Tuesday, January 09, 2007

லக்கியே லுக்கு

நம்ம லக்கு என்னிக்குமே நம்மள சரியானபடி லுக்கு விட்டதில்லை என்று வருத்தப்படும் வாலிப, வயோதிக அன்பர்களே! உலகில் நீங்கள் தனியாக இல்லை. எப்பிடி நாம பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது ஆப்போஸிட் சைடுலேயே பஸ்ஸுங்க போகுமே... அந்த மாதிரி நம்ம லக்கும் என்னிக்குமே ஆப்போஸிட் சைடுலதான் ஆப்படிக்கும். லுக்கு வுடாத நம்ம லக்குல சில கொஞ்சம் உங்க பார்வைக்கும்:

1. ஏர்போர்ட்டுல செக்-இன் பண்ற கியூ அனாகொண்டா பாம்பு மாதிரி கெடக்கும்; குண்டான ஆசாமி ஆடி அசைஞ்சி சாவகாசமா எல்லாரோட குலம், கோத்திரம் விசாரிச்சு நத்தை வேகத்தில் நகரும் போது சுர்ருன்னு கோவம் சுழிவரை ஏறும்ல. அப்பப்பாத்து கியூவைத் தாண்டி அடுத்த கியூவுக்கு போக வேண்டிய ஆளுங்க 'எக்ச்சூச்மீ'ன்னு கரீக்டா நம்ம முன்னாடி கிராஸ் பண்ணுவாங்க பாருங்க... சூப்பரா இருக்கும். ஏம்ப்பா இம்பூட்டு பேரு இருக்கும் போது அதெப்பிடி கரீக்டா வயிறு, லக்கேஜ் எல்லாத்தையும் என் மேல வைச்சி இடிச்சிட்டு வேற போறீங்களேடா... போங்க போங்க நல்லாயிருங்க என்று மனம் எரிந்து வாழ்த்தினாலும், அவனுங்க தொப்பைகளை திருப்பித் தைக்காம, வெறுமனே கிழிச்சு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணத் தோணுதே! நான் நார்மலாத்தான் இருக்கேனா?
2. அடுத்தவருக்கு சேவை பண்றதையே கொளுகையா(?) வச்சி வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் நமக்கு எந்த பிளைட்டுல ஏறினாலும் மறக்காம திருப்பி திருப்பி சொல்ற வாசகம் ஒண்ணே ஒண்ணுதாங்க. 'கேபின் பிரஷர் கம்மியானா ஆக்சிஜன் மாஸ்க்கை மொதல்ல நீங்க போட்டுக்கிட்டு அப்புறம் அடுத்தவங்களுக்கு (ஏன் உங்க குழந்தைக்கே கூட) உதவுங்க'ன்னு சாக்லேட் குரல் ஸ்பீக்கரில் வழியும் போது எனக்கு பிரஷர் சும்மா ஜிவுஜிவுன்னு ஏறி அந்த சாக்லேட் தொண்டையை ஆசிட் ஊத்தி கழுவ விரும்புவது கொஞ்சம் ஓவரோ?
3. பிளைட்டில முன்னாடி அளந்து ஊத்தப்பட்ட ஆல்கஹால், காஸ்ட் கட்டிங்கில் காணாமல் போன கடுப்பில் இருக்கும் போது, காசு கொடுத்து வாங்கிய வராட்டி சாண்ட்விச்சையாவது ஆசையாக கடிக்கலாம்னு பாத்தா, முன்சீட்டு ஆசாமி முன்னெச்சரிக்கை கொடுக்காமல் சடாரென்று சீட்டை பின்னுக்குத் தள்ளுவான் பாருங்க...சாண்ட்விச்சை வுட்டுட்டு அவனோட கொரவலைய கடிக்கும் கொலவெறியை எந்த கொலசாமிக்கு கொலவ போட்டுக் கூவுறது?
4. "விமானத்தோட கதவுகள் மூடப்பட்டதும் செல்போனை ஆப் பண்ணுங்க"ன்னு குயிலாய் பணிப்பெண் கூவினாலும் "ம்ம்ம் என்னாது ஐஞ்சரை மணிக்கு, அதான் ஸார் 'சாடே சார் பஜே' கரெக்டா வந்துடறேன்னு சொல்லிடு" என்று கழுத்து நரம்பு முறுக்கேறியபடி சாமியாடி சத்தம் கொடுக்கிறவனைப் பாத்தா உங்களுக்கு என்னாத் தோணுங்ணா? நேக்கோ 'சாடே சார் பஜே'ன்னா தமிழ்ல நாலரை மணிடா பன்னாடை; ஹிந்தி தெரியலேன்னா வுட்டுடான்னு கத்திக் கொண்டே குத்தும் குத்தில் செல்போன் தொண்டைக்குழிக்குள் செருகிக் கொள்ள வேண்டுமென்று நான் நினைப்பது அதீத ஆசையா?
