Tuesday, May 31, 2005

கழு(த்)தை அறுக்கும் கவிமாலைகள்

நாட்டிலொரு கவித்திருவிழா
காட்டுவாசிகளாய்ப் போன கவிஞர்களின் 'கக்கும்' திறனையும்
போனால்போகிறதென அங்கீகரிக்கின்றன நாட்டு (அ)சிங்கங்கள்
கவிஞர்கள் கூடி 'கக்கி'க் கொல்கின்றார்கள்
புதிதாய் எழுதிய கவியைப்பின்னிச் செய்த மாலையைச் சுழற்றி
அங்கீகார அரிப்பெடுக்கும் தினவு'வெடுத்த தோள்களில்
சாரைப்பாம்புகளாய் இறங்குகிறது (அ)சிங்கம்
மேடையில் நின்றபடி

சென்னை டவுன்பஸ்ஸின் ஜீன்ஸ் சரசரப்புகளையும்
கலங்கரைகோபுர உச்சியிலிருந்து சேரிக்கட்டிலின் சமரசத்தையும்
நாரி'களின் கறுத்த'லியலையும் தொடர்ந்த மீள்பார்வைகள்
கழற்றாத கவிமாலை கழுத்தில் கதற
அறுத்துக் கிழித்து அலங்காரம் கலைய
(அ)சிங்கம் சுழற்றுகிறது

சட்டையிலிருந்து பிரிந்த பொத்தான்
ஓரங்களில் தேய்ந்துபோய் உருண்டு வீழ்கிறது தன்னைத்தானே
நொந்துகொண்டும் வெந்துகொண்டும்
உருண்டு ஓடும் பொத்தான்களைநோக்கி
செல்கின்றன தைய'லூசிகள்
வேறுநாதியற்ற நாதாரிகள் போல்
உபயோகமற்ற இக் கவிதைகள்மூலம்
தன் இயலாமையைக் காட்டமுயலும்
இந்த அசட்டு முயற்சிபோல்

குசும்பு வலைவழித் தெறிக்கிறது
விளைவுபாரா'மல் விடப்பட்ட பின்னூட்டம் போல்

-- சி(ந)க்கல் சிங்கம்

பின்குறிப்பு: என்னைப் பார் ;-) சிரி :-))

Monday, May 30, 2005

வீரபாண்டிய வலை(தமிழ்)ப்பொம்மன்

ஊசிக்(ஹி...ஹி...பின்'க்கு தமிழ்ங்க)குறிப்பு:

முன்னுரையே இல்லாமல் முடிவுரையா? ஆச்சரியமாக இல்லை. தீர்க்கதரிசனமாய் எப்போதோ எழுதிப்போட்ட வலைக்குறிப்பு. நமது பங்களிப்பாக ஒன்றுமே இலாவிட்டாலும் வலைப்பூ மாந்தர்காள் சுகுற்ரா கொஞ்சநாளா பூந்து விளையாடிக்கினு கீறாங்கோ. பின்னூட்ட வூடு கட்டி அடிச்சிக்கிறாங்கோ. எம்மாந்நாள்தான் outstanding கேப்டனா (புர்ச்சிக் கலைஞர் இல்லேண்ணா... அது நம்ம கங்குலி சாப்) இருக்றது? இதோ ஜீவனாய்ப் போற ஜோதியில 'அண்ணாச்சியாய்' (அல்வா கொடுத்த சரவணபவன் அண்ணாச்சிங்கோ... அல்வாசிட்டி அண்ணாச்சி இல்லேங்கோ) ஐக்கியமாறேன். எல்லாம் அவன் செயல்!

நௌப்ரானே சத்தியமாய் யாரையும் குறிப்பாவோ, குத்துமதிப்பாவோ போட்டுத் தாக்கல. சும்மனாச்சுக்கும் வெறும் குசும்பாவே எடுத்துக்குங்கோ!

