Friday, December 09, 2005

அதிரடி அறைகூவல்கள் சில நியாயங்கள்

மஹ்மூத் அஹ்மத்நிஜாத் (Mahmoud Ahmadinejad); ஈரானின் தற்போதைய அதிபர். எளிமையான வாழ்க்கைக்கும், பழமைவாதத்திற்கும் பெயர் போனவர். கியூபாவின் காஸ்ட்ரோ, லிபியாவின் கடாபி, வெனிஜூவேலாவின் ஹ¤யுகோ போல் அமெரிக்காவின் லேட்டஸ்ட் தலைவலி அஹ்மத்நிஜாத். ஒரு கொல்லருக்கு மகனாய்ப் பிறந்து இன்று அதிபராய் உயர்ந்தது பெருத்த சாதனைதான். (ஏங்க எலீக்ஷன்ல செலவு பண்ணாம எப்பிடி செயிச்சீங்க? தமிழ்நாட்டு அரசியல்வாதிங்ககிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன். புண்ணியமாப் போகும். எங்க ஸ்டேட் எலீக்ஷன்ல பணம் 2005 கொள்ளிடம் வெள்ளமாய் ஓடும்)

இண்டர்நேஷனல் அளவுல பஞ்ச் டயலாக் வுடுறதுக்கு இவர அடிச்சுக்க இப்போதைக்கு முடியாதுங்றேன். சாம்பிளுக்கு பதவியேற்றவுடன் வுட்டது இது: (79'ல் சம்பிரதாய தொடர்புகளை துண்டித்துக் கொண்ட அமெரிக்காவைப் பார்த்து) "எங்களுடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்ள அமெரிக்காவிற்கு முழு சுதந்திரம் உண்டு; ஆனால் அவர்களுடனான உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதை ஈரான்தான் முடிவு செய்ய வேண்டும்" (ஆமாய்யா எண்ணெய வெச்சிக்கிட்டு ஏன் பேச மாட்டீக! எங்களைப் பாருங்க வெளக்கெண்ணையில பொரிச்ச வெண்டிக்கா மாதிரிதான் பேச முடியும்)

ஒக்டோபர்ல அடிச்சாரு இன்னோரு பழைய வோர்ல்டு கப் ஜெயசூர்யா சிக்ஸரு; "இமாம் (அயோத்துல்லா கொமேனி) சொன்னது போல இஸ்ரேல் உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்பட வேண்டும்". லெக்சர் கொடுப்பதுல கில்லாடியான இவர் PhD பட்டம் வாங்கி லெக்சரராக பணியாற்றியவர். "பிராமண பிராமண அல்லாதோர்" பேச்சு போல பல வருடங்கள் கழித்து "இஸ்ரேலை அழி" என்ற வசனம் வெளிப்பட்டிருக்கின்றது. இப்பேச்சிலேயும் அமெரிக்காவை "கீழ்ப்படுத்துபவர்"/"அடக்கி ஆள்பவர்" (oppressor) என்று போட்டுப் பார்க்க தயங்கவில்லை.

அதே பேச்சினில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிரச்சினையைக் குறிப்பிடும்போது அது ஒரு வரலாற்று யுத்தம் என்று குறிப்பிடுகின்றார். பதிலுக்கு சீறிய இஸ்ரேலின் வெளியறவுத்துறை அதிகாரப்பூர்வமான பேச்சாளர் இஸ்ரேலின் இரண்டு எதிரிகளென ஹமாஸ் தலைவர் மஹ்மூத் ஜாகருடன் அஹ்மத்நிஜாத்தைச் சேர்த்து போட்டுத் தாக்கினார். அமெரிக்க அங்கிள் சாம் சும்மா இருப்பாரா? உடனே பயமுறுத்தும் கொள்கையை (Fear Tactics) எடுத்துப் போட்டார்; "அன்னிக்கே சொன்னேனே கேட்டீயளா? ஈரான் அணுஆயுதம் தயாரிக்கின்றதப்பா..." (சரி சரி ஈராக்குக்கு பக்கத்துலதானே ஈரான்; அடுத்த டார்கெட் ரெடி தலீவா; போட்டுத்தாக்கு)

லேட்டஸ்ட்டா நிஜாத் மாமு ஷொன்னதோட சாரம்ஸம் இதுதாங்கோ. 'இஸ்ரேலை ஐராப்பாவுக்கு தூக்கு. ரெண்டாம் உலகப்போருல அறுபது லட்சம் யூத இன மக்களின் அழித்தொழிப்பு என்பது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது'.

யேர்மனி (இந்தியத் தமிழில் செர்மனி :-), சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா அப்புறம் இஸ்ரேல் போன்ற நாடுகள்சைந்த பஞ்ச் டயலாக்கால் கொந்தளித்து எழுந்துள்ளன.

இதோ "குசும்பனோட பாட்டு ஆஆஆஆ ஆட்டம் போடுங்க..."

