Thursday, October 28, 2004

கண்றாவி கண்றாவி

எகனாமிக்டைம்ஸ் கட்டுரை படிங்கோ. காறி துப்புங்கோ.

ஹாட்டு கண்ணா ஹாட்டு

இன்னாப்பா இம்மாம் நாளா எழுதறோம். மக்கா ஒருத்தரும் நம்மளை கண்டு(டி)க்களையேன்னு வருத்தமா கீதா? இந்தா புடிங்க...டேவிட் லெட்டர்மேன் கணக்குல கவுண்ட் டவுன். இதெல்லாமே ஹாட் தலைப்புகங்கறதால நம்பர் ஏதும் போடல. இதெல்லாம் சும்மா எழுதுனா ஜிவு ஜிவுன்னு கூட்டம் மொய்க்கும்.
அப்பால நம்ம டாபிக்கை பயன்படுத்தினா காப்புரிமை கேசெல்லாம் போடமாட்டேன். அதனால கலாய்ங்க...

செம்மொழி ஜிந்தாபாத்

எப்பவுமே சூடான டாபிக் இது. மொழி தெரிஞ்சவா, தெரியாதவா எல்லாருமே ஜல்லியடிக்கலாம். ஒரு பக்கம் 'தமிழ் படிச்சா வேலை கிடைக்குமா'
கஸ்மாலம்பாங்க. 'பழமைவாதிம்பாங்க'. இன்னோரு பக்கம் வணக்கம் தலைவரேன்னு பதிகம் பாடுவாங்க. ஆகமொத்தத்துல ரஜினி படத்துக்கான மினிமம் கியாரண்டி போல இந்த ஹாட் டாபிக். தயக்கமில்லாம யூஸ் பண்ணுங்கோ.

வார்த்தை War

கமெண்டுப் பொட்டி கலகலக்கணும்னா இத விட சிறப்பா ஒண்ணுமே இல்ல. பிளாக்குல ஒரு குறிப்பிட்ட 'சிலரை'த் தேர்ந்தெடுத்து, வார்த்தை செட்டுகளைப் போட்டு ஒரு கும்மு கும்முங்க. யாரு கண்டா ட்ராக் பேக்கும், எதிர் வினையும் உங்களை எங்கேயோ கொண்டு போயிடும். எதுக்கும் முதலுதவிப் பொட்டிய ப(க)க்கத்துல வெச்சுக்கிறது ஷேமம்.

இலக்கிய அபிஷ்டுக்கள்

அடா அடா இதப் பத்தி பத்தியா நெடுங்கதையாடலாம். எழுதுறதுக்கு முன்னாடி காலச்சுவடு, உயிர்மை'ன்னு படிச்சுட்டு எழுதுங்கோ. சாருமதியோட கோணல்
பக்கங்கள் ஒரு அட்சய பாத்திரம். அள்ளிண்டு வந்து கொட்டுங்கோ. உள்ள(த்)தை சொல்கிறேன்னுட்டு குழுஊக்குறி (நம்ம நாடன் சார் எழுதின கட்டுரை)
போட்டு வெளுத்து வாங்குங்க. ரெஸ்பான்ஸ் வந்து ஜில்பான்ஸ் மாதிரி கெடைக்கும்.

கவிதாயினிகள் கலாசல்

இது மேற்படி தலைப்புக்கான உப தலைப்புதான்னாலும் தனி ஸ்பெஷாலிடி உண்டு. யெலெக்கியவாதிங்கள ஊடு கட்டி அடிக்கலாம். டகீலா போட்டுட்டு ஷகீலா படம் பாத்த மாதிரி இருக்குன்னு கவிதயா பெனாத்தலாம். என்ன... பின்னூட்ட பொட்டியில விளக்கமாறு வந்தா நான் பொறுப்பில்லைங்கண்ணா முன்னாடியே சொல்லிப்புட்டேன்.

கீதா கீர்த்தனாக்கள்

இது வேற கீதா. பகவத் கீதா. சும்மா பட்டய கிளப்பலாம். லைட்டா 'வர்ணம்' பூசி எழுத தெரிஞ்சா உத்தமம். இல்லேன்னா 'யேய் நான் தெரியாம எழுதல. வம்பிழுத்தே டின்னு கட்டிடுவேன்'ங்ற தொனியில எழுதினா இன்னும் சூப்பரு. அப்படியே சைடுல போனா 'அவதாரங்களையும்' லேசா போட்டுப் பாக்கலாம். இராமரோட சாதகம் பாத்து புறந்த எடத்தை எழுதலாம். இல்ல மறுக்கலாம். இன்னும் கொஞ்சம் சைடுல போனா ஆரியன், திராவிடன், தீவாளி'ன்னு இந்த சரத்துக்கு முடிவேயில்ல. கொஞ்சம் கற்பனையை அவுத்து வுட்டா உம்மள புடிக்க முடியாதுங்கோய்.

