Wednesday, February 22, 2006

பயாஸ்கோப்பு படம் காட்டுறாங்கோ

மன்னாரு கோபுரம்னா என்னாப்பா?
பெண்கள் பூசுமஞ்சள் பிராண்டுபா
அப்ப குப்பைன்னா?
இத்தான்னா வோணாங்றது? வம்புல மாட்டி வுடப் பாக்குறியே...
அட சும்மா சொல்லுப்பா
சரி உனக்குப் புடிக்காதது எனக்குப் புடிச்சா அது குப்பை
அப்பிடிப் போடு அருவாள

இப்ப படங்களப் பத்திப் பாப்போம். சினிமாங்றது ஒரு சிறந்த பொழுதுபோக்கு ஊடகம். ஒரு கனவுத் தொழிற்சாலை'ன்னு கூட சொல்லுவாங்க. மத்த தொழிலைப் போலத்தான் சினிமாத் தொழிலும். மொதலு போட்டு லாபம் பாக்கத்தான் பட மொதலாளிங்கோ நினைப்பாங்க. இதுல மக்களுக்கு சேவை செய்றது அது இதுன்னு பீலா யாராவது உட்டா நம்ப முடியுமா?

கேஎஸ் ரவிக்குமாரை தெரியாத ஆளுங்க இருக்க முடியாது. கிச்சடி டைரக்டர். தன்னோட ஒரே பார்முலாவை கிண்டி கிண்டி படம் கொடுக்குறதுல நிபுணர். அவர் ஒரு பேட்டியில சொன்னாரு: "மொதலு போடறவரோட கையைக் கடிக்காமத்தான் நான் படம் பண்ண விரும்புறேன். நானும் கொஞ்சம் சைடுல பணம் பண்ணிக்கிலாமுல்ல. சேவை, மெசேஜ் அப்பிடியெல்லாம் கொடுக்கறதுக்கு நான் இல்ல." பாரதிராஜா வேதம் புதிது எடுத்து கையைச் சுட்டுக்கிட்டு கொடி பறக்குது எடுத்து கல்லப்பொட்டியை நிரப்பினார். அப்ப நொந்து போயி அவரு சொன்னது "வேதம் புதிது போல பத்து படம் பண்றதுக்கு ஒரு கொடி பறக்குது தேவைன்னு." இப்பிடி சொல்லிக்கிட்டே போகலாம்.

ஆனா எதுக்குமே உணர்ச்சிவசப்படும் தமிழன் நிலைமை அப்பிடியா சினிமாவைப் பாக்குது? பத்து ரூபாய் டிக்கெட் எடுத்துட்டு பத்து நோட்டம் சொல்லுது. குவி லென்ஸ் போட்டு பிரேம் பை பிரேம் ஆராய்ச்சி பண்ணி, "காதல் பட கிளைமாக்ஸில் ஹீரோ பைத்தியமாய் ஞ்ஞஞ்ஞஞன்னு குத்திக்கும் போது பேக்கிரௌண்டில் பெரியார் சிலை தெரிஞ்சுது... ஹீரோ தாழ்த்தப்பட்ட சாதிங்றதுனால உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஹீரோயினோட டைரக்டர் பஸ்ட்நைட் வெக்கில்லேன்னு"... அடப்பாவிங்களா பிஹெச்டி பண்ண வேற நல்ல விஷயங்களா கெடைக்கல்ல...?

ஏதோ படத்தப் பாத்தமா... அடுத்த வேலையைக் கவனிப்போமா'ன்னு இல்லாம சனங்களின் கலைஞன், சமூகக் காவலன், குப்பை/கோபுர கோவிந்தன்'ன்னு குலவையைப் போட்டுகிட்டு... புடிச்சா படத்தைப் பாருங்க... புடிக்கலேன்னா பாக்காதீங்க As Simple As That (இப்பெல்லாம் இப்பிடி இங்கிலீபீஸுல எழுதி பதிவைப் போட்டாத்தான் இயல்பா இருக்குன்னு சொல்றாங்கப்பா). டாக்குமெண்டரி, அவார்ட் பிலிம், குறும்படம் போல நல்ல விதயங்களை இலக்கியமாய்ப் பேசுங்கோ பாஸு. அத்தோட ஆடியன்ஸ் வேற. திரைப்படத்தோட நோக்கமும், ஆக்கமும், ஆடியன்ஸும் வேற. ஏதோ என்னை மாதிரி பாமர விசிலடிச்சான் குஞ்சுகளுக்காக பாவம் திரைப்படங்களை வுட்டுடுங்க மாம்ஸூங்களா!!!

நடிகநடிகையர் மத்த வேலை பாக்கிறவங்க மாதிரிதான்யா. கூலிக்கு வேலை. ஆன்னு அவங்கள நாம பாக்கிறோம். ஒரு சேஞ்சுக்கு அவங்கள கூட்டியாந்து நீங்க பாக்குற வேலையைக் காமிங்க. "அட எப்டிப்பா இப்பிடி முடியுது"ன்னு உங்களோட நாலு வரி ஜாவாக்கோடுக்கும், மெயின்பிரேம் க்ரீன் ஸ்கீரின் ஜிகிடிக்கும் வாயை பொளப்பாங்க! உங்க வலைப்பதிவைக் காட்டுங்க. அட இப்பிடி கூட சிந்திக்க முடியுமா (Both positive and Negative way) தெகைச்சிருவாங்க! ஆனா நாம அப்பிடி செய்யவோ ஏன் நெனைக்கவோ கூட மாட்டோம். To tell you the truth everybody has something special ! (இதுக்கு அர்த்தம் என்னான்னு கேக்கப்படாது. சொலவடை சொன்னா அனுபவிக்கனும். அர்த்தம் கேக்கப்படாது - பம்மல் K சம்பந்தம் - கமல்)

இதுக்கு மேலயும் முடியலியா? சரி HBO'ல பில் மோர் (Bill Maher) ஷோவான Real Time பாத்துருக்கீங்களா? (இணையத்துல கட்டளை போட்டா ரவுண்டு கட்டி அடிப்பாங்க'ன்னு தெரிஞ்சும்) அது மாதிரி இந்தா புடிங்க New Rules:

1. படம் பாத்து அடிக்கடி "உவ்வேக்" என்ற சப்தமுடன் வாந்தியெடுப்பவரா நீங்கள்? உங்களைப் போன்றோரின் பிச்சினைக்குத் தீர்வாக சினிமா டிக்கட்டுடன் அல்லது டிவிடியுடன் பிளைட்டில் கொடுக்கப்படும் Sick Bag மற்றும் எலுமிச்சைப்பழம் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
2. படம் பாத்து விட்டு கண்ணீர் விட்டு கதறுபவரா நீங்கள்? மழை நீரைச் சேமிப்பது போல் ஒவ்வொரு உணர்ச்சிப் படத்திற்கும் கண்ணீர்க் கிண்ணம் வழங்கப்பட வேண்டும். (சென்னையில் புழங்கும் தண்ணீரை விட உப்புச் சத்து கண்ணீரில் குறைவாகவே இருப்பதால்)
3. நடுநிசியில் படம் கொடுத்த தாக்கத்தால் தூக்கமின்றி தவிப்பவரா நீங்கள்? கண்விழிப்பால் ஏற்படும் அஜீரணத்தைத் தவிர்க்க படத்துடன் இஞ்சி மொரபா அல்லது சித்தநாதன் வாசநாதி திரவிய தொழிற்சாலையிலிருந்து ஒரு பாட்டில் ஓமத்தீநீர் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
4. கலாச்சாரத்தையும், மொழியையும் தமிழ் சினிமா மூலம் கற்றுக் கொள்ள விரும்புவரா நீங்கள்? ஸாரி உங்களைத் திருத்தவே முடியாது.
5. படத்தைப் பார்த்து விட்டு குப்பை, கோபுரமென்று குமுறுபவரா நீங்கள்? நீங்கள் குப்பையென்று வீசியதிலேயே பல வயிறுகள் வாழ்க்கையாய் (எகா. குப்பை பொறுக்குபவர்) கொண்டிருப்பதால், நீங்கள் அதிக குப்பைகள் வீசவேண்டும்.
6. This guy should get more recognition என்று ஹீரோ குறித்து இயல்பாய் வருத்தப்படுபவரா நீங்கள்? அட இது ஸிம்ப்பிள். ஒரு கட்சி ஆரம்பித்து அவரை முதல்வர் ஆக்கிவிட வேண்டும். திரைக் கலைஞர்களை நாம் இதுவரை அப்படித்தானே Reconize செய்து வந்திருக்கின்றோம்!
7. படம் பற்றி சிலர் பேசிக் கொண்டிருந்தால் "அச்சச்சோ ஹீரோவுக்கு என்ன ஆச்சு"ன்னு புரியாமல் தவிப்பவரா நீங்கள்? நீங்கள் சமீபத்தில் நியூஜிலாந்திலிருந்து தங்கக் காசுகளுடன் இந்தியா விஜயம் வந்திருக்க வேண்டும். (கரெக்டா?)
8. படம் பார்த்துவிட்டு லாஜிக் புரியவில்லை என்று வருத்தப்படுபவரா நீங்கள்? உங்களுக்கு இடியாப்பம், பாயா இலவசமாக வழங்கப்பட வேண்டும். சிக்கலின்றி இடியாப்பத்தைப் பிரித்து பாயாவில் தொட்டு சாப்பிடுமுன்னர் படம் முடிந்து போயிருக்கும்.
9. தமிழ் சினிமாவின் தராதரம் ஏன் இன்னும் அப்படியே இருக்கின்றது என்று கலங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஸ்டீபன் செகால் நடித்த அனைத்து ஹாலிவுட் படங்களும் இலவசமாக தரப்படும். ஒவ்வொரு படத்தையும் பார்த்து அவசரமில்லாமல் நீண்ட விமர்சனங்களையும் எழுத வேண்டும். (மவனே அப்புறம் பேச்சு சத்தம் வரும்? ;-)

வலைப்பதிவு வழக்கத்தில் ஒன்பது கட்டளைகள் மட்டுமே!!!

பி.கு. இது மிக மிக அவசரமாக எழுதிய பதிவு. எனவே பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டால் அதிகாலை மூன்று மணிக்கு சரி செய்து விடுவேனென்று உறுதி கூறுகின்றேன்.

Wednesday, February 15, 2006

-/அஆ அன்புடன் ஆபாசப்பின்+ஊட்டம்

கொஞ்ச காலமாகவே ஆபாசப் பின்னூட்டங்களால் தமிழ் வலைப்பதிவர்கள் தாக்கப்பட்டது புதிய செய்தியல்ல. இதோ தனது குவியம் - 24 பதிவில் தானே பெயரிலி விட்டுக் கொண்ட ஆபாசப் பின்னூட்டத்தைப் பாருங்கள்... போலிப் பெயர்களில் உண்மையான ஆபாச பின்னூட்டமிட்டர்(கள்) பெயரிலியிடம் அரிச்சுவடியிலிருந்து பாடம் படிக்க வேண்டிய அளவிற்கு இலக்கிய ரகப் பின்னூட்டமிது (படம் பெரிதாகத் தெரிய மௌசை படம் மீது கிளிக்கவும்):

இப்பின்னூட்டம் வந்த நேரம் Mon Feb 06, 05:12:08 PM 2006. பிறகென்ன நினைத்தாரோ தெரியவில்லை. Mon Feb 06, 06:43:42 PM 2006 (ஏறத்தாழ ஒன்றை மணித்தியாலம்) கழித்து அப்பின்னூட்டத்தை எடுத்துவிட்டு கீழ்க்காணும் பின்னூட்டம் விட்டார்.

