ஏதோ பாரீன்ல நான் சந்தோஷமா இருக்கேன்னு நீ நெனைச்சா அது எங்குத்தமில்ல. நெஞ்சு கெடந்து ஒல கெணக்கா கொதிச்சுக் கெடக்கு. இப்போ இன்னா நடந்து போச்சுன்னு ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கிறேன்னு தாவாங்கொட்டையில கையை வைச்சிருப்பியே? சொல்றேன் கேளு...
சாதிச் சட்டமைப்போட நாம காலந்தள்ளின காலமெல்லாம் எங்கே கரைஞ்சு போயிடுமோன்னு கலக்கமா இருக்குது நைனா. ஏதோ நாடா இழுத்தாலும் நஷ்டப்படாம, கைகோலன்னாலும் காலால நீ கால்கோள் போட்டுட்ட. பருத்திலேர்ந்து பட்டுக்குப் போனாலும் பாவு சப்ளையை கெட்டிக்கா பிடிச்சிக்கிட்டு நீயும் தாத்தாவும் இருந்த பொற்காலத்த நெனச்சி நெனச்சி எனக்கு வவுத்துல ஆசிட் எக்குத்தப்பா எகிறிப்போச்சி நைனா. அசிடிட்டி'ன்ன வொடனே சீமைச்சாராயத்தை உனக்கு நெனக்கத் தோணுமே? உன்னச் சொல்லி குத்தமில்ல ஆக்காங்.
"எலேய் நாமெல்லாம் ஒரு காலத்துல கீழே கெடந்தோம்ல. இனிமே இப்பிடியே கெடக்கக்கூடாது. நல்லா நாலு எழுத்துப் படி"ன்னு நீ என்னோட சின்ன வயசுல பினாத்துனதெல்லாம் ஏதோ லோக்கல் சரக்கோட சைடு-எபெக்டுன்னு நான் நெனச்சிட்டு இருந்தேன். அப்புறமாத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளங்குனது. "நாலெழுத்து... அதயும் நல்லாப் படிச்சாத்தான் நம்மள அடக்குனவன நாம அடக்கலாம்"னு ஒரு வரி சொன்னாலும் திரு வரியா, அதையும் பூடகாச் சொன்ன பாரு...அது இப்பத்தான் வெளங்குனது.
இப்பப் பாத்து பிளாக்குல படிச்ச ஒரு பதிவோ, பின்னூட்டமோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது. ஒரு பாப்பான் (அட பிராமணாள் நைனா) லண்டன்ல எறங்கினானாம். அப்போ ஏர்போர்ட்டுல ஒரு பாலீஷ் போடறவனப் பாத்து ஒரே ஷாக்காம். ஏன்னா அவன் ஒரு வெள்ளைக்காரனாம். "ஏண்டாப்பா எங்களை 200 வருஷம் அடிமையா வைச்சிருந்தேல்ல வா இங்கன வந்து பூட்ஸைப் பிடிச்சி ஒரு பாலீஷ் போடு"ன்னு ஷ்டைலா பூடீஸைக் காமிச்சு அதையே போட்டாவாவும் புடிச்சிக்கிட்டானாம். இப்ப சொல்லு நைனா... அடிமையா இருந்தவன அடங்க வைக்கிறதும் பாப்பார யுக்திதானே? அப்ப நீ எனக்கு சின்ன வயசுல சொன்னது என்னா யுக்தி? ம்ம்ம்ம் அதுவும் கூட ஒரு பாப்பார யுக்திதான்னு எனக்குப் படுது. என்னத்தச் சொல்றது? இன்னிக்குப் பாப்பானை அடிக்கவும் பாப்பார யுக்திதான் பயன்படுது போல. அத்த வுடு. மேட்டரு என்னான்னா அந்த யுக்தியாலதான் இன்னிக்கு இம்பூட்டு கஷ்டமே. மேல சொல்றேன் கேளு.
சரி ஒரு மார்க்கமா இந்தியாவுல படிச்சுக் கிளிச்சுப்புட்டு எக்குத் தப்பா பாரின் வந்தேன் பாரு... ஒரே போரு நைனா. அதுவும் தமிழ் ப்ளாக்கைப் படிச்சேன்னு வையி... கடிவாளம் பூட்ட குருத மாதிரி புத்தி ஒரே வழியிலதான் ஓடும் நைனா. கம்ப்யூட்டர் படிச்சவன் கூட இங்கன ப்ரோக்ராம் சரியா ஓடலேன்னு வையி... அந்த ப்ரோக்ராமை எழுதினவன் பாப்பான்னு வையிறான். இங்கன அந்த அளவுக்கு கிலி ஆட்டிப் படைக்குது.
அட இவ்வளவு ஏன்? ஒரு வெள்ளைக்கார மேனேஜர் திட்டுனாக் கூட அட வெள்ளைக்காரனும் பாப்பான் மாதிரி பாரின்ல வந்தேறிகள்தானே அதான் திட்டுறான்ங்ற லெவலுக்கு புத்தி போகுது. ஒரே பேஜாரு நைனா.
இங்க எல்லாப் பயலுவோலும் கொஞ்சமாவது படிச்சிருக்கானுங்க. அன்னிக்குப் பாருங்க ஹஷ்-பப்பி பூடீஸுல ஒரு சின்ன தையல் பிரிஞ்சு போச்சி. சக்கிலிமாரு யாராவது ஆப்படுவாளான்னு பாத்தா பெரிய ஷோரூமு வைச்சிக்கினு உக்காந்திருக்கானுங்க வெள்ளைக்காரனுங்க. ஒரே ஒரு கொடையை கமித்திக்கினு தேய்ஞ்ச கல்லுல ஓங்கி ஓங்கி அடிச்சுத் தைக்கிற ஆளுங்களே இங்க இல்ல.
அது சரி பாத்ரூம்பு கழுவ ஆளு ஆப்படுவானான்னு பாத்தா ஸ்பானீஷ் பாஷ பேசிக்கினு டப்பான்னாலும் காருல வரானுவ. அவனுக்கு கொடுக்குற காசுல நம்மூரூல நாலு தோட்டிமாருங்க குடும்பம் நட்டுக்கினு மாசத்துக்கு சாப்பிடும். ஒழியுதுன்னு போன்னு நானே கழுவி விட்டுக்கினேன். நம்புவியா நீ?
நம்மூரு மாதிரி கான்கிரீட் கொட்டியா வீடு கட்டுறானுங்க இங்க? எல்லாமே தக்கைதான். கொஞ்சூண்டு மப்புல காரை பார்க் பண்றேன்னு பிரேக் அடிக்கிறதுக்கு பதில் ஆக்ஸிலேட்டரை அமுக்கிப்புட்டேன். காரு எகிறி தக்கை சுவத்தை பேத்துடிச்சி. சரி எவனாவது கொத்தமாரு மாட்டுவாளான்னு பாத்தா நெட்டைக் கொடைஞ்சதுல கடேசியா கெடைச்சானுங்க. சொவத்தை சரி பண்றதுக்கு நம்மூருல ஒரு வூடு கட்டுற செலவாச்சி நைனா. நம்மூருல நாள் கூலிக்கு எவ்வளவு நாதாரிங்க இருக்கானுங்க. சுங்கிடிச் சேலையில "சின்ன வீடா வரட்டுமான்னு" மேஸ்திரிய கலாய்க்கிற சித்தாளுங்க... ம்ஹூம் மருந்துக்கும் இங்கன கெடையாது.
