Wednesday, July 26, 2006

பாப்பையா அரங்கம்

(விசு போயிட்டு சன் டிவி அரட்டை அரங்கத்துல பாப்பையா வந்தாருன்னு கேள்விப்பட்டேன். நிகழ்ச்சியை பாக்கத்தான் முடியல. ரோசிக்கக்கூடவா முடியாது? டைட்டிலு "சமூகநீதி காப்பவர்கள் அரசியல்வாதிகளா? வலைப்பதிவர்களா? சினிமாக்கலைஞர்களா?" இடம் காரைக்குடி செஞ்சி பொட்டல்.)

பாப்பையா (பாப்): ஹூம் வாங்கையா வாங்க. என்ன இப்பிடி குமிஞ்சிட்டீங்களே... ஆம்பளங்க கூட்டம் அதிகமா இருக்குதுன்னா வூட்டுக்கார அம்மாகிட்ட சண்டை போட்டு வந்தீகளான்னு கேக்கலாம். பொம்பளங்க கூட்டம் கூட அதிகமா இருக்குதேப்பா. இத்தனைக்கும் நான் சினிமாக்காரன் கூட இல்ல (ஹெஹ்ஹெஹ்ஹே) (கூட்டமும் சேர்ந்து சிரிக்கின்றது)

1: ராஜா ஸார் அந்த மைக்க இப்பிடி கொடுங்க. யாருங்க இப்பிடி கேனத்தனமா தலைப்பை வைச்சது? சமூகநீதின்னா என்னான்னு உங்க யாருக்காவது தெரியுமாய்யா?
பாப்: ஏன் நீங்க கொஞ்சம் சொல்லித்தாரது. தள்ளாத வயசுன்னுதான் இருக்கே, தவிர தெளியாத புத்தின்னு இல்லியே (சிரிப்பு)
1: இப்ப என்ன சொன்னீங்க? மக்களும் எதுக்கு சிரிச்சாங்க?
பாப்: அட என்னாப்பா நீ இந்த குதி குதிக்கிற? நம்ம ராஜா நல்லா புட்பால் ஆடுறவரு. அப்புறம் ஜிடானே மாதிரி முட்டிடுவாரு. அம்புடுதேன். ரெட் கார்டு கொடுக்க ரெப்ரி கூட கிடையாதப்பு.
1: என்ன மெரட்டுறீங்களா?
பாப்: அட யாரப்பா இந்த ஆளு. ஜோக்கு சொன்னா ரசிக்கணும்ப்பா. ராஜா மைக்க பாஸ் பண்ணுப்பா...
2: அய்யா வலைப்பூ படிச்சிருக்கீங்களா? சமூகநீதியை சும்மா பிச்சி உதற்றாங்கப்பு.
3: அட சும்மா ஒக்காருப்பா. எங்க தலைவரு ஒரு கொரலு உட்டாருன்னா போதும். நீதி தானா நெல நாட்டிக்கும்.
4. கஸ்மாலம் உன் தலீவரு என்னிக்கு கொரலு வுடுறது? சமூகநீதி என்னைக்கு கெடைக்கிறது? என் தலீவரைப் பாரு. கொரலு என்னா? எல்லாத்தையும் வுடுவாரு.
(ரவுசுப்பாண்டி கூட்டத்திலிருந்து சவுண்ட் கொடுக்கிறார். "யோவ் எல்லாத்தயும் உள்ள உடுறதுக்கு உன் தலீவரென்ன ரோஸா பூர்ஷ்வாவா? 'டேய் எவண்டா அந்த மலப்புழு'வென்று ஏகவசனத்தில் ஒருவர் தமிழில் தெகிரியமாய் எகிற கூட்டம் களை கட்டுகின்றது)
பாப்: ராசாக்களா (அட உன்¨னெய இல்ல ராஜா) நீங்க ரெண்டு பேரும் பூர்ஷ்வாவைப் பத்திப் பேசி அவரோட பூவாவுக்கு வேட்டு வைச்சிடாதீக. (சிரிப்பு)
2: தலைவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லையென்றுதான் வலைப்பதிவாளர்கள் தனி இயக்கம் கண்டு சமூகநீதியை நிலை நாட்டுகின்றார்கள். அப்பேரியக்கம் 50 பேர்களை தன்னுடன் இணைத்து அசுர வேகத்தில் வளர்கின்றது. இதோ கிடைத்து விடும் நமது சமூக நீதி. கிடைத்து விடுமென்ன. கிட்ட வைப்பேன்.
பாப்: இதோ நீ கேட்ட சக்தி. திட சக்தின்னு இன்ஸ்டண்டா சமூகநீதி கெடைக்குதுன்னு நம்பர் -2 (என்று நிறுத்த கூட்டத்தில் சிரிப்பலை) அட அவரோட எண்ணைச் சொன்னேன்பா... சொல்லிட்டாரு. ஹீம்ம்ம் இப்ப மூணு என்ன சொல்றாரு?