1. "சிலுவைப் போர்" என்று ஈராக் மேல் நடத்தபடும் யுத்தத்தை வர்ணித்த அமெரிக்க அதிபர் புஷ்ஷை "சைடு-டிஷ்" முக்கியத்துவம் கூட கொடுக்காமல் இன்று நிஜாத்தின் "வரலாற்றுப் போர்" என்ற உருவகப்படுத்தலை ஊடகங்கள் போட்டுத் தாக்குவது ஏன்?
2. அய்யா நிஜாத்து கேக்குறது என்ன? அமெரிக்கா கிட்ட ஆயிரமாயிரம் அணுஆயுதம் இருக்கிறது உலகத்துக்கு சேப்டி; ஈரான்கிட்ட இருந்தா தப்பா நைனா? இன்னிக்கு கருக்கலைப்பு எதிர்ப்பு, ஓரின திருமண எதிர்ப்பு, தண்டுவட செல் ஆராய்ச்சி எதிர்ப்பு என்று பழமைவாதத்தின் பிடியில் sickகுண்டு அலையும் அமெரிக்கா தாராளமயமாக்கும் கொள்கைகளை வெறும் போர்னோகிராபி படங்களில் மட்டுமே செயல்படுத்தியுள்ளது. மேற்கு மட்டுமே நாகரிகம் மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகள் காட்டுமிராண்டிகள் என்பதுதான் அமெரிக்க கொள்கையா? கியூபன் கிரைஸிஸ் மறந்து போச்சா? பொசுக்குனு பட்டன அமுக்க வேண்டியதுதேனே பாக்கி? அப்ப நிஜாத்துக்கிட்டேயும் பட்டன் இருக்கட்டுமே?
3. என்னாடா ஒரு முஸ்லிம் பழமைவாதியை ஆதரிக்கற பதிவா என்று ஆச்சரியப்படுவோர்க்கு: எதிர்ப்பு எல்லா வகையிலும் பதியப்பட வேண்டும். நிஜாத் முஸ்லிம் என்பதற்காக அவரது குரல் நசுக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தீவிரவாதத்தை குறிப்பிட்ட மதம்தான் செய்கின்றது என்ற பொதுமைப்படுத்தப்படும் குயுக்தியை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். அஞ்சாநெஞ்சன், தானைத் தளபதி, கெக்கேபிக்கே'வென ஜோ'ராக தாளம் தட்டட்டும் தமிழ் மணக்கும் நல்லுலகம். ஆனால் அது வெறும் உள்ளங்கை ஓசையாக முடியக்கூடாது. எதிர்குரல்களை நசுக்குவதுதான் பாஸிஸம்.

பி.கு. அட வாரயிறுதி மக்கா. படம் பாத்தாத்தன்னே படம் காட்ட முடியும். வரேன் வெருசா... :-)

நன்றி

பிபிசி.கொம்
அல்ஜசீரா.நெட்

Wednesday, December 07, 2005

ஷ¥ட்டிங் Shooting



பஞ்சதந்திரம் முடிஞ்சோன்ன கமலஹசன் குறுந்தாடியோட கனடா விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ¤க்கு புறப்பட்டாராம். ஏம்ப்பா LA போற அப்பிடின்னு இம்மிகிரேஷன் அதிகாரிங்க கேட்டப்போ "ஷ¥ட்டிங்"ன்னு வெள்ளந்தியா பதில் சொல்ல கொண்டு போயி உள்ள (அட ரூமுக்குள்ளப்பா) வைச்சு கொடாஞ்சுட்டாங்களாம்.

இன்னிக்கு மத்தியானம் மயாமி ஏர்போர்ட்டுல "குண்டு ஒண்ணு வைச்சிருக்கேன்" அப்பிடின்னு நிசம்மாவே கூவிக்கினு ஒருத்தர் ஓட, ஏர் மார்ஷல்ஸ் பொட்டுனு சுட்டுப் போட ஆள் ஸ்பாட்லேயே காலி. 44 வயது Rigoberto Alpizar அமெரிக்க குடிமகன். சுட்டுக் கொன்றபின் பேக்கைச் செக் பண்ணினா ஒண்ணும் கெடைக்கலே... கொலம்பியாவிலிருந்து ஓர்லாண்டோ
போகும் வழியில் நடுவில் மயாமியில் நின்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது மனைவியோ தனது கணவர் மனநிலை சரியில்லாதவரென்றும், அன்று மருந்து எடுத்துக் கொள்ளவிள்ளை என்றும் கூறுகின்றார். ஏர் மார்ஷல்களோ அவர் எங்களை நோக்கி aggressive'வாக வந்தார். அதனால வேற வழியில்லாம போட்டுத் தள்ளிட்டோம்ங்றாங்க. 9/11'க்கு அப்புறமா நடக்குறது கொஞ்சம் பீதியாத்தான் இருக்கு. என்ன இழவுன்னு மேலும் படிக்கப் போனா எற்மார்ஷல்களுக்கு பயிற்சி அதிகம் கொடுக்கப்பட்டாலும் உண்மைக் களத்தில் செயல்படும் வாய்ப்பு குறைவாம் (Air marshals get lots of training but little action). அது சரி...