அப்புறமா ஒருநாளு என்னோட மேனேஜர் வெள்ளைக்காரி சொல்லுதா... அவ வீட்டுக்கு அவதான் டைல்ஸ்லேர்ந்து, ஓடு வரைக்கும் பதிச்சாளாம். இந்தக் கொடுமையை எங்கன போயி சொல்றது? நாயி பின்னாடியே போயி பீயி அள்ளிப் போடறானுங்க. இதெல்லாம் நமக்கு ஒத்து வருமா? இவனுங்கள வுடு வெள்ளைக்காரன் துடைச்சிட்டுப் போறவன்னு வுட்டுடலாம். சரி இந்தூரு ஆளுங்க கிட்டதான் சாதி பாத்து வேலை பாக்கல. ஆனா படிச்சிப் போட்டு பாரின் வந்த நம்மாளுங்களாவது தன்னோட சாதியைக் காப்பாத்துறானா? அறவே கெடையாது நைனா.
இந்தக் கம்ப்யூட்டர் வந்தாலும் வந்துது. எல்லாத்தையும் பொரட்டிப் போட்டுடும் போலருக்கு. பாரீன்ல இருக்கிறவன் அளும்பு தாங்க மிடியல நைனா!
'பாட்லக்'குன்னு சொல்லிப்போட்டு கண்ட சாதிப்பயலுவோல்லாம் ஒண்ணா உக்காந்து வூட்டுல செஞ்ச சாப்பாட்டை பொதுவுல கூட்டாஞ்சோறுன்னு சாப்புடுறானுங்க. இதுல பாப்பானுங்களும் அடக்கம்னு சொல்லிக்கிறேன். நம்மூர்ல இந்தக் கொடுமையெல்லாம் நடக்குமா?
இன்னும் சொல்ல மறந்துட்டேனே... இவனுங்க எப்பிடி வேணாலும் கெட்டொழியட்டும். நம்ம சந்ததியையாவது சரியா வளக்க வேணாம்? நம்மோட சாதிப் பெருமையை நாளிக்கு அவனுங்க மூலம் ஊருக்கு உணர்த்த வேணாம்? வண்ணானுங்க புள்ளங்களுக்கு வெள்ளாவி போடச் சொல்லித் தாரதில்லை. சக்கிலியனுங்க செருப்பு தைக்க சொல்லித் தாரதில்லை. படையாச்சிங்கோ, மொதலிங்கோ, தோட்டிங்கோ, நாவிதங்கோ இப்பிடி எல்லா சாதிப்பயலுவோலும் புள்ளிங்கள படிப்புக்கு மட்டும் இல்லாம டான்ஸ் (டப்பாங்குத்து இல்ல நைனா பரதநாட்டியமாம்), பாட்டு (குத்துப்பாட்டு இல்லே நைனா கர்நாடகம், வெஸ்டர்ன் இப்பிடின்னு), கராத்தே, இன்ஸ்டுரூமெண்ட், செஸ்ஸுன்னு அனுப்பிக் கத்துக் குடுக்கிறானுவோ. தான் கெட்டழிஞ்சது போதாதுன்னு பச்சைப் புள்ளீங்க மனசுல பாப்பார வித்தைகளைக் கத்துக் குடுத்து நஞ்சைக் கலக்குறானுவ. பாரீன் வந்துட்டா என்ன? நமக்கு குலத்தொழில்தான் முக்கியம்னு மனசுல ஒரு வைராக்கியம் வேணாம்? எல்லாத்தையும் படிச்சிப்போட்டு இந்தப் புள்ளீங்கெல்லாம் நாளைக்கு வெள்ளைக்காரன்/ரி மாதிரி வளந்து சாதின்னா இன்னான்னு கேள்வி கேட்டா நம்ம மொகரையை எங்கன போயி வச்சிக்கிறது? அநியாயத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சிது நைனா!
அதுனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். நீ நம்ம குலத்தொழிலை திரும்பி ஆரம்பிச்சிடு. நம்ம சாதியில பணக்காரப் பொண்ணாப் பாத்து கட்டி வைச்சிடு. நானும் நாலு புள்ளீங்களப் பெத்து கொலப்பெருமை அழியாம காப்பாத்துறேன். படிப்பு என்ன பெரிய படிப்பு? நமக்குத்தான் படிப்புலேர்ந்து, வேலையிலேர்ந்து, ப்ரோமோஷன் வரைக்கும் இன்னிக்கும் ரிஸர்வேஷன் இருக்கே. அதை வைச்சி எப்பிடியாவது அதுங்களும் வாழ்க்கையை கழிச்சிப்பிடும்.
நம்ம ஊரு இன்னும் அப்பிடியே "கட்டுக்கோப்பா" இருக்குங்ற நம்பிக்கை எனக்கு என்னிக்கும் உண்டு. சீக்கிரம் கெளம்பி வரேன். நீ என்னா சொல்ற?
நீயும் பாரின் வந்தா கட்டுப்பெட்டியா இல்லாம கெட்டுப் போயிடுவேங்ற பயத்துல விசா எல்லாம் அப்ளை பண்ணல. அதுக்காக வெசனப்படாத. நமக்கு நம்ம பெருமைதான் என்னிக்கும் முக்கியம். சரிதானே நைனா?
பிகு:
1. இதுக்கு முன்னாடி நான் போட்ட போயிட்டு வாரேன்ங்ற போஸ்டைப் படிச்சிட்டியா? அதுக்கு மின்னாடியே இத எழுதியிருக்கேன். ரெண்டையும் ஒண்ணா படிச்சிப்போட்டு கொளப்பிக்காத. போஸ்டலோ, புளாக்கரோ சொதப்பிடிச்சின்னு நெனச்சிக்க.
2. எம்புட்டு லெட்டரோட கடேசி பாராவை முன்னாடி போட்டுக்கிட்டு வேற எவனாவது பதில் கடுதாசி எழுதலாம். இது இண்டெர்நெட்டுல சகஜம்ன்னு புரிஞ்சிக்க.
3. "அன்புள்ள" அப்பிடின்னு போட்டு எழுதுறதுதான் இப்ப பேஷன்ன்னு மொகத்தை மறைச்சிக்கினு எவனாவது கூவலாம். கண்டுக்காத. இது "அன்புள்ள" ஸீஸன்னு வேணா வைச்சுக்க.
4. கொலசாமிங்க பூந்து வெளையாடலாம். பரவாயில்ல அடுத்த வாரம் படையல் போட்டுட்டாப் போச்சி
5. டிஸ்கி: "நான் ஃபாரின்ல இருக்குற பிற்படுத்தப்பட்ட தமிழன். அது என்னவோ தெரில, பிளாக்கு எழுத ஆரம்பிசச்துல இருந்தே இப்படிதான் என்ன நான் இன்ட்ரட்யூஸ் செஞ்சிக்கிறது." -- நன்றி முகமூடி
Wednesday, January 31, 2007
Thursday, January 25, 2007
ஸ்ஸப்பா கண்ணைக் கட்டுதே
உன் தலைமைபீடத்தில்
நான் வைகோவா செஞ்சியா?
நீ பொதுகுழுவென்றால்
நான் சேலமா சென்னையா?
