வசிப்பவர்க்கும்:

(நேக்கும் எகனாமிக்ஸ்'ற்கும் என்ன தூரங்கறதை கடைசியில பார்ப்போம்)

ஒரு 10 பேர் தினமும் டின்னருக்குப் போறா. பில் $100/தினம். இப்போ 10 பேரும் வரி கட்டற மாதிரி பில் கட்டறா'ன்னு வைச்சிப்போம்:

* முதல் 4 பேர்: $0 (ஏழைங்கப்பா!).
* 5 வது ஆள் $1.
* 6-- $3.
* 7-- $7.
* 8-- $12.
* 9-- $18.
* 10-- $59 (காசு பார்டிப்பா).

பத்து பேர்க்கும் பரம சந்தோஷம். ஹோட்டல் ஓணரு உணர்ச்சிவசப்பட்டு: "நீங்க நல்ல கஷ்டமரா கீறீங்கோ. இந்தா புடி $20 டிஷ்கவுண்டு", குரலு வுட்டார். அப்டின்னா டெய்லி பில்லு $80.

ஆனா இப்பவும் வரி மேறியே பில்லு கட்டணும்னு முடிவாச்சி. மொதோ நாலு பேரு ப்ரீயா சாப்டுவாங்கோ. மீதி ஆறு பேரும் $20 சரி சமமா பிரிச்சுக்கணும். இந்த புச்சான கணக்கு இடிச்சுது. ஏன்னா $3.33 அஞ்சாவது & ஆறாவது ஆளுங்கட்டேர்ந்து கழிச்சா, சாப்டது போக கைல காசு கொடுக்றா மேறி இருக்கும். ஹோட்டல் ஓணர் பெர்ய மன்சு பண்ணி கட்ற பணத்துலேர்ந்து % வச்சு குறைச்சுக்கட்ட ஒத்துகிட:

* 5 வது ஆள் மத்த 4 பேரு மாதிரி $0 (100% மிச்சம்).
* 6-- $2 instead of $3 (33% மிச்சம்).
* 7-- $5 instead of $7 (28% மிச்சம்).
* 8-- $9 instead of $12 (25% மிச்சம்).
* 9-- $14 instead of $18 (22% மிச்சம்).
* 10-- $49 instead of $59 (16% மிச்சம்).

விதி யாரை வுட்டது? கொஞ்ச நாள்ல சண்டை பத்திக்கிச்சு.

ஆறாவது ஆள் "எனக்கு $1 தான் பெனிபிட்டு கிடைச்சுது. பத்தாவது ஆளுக்கு $10 டாலர் பெனிபிட்டு"
அஞ்சாவது ஆள் "கரீக்டுபா. எனக்கும் $1 தான் பெனிபிட்டு. ஆனா பத்தாவது ஆளுக்கு 10 மடங்கு பெனிபிட்டா?"
ஏழாவது ஆளு "$2 பெனிபிட்டு..."
முதல் நாலு பேரோ,"எங்களுக்கு ஒண்ணுமே கிடைக்கலியே...ஏழைகளைச் சுரண்டுகிறது அரசு".

ஒன்பது பேர் சேர்ந்து பத்தாவது ஆளை புரட்டிப்புட்டானுவ.

அடுத்த நாள் பத்தாவது ஆள் ஜீட். ஒம்போது பேர் சேர்ந்து சாப்டும் கட்ட முழுப் பணத்துல பாதி கூட தேறல.

இப்படித்தான் வரிக்குறைப்பு வேலை செய்தாம்பா. சும்மா பணக்காரங்களை நோண்டாதீங்கோ. அப்புறம் ...

(இதைச் சொன்னது David R. Kamerschen, Professor of Economics, University of Georgia.)

சந்தேகமிருந்தா அவருக்கு தபால் போடுங்கோ !!!

Sunday, July 18, 2004

சோனி வாய்யோ வா

Technology has improved very much'ங்கிறது ஒரு காமெடி வசனம். Sony Vaio R - Series கம்ப்யூட்டர் கலக்குது பாசு.

sony vaio

புஸ் பூஸ்'ன்னு சூடா மூச்சு விட்டு, பிளாப்பி டிஸ்க் போட்டா கரபுர கரபுர'ன்னு இருமி, வீடியோ படம் புடிச்சா ஞாபக சக்தி (அதான் Memory'பா) குறைச்சலால நொண்டியடிக்கும் கம்ப்யூட்டர் காலம் மலையேறிப் போச்சு.

வாய்யோவில், உய்ங் உய்ங்'னு ரீங்காரமிடும் குளிரூட்டும் காற்றாடிகள் இல்லை. திரவத்தை ஓடவிட்டு குஜால் பண்றாளாம். கம்ப்யூட்டர் சில்லினு இருக்கு பாசு.

டிவி, ஸ்டீரியோ, கம்ப்யூட்டர் கேம்ஸ், ஹோம் மூவி, எல்லாம் வசதியும் உண்டு. 19" தட்டையான LCD மானிடரோடு விலை ஒரு லகரத்தை சுலபமாத் தாண்டும்.

ஆனா போட்ட காசுக்கு மதிப்பு தலீவா !!!
குரங்குகள் தினம்

kurangku1

அப்பா தினம், அம்மா தினம், காதலர் தினம் எல்லார்க்கும் தெரிஞ்ச விசயம். குரங்கு தினம் கேட்டதுண்டா? நம்ம முன்னோரை நினச்சு 21 ஜூலை கொண்டாடணுமாம்.

இந்த கோக்கு மாக்கான தினத்துக்கு கார்டு போடணுமா? இருக்கவே இருக்கு இணையம்.

கண்டிப்பா அன்னைக்கு குசும்பன நினக்காதீங்க...ஹி...ஹி...

Saturday, July 17, 2004

பொழுது போகாத பொம்மு

கூகிள்ல கன்னா பின்னா காமா சோமான்னு தேடாம உருப்பிடியான தகவலைத் தேடினா எம்மாம் சுட்டிகள்னு பாத்தேன்...

online dating: 7,210,000
kalaignar karunanidhi: 542
rajinikanth: 4,020
J Jayalalitha: 5,200
aids disease: 4,370,000
spice girls: 1,560,000

அப்புறம் வலைப்பூ அன்பர்களைப் பற்றி யுனிகோடுல தேடினது:

சோடாபாட்டில்: 9
பா ராகவன்: 269
மூக்கன்: 37
சந்திரமதி: 283
சந்திரவதனா: 199
பெயரிலி: 68
குசும்பன்: 77
கொசப்பேட்டை: 34
நக்கல் நாகராஜன்: 8
வந்தியத்தேவன்: 69

மேல சொன்ன நம்பரை ஏத்தணும்னா ஒரு குறுக்கு வழி சொல்றேன். காதைக் குடுங்க...நிறய பின்னூட்டம் குடுங்க. எகிறிடும் நம்பரு...சரிதன்னே?