5. டேக்-ஆப் போது காது ஜவ்வு கன்னத்தைப் பாக்குற ஆசையோட ஆட்டம் போடும். முன்னாடியாவது எச்சி கூட்டி முழுங்க பப்பரமுட்டாயி தருவானுங்க. எஸ்ஸென்ஷியல் சர்வீஸ் வேணுமின்னா 'எச்ட்ரா மால்' வெட்டுற காலத்துல காதுல பஞ்சுக்கும் காசு அழவேண்டிய காரணத்தால் புள்ளைங்கள அழ விடுறானுங்க பெத்தவனுங்க சிலபேர். அப்புறமா எவனுமே சீந்தாத பிளைட் இன்பர்மேஷன் கார்டை எடுத்து வைத்துக் கொண்டு "ஹையா ஜாலி டாடி பிளைட் அப்பிடியே விழுந்தா, லைப்ஜாக்கெட் போட்டுண்டு, பிளேன் விங்குல ஸ்லைட் பண்ணி, போட்டுல போலாமே?" என்று குழந்தைகள் மங்களகரமாகக் கூறி மாஞ்சாவை செக் பண்ணும் சுபவேளையில் "இல்லடா கண்ணா இந்த செக்டர்ல, வழியில ஓஷனே கிடையாது. அதுனால போட்டுல போக முடியாது"ன்னு அப்பன் பொது அறிவைக் காட்டிக் கலக்கும்போது, எமர்ஜென்ஸி எக்ஸிட்டைத் தொறந்து அந்தாளை எமலோகம் அனுப்ப அவாவாக உள்ளது என்னவகை?
6. அவசர அவசரத்துக்கு ஒண்ணுலேர்ந்து பத்து வரை எண்ணி ஆத்திரத்தை வேணா அடக்கலாம். ஆனா பிளைட்டுல எடுத்துட்டுப் போகக்கூடாதென்ற சட்டத்தால் ஐஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி வாங்கின அரை லிட்டர் பிஸ்லரியை செக்யூரிட்டி செக்கப்போ அவசர அவசரமா குடிச்சதால முட்டிக்கிட்டு வர்ற மூச்சாவை அடக்கி வைக்க முடியுமா? உடம்புல இதுவரை ஏறின உஷ்ணம் நீரையும் கடுப்பாய் வெளியேற்றுமேங்ற அனுமானத்துடன், சன்னமா அடக்கி இறக்கலாமெனும் எண்ணத்துடன், ரெஸ்ட்ரூமை அணுகினால்... முன்னாடி போன நாதாரி கரெக்டா கண்ட இடத்தையும் நாஸ்தியாக்கிருப்பான்... நாத்தம் கொமட்ட அவன் செஞ்சதை க்ளீன் பண்ணிட்டு, சைடுல நம்ம வேலையை முடிக்கிறதுக்குள்ள 'டொக் டொக்'ன்னு கதவைத் தட்டுவானுங்க பாருங்க... நாம வெளியே வரும்போது அவனுங்க வுடுற லுக்கு வேற இருக்கே... என்னமோ கவர்மெண்டு பஸ்ஸுல டிக்கெட் எடுக்கச் சொன்ன கண்டக்டரை முறைச்சுப் பாக்குற டிராபிக் போலீஸ் பார்வை பணால்ங்கண்ணா... இந்த மொள்ளமாறீங்களை பெறந்த மேனியாக்கி பெட்ரோல் பாம் போடத் தோணுதே... நியாயந்தானே?
7. பறக்கும் நேரத்தையாவது பதுவிசா பயன்படுத்தலாமேன்னு ஆசை ஆசையாய் லேப்டாப்பை எடுத்து பதிவொன்றை நொட்டிக் கொண்டிருக்கும் போது, ஒட்டகச்சிவிங்கியாய் ஒரு மணி நேரம் கழுத்தை அசையாமல் எட்டிப் பார்த்த பக்கத்து சீட்காரன் "Oooh you can type in Tamil? ஆனா ஏன் இப்பிடி புரியாத மாதிரி எழுதுறீங்க?"ன்னு பதிவு பப்ளிஷ் ஆகுமுன்னரே இலவச பின்னூட்டம் விட்டு சதாய்க்கும் போது என்ன செய்யலாம்? மொன்னக் கத்தியால் ஹலால்தான் தீர்வுன்னு நாஞ் சொல்றேன். நீங்க என்ன ஷொல்றேள்?