முந்தைய ஆபாசப்பின்னூட்டத்தை வாசித்தீர்கள்தானே என்று அநாமதேயம், அப்டிப்போடு, டிசே தமிழனை குசலம் விசாரிப்பதென்ன? பின்னூட்டத்தை தானே நீக்கிவிட்டதாக ஸ்மைலியோடு சொல்லும் பாங்கென்ன? நல்லவேளை இப்பின்னூட்டம் இன்னும் அப்படியே இருக்கின்றது.

பெயரிலியின் தகிடுதத்தங்கள், போலி அரசியல் நிலைப்பாடுகள், திசை திருப்பும் வேலைகள், அவதூறுப் பிரச்சாரங்கள் எல்லாம் தொடர்ந்து வெளிவரும். என்ன செய்வது பெயரிலி மட்டும்தான் இணையப்படம் காட்ட முடியுமா என்ன? வழமை போல் ;-)

பின்குறிப்பு:

1. படங்கள் டயல்-அப் முறையில் வாசிப்போர்க்கு மெதுவாக லோட் ஆகலாம். முடிந்தவரை குறைவான File Size'யை தேர்ந்தெடுத்து வெளியிடுகின்றேன்.
2. எனது முந்தைய பதிவின் சவாலுக்கு பெயரிலியிடமோ, அவரை ஆதரிப்பவரிடமிருந்தோ பதில் இன்னும் கிட்டவில்லை. இருப்பினும் சவால் இன்னும் சாகவில்லை.
3. இப்பதிவு ஸ்டீரியோ டைப் பதிவுகள் வகையிலில்லை. எவ்வளவு காலம்தான் ஏமாற்றுவார் அல்லது ஏமாறுவார் இணையத்திலே?
4. ஜூகல் பந்தியையும் தொடருவேன்.

Saturday, February 11, 2006

-/ச்சீய்த்த்தூதூஊஊஊஊஊ'விற்கு

உலகத்திலே பாவனைக்காரர்களும் முதுகுசொறியிகளும் புழுக்களாய் அதிகரித்து, போதையும் பொய்புழுகும் ஊர்கின்றபொழுதினிலே இணையலோகத்தை இரட்சிக்க பகவான் முகமூடிகளுடன் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம அவதாரமெடுக்கின்றார் என்பதிலே பெரும்நம்பிக்கை உள்ளவன்...

-/பெயரிலி என்கின்ற ரமணீதரன் கந்தையா PHd

தற்பொழுது தமிழ்வலைப்பதிவுகளில் நடக்கும் மயிர்ப்பிடிச் சண்டைக்கான சரியான விளக்கவுரையை பெயரிலி 22 மே 2003'லேயே (தனது பல வலைப்பதிவுகளில் ஒன்றில்) கூறிவிட்டார். தனக்கென்று முகமூடி போட்டுக்கொள்ள பாவம் தெய்வ அவதாரங்களை துணைக்கழைக்கும் பகுத்தறிவுப் பெயரிலியின் இன்றைய நிலை என்ன? தான் தவிர்த்து ஏனைய முகமூடிகளெல்லாம் சாத்தான்கள் என்று நிறுவ முயலும் பெயரிலியின் ஆண்மையற்ற ஆவேசத்தைக் கண்டால் புல்லரிக்கின்றது.

ஐபீ அட்ரஸ் ஒற்றுமை மூலம் இணையகுசும்பனும் போலி டோண்டுவும் ஒருவரே என்று கச்சை கட்டிய ராம்வோச்சரை இணையத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. தனது சொந்தப் பெயர்களில் எழுதிய பலரது ஐபீ அட்றஸ¤க்களையும் வெளிப்படுத்தி காணாமல் போய்விட்ட (அவ்வப்போது மீண்டும் தோன்றும்) அப்பதிவில் "சாரம்" ஏதுமில்லை. ஆனால் இன்று அதே போலியான, விஷமத்தனமான நிறுவுதலை பெயரிலியும் முயன்று பார்க்கின்றார் தனது சொந்தப் பெயர்களில் எழுதிய பலரது ஐபீ அட்றஸ¤க்களையும் வெளிப்படுத்தி காணாமல் போய்விட்ட (அவ்வப்போது மீண்டும் தோன்றும்) அப்பதிவில் "சாரம்" ஏதுமில்லை. ஆனால் இன்று அதே போலியான, விஷமத்தனமான நிறுவுதலை பெயரிலியும் முயன்று பார்க்கின்றார் தனது குவியம்-25 http://wandererwaves.blogspot.com/2006/02/25.html பதிவில். இதற்கு இதோ பதில் விளக்கம்:

1. ஐபீ அட்றஸ் என்பது ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கான, தனிப்பட்ட அடையாள எண். இது உங்களின் இணைய சேவை தரும் நிறுவனம், அலுவலகத்தில் உள்ள ப்ராக்ஸி சர்வர்களைப் பொறுத்து மாறுபடும். ஐபீ அட்றஸ் குறித்து மேலதிக விவரங்கள் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன.

2. உங்களது ப்ளாகிற்கு வருகை தருபவர், பின்னூட்டம் விடுபவர்களின் ஐபீ அட்றஸை கண்டுபிடிக்க இலவசமாகவும் காசு கொடுத்தும் சாப்ட்வேர் வாங்கி உங்களது கம்ப்யூட்டரில் நிறுவிக் கொள்ளலாம். காசு கொடுத்தால் எந்தப்பக்கத்திற்கு யார் வந்தார்கள், எவ்வளவு நேரம் படித்தார்கள் போன்ற அதிகமான தகவல் கிடைக்கும். எடுத்துக்காட்டாக எக்ஸ்ட்ரீம் டிராக்கிங்.காம் இணையதளத்திற்கு செல்லவும். http://extremetracking.com

3. மேற்சொன்ன சேவைகள் எதற்கு? இது முழுக்க முழுக்க உங்களை "தற்காத்துக்" கொள்ளவே. உதாரணமாக உங்களுக்கு ஆபாசப் பின்னூட்டம் வந்ததாக வைத்துக் கொள்வோம். இத்தகைய சாப்ட்வேர் மூலம் பின்னூட்டத்தின் ஐபீ அட்றஸை கண்டு கொண்டு, குறிப்பிட்ட இணையசேவை தரும் நிறுவனத்திற்கோ, பிளாக்கர்.காமிற்கோ நீங்கள் புகார் செய்ய முடியும்.

4. அடுத்தவரின் ஐபீ அட்றஸைக் கண்டு பிடிக்கும் போது உங்களின் ஐபீ அட்றஸ¤ம் பிடிபடுமே. அதற்கு மாற்று வழி இல்லையாவென்றால் அதுவும் உண்டு. ஒருவர் தனது ஐபீ அட்றஸை ஏன் மறைக்க வேண்டும்? இன்று ஐபீ அட்றஸை வைத்து அடையாளத் திருட்டு (Identity Theft) கூட நடக்கலாம். மேலும் உங்களது கம்ப்யூட்டர் வைரஸ், வோர்ம், ஸ்பாம்/எரிதம் போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகாமலும், அடையாளத் திருட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், பிரைவஸியாக வலையை மேயவும் ஐபீ அட்றஸை மறைத்துக் கொள்ள இலவசமாகவும், காசு கொடுத்தும் சேவைகள் தரும் நிறுவனங்கள் பல உள்ளன. கூகிளில் "Free Proxy Internet Surf" என்று தேடிப்பாருங்கள். எடுத்துக்காட்டாக ப்ராக்ஸிபை.காம் என்ற http://proxify.com/ இணையதளத்திற்குச் செல்லுங்கள். அங்கே நீங்கள் (உங்களது ஐபீ அட்ரஸ் மறைத்து) பிரைவஸியாக படிக்க விரும்பும் இணையதளத்தின் முகவரியை (URL) இடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரின் ஐபீ மறைக்கப்பட்டு, ப்ராக்ஸிபை நிறுவனத்தின் ஐபீ அட்ரஸ¤டன் நீங்கள் ஹாயாக உலவலாம். நல்ல விஷயங்களுக்காகப் பயன்படும் இச்சேவை ஆபாசப் பின்னூட்டமிட்டு ஆட்டம் போடுபவர்கள், போலிப் பெயரில் எழுதுகின்றவர்கள், தனிப்பட்ட காழ்ப்புணர்வை வெளிப்படுத்துபவர்கள், பயங்கரவாதம்/தீவிரவாதம் ஆதரிப்பாளர்கள் மூலம் பலாத்காரப்படுவதும் உண்மைதான்.

5. இப்பொழுது பெயரிலியின் "கண்டுபிடிப்பிற்கு" வருவோம். போலி டோண்டுவும், இணைய குசும்பனும் 207.44.180.48 என்னும் ஐபீ அட்ரஸிருந்து புறப்பட்டதாய் படம் போட்டு சொல்கின்றார். போலியின் பின்னூட்டம் வந்த தேதி 24/08/05. இணைய குசும்பனின் பின்னூட்டம் வந்த தேதி 19/10/05. இந்த 56 நாட்கள் வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும். சரி 207.44.180.48 இத்தளத்திலிட்டுப் http://samspade.org/ IPWHO? என்னும் பட்டனை அமுக்கினால் கீழ்க்கண்ட தகவல்கள் கிட்டும்:
Server Used: [ whois.arin.net ]
207.44.180.48 = [ ev1s-207-44-180-48.ev1servers.net ]
OrgName: Everyones Internet
OrgID: EVRY
Address: 390 Benmar
Address: Suite 200
City: Houston
StateProv: TX
PostalCode: 77060
Country: US
NetRange: 207.44.128.0 - 207.44.255.255
இந்த Everyones Internet அமைப்பு ப்ராக்ஸிபை.காம் போல இலவசமாக ஆன்லைன் ஐபீ மாஸ்க்/பிராக்ஸி வழங்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பயன்படுத்தி "யார்" வேண்டுமானாலும், தமது ஐபீ அட்ரஸ் மறைத்து வலை மேய முடியும். பதிவுகளில் பின்னூட்டங்கள் இடமுடியும். இச்சேவையை பயன்படுத்திய அனைவருக்கும் 207.44.128.0 முதல் 207.44.255.255 கொண்ட ஐபீ எண்களே அளிக்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஐபீ எண்கள் டைனமிக் முறையில் அளிக்கப்படுகின்றன. எனவே ஒரே ஐபீயான 207.44.180.48 என்ணில் இருந்து பலர், பலமுறை இணையத்தில் இந்நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தி உலவியிருக்கலாம். போலி டோண்டுவின் மற்றும் குசும்பன் பின்னூட்டங்களுக்குமிடையே 56 நாட்கள் வித்தியாசம் யார் கண்ணையும் உறுத்தவில்லையே? மேலும் Everyones Internet சேவையினை துஷ்பிரயோகம் (உதா: ஆபாசப் பின்னூட்டம்) யாராவது செய்திருந்தால் கீழ்க்கண்ட தகவல்களைப் பயன்படுத்தி புகார் கொடுக்க முடியும்.
OrgAbuseHandle: ABUSE477-ARIN
OrgAbuseName: ABUSE
OrgAbusePhone: 1-713-579-2850
OrgAbuseEmail: abuse@ev1.net
இப்புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் பின்னூட்டம் இடப்பட்ட நேரத்தைக் கணக்கில் கொண்டு, மேற்கண்ட நிறுவனம் எந்த ஐபீயிலிருந்து அப்பின்னூட்டம் வந்தது என்பதை ட்ரேஸ் செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது சைபர் குற்றத்தைப் பிரயோகிக்க முடியும்.