1: ஏங்க சமூகநீதின்னா உங்களுக்கு என்னான்னு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க பாப்போம். அரட்டையாம்... அரங்கமாம்...
4: உன் தலீவருக்கு ஏது வாய்ஸ்? அத்தான் அடக்கிப்புட்டோம்ல. இப்ப எங்க தலீவரப் பாரு. சென்ட்ரலுக்கே மருத்துவம் பாக்குறாரு...
3. அதுதான் ஊரே சிரிப்பா சிரிக்குதே... லேட்டஸ்ட் ஹிட்டுப் பாட்டு பாடறேன் கேளு...
"கோபாலா
ஏன் ஸார்?
எங்க போற?
AIIMS போறேன்
என்னா செய்ய?
சேவை செய்ய
தூக்கியடிச்சா?
கேஸ் போடுவேன்
யாரைப் போல
ஹூம் உங்கைய்யாப் போல
"
பாப்: (ஆஹா கூட்டணி வேலைக்கு உலை வைச்சிடுவானுங்க போலருக்கே என்ற கடுப்புடன்) சந்த்ரு பாட்டு ப்ப்ரம்மாதம்'ன்னு சொல்ல முடியுமா? சொல்லத்தான் விடுவாய்ங்களா? சரி நம்பர் மூணு சம்சாரத்தோட சண்டை போலருக்கே... சரி 4 வாங்க வாங்க ஒரு கை ஓசையாப் போகக்கூடாதுல்ல...
4: ஓவரா ஆடாதீங்கடா... ஒரு படத்தை ஓட விட்டோம். பெருந்தன்மையா 'லக்கலக்க' வெற்றிக்கு உண்மையான காரணமான எங்கள வுட்டுட்டு யாராருக்கோ போஸ்டர் ஒட்டுனீங்களே... நாங்க அத மறந்துடல. மவனே எங்க பெல்ட்டுக்கு வாங்க வைச்சிக்கிறேன்
3: அப்பு எங்ககிட்டயே பயாஸ்கோப்பா? மவனே ஜெயங்கொண்டம் தேர்தல் மறந்து போச்சா? உங்க பெல்ட்டுக்கே வருவோம். ஆனாலும் பெல்ட்டுக்கு கீழ அடிக்க மாட்டோம்.
1: (அழாத குறையாய்) அய்யா சமூகநீதின்னா என்னான்னு தெரியுமா?
பாப்: பெல்ட்டுக்கே வருவோம். பெல்ட்டுக்கு கீழ அடிக்க மாட்டோம். அட்றா சக்கை அட்றா சக்கை. வேட்டிக்கே பெல்ட் போட்டு புரட்சி செஞ்சவன் தமிழனாச்சே. கட்டி அவுந்துடாம சட்டுன்னு கழட்டி நச்சுன்னு எங்கப்பா என்னைய அடிச்சது ஞாபகத்துக்கு வருதுப்பு. இப்ப அந்தா மாதிரியான அடிய 3 நம்ம நாலுக்குக் கொடுத்துட்டாரேப்பா... ஸ்ஸப்பா என்னா அடி என்னா வலி (சிரிப்பு) ஹூம் வாங்க நாலு
5: எங்கள் நம்பர் டூவை மதிக்காமல் இருந்ததற்காக எங்கள் இயக்கத்திடம் நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். கோரிக்கை வைப்பேன்.
பாப்: (ஜெர்க்காகி...இந்த டயலாக்கை எங்கேயோ கேட்டிருக்கேனே என்று யோசித்தவாறு) வாய்யா வா இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி மாதிரி ரெண்டுக்கு சப்போர்ட்டா வந்திருக்கீக. வாங்க வாங்க. என்ன எப்பவுமே சப்போர்ட் ரோல்தானா? கொஞ்சம் மெயின் ரோலும் பண்றது?
5: ஹிஹி என்ன செய்வது பாப்ஸ். சட்டியில இருக்குறதுதான அகப்பையில வரும். வைச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணப் போறேன். ஒரு எழுத்தாளனா சமூகநீதியைப் பாக்குறப்போ...
பாப்: (ராஜா சீக்கிரம் மைக்கை வேறாள்கிட்ட கொடுப்பா...என்று சிக்னல் செய்கிறார்)
1. அடப்பாவிங்களா? சமூகநீதின்னா என்னான்னே சொல்லாமே வஞ்சனை பண்றீங்களே? நியாயமா? இந்தக்கூட்டத்துல எத்தினி பேரு இப்பிடி சத்தியப் பெரமாணம் எடுக்க முடியும்... ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ...