Wednesday, July 14, 2004

Description Kusumbu

புது ப்ளாக் போடRaவாக்கு 400 எழுத்து description' படா பேஜார். நான் பட்ட பாடு இருக்கே... மூளையை (?) கசக்குனதுல ஒரு கன்சல்டன்ட் அளவுக்கு அறிவு முத்திப்போச்சு. அப்புறமென்ன...இவா description இப்படி இருந்தான்னு குசும்ப கலந்தப்ப....

ஆப்பு
எழுத்துப்போக்கு (அதாம்பா Verbal Dysentery) உள்ள தமிழ் வியாதியஸ்தருக்கு இங்கே இலவச ஆப்பு வைத்தியம் செய்யப்படும்

Arun's Views (அருண் வைத்தியநாதன்):
பேனாவைப் பிடுங்கினால்
பென்சிலால் எழுதுவேன்
பென்சிலைச் சிதைத்தால்
மார்க்கரால் வரைவேன்
மார்க்கரை நசுக்கினால்
கணிணியால் ப்ளாக்குவேன்
கணிணியை உடைத்தால்
பொளந்துபுடுவேன் பொளந்து

mynose (மூக்கன்)
Opinion is like a "nose". And everybody has one.

சோடா பாட்டில் (பாலா Jaya)
இறைவா இணயக் குசும்பனிடமிருந்து என்னைக் காப்பாற்று. மற்றவர்களை நான் வகுந்துடறேன்.

e-Tamil (பாஸ்டன் பாலா)
சென்றிடுவேன் இணையமெல்லாம். சுட்டிகள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பேன்.

என் வீட்டுத் தோட்டத்தில், படக் களஞ்சியம்(பாலா)
வணக்கம். எண்ணங்கள் இங்கே எழுத்தாகவும், வண்ணங்கள் அங்கே படமாகவும்...நன்றி....மீண்டும் சந்திப்போம்...விடை பெறுவது...உங்கள் பாலா.
/* அப்பாடி...மூச்சு வாங்குகிறது*/

மனவோசை (சந்திரவதனா)
அலை வந்து கரை சேரும். மனம் இன்னொரு வலைப்பூ செய்யும்.
* அஷ்டாவதானி அவதாரமெப்போ? :-)

ஒரு சைவமின் பிள்ளையின் தமிழ்க் குறிப்புகள் (சேரலாதன்)
* மாத்தாதேள். நேக்கு அசைவ கமெண்ட் அடிக்க மனசு கேக்கலை.

பிருந்தாவனம் (சின்ன கண்ணன்)
கொஞ்சம் கலக்கலாம் வாங்க

இட்லிவடை
A tamilblog named after the great tamil people who are fond of eating Idly & Vadai. Best eaten with Sambar2k, GunpowderXP and LinuxChatni.

நேர நிர்வாகம் (இளையதாசன்)
இது மற்றவர்களுக்காக எழுதப்பட்டது. எனக்காக இல்லை. (* கடைசியாகப் பதிந்தது 06 ஜூன் 04 ;-)

Karthik's Nothing but Blogs (கார்த்திக்ரமாஸ்)
இங்கே எனது பத்து சென்ட்டும், இந்தியா பேச பன்னிரெண்டு சென்ட்டும்

கரும்பு ஜீஸ் (கிருபாசங்கர்)
மொ(மு)த்துக்கள் இலவசம் அல்லது
உதவாக்கரையின் உரைகள் அல்லது
தேடியவை.குடித்தவை.சாப்பிட்டவை. (* சுவடு சங்கர் மன்னிக்க)

காதல் உலகம் (மன்மதன்)
இங்கே சுட்டி நான்காவது பின்னூட்டம் படிக்கவும்.

மனத்துக்கண் (பாரா)
கெட்ட மின்பையனின்(பிள்ளையின்?) ஒன்பது கட்டளைகள்...அல்லது
ஒரு கெட்ட மின்பையனின் அசைவ குறிப்புகள்

கொசப்பேட்டை டாட் காம் (KV ராஜா)
கொசப்பேட்டை தாதாவின் குண்(ஸ¤)டுகள்

சுவடு (சங்கர்)
அமுல்பேபியின் அக்குறும்புகள் அல்லது
திரு(ட்டு) முகத்தானின் திருவிளையாடல்கள் அல்லது
(தேவதையை) தேடியவை.....(தேவதையை) பார்த்தவை.......(தேவதையை) பதித்தவை.

மாஜிக் கற்றுக் கொள்ளுங்கள் (சின்னப்பையன்)
அப்ரக்க டப்ரா ... ஜீபூம்பா

சரித்திரப் பதிவுகள் (வந்தியத்தேவன்)
மூழ்கும் கலத்தின் சத்தம் நின்றுவிட்டது

வலைப்பதிவுகளுக்கான வலைபதிவு (வலைமதி???)
வலைஞர்களின் கூட்டாஞ் சோறு

டமாசு (வசந்த்)
இது உங்கள் பொழுதை போக்க இல்லை. எனது காதலை காட்ட எழுதப்பட்டது.


இந்தப் பதிவுல ஒரு மிஷ்டேக் உண்டு. கண்டுபிடிச்சிட்டேளா?
இலக்கியமா? இறைவனா?

சூலைத் திங்கள் 13'ம் திகதி(13 நம்பர் ராசி பாத்தேளா?) ராயர் காப்பி கடையில ரொம்ப நாளைக்குப் பிறகு ரூமி சார் கவிதை போட்டிருக்காரு. அப்புறமென்னாச்சு? மரத்தடியிலேர்ந்து கடை வரை பத்திக்கிச்சு...பத்திக்கிச்சு ஆயிப்போச்சி.

பாட்டைப் படிக்க இவ்விட சுட்டுங்கோ...

இதுலுல கடுமையா விமர்சனம் செய்ங்கோன்னு வேற சொன்னாரா? சும்மா சுகுற்ரா போட்டுத்தாக்கிட்டாங்கோ.
கொஸப்பேட்டையார்
உஷா அக்கா

சுரேசு

S Kயார்

நியூட்ரல் சவுண்டும் உண்டு

மட்டுறுத்துனர் அல்லாரும் கிளவுஸை கழட்டுங்கோ. இனிமே இந்தக் கவிதையை மரத்தடியிலே பேசாதீங்கோன்னு தடா போட்டுட்டார்

அண்ணன் PK சிவக்குமார் வெறும் டைம்அவுட் குடுங்கோ. குஸ்தியை நிறுத்தாதீங்கோன்னு குரல் வுடுறார்.