படம்: நன்றி CNN

Sunday, December 04, 2005

மப்பும் மந்தாரமும்

வெளியே மெல்லிய மேகமூட்டம்; ஸ்வெட்டர் இன்னமும் தேவைபடாத அளவிற்கு குளிர்; சோபாவை விட்டு எழும்பாத சோம்பல்; ஒரு ஷாட் டெக்கீலா முடிந்தவுடன் மனமும் உடம்பும் லேசானதைச் சொல்லவும் வேண்டுமோ?

இந்திப் படம் பார்த்து நாளாகி விட்டதே என்ற குறையைக் களைய இதை விட சுபமுகூர்த்தம் உண்டா? கொஞ்ச நாட்களாகவே பாலிவுட் படங்கள் போரடித்து விட்டன. (அதற்காக கோலிவுட் சூப்பர் என்று சொன்னதாய் நினைக்க வேண்டாம்).

ல்க்ஸ் மணம் குறையாத பிரீத்தி ஜிந்தா, சற்றே தொப்பை போட்டிருக்கும் சாக்லேட் ஹீரோ செய்ப் அலி கான். ஆதித்ய சோப்ராவின் ப்ரொடக்ஷன் என்றால் செலவிற்கு குறைவிருக்காது. ஏதோ அவர் புண்ணியத்தில் கொள்ளை அழகான இடங்களை 2 டாலர்களில் கண்டு களிக்கலாம்.

அப்பாவின் சந்தோஷத்திற்கு ஆர்க்கிடெக்ட் படித்து, சொந்த சந்தோஷத்திற்காக தலைமை சமையல்கார வேலை பார்க்கும் நிகில் aka நிக் (செய்ப்), சராசரி வாழ்க்கை போரடிக்க மெல்போர்னில் மருத்துவம் படிக்க வரும் அம்பர் (பிரீத்தி). இருவரும் சந்திக்கின்றார்கள்; 5 நாட்கள் பழகுகின்றார்கள்; நிக் தன் காதலைச் சொல்ல, அம்பர் முதலில் எதிர்க்கின்றார். நிக் ஒன்றாக தன்னுடன் வசிக்கும்படி கோர, இருவரும் 2 பெட்ரூம் வீடு பார்த்து குடியேறுகின்றார்கள். போரடிக்காமல் காட்சிகள் செல்கின்றன. அழகான அவுஸ்திரேலியாவும், பாடல்களும் கிறங்க அடிக்கின்றன. மேரா தில் போலே ம்ம்ம்ம்ம் மற்றும் து ஜஹான் மே வஹான் டியூன்களை ஹம் செய்யாமல் இருப்பவர் அடுத்த பிறவியில் பீப்ப்ப்ப்ப் (சென்ஸார்)

கல்யாணத்திற்கு முன்னர் ஆணும் பெண்ணும் ஒன்றாக, ஒரே வீட்டில் வாழ்வதை புரட்சியென்று இன்னும் எத்தனை காலம் தான் நம்பப்போகின்றோமோ? NRI, பெற்றோரை எதிர்ப்பவர்கள் அதனால் என்று ஹீரோ ஹீரோயினின் இச்செய்கையை நியாயப்படுத்தும் போது, டெக்கீலா தொண்டைக்குழியில் சுரீரென்கிறது. பாதுகாப்புடன் இருந்தும் அம்பர் கருத்தரிக்க பிரச்சினை ஆரம்பமாகின்றது. திருமணம், குழந்தை என்று தனது சுதந்திரத்தை பாதிக்கும் விதயங்களை விரும்பாத நிக், கருக்கலைப்புக்கு வற்புறுத்த, அம்பர் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டு பின்னர் மறுக்கின்றாள். இதுபோன்ற சமயத்தில் டிவி ஸீரியல் டைரக்டர் யாராவது இருந்திருந்தால் சும்மா பிழியப் பிழிய அழ வைத்திருப்பார்கள். நல்ல வேளை அதுபோல் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லை. கிளைமாக்ஸை கொஞ்சம் கத்தரித்து இருக்கலாம். இருப்பினும் அபிஷேக் பச்சனின் டாக்டர் ரோலுக்காக இழுத்திருக்கின்றார்கள்.

இந்தி தெரியாதவர்கள் எனது விமர்சனத்தால் க(ல)வரப்பட்டால் இப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம். தமிழ் உப-தலைப்புகள் (சப்டைட்டில்) உண்டு. என்ன ஹிந்தி பாடல்களை தமிழ்ப்படுத்தும் போது ஞானபீடத்தின் பதிவுகள் போன்று இருக்கின்றன.

உ.தா. (1)
எல்லாம் உயிருடன் உள்ளன
ஆடிக்கொண்டு
வந்து வாழ்வின் அறிகுறிகளை
கண்டு பிடியுங்கள்

உ.தா. (2)
எப்பொழுதுமே வானத்தில் இருந்து
இறங்கி வருவதைப் போல் வருவாள்
எப்பொழுதுமே அவளது கண்கள்
என்னை உற்றுப் பார்க்கும்

பாத்தீங்களா அவசரத்துல படம் பேரை சொல்ல மறந்துட்டேனே. சலாம் நமஸ்தே. டைரக்டர் சித்தார்த் ஆனந்த்.

