Wednesday, January 31, 2007

அன்புள்ள நைனாவுக்கு

ஏதோ பாரீன்ல நான் சந்தோஷமா இருக்கேன்னு நீ நெனைச்சா அது எங்குத்தமில்ல. நெஞ்சு கெடந்து ஒல கெணக்கா கொதிச்சுக் கெடக்கு. இப்போ இன்னா நடந்து போச்சுன்னு ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கிறேன்னு தாவாங்கொட்டையில கையை வைச்சிருப்பியே? சொல்றேன் கேளு...

சாதிச் சட்டமைப்போட நாம காலந்தள்ளின காலமெல்லாம் எங்கே கரைஞ்சு போயிடுமோன்னு கலக்கமா இருக்குது நைனா. ஏதோ நாடா இழுத்தாலும் நஷ்டப்படாம, கைகோலன்னாலும் காலால நீ கால்கோள் போட்டுட்ட. பருத்திலேர்ந்து பட்டுக்குப் போனாலும் பாவு சப்ளையை கெட்டிக்கா பிடிச்சிக்கிட்டு நீயும் தாத்தாவும் இருந்த பொற்காலத்த நெனச்சி நெனச்சி எனக்கு வவுத்துல ஆசிட் எக்குத்தப்பா எகிறிப்போச்சி நைனா. அசிடிட்டி'ன்ன வொடனே சீமைச்சாராயத்தை உனக்கு நெனக்கத் தோணுமே? உன்னச் சொல்லி குத்தமில்ல ஆக்காங்.

"எலேய் நாமெல்லாம் ஒரு காலத்துல கீழே கெடந்தோம்ல. இனிமே இப்பிடியே கெடக்கக்கூடாது. நல்லா நாலு எழுத்துப் படி"ன்னு நீ என்னோட சின்ன வயசுல பினாத்துனதெல்லாம் ஏதோ லோக்கல் சரக்கோட சைடு-எபெக்டுன்னு நான் நெனச்சிட்டு இருந்தேன். அப்புறமாத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளங்குனது. "நாலெழுத்து... அதயும் நல்லாப் படிச்சாத்தான் நம்மள அடக்குனவன நாம அடக்கலாம்"னு ஒரு வரி சொன்னாலும் திரு வரியா, அதையும் பூடகாச் சொன்ன பாரு...அது இப்பத்தான் வெளங்குனது.

இப்பப் பாத்து பிளாக்குல படிச்ச ஒரு பதிவோ, பின்னூட்டமோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது. ஒரு பாப்பான் (அட பிராமணாள் நைனா) லண்டன்ல எறங்கினானாம். அப்போ ஏர்போர்ட்டுல ஒரு பாலீஷ் போடறவனப் பாத்து ஒரே ஷாக்காம். ஏன்னா அவன் ஒரு வெள்ளைக்காரனாம். "ஏண்டாப்பா எங்களை 200 வருஷம் அடிமையா வைச்சிருந்தேல்ல வா இங்கன வந்து பூட்ஸைப் பிடிச்சி ஒரு பாலீஷ் போடு"ன்னு ஷ்டைலா பூடீஸைக் காமிச்சு அதையே போட்டாவாவும் புடிச்சிக்கிட்டானாம். இப்ப சொல்லு நைனா... அடிமையா இருந்தவன அடங்க வைக்கிறதும் பாப்பார யுக்திதானே? அப்ப நீ எனக்கு சின்ன வயசுல சொன்னது என்னா யுக்தி? ம்ம்ம்ம் அதுவும் கூட ஒரு பாப்பார யுக்திதான்னு எனக்குப் படுது. என்னத்தச் சொல்றது? இன்னிக்குப் பாப்பானை அடிக்கவும் பாப்பார யுக்திதான் பயன்படுது போல. அத்த வுடு. மேட்டரு என்னான்னா அந்த யுக்தியாலதான் இன்னிக்கு இம்பூட்டு கஷ்டமே. மேல சொல்றேன் கேளு.

சரி ஒரு மார்க்கமா இந்தியாவுல படிச்சுக் கிளிச்சுப்புட்டு எக்குத் தப்பா பாரின் வந்தேன் பாரு... ஒரே போரு நைனா. அதுவும் தமிழ் ப்ளாக்கைப் படிச்சேன்னு வையி... கடிவாளம் பூட்ட குருத மாதிரி புத்தி ஒரே வழியிலதான் ஓடும் நைனா. கம்ப்யூட்டர் படிச்சவன் கூட இங்கன ப்ரோக்ராம் சரியா ஓடலேன்னு வையி... அந்த ப்ரோக்ராமை எழுதினவன் பாப்பான்னு வையிறான். இங்கன அந்த அளவுக்கு கிலி ஆட்டிப் படைக்குது.

அட இவ்வளவு ஏன்? ஒரு வெள்ளைக்கார மேனேஜர் திட்டுனாக் கூட அட வெள்ளைக்காரனும் பாப்பான் மாதிரி பாரின்ல வந்தேறிகள்தானே அதான் திட்டுறான்ங்ற லெவலுக்கு புத்தி போகுது. ஒரே பேஜாரு நைனா.