Female Kind

முச்சங்கரி அணி போட்டு முச்சங்கர்களோடு அடித்துப் பிடித்து விளையாடலாம். ஏதோ ஆம்பளைன்னா அப்புரானின்னு அழுகுணி ஆட்டம் ஆடறதா பூகம்பம் கிளப்பலாம். நேரா மோத தயக்கம்னா முகமூடி போட்டுகிட்டு ஆம்பளைங்களே இந்த ஆட்டம் ஆடலாம். சுவாரஸியமா இருக்கும். முக்கியமா முச்சங்கர் சின்னம் (logo) பத்தி பிரச்சினை கிளப்பலாம். ஆமாப்பா மலர்கள் பொம்பளைங்களோட சின்னம்தானே! ஏதோ குட்டையை நல்லா கலக்குங்கோ. மீனு தானா மாட்டும்.

கதே, கவிதே

ஒரு இழவும் புரியாத மாதிரி கதே போடலாம். இல்லேன்னா இருக்கவே இருக்கு கவித. படிக்கறவா முடியைப் பிச்சிண்டு அலையணும். கமெண்ட் போட சொன்னா, எழுதறவங்க ஒரு நல்ல கருத்தா சொல்லிட்டா ஹிட்டு தான். ஊக்கத்திற்கு குங்குமம் மாதிரி நல்ல கமெண்ட்டுக்கு தலைமுடி தைலம் இலவசமாய்த் தர்றதா விளம்பரம் கொடுக்கலாம்.

மனித உரிமை Murder

தூக்கு தண்டனை தேவையா? என்கவுண்டர் அவசியமா? மனித உரிமை, மண்ணாங்கட்டின்னு பெனாத்தறதுக்கு பொருத்தமான டைட்டில் இது. ரெண்டு சாரரா பிரிஞ்சிக்கிட்டு மாத்தி மாத்தி (புஷ்-கெர்ரி மாதிரி) சேறு அடிச்சு களிக்கலாம். எக்குதப்பா யாராவது பேசினா பெர்சனலா அட்டாக் பண்ண சரியான சந்தர்ப்பம் இது. வுடாதீங்கோ.

பெரிய மனித Review

லட்டு மாதிரியான டாபிக் இது. பேரு தெரிஞ்சவங்க கொடுக்கும் பேட்டி, எழுதின பொஸ்தகம், பாட்டு, கட்ளைன்னு திரும்புன பக்கமெல்லாம் கெடைக்கும். பாஞ்சு புடிக்கணும். கொஞ்சூண்டு படிக்கணும். ஐடியா அப்படியே வந்து விழும். மறை கழண்டு போச்சு, வயோதிகம் வந்துடுச்சு, செலக்டிவ் அம்னீஷியா, நட்டு கேசுன்னு மரியாதையா சொல்லிட்டு பல பதிவுகள் போடலாம். தெகிரியமிருந்தா பதில் போடுன்னு மடலாற்குழுவுல ஓப்பன் சேலஞ்ச் உடலாம். யாரு கண்டா நம்மை வைச்சு நாலு பேரு அடிச்சிக்குவாங்க.

Deep Writing

முன்னமே சொல்லிப்புடுறேன். இது கொஞ்சம் கஷ்டம். பத்து நாளு படிச்சிப்பிட்டு ஆழ, அகலமா எழுதுறது. இன்ஸ்டண்ட் பேரு கிடைக்காது. மொதல்ல கொஞ்சூண்டு பேரு வருவாங்க. அப்புறமா தெரியாது. நமக்கு இதெல்லாம் ஒத்து வராது பாசு.

பினா.குனா. இதல்லாம் வெறும் டிப்ஸ்தான். குத்து வெட்டுக்கு ஆளான நான் பொறுப்பில்ல!!!

Friday, October 22, 2004

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும் - 3

சுஜா'தா(த்தா) சொன்னாலும் சொன்னார். 15 நிமிஷப் புகழுக்கு எழுதுராளாம் வலைப்பூவில. வீரப்பன் விவகாரம், கீதை விவகாரம், இலங்கை விவகாரம், அரசியல் அடிதடி'ன்னு நான் போற பக்கமெல்லாம் ஒரே 'டிஷ்யூம்-டிஷ்யூம்' சத்தந்தான் கேக்குது.

இன்னும் சிலரோ புகழா மாதிரி தூத்துறா!!!

அப்புறமா யாராவது எங்கிட்ட சண்டைக்கு வந்தேள்னா கூலா சொல்லிப்புடுவேன். "ஆமா இவரு பெரிய வெ.சா. நான் ஒரு சு.ரா. திண்ணைல அடிச்சுக்கிறதுக்கு" அப்படின்னு!!! (இதை அப்படியே உதயகீதம் கவுண்டமணி ஸ்டைல்ல படிங்கோ. நச்சுன்னு இருக்கும்).