முன்குறிப்பு

(கி.பி. 2050, சனாதன வருடம், சுத்த கேடி சன்யாசி மாதம், 'சனி'க்கிழமை. வர்ணாசிரம காலை குளிகை. தோசி ராசி. எம கண்டமும் ராகுகாலமும் இணைந்த திவ்ய நேரம். பழம் பஞ்சாங்கம். செம்மொழி பிரதோஷம். நியோநார்ஸிஸ்டு/பாஸிஸ்டு ஜலதோஷம்)

முன் மீள்பார்வைக் குறிப்பு

(வேற்றுக்கிரகவாசிகள் கிழக்கிந்திய வலைமணம் சங்கத்தை ஆரம்பித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த காலம். லேட்டஸ்டாக கோக்குத்துரை ஆட்சிபுரியும் காலத்தே வீரபாண்டிய வலைப்பொம்மன் என்ற பாளையத்தான் மட்டும் சவுண்டு கொடுத்க் கொண்டிருந்த அகாலம்)

இடம்: கோக்சூரியன் (கோக்'சன்' தமிழில்)துரை ஆபீஸ்

போட்டுக்கொடுப்பவன் (போ): (நீநீநீட்டி முழக்குகின்றான்) எம்மை வாழவைக்கும் கோக்குத்துரையே! தமிழகத்தின் செம்மொழியே! தங்கத் தமிழே! குங்குமச் சிமிழே! தமிழ்த் தாயின் தந்தையே! தமிழ் எழுத்தாளனின் தமையனே!
கோக்குத்துரை (கோ): (உறுமியபடி) சரி சரி சட்டு புட்டுன்னு முடி
போ: துரையே! வீரபாண்டிய வலைப்பொம்மன் உங்களை பேட்டி காண வருகின்றானாம். நாலாயிரம் நாதாரிகள், தம்பிமார்கள், மந்திரிமார்கள் (அதாவது அவனது புதல்வர்கள்) உட்பட பவனி வரப்போகின்றானாம்.
கோ: (கனைக்கின்றான்) வரட்டும். வரட்டும். வந்தென்னைப் பார்ப்பானா? தைரியம்தான் உண்டா?

(வீரபாண்டிய வலைப்பொம்மன் ரத, கஜ, புஜ பராரிகள் போன்ற இத்யாதிகளுடன் அவைக்குள் நுழைகின்றான்)