என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் மதிமுகவைப் பார்த்து கபிலனின் லிஸ்டை உல்டாப் பாடலாய் குசும்பன் எழுத கிலியடித்துப் பொகின்றார்கள் வைகோவும் மற்றும் செய்தித் தொடர்பாளர் கேஎஸ்ஆர். "என்னோட நிலைமையைப் பார்த்தாயா ராதா? நேத்து மொளைச்ச வலைப்பூக்கள் கூட என்னையக் கிண்டல் பண்ற மாதிரிப் போச்சே?" என்று அவர் அழுது கொண்டே கறுப்புத் துண்டில் மூக்கு சிந்துகின்றார். அப்போது சடேரென்று ஒரு ஆட்டோவில் முகம் மறைத்த உருவம் இறங்குகின்றது. "அண்ணா மீட்டருக்கு மேல ஒண்ணுமே வேண்டாம். மேட்டர மட்டும் சுகுற்றா தாரேன்", என்றது. ஓசியென்றால் பினாயிலையும் குடிக்கும் வீரத்தமிழனன்றோ நாம்! கிடைத்தவரையில் லாபமென்று நினைத்தபடி ஊம் கொட்டுகின்றார் வைகோ. "அண்ணாத்த மதிமுக லவ்ஸ் மீ; மதிமுக லவ்ஸ் மீ நாட்" அப்பிடின்னு செந்தமிழ்ல்ல அறிக்கை ஒண்ணு வுடுங்க. அதுல நீங்க மதிமுகவையும் திட்டணும். வெட்டிப் போட்ட திமுகவையும் திட்டி அழும்பு பண்ணணும். ஆனா நீங்க குறிப்பிட்டு யாரையும் திட்டுன மாதிரி தெரியப்படாது" என்கிறது மீட்டர். "என்னது என்னோட மதிமுகவையே திட்டுறதா?" வைகோ வாயைப் பிளக்கின்றார். "அட மாம்ஸே அங்கதான் உங்க கைங்கர்யம் இருக்கு. LG'யும், செஞ்சியும் இருக்கிற மதிமுகவைத் திட்டினேன் அப்பிடின்னு பிட்டைப் போட வேண்டியதுதான? வேணும்னா சொல்லுங்க நானே அறிக்கையை டிராப்ட் செஞ்சுத் தாரேன்" என்கின்றார் முருகேசன். "அடப்பாவிங்களா அரசியல் அஸ்தமனத்திற்கு நானே கால்கோளிடுவதா" என்று பதறியபடி பறக்கின்றார் வைகோ.
"அய்யய்யோ LG பெருங்காயத்திற்கு என்ன ஆச்சு?" என்று பதறியபடி கோபாலைத் தள்ளிவிட்டுக் கொண்டு மூச்சிறைத்தபடி ஓடி வருகின்றார் துளசி. "என்னது LG பெருங்காயமா? நாசமாப் போச்சி. நாங்க சொன்னது L.Ganesan" திருத்துகின்றார் கேஎஸ்ஆர். "இல்லை துளசி சொன்னது சரிதான். LG உருவாக்கியது பெருங்காயம்தாம்" என்றார் வைகோ கவித்துவமாய். "அய்யய்யோ என் கணேசனுக்கு என்ன ஆச்சு?" என்றார் பிள்ளையார் பக்தையான துளசி. "நேக்கு பைத்தியமே பிடிக்கும் போலருக்கே. மத்த குழப்பத்தை விட இந்தம்மா கொழப்பறதை தாங்க முடியலியே. அட ராமச்சந்திரா", என்று கதறுகின்றார் கேஎஸ்ஆர். "இப்போது செஞ்சியையும் ஏன் இழுக்கின்றாய்? நீயும் அவர் கட்சியா?" என்று வைகோ எகிற, "அடடே ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு?" என்று துளசி வினவி விவகாரத்தை பெரிதாக்குமுன் கூட்டாக எஸ்கேப்பாகின்றார் கேஎஸ்ஆர்.
"தலைவா நம்ம ராங் ரூட்டுல வந்துட்டோம் போலருக்கு; போர்க்களத்துள அடிக்கிற பொணவாடையைப் பாத்தா இது இன்பர்மேஷன் ஹைவே போலருக்கு; சொந்த செலவுல சூனியம் வைக்கிற ஆளுங்க இங்கன ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன். வாங்க வேற வழியா ஓடிப்போயிடலாம்" என்ற கேஎஸ்ஆரை மடக்கிய வைகோ "இன்பர்மேஷன் ஈஸ் பவர் என்றான் ஈஸ்ட் இந்தியத் தமிழன்; வந்ததுதான் வந்தோம் முழுதும் பார்த்து விடுவோம்" என்றார்.
"ஒன் டூ திரீ போர் பைவ் ஒன்ஸ் ஐ காட் எ பிஷ் அலைவ்; சிக்ஸ் செவன் எயிட் நயன் டென் தென் த்ரூ இட் பேக் எகெய்ன்" என்று பாடியபடி வந்தவர் வைகோவைப் பார்த்து ஸ்டைலாய் "பாபாவின் கவுண்ட் டவுன் ஸ்டார்டர்ட்" என்று கர்ஜிக்கின்றார். "என்ன இழவுடா இது இங்கேயும் ஏற்கெனவே கட்சி பிரிஞ்சு கவுந்தடிச்சுக் கெடக்கும் நேரத்துல இந்தாளு வேற கவுண்ட் டவுன் போடுறானே; ஒருவேளை விஷயம் தெரிஞ்சவனோ?" என்று முனகியபடி வைகோ "எனக்கு பாபான்னா ரொம்ப உசிரு. அதுனாலதான் தெலுகு-கங்கைத் திட்டம் விட்டு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வர அவரோட திட்டம் போட்டேன். அத மாறன் மூலம் மோப்பம் புடிச்சி முந்திக்கிட்டார் அண்ணன் கருணாநிதி" என்றார். கேஎஸ்ஆரோ "அண்ணே நீங்க சொல்றது புட்டபர்த்தி பாபா. இது வேற பாபா" என்று காதைக் கடிக்கின்றார். "விஷயதானம் செய்யிறேன் வாருங்க. கட்சியில ஒன் டூ டென் யாருன்னு அடிக்கடி லிஸ்டை வெளியிட்டு ஜல்லியடிக்கணும். சென்னை காண்டாக்டைப் புடிச்சி முடிஞ்சா கில்லியிலயும் வரவழைக்கணும். வருஷத்துக்கு ஒரு முறை இல்லாம வாரத்துக்கு ஒரு முறை போட்டு அவனவனையும் வகுத்தால போக வைக்கணும். முடிஞ்சா தொண்டர்படை, பாதுகாப்புப்படை, அம்மாதுதி, சின்னம்மா அந்தாதி, மாறன் கலம்பகம்ன்னு கேட்டகிரி வாரியா மாத்தி மாத்தி லிஸ்டைப் போட்டு போற வர்றவனுக்கெல்லாம் பாலூத்தணும்" "அப்பிடி ஊத்தினா?" குழப்பாமானார் வைகோ. "அடப்போய்யா அரசியல் புரியாமப் பேசுற; பத்து பேரை நம்பர் ஒண்ணு நீதான்ன்னு கையைக் காட்டினா அத்தனைப் பேரும் உன் பாக்கெட்டுக்குள்ளே; தமிழனுக்கு நன்றி உணர்ச்சி பெருக்கெடுக்க தலீவான்னு கால்ல உழாட்டியும், கப்சிப்'ன்னாவது கெடப்பான்; நெட்டுல இந்த பிட்டு சூப்பரா வொர்க் அவுட் ஆவுது தல" என்று கேட்டதும் வைகோவிற்கு "நம்பர் ஒண்ணே" வந்துவிட அவசர அவசரமாய் அகல்கின்றார்.