6. மேற்கண்ட பின்னூட்டங்கள் வெளியான காசியின் வலைப்பதிவில் பின்னூட்டம் இட ப்ளாக்கர் அக்கவுண்ட் கூடத் தேவையில்லை. அப்படியென்றால் "யார்" வேண்டுமானாலும் "இணையகுசும்பன்"/"போலி டோண்டு" போன்ற பல பெயர்களில் பின்னூட்டங்கள் இட முடியும். இப்பதிவையே நீங்கள் கூட பின்னூட்டமாக காசியின் வலைப்பதிவில் என் பெயரிட்டு சேர்க்கலாம். மேலும் இப்பதிவில் பலர் போலிப்பெயர்களைப் பயன்படுத்தி பின்னூட்டமிட்டதை அனைவரும் அறிவார்கள். இதைக் கூட அறியாதவரா பெயரிலி என்ற கேள்வி வரலாம். பெயரிலி செய்வது திறமையான "Character Assassination". என்னுடைய ஒரிஜினல் ஐபீயை பகிரங்கமாக வெளியிட நான் தயார். மேலே கூறியபடி அந்நிறுவனத்திற்கு புகார் செய்து போலி டோண்டு என்ற பெயரில் பின்னூட்டமிட்டது இணைய குசும்பன்தான் என்பதை பெயரிலி தமிழ் வலைபதிவிற்கு நிறுவுவாரா? இது பகிரங்க சவால். கொஞ்சமாவது தன்னையும் மனிதனாக மதித்து, இந்த சுயமரியாதைச் சுடர் இச்செயலை செய்யுமா? இதற்காக ஆகும் செலவைக் கூட நான் ஏற்றுக் கொள்கின்றேன். இல்லாவிடில் அவரை எப்பிறப்பாக/எப்பிறவியாக நினைப்பதென்ற கவலையும் இப்போது வருகின்றது.

7.
சொந்த விஷயங்களை பொதுவில் வைத்தற்காக/சொன்னதற்காக காசியும், டோண்டுவும் போலி ஆபாசப் பின்னூட்டங்களால் அவஸ்தைப்பட்டது தெரியாதா? நான் எனது ஐபீயை மறைத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உண்டு. காசியின் வலைப்பதிவில் எனது "இணைய குசும்பன்" பெயரிலேயே பின்னூட்டம் விட்டேன். போலி டோண்டுவாக நான் பின்னூட்டம் விடவில்லை. மேலும் போலி டோண்டு என்று பின்னூட்டம் விட்டவர் காசியின் நடவடிக்கைகளை ஆதரித்ததாக எழுதியிருக்கின்றார். நாந்தான் காசியின் மீதும், தமிழ்மணத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டவன் என்று பிம்பம் பில்டப் கொடுத்தார்களே! நான் ஏன் போயும் போயும் காசியை ஆதரித்து அதுவும் போலிப் பெயரில் போட வேண்டும்? ;-)

8. பத்து மைல் என்று யார் எழுதினாலும் அது இணைய குசும்பன்தான் என்ற பொருள்படும் பெயரிலியின் இரண்டாவது படத்தைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகின்றது. இந்த அறிவிலிக் கண்டுபிடிப்பை படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். அசுமிதா என்பது ஒருவரின் மனைவி பெயரென்றால், அசுமிதா என்ற பெயர் உள்ளவரெல்லாம் அவரது மனைவிகள் என்பது போலிருக்கின்றது. (அசுமிதா: கற்பனைப் பெயர்; உதாரணத்திற்காக). எனது முந்திய சவாலில் முகமூடியைச் சேர்க்கவில்லை என்பதால் "இணையகுசும்பன்=முகமூடி" என்று அறிவுஜீவிகள் வரிந்து கட்டிக்கொண்டு வரலாம். எனவே பெயரிலியின் உளறலை உலகினுக்கு அறியத்தர "அய்யா பெயரிலியே! இந்த இழவு மேட்டரையும் (இணையகுசும்பன்=முகமூடி) நிரூபிக்க முடியுமா?" ஐயகோ என் செய்வேன்? யார் யாரோ கழிப்பதற்கு மறுகழிப்பு நான் செய்ய வேண்டியதாக இருக்கின்றது!

9. பெயரிலிக்கு தான் ஐபீ கண்டுபிடிப்பதில் கில்லாடி என்ற நினைப்புடன் இணையகுசும்பன் சென்ற பதிவில் மறுபடி வெளியிட்டு நியாயமான முறையில் தவறை ஒத்துக் கொள்ளக் கேட்டேன். அதற்கு அவரது பதில் (போலி டோண்டு = குசும்பன் = முகமூடி) என்று படம் காட்டி கதை விடுவது முன்னர் செய்த தவறைக் காட்டிலும் படு கேவலமாக இருக்கின்றது.

10. அடிப்படை விஷயங்களையும், அடியோடும் அரசியலையும் புரிந்து கொண்டே பெயரிலியின் பதிவிற்கு பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பொம்மைகளை உடைபடும் நேரமாம்... பெயரிலிக்கு போலி டோண்டு = குசும்பன் = முகமூடி என்று நிறுவுவதில் இந்த மேதாவிகள் உதவி செய்யலாம். அல்லது எனது சவாலுக்கு இந்த முறையாவது விளக்கம் கொடுக்க பெயரிலியை கேட்டுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பெயரிலிக்கு அசாத்திய திறமையென்று சங்கரபாண்டி வெட்கமில்லாமல் சொரிந்து கொண்டிருக்கின்றார். கேஸென்றால் 24 மணிநேரத்தில் காலைப் பிடிக்கும் அவரது வீரத்தை பெயரிலிக்குக் கற்றுக் கொடுக்கலாம். துர்ப்பிரச்சாரம் செய்வது யாரென்று அவர் நேர்மையாக பெயரிலியைக் கேள்விகள் கேட்கலாம். "டெக்னிக்கல் விஷயங்களையும்", பெயரிலியின் "அரசியல் வேடங்களையும்" ஆழ்ந்து ஆராய்ந்து விட்டு தேன் துளி "நன்றி" கூறலாம். கொளுக பரப்பும் அடியாட்களை திருத்த முடியாது. எனவே அவர்களை விட்டு விடலாம். வார்த்தைக் கடல் போன்று சொல் சமுத்திரம் என்னும் தனது பால் மணம் மாறாத பருவத்தில் எழுதிய போஸ்ட் கார்டு மேட்டரை தங்கமணி பதியலாம். எந்த சைடில் பொம்மைகள் உடைகின்றன என்று அப்டிப்போடுவும், பொட்டிக்கடையும் வேடிக்கை பார்க்கலாம்.

இவற்றில் எதுவுமே செய்யாமல் வெட்டியாக எஜமானுக்கு கடாவெட்டி பூசைபோடுகின்றார்களாம். அவர்கள் வழக்கப்படியே இதோ குலவை "ச்சீய்த்த்தூதூஊஊஊஊஊ"

-/ச்சீய்த்த்தூதூஊஊஊஊஊ தொடரும்

Thursday, February 09, 2006

ஆடி(ய) ஆட்டம்

நம்ம கோனார் நோட்ஸும் புரியவில்லையாம். அட ஏடுகொண்டலவாடா, எண்ட குருவாயூரப்பா மற்றும் இன்னபிற உள்ளங்கவர் கள்வர்களை உடனழைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கொஞ்சம் ரிலாக்ஸ்டா இந்த ஜோக்கைப் படிங்க. (டிஸ்கிளைமர்: யாரையும் மலினப்படுத்தும் உத்தேசமில்லை. ஜோக் http://www.funtoosh.com தளத்திலிருந்து உருவப்பட்டது. எல்லாப் புகழும் அந்த தளத்திற்கே!!!)

ஹனுமான்ஜீ எம்மதத்தைச் சேர்ந்தவர் என்று இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் சீக்கிய அன்பர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இந்து: ஹனுமான்ஜீ ராம்ஜீயை வழிபட்டவர். ராமர் இந்துவாகையினால் ஹனுமாஜீயும் இந்துதான்.
முஸ்லிம்: இருக்கவே முடியாது. சுலைமான், ரஹ்மான் போல ஹனுமான் என்ற பெயர் வருவதால் அவர் முஸ்லிம்தான்.
கிறிஸ்துவர்: ஒருக்காலும் இருக்காது. Heman, Superman போல Hanuman இருக்கின்றது. எனவே அவர் கிறிஸ்துவரே.
சீக்கியர்: (பலமாக மறுதலிக்கின்றார்) யாரோட பொண்டாட்டியவோ, யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்களாம். அதுக்குப் போயி தன் வாலுல தீயை வைச்சுக்கிட்ட ஹனுமான் கண்டிப்பாக சர்தாராகத்தான் இருக்க வேண்டும்.

படிச்சீங்களா? ராம்வாச்சர் என்பவர் தனது பதிவில் சில ஐபீ அட்றஸ்களை வெளிப்படுத்தினாராம். தனது ஐபீயை ஏன் போலிகளோடு ஒப்பிடும்படியான பதிவில் வெளியிட்டீர்களென்று முகமூடி தன்னோட பதிவுல கேள்வி கேட்டாராம். உடனே தன்னோட ப்ளாக்குல தீப்பதிவு போட்டு உடனே வழக்கம் போல அணைத்தும், பின் அழைத்தும் விட்டார் அருமை அண்னை. இப்ப சொல்லுங்க யாருடைய பதிவுக்கோ, யாரோ கேள்வி கேட்க தீயை வைச்சுக்கிற அண்னை அனுமந்துசிங் யார்? முகமூடி பதிவுல ஒரு இடத்தில் தனது பெயர் இழுக்கப்பட்டதாய் கூறுவார். சரிதாம்பா! அதுக்கு மட்டும் பதிலச் சொல்லிட்டுப் போகவேண்டியதுதானே? இல்லேன்னா நானும் வாச்சும் ஒண்ணு! இதை அறியாதவன் வாயில ஐபீ மண்ணு!ன்னு சவுண்ட் ஜோரா உட வேண்டியதுதானே!!! அடடே அதுல அவரே பின்னூட்டம் போட்டுகினு கொஞ்ச நேரம் ரசிச்சப்போ போலிகளே வெட்கப்பட வேண்டும். என்ன போலி பின்னூட்டங்கள் கிராமத்து அக்மார்க் ரக இலக்கியம் எண்டால் அண்னையோடது பின்நவீனத்துவ இலக்கியம். ஏனெண்டால் அது பாவம் ஏதோ நாயின் பின் காயத்தைப் பற்றி விலாவாரியாக விளக்கியது (பின்னூட்டத்தைத் தேட வேண்டாம். வழமைபோல் அது ஜண்டுபாம் விளம்பர வலியைப் போல் காயப். போயே போச். போயிந்தே. It's Gone!) இதே போல் வரும் பின்னூட்டங்கள் ஸ்மைலியோடு போடப்பட்டால் அது பகிடி (தமிழ்குஷ்பூவில் அங்கீகரிக்கப்பட்ட அங்கதத்தை பகிடி என்பார்கள்) என்று கூறுகின்றார் கொளுகை பரப்புச் செயலாளர் கெடா வெட்டி கர்னாடிக் டமாஸ். போலிகளுக்குப் புரிந்தால் சரி!!! ஏதோ என்னாலானது... நாராயண நாராயண!!!

