Tuesday, November 02, 2004

போதை எதிர்ப்பு

ஒரு காட்டிலே முயலொன்று சந்தோஷமாக துள்ளித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஒட்டகச் சிவிங்கி கஞ்சா அடிப்பதற்காக, ஜாயிண்டை சுற்றிக்கொண்டிந்தது. பதறிப்போன முயலானது,"ஒட்டகச் சிவிங்கியே! போதைப் பொருள் தீங்கு விளைவிக்கும். வா என்னுடன். சந்தோஷமாக காட்டைச் சுற்றி ஓடிவருவோம்", என்றது. சிவிங்கியும் மனது மாறி கஞ்சாவை எறிந்து விட்டு முயலுடன் ஓட ஆரம்பித்தது.

அவையிரண்டும் ஒரு யானையைச் சந்தித்தன. அப்போது யானை சுகமாக கோகெயினை உறிஞ்சும் முயற்சியிலிருந்தது. முயலோ வழக்கம் போல யானையிடம், "போதைப் பொருள் வேண்டாம். வா எங்களுடன். சந்தோஷமாக காட்டைச் சுற்றி ஓடிவருவோம்", என்றது. யானையும் சம்மதித்தது. மூன்று மிருகங்களும் ஓட ஆரம்பித்தன.

அப்போது ஒரு சிங்கம் போதை ஊசியை போட்டுக் கொள்ள தயாரானது. உடனே முயல் தனது பல்லவியை ஆரம்பித்தது. நிமிர்ந்து பார்த்த சிங்கம் ஊசியை கீழே வைத்து விட்டு முயலை சாத்து சாத்தென்று சாத்த ஆரம்பித்தது.

பதறிப் போன சிவிங்கியும், யானையும்," சிங்க ராஜாவே! முயலை ஏன் அடிக்கின்றீர்கள்? நமக்கு நல்லதற்குதானே சொல்லுகின்றது" என்று கோரஸ் போட்டன. சிங்கம் சொன்னது," என்னாது? இந்த முயலா? நமது நன்மைக்கா? எப்போ 'எக்ஸ்டஸி' போட்டாலும் முயல் இப்படித்தான். ஒரு அடிமுட்டாள் போல என்னை காட்டையே சுற்றி சுற்றி ஓட வைக்கும் படவா ராஸ்கல் இது" என்றது.

பி.கு. எக்ஸ்டஸி அமெரிக்காவில் மிகப் பிரபல்யமான போதைப் பொருள்.

No comments: