The Damn Thing
நிர்மூலமாகிய நிலப்பரப்பிருந்து
சட்டென் றெழுந்து வருகிறது
இழந்தகாலிரண்டை இழுத்தபடி
ஆற்றா வலியுடன் அலறும்
பிசுபிசு பெருவெக்கை
ஆள் தின் அதிர்ச்சி
பிளந்த நிலக்கண்
பொட்டு நீர் கூடப் போதும்
உள்நாக்கண்ணம் உயிர்பெறும்
உற்றுப் பார்த்தோமானால்
மிடுக்கு தோரணையிலொரு நரகாசுரத்தோற்றம்
மிடுக்கோடு செப்பி
மேலேவொரு தொப்பி
மேலோ ரிலச்சினை
பேர்ப்பலகை
பளபளக்கச் சீருடை
சொட்டாத விழியன்பு
பாலீஷான பாதுகை
கத்தைத்தாள்
மேடைஒலிபெருக்கி
கை(ப்)பற்றிக்
காதை மட்டும்
கிழித்து சுழற்றி
குரலொலி கடக்கும்.
ஊளைச்சத்தத்தில்
கூட்டப்பிணங்களுக்குள்
பின்னிப் பிணையும்
இன்னோர்
அங்கதனாய்
ஆதாமாய்
இழியனாய்
ஈயானாய்
உக்கிரனாய்
ஊழ்பிறவியாய்
எரிதனாய்
ஏற்பில்லாதவனாய்
மொத்தப்படித்தாரின்
மெத்த ஊழியனாய்
செரித்துக் கரைகழுவும்
கால் கசகசப்பு
பற்றாமலே
போகும்
ஓலை
பி.கு. வழமையான பதிவல்ல இது. இந்தியாவின் உதவியை வேண்டாமெண்டு உதறித் தள்ளிய பாக் அதிபருக்கான கண்டன கவிதை.
2 comments:
ஒரு மண்ணும் புரியலே!! சில ப்ரோக்கள் பதிவு மாதிரி இருக்கு! எனக்கு மட்டுந்தானான்னு தெரியல! :((
இன்னிக்கு இன்னும் எத்தன பதிவு பாக்கின்னும் ஒரு பதிவு போட்டுடுங்கோ குஷும்பரே... நல்லவேள, நம்ம சுரேஷ நட்சத்திரமா போட்டுட்டா. ஒம்ம போட்டிருந்தான்னா, பின்னி பிடலெடுத்திருப்பேள்னு நினக்கிறேன். :))
By the way, do you know that this blog is also removed from Tamilmanam alias tamilkushboo? Nagore rumi and his publisher Badri got pissed off at arokyam blog and Kasi got pissed off at this blog. off you go... chao...
Post a Comment