பி.கு. பத்து வருட ஞாபகசக்தியுள்ளவர்கள் Nine Months என்று கூறுவார்கள். சலேகா யார் :-)


புறக்கணிப்பும் புறந்தள்ளலும்

தேர்தலை புறக்கணிப்பதால் இலாபம் யாருக்கு என்று இதுவரை விளங்கேல்லை. இவரை தேர்ந்தெடுத்தால் நன்மை விளையும் என்று நம்ப முடியாவிடினும், மற்றொருவரை தேர்ந்தெடுத்தால் தீங்கு அதிகம் விளையாது என்ற அளவுகோளில்தான் உலக அரசியலே நடக்கின்றது. பொது மக்களின் நம்பிக்கைகள் பல நேரம் பொய்த்துப்புப்போவதுதான் நிதர்சனமென்றாலும், தேர்ந்தெடுப்பவர்கள் அதீத கவனத்துடன் அடுத்த முறை நடந்து கொள்ள வாய்ப்பளிப்பதுதான் தேர்தல். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஜனாதிபதி பொதுவாக வாக்களிக்க மாட்டார்கள் என்கின்ற சம்பிரதாய நியதியைக் களைந்து விட்டு தேர்தலில் வாக்களித்தார்.

வெனிஜுவேலாவில் நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பங்குபெறாததால் அதிபர் ஹ¤யுகோ சாவெஸிற்கு முழு வெற்றி! ஹ¤யுகோ இந்திய நாட்டின் அரசியல்வாதிகளைப் போலவே தடபுடல் தகிடுதத்தம் செய்வதில் சமர்த்தர். அவர் வீட்டு மாடு பால் குறைவாகக் கொடுத்தால் கூட அமெரிக்காதான் காரணமென்று கூசாமல் கூறிவிடுவார். புது பார்லிமெண்ட் பல அதிரடி திட்டங்களை வைத்திருக்கின்றதாம். முதலாவது ஒரே அதிபர் எத்தனை முறை தேர்ந்தெடுக்கப்படலாமென்னும் எண்ணிக்கைத் தடையை அகற்றுவது. ஹ¥ம்ம்ம்... ஹ¤யூகோதான் நிரந்தர அதிபர் என்னும் சட்டம் இயற்றாமலிருந்தால் சரி. எதிர்க்கட்சிகள் இல்லாமல், குறைவான அளவு மக்களே வாக்களிக்க உருவான பார்லிமெண்ட் ஜனநாயகத்தின் கேலிக்குழந்தைதான்!

சின்னப் புள்ளையா இருக்கிறச்சே கொஞ்சம் லேட்டா வூட்டுக்குப் போனாலும் பாட்டி கேக்கும்," என்னடா சிலோனுக்குப் போயிட்டு வரியா?" சிலோன் எங்க இருந்ததுன்னு பாட்டிக்கு தெரியுமோ தெரியாதோ... ஆனா கொஞ்ச தூரத்துல இருப்பது மட்டும் தெரியும். அட இப்ப வலைப்பதிவர் கண்களில் கூட அடிக்கடி அகப்படும் தூரத்தில் இருப்பதக் காண்பதற்கு வியப்பாய் இருக்கின்றது. எங்கியோ இருக்கிற வெனிஜூவேலா தேர்தல் கண்ணிற்கு பட்டபோது சிலோன் என்கின்ற சிறீலங்கா என்கின்ற இலங்கை படாமலா? "எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்" என்று ஒருகாலத்தில் தெளிவாய் (ர.ரா மன்னிக்க) பாடிய ரசினிகாந்து போல "எமக்கு ரணிலும் வேண்டாம் ரஜ ப§க்ஷயும் வேண்டாம்" என்று ஈழத் தமிழர்கள் யாருக்கும் ஆதரவாக வாக்களிக்காமல் ஒதுக்(ங்)கி விட்டார்கள். விளைவு பின்னவர் இன்று அதிபர். "இவரை தேர்ந்தெடுத்தால் நன்மை விளையும் என்று நம்ப முடியாவிடினும், மற்றொருவரை தேர்ந்தெடுத்தால் தீங்கு அதிகம் விளையாது என்ற அளவுகோளில்தான் உலக அரசியலே நடக்கின்றது" என்று தீர்க்கமாக நம்பிய ஒருவரின் (ஹிஹி நாந்தான்) கருத்து கட்டுடைக்கப்பட்டது. இலங்கையில் மீண்டும் போர் மூண்டால் அதற்கு ரஜப§க்ஷ மட்டும் தான் பொறுப்பாவாரா?

பி.கு. சொல்லாமல் விட்டது "எங்கு வாய்ப்புக் கிடைத்தாலும் ஓட்டுப் போடுங்கள்" :-)

Friday, November 25, 2005

தனி மனித ஒழுக்கம்


ஒயுக்கம் வியுப்பம் தரலாம் ஒயுக்கம்
உயிரினும் *ம்பப் படும்


கொரளு போட்டு கொரலு வுடுறதுதான் இப்போ லேட்டஷ்ட் பேஷன்...