மறைவிடத்தில் சடாரென்று மொடர்ன் மோகினி ஒன்று தோன்ற சடர்ன் பிரேக் போடுகின்றார் வைகோ. "இவ்விடம் கட்சியடி கடிகளுக்கு நீதி வழங்கப்படும்" என்று மொடர்னாய் கொஞ்சினாள் கேர்ள். "ஆஹா நீதித் தேவையை தீர்க்க வந்த தேவதையே வா! சோனியா மட்டும் சட்டம் போடாவிட்டால் கட்சிக்கடி ஆழமாயிருந்திருக்கும். மன்மோகன் மட்டும் மட்டுறுத்தா விட்டால் பின்னூட்டம் இன்னும் மோசமாக இருந்திருக்கும்" என்று வைகோ உளறிக் கொட்ட காண்டாகின்றார் கேஎஸ். "பேஷனில்லா தமிழன் பெருமையாய்க் கேட்டது கண்டு, எண்ட நிகண்டான உங்கள் Tooth Paste பீய்ச்சல் Teething முன்னர் என்றும் சொல்லிக் கொல்லலாம். பிரச்சினை உங்களுடைய பாரபட்சமா? பாராபட்சமா?ன்னு ஒரு கால்லதான் தொங்குது மெல்லின வல்லினமாய். இதைபத்தி ஆறுமுகமாய் வந்து நாவலராய்ப் போனவரோ, ஆழமாய் உழுதுபோட்ட அ.முத்துலிங்கமோ தெளிவின்றி இருந்ததாலும் பிரச்சினை பெரிதாகியிருக்கலாமெண்டு இவ யோசிக்கிறா" என்று மொடர்ன் முடித்ததும் 'இதுக்கு வைகோ உளறலே சூப்பர்மா' என்று தலையாட்டித் தெறிக்கின்றார் கேஎஸ்.
"இஞ்ச பாருங்கோ" என்று இளம்பெண்ணை ஒத்த முகமூடி உருவம் திடீரெனக் குதிக்க "நான் அப்பவே சொன்னேனே நமக்கு நேரம் சரியில்லன்னு" என்று புலம்ப ஆரம்பிக்கின்றார் கேஸ். "மதிமுக மீது பரிச்சயமுண்டு எண்ட கேள்வியை பரீட்சிக்கவே சேலம் பொதுக்குழுவிற்கு சென்றேன். ஆனால் அங்கே மசால்வடை என்ற பஷணம் பரிமாறப்படாததால் வேறு பாரமேதுமின்றி நான் உலா வந்தது வேறு விதயம். அங்கு போனபோது வைகோ, எல்.கணேசன், செஞ்சி இராமச்சந்திரன், வையாபுரி, சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், நாஞ்சில் சம்பத் போன்றோரின் கைவண்ணங்கள் காணவே. ஆனால் பெருந்தலைகள் உருட்டும் ஆட்டம் இவை என்று என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்." என்று முடித்தவுடன் அய்யய்யோ பேஷனில்லாத தமிழனைக் கூட நம்பலாம் ஆனா Passion இல்லாத DJ தமிழன நம்பாதடோய்", என்று கதறுகின்றார் கேஎஸ்.
யாமிருக்க பயமேனென்று அட்டெண்டெண்ஸ் போடுகின்றார் உஷா. "வைகோ நீங்க அருமையா அடிச்சு ஆடுறீங்க இருந்தாலும்..." என்று உஷா இழுத்ததும் அய்யய்யோ என்று அப்பாவியாய் விழிக்கின்றார் வைகோ. "மத்தியில மன்மோகனோட கூட்டணி. மாநிலத்தில் அம்மாவிடம் அடைக்கலம்... இப்பிடி மட்டும் அரசியல் பண்ணா பத்தாது. விழுப்புரத்தில் வி.சி. யோட கைகுலுக்கல்; கல்பாக்கத்தில் கம்யூனிஸ்ட்களோடு நடைப்பயணம்; மூணாறில் மூவேந்தர் கட்சியோடு மாநாடு; தேக்கடியில் தேமுதிகவோடு தேநீர் விருந்து; முட்டத்தில் முஸ்லீம் லீக்கோடு முகாம்; இப்பிடின்னு எல்லா இடத்துலேயும் அட்டெண்டெண்ஸ் போடோணும்; இவ்வளவு ஏன் இப்ப எந்த கட்சியில நீங்க இருக்கீங்கன்னு அவனவன் மண்டையைப் பிச்சிக்கணும். அப்பிடி செஞ்சீங்கன்னு வைங்க உங்கள விட்டு பிரிய நினைக்கிற ஆளுங்க எந்த கட்சியில போயி ஐக்கியமாகிறதுன்னு தெரியாம உங்களோடயே இருந்துடுவான்", என்றதும் "ஆஹா விட்டா நம்மள லாரல்-ஹார்டி ஆக்கி இண்டெர்நேஷனல் லெவல்ல சந்தி சிரிக்க வைச்சிடுவாங்க" என்றபடி இருக்குமிடம் தெரியாமல் மறைகின்றார்கள் வைகோவும், கே எஸ்ஸும்.
இன்னமும் அட்வைஸ் கொடுக்க நான், நீயென்று பலர் இணையத்தில் போட்டி போடுவதாகத் தகவல்....
பிகு: சும்மா இருக்க வுட மாட்டேங்றாங்ணா... அதான் மேட்டருங்ணா...

Thursday, January 11, 2007
இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பு
"பசுமை நிறைந்த நினைவுகளே" என்று பாடிப் பிரிய மனமில்லைதான். இருப்பினும் "போகுமிடம் வெகுதூரமில்லை" என்று பாட வருவதுதான் என்னுடைய இயல்பான குசும்போ?
பிரிவோம் வேறெதற்கு மறுபடியும் சந்திப்பதற்கா? ஆடிய கால்களையும், டைப்பிய கைகளையும் நிறுத்த முடியுமா?
225வரை அட்டெண்டன்ஸ் போட்ட உள்ளங்களுக்கு நன்றி! என்னால் காயம்பட்ட உள்ளங்களிடம் மனப்பூர்வமான மன்னிப்பு! குறிப்பாக கிராஸ்பயரில் மாட்டிய இளவஞ்சியிடம் தனிப்பட்ட மன்னிப்பு!
எப்படியோ ஆரம்பித்தது இப்படியாக இளைப்பாற வேண்டியிருக்கின்றது. இளைப்பா இல்லை களைப்பா? கண்டிப்பாகத் தெரியவில்லை. காலம் பதில் சொல்லட்டும்.
வாழ்த்துக்கள் வளமாய் வாழ !!!