(இனிமேல் தொடர்ந்தால் குழப்பம் மேலிடலாமென்பதாலும், முதலாவது முறையென்று முன்னோட்டமிட்டதாலும், பின்னூட்டமாய், படம் பார்த்து வெளிவந்த பாக்கியவான்களிடம் மைக் பிடித்து பேட்டியெடுக்கின்றார்கள் சம்பந்தப்பட்ட டிவிக்காரர்கள்)

குழலி: ஹிஹிஹிஹி யாராரு சமூகநீதி பேசறதுன்னு வெளங்காமப் பூடிச்சு. அந்தக்காலத்துல அபிமன்யுவிற்கு எதிரா அரவாணன் செய்யாததா? சாதியென்ற சட்டகத்தை உடைத்த எமது ஐய்யாவும், அவரது அறங்காவலரான சமூகநீதிக் காவலரான சின்னய்யாவை விடவா மற்றவர்கள் செய்து காட்டி விட்டார்கள்? ராஜா என்ற பெயரிலேயே கண்வாய் கடந்தது தெரியவில்லையா? எனக்கென்னவோ முதாலாமவர் அறிவுப்பசி அண்ணாசாமி போலவே தெரிகின்றது.

முகமூடி: அடப்போங்கய்யா... சமூகமாம் நீதியாம். இவிங்க இப்பிடி இருக்கிறவரைக்கும் இளிச்சாவாய்த்தனமாய் இங்கிதமின்றி அலையமுடியுமே தவிர நான் கேட்டதுக்கு சத்தியம் போடக் கூட ஆளில்லங்றதுதான் நிதர்சனம். எனக்கென்னமோ நம்பர் ரெண்டு குவாட்டர் கோவிந்தன் போலத்தான் தோணுது. மத்தபடி நிகழ்ச்சியப் பத்தி நூறு பின்னூட்டம் வந்தா என்னோட பங்களிப்பான எழுபதாவது பின்னூட்டங்களில் அறுபத்து ஒன்பதில் பதில் சொல்வேன். மத்தபடி இந்த ஸ்டேட்மெண்டும் ஒரு வெறும் டிஸ்கிதான். முன்னாடியே சொன்னாலும் சொல்வேன்.

சுந்தரமூர்த்தி: (பலதும் சுட்டிக்காட்டி, சைகையுடன் பேசுகின்றார்) அன்று அவ்வாறு பேசிய மொழிநடையிலேயே, இன்று இவ்வாறு ஒருவர் பேசினால் அதற்கு அவரும் இவரும் ஒன்றுதானே? இதை நான் பாப்பையாவைப் போலவே சொல்ல முடியாது. பேசினால் கோர்ட், கேஸ் என்பார்கள். இல்லாவிட்டால் சுனா.மூனா என்பார்கள். இதையேத்தான் இணையார்த்தி அஃதாவது இணைய+மெக்கார்த்தி என்பார்கள். சரிதானே?

(டிவி நிருபர் தனது மண்டையில் மைக்கால் தானே அடித்துக் கொண்டு மூர்ச்சையாகின்றார். யாரோ மூர்ச்சை தெளிவிக்க...)

மாயவரத்தான்: எல்லா இடத்திலும் போஸ்டர் ஒட்டினார்கள். அது அந்த வாரம். போஸ்டர் ஒட்டுவதற்குதானே இடமே இருக்கின்றது. அது இந்த வாரம்.
கார்த்திக்ரமாஸ்: இங்கே பேசியவர்களில் பலர் தெருப்பொறுக்கிகள். விபச்சாரம் செய்கின்றவர்கள். கூட்டிக் கொடுக்கின்றவர்கள்

(நிருபர் பதறுகின்றார்)

ரோஸாவஸந்த்: பாஸ்டர்ட். அவனுங்க குறி அறுக்க வேண்டும்.

(ஒரு கூட்டமே ரோஸாவையும், கார்த்திக்ரமாஸையும் உச்சி மோந்த்து அழைத்துச் செல்லுகின்றனர்)

கோஷம்:

முன்னாள் தமிழ்மண நட்சத்திரம் ரோஸா வாழ்க
இன்றைய தமிழ்மண நட்சத்திரம் ரமாஸ் வாழ்க

காசி: ஆம் இப்படித்தான் எல்லாம் நடந்தது என்பதை தெளிவாகப் புலப்படுத்தவே, எனது ஒரு டஜன் பதிவுகளில் கிசுகிசுவாய்க் கூறினேன். என்னை விட சேவை செய்து மௌனம் காத்தவர் பலரென்றாலும் 'கூந்தலிருப்பவள் அள்ளி முடிந்துக் கொள்வாளெ'ன்று நீங்கள் கூறுவதை நன்றியோடு ஏற்றுக் கொண்டு, 'போட்டதை எடுத்த தெம்புடனாவது இப்போதைக்குச் செல்கின்றேன். பின்னர் பிளாக்தேசமாய் ஆங்கிலத்தில் வருவேன். போய்வருகின்றேன் நன்றி'.

(நிருபர் மேலும் குழம்ப...)

இப்போதைக்கு திரை

1 comment:

ஓகை said...

மனம்விட்டு சிரிக்க வைத்ததற்கு நன்றி