கோ: ஏதேது வெகுதூரம் வந்து விட்டீர்.
வீரபாண்டிய வலைப்பொம்மன் (வீ): நட்பு நாடி அழைத்ததாக அறிந்தேன். அதையே விரும்பி நானும் வந்தேன்.
கோ: நட்பூ வேண்டும். ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உம்மிடம்.
வீ: போட்டுக் கொடுக்குமினம் தமிழினம். அதைக் நீ கற்றுக்கொள்ளாமல் பேசுவது அறிவீனம்.
கோ: இரும்புத்தலையன் என்று எனக்குப் பெயர். என்னிடமே பேசுகிறாய்.
வீ: காயலாங்கடை சமாச்சாரம். பழைய இரும்பிற்கு பேரீச்சம்பழம் சாப்பிட்டவன் நான்.
கோ: ஏனைய பாளையக்காரர்கள் எல்லாம் வலைமண சங்கத்தில் சேர்ந்துவிட்டார்கள். ஜல்லியடித்து சாலை போட்டு பலனடைகின்றார்கள். நீ ஒருவன் மட்டும் ஜல்லியடிக்க மறுப்பதால் அது உனக்கு ஒரு லாபமா?
வீ: எல்லோரும் ஜல்லியடிக்கும் போது நான் ஒருவன் மட்டும் கில்லியடிப்பதால் அது உனக்கு ஒரு நட்டமா?
கோ: ஹேய். இவன் பேசத் தெரிந்தவன்
வீ: ஓம். பேசத்தெரிந்தவன். வெறும் பேச்சு மட்டுமல்ல. தமிழில் தூய பாசமுள்ளவன். வல்லவன். வாள் வீசத் தெரிந்தவன். ரதி'மூலம், ரிஷி'மூலம் தோண்டியெடுத்து கூட்டாஞ்சோறு சமைப்பவன். பொன்னாட்டு மக்கள் எங்கள் தென்நா(ஜா)ட்டு மக்கள். போரென்றால் 'புலி'க்குணம்! பொங்கும் இன்பக் காதலென்றால் பூமணம்! புகழுக்குறிய வலைப்பூக்களென்றால் உலகிற்கே ஒரே 'தமிழ்மணம்' என்று அறியப்படுத்தியவர்கள் நாங்கள். இங்கே நாடு பிடிக்க வந்த நீங்கள் நாய் வேடம் கட்டி வாலையாட்டி நக்கிக்கொண்டிருக்கின்றீர்கள்.
கோ: ஏய் நாய்ப் பேச்சு இங்கு வேண்டாம். நாய் நன்றியுள்ள பிராணி. நாயும், பூனையும் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளத்தான் நக்கிக்கொள்ளும்.
வீ: இதற்காக உன்னை சிங்கமென்று வருணிக்க மாட்டேன். அது அசிங்கம்.
கோ: கிழக்கே உதிக்கும் 'சன்' இருக்கின்றதே...அதுவும் எங்களைக் கேட்டுத்தான் எழும். விழும்.
வீ: ஆ...அந்தக் கதையெல்லாம் இண்டு விடாதே அப்பனே. 'சன்' வேண்டாமென்று ஒரு ஆணில்லை. பெண் விரட்டிய கதையெல்லாம் இங்கே ஏராளமாயுண்டு. வேண்டுமெண்டால் மூஞ்சிபுரத்திலும், கும்மியடிப்பூண்டியிலும் கேட்டுப்பாரும்.
கோ: கும்பெனியின் வியாபார வளர்ச்சிக்காக நீ பாடுபடவில்லை. ஏன் எவரிடமும் சிபாரிக்கவுமில்லை?
வீ: நடந்ததை நாடறிய சண்டப்பிரசன்னனே சொல்லட்டும். ஆஹா துடிக்கிறது மீசை. நட்பு நாடிவந்த உறவுமுறை தடுக்கிறது
கோ: என்ன மீசையையை முறுக்குகிறாயா? அது ஆபத்துக்கு அறிகுறி. அடையாளங்கள் தொலை(ந்)த்த சோகபுத்திரர் போல் உமது அடையாளமும் ஒழிந்துபோகட்டும்
வீ: ஆ...மானம் அழிந்து விடவில்லையடா மர'த்தமிழனுக்கு. என் மடியிலே கை வைத்த உனது தலை 'வெட்டிய மரமாய்' மண்ணில் விழட்டும்.
கோ: சொந்தப் பெயரில், குரலில் இப்படி கர்ஜிக்கின்றாயே பயமாக இல்லை
வீ: அனானிமஸாக அந்நியன் குரலிலும், identiy திருடி ஐயா குரலிலும் பேசுமளவிற்கு இன்னும் அனைவரும் தரம் தாழவில்லையடா. எதிர்ப்பு காட்டவேண்டுமென்றால் நேராகக் காட்டி தர்க்கம் செய்வேன். நேரமில்லாவிடில் ஒரு வரியாவது திட்டிவிட்டு அப்புறம் விரிவாய் வசைபாடுவேன். கீர்த்தியோ, அபகீர்த்தியோ கிடைப்பதை ஊரறியும். கிடைத்த இடத்தில் காலைத்தூக்குபனில்லை.
கோ: மீண்டும் நாய்ப் பேச்சு. அது என் கோபத்தைக் குத்துவதாகும்.
வீ: உணர்ச்சி உடையவனுக்குத்தான் கோபம் வரும். எங்களுக்கே எப்போதாவதுதான் வருகின்றது. உனக்கு வருபதாகக் கூறுவது பொய்.
கோ: மானங்கெட்டவனே! உனது சங்க சந்தாவையே ஏன் சங்காத்தத்தையே வெட்டி விடுவேன்.
வீ: வெட்டுவதும் பின் ஒட்டுவதும்தான் உனது முழு நேர பிழைப்பாயிற்றே. பிழைத்துப் போ நக்கினார்க்கினியனே!
கோ: மீண்டும் மீண்டும் நாய்ப் பேச்சு. கேப்டன் குமாஸ்தா (பாவம் இவர் அசலில் கேப்டன் கிளார்க்) டீ பிரேக்!!!

இடை'க்குறிப்பு:

எச்சரிக்கை: தலைப்பைப் பார்த்து ஏமாந்துவிட வேண்டாம். இது இணைய விளம்பரம். ஒரு இடை'ச்செருகல்.

கோ: உன் மீது குற்றம் சுமத்துகின்றேன்
வீ: என்னவெண்டு?
கோ: எடுத்துரைத்தால் எண்ணிக்கையில் அடங்காது
வீ: எண்ணிக்கை தெரியாத குற்றம்
கோ: எனக்கா எண்ணிக்கை தெரியாது. அகம் பிடித்தவனே சொல்கிறேன் கேள்.

இடை மீள்பார்வைக் குறிப்பு

விளம்பரம் முடி'கின்றது. வீரபாண்டிய வலைப்பொம்மன் என்ன குற்றங்கள்தான் செய்தான்? ஐடியாக்களை கமெண்ட்டுங்களேன். அடுத்த பதிவுல பா(தா)க்கலாம் ;-)