நொந்து போன ரூமி பதில் மடல் படிக்க

பி.கு. இந்தப் பதிவு மூலம் இன்னொரு இலக்கிய எல்லையை அடைந்துவிட்ட களிப்பில் குசும்பன். என்னாப்பா அதுன்னு கேக்றவா, நம்ம பாட்டில் அண்ணாவைக் கேளுங்கோ. ஏதோ எக்லக்டிக்...எக்லேர்ஸ்...

;-) ;-) ;-)


Sunday, July 11, 2004

விட்டாச்சு லீவு...

ஒரு வாரம் கொஞ்சம் வேலை இருக்கு. அதனால அதிகமா வலைப்பதிவு பண்ண முடியாது. அதென்ன அந்த ஏழு நாட்கள்???

வலைப்பதிவு ஆசிரியர் வேலையா? அடப் போங்கப்பா...குசும்பனுக்கு ஆசிரியர் வேலையா? அதெல்லாம் பெரியவாக்கு. சங்கதி அதில்லை ஓய்...ஆசிரியரா நம்ம புள்ளாண்டான். (சன் டிவி பாணியில் "பாட்டில் வாரம்").

தம்பி(?) ஈழநாதன் புது பரிமாணம் கொடுத்ததுக்கப்புறம் (ஆமாம் ஆசிரியர் ஆனோன்னே பல மேட்டர் எழுதிட்டு டயமில்லாததால அதிகம் எழுத முடியலேன்னு எல்லா ஆசிரியரும் சொல்றது தன்னடக்க வியாதியா? இல்லை மதியக்கா ஒரு மாசம் முன்னாடியே டயம் கொடுத்து ஆசிரியர்/யை அறிவிக்கிறாங்களா? ஈஸ்வரா, உனக்கே வெளிச்சம்;-)), கலகலன்னு பாட்டில் வீச பாலா வந்துட்டன் (பாலா யெப்ப நீங்க 22 வயசுக்கு வங்தீங்க??? என்றும் 22 பாலாவா வயித்தெரிச்சலை கொட்டிக்கிடணுமா?) . சிலீங் சிலீங்'னு சத்தம் கேக்குது. பாட்டிலு பறக்குது. நான் பதுங்கணும். வரட்டா?

அதுக்காக நடுவுல பிளாக்கிட்டா தப்பா குசும்பு பண்ண வேணாம். பாரா சொன்னா மாரி நாமெல்லாம் ஒரே கட்சி.

பினா.குனா. ஆமாம். பாராவோட பின்னோட்டத்துல "எதிர்கட்சி ஆசாமி" அப்படியே "ரூமி ஸார்" சொன்னதை "தங்லீஷ்" பண்ணாப்பல தெரியுதே?
நேற்று இன்று நாளை

அன்று

30pic5

இன்று


avhome_p

நாளை

????

Friday, July 09, 2004

அமெரிக்க ராமர் பிள்ளைகள்

வழக்கம் போல் கோக்கோடு டிவி முன்னா உட்கார்ந்தா சுவாரசியமாய் ஏதும் இல்லை. ரிமோட்டை சொடுக்கி சொடுக்கி கைவலி கண்டதுதான் மிச்சம். நடுநிலைமை (ஹி ஹி என்னைப் போல) வகிப்பவா பாக்ஸ் டிவி பாக்க மாட்டா. சரி யென்னதான் சொல்றான்னு பாத்தா, ஒர்த்தர் வோல்க்ஸ்வேகன் காரை அழகாய் ஓட்டிண்டு போறார். அதிலென்னா பாசு அதிசயம்? அடுத்த சீன். அதே டிரைவர் ஒரு பெரிய வாளியில் கொழ கொழ வென எதையோ காரின் டாங்கினில் ஊத்துறார். அடுத்த ஸீன். தலயை தூக்கி கேமராவைப் பாத்து சொல்றார், "நான் இப்ப ஊத்தினது பக்கத்து சீன ஹோட்டல்ல இருந்து வரும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணைய்"

ஆஹா ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் வாசமடிக்குதேன்னு இணயத்தை வலம் வந்தா...ஒரே ஷாக்கடிச்சிப் போச்சி. காரை ஸ்டார்ட்/ஆப் பண்ண மட்டும் கொஞ்சூண்டு டீசல். அப்புறமா எல்லாமே சமைச்ச (பொறிச்ச) எண்ணைய்தான். சின்ன குழாய் மாதிரி ஒரு ஜிகிடையை வாங்கி காருல வச்சுட்டா போதுமாம்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பும் ஆச்சி. பெட்ரோல்/டீசல் விலை எகிறிப் போய் இருக்கிற காலத்துல டாலரும் மிச்சம். (ஐய் நிறைய கோக் வாங்கலாமே?)

mark

இன்னும் படிக்க இங்க சுட்டுங்கோ...

Thursday, July 08, 2004

குண்டு ஒண்ணு வைச்சிருக்கேன்

மறுபடியும் நம்மாளு குண்டு(ஸ¤) வுடுராரு...

$ தேசமாம்...முன்னுரையாம்...படியுங்கோ...

மொத்தம் 6 பின்னூட்டம்.
ரஜினி ராம்கிக்கு: ஒரு சின்ன திருத்தம்: 118 வாரமில்லை. ரிப்போர்ட்டர் வாரத்திற்கிருமொறை.
கோட்டிக்கு: வாய்யா...6 வது பின்னூட்டம் சூப்பரய்யா!!! ;-)

//மார்க்கச்சையுடன் மல்லாந்து கிடக்கிற இளவரசிகளின் வண்ணச் சித்திரங்களில், இல்லாத சரித்திரத்தை இருட்டில் தேடிக்கொண்டிருக்கிறோம்.//
யாம்பா... பாரா.... முல்லை, விருந்து'ல வரல் ஆறு படிச்"சீ"ரா? ம.செ. ஓவியத்துல கிறங்கி பண்ணுன பழசெல்லாம்(?) ஞாபகம் வருதோ? நல்லவேளை நீர் இன்னும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வரலாற்றுப் பாடம் எழுதவில்லை. எழுதினால் ஐய்யகோ...கோவிந்தா ... சந்திரா(மதி!!!)...மாதவா ... சீதா(தேவி!!!) ....திருவான்மியூர் தியாகராஜா...