Tuesday, January 09, 2007
லக்கியே லுக்கு
நம்ம லக்கு என்னிக்குமே நம்மள சரியானபடி லுக்கு விட்டதில்லை என்று வருத்தப்படும் வாலிப, வயோதிக அன்பர்களே! உலகில் நீங்கள் தனியாக இல்லை. எப்பிடி நாம பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது ஆப்போஸிட் சைடுலேயே பஸ்ஸுங்க போகுமே... அந்த மாதிரி நம்ம லக்கும் என்னிக்குமே ஆப்போஸிட் சைடுலதான் ஆப்படிக்கும். லுக்கு வுடாத நம்ம லக்குல சில கொஞ்சம் உங்க பார்வைக்கும்:
1. ஏர்போர்ட்டுல செக்-இன் பண்ற கியூ அனாகொண்டா பாம்பு மாதிரி கெடக்கும்; குண்டான ஆசாமி ஆடி அசைஞ்சி சாவகாசமா எல்லாரோட குலம், கோத்திரம் விசாரிச்சு நத்தை வேகத்தில் நகரும் போது சுர்ருன்னு கோவம் சுழிவரை ஏறும்ல. அப்பப்பாத்து கியூவைத் தாண்டி அடுத்த கியூவுக்கு போக வேண்டிய ஆளுங்க 'எக்ச்சூச்மீ'ன்னு கரீக்டா நம்ம முன்னாடி கிராஸ் பண்ணுவாங்க பாருங்க... சூப்பரா இருக்கும். ஏம்ப்பா இம்பூட்டு பேரு இருக்கும் போது அதெப்பிடி கரீக்டா வயிறு, லக்கேஜ் எல்லாத்தையும் என் மேல வைச்சி இடிச்சிட்டு வேற போறீங்களேடா... போங்க போங்க நல்லாயிருங்க என்று மனம் எரிந்து வாழ்த்தினாலும், அவனுங்க தொப்பைகளை திருப்பித் தைக்காம, வெறுமனே கிழிச்சு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணத் தோணுதே! நான் நார்மலாத்தான் இருக்கேனா?
2. அடுத்தவருக்கு சேவை பண்றதையே கொளுகையா(?) வச்சி வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் நமக்கு எந்த பிளைட்டுல ஏறினாலும் மறக்காம திருப்பி திருப்பி சொல்ற வாசகம் ஒண்ணே ஒண்ணுதாங்க. 'கேபின் பிரஷர் கம்மியானா ஆக்சிஜன் மாஸ்க்கை மொதல்ல நீங்க போட்டுக்கிட்டு அப்புறம் அடுத்தவங்களுக்கு (ஏன் உங்க குழந்தைக்கே கூட) உதவுங்க'ன்னு சாக்லேட் குரல் ஸ்பீக்கரில் வழியும் போது எனக்கு பிரஷர் சும்மா ஜிவுஜிவுன்னு ஏறி அந்த சாக்லேட் தொண்டையை ஆசிட் ஊத்தி கழுவ விரும்புவது கொஞ்சம் ஓவரோ?
3. பிளைட்டில முன்னாடி அளந்து ஊத்தப்பட்ட ஆல்கஹால், காஸ்ட் கட்டிங்கில் காணாமல் போன கடுப்பில் இருக்கும் போது, காசு கொடுத்து வாங்கிய வராட்டி சாண்ட்விச்சையாவது ஆசையாக கடிக்கலாம்னு பாத்தா, முன்சீட்டு ஆசாமி முன்னெச்சரிக்கை கொடுக்காமல் சடாரென்று சீட்டை பின்னுக்குத் தள்ளுவான் பாருங்க...சாண்ட்விச்சை வுட்டுட்டு அவனோட கொரவலைய கடிக்கும் கொலவெறியை எந்த கொலசாமிக்கு கொலவ போட்டுக் கூவுறது?
4. "விமானத்தோட கதவுகள் மூடப்பட்டதும் செல்போனை ஆப் பண்ணுங்க"ன்னு குயிலாய் பணிப்பெண் கூவினாலும் "ம்ம்ம் என்னாது ஐஞ்சரை மணிக்கு, அதான் ஸார் 'சாடே சார் பஜே' கரெக்டா வந்துடறேன்னு சொல்லிடு" என்று கழுத்து நரம்பு முறுக்கேறியபடி சாமியாடி சத்தம் கொடுக்கிறவனைப் பாத்தா உங்களுக்கு என்னாத் தோணுங்ணா? நேக்கோ 'சாடே சார் பஜே'ன்னா தமிழ்ல நாலரை மணிடா பன்னாடை; ஹிந்தி தெரியலேன்னா வுட்டுடான்னு கத்திக் கொண்டே குத்தும் குத்தில் செல்போன் தொண்டைக்குழிக்குள் செருகிக் கொள்ள வேண்டுமென்று நான் நினைப்பது அதீத ஆசையா?
5. டேக்-ஆப் போது காது ஜவ்வு கன்னத்தைப் பாக்குற ஆசையோட ஆட்டம் போடும். முன்னாடியாவது எச்சி கூட்டி முழுங்க பப்பரமுட்டாயி தருவானுங்க. எஸ்ஸென்ஷியல் சர்வீஸ் வேணுமின்னா 'எச்ட்ரா மால்' வெட்டுற காலத்துல காதுல பஞ்சுக்கும் காசு அழவேண்டிய காரணத்தால் புள்ளைங்கள அழ விடுறானுங்க பெத்தவனுங்க சிலபேர். அப்புறமா எவனுமே சீந்தாத பிளைட் இன்பர்மேஷன் கார்டை எடுத்து வைத்துக் கொண்டு "ஹையா ஜாலி டாடி பிளைட் அப்பிடியே விழுந்தா, லைப்ஜாக்கெட் போட்டுண்டு, பிளேன் விங்குல ஸ்லைட் பண்ணி, போட்டுல போலாமே?" என்று குழந்தைகள் மங்களகரமாகக் கூறி மாஞ்சாவை செக் பண்ணும் சுபவேளையில் "இல்லடா கண்ணா இந்த செக்டர்ல, வழியில ஓஷனே கிடையாது. அதுனால போட்டுல போக முடியாது"ன்னு அப்பன் பொது அறிவைக் காட்டிக் கலக்கும்போது, எமர்ஜென்ஸி எக்ஸிட்டைத் தொறந்து அந்தாளை எமலோகம் அனுப்ப அவாவாக உள்ளது என்னவகை?
6. அவசர அவசரத்துக்கு ஒண்ணுலேர்ந்து பத்து வரை எண்ணி ஆத்திரத்தை வேணா அடக்கலாம். ஆனா பிளைட்டுல எடுத்துட்டுப் போகக்கூடாதென்ற சட்டத்தால் ஐஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி வாங்கின அரை லிட்டர் பிஸ்லரியை செக்யூரிட்டி செக்கப்போ அவசர அவசரமா குடிச்சதால முட்டிக்கிட்டு வர்ற மூச்சாவை அடக்கி வைக்க முடியுமா? உடம்புல இதுவரை ஏறின உஷ்ணம் நீரையும் கடுப்பாய் வெளியேற்றுமேங்ற அனுமானத்துடன், சன்னமா அடக்கி இறக்கலாமெனும் எண்ணத்துடன், ரெஸ்ட்ரூமை அணுகினால்... முன்னாடி போன நாதாரி கரெக்டா கண்ட இடத்தையும் நாஸ்தியாக்கிருப்பான்... நாத்தம் கொமட்ட அவன் செஞ்சதை க்ளீன் பண்ணிட்டு, சைடுல நம்ம வேலையை முடிக்கிறதுக்குள்ள 'டொக் டொக்'ன்னு கதவைத் தட்டுவானுங்க பாருங்க... நாம வெளியே வரும்போது அவனுங்க வுடுற லுக்கு வேற இருக்கே... என்னமோ கவர்மெண்டு பஸ்ஸுல டிக்கெட் எடுக்கச் சொன்ன கண்டக்டரை முறைச்சுப் பாக்குற டிராபிக் போலீஸ் பார்வை பணால்ங்கண்ணா... இந்த மொள்ளமாறீங்களை பெறந்த மேனியாக்கி பெட்ரோல் பாம் போடத் தோணுதே... நியாயந்தானே?