இங்க எல்லாப் பயலுவோலும் கொஞ்சமாவது படிச்சிருக்கானுங்க. அன்னிக்குப் பாருங்க ஹஷ்-பப்பி பூடீஸுல ஒரு சின்ன தையல் பிரிஞ்சு போச்சி. சக்கிலிமாரு யாராவது ஆப்படுவாளான்னு பாத்தா பெரிய ஷோரூமு வைச்சிக்கினு உக்காந்திருக்கானுங்க வெள்ளைக்காரனுங்க. ஒரே ஒரு கொடையை கமித்திக்கினு தேய்ஞ்ச கல்லுல ஓங்கி ஓங்கி அடிச்சுத் தைக்கிற ஆளுங்களே இங்க இல்ல.

அது சரி பாத்ரூம்பு கழுவ ஆளு ஆப்படுவானான்னு பாத்தா ஸ்பானீஷ் பாஷ பேசிக்கினு டப்பான்னாலும் காருல வரானுவ. அவனுக்கு கொடுக்குற காசுல நம்மூரூல நாலு தோட்டிமாருங்க குடும்பம் நட்டுக்கினு மாசத்துக்கு சாப்பிடும். ஒழியுதுன்னு போன்னு நானே கழுவி விட்டுக்கினேன். நம்புவியா நீ?

நம்மூரு மாதிரி கான்கிரீட் கொட்டியா வீடு கட்டுறானுங்க இங்க? எல்லாமே தக்கைதான். கொஞ்சூண்டு மப்புல காரை பார்க் பண்றேன்னு பிரேக் அடிக்கிறதுக்கு பதில் ஆக்ஸிலேட்டரை அமுக்கிப்புட்டேன். காரு எகிறி தக்கை சுவத்தை பேத்துடிச்சி. சரி எவனாவது கொத்தமாரு மாட்டுவாளான்னு பாத்தா நெட்டைக் கொடைஞ்சதுல கடேசியா கெடைச்சானுங்க. சொவத்தை சரி பண்றதுக்கு நம்மூருல ஒரு வூடு கட்டுற செலவாச்சி நைனா. நம்மூருல நாள் கூலிக்கு எவ்வளவு நாதாரிங்க இருக்கானுங்க. சுங்கிடிச் சேலையில "சின்ன வீடா வரட்டுமான்னு" மேஸ்திரிய கலாய்க்கிற சித்தாளுங்க... ம்ஹூம் மருந்துக்கும் இங்கன கெடையாது.

அப்புறமா ஒருநாளு என்னோட மேனேஜர் வெள்ளைக்காரி சொல்லுதா... அவ வீட்டுக்கு அவதான் டைல்ஸ்லேர்ந்து, ஓடு வரைக்கும் பதிச்சாளாம். இந்தக் கொடுமையை எங்கன போயி சொல்றது? நாயி பின்னாடியே போயி பீயி அள்ளிப் போடறானுங்க. இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா? இவனுங்கள வுடு வெள்ளைக்காரன் துடைச்சிட்டுப் போறவன்னு வுட்டுடலாம். சரி இந்தூரு ஆளுங்க கிட்டதான் சாதி பாத்து வேலை பாக்கல. ஆனா படிச்சிப் போட்டு பாரின் வந்த நம்மாளுங்களாவது தன்னோட சாதியைக் காப்பாத்துறானா? அறவே கெடையாது நைனா.

இந்தக் கம்ப்யூட்டர் வந்தாலும் வந்துது. எல்லாத்தையும் பொரட்டிப் போட்டுடும் போலருக்கு. பாரீன்ல இருக்கிறவன் அளும்பு தாங்க மிடியல நைனா!

'பாட்லக்'குன்னு சொல்லிப்போட்டு கண்ட சாதிப்பயலுவோல்லாம் ஒண்ணா உக்காந்து வூட்டுல செஞ்ச சாப்பாட்டை பொதுவுல கூட்டாஞ்சோறுன்னு சாப்புடுறானுங்க. இதுல பாப்பானுங்களும் அடக்கம்னு சொல்லிக்கிறேன். நம்மூர்ல இந்தக் கொடுமையெல்லாம் நடக்குமா?