//யோக்கியமான சரித்திர ஆசிரியன், உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்டுவது, சரித்திர நூல்//

இப்படியெல்லாம் குன்ஸ¤ விட்டு டொம்ஹாக் ஏவுகணை "கான்கிரீட் கட்டடங்களை துளைத்துக் கொண்டு இலக்கைத் தாக்கும்"னு குண்டு போட்டியே நைனா !!!
பார்க்க படங்கள்.

tom1
tom2

tom3
tom4


யாம்பா... பாரா...."Target Penetration"ன்னா வேற பாசு. புரிஞ்சுக்க. 10 மாளிகை துளைச்சு 11'வது கட்டடத்தை போட்டுத் தாக்குற மாறி ரஜினி (ர. ராம்கி மன்னிக்க) பிலிம் வுடுறீரே. வுனக்கும் பிரம்மராஜனுக்கும் என்னா வித்தியாஸம்? (நாகூர் ரூமி ஸார் நல்ல ஐட்டம் இது. வுடாதேள்). மிசைலு வூடுருவதுன்னா யென்னான்னு பக்கத்துலேர்ந்து பாத்த மாறி அவுத்து வுடுற??? நிபுணரு கருத்து கேட்டு எய்துனதா "படா" பிலிமு வேற. இணையத்துல (யெங்கேயோ?) படிச்சு மொ(மு)ழிபேர்த்து மாட்டிக்கினியே....

ஆனானப்பட்ட "பன்க்கர் பஸ்டரே" (Bunker Buster) கான்கிரீட் மூடியை ஆஹான்னு கிராஸ் பண்ணி உள்ளேயே வெடிக்கும். நீர் உட்ட டொம்ஹாக்கோ பில்டிங் பில்டிங்ஙா கிராஸ் பண்ணுது ராசா !!!

மனத்துக்கண்ணுல நீர் சலசலக்கிறீர்...அட்சரம் ஆழமாய் அடியே (கீழே) சிரிக்கிறது !!! சும்மாவா சொன்னாள்..."நிறை குடம் நீர் தளும்பாதுன்னு!!!" கணேஷ் ராசா நீர்தான் இணைய குசும்பர் (!!!) பக்கத்து பக்கதுல வெச்சுண்டே எல்லாம்...

பாரா நீர் மேலும் குண்(ஸ¤)டு போ(வு)டும். உம்ம பின்புலம் தெரியாதா? பஞ்ச கல்யாணிலிருந்து குதிரைகளின் கதை வரை !!!

Tuesday, July 06, 2004

பேட்டி

நமீதாவை ரஸிகப் பெருமக்களுக்கு நான் அறிமுகம் பண்ணத் தேவையில்லை. அவளோட பேட்டி குமுதம்.கொம்'ல வெளியிட்டுக்கா.

இங்கே சுட்டுங்கோ.

நடிகைன்னா ஏன் தப்பா பார்க்கிறா'ன்னு பாவம் பொண்ணு புலம்பியிருக்கா. வெறும் செய்திதானான்னு புலம்பறாவுக்காக:
name1
name2

அப்புறம் கவனிச்சேளா...எவ்வளவு பெரிய...காது வளையம்.

Monday, July 05, 2004

மிருக கிளிஷே குசும்பு

குழந்தைகளுக்கு பறவைகளையும், ஈக்களையும் கற்றுத் தரவேண்டும். Teach the children birds and bees.

முக்கியஸ்தரின் வரவை முன்னிட்டு பாதுகாப்பு மாட்டுக் கறி செய்யப்பட்டது. Security beefed-up for VIP's visit.

மழை பூனைகள், நாய்கள் போல் பெய்தது. It rained as cats and dogs.

இது நாய்களை நாய்கள் தின்னும் காலம். It's a dog-eat-dog world.

பூனை நாக்கில் குடி-வந்தது போல் அவர் (நரசிம்ம ராவ்???) இருந்தார். He looked as if cat got his tongue.

நேற்றைய விருந்தில் அவர் மீனைப் போல குடித்தார். In yesterday's party he drank like a fish.

Sunday, July 04, 2004

அட தேவுடா...

1) வேலை செய்யுமிடத்தில் முன்னேறுவதற்காக கொஞ்சம் அப்படி-யிப்படி இருக்கலாமா?
48% ஆமாம் 52% கிடையாது

2) உங்களால் ஈர்க்கப்பட்ட கிளையண்ட் வாங்க ஒரு டிரின்க் சாப்பிடுவோமென்றால் போவீர்களா?
60% ஆமாம் 40% கிடையாது

3) மார்பழகையும், காலழகையும் ஆண் கிளையண்ட் முன் காட்டலாமா?
45% ஆமாம் 55% கிடையாது

4) உங்கள் மீது உண்மையான ஈடுபாடு கொண்ட ஆண் கிளையண்ட் அல்லது பாசுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வீரா?
41% ஆமாம் 59% கிடையாது

5) (வேணாம்பா...மக்கள் அடிக்கப் போறாங்க)

கிளாமர் என்னும் பத்திரிக்கை வேலைக்குச் செல்லும் அமெரிக்கப் பெண்களிடம் எடுத்த சர்வேதான் நீங்கள் மேலே படித்தது.

Tuesday, June 29, 2004

நெஞ்சுக்கு நீதி

திரு ராஜா மற்றும் முகுந்த் அவர்களுக்கு,

உங்களின் பின்னூட்டம் மற்றும் பதிவு படித்தேன். (முகுந்தின் பதிவு இன்னும் இருக்குமெனெ நம்புகின்றேன். ராஜா நீக்கி விடச் சொன்னாலும்).

நான் சொல்ல வந்தது "பாலியல் கல்வி"யின் முக்கியத்துவத்தை. இளைஞர்களின் பாலியல் அறியாமையை. நாமக்கல் மாவட்டத்தை துவேஷிக்கும்/தூற்றும் எண்ணத்தில் அல்ல. பாம்பே, கல்கத்தா போல் நாமக்கல்லில் சிவப்பு விளக்கு பகுதிகள் தடுக்கி விழுந்தால் இருப்பதாய்க் கூறவில்லை. நாமக்கல்லில் பத்தில் ஒருவருக்கு எய்ட்ஸ் இருப்பதாய் புருடா விடவில்லை.