சரி... ஆடி(ய)வரைக்கும் சின்னதா மீண்டுமொரு குத்தாட்டம் போடலாமா? கடந்த ஜூன் மாதம் 30'ம்திகதி அண்னை இட்ட இந்தப் பின்னூட்டத்திற்கு பதிலென்ன?
நானிருக்குமிடம் "நண்பர்" மூலம் தெரிந்தாலும், கூடிப் பேசலாம் வாங்க என்று "நண்பர்" மூலம் அழைத்தாலும், போகி (Bogi) என்று தம்போலா கொரலு கொடுத்திட்டு பொஸ்ரன் ரீ பார்ட்டிக்கு பதிவு போடுறீரே? எங்கே உம்ம பின்னூட்டத்தை உண்மையெண்டு நிரூபியுங்கோ... கேஸு கீஸு எல்லாம் போடமாட்டேன் பாஸு. உம்ம மோப்பபல்லாவை (ஐபீயை முகர்ந்து தெரிவிக்கும் சொப்ட்வேர்; பல்லா என்றால் சிங்களத்தில் நாய்; கர்மம் கர்மம் கோனார் நோட்ஸ் போட்டே கண்ணைக்கட்டுதே) மாத்துங்கோன்னு விண்ணப்பிச்சாலும் இன்னும் நான் பத்து மைல் தூரத்தில் இருப்பதாய் பகல் கனவு காணும் உம்மை என்னான்னு சொல்வேனுங்கோ! உம்மை தெய்வமாய்ப் பார்க்கும் பக்த அடிப்பொடிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கின்றது. தர்க்க ஸாஸ்திரப்படி இல்லாவிட்டாலும், உம்மால் நிரூபணம் செய்ய முடியாத பட்சத்தில், உமக்குத் தெரிந்த நியாயமான வழியில் தவறை ஒத்துக்கொள்ளலாம். அதுவரை ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே அடுத்தவனுக்கு பட்டை நாமம் போடுவோமே இனி ஆடுவோமே ;-)

Monday, February 06, 2006

சும்ப நிகண்டு - கோனார் உரை

சாதிப்பித்தலைக்கேறி உன்மத்த ஊக்கத்தில் பதிவிட்டான் சும்பணெண்டு அண்ணைக்கள் ஆரும் கச்சை கட்ட வோண்டாம். இக்கரைக்கு அக்கரை பத்துமைல் டிஸ்ரன்ஸெண்டு ஸ்பேஷியல் நெட்நொர்க்கில் பார்த்துப் பரவசமடைந்து, பசையா பச்சையாவெண்டு நாங்கொடுக்கும் உரையை பொடிமட்டையெண்டு கணக்கில் கொண்டாலும் கவலை அதிகமில்லை சும்பனுக்கெண்டு கருத்தில் கொள்ளவும். பதிவினைப் போட்டுவிட்டுப் போறதோட வேலை முடிஞ்சதெண்டு சும்பன் நினைச்சாலும், விளங்கேல்லைன்னா விட்டுடு'ன்னு சம்சாரமது மின்சார மனோரமா மாதிரி போய்க்கொண்டிருந்தாலும், மூக்கறுக்கும் நட்பு பத்துன பொயிப்புரை கண்டதாலும், அண்ணைக்குச் சில விளக்கங்களை கொடுப்பது ஞாயமாப்பட்டதாலும் (அட பசுத்தோல் போத்துறாணெண்டு பகிடி பண்ணுங்கோ) அவரின் இரவாக்காவியமான சும்ப நிகண்டுவிற்கு என்னோட கோனார் நோட்சுங்கோ...

"ரண்டி பாஜி பிஸினஸெ"ண்டு நாஞ் செய்யும் "ஒப்பந்தக்கார வேலையை" ஷெல்லமாச் சொல்வாங்கோ! இந்தப் பதபிரயோகமுறையும் வெளங்கேல்லன்னா ஆரிய நாட்டுக்காரனை நைஸாய் ஒதுக்கி நயமாய்க் கேட்டால் பொழிப்புறைப்பான். இதுல ஒர்த்தந்தான் காசு பாத்தா பரவாயில்ல. ரெண்டு பேருக்கு சம்பாதிச்சு கொடுக்கிற க(கொ)டுமையான பணியிலும் சும்பன் சக்கர வியூகம் போட்டு எளக்கிய பணி செய்யுதான்னா புரிஞ்சிக்கிங்க பாஸு. இதுல சொந்தப் பேருல தமிழ் வளர்க்கின்ற சைடு பிஸினஸு வேற !!! நாலு நாளு அக்கடான்னு சொந்த ஊரைப்பாத்து போயிட்டா போதும். லோக்கல் மக்காவுக்கு மூக்குல வேத்துடும் (எங்களோட எஜமான்களைச் சொல்றேன் ஸாரே). அதெப்பிடி நீ மட்டும் நிம்மதியா இருப்பயா'ன்னு அத்தயும் பாத்துடறேன்னு அம்பறாத்துணி அவுத்து போடுற அளப்பறைக்கு முன்னால பத்மவியூகம் கூட பணால்தாங்ணா!!! நிற்க!!!

இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால் மாதிரி இன்னிக்கு பில்லிங் Cut'ன்னா இரண்டு வாரம் கழிச்சு வேலைக்கு வெட்டு'ங்ற நாலாந்தர நாதாரி வாழ்க்கை நம்மதுங்ணா. எனக்கு என் கவலை. புள்ளை, பொண்டாட்டி நமக்கும் இருக்குன்னு சொல்லி நமக்குக் கிடைக்கிற கழிவிரக்கத்தை கழிச்சிப்போடாம பெருக்கிக் போடலாங்றது சைடு-கிக்'ணா. எளவு எத்தனைக்காலம்தான் இப்பிடி பரதேசத்துல பரதேசி வாழ்க்கை'ன்னு வெசனப்பட்டு, கறுப்பு லேபிளை வெறுப்போடு காலி செஞ்சபோதுதான்... மேட்டரு எல்லா இடத்துலயும் ஒண்ணுதான்னு தெரிய வந்துச்சி. அட கருமகாலமே... நம்ம ஜீவிதந்தான் பல்லா நக்கியெண்டு நெனைச்சோமே... என்னா சுயநலமடா சும்பா'ன்னு நமக்கு நாமே சூடு வெச்சுக்கிட்டா பாவம் அது பொதுநலமின்றி பொழுதுபோக்க பல்லிலிளிப்பதாய் அ(ன)ர்த்தம் வருதெண்டு விள(ல)ங்கினம் இப்போது. சொந்த வாழ்க்கையிலே சிங்கியடிப்பதை பொதுவுல சொல்ல வெக்கப்பட்டாலும், அண்ணையின் புரிதல் சும்பனை அதீத வெக்கப்பட வெக்கிறதெண்டு சொன்னா, அல்லிகேட்டரின் நீலிக்கண்ணீரெண்டு இன்னொரு பொயிப்புறை வரலாம். என் நாஷ்டா எனக்கு. உம்மோட நாஷ்டா உமக்கு. அல்லாரோட பிரட்லேயும் அவா அவா பேர எழுதி உலகரேஷனில் எவனோ போடுறானாம். அந்த நம்பிக்கையில நம்ம பிரட் நாளிக்கு எங்கயாச்சும் கெடைக்குங்ற நம்பிக்கையில பொட்டி கட்டும் நிலையை போட்டா புடிச்சு போட்டாலும் நம்ப ஆளுக வோணுமே... நிழல்களை நம்பியே மோசம் போனோமே'ங்ற பாட்டுத்தான் ஞாபகத்துக்கு வருது பாஸூ!!!

இதுக்கிடையில சுகுற்றா சைடுமேட்டரு ஒண்ணு கிளைச்சுத்தியோடுது. தனிஆவர்த்தன தவிலுக்கு ஒத்தடி போடவும் திறமை வேணுங்கோ... மெயின் மேட்டருக்கு இப்பிடி சப்பையாவா சைடு டிஷ் போடறது? அடச்சீ... பாம்புக்கு போயி திரும்பவும் பல்லு குத்தப்போறீயேன்னு பலமுறை அசரீரித்தாலும், அரிப்புக்கு அஞ்சால் கிடைக்காத அலுப்பினாலும், திருப்பாச்சி, மருத, சிவகாசி, ஆதி, கில்லி'ன்னாலும் கதை ஒண்ணுங்ற பொதுப்புத்தியாலும், கம்முன்னு இருக்காட்டியும், கம்-Naughty' ஆக இருப்போங்ற அங்கத ஆசையினாலும், வலிந்து குடிகொண்ட வேலிஓணானின் லங்கோட் lafadaa'வாலும், மொன்னைக்கத்தியால் பலிகொள்ளும் அண்ணையின் பாங்கு பவித்திரத்தை பலரறியச் செய்யும் "நாண நாணா பூபூ" முயற்சியின் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்ய விளக்கமெண்டும், இன்னம் என்ன வேண்டுமெண்டாலும் சொல்லிக் கொல்லலாம்.