8. ஐதர் காலத்து படத்தை, காசு கொடுத்து இயர்போன் வாங்கிப் பார்க்க வேண்டுமா என்ற அலுப்பில், செத்த நாழி கண்ணை மூடி ரெஸ்ட் எடுக்கலாமுன்னு பாத்தா, போர்டபிள் சிடி பிளேயரைப் போட்டுக் கொண்டு அரதப் பழசு கோவிந்தா பாடலை "Mumy Dady ஓ மம்மி மம்மி ஓ டாடி டாடி"ன்னு உலகத்துக்கே கேக்குற மாதிரி சீட்டு நுனிக்கு வந்து பாடுறவனை ஏன் என்னால ரசிக்க முடியல? ஒருவேளை நாப்பது வயசு அனுபவ குனத்தை அடைந்து விட்டேனோ? இல்லே அந்தப் பிளேயரைப் பிடுங்கி, சிடியை வெளியே எடுத்து கிரெடிட் கார்டை தேய்க்கிற மாதிரி அவனோட பின்புறத்தில் அந்த அந்தரங்க ஏரியாவுல "ஸ்வைப்" பண்ண கை பரபரங்குதே... இது இயல்பான ரியாக்ஷனா?
9. சாக்லேட் குரலில் இனித்தாள்; குயிலின் கூவலில் கொஞ்சினாள்; மிஞ்சியதென்ன? ஏமாற்றம் வெறுப்பு கலந்து "பிளைட் நின்ன பின்னாடி சீட்டு பெல்ட்டைக் கயட்டி, அப்பாலிக்கா மேலே இருக்கிற லக்கேஜை எடுங்கடா எடுபட்ட பயலுவளா"ன்னு கொஞ்சம் டீசன்ஸி கலந்து சொன்னாலும், பிளைட் பிரேக் போடுறதுக்குள்ள எகிறிக் குதிக்கும் மக்கள்ஸை என்னான்னு சொல்வேனுங்கோ? வெளிநாட்டுல ஒயுங்கா கியூவுல நிக்கிற இதே 'பாடு'ங்க இந்தியாவுல செய்யிற சேட்டை இருக்கே? ஜனநாயகம்னு சொல்வானுங்க... இவனுங்களை சந்தியில மவனே ஜட்டியோட ஓடவிட்டு 'பொளிச்சு வைச்சு அடி'ன்னு ஞான் பறைஞ்சது சரிதன்னே ஸாரே?
10. 'குட்டைப் பாவாடை விளக்குக'ன்னு கேட்டா நடிகை ஷ்ரேயான்னு இப்போ சிம்பிளாச் சொல்லிடலாம். அது அவாளோட விருப்பம்; போட்டுண்டு வரா. ஆனா வேற வழியில்லாம குட்டைக்கு சூப்பர்லேட்டிவ் டிகிரியாய் உலா வரும் பிரைவேட் விமானப் பணிப் பெண்களைக் கண்டால் பாவம் ஸாரே! அவாளோட ஏர்போர்ட்-ஹோட்டல் கம்யூடேஷனனுக்கு கூட இப்போ ஏர்லைன்ஸ் காசு தர்றதில்ல. அவாஅவா சொந்தக் காசுலதானாம் கம்யூடேஷன், கருமாந்திரம் கூட. கிடைச்ச பைக்குல பில்லியன் ரைடுல கஷ்டமாய் ஸ்கர்ட்டை இழுத்துவிட்டு இழுத்துவிட்டு அவர்கள் போகும்போது கிங்பிஷர் மல்லையாவுக்கு ராவோட "ராவா" Vagir பீரு கொடுத்து மட்டையாக்கும்ங்ற பீலிங் என்னைப் பொறுத்தவரை "Best கண்ணா Best". என்ன ஓகேவா?
11. எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு நிம்மதியாப் போலாமுன்னு ஆட்டோ புடிச்சா அங்கயும் தொடருது அஷ்டமத்து சனி. 'ஸார் செல்வி சீரியல் பாத்தீங்களா? தாமரை செத்ததை போட்டோவுல மாலை போட்டுத்தானே காமிச்சாங்க? பாடியைக் காட்டல சார். அரசியிலாவது காட்டுவாங்களா ஸார்?'ன்னும்போது இவன் அப்பாவியா கேக்குறானா? இல்லே அங்கதமாக் கேக்குறானான்னு தெரிஞ்சுக்க முடியாம ஒரு தவிப்பு வரும் பாருங்க... ஆட்டோவோட ஸ்டார்டிங் ராடை பிடுங்கி எடுத்து அப்பிடியே வெவகாரமான இடத்துல சொருகத் தோணுதே... நான் ரொம்ப முன்கோபியா?