ராஜா, நீங்கள் முகுந்த் எழுதிய பதிவில், பின்னூட்டமாய் பின்னியிருக்கிறீர்கள். எனது பதிவைப் படிப்பவர்கள் குறைவென்று. தாங்கள் எனது பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. நீங்கள் சொன்னது போலவே எனது கருத்துக்களை உள்வாங்காமல் போய் இருக்கலாமே? மேலும் தவறெனச் சுட்டிக் காட்டினால் மன்னிப்புக் கோரி சரி செய்து கொள்கிறேன். அதை விடுத்து முகுந்த் எழுதிய பதிப்பை ஏன் நீக்கக் கோருகிறீர்?

நாமக்கல் நம்பர் 1 என்று நான் மகிழ்வுடனா குறிப்பிட்டேன்? இதன்ன கின்னஸ் சாதனையா? நாமக்கல்லை அவதூறு செய்தேனா? வயிறெரிந்து சொன்னேன். சிறிதே பின்புலத்தைப் பார்க்கலாம்.

போன வருடம் HBO (Home Box Office) நிறுவனத்தின் "HBO Documentaries: Pandemic: Facts About AIDS" என்ற விவரணப் படத்தில் மொத்தம் 5 பகுதிகள் பார்த்தேன். அவற்றுள் ஒரு பகுதிதான் நாமக்கல் மாவட்டம். அதிசயமாக HBO'ல் தமிழ் கேட்கிறதே என ஆவலுடன் நிமிர்ந்தால் பேரிடியாக விவரங்கள் வந்து விழுந்தன.

படம் விவரம் காண இங்கே சுட்டுங்கள்

இந்தியப் பகுதியைக் காண இங்கே சுட்டுங்கள்

(என்னடா HBO சுட்டிகளில் ஒரே ஒரு ஜோடியைத்தான் காட்டுகிறார்களே என்று அவசரப்பட்டு பாயாதீர்கள். நாமக்கல் நாகராஜைச் சுற்றி கதை நகரும்படி படம் பிடித்துள்ளார்கள். ஆனால் படத்தில் சொன்ன புள்ளிவிவரங்களை இங்கே தொகுக்கவில்லை.)

படம் பார்த்தபின் வருத்தப்பட்டு மேலும் விவரம் தேடுகையில் WHO 2002 அறிக்கையைப் பார்க்க நேரிட்டது. அதில் நாமக்கல் பளிச்சென்று இடம் பிடித்து இருந்தது. 1998'ல் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட கருவுற்ற (antenatal) பெண்களின் சதவீதம் நாமக்கல்லில் 3.3. மணிப்பூரிலுள்ள சுராசந்த்பூர் 5.3 சதவீதத்துடன் முன்னணியில் இருந்தது. 1999'ல் இது நாமக்கல்லில் 6.5% ஆக உயர்ந்தது. சுராசந்த்பூரோ வெறும் 5.5% தான் (0.2% உயர்வு ஒரு வருடத்தில்). நாமக்கல் முன்னுக்கு வந்தது.

பார்க்க சுட்டி (பக்கம் 16 சுராசந்த்பூர் மற்றும் நாமக்கல்). (PDF வலையில் படிக்க முடியாவிடில் (கணிணியால்) சொல்லுங்கள். தனியஞ்சலில் அனுப்புகின்றேன்.)

இதே செய்தியை மேலும் ஒரு வளைத்தளம் உறுதி செய்கிறது.

WHO'வின் அறிக்கையை நான் நம்பக் கூடாதா? தன்னார்வத்தொண்டு நிறுவனத்தை நம்பக் கூடாதா? சன் டிவிக்கும் நாமக்கல்லுக்கும் வேண்டுமானால் பங்காளிச் சண்டை இருக்கலாம் (?). HBO'வைக் கூடச் சொல்லலாம். சில சமயம் ஒருதலைப் பட்சமாக நடக்குமென்று. ஆனால் இவ்விஷயத்தில் ஏன்? அவர்களும் நாமக்கல்லை அவதூறு செய்கிறார்களா? WHO மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பொய் சொல்கின்றனவா? உண்மைத் தகவல் எங்கே கிட்டும்? சொல்லுங்களேன்.

கடைசியாக June 05, 2004 7:59:26 PM IST வெளியான வெப் இந்தியா வலைப்பதிவு 1,00,000 பேர் நாமக்கல்லில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளாக கூறுகிறது. இதுவும் பொய்யா?

இத்தனைக்கும் பிறகுதான், நான் ஒரு தமிழன் (அதுவும் தமிழ்நாட்டில் பிறந்தவன்) என்ற காரணத்தால் தலை குனிந்து என் எண்ணங்களைப் பதிந்தேன். பாலியல் கல்வியை வலியுறுத்தும் பொருட்டு நாமக்கல் உதாரணம் காட்டினேன். உங்களைப் போலவே தனிமனித விமர்சனம் செய்ய எனக்கும் தெரியும். தரம் தாழ நான் விரும்பவில்லை. நீங்கள் கூறியிருக்கிறீர்கள் ஒரே ஒரு நோயாளியாயைக் கூட பார்க்கவில்லை யென்று. உங்கள் நண்பரோ நாமக்கல்லில் நிறைய எய்ட்ஸ் நோயாளிகளைப் பார்த்ததாகவும், இப்போது விழிப்புணர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறார். ஈஸ்வரனுக்கே வெளிச்சம் யார் உண்மை சொல்கிறாரென்று. ஒருவேளை நீங்கள் மட்டுமே நாமக்கல் என்று நினைக்கின்றீர்களா? அல்லது வசிப்பது வேறு நாமக்கல்லிலா? இல்லை காந்தாரிக் கண்ணனாய் வாழ்கிறீரா?

மகாராஷ்டிராவில்தான் எய்ட்ஸ் அதிகமெனப் படித்ததாக எழுதியிருக்கிறீர்கள். அப்படியானால் நாமக்கல்லுக்கு பதில் மகாராஷ்டிரா போட்டிருந்தால் குதியாட்டம் போட்டிருப்பீரா? பாலியல் கல்வி தேவையில்லை என்பீரா? நீங்கள் இந்தியரில்லையா? மகாராஷ்டிரம் மீது அக்கறை இல்லையா?

Clown Fish கேள்விப்பட்டிருக்கிறீரா? பெயரில்தான் அது கோமாளி. மற்றபடி அதுவும் மீன்தான். குசும்பனும் பெயரில்தான் கோமாளி. மற்றபடி நானும் .....

அய்யா...புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்னும் கேனக் கட்டுரை இல்லை அது. ஒரு நிமிடம் நீங்கள் நாமக்கல்லார் என்பதை மறந்து ஒரு நடுநிலையாளராய்ப் பதிவைப் படித்துப் பாருங்கள்.