இன்னும் சொல்ல மறந்துட்டேனே... இவனுங்க எப்பிடி வேணாலும் கெட்டொழியட்டும். நம்ம சந்ததியையாவது சரியா வளக்க வேணாம்? நம்மோட சாதிப் பெருமையை நாளிக்கு அவனுங்க மூலம் ஊருக்கு உணர்த்த வேணாம்? வண்ணானுங்க புள்ளங்களுக்கு வெள்ளாவி போடச் சொல்லித் தாரதில்லை. சக்கிலியனுங்க செருப்பு தைக்க சொல்லித் தாரதில்லை. படையாச்சிங்கோ, மொதலிங்கோ, தோட்டிங்கோ, நாவிதங்கோ இப்பிடி எல்லா சாதிப்பயலுவோலும் புள்ளிங்கள படிப்புக்கு மட்டும் இல்லாம டான்ஸ் (டப்பாங்குத்து இல்ல நைனா பரதநாட்டியமாம்), பாட்டு (குத்துப்பாட்டு இல்லே நைனா கர்நாடகம், வெஸ்டர்ன் இப்பிடின்னு), கராத்தே, இன்ஸ்டுரூமெண்ட், செஸ்ஸுன்னு அனுப்பிக் கத்துக் குடுக்கிறானுவோ. தான் கெட்டழிஞ்சது போதாதுன்னு பச்சைப் புள்ளீங்க மனசுல பாப்பார வித்தைகளைக் கத்துக் குடுத்து நஞ்சைக் கலக்குறானுவ. பாரீன் வந்துட்டா என்ன? நமக்கு குலத்தொழில்தான் முக்கியம்னு மனசுல ஒரு வைராக்கியம் வேணாம்? எல்லாத்தையும் படிச்சிப்போட்டு இந்தப் புள்ளீங்கெல்லாம் நாளைக்கு வெள்ளைக்காரன்/ரி மாதிரி வளந்து சாதின்னா இன்னான்னு கேள்வி கேட்டா நம்ம மொகரையை எங்கன போயி வச்சிக்கிறது? அநியாயத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சிது நைனா!

அதுனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். நீ நம்ம குலத்தொழிலை திரும்பி ஆரம்பிச்சிடு. நம்ம சாதியில பணக்காரப் பொண்ணாப் பாத்து கட்டி வைச்சிடு. நானும் நாலு புள்ளீங்களப் பெத்து கொலப்பெருமை அழியாம காப்பாத்துறேன். படிப்பு என்ன பெரிய படிப்பு? நமக்குத்தான் படிப்புலேர்ந்து, வேலையிலேர்ந்து, ப்ரோமோஷன் வரைக்கும் இன்னிக்கும் ரிஸர்வேஷன் இருக்கே. அதை வைச்சி எப்பிடியாவது அதுங்களும் வாழ்க்கையை கழிச்சிப்பிடும்.

நம்ம ஊரு இன்னும் அப்பிடியே "கட்டுக்கோப்பா" இருக்குங்ற நம்பிக்கை எனக்கு என்னிக்கும் உண்டு. சீக்கிரம் கெளம்பி வரேன். நீ என்னா சொல்ற?

நீயும் பாரின் வந்தா கட்டுப்பெட்டியா இல்லாம கெட்டுப் போயிடுவேங்ற பயத்துல விசா எல்லாம் அப்ளை பண்ணல. அதுக்காக வெசனப்படாத. நமக்கு நம்ம பெருமைதான் என்னிக்கும் முக்கியம். சரிதானே நைனா?

பிகு:

1. இதுக்கு முன்னாடி நான் போட்ட போயிட்டு வாரேன்ங்ற போஸ்டைப் படிச்சிட்டியா? அதுக்கு மின்னாடியே இத எழுதியிருக்கேன். ரெண்டையும் ஒண்ணா படிச்சிப்போட்டு கொளப்பிக்காத. போஸ்டலோ, புளாக்கரோ சொதப்பிடிச்சின்னு நெனச்சிக்க.
2. எம்புட்டு லெட்டரோட கடேசி பாராவை முன்னாடி போட்டுக்கிட்டு வேற எவனாவது பதில் கடுதாசி எழுதலாம். இது இண்டெர்நெட்டுல சகஜம்ன்னு புரிஞ்சிக்க.
3. "அன்புள்ள" அப்பிடின்னு போட்டு எழுதுறதுதான் இப்ப பேஷன்ன்னு மொகத்தை மறைச்சிக்கினு எவனாவது கூவலாம். கண்டுக்காத. இது "அன்புள்ள" ஸீஸன்னு வேணா வைச்சுக்க.
4. கொலசாமிங்க பூந்து வெளையாடலாம். பரவாயில்ல அடுத்த வாரம் படையல் போட்டுட்டாப் போச்சி
5. டிஸ்கி: "நான் ஃபாரின்ல இருக்குற பிற்படுத்தப்பட்ட தமிழன். அது என்னவோ தெரில, பிளாக்கு எழுத ஆரம்பிசச்துல இருந்தே இப்படிதான் என்ன நான் இன்ட்ரட்யூஸ் செஞ்சிக்கிறது." -- நன்றி முகமூடி

3 comments:

Anonymous said...

ஒரு இழவும் புரியல...இப்ப என்னா பிரச்சினை?

Anonymous said...

நம் நாட்டின் அவல நிலயை அழக உணர்திய குசும்பன் அவர்களுக்கு நன்றி

Anonymous said...

நம் நாட்டின் அவல நிலயை அழக உணர்திய குசும்பன் அவர்களுக்கு நன்றி