7. பறக்கும் நேரத்தையாவது பதுவிசா பயன்படுத்தலாமேன்னு ஆசை ஆசையாய் லேப்டாப்பை எடுத்து பதிவொன்றை நொட்டிக் கொண்டிருக்கும் போது, ஒட்டகச்சிவிங்கியாய் ஒரு மணி நேரம் கழுத்தை அசையாமல் எட்டிப் பார்த்த பக்கத்து சீட்காரன் "Oooh you can type in Tamil? ஆனா ஏன் இப்பிடி புரியாத மாதிரி எழுதுறீங்க?"ன்னு பதிவு பப்ளிஷ் ஆகுமுன்னரே இலவச பின்னூட்டம் விட்டு சதாய்க்கும் போது என்ன செய்யலாம்? மொன்னக் கத்தியால் ஹலால்தான் தீர்வுன்னு நாஞ் சொல்றேன். நீங்க என்ன ஷொல்றேள்?
8. ஐதர் காலத்து படத்தை, காசு கொடுத்து இயர்போன் வாங்கிப் பார்க்க வேண்டுமா என்ற அலுப்பில், செத்த நாழி கண்ணை மூடி ரெஸ்ட் எடுக்கலாமுன்னு பாத்தா, போர்டபிள் சிடி பிளேயரைப் போட்டுக் கொண்டு அரதப் பழசு கோவிந்தா பாடலை "Mumy Dady ஓ மம்மி மம்மி ஓ டாடி டாடி"ன்னு உலகத்துக்கே கேக்குற மாதிரி சீட்டு நுனிக்கு வந்து பாடுறவனை ஏன் என்னால ரசிக்க முடியல? ஒருவேளை நாப்பது வயசு அனுபவ குனத்தை அடைந்து விட்டேனோ? இல்லே அந்தப் பிளேயரைப் பிடுங்கி, சிடியை வெளியே எடுத்து கிரெடிட் கார்டை தேய்க்கிற மாதிரி அவனோட பின்புறத்தில் அந்த அந்தரங்க ஏரியாவுல "ஸ்வைப்" பண்ண கை பரபரங்குதே... இது இயல்பான ரியாக்ஷனா?
9. சாக்லேட் குரலில் இனித்தாள்; குயிலின் கூவலில் கொஞ்சினாள்; மிஞ்சியதென்ன? ஏமாற்றம் வெறுப்பு கலந்து "பிளைட் நின்ன பின்னாடி சீட்டு பெல்ட்டைக் கயட்டி, அப்பாலிக்கா மேலே இருக்கிற லக்கேஜை எடுங்கடா எடுபட்ட பயலுவளா"ன்னு கொஞ்சம் டீசன்ஸி கலந்து சொன்னாலும், பிளைட் பிரேக் போடுறதுக்குள்ள எகிறிக் குதிக்கும் மக்கள்ஸை என்னான்னு சொல்வேனுங்கோ? வெளிநாட்டுல ஒயுங்கா கியூவுல நிக்கிற இதே 'பாடு'ங்க இந்தியாவுல செய்யிற சேட்டை இருக்கே? ஜனநாயகம்னு சொல்வானுங்க... இவனுங்களை சந்தியில மவனே ஜட்டியோட ஓடவிட்டு 'பொளிச்சு வைச்சு அடி'ன்னு ஞான் பறைஞ்சது சரிதன்னே ஸாரே?
10. 'குட்டைப் பாவாடை விளக்குக'ன்னு கேட்டா நடிகை ஷ்ரேயான்னு இப்போ சிம்பிளாச் சொல்லிடலாம். அது அவாளோட விருப்பம்; போட்டுண்டு வரா. ஆனா வேற வழியில்லாம குட்டைக்கு சூப்பர்லேட்டிவ் டிகிரியாய் உலா வரும் பிரைவேட் விமானப் பணிப் பெண்களைக் கண்டால் பாவம் ஸாரே! அவாளோட ஏர்போர்ட்-ஹோட்டல் கம்யூடேஷனனுக்கு கூட இப்போ ஏர்லைன்ஸ் காசு தர்றதில்ல. அவாஅவா சொந்தக் காசுலதானாம் கம்யூடேஷன், கருமாந்திரம் கூட. கிடைச்ச பைக்குல பில்லியன் ரைடுல கஷ்டமாய் ஸ்கர்ட்டை இழுத்துவிட்டு இழுத்துவிட்டு அவர்கள் போகும்போது கிங்பிஷர் மல்லையாவுக்கு ராவோட "ராவா" Vagir பீரு கொடுத்து மட்டையாக்கும்ங்ற பீலிங் என்னைப் பொறுத்தவரை "Best கண்ணா Best". என்ன ஓகேவா?
11. எல்லாம் முடிஞ்சி வீட்டுக்கு நிம்மதியாப் போலாமுன்னு ஆட்டோ புடிச்சா அங்கயும் தொடருது அஷ்டமத்து சனி. 'ஸார் செல்வி சீரியல் பாத்தீங்களா? தாமரை செத்ததை போட்டோவுல மாலை போட்டுத்தானே காமிச்சாங்க? பாடியைக் காட்டல சார். அரசியிலாவது காட்டுவாங்களா ஸார்?'ன்னும்போது இவன் அப்பாவியா கேக்குறானா? இல்லே அங்கதமாக் கேக்குறானான்னு தெரிஞ்சுக்க முடியாம ஒரு தவிப்பு வரும் பாருங்க... ஆட்டோவோட ஸ்டார்டிங் ராடை பிடுங்கி எடுத்து அப்பிடியே வெவகாரமான இடத்துல சொருகத் தோணுதே... நான் ரொம்ப முன்கோபியா?
எப்பிடியோங்க... 'ஏர் பயணம் ஹேர் ரைஸிங்'னாங்க. ஒரு பயனத்துலேயே உடம்புல எல்லா மசுரும் கஞ்சி போட்ட காக்கி யுனிபாரமா ஆகிப்போச்சுதுங்ணா. இது தீர ஒரே வழி லக்கி என்னை லுக்கு வுடறுதுதான். இல்லே மவனே ஒரு லேடி லக்குகிட்ட போயிடுவேன் ஆமா. ஹிஹிஹி அது மட்டும் மாட்டேன்... என்னா நமக்கு மட்டுமில்ல நம்ம லக்குக்கு கூட ஆப்படிக்கும் வல்லமையான ஒரே ஆளு லேடிதானுங்களே !!!
பிகு: இப்பதிவிற்கும் லக்கிலுக் என்ற பதிவருக்கும் சம்பந்தமேதுமில்லை! ஹப்பாட கொஞ்சம் நிம்மதி!!!