இந்த முயற்சிக்குப் பிறகும் நீங்கள் சமாதானமாகா விட்டால், நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன். ஏனெனில் நான் குறி வைத்தது பாலியல் கல்வி மீது கவலை இல்லாத சமூகத்தின் மீது...நாமக்கல் வாழ் மக்களை நோக்கி அல்ல...
அடல்ட் குசும்பு

சாமி செல் போன் வெச்சிருக்கறவாளே...முன்னாடி சொன்னாங்கோ..இடது சட்டைப்பையிலே வைச்சிருந்தா ஹார்ட் அட்டாக் வருமின்னு...பயந்து போய் இடுப்புல கட்டிண்டு அலஞ்சா இப்போ விந்துதுல உயிரணு குறைஞ்சு போயிடுமாம்.

மேலும் படிக்க

அப்போ பின் பாக்கெட்டுல (?) வைச்சுண்டா கொழுப்பு (?) குறைஞ்சுடுமா'ன்னு நீங்கெள்ளாம் கேட்கறது காதுல விழறது...

இதெல்லாம் புருடான்னு இந்த ரிப்போர்ட் சொல்றது

யாரை நம்பறது ஈஸ்வரா???

Monday, June 28, 2004

அடல்ட் குசும்பு (வயதுக்கு வந்தவர்க்கும், வருபவர்க்கும்)

"வாடா மச்சான் வயசுக்கு வந்துட்டே" என்ற திரைப்படப் பாடலை ரொம்பப் பேரு கன்னா பின்னான்னு விமர்சனம் பண்ணாங்கோ. அதை இப்போது நினைத்தாலும் நேக்கு சிரிப்புதான் வர்றது. நாம் வளர்ந்த சூழ்நிலையை கொஞ்சம் திரும்பிப் பாருங்கோ...

காலைலே கழிப்பறையிலிருந்து ஒருவன் குழப்பமாக வெளியேறுகிறான். உடலில் நிகழும் மாற்றங்களுக்கு தந்தையிடம் கூட விளக்கம் கேட்க முடியாமல் தவித்து, நண்பர்கள் நகைப்பரோ என்று குழம்பி, கடைசியில் மஞ்சள் பத்திரிக்கையில் தப்பான விளக்கம் படித்து, குற்றவுணர்வு குறுகுறுக்க ... வேதனை ... வேதனை.
(எனக்கு கோபமோ, சோகமோ தூய தமிழ் வந்துடும். அட்ஜஸ்ட் செய்துக்கோங்கோ).

கண் மண் தெரியாமல் ஹார்மோன்களின் உந்துதலால் திசை மாறிப் போன இளங்காளைகள் எத்தனை பேர். நமது சமூகத்தில் இவ்விஷயத்தில் பெண்கள் நிலை கொஞ்சம் தேவலாம். அம்மா, பாட்டிகள் மூலமாக சில விஷயங்களுக்கு விளக்கமாவது கிடைக்கிறது. அது அறிவியல் பூர்வமானதா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. அது வேறொரு முறை பார்க்கலாம்.

இதற்கிடையே பல முன்னணி பத்திரிக்கைகளில் (ஜீனியர் விகடன், தராசு, நக்கீரன் ...) பல்வேறு வைத்தியர்களின் (?) முழுபக்க விளம்பரங்கள் இன்னும் இவனை குழப்பியடிக்கின்றன. ஏதோ மஹாத்மா தேசத்தைக் காக்க டூர் போவது போல் இவர்களுக்கு பெரிய புரோக்ராம் வேறு. இவர்களின் விளம்பரங்களைப் பார்த்தால் வயிறெரியும். ஏற்கெனவே குழம்பியவர்களை இன்னும் குழப்பி, மீன் பிடிக்கும் இந்த நவீன மீனவர்களை நடு வீதியில் நிறுத்தி வைத்து காயடிக்க வேண்டும். (ஆமாம் அதை வைத்துதானே காசு பார்க்கிறார்கள்).

ஏதோ மாத்ருபூதம் போன்ற புண்ணியவான்கள் அவ்வப்போது அறிவைத் தெளிவுபடித்துகிறார்கள். அந்த லார்டு லபக்குதாஸின் நிகழ்ச்சி கூட வீட்டில் நிம்மதியாக பார்க்கும் சூழ்நிலை பல இல்லங்களில் இல்லாமல் இருப்பதுதான் நிதர்சனம். (குடும்பத்துடன் திரைப்படம் பார்க்கப் போய் காதல் காட்சிகளில் அப்பா தொலைத்த காலணா காசு தேடியதுண்டா? ஹி ஹி. ஐயய்யோ அனாமிகாவிற்கு கமெண்ட் போட ஐடியா கொடுத்துட்டேனே)

இதற்கெல்லாம் ஒரே வழி பாலியல் கல்வியை முறையானபடி கற்பிப்பதுதான். "சொல்லித் தெரிவதில்லை இதெல்லாம்" என்று நடுத்தர வர்க்கம் நாகரிகம் பேசக் கூடும். (மேல் மட்டமும், கீழ் மட்டமும் எப்போதுமே, எதற்குமே விசனப்பட்டதில்லை. பாழும் நடுவர்க்கம் மட்டும் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் சே...)

ஐயன்மீரே! நாமக்கல்தான் இப்போ நம்பர் 1. லாரி போக்குவரத்தில் இல்லை. உயிர்க் கொல்லி நோயான எய்ட்ஸில்.

இன்னும் எத்தனை நாட்கள் காந்தாரியாகவே கண்களை கட்டியிருக்கப் போகிறீர்கள்? பிள்ளைகள் அனைவரையும் பலி கொடுக்கும் வரையிலா?