சுருதி பேதமான சைடு வாத்திய சேர்ப்புகளான பொன்முட்டை மூக்கறுப்புகளைக் குறித்த அண்ணையின் ஆழ்ந்த கவலையைகண்டால் ஆச்சாரமின்றி ஆச்சர்யமுண்டாகலாம். துப்புக்கொடுத்தவரையும் எண்ட பதிவுகளின் நேரங்களையும் கொம்பேர் செய்து வழமை போல் பல மணித்தியாலங்களை பாழ்படுத்தாமல் (அப்பிடிச் செஞ்சாலும் துப்புரவு செய்யாத துப்பறியும் ஐய்-பீ'யெனும் துப்பலாகவே இருக்கும் பட்சத்தில்), வாரண்டு இல்லாமல் கொன்வர்சேஷனை ரெக்கார்ட் செய்யும் ஹோம்லேண்டு டைரக்டராக இல்லாததாலும், பாவம் பலியாடாக பரிமாணம் பெற்றார் அண்ணையின் புண்ணியத்தில் ஒரு "நண்பர்". ஆடிவரை நமது ஆட்டம் தொடருமா என்று முதல் குவாட்டரிலேயே நானாடும் தள்ளாட்டத்தை பாவம் "நண்பர்" அறிய மாட்டார். முடிக்கப்படாத தொடுப்புகளை வைத்து பெரிய முள்ளுதான் காதலன் சின்ன முள்ளுதான் காதலியெண்டு "ஜீம்பலக்கா" போடுவது அண்ணைக்குப் புதியதா என்ன? ஆதாரத்தை ஆராய்ந்து லிங்க் கொடுக்கவும் முடியாமல், ஹைப்பர்/டயப்பர் லிங்க்குகளா கொடுக்க முடியும்? அடடே... ஆண்டுக்கொருமுறைபலிநாள் கொண்டாடும் யூதக் கற்பனை யூகிக்கப்பாற்பட்டதென்று எவ்வளவு பேருக்கு வெளக்குமாறு கொண்டு வெளக்கினாலும் வெளங்கப்போகின்றது? பொட்டில் போட்ட போட்டில் முகவரிகள் தொலைத்த முகிலினங்கள்தான் எத்தனை எத்தனை!!! 'கோட்டி'யோடு நீர் கிட்டி தப்புத்தாளமாய் ஆடினாலும், ஐ-பீயை நானே கொடுக்கின்றேன் என்றபோதிலும், குலவலாம் வாருமெண்ட குசல அழைப்பிற்கும் கூடாமல், இன்னமும் அரைக்காகாலறைக்கா மைல் டிஸ்ரன்ஸ் பேசி கழுத்தறுத்து, ரீயோடு கதைவிடக்கதைக்கக் கூப்பிடுவதுதான் அண்ணையின் ஜூப்பர் ஸ்டைல்.

கங்காச்சியின் புத்தகங்கள் கடுமையான வகுத்தெரிச்சலை உண்டுபண்ணி உண்டில்லையெண்டு ஆக்கிப்போட்டது ஆறாமல், கொட்டியிருந்த இலக்கிய வீச்சங்களை விமர்சனமின்றி விசர்ஜன் செய்துவிடலாம். என்ர இலக்கியங்கள் பற்றி எட்டுப் பாகம் போட எனக்குத் துடித்தாலும் ஐஞ்சறைக்குள்ள வண்டி'யாய் ஆகிவிடக்கூடாதென்ற பிரக்ஞையும் கொசுறாய் கூடவே குடைகின்றது. அதுவரை இதுகுறித்த உணர்வுகளை ஏதாவதொரு ஈசல் பதிவாய் மழைகாலத்தில் கிடைக்கும் சோமசுரா பானங்களுடன் பதிவதாய் உத்தேசம். அதுவரை உண்டிப்பிரச்சினை பெரிதாகிவிட்ட அன்னக்காவடியான என் பிரச்சினைக்கும் தீர்வு கண்டு போடவேண்டுமென்ற சாருநிவேதிதா கட்டாயமெமக்கும் உண்டு. எது எப்படியெண்டாலும் நடுவில் சிக்கிக்கொண்ட நம் "நண்பருக்கு" எனது ஆழ்ந்த வருத்தம் தோய்ந்த மன்னிப்புகளைக் கேட்பதன் மூலம் உமது நியாயங்களை நிறுவிக்கொள்ள மற்றொரு கருவியாகிவிட்டுப் போகின்றேன். சாவு விஷயத்திலே சங்கு ஊதுவதா? ஜால்ரா தட்டுவதா? என்ற குறைந்தபட்ச புரிதலின்றி "Cut" செய்து களிப்படையும் கலாச்சாரக் காவலர்களைப் பற்றி பொழைச்சுக் கெடந்தால் நான் பதிய எண்ணம். கூடவே வன்புணர்ச்சிகளினூடே விளைந்த மெர்ச்சண்ட் களிப்புகளின் சிப்பத்தில் கடலைமிட்டாய் சிற்பம் படைத்து பரதேசியின் பயணக்குறிப்பு காவியமாக வெளியிட்டு சூப்புற ஸ்டாராகவும் ஆசை. பார்ப்பம். அதென்னப்பா தக்கிப் பிழைக்க ஆயிரவழிகள் சொன்னவர் எலக்கியத்துறவறம் போட்டு போலிக்குரல் கொடுக்கின்றாரே என்று வினவினாலும், எத்தேசம் போனாலும் அத்தேசம் வேண்டாமெண்டு கைக(கா)ட்டாத கைடாய் இருந்தவருக்கு, அடையாறு அம்சகுஜலாம்பாள் சமையக்குறிப்பு, கோடம்பாக்க கோமணங்கள் சிறப்பாய்வு பற்றி கவலையெதற்கெண்டு கேட்டாலும் நேர்மையில்லாத வினைஎதிர்வினையோ கிட்டாமல் ஜாட்(ண்)டுபஞ்சாரிஷ்ட் பஜனையை சத்தம் போட்டுப் பாடுவார்.

மத்தபடி 007 ஜேம்ஸ்வோச்சர்களின் கிசுகிசு மூட்டும் பதிவுகளின் மாட்சிமையான தமிழ்கூறும் நல்லுலகமறியும். பனை மரத்தில் நெறி கட்டும் விந்தை தெரியாதவர்கள்தான் யாருண்டு? வினையை வெதைச்சிப்போட்டு எதையோ எதிர்பார்த்தா இப்பிடித்தான். பத்தாண்டுகளுக்கும் மேலாக குத்தாட்டம் போட்டு, சொல்லி அடிக்க வாலிவேஷங்கள் கட்டி வதைகள் பல நடத்திப்புட்டு, இன்னிக்கு லோக்கல் லவங்கங்கள் கௌபீனத்தில் கைவைக்கிறாங்களேன்னா, உறுத்தத்தான் செய்யும். அன்னிக்கு ஆஹாகாரம் போட்ட கூட்டம், கூடி நின்னு கொலவை போட்டவங்க, இன்னிக்கு எதுக்காக கூலியின்றி மாரடிக்கிறாங்கன்னுதான் புரியில பாஸு. அடுத்தவனை வோட்ச் பண்ணும்போது தன்னையும் வோட்ச் பண்ண ஒருவர் இருப்பாரென்பது காலத்தின் கட்டாயம். நீங்க இன்னும் அழிக்க வேண்டிய பின்னே ஊட்டுகள் நெறைய உண்டுங்க ஷாமியோவ்... பாவம்... அது இது உது வென்று குறுகுறு விரல்களை நீட்டிச்சுட்டிப்பின் சுட்டுக் கொள்வது வழமைதான். விஷமப்பிரச்சாரத்த தொடரும். நீயும் கோட்டி நானும் கோட்டி'ன்னு வேட்டையாடி விளையாடி, பாட்டுப் பாடிண்டே போகலாம். "சத்தியமாகச் சொல் நீ ஸ்பாம்தானா?" அப்டீன்னு சத்தம் போட்டு, கேள்வி கேட்டு, சும்மா நச்சின்னு ஒரு வாச்பண்ணி, கதாவிலாசத்தோட ஒர்த்தர் காலட்சேபம் பண்ணிணா, அதுக்குப் போயி வெளக்கெண்ணையில பொரிச்ச கவிச்சிக் கறி மாதிரி வழவழாசர்கர்புர்'ன்னு ஒரு நாளே வாழும் மார்க்கண்டேயப்பதிலாய் ஒரு பதிவு!!! இதுல அவன் இவன் உவன் எண்டு போகிறபோக்கில் போட்டுக் கொ(கெ)டுத்த எச்சங்களின் கவிச்சியைக் கொண்டு ஒரு கப்பாட்டம்!!! என்னவோ போப்பா!!!

எல்லாரும் எப்போதுஞ் சொல்றது ஒரு ஸ்டேட்மெண்ட்தான் "எங்கோ மணம் மணக்குதுங்கோ" (டைப்போவிற்கு மன்னிக்க :-)) !!!

கொசுறு: கலர் பிளைண்ட்நெஸ், நைட் பிளைண்ட்நெஸ், நேம்லெஸ் போன்ற அனைத்து லெஸ்நெஸ் அம்னீஷியாக்களுக்காக கறுப்பு-வெள்ளையிலே படம். ஏன்னா கதையும் அறுதப் பழசு கண்ணா பழசு ;-)

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

எனக்கு கொஞ்சம் விவரம் தெரிந்தபோது நடந்த பெயர் சூட்டும் சம்பவம் அண்டை வீட்டு இஸ்லாமியர் வீட்டில் நிகழ்ந்தது. சம்பிரதாயங்கள் முடிந்த பின்னர் சாயபு "நூர் முகம்மது" என்று குழந்தைக்குப் பெயரிட்டார். என் வீட்டில் பெயர் சூட்டும் சம்பவம் பற்றி கேட்டதற்கு வீட்டுப் பெரியவர் குழந்தையின் வாயில் சர்க்கரைத் தண்ணீர் புகட்டி பெயரை மூன்று முறை அதன் காதில் கூறுவார்கள் என்று விளக்கப்பட்டது.

எனது பாட்டி பெயர் வைப்பதில் மிக்க ராசியானவர் என்று கூறுவார்கள். இப்படித்தான் இன்னொரு அண்டை வீட்டில் பெண் பிள்ளைகளாய்ப் பிறந்ததைக் கண்டு கடைசிப் பெண்குட்டிக்கு "மங்களம்" என்று பெயரிட்டதாகவும், அதனால்தான் அடுத்து பிறந்தது என் நண்பனான "ராஜா" என்று அவரது குடும்பத்தாரே கூறினார்கள். "ராஜா"வுக்கு அப்புறம் "ராஜாத்தி" என்ற பெண் மகவு பிறந்தது வேறு கதை. ஒருவேளை "மங்களம்" எபெக்ட் ஒரு "மகவு"க்குத்தானோ என்னவோ!

இந்தப் பெயரில் அப்படியென்ன விஷேஷம்? பெயரின்றி பிறக்கும் விலங்குகளுக்குக் கூட நாம் பெயர் வைத்து கொண்டாடுகின்றோமே! பாலப்பிராயத்தில் பால்பண்ணை வைத்திருந்த குடும்பம் எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. அவர்கள் வீட்டில் மாடு கன்றுகளுக்குப் பெயரிட்டு வாஞ்சையோடு வளர்த்தாலும் அவர்கள் வீடு பூனைகளுக்குத்தான் பெயர் போனது. எனக்கு இன்றைக்கும் நினைவிலிருக்கும் பூனையின் பெயர் "மஞ்சுளா". மஞ்சள் தூக்கலான அரக்குப் படர்ந்த நிறமும், நீர் அதிகம் கொண்ட கோலிக்குண்டுகளைப் போல கண்களுமாய் மஞ்சுளா வலம் வருவதைக் காண கண் கோடி வேண்டும்.

வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பெட் அனிமல்ஸ் பற்றி கேட்கவே வேண்டாம். 17/18' அகவையில் பிள்ளைகளையே தனித்து இயங்க விட்டு விடும் பெற்றோர்கள் தமது வளர்ப்புப் பிராணிகளிடத்து காட்டும் அன்பும், அரவணைப்பும் கண்டு மாளாது. அவை இறந்தால் துக்கம் அனுஷ்டிப்பது, தாமிறப்பதற்கு முன்னால் சொத்தெழுதி வைப்பது என்று இவர்கள் அதகளப்படுத்தி விடுவார்கள். ஜிம்மி, ஜாக்கி, பிரௌனி, பெட்டி, பில்லி, மேக்கி என்று பெரும்பாலும் மூன்றெழுத்துப் பெயர்களே இப்பிராணிகளுக்கு சூட்டப்படுகின்றன. பூனையா நாயா எது சிறந்த வளர்ப்புப் பிராணி? என்று பட்டிமன்றங்களும், விவாதமேடைகளும் ஏன் ஹாலிவுட் படங்களே கூட வந்துள்ளன.

என்ன இருந்தாலும் கிராமத்துப் பெயர்களைப் போல் வராது. இவை காரணப் பெயர்களா? டவுனில் வைப்பதைப் போன்ற பட்டப் பெயர்களா? என்றெனக்கு குழப்பம் வந்ததுண்டு. பிறந்தபோது சிறிய உருவமாக இருந்ததால் "எலி" என்ற நாமகரணத்துடன் சொந்த கிராமத்தில் ஒருவன் வளர்ந்து வந்தான். ஆறு வயதில் பள்ளிக் கூடம் போகவேண்டுமென்ற காரணத்தால் "ராஜேந்திரன்" ஆனான். அநேகமாக படிக்காமல் இருந்திருந்தால் எலியாகவே இருந்திருப்பான்.

ஆனால் காரணம் விளங்காமல் இன்னும் என்னைக் குழப்பும் பெயர்கள் "பாவாடை", "பொசபொசா", "சக்கர", "கட்டாரு", "ராம்நாடு", "சின்னாரு", "ஐலி"...

இதே போல் வேலையில் வடக்கிந்தியர்களை குழப்பிய உடன் வேலை பார்த்த ஒருவரின் பெயர் "தையத்து கிழக்கே வீட்டில் உமேஷன்". பேரைக் கேட்டா அட்றஸையும் சொல்றானேன்னு வியக்கும்படி சில தெலுங்கு நாமகரணங்கள்.

டவுனில் படிக்கும் போது சகமாணவர்கள் வைக்கும் சம்பந்தா சம்பந்தமில்லாத பட்டப் பெயர்களும் அவ்வாறு சுவாரஸியம் தருவனவே. புளுபேர்டு, பல்லாண்டு வாழ்க, ஊசி, அகிலா இன்னும் பல.

எங்கு சென்றாலும் பெயர்களை அறிவதிலுள்ள ஆர்வம் மட்டும் இன்னும் எனக்கு குறையவேயில்லை. சிலநாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக குறிஞ்சிப்பாடி அருகேயிருந்த கிராமத்திற்கு சென்றிருந்தேன். பந்தி முடிந்ததும் கைகழுவதற்காக பந்தலுக்கு வெளியே வந்தபோது எச்சில் இலைகளின் மலைகளுக்கருகே ஒருவர் நின்றிருந்தார். சடாமுடி, அழுக்கேறிய கருந்தேகம், அரையாடை மட்டும் அணிந்து தனக்குள்ளேயும், அவ்வப்போது உரத்தும் பேசிக் கொண்டிருந்தார். சித்தரா, சாமியாரா, பைத்தியமா தெரியவில்லை. சாப்பிட அழைத்தாலும் உள்ளே வர மறுத்து விட்டவரை ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது ஆர்வத்தை உணர்ந்த நண்பர் சொன்னார்," அவர் பெயர் திருஞானம்".

Friday, February 03, 2006

குறட்டை அரங்கம்

(கனடாவிலிருந்து நிகழ்ச்சி நடத்த முடியாமல் துரத்தப்பட்ட களங்கத்தைக் கழுவ திருவாளர் விசு தனது குறட்டை அரங்கத்தை அரைகுறை ஆடைகளோடு உலாவும் அழகுச்சுனாமிகள் நிறைந்த மயாமி கடற்கரையில் தனது குறட்டை அரங்கத்தை துவக்குகின்றார். தலைப்பு தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்கள் இணையவாதிகளா? இலக்கியவாதிகளா? ஏற்கெனவே ரிகர்ஸலில் பார்வையாளர்களின் குறட்டைச் சப்தத்தைவிட அதிகமாக காது ஜவ்வு கிழியும்படி கத்திய குறிப்பாக புடலங்காய் சைஸில் இருந்தவர்களை தேர்தெடுத்து வைத்திருந்தார்கள். முதலில் சாதனை புரிந்தோர்க்கு பரிசளிக்கும் விழா)
விசு: இந்தமுறை இணையத்திலேயே அதிகமுறை ஒண்ணுமே புரியலைன்னு சொல்லி உலகச்சாதனை செய்த உஷ்ஷா அவர்களை பாராட்டி "காலங்காத்தேலேயே கண்ணைக்கட்டுதே"ங்ற மெகாசீரியல் DVD'க்களை பரிசாகத் தருகின்றார் ரைட்டர் போரா. உஷ்ஷாம்மா உங்க சாதனைனையைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
(தக தக தக தங்கவேட்டையில் வரும் ஜம்யாகிருஷ்ணன் வெட்கப்படும் அளவிற்கு ஜொலிக்கும் மஞ்சள் பட்டுடையில் அம்மணி)
உஷ்ஷா: அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா
விசு: லலல்லா. யாரைம்மா பாத்து பாடுற? இது தங்கவேட்டை நிகழ்ச்சியில்லை
உஷ்ஷா: ஐயா இணையத்துல படிக்கிறது எழுதுறதுங்றது முதலை வாயில தலையைக் கொடுக்கிற மாதிரி
(அப்ளாஸ்)
விசு: சரிம்மா. விஷயத்துக்கு வாங்க
உஷ்ஷா: இங்கன எழுதுறதுல முக்காலே மூணு வீசம் Subtext என்ன Context'ஏ புரிய மாட்டேங்குது. உள்குத்து, வெளிக்குத்து, புள்ளையார் குத்துன்னு ஒரே குத்தாட்டம்னா பாத்துக்கங்களேன். புரியலைன்னு சொன்னா பெயரிலில்லாதவங்கெல்லாம் திட்றாங்கோ திட்றாங்கோ திட்றாங்கோ திட்றாங்கோ (அடுத்த பாடலை ஆரம்பிக்கவும் அப்ளாஸ்). சிலசமயம் நான் எழுதுதறே கூட எனக்குப் புரியல்லேன்னா பாத்துக்கங்களேன்.
விசு: சரி உங்களுக்கு "புரிஷா"ன்னு பேரு வைக்க முடியாது. அதுனால "புரியாவதி"ங்ற பட்டம் கொடுக்கின்றேன்.
உஷ்ஷா: எதுக்குங்க பட்டம் புரியலியே?
விசு: என்ன இதுவும் புரியலியா? (மைக்கைத் தூக்கிக் கொண்டு தடுக்கி விழுந்து ஓடுகின்றார். சிலர் காப்பாற்றுகின்றனர்)

(குறட்டை அரங்கம் தொடங்குகின்றது)

புடலங்காய்ப் பெண் 1 (புபெ1): ஐய்யா சிக்கன் பிரியாணியில என்ன இருக்கு?
விசு: (யோசித்தபடி) என்னம்மா என்கிட்ட இப்பிடிக் கேள்வி கேக்குற. நான் சாப்பிட்டதில்லையே
உஷ்ஷா: கேள்வியே புரியலியே
விசு: ஐய்யய்யோ நீங்க இன்னுமா போகல. யாராவது என்னக் காப்பாதுங்களேன்
(நிகழ்ச்சியினை தவறாமல் பார்க்கும் க(வ)லைஞர் முகத்தில் கவலை ரேகை படர்கின்றது)
புபெ1: (கீச்சுக் குரலில்) சிக்கன் பிரியாணியில சிக்கன் இருக்கும் ஸார். இது கூடத் தெரியாம வந்துட்டீங்க
(கூட்டத்தின் கைத்தட்டலில் மயாமி கடற்கரையில் அலைகளே அதிர்ந்தன)
புபெ1: சரி விடுங்க மட்டன் பிரியாணியில
விசு: (என்ன எழவுடா இது. இன்னிக்கு ஒரே நான்வெஞ் கேள்விகளா இருக்கு) ஹூம்... மட்டன் இருக்கும்
புபெ1: அப்டிப் போடுங்க. இப்ப சொல்லுங்க தலைப்பாக்கட்டு பிரியாணியில என்ன இருக்கும்?
(பிகில் பறக்கின்றது. காமெரா க்ளோசப்பில் காட்டுகின்றது)
புபெ1: சொல்லுங்க சார். தலைப்பாக்கட்டு பிரியாணியில என்ன இருக்கும்?
விசு: (நாயகன் கமல் பாணியில் ஆனால் தெளிவான குரலில்) தெரியில்லியேமா
புபெ1: அதுதான் ஸார் இணையவாதிகளின் தர்க்க ஸாஸ்திரம். பின்னூட்டப் பிரச்சினைக்கு ப்ளாக்கர்ல கம்ப்ளெயிண்ட் குடுத்தேளான்னா குடுத்தேன்' ன்னாங்க. இழவு கமெண்ட் மாடரேஷன் போட்டியான்னா ஆமான்னாங்க. ஆனாலும் உடாம கூகிள்ல பிராது கொடுத்தியான்னு தர்க்கம் பண்றாங்க பாருங்க. சூப்பரோ சூப்பர். அதுனால இணையவலைப(ம)திவாளர்கள்தான் தர்க்கத்துல சிறந்தவங்க.
(கூட்டம் கையில் கிடைத்ததையெல்லாம் தட்டுகின்றது)
உஷ்ஷா:
பிரச்சினையில பாதிக்கப்பட்ட முறையில சொல்றேன். தீர்வு என்னான்னு புரியில
(வாக்கியத்தை முடிக்குமுன் சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினரைப் போல குண்டுகட்டாய் தூக்கியனுப்புகின்றார்கள்)
கொத்தவரங்காய் ஆண் 1 (கொஆ 1): ஸார் இங்க வாங்க ஸார். நீங்க படம் எடுத்திருக்கீங்கதானே?
(கூட்டம் சிரிக்கின்றது)
விசு: (மதர்ப்புடன்) ஆமாம்ப்பா. அதிலென்ன சந்தேகம். யாராவது மண்டபத்துல எடுத்து நான் பேர் போட்டுக்கலை.
கொஆ 1: அட கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க ஸார். கதை-வசனம் எழுதியிருக்கீங்கதானே?
விசு: (கடுப்புடன்) ம்ம்ம்ம்
கொஆ 1: வசனத்துக்கு நீங்க உதவி செய்ய ஆளைப் போட்டிருக்கீங்களா?
விசு: இந்தா பாருங்க. தர்க்கம் பத்தி பேசும்போது குதர்க்கம் பண்ண நேரம் கிடையாது. (முதல் மரியாதை சிவாஜி போல்) ஆமாம். வெச்சிருக்கேன்.
கொஆ 1: அப்ப எழுதுற, உதவியாள் எழுதுன வசனத்துக்கு நீங்க தானே பொறுப்பு?
விசு:
(ஆஹா இந்த ஆளு குட்டிப் பிரச்சினை பண்றானே... இன்னிக்குப் பாத்து பொம்பளைக் கூட்டம் வேற அதிகமாச்சே என்ற நினைவுடன்) ஆமாப்பா
கொஆ 1: அட அதைச் சொன்னா கேக்கம உண்டு இல்லைன்னு வேட்டி அவுத்து, துப்பட்டா சுத்துற இலக்கியவாதிகள்தான் தர்க்க ஸாஸ்திரத்துல சிறந்தவங்க ஸார்.