காட்சி - 1
மேலவுள்ளதைச் சொன்னது யாருலே?
அய்யா பல்லவனுங்க
(பலத்த அறை....ரப்.....காதில் ஞ்ஙௌய்ய்ய்)
கேனை... நம்ம மருத்துவ ஐயாடா
பஸ்ல போட்டிருந்தாய்ங்களா அதான் கொழம்பிட்டேன்
ஒயுக்கம்னா என்னா?
தெரிஞ்சா உங்கூட ஒட்டிட்டிருப்பேனா?
டேய் தண்ணியடிப்பியா?
ஹிஹி ஆமாங்க
தம்மு?
இல்லீங்க பீடி மட்டும்
பான்பராக்?
சீய்த்தூதூ... மாணிக்சந்த் மட்டுமே
கீப்பு வைப்பு?
கட்டுபடி ஆவாதூங்களே
சரி சரி அங்கன அப்பிடி இப்பிடி..
அடப்போங்க... பீடை கழிக்க வழி வேற என்னாங்க?
மாட்டிக்கினியா...சிக்கிக்கினியா
யென்னாபா சொல்றே?
நீ ஒயுக்கமில்லாதவன்...ஓடிப்போயிடு

காட்சி - 2

என்னாங்க அநியாயம் அக்குறும்பா இருக்கு?
எதச் சொல்ற?
பிரச்சினைன்னா பேசித்தீக்கோணும் அதவிட்டுப் போட்டு இப்பிடி மரத்த வெட்டி நடுரோட்டுலயா போடுவாணுங்க
ஏய் நாக்க அடக்கு. மரத்த வெட்டுனா நஷ்டம் அவனுக்கும்தான் புள்ளே
அட விடியா மூஞ்சி. ரோட்டோர மரத்த வெட்டுனா நட்டம் யாருக்குன்னு தெரியாத சிங்கமணியா நீ?
சரி வுடு புள்ள. தலையவா வெட்டினாங்க?
அப்ப தலைய வெட்டுனா நான் சரின்னா சொன்னேன்?
தலை வெட்டிக்கச்சின்னு அத்த தெளிவா சொல்லு புள்ள
தலையோ, மரமோ வெட்டினா தப்புதேன்
மரம் வெட்டினா இன்னோன்னு வைக்கலாம். பசுமை தாயகம் காணலாம். ஆனா தலைய வெட்டினா?
ஆஹா... இன்னாமா லாஜிக்கு பேசுற. மாமான்னா மாமாதான்.

காட்சி - 3

தல: சட்டசபை, பாராளுமன்றம், மேலவை, கீழவை, கார்ப்பொரேஷன், நகராட்சி ஏன் குடியாட்சியிலும் கூட எனது குடும்பத்தவர் வந்தால் "செப்பலால்" அடியுங்கள்

(பிகில் பறக்கின்றது)

பி.கு. பிற ஒயுக்கங்களைப் பற்றி விரிவாக படக்காட்சியுடன் தொடர உத்தேசம். மலினப்படுத்தும் முயற்சி என்று சிங்கமணிகள் முரசு கொட்டினாலும்...

ஸான் மியாகி


கராத்தே என்பது பரதநாட்டியம் போன்ற ஒரு கலை. புராதனமானது. விந்தையானது. ஒழுக்கத்தை கற்பிப்பது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இக்கலையையும் குசும்பாய் திரையில் காட்டிப் புகழ் பெற்றவர் Noriyuki "Pat" Morita.

பிறருக்கு சிரிப்பூட்டும் கலையில் வல்லவராய்த் திகழ்பவர்களின் வாழ்க்கை எப்போதும் அவ்வளவு ரோஸியாக இருந்திருக்க முடியாது என்பதற்கு சார்லி சாப்ளினைக் கூறலாம். நமது மியாகி ஸானும் அதற்கு விதி விலக்கல்ல. இளம் வயதில் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டு, இரண்டாம் உலகப்போரினில் "நம்பிக்கையற்றோர் பட்டியலில்" அமெரிக்காவால் வைக்கப்பட்டு என்று இவரது சோக சரித்திரம் நீளும்.

"ஒரு நாள் நானொரு முடம்; மறுநாளே கிட்டத்தட்ட தேசத்துரோகி", என்று கிண்டலாய் தன் இளம்பிராயத்து வாழ்வைக் குறிப்பிடுவார். The Karate Kid என்னும் படத்திற்காக துணை-நடிகர் ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டவர். மேலும் விபரங்களுக்கு:

Mr. Morita I miss you!!!