Thursday, June 24, 2004

கவிதைக் குசும்பு (ஙொப்ரான நான் எழுதியது)

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

மலர்கள்
தேனீக்களுக்கு
மதுவைத்தருவது
மகரந்த சேர்க்கைக்குத்
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

மரங்கள்
காற்றுக்கு
தலையசைத்தது
பகலவனுடன் ஒளிசேர்க்கைக்குத்
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

நதிகள்
மணலுக்கு
ஆற்றுப்படுத்தியது
கடலை தேடித்
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

தோணிகள்
ஆற்றை
துழாவியது
தள்ளிப்போகும் ஒத்திகை
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

சுயம்வரங்கள்
மணாளனை
தேர்ந்ததெடுத்தது
ஒத்திகையான ஒப்புக்குத்
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

நீங்கள் (?!)
என்னை
நட்புறவாடியது
என்நண்பனிடம் காதலால்
தானென்று

எனக்குத்
தெரியாமல் போய்விட்டதடி

Wednesday, June 23, 2004

கதை - பகுதி 2

ஆணாகிய பெண்ணின் கதை (சொந்த சரக்கு)


கொஞ்சம் வித்தியாசமாய் இப்போ மனைவி கணவன் மேல பொறாமைப்பட்டு கடவுள கூப்பிட, அவரும் பால் மாறாட்டம் (Sex Change) பண்ணிட்டுப் போயிட்டாரு. ஒரிஜினல் கணவன் பாவம் ஒரு தலைமை மென்பொறியாளன்...(ரொம்பத் தேவை) அதுவும் ஒரு கொன்டிராக்டர்...! (Contractor)

நேற்றய வேலையில் (அட வீட்டு வேலைப்பா...) களைத்திருந்த மனைவியான கணவன் மறுநாள் சீக்கிரம் துயிலெழுந்து, அவதியாக அலுவலகம் புறப்பட்டார். வழக்கம் போல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து, ஆமை வேகத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தால் 5 குரல் செய்திகளும், 50 மின் செய்திகளும் காத்திருந்தன.

வேலை பார்க்கும் புராஜெக்டில் வழக்கம் போல அதீத செலவீனம் (over budget) ஆனதால் எப்போது வேண்டுமானாலும் ஆப்பு அடிப்பார்கள் என்ற டென்ஷன். அடப்பாவிகளா இப்போதுதானே வீடு வேற வாங்கினேன்...நினப்பே வயிற்றில் பயப் பந்தாய் கண்டபடி உருண்டது.

சரி வேலைய பாக்கலாமென்று நினைத்தால் நெட்நொர்க் நத்தை வேகத்தில் நகர்ந்தது. முதல் மின்னஞ்சலோ ஆப்-ஷோர் குழுவின் யூனிட் டெஸ்ட் டுபுக்கு ஆன நல்ல செய்தியைச் சொன்னது. அப்பவே நினைச்சேன்...ரோட்டுல ஜாவா புத்தகம் வெச்சிருந்த ஒரே காரணத்துக்காக வேலை கொடுத்த கம்பெனியின் மீது கண்டபடி கடுப்பு வந்தது. உங்களோட ப்ளெண்டிங் ரேட்டுக்காக என்னைப் போட்டுப் பாத்துட்டாங்களே...வெள்ளைக்கார மேலாளரின் லொள் லோள் கேட்கத் தயாரானார்.

இருந்த டென்ஷனில் CDN Session password மறந்து போனது. இழவு எத்தனை எத்தனை "நுழைவுச் சொற்கள்"? Lap top, mainframe, VPN (இதிலேயே ரெண்டு), Lotus Notes, வார மணி போடுறதுக்கு ஒண்ணு, சம்பளம் பாக்க...இது போக சொந்த விஷயத்துக்காக MSN, Yahoo, Blog, Bank, Insurance, car rental, hotel reservation, Frequent Flier, Credit Card account (இது ஒரு மினிமம் நாலு), Monster, Hotjobs, Kumudam, Personal Website FTP account, House Alarm, car alarm, cell phone account, Current bill account, cable account...அனுமார் வால் போல நீண்டு கொண்டே போனது. கொடுமை என்னவெனில் ஒவ்வொருத்தரும் நுழைவுச் சொற்கள் உருவாக்க விதவிதமான விதிமுறைகள் வைத்திருந்தது. இந்த லட்சணத்தில் 30 நாளுக்கொருமுறை நுழைவுச் சொற்களை மாற்ற வேண்டி வந்ததுதான். வெறுத்துப் போய் மஞ்சள் "Stick-it" லேபெல்லிருந்து பாஸ்வேர்டு கண்டுபிடித்து லாக்-இன் செய்ய...முதலாம் முடிவில்லா மீட்டிங் செல்ல வேண்டி பாக்கெட் கணிணி கதறியது.

இன்றைக்கு நீ எப்படி இருக்கிறாய்? உனது வாரக் கடைசி எவ்வாறு கழிந்தது? இன்றைய வானிலை எப்படி இருக்கிறது? போன்ற அறிவுப்பூர்வமான கேள்விகளுடன் ஆரம்பித்த மீட்டிங் வேறு வழியின்றி யூனிட் டெஸ்ட் டிஸ்கஷனுடன் முடிந்தது. பாவிப்பயலுகளா வேலை பாக்க விடுங்கடா...மதிய உணவு இடைவேளையில் லஞ்ச் பாக்ஸ் மறந்தது ஞாபகம் வந்தது. எல்லாம் த(எ)ன் நேரம். கபேடேரியாவில் உப்பு உரைப்பில்லாத உணவை அவசரமாய் மேய்ந்து (சாலட்பா...) வரும் வழியில் மூச்சா போகலாமென்றால் ஏதோ மெயிண்டனென்ஸ் காரணத்தால் ரெஸ்ட் ரூமை மூடியிருந்தார்கள். ஓ...கெட்ட வார்த்தையுடன் மேல்தளத்திற்கு மூச்சிறைக்க ஓடி ஒரு வழியாய்...

மதியம் ஸ்டேடஸ் ரிப்போர்ட், பட்ஜெட் ரிப்போர்ட் இத்யாதிகளை முடித்தார். சொல்ல வேண்டியதேயில்லை. அதற்குள் ஆயிரம் போன்கால்கள், ஆயிரமாயிரம் இ-மெயில்கள். மாலை வரும்போது அவர் நிலைமை ...OVER WORKED, DRAINED, BORED TO THE CORE...

வீட்டிற்கு போகலாமென காரை ஸ்டார்ட் செய்தால் சனியன் பிடித்த பேட்டரி காலை வாறியது. ஓட்டிப்போக வேண்டிய வண்டியை ஒரு வழியாய் கட்டி இழுத்து இல்லம் அடைந்தபோது இரவு மணி 8:00. குழந்தைகள் ஆவலுடன் கட்டியணத்தபோது இன்பத்திற்கு பதில் லேசான எரிச்சல்தான் வந்தது. அம்மா சமைத்தது போரடிக்கிறது என்று குறை வேறு. அவசரமாய் கைகால் கழுவி, வாடகை டாக்ஸி பிடித்து அருகேயிருந்த ரெஸ்டாரண்டில் மதியம் போல் அறுசுவை உண்டி (?)அருந்தி இல்லம் திரும்பும்போது செல்போன் சிணுங்கியது. ஆப்-ஷோர் (அட இந்தியாங்க...) லின்க் வேலை செய்வதாகவும், ஆனால் சர்வர்களை அணுக முடியவில்லை என்ற மிக நல்ல செய்தி சொன்னார்கள். நள்ளிரவு ஆந்தையாய் செய்வன திருந்தச் செய்து விட்டு படுக்கையை அடைதால் திருமதி நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள்.