Friday, January 05, 2007
டாப் டௌன் பத்து
என்னாங்கடா அல்லாரும் டாப் பத்துன்னு பட்டயக் கெளப்பும்போது நீ மட்டும் டாப் டௌன் பத்துன்னு கத்துறியே கஸுமாலங்றேளா? நமக்கு டாப் டூ டௌன் குசும்புதானுங்களே... இதோ 2006 டாப் டௌன் டென் அவார்ட்ஸ்...
10. எட்டுப்பட்டி ராசா: பத்ரின்னா ஆருன்னே தெரியாத ஆளுங்க இருக்க முடியாது. இவுரு பொழுது போகாம பதிவு போடுறாரா இல்லே பொழுதைப் போக்குறதுக்கு பதிவு போடுறாரான்னு பலருக்கு கொயப்பம் இன்னும் இருக்கு. பிரச்சினையைப் போர்வையாப் போட்டு தூங்கற நம்ம மேரி ஆளுங்க இடையில கான்ரோவர்ஸின்னா ஸ்பெல்லிங் கூட தெரியாதும்பார் நம்ம பத்ரி ஸாரு. அப்பிடியிருக்கறச்சே எல்லாப் பிரச்சினைக்கும் அவர இழுத்து நீ ஜட்ஜா இரு, நீயே தீர்ப்புச் சொல்லுன்னு இணையத்துல இவர கட்டாய நாட்டாமையா ஆக்குறாங்க மக்கள்ஸ். இவுரோ சுத்தியலில்லாத நீதிபதியா இருக்க விரும்பாட்டியும், கையில சொம்பைக் கொடுத்து "எட்டுப்பட்டி ராசா" ஆக்கிட்டாங்கோ. புது வருஷத்துல இவர கண்டிப்பா பதினெட்டுப் பட்டிக்கும் ராசா ஆக்கிடுங்கப்பா. புண்ணியமாப் போகும். இதோ உங்களுக்காக சரத்குமார் வடிவேலுவுக்கு பெண் பார்க்கப் போன நகைச்சுவைக் காட்சி...
"(நீட்டி முழங்குறார்) ஐய்யா பத்ரி ஐய்யா! உங்ககிட்ட பிராது கொடுக்க பீர் வாயன் டமிள் பார்டெண்டர் வந்திருக்காக. வீரமான வன்னியன் வந்திருக்காக. சைக்கிள் கேப்புல வீரமணி வந்திருக்காக. எவர்கிரீன் இளைஞன் டோண்டு வந்திருக்காக. ஜெர்ஸிப் பசு திவ்யா வந்திருக்காக. இன்னும் அனானிமஸா அம்பது பேர் வந்திருக்காக. பத்ரி ஸார் கொஞ்சம் இப்பிடி வர்ரீயளா?" (கணப்பொழுதில் மின்னலாய்த் தோன்றி மறைகின்றார் பத்ரி)
9. புதுப்பேட்டை கண்ணன்: பிரச்சினைன்னா மின்னலாய் மறையும் பத்ரி பத்தாவது இடத்துலேன்னா, பிரச்சினைக்கு பின்னாடி எப்பவுமே இருக்குறவர் பிகேஎஸ்'ன்னு நெட்டுல பிட்டப் போடுறாய்ங்க. எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னா எல்லாப் பிரச்சினைப் புகழும் பிகேஎஸ்'க்கேன்னு சொல்றாங்கோ. இணையத்துல ஒருத்தன் இன்னொருத்தன போட்டுச் சாத்துனா அதுக்கும் இந்த பிகே"ஏசு" தான் காரணம்; அவருக்கு இவருதான் உந்துசக்தி; பிந்து சக்தி'ன்னு எச்ட்"ராவா"ஒளர்றாங்கோ. இவர வைச்சு பிரபலமான 2006 சொலவடை "ஆமை புகுந்த வீடும், பிகேஎஸ்ஸு பின்னூட்டம் உட்ட பதிவும் உருப்படாது". இதோ இவருக்காக இவரை இணையத்தில் மிகவும் விரும்பும் இரு நண்பர்களான சொனா சனாவும், சுனா மூனாவும் 'சூச்சூ'வென மியூசிக் போட்டு கோரஸாய்ப் பாடுகின்றார்கள்:
"எங்கும் இணையத்தில் உனைத் தேடி
இரவும் பகலும் அலைகின்றார்
எங்கும் உளது உன் வேலையாம்
எனினும் குருடர் காண்பாரோ?
எங்கும் ஒலிப்பது உன் குரலாம்
எனினும் செவிடர் கேட்பாரோ?
எங்கும் எதிலும் எப்போதும்
எல்லாமான பிகேஎஸ்ஸே"
8. பாசமலர்: இணையத்துல நேசமுடன் வெங்கடேஷ் கழண்டு போனாலும், பாசம் குறையாம வளர்க்கும் எங்கள் இணைய அக்கா துளசி கோபால் எட்டாவது இடத்தில். ஒருத்தர் பட விமர்சனம் எழுதினா ஹீரோவுக்கு என்னாச்சும்பார். கொஞ்சம் கசமுசான்னா எல்லாரும் ஒரு குடும்பம்ன்னு நெனைச்சிருந்தேன்ம்பார். பிரச்சினை வெடிச்சு அடங்கிப் போனவுடனே 'ஓ! இதுதானா விஷயம்'னு வெகுளியாக் கேப்பார். இவரு இந்த வருஷம் இன்னும் நெறைய ஊருக்கு டூரு போகணும். நெறைய பதிவுகள் போட்டு பேரும் பின்னூட்டமுமாய் வாழ வாழ்த்துவோம். இதோ இவருக்காக முதல் மரியாதை படத்திலிருந்து ராசாவே உன்னை நம்பி என்ற பாடலின் உல்டா:
அக்காவே உன்னை நம்பி
இந்த இணைய உலகு இருக்குதுங்க
பல பின்னூட்டந்தான் போட்டுட்டீங்க
அவை உசுர ரொம்ப எடுக்குதுங்க
பல புரியிற பதிவை
நாங்க பாடுபட்டு எழுத
அது புரியாத பதிவா?
உங்க பின்னூட்டப் பிழையா?