(இடைவேளை. பின்னர் ஒரு சேஞ்சுக்காக மேடையின் வெளியே பலூன் விற்றுக்கொண்டிருந்த ஒருவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்)
பலூன்: ஐய்யா எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும். நிகழ்ச்சி நடத்தும் போது உங்களுக்கு வயிறு கடமுடா செஞ்சா என்ன பண்ணுவீங்க?
விசு: (இன்னிக்கு எனக்கு நேரம் சரியில்ல என்று நொந்தபடி, நடிகர் சுந்தர்ராஜனைப் போல்) உடனே போகணும்னா போயிடுவேன். You got to go You Got to Go
பலூன்:
இப்ப எனக்கும் அதே பிரச்சினைன்னா?
விசு: என்னப்பா இப்பிடி கேக்குற. அதே பதில்தாம்ப்பா
பலூன்: அப்ப பிரச்சினைன்னா பொதுங்றீங்க. இதை நாஞ்சொன்னா அதெப்பிடி நிகழ்ச்சியின் பொறுப்பாளரான உங்களுக்கும், இலவசமாய் பங்கு கொள்ளும் எனக்கும் ஒரே பிரச்சினைக்கு தீர்வெப்படி ஒரே மாதிரியிருக்குங்றாங்கோ
விசு: (நம்மவிட குழப்பவாதிகள் யாரெந்த ஆதங்கத்துடன் குரலை உயர்த்தி கட்டபொம்மன் ஸ்டைலில்) யாரப்படிச் சொன்னது?
பலூன்: எல்லாம் நெட்டுலதாங்ணா. இப்ப சொல்லுங்க வலைப்பதிவர்கள் முன்னாடி எலக்கியவாதிங்க மண்டி போடணும் தர்க்கத்துல

(டேப் செய்யப்பட்ட ஆடியன்ஸ் அப்ளாஸ் ஒலிபரப்பப்படுகின்றது. அடுத்து ஒரு ஜோடி ஆடியோ கான்பெரஸில் இணைகிறது)

விசு: (சன் மியூஸிக் தொகுப்பாளினி போல்) ஹலோ குறட்டை அரங்கம். ஸார் குறட்டை சவுண்டை கொஞ்சம் கம்மி பண்ணுங்க
முத்து&முத்து: (Thamson&Thomson போல் ஒரு காமெடி ஜோடி) முத்துக்கு முத்தாக குத்துக்கு குத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஏட்டிக்கி போட்டியாக... வலைப்பூவில் கதைத்து வந்தோம் தனித்தமிழில் ஒன்றாக
விசு: பாட்டு சூப்பர். அப்றம் மேட்டர் சொல்லுங்க
மு1: ஸார் ஹிட்லரப் புடிக்குமா? படங்கள்ல காமிக்றமாரி "Hail Hitler"ன்னு அடிக்கடி சொல்றமாதிரி இன்னொரு ரெண்டு வார்த்தையை அடிக்கடி சொல்றாங்க ஸார் கசுமாலங்கோ
விசு: (காதலன் பட வடிவேலு ஸ்டைலில்): எவங்க அவங்க?
மு1: அட படிச்சவய்ங்க எழுதுற நெட்டுல சார். வகுத்தெரிச்சலா இருக்கு
விசு: (இந்த கால் எப்ப முடியுமென்கின்ற அவசரத் தொனியில்) அடடே விஷயத்த சொல்லுப்பா
மு1: (அழுதபடியே) "ஜெய் ஹிந்த்"ன்னு கண்ட இடத்துல எழுதுறாய்ங்க.
விசு: (கனடாவில் வாங்கிய குத்தை நினைத்து பயந்தபடி கர்ச்சீப்பால் முகம் துடைத்தபடி விட்டேத்தியாய்) அப்பிடியா
மு1: இதையெல்லாம் மாடரேஷன் செய்யுணுங்க. திரட்டிய வுட்டே துரத்துணுங்க. எப்பிடி என் தர்க்கம்?
மு2: ஐயா அதாவது பரவாயில்ல. இண்டிபிளாக்ஸ்ன்னு பேர வைச்சுக்கிட்டு தமிழ் பின்னூட்டம் வுட முடியல. ஆனா தமிழ் பதிவுக்கு சர்வே போடுறானுங்க. கேட்டா எனக்குத் தெரிஞ்சது இந்தி, இங்கிலிபீசு, பெங்காலி மட்டும்தான். வேணா அதுல எழுதுன்னு டபாய்க்கிறான். தமிழுக்கு மதிப்பில்லையா? இந்திய மொழிகள்ல தமிழ் ஒண்ணில்லையா?
விசு: நீங்க ரெண்டு பேரும் வலைபதிவாளர்களா?
மு&மு: (கோரஸாக) அட ஆமாம். எப்பிடி கண்டுபிடிச்சீங்க?
விசு: (நிக்கலாக) அதான் உங்க தர்க்கதுலேயே தெரியுதே

(குடந்தை அம்மாசமுத்திரத்திலிருந்து வீடியோ கான்பெரஸில் கார்க்ஸ் என்ற எழுத்தாளர் வருகின்றார்)

விசு: வணக்கம். நிகழ்ச்சி எப்படி நடந்தது?
கா: உங்களுக்கு சினிமாவுல ரோல்மாடல் யாராவது உண்டா?
விசு: எங்களை மாதிரி ஆளுங்களுக்கு படத்துக்கு படம் காப்பியடிப்பதைப் பொறுத்து பிற மொழி மாடல்கள் மாறும். ஆயுதஎழுத்தப்போ மணிரத்னத்திற்கு மாடல் Amores Perros எடுத்த Alejandro Gonzalez Inarritu.
கா: அப்போ உங்க வேர்களை ஸ்பானீஷ்லேயோ, லத்தீன்லேயோ தேடலாம். தப்பில்லதானே
விசு: (ஆஹா மாட்டிக்கிட்டோமோ என்ற குறுகுறுப்புடன்) தப்பில்லே
கா: ஆனா பாருங்க சார் தப்புங்றாங்கோ. Amores Perros எடுத்த Alejandro டெக்கீலா (மெக்ஸிகோ சாராய வகை) சாப்பிட்டார். கியூபா சுருட்டு குடிச்சார். அதுனால நம்மோட வேர்களை (காலுக்கு) கீழேயே தேடணுங்றாங்கோ. இப்பச் சொல்லுங்க... தர்க்கத்துல எங்கள அடிக்க ஆளு இருக்கா?

இறுதியாக

விசு: ஆஹா தர்க்கத்தில் இலக்கியவாதிகள் இணையவாதிகள் இருவருமே ஒருவரை ஒருவர் விஞ்சியிருக்கின்றனர். இதனால் தமிழ் கூறும் நல்லுல்லகம் மேலான பயனை அடைவது உறுதி. இருப்பினும் முடிவாகச் சொல்லுகின்றேன். இலக்கியம் வளர்க்கும் இணையவாதிகள் தங்களின் முன்னோடிகளான இலக்கியவாதிகளை மிஞ்சிவிட்டார்கள் என்று கூறி முடிக்கின்றேன். வணக்கம்.

(இந்நிகழ்ச்சியின் முடிவில் ஹிந்தி தேசபற்றுப் பாடலை "மா துஜே சலாமி"க் கொண்டிருந்தார் டேப்பில் ரஹ்மான். ஜெய்ஹிந்த் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு அடிவாங்கும் விருப்பம் இல்லாத காரணத்தால், ஹிந்தி தேசப்பற்றுப் பாடலுக்கு தமிழ்குடிதாங்கிகள் கும்மிவிடுவார்களே என்னும் கனேடிய அனுபவத்தால் "யோவ் டேப்பை நிறுத்துய்யா" என்று கூக்குரலிடுகின்றார் விசு. ஏனென்று புரியாமல் உஷ்ஷா குழம்ப -- திரை --)

வேலி தாண்டிய வெள்ளாடுகள்

1. உயிர்கையும் காலத்தடமும்: குட்டிச் சண்டையை ஊதிப் பெருசாக்குறதுல வெகுஜன ஊடகமே பிஸியாயிருக்கும் போது சின்ன இலக்கியம் பத்தி கேக்கவே வோணாம். ஏதோ இணையத்துல நம்ம மக்கள் கருத்து சொதந்திர கண்ணாயிரங்களாய் கோழிக்கூட்டமாய் சீய்த்துப் போட்டதும் உலகமறியும். அய்ங் இணையத்துல கூட இலக்கியமான்னு ஆச்சரியப்பட்டு நம்ம மனுசப்புதல்வரோ ஒரு படி மேலப் போயி அல்லாப் போஸ்டரையும் சுகுற்றா ஊர் பேரோட தான் புக்குல ஒட்டிப்போட்டாரு. "அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு"ன்னு கடல் கடந்து சேதி வர மீட்டரு ஓட ஆரம்பிச்சுது. உருவிப்போட்டதை ஒரு வார்த்தை சொல்லலியேன்னு உயிர்கை புடிச்சிட்டு காலத்தட வேட்டையனிடமிருந்து காப்பாத்துன்னு "ரரா ரரா"ன்னு ரரா இமயமலைக்கு ஜூட் வுட்டுட்டதா பட்சி சொல்லுது. சபாஷ் சரியான போட்டி. லக்கலக்கலக்கலக

2. பிறபஞ்ச வெளிச்சம்: தேவையா நைனா உனக்கு? எப்பிடி இருந்த நீங்க இப்பிடி ஆயிட்டீங்களே'ன்னு விவேக் காமெடியாப் போச்சிது பிறபஞ்ச பல்டி. அமெரிக்காவுல அடிச்ச அணிந்துரையை அதுக்குள்ள மறந்துட்டு சண்டைக்கோழிதான் சாக்குன்னு குட்டி ஸ்டண்ட் போட்ட ஆசாமியை "என்னான்னு சொல்வேனுங்கோ"? (எஸ்ராவுக்கு எதிரா) "துப்பட்டாவை ரெடி பண்ணுங்கோ"ன்னு உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பாக்குறதா எலக்கிய வட்டாரம் பொலம்புது. என்ன பண்றது? அ(ட) மார்க்ஸ் ஷொன்னது போல் எல்லாம் பா.பி. (நன்றி பாலாஜி) பண்ற வேலை. எஸ்ரா பா.மு.'வா (பாபா'வுக்கு முன்) இருந்த வரைக்கும் கவலையில்லை. ஆனா பா.பி. (பாபாவுக்கு பின்) கதையே வேற... பிற பஞ்சத்தில் இதெல்லாம் சகஜமப்பா! அது சரி க.மு. (கஸ்தூரிமானுக்கு முன்) க.பி. (கஸ்தூரிமானுக்கு பின்) அப்பிடின்னு நம்ம நாகர்கோவில் நாயனம் யாரும் வாசிக்கலையா? காலத்தட ஒத்தூத கச்சேரி கன ஜோரா இருக்குமே! தத்தரீனா...ஊத்திக்கினு கடிச்சுக்கலாம்... கடிச்சிக்கினு ஊத்திக்கலாம்!