Wednesday, November 23, 2005

ஸாரி Giving வாழ்த்துக்கள்

ஏழையின் ஸாரி
ஐயா என்னை மன்னிச்சுடுங்க
எலே என்ன தப்பு பண்ணிணவே?
தெரியாம நான் தப்பு ஏதாவது பண்ணியிருப்பேன்யா. அதுனால மன்னிச்சுடுங்க
நேத்திக்கு ஏத்துன டாஸ்மேக்கு சரக்கு எறங்கலியாக்கும்? வேற சோலி ஏதாச்சும் பாருலே
இல்லேய்யா நீங்க மன்னிச்சுட்டேன்ன்னு ஒரு வார்த்தை சொன்னாத்தான்...
என்ன எழவுலே சரி மன்னிச்சுட்டேன் ஒழி

புரொபஷனல் ஸாரி
டேய் என்னடா கண்ணை மூடி நடுநெத்தியிலே ஆள்காட்டி விரல வெச்சிட்டு...
ஸாரிடா. என்னை மன்னிச்சிடு
ரெண்டும் ஒண்ணுதானே. நீயென்ன நடிகர் சுந்தர்ராஜனா? எதுக்கு ஸாரி மன்னிப்பெல்லாம்?
எல்லாத்துக்குந்தான்
எந்த எல்லாத்துக்கு?
எல்லாருக்கும் சேத்துத்தான்
எங்கிட்ட சொல்லிட்டே. அப்ப மத்தவங்களுக்கு
அதுதான் டெலிபதி மெஸேஜில சொல்றேன்

அரசியல் ஸாரி
மக்களே என்னை மன்னிச்சிடுங்க
புச்சா ஏதாச்சும் நல்லது பண்ணீட்டியளா?
இல்ல மக்கா
அப்ப திருந்திட்டீயளோ?
யோவ் அதுவும் இல்லையா
பின்ன என்ன *யித்துக்கு ஸாரி?
அத இப்ப சொல்ல முடியாது ஸாரி

டீக்கடை ஸாரி
என்ன கெரகமடா இன்னிக்கு ஸாரி சொல்ற தினமாம்
அப்பிடீன்னா?
ஏம்ப்பா பொது அறிவே ஒனக்கு கெடையாதா?
இருந்தா உங்கிட்ட போயி கேப்பேனா?
என்ன நிக்கலா? அறிஞ்சும் அறியாமலும், தெரிஞ்சும் தெரியாமலும் பண்ணின தப்புக்கெல்லாம்...
ஸாரி
அடடே கற்பூர புத்திடா ஒனக்கு
ஆனா உனக்கெப்படி வாசனை தெரிஞ்சது? ஹிஹி ஸாரி

வீட்டு ஸாரி
என்னங்க ஸாரிங்க
அடிப்பாவி தீபாவளிக்குத்தான் ரெண்டா வாங்கினியே
அதில்லைங்க இது வேற ஸாரி
சந்திரமுகியா இல்ல வேற மாடலா?
அதில்லன்னு சொல்றேன்ல
ஏண்டி உசுரை வாங்குற. புரியிற மாதிரி சொல்லித் தொலை
அதான் ஸாரி சொல்லிட்டேன்ல. அப்புறம் ஏன் கத்துறீங்க?
ஸாரி சொன்னியா. நான் ஸாரி கேட்டதால்ல நினைச்சேன். ஸாரி.

பி.கு. என்ன நீங்களும் ஸாரி கேட்டாச்சா? இல்லாவிடில் இன்றே கேளுங்கள். இப்பதிவின் பின்னூட்டத்தில் ஸாரி கேட்டு உங்கள் ஸாரிப் பற்றை நிரூபியுங்கள். மேலும் ஆன்லைனில் ஸாரி கேட்க முகவரி: http://tamilkushboo.com. மின்னஞ்சலிலும் தள நிர்வாகிகளுக்கு அனுப்பலாம். பிரசுரத்திற்கேற்ற ஸாரிகளே பிரசுரிக்கப்படும். ஸாரி