அப்புறமென்ன...கடவுளை திரும்பி அழைத்து, "சாமி அவசரப்பட்டுட்டேன். அவா அவா இடத்திலேயே நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். மாத்தி வுட்டுடுங்க ராசா" என்று வேண்டுகோள் வைத்தார்.

கடவுளும், "மாற்றி விட ஆசைதான். ஆனால் இன்றைக்கு உனது வேலையில் மிகவும் மனம் மலர்ந்த வெள்ளைக்கார மேலாளர், காண்டிராக்டை நீட்டித்து விட்டார். ப்ராஜெக்ட் முடியும்வரை உன்னை மாற்ற இயலாது. மன்னித்துவிடு மகராசி" என்றபடி மாயமானார்.

பி.கு. 1. Praise thy Lord and do not have wisecracker ideas.
பி.கு. 2. வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை பார்க்கும் ஆண் மற்றும் பெண்களுக்கான படிப்பினை இதுவல்ல...

Friday, June 18, 2004

கதை : பகுதி - 1

பெண்ணாகிய ஆண் (கேட்ட கதை)


கணவனுக்கு நினைக்கையில் பற்றிக்கொண்டு வந்தது. தினமும் 8 மணி நேரம் அலுவலகத்தில் அல்லற்படுகிறோம். மனைவியோ வீட்டில் ஜம்மென்று வாழ்வதை நினைக்கையில்தான் பற்றிக்கொண்டு வந்தது. உடனே கடவுளிடம், " இறைவா நான் படும் துன்பம் என் மனவிக்குப் புரிய வேண்டும். அதற்காக என்னை பெண்ணாகவும் அவளை ஆணாகவும் ஒரு நாளக்கு மாற்றிவிடு" என்று வேண்டிக்கொண்டான். கடவுளும் ததாஸ்து என்றார்.

மறுநாள் மனைவியான கணவன் எழுந்து, கணவனுக்கு காலை உணவு சமைத்து, குழந்தைகளை எழுப்பி, பள்ளிக்கு தயார் செய்து, காலை உணவூட்டி, மதிய உணவு கட்டிக்கொடுத்து, பள்ளியில் விட்டு வந்து, துணி துவைத்து, இஸ்திரி போட்டு, வங்கியில் காசு போட்டு, மளிகை வாங்கி, பூனை/நாயைக் குளிப்பாட்டி நிமிர்ந்தபோது மதியம் மணி 1:00.

மெத்தையை சரி பண்ணி, கார்பெட் சுத்தம் செய்து, சமையலறை சீர் செய்து, பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து, அவர்களுக்கு மாலை சிற்றுண்டி கொடுத்து, வீட்டு வேலைக்கு ஒத்தாசை செய்து, இரவு உணவுக்கு ஆயத்தம் செய்ய ஆரம்பிக்குபோது மணி மாலை 4:30.

உருளைக் கிழங்கு தோல் சீவி, மீன் கழுவி, பீன்ஸ் நறுக்கி சமையல் தயார். இரவு உணவு முடிந்ததும் மறுபடி சமையலறையை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவப்போட்டு, துணிகளை மடித்து வைத்து, குழந்தைகளை தூங்க வைத்து ஸ்... அப்பாடா...வென நிமிர்ந்தால் இதோ கணவன். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோடா செல்லம் என்று ஒருவழியாய்.... இணைந்தார்கள்.

விடிந்தும் விடியாததுமாய் மனைவியாய் மாறியிருந்த கணவன் கடவுளிடம், "மன்னிச்சுக்கோங்க பாசு. செய்வது அறியாமல் சிறுபிள்ளைத்தனம் செய்து விட்டேன். மனைவி மேல் இனி பொறாமைப்பட மாட்டேன். ஒரு நாள்லேயே பெண்டு கழண்டு-டுத்து. மறுபடியும் மாத்தி வுடுங்க சாமி"னு கெஞ்சினான்(ள்).

கடவுள்," இது உனக்கொரு நல்ல படிப்பினை. உனை மறுபடியும் மாற்ற ஆசைதான். ஆனால் அதற்கு நீ இன்னும் 9 மாதம் பொறுத்துக் கொள்ள வேண்டும். நீ நேற்று இரவு உண்டாகி விட்டாய்" என்றார்.

பி.கு. பகுதி - 11 வரட்டும் பாசு. அத நானே எழுதி இருக்கேனாம்....
தமிழ் குசும்பு -- தொடர்ச்சி

அதென்னா நெட்ல தேடறதுன்னு நானே ரோசிச்சு எழுதுனது இது:

சிறுவன் (பிறந்து 20 வயது ஆகும் வரை)
இளைஞன் (20 - 25)
கலைஞன் (25 முதல் கல்யாணம் கட்டும் வரை)
வளைஞன் (கல்யாணத்திற்குப் பின் எப்போதும் மனைவிக்கு வளைந்தே இருப்பதால் - 40 வயது வரை)
அறிஞன் (40 - 50)
மூதறிஞன் (50'திலிருந்து ....)
தமிழ் குசும்பு

பெண்ணுக்குப் பல பெயர்கள். நீங்க சொல்றீங்களா? என்னங்க சொல்றீங்க?

சினேகிதி, பாக்யா, தாய் ... அப்புறமென்ன ... அவள் விகடனா? நாசமாப் போச்சி.

குமரி, மங்கை, நங்கை, அரிவை, தெரிவை, பேதை, பெதும்பை, பேரிளம்பெண் என ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு பெயர்.

அது மாதிரி ஆம்பளைங்களுக்கும் உண்டான்னு தெரியலை. நானும் நெட்டிலே தடவிப் பாத்துட்டேன். கிடைக்கிறவா சுட்டியோட குடுங்கோ !!! புண்ணியமாப் போவும்.
ஆங்கிலக் குசும்பு

அந்த ஆங்கிலப் பாடல்:

Jack and jill went up the hill
to fetch a pail of water
Jack fell down and broke his crown
and jill came tumbling after!!!

கண்டு பிடித்த துக்காராம் அண்ணாவுக்கு ஜே! ஆமாம் துக்காராம் உங்களுக்கு தமிழ் தெரியுமா?