15 நிமிஷ புகழத்தான் நானும் தேடிண்டே இருக்கேன். இன்னும் கிடைக்கல. கிடைச்சவா இல்லேன்னா தெரிஞ்சவா ஷொல்லுங்கோ. கோடிப் புண்ணியம் !!!

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும் - 2

சில நேரம் சிலரோட இம்சை தாங்க முடியலப்பா!!! நானே பரவாயில்ல போலருக்கு ;-)

ஏதோ ஆருமே அறியாதப்போ, பாக்காதப்போ எல்லே ராம் சொல்றாப்ல, அக்குளில் சொறியும் சுகம் போல, ஏதோ எழுதுறோம். ராஜ் கிரண் (அட ஒரு காலத்துல தியேட்டரையே அழ வெப்பாரே?) மாதிரி ஆத்ம திருப்திக்கு இல்லே.

இவா இவா இப்படித்தான் எழுதுணும்னு 'எக்ஸ்பெக்டேஷன்' வேற 'பிரஷரை' கூட்டுது. பத்ரி சாருன்னா இப்படித்தான் கிரிக்கெட், உலக நடப்புகள் மட்டும்தான் எழுதுணும்னு சொல்றா. அட வுடுங்கப்பா...அப்பப்போ எடுப்பு, தொடுப்பு, ஆசை நாயகி'ன்னும் எழுதட்டும். அப்பப்போ ரஜினி, கமல், சத்யராஜ்'ஐம் தொட்டுக்கட்டும்.

பரியும், சங்கரும் (சுவடு) மரபுக் கவித எழுதட்டும். கிருபா புதுக் கவிதைன்னு ப(க)டிக்கட்டும்.

நம்ம ஆல்-இன்-ஆல் அழகுராஜா மீனாக்ஸ் மாதிரி எல்லாரும் எல்லாமும் எழுதுங்க. படிக்கிறவா தலைவிதியை நம்மால நிர்ணயிக்க முடியுமா?

Thursday, October 21, 2004

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும்

எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும்

இணையத்தில் உறவுமுறை

பாரா சாரு கட்ளை போட்டாரு. மாமா மச்சான் உறவுமொறை இணையத்துல வெச்சுக்காதேன்னு...நம்மளை பொறுத்த வரை இது ஆவறத்துக்கில்ல பாசு...

நாந்தான் ஆரம்பத்துலேயே சொன்னேனே? நமக்குத் தேவை பிரண்ட்ஸ். அதுக்காக தோழா, தோழின்னு ஒரே மாதிரி சொன்னா போரடிக்காது? எனக்கென்னவோ சியாட்டல் செல்வியார், மதி அக்கார், பரி பாசு, பாரா சாரு, (பாட்டில்) பாலா புள்ளாண்டான், சங்கர் மருமான் அப்படின்னு சொன்னா ஒரு திருப்தி. அவா காயப்படாத வரை. ஆமா அல்லாரும் ஏன் கோவிச்சுக்கப் போறா? மாம்ஸ், மச்சி அப்படின்னு ஆம்பளைங்களும், அக்கா அப்படின்னு பொம்மனாட்டிகளும் காலேஜ் படிக்கறச்சே கூப்டிக்கலியா? தங்கச்சி அக்காவ கட்டி கொடுக்கவா போறோமின்னு யோசிச்சமா? இல்ல உடன் பிறவா சகோதரின்னு கோவப்பட்டோமா? ஈழநாதன் கூட நான் குமரனா இருக்கணும்னு அனுமானம் போட்டார். நான் என்றும் 22 பாட்டில் பாலாவை கிண்டலடிப்பேன். அட...இணையத்துல இதெல்லாம் சகஜமப்பா...

ஆனா மூர்த்தியண்ணாவும், மதியக்காரும் ஏன் உடன்படலை? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Tuesday, October 12, 2004

ரெண்டுமே இறக்குமதி ஜோக்குகள்

வலி

மிருகக் காட்சி சாலையில் ஒரு ஜோடி. ஒரு சிம்பன்ஸியோ உராங்குட்டானோ ஏதோ நமது முன்னோர்களில் ஒன்று கூண்டில் இருந்தது. கணவன் தனது மனைவியை கூண்டினுள் இருந்த மனிதக் குரங்கைப் பார்த்து கண்ணடிக்கச் சொன்னான். மனைவியும் செய்தாள். குரங்கு உற்சாகமானது. திருமலை சிம்ரன் போல் இடுப்பை ஒரு வெட்டு வெட்டேன். வெட்டினாள். குரங்கு துள்ளிக் குதித்தது. ரம்பா மாதிரி ஒண்ணரைக் கண் கிறக்கத்தில் ஒரு பறக்கும் முத்தம் குடேன். கொடுத்தாள். குரங்கு கூண்டை உலுக்க ஆரம்பித்தது. கூந்தலை ஜோதிகா மாதிரி அப்படி இப்படி ஆட்டி கோணல் சிரிப்பு சிரியேன். சிரித்தாள். இப்போது குரங்கிற்கு ஹிஸ்டீரியாவே வந்து விட்டது.