Monday, November 21, 2005

ராஜபார்ட் சித்தன்

1. சுபயோக தினமில்லாத தூஷிக்கப்படும் நேரத்தில் ஆந்தையும், கூகையும் அலறும் ஓமன்களோடு ஏறக்குறைய ஷாக் படம் போல் பேதியுடன் ஓப்பனிங் ஷாட் வைத்தது புதுமை. எகிப்திய மம்மி போல் துணி சுற்றிய உருவம் சுற்றி சுற்றி வருகின்றது. எத்தனை வயதானாலும் கேரளா மூலிகை வைத்தியத்தையும், மேக்கப் பெட்டியையும் நம்பியே காலத்தை ஓட்டும் மூத்த கதாநாயகர்கள் மத்தியில் இப்படி ஒரு ஹீரோவை ஜீரோவாக அறிமுகப்படுத்துவது நவீன குயுக்தி.
2. அவார்டு படம் போல அவசரகதியில் ஆரம்ப காட்சிகள் நாயகன் ஆட்டைக்குப் புதிது என்று சொல்லாமல் சொதப்புகின்றன. ஒரு படத்தில் சூப்புற ஸ்டார்தான் நான்; சூப்பர் ஸ்டாரில்லை என்று கூறும் போது குழந்தைத்தனம் தான் கும்மாளம் போட்டு வெளிவருகின்றது.
3. வாலிப வயதிலும் நாயகன் ஜாலியாக கோலி விளையாடுவது, கிசு-கிசு தாம்பாளம் செய்வது, கல்லாங் கல்லாங் குஸ்திபாய் போடுவது என்று முன்பாதி எப்படியோ ஒப்பேற்றி நகர்கின்றது. விளையாட்டு அவ்வப்போது வினையாகும் போது ஜகா, ஜூட் என்று அனைத்தும் வாங்கும்போது இயக்குநர் ஹீரோவாகவும், நாயகன் வில்லனாகவும் ஆள்மாறி ஆட்டங் காட்டுகின்றார்கள்.
4. ஆள்மாறாட்ட படங்காட்டுதல் அரதப்பழசு ஸ்வாமி என்றபடி ஊர்ப்பெருசு குறுக்கிட கதை சூடு பிடிக்கின்றது. இயக்குநரும், நாயகனும் ஒருவனே என்பதை "அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்", என்ற பாடல் அசத்தலாய் சொல்கின்றது. விளையாட்டுத்தனமான நாயகனுக்கு எதிரிகள் இல்லைதான். ஆனால் இயக்குநருக்கு அப்படியா? இவ்வளவு நாளா மாய்மாலமா பண்றே என்று கும்பல் காத்திருப்பதை காட்டும்போது ஒரு மர்ம முடிச்சு விழுகின்றது.
5. மர்ம முடிச்சு அவிழ்ந்ததா? நாயகன் குழுமமாக கும்மப்பட்டாரா? மம்மி உடையில் அலையும் மர்ம உருவம் "குயிலைப் புடிச்சு கூண்டிலடிச்சு அடை காக்கச் சொல்லுகின்ற உலகம், மயிலைப் புடிச்சி பிரியாணி வெச்சி ஆடச் சொல்லுகின்ற உலகம்" என்ற கிளைமாக்ஸ் காட்சி விவரிக்கும். இதோ படம் பாத்து வெளிவந்த மகாஜனங்களின் விமர்ஜனங்களை பார்ப்போமா?
ஜனம்1: படம் ப்ளாப்புங்க. எத்தினி நாளிக்குதான் சரக்கில்லாம ஓட்டுவாய்ங்க? ஆட்டம் அப்பீட்டுங்க.
ஜனம்2: இன்னாருக்கு இன்னா செய்தாரை என்னா செய்யலாம்னு பல்லவன் பஸ்லே சொல்லியிருக்காங்க. இந்தப்படம் பீஸ் புடுங்கின பல்பு சார்.
ஜனமி3: படமா இது? ச்சீத்த்துஊஊ...(காமிராக்காரர் அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொள்கின்றார்)
ஜனம்4: யோவ் ஈசலு மாதிரி ஒரு நாளு இந்தப் படம் ஓடினா பெர்சு. வோணுமின்னா நம்ம பக்கத்து தியேட்டரிண்டை வா. எவர்கிரீன் படம் காட்டுறன்.
ஜனம்5: எப்பிடி இருந்த ஆளு நீ? இப்பிடி ராசா வின்னர் கைப்பிள்ளையாய் குத்து வாங்கிட்டீயேப்பா...
ஜனம்6: லெப்டு குத்து ரைட்டு குத்து ஈஸ்ட்டு குத்து பேக்டீரியா குத்து பாட்டு சூப்பர் ஸார்
ஜனம்7: பாதி ஸ்டோரி புரியில மாமு. இதுக்காக இன்னொரு தபா பாக்கலாம்
ஜனம்8: ஒண்ணுமே புரியல. குழப்பமா இருக்கு. நீங்களாவது கதை சொல்லுங்களேன். (கிசுகிசுகிசு) ஆஹா இப்ப புரிஞ்சு போச்சு. ஆனா நான் என்ன பண்ணனும்? யாராவது சொல்லுங்களேன்...
ஜனம்9: டேய் படமா இது? அக்கம்பக்களிண்டை பாத்தாவது படம் எடுங்கடா. பேசாம வெங்காய ஜித்தன்ன்னு பேர வெச்சிருக்கலாம்.
ஜனம்10: கர்புர்கர்புர்கர்புர்கர்புர்

டெக்னிகல் பிராப்ளத்தால் கேட்க முடியவில்லை நேயர்களே!!! மொத்தத்தில்
ராஜபார்ட் சித்தன். பிளாட்பார பித்தன். கூஜாவின்றி!!!