3. கெட்டிமேளம்: விஷ(ம)ம் தூக்கல்தான். ஆனாலும் பாவம் நல்ல புள்ளாண்டான். இருந்தாலும் என்ன பண்றது? விதின்னு ஒண்ணு இருக்கே... வெள்ளாட்டுப் புள்ளைக்கு வேட்டு வெச்சிட்டாளாம். எம்மாம் நாள்தான் பயர்பாக்ஸ் உலாவியிலேயே குலாவிக்கிட்டு இருக்கிறது? கரும்(ப்)பு சங்கருக்கு கண்ணாலங்கோ! வாழ்த்த வயசில்லைன்னாலும், அதிமுக அமைச்சர் போல பவ்யமாய் மரத்தடியில் பலியாடு கடுதாசி போட்ட நம்ம ரசிகருக்கு ஏதோ நம்மாள ஆன ஒரே காரியம்... "ஆயுஷ்மான் பவ" அக்காவுக்கு "தீர்க்க சுமங்கலி பவ". (இப்பதிவிற்கும் பாபாவின் குங்கும பதிவு பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமில்லை. அது குறித்து மேலதிக தகவல்கள் பிறகு :-)

4. மச்சான் பேரு மருத: பேருல என்னாங்க இருக்கு? மேட்டரைக் கவனிங்கோன்னா மக்கா கேக்க மாட்டேங்றா! பேரைச் சொல்லு மீட்டர் போடுறேன்னு ஒரே அநியாயம். அழிச்சாட்டியம். அக்குறும்பு. என் செல்ல ஸாரே! நியாயமான அநாநி'க்குகூடவா கடுக்கா? லக்ஷ்மன் ரேகாவை கொஞ்சம் (நீளமாய்) இழுத்துப் போடுங்கோண்ணா! இப்பக்கூட பாருங்க... நியாயமான அநாநிங்க நெட்டுல இருக்காங்க!!! (மேட்ரிக்ஸ் ஹீரோ என்னப்பா ஆனாரு?) சோழ நாட்லேர்ந்து ஒருத்தர்! (ஆமா அவரு மச்சான் பேரு மருத... அழகா ஏறி வந்தான் ஒரு *ருத அப்டீங்றாங்களே... உம்மையா?) டினோசரஸாய் ஒருத்தர்! பேரு வைச்ச அநாநிங்க ஓகேவா பாவா? (இனிமே வலை பதியுற அல்லாரும் போட்டா போட்டாதான் திரட்டுவோம்'ன்னு தனியுத்தரவு போடாம இருந்தா சரி. ஏன்னா போட்டா புடிச்சா ஆயுசு கம்மின்னு ஆத்தா சொல்லிச்சி ;-)

5. காணாமல் போகும் கருத்துகள்: ஏம்ப்பா அன்னிக்கு போட்ட பதிவைக் காணோமே. இன்னிக்கு வுட்ட பின்னூட்டத்தைக் காணோமே. அப்பிடின்ன்னா நீ மாறிப் போயிட்டியா? பயந்துட்டியா? இப்பிடி கொடச்சல் கொடுக்கிற ஆளுங்க பெருகிப் போயிட்டாங்கப்பா... இனிமே டெய்லி என்னோட 169 (இத்தோட 170 ஹிஹி நம்பர் கேம்) பதிவுகளுடன், பின்னூட்டங்களுடன் பத்திரமா இருக்கான்னு செக் பண்ணிட்டுதான் அதுத்த பதிவு. ஏம்ப்பா இதே கேள்விகளை மின்கம்பம் பார்த்தவுடன் ஏற்படும் நசநச உணர்வுகளுக்கு உடனடி வடிகால் தேடி நனைத்துவிட்டு, பின் அழிக்கும் பேரறிஞர்களிடம் கேட்கக்கூடாது? கேக்கமாட்டீஹ அப்பு... ஏன்னா அவுங்க வுடுவாங்கல்ல ஆப்பு!

கொசுறு:

வாழ்வே மாயம்: "யார் யார்க்கு என்ன தேசமோ இங்கே யார் யார்க்கு என்ன வேசமோ" என்று விச்ராந்தியாய் பரதேசம் (அட வெளிநாடப்பா) போனவர் விசனப்படுகின்றாராம். ஹே ராம்! ஹே ராம். கவலைப்படாதே சகோதரா... எங்கம்மா கருமாரி Watch'சிருப்பா... போகுமிடம் சேத்து வைப்பா கவலைப்படாதே சகோதரா

வர்ட்டா...

விரைவில் எதிர்பாருங்கள். எங்கும் தமிழ் தமிழ் தனித்தமிழ்.

Wednesday, February 01, 2006

பூரணமாகாத கிரகணங்கள்

(பாரதிராஜாவின் கரகர குரலில்) என் இனிய தமிழ் மக்களே!!! தனிப்பதிவாகவேண்டிய தலைப்புகள் இங்கே முற்றுப்பெறாத கிரகணங்களாய், தொடுத்து முடிக்காத தோரணங்களாய், பிடித்து முடியாத பிள்ளையார்களாய் கவனிப்பாரின்றி களைப்பாறிக் கொண்டிருக்கின்றன. கோணல்பதிவுகளாய் வரலாறு காணவேண்டியவை வணக்கம் தமிழகமாய் சப்பென்று போக விடலாமா? (பூங்காற்று திருப்புமா? என் பதிவை விரும்புமா பாடல் ஒலிக்க...)

1. ஓப்பரேஷன் சீறும் பாம்பு: புத்துல புஸ்ஸடக்கி கிடந்த பாம்பு மீண்டும் பின்னூட்டங்களில் படமெடுத்து ஆடுவதாய் பகிரங்க வதந்தி. மலைப்பாம்பு (புத்துல சா(சோ)தாப்பாம்பு மலைப்பாம்பு வேடத்தில் என்றறிக; மூளை இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே :-) என்பதை மறந்து மயக்குவதாய் மகுடி ஊதுகின்றார் மதிமூடி (S.Ve. சேகர் ஸ்டைல் மாமே)!!! மாற்று மருந்தாய் ஆழ்குத்தெழுத்துசித்தமருத்துவம் விடுத்து, T.R. பட்ணம் பொடி ரெண்டு சிட்டிகை எடுத்து (ஆமாம் பாம்புக்கு மூக்கு உண்டா என்ன?) ஆசையுடன் பாம்புக்கு அளித்தால் அது அஸ்க்கு போட்டு அலேக் ஆகும் அல்லேகுல்லாலே!!!

2. ப்ரீயா வுடு ப்ரீயா வுடு மாமே: கம்பன் வீட்டு கட்டுத்தறியுடன் கவியரங்கம், கலைஞருக்கு காரு ஓட்டினவரோடு அதிகாலை 3 மணிவரை இலக்கிய சந்திப்பு, இம்முறை வெளியான பொஸ்தக லிஸ்ட்ன்னு அட அட அடடா ரவுஸு தாங்கல பாஸு!!! ஆளைப் புடிக்கலேன்னு அப்பீட் வுடுங்கோ... அத்த வுட்டுப்போட்டு கண்டமேனிக்கு கழுத்த அறுக்க நானிருக்கும் போது உமக்கும் இதே ரப்சரா? ப்ரீயா வுடு ப்ரீயா வுடு நண்பா என்பதிவுக்கு இல்லே காரண்டி ப்ரீயா வுடு ப்ரீயா வுடு நண்பா உன் எழுத்துக்கு இல்லே வாரண்டி

3. மாடர்ன்மலர் நாற்றமுடைத்து: புனுக்கு புண்ணாக்குன்னு தேள்கடியிலேர்ந்து நாய்க்கடி வரைக்கும் சளைக்காம, சர்புர்கர்'ன்னு கேளாஒலிஅலையில குத்துப் போட்டு கொரலு கொடுக்கிற பதினேழாம் வட்ட வளரும்மதி (அய்யா கொழப்பம் வேண்டாம் வளர்மதி என்பதை Present Continuous பண்ணிட்டேன்) குட்டி மாடர்ன்மலருக்கு ஒரு ஓஓஓ ஓகோ போடு!!!

4. Procrastination Professor: பதிவைப் படிக்க பத்து நாள் தாமஷம் (தற்பவமோ, கிரந்த எழுத்தோ தனித்தமிழ்தாங்கிகளுக்கே வெளிச்சம்). இமெயிலு படிக்க இருவது நாள்... தேவுடா தேவுடா இந்த நெலைமையில எப்பிடிப்பா தமிழு வள(ளை)க்கிறது? தெறமையை மொதல்லேயே கண்டுபுடிச்சு புடம் போட்டு வளப்பதாய் படம் காமிச்சா மட்டும் போதுமா? பாவம் அவா அவாளுக்கு என்ன பணிப்பளுவோ'ன்னு ஜோரா கெளம்பாதீக!!! நாங்க 1 பில்லியன் ஆளுங்களாட அதிபருக்கே மெயிலு போட்ட கேள்வி கேட்ட கெட்ட பரம்பரைங்ணா... "Better Late than Never"ன்னா "Butter Earlier than Ever"ன்னு நாஞ்சொல்றேன். ரப்பு ரப்பு ரப்பிஷ்மா மல்லுக்கட்டலாமா?

5. அசலு கண்ணா அசலு: (சுருளி பாணியில்) "இவன் (அமெரிக்க நேரத்தில்) பகலெல்லாம் தூங்கறான். ராவெல்லாம் பின்னூட்டம் போடறான். இந்த வலைபதிவு வந்தாலும் வந்தது. இவன் இப்பிடி ஆகிப்போட்டானேன்னு" ப்ளாக்கர் மக்களார் பின்னூட்டப் பொட்டி அடைக்கோழிகளாய் ஆகிப்போன காலகட்டத்தில்... அசல் அழுவுறது நாடகம்ன்னு தீர்ப்பை மாத்தி அப்பிடிப்போட்டாங்களாம். கணக்கு கேட்டு கலாட்டா செஞ்ச எங்க தலீவரு மாதிரி ஆதாரத்தை/ஆக்ஷனை அவுத்துவுடு ஐயா... நகல் யாருன்னு ஒப்பனா டிக்கெட் கொடு கொய்யா'ன்னு வீராவேசமாய் வீரலெட்சுமிகள் வெடித்துக் கிளம்ப, அந்த நாள் ஞாபகத்தில் சிலபலர் மூடுமந்திரமாய் மூக்குவிடைக்க, அடப்போங்கப்பா புதுசா ஏதாவது பிராது கொடுங்கப்பா... போரடிக்குது!!!

கொசுறு: போகாதே போகாதே எம் தலைவா: (இப்போதைக்கு இவ்வளவுதான். ஏன்னா கெரகணமே இப்ப(டி)த்தான் புடிக்குது ஹிஹிஹி :-)