திடீரென்று கூண்டின் கதவைத் திறந்த கணவன் மனைவியை உள்ளே தள்ளி விட்டான். "இப்போ குரங்கிடம் சொல்லு செல்லமே...தலை வலிக்குதுன்னு!!!"

கணிணி

ஏதோ ஒரு பார்க். சோடா புட்டி கண்ணாடியுடன் ஒரு பெருசு தீவிரமாக பெரிய புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தது. கடந்து போன வாலிபன் புத்தகத்தை எட்டிப் பார்க்க அதிர்ச்சியோ அதிர்ச்சி. C++ For Dummies.

"என்னா பெருசு... டிக்கெட் எப்ப எடுப்பேன்னு தெரியாது. உனக்கெதுக்கு C++?"
"பேராண்டி...சொர்க்கத்துல இப்போ C++ லாங்வேஜுலதான் பேசறாளாம்"


"தாத்தா அதெப்படி சொர்க்கம்தான் போவேன்னு நினைக்கிறே? மாறா நரகம் போயிட்டேன்னா என்னா செய்வே?"

"ஹி...ஹி... பேராண்டி எனக்குதான் ஜாவா தெரியுமே!"

Saturday, October 09, 2004

விரதம் முடிந்தது

அப்பப்பா...நேக்கு ஒரே களைப்பா இருக்கு. பாராவும், ஐகாரஸ் பிரகாஷ¤ம் வலைப்பூவில் மீண்டும் எழுத ஆரம்பிக்கும் வரை நானும் எழுதுவதில்லை என்று (அட சும்மானாசுக்கும் தாங்க!!!)

நம்ம ஞானதேவன் சார் சென்னைக்குப் போன சம்பவம் படிச்சவுடனே பயம் வந்துடுச்சு பாசு. எங்கே நமக்கும் ஆபீஸ¤லேர்ந்து ஆப்பு அடிச்சுடுவாளோன்னு... அதான் கொஞ்ச நாளு 'மறைந்திருந்து பார்க்கும்' மனிதாயிருந்தேன்.

இன்னொரு சுவாரசியமான விசயம். கவிதை ஒண்ணு எழுதினேன் பாசு. நம்ம பரி கடியாயுட்டு 'குசும்பு மட்டும் செய்தல் நலம்' அப்படின்னு செப்டம்பர் 13 சொல்லிட்டுப் போயிட்டாரு.

ஆனா அதே பரி பேர்ல இன்னோரு பின்னூட்டம். அக்டோபர் எட்டுல 'குசு விடாமல் இருத்தல் நலம்' அப்படின்னு சொல்றா.

பின்னூட்ட அறையில 'குசு' விடுமளவுக்கு நாகரிகம் தெரியாதவரில்லை பரி'ன்னு நம்பறேன். தொடக்கத்திலேர்ந்து ஊக்கப்படுத்திண்டு வந்த்தவா உண்மையிலேயே விட்ட பின்னூட்டமா (குசுவா) இது?

நாஞ்சில் நாடன் சார் சொல்வது போல் 'பீ', 'மூத்திரம்' அப்படின்னு எழுத விரும்புற யாரோ ஒரு 'இலக்கியவாதி' தான் பின்னூட்டம் கொடுத்திருக்கணும். அது கண்டிப்பா பரியா இருக்காதுண்ணு வேண்டிக்கறேன்.

அப்புறம் ஹேலோஸ்கேன கொஞ்சம் கிண்டிப் பாத்தேன். முதல் பரி கமெண்டு வந்த IP Address: 66.26.48.41 Raleigh North Carolina
ரெண்டாவதா வந்தது 65.69.81.2 St.Louis Missouri

ஹாலோஸ்கேன் பின்னூட்டத்தில் விரும்பும் பெயர், மின்னஞ்சல் முகவரி, இணையதள முகவரி தர முடியும். அதைப் பயன்படித்திட்டாளா? இல்லை பரியே அமெரிக்க ஜனாதிபதி விவாதம் பார்க்கப் போயி கடியாயி பின்னூட்டம் விட்டாரா?

அட தேவுடா!!! ரொம்ப நாளு கழிச்சு நல்லதா குசும்பு பண்ணாலாம்னா 'குசு' பத்தி எழுத வைச்சுட்டாளே???

தெகிரியமா உம்மையா மன்ஸ¤ல மாஞ்சாவோட வா பாசு... யாருன்னாலும்... கலக்கிப்புடுவோம்...