7. இம்சை அரசன் கடலூர் புலிகேசி: இவரோட அங்கத உணர்ச்சி அதீதமாக பொங்கி வழிவதை ஸமீபத்தில் பலரும் படித்து மகிழ்ந்தனர். இமேஜூ, டேமேஜு'ன்னு குதிப்பார். மரம் வளரும்னா தண்ணிய ஊத்தலாம். ஆனா இணையத்துல உங்க இமேஜு வளருமின்னா இந்த கடலூர் கண்ணாயிரம் சொல்றதக் கேளுங்க; அப்பிடியேFullலரிச்சுப் போவீங்க; "ஊட்டுப் பொண்டுகளையெல்லாம் அசிங்க அசிங்கமாத் திட்டி சுய பின்னூட்டம் போட்டுக்கணுமாம்". பாவம் ஒரு சங்கத் தலைவரா இருந்துகிட்டு இவரு இமேஜு டேமாஜாச்சுன்னு வைச்சுக்குங்க... இவரு வூட்டுப் பொண்ணுங்களுக்கு கஷ்ட திசைதான் போங்க. இவர் இன்னும் பல காமெடிப் பதிவுகளுடன் கனஜோராய்த் தொடர புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஒரு சின்ன பாடல்:
Fullலாங்குழலி கொடுத்த கடலூராரே
எங்கள் புரு"சோ"த்தமன் புகழ் பாடுங்களேன்
விழுப்புரத்தில் வெட்டுப் பட்ட தெருமரங்களே
எங்கள் கடலூர் காட்டான் சா"கசங்களை"ப் பாடுங்களேன்
6. மிஸ்டர் பஞ்சாபகேசன்: சேதியைச் சூடாத் தரேன்; சுவையாத் தரேன்னு கலக்கிக்கிட்டு இருப்பவர் இவருதான்னு ஆப்பண்ணா கைகாட்ட வுயுந்து அட்சிக்கினு நானில்லே அதுன்னு அலறும் ஆசாமி ஆறாவது இடத்தில். அது சரி இணையத்துல தகவலத் துழாவுறதென்ன அவ்வளவு கஷ்டமான விஷயமா என்னா? சங்கரா சங்கரா !!! சரி நீரே இட்லிவடையாகவும் ஆகுக! ஒன்றும் குடி முழுகி விடப் போவதில்லை! இல்லை ஐந்தவதாரத்தில் ஒரு ஓரமாய் நீவிர் இருப்பதாய்க் கூறினாலும் அடியேனுக்கு ஓகேதான். இவருக்காக ஆப்பண்ணாவின் ஸ்பெஷல் பாட்டு:
ஓரொண்ணு ஒண்ணு
ஈரெண்டு மேல்கைண்டு
புரிஞ்சிக்கடா என்னோட பிரெண்டு
பேருனக்கு ரெண்டு
கரும்பு கையில உண்டு
பஞ்ச பாண்டவரு ரோலு கூட உண்டு
5. முருகேசன் In திருவிளையாடல் ஆரம்பம்: கடகடா குடுகுடு பாஷயில, கலக்கல் தலப்பாக்கட்டு பிரியாணியில மாட்டுன கல்லு மாதிரி மேட்டருக்கு மேல மீட்டரு போடுற இந்த செந்திலாண்டவர் ஐந்தாவது இடத்தில். பேரில்லாதவரெல்லாம் பெயரிலி என்ற காலம் போயி, அழும்பு ஆர்ப்பாட்டத்துக்கெல்லாம் அடியேன்தான் காரணமென்று சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் மாமனிதர்களை நினைத்தால் சிரிப்பாய் சிரிக்கத் தோன்றுகின்றது. பன்மொழி வித்தகரே! உம்மைப்பற்றி எழுதியதற்காக
மீட்டருக்கு மேலப் போட்டுக் குடுக்காததால
மேட்டர் கொடுக்காம இருந்துடாதீங்கண்ணா!!!
4. பத்ரகாளி : கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்துச்சாம்'ங்ற மாதிரி இந்த மாமி போற இடத்துலெல்லாம் ஒரே ஜிங்கா டான்ஸ் போட, பின்னாடியே ஓடற பார்டிங்க இருக்குதுங்கோ. நாலாவது இடத்துல இருந்தாலும் இவரு எப்ப வேணாலும் மொதோ இடத்தை பிடிக்கலாம். இவருக்கு என்னா பிரச்சினைன்னா தான் இப்போ இணையத்துல எந்த கூட்டணியில இருக்குறோங்றதக் கூட இவரு முடிவு செய்ய முடியறதில்ல. நீங்க இப்போ இந்தக்கட்சிதான்னு முன்னாடி சொன்ன அதே பார்ட்டியே முடிவு செய்யுது. ஆஹா என்னா ஜனநாயகம் என்னா ஜனநாயகம்? மாமியும் ஸ்மைலி போடறாங்க; அப்புறம் அதையே முறுக்கி அழுவாச்சி காட்டுறாங்க. நம்ம வைரமுத்து ஸார் கூட இவங்க கதையை 'அழுவாச்சி காவியம்'ன்னு எழுத யோசிக்கிறாராம். இதோ இவருக்காக ஒரு பின்னூட்ட ஜிங்கா டான்ஸ் பாட்டு:
கேட்டேளா இங்கே
பதிவப் பாத்தேளா அங்கே
எதையோ நெனைச்சி
அதையே நெனைச்சேனா?
இணையமக்கள் மனசு போல இருப்பேன்
வேறெதுக்கு நுனிப்புல்லா இருக்கேன்?
வாங்கோணா
பின்னூட்டம்
தாங்கோணா
3. The Mask : 'எப்பிடியிருந்தா நான் இப்பிடி ஆயிட்டேனே'ங்ற விவேக் மாதிரி மொடங்கிப் போயி மூணாவது இடத்துல முகமூடி இருக்காரு. நேரில் ஆஜானுபாகுவாய் (நன்றி: டோண்டு ஸார்) இருந்தாலும், வருடி வருடி காய்த்துப் போன கரங்கள் (நன்றி: மூக்கனார்) கொண்டவராய் இருப்பார் என்று நினைத்தால் மனிதர் கை ஸாப்ட்டாய்த்தான் இருக்கின்றது. புச்சா அட்ச்சு ஆடாம, டௌன் பத்து For Dummies'ன்னு புளிச்சுப் போன பதிவுகளாய்ப் போடுறதுக்கு பின்னாலயும் புதுப்பேட்டை கண்ணன்தான் என்று ஊர்க்குருவியொன்று உச்சுக் கொட்டுகின்றது. அட ராமா ராமா!!! இவருக்கு காணாமல் போன ஏஜெண்ட் ஞானபீடம் ஒருமுறை பதிவிலிட்ட மாஸ்க் பாட்டை நீங்களே போட்டு கேட்டுக் கொள்ளுங்கள்.
2. கண்டதை (கட்&பேஸ்ட்) செய்கின்றேன்: ஒன்று இரண்டு மூன்றென்று பாடுவெனக் கட்டளையிடக் கந்தன் இல்லாவிட்டாலும், ஒ'ள'வையாராய் கண்டதுக்கும் நம்பர் போட்டாலும் போட்டார்... இவருக்கு நான் ஒரு நம்பர் போடாம இருக்க முடியுமா? இந்தா புடிங்க இரண்டாவது இடம். கண்டநாள் முதல் கடுப்பான திருமவுண்ட்டன் அடிகளாரின் 'Babble'ஆய் கவிதை ஒன்று இவருக்காக:
BaBa Blaksheep
Have You any Soup?
Yes Sir Yes Sir
Ten Cheap Soup(s)
Nine for my Masters
One for myself
None for the bloggers
who really worth the slot
1. மொதோ இடத்தை யாருக்குத் தர்றதுன்னு டைம் மேக'ஜின்' கணக்கா ரோசிச்சுப் பாத்ததுல மேல உள்ள ஆளுங்களைத் தவிர்த்து மத்த அல்லாரும் இந்த இடத்துக்கு ஒத்து வர்றாங்க. பார்ப்பன ஈயம், பித்தளை, துத்தநாகம், ஈழம், இலங்கை, உள்குத்து, பின்னூட்டக் கயமை, போலி, கொலசாமி என்று சொந்த செலவில் சூனியம் செய்து கொள்ளும் நம்மள விட்டா மொதோ இடத்தை யாருக்கு வுட்டுத் தர்றது?
அல்லாருக்கும் லேட்டானாலும் லேட்டஸ்ட்டா பு(கு)த்தாண்டு வாழ்த்துக்களோடு ச்சீய் யூ !!!

Subscribe to:
Posts (Atom)