எப்பிடியோங்க... 'ஏர் பயணம் ஹேர் ரைஸிங்'னாங்க. ஒரு பயனத்துலேயே உடம்புல எல்லா மசுரும் கஞ்சி போட்ட காக்கி யுனிபாரமா ஆகிப்போச்சுதுங்ணா. இது தீர ஒரே வழி லக்கி என்னை லுக்கு வுடறுதுதான். இல்லே மவனே ஒரு லேடி லக்குகிட்ட போயிடுவேன் ஆமா. ஹிஹிஹி அது மட்டும் மாட்டேன்... என்னா நமக்கு மட்டுமில்ல நம்ம லக்குக்கு கூட ஆப்படிக்கும் வல்லமையான ஒரே ஆளு லேடிதானுங்களே !!!

பிகு: இப்பதிவிற்கும் லக்கிலுக் என்ற பதிவருக்கும் சம்பந்தமேதுமில்லை! ஹப்பாட கொஞ்சம் நிம்மதி!!!

11 comments:

Unknown said...

அதென்னவோ இப்ப எல்லா விமானத்திலும் அரை கிழவிகளையே ஏர்ஹோஸ்டசா போடறாங்கன்னு நானே நொந்து கிடக்கேன்.நீங்க வேற சாக்லெட், குயில்,மயில்ன்னு அடிச்சு விடறீங்களே,நியாயமே குசும்பரே இது?:-))

மத்தபடி பதிவு சூப்பர்.நல்ல நகைச்சுவை

குசும்பன் said...

அது சரி அமெரிக்க ஏர்லைன்ஸ்ல அதிகம் போயிருக்கேள் போலருக்கு செல்வன் :-) மத்தபடி நம்ம லோக்கல் கிங்பிஷர் வாங்கோங்கோணா. அது ஒரே கிக்பிகரா இருக்குங்ணா ;-)

Unknown said...

குசும்பன்,

நல்ல தகவல் தந்தீர்கள்.அடுத்த தரம் வரும்போது சகாரா,ஜெட் எல்லாவற்ரையும் ஓரம் கட்டிவிட்டு கிங்பிஷருக்கு மாறிவிட வேண்டியதுதான்.

Unknown said...

தலைவா,

இந்த பதிவும் சரியா தெரியலை.பயர்பாகிஸில் தமிழ்ஃபாண்ட் இல்லாததால் அதை பயன்படுத்துவதில்லை.எக்ஸ்ப்ளோரர் தான்.

லக்கிலுக் said...

குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே? :-)))))))))

குசும்பன் said...

செல்வன்,

என்ன ஆபரேடிங் ஸிஸ்டம் உங்களது? கொஞ்சம் சொல்லுங்கள். செக் பண்றேன்.

குசும்பன் said...

லக்கியாரே!

குற்றமொன்றுமில்லை. குசும்புதானுங்க எப்போதும் ;-))))))

Unknown said...

Thalaiva,

It's clearly visible now.Thanks

ரவி said...

உங்க பதிவுக்கு ஒரு வெளம்பர பதிவு போடலாமாங்னா ?

குசும்பன் said...

ரவித் தம்பி,

ஏன் நான் நல்லாருக்கிறது புடிக்கலியா? ;-))))

வெளம்பரம் தானே நல்லா போட்டுடுங்கோ!!!

:-)))))

rv said...

குசும்பரே,

//"பிளைட் நின்ன பின்னாடி சீட்டு பெல்ட்டைக் கயட்டி, அப்பாலிக்கா மேலே இருக்கிற லக்கேஜை எடுங்கடா எடுபட்ட பயலுவளா"ன்னு கொஞ்சம் டீசன்ஸி கலந்து சொன்னாலும்,//
:))))))))))))))))))))

சூப்பரு பதிவு..

அப்புறம் ஜெட்டு, ஸ்பைஸுலயும் நல்ல குட்டிங்க தான்பா...