Petty பூர்ஷ்வா


1. திறக்காத பெட்டியை திறந்துதான் வெச்சியே ராசாவே ராசா என் ராசா என்று நாயகி பாட, முறுக்காத நரம்பெல்லாம் முறுக்கித்தான் விட்டியே ரோஸாவே ரோஸா என் ரோஸா என்று நாயகன் எசைபாட்டுப் பாட, படம் தொடங்குவது கலக்கல்.
2. பூர்ஷ்வாவின் படங்கள் என்றாலே சத்தியராஜ் போல ஒரு லொள்ளு எதிர்பார்ப்பு இருக்கும். அவரும் அதற்கு குறை வைக்காமல் இருப்பது மனதிற்கு பெருத்த ஆறுதல். மேலும் முருங்கைக்காய் புகழ் பாக்கியராஜ் போல பல பஞ்ச் வார்த்தைகளில் கலக்கும் பூர்ஷ்வா ஷ்டைல் இங்கேயும் தொடர்கின்றது.
3. ஸ்வீட் என்ற வார்த்தையை இவர் வாரியதைப் பார்க்கும் பொழுது, இண்டெர்வலில் யாரும் கடலை மிட்டாய் கூட சாப்பிடுவார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது. சிறிதே தெலுங்கு வாடை அடித்தாலும் நாட்டுக்கட்டையில் "எங்கம்மா" என்று இவர் எதிராளிகளைப் பார்த்து சவுண்ட் விடும் காட்சிகளில், பின்னணியில் விரியும் இசை உள்ளத்தைக் கொள்ளை கொல்கின்றது.
4. இருப்பினும் சென்ஸாரில் வெட்டப்பட்ட வார்த்தைகளை மௌனமாக்காமல் ஆங்கில டெலிவிஷன் காமெடி சீரியல்களைப் போல "பீப்" என்று ஒலி கொடுப்பதுதான் கொடுமை. படமெங்கும் "பீப்" ஒலியே நிறைந்திருப்பதால் இசையமைப்பாளருக்கு பீப் பட்டனை அமுக்குவதை விட பெரிய வேலையெதுவும் இல்லை. நாயகனே எனக்குப் பிடித்தது "பீப்" என்று குரல் கொடுப்பது இரட்டை அர்த்தத்திலா இல்லை தனது வார்த்தையைத் தானே சென்சார் செய்து கொள்கின்றாரா என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.
5. மல்டி-டாஸ்க்கிங்'ல் கிங்கான பூர்ஷ்வா அடிக்கடி "இன்னைக்கு என் எதிர்ப்பை பதிவு செய்து, இன்னொரு நாள் விரிவாக சொல்கின்றேன்", என்று நழுவுவது சூப்பர் காமெடி. ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் நாசூக்கு இவரிடமிருந்தாலும் தேவையின்றி பேசும் வசனங்களால் சராசரியாகிப் போகின்றார்.
6. அதிரடி அறிக்கையின் அவதாரமான நம் நாயகன் இப்படத்திலும் பல அரைகுறைகூவல்கள் விடுகின்றார். இருப்பினும் "பீப்" சப்தத்தில் அவை அனைத்தும் அமுங்கிப் போவதுதான் அந்தோ பரிதாபம். கிளைமாக்ஸில் கவசகுண்டலத்தை யாசிக்க வந்த கண்ணனைப் பார்த்து கர்ணன் கூறும் முகமாக, பலரிடம், அவர்களே உதவி கேட்காவிடினும், "இப்போது உங்களுக்கு என்னால் சப்போர்ட் மட்டுமே தர முடியும்", என்று மார(ட)ல் கண்ணீர் சிந்துவது வலிந்து திணிக்கப்பட்ட செயற்கைத்தனம்.
7. இவர் கச்சை கட்டி களமிறங்கிய பின், சப்போர்ட் செய்த பலரும் கலர் மாறும் போது கம்மென்று இருக்கும் காரணம் யாது? இது இயக்குநருக்கே தெரிந்த ரகஸியம். ஆனால் படத்தில் இவர் புலியோடு போடும் கிளாடியேட்டர் சண்டை ப்ரம்ம்மாதம்.
8. பொறி பறக்கும் வசனங்களை அள்ளித் தெளித்தும், எதிரே இருப்பவரை எப்பவும் கேனையாகவே சித்தரிப்பதும், பேசினால் கத்தரிப்பதும் போன்ற ட்ரேட்மார்க் காட்சிகளில்லாவிட்டால் பூர்ஷ்வா வெறும் 'புஸ்வா' என்பது ஓப்பன் சீக்ரெட்.
9. (இங்கே உங்களுக்குப் பிடித்ததை போட்டுக்கொள்ளலாம்) பீபீபீப்ப்ப்ப்ப்ப்ப்
10. Petty பூர்ஷ்வா - பெட்டிப்பாம்பு - பல்லிருந்தும்

Sunday, November 20, 2005

பெரியவன்

1. உலக சரித்திரத்தில் முதன் முறையாக எவரும் சூல் கொள்ளலாமென்ற Sci-Fi கருத்தோடு களம் புகுகின்றார் இயக்குநர்.
2. அநீதியினைக் கண்டு பொங்கியெழும் வழக்கமான ஹீரோ ரோலென்றாலும், அதை முற்றிலும் வித்தியாசமாய் செய்திருக்கின்றார் பெரியவன். முழுக்க முழுக்க திராவிடக் கருத்துகளை உள்வாங்கியதாய் நடிக்கும் நாயகன், அரிதாக ஓவராக்டிங் செய்த செவாலியரை நினைவுபடுத்துகின்றார்.
3. தனியாக பத்துபேரையடிக்கும் சராசரி நாயகனைப் போலன்றி, டூப்பின்றி பாதுகாப்பாக குழுமமாக கும்மும் ப்ராக்டிகல் செயல்பாட்டை நமக்கு அறிமுகம் செய்ததற்கு சலாம்.
4. இருப்பினும் என் வழி தனி வழியென்று அவ்வப்போது ஸ்டேட்மெண்ட் விடுவது காமெடிக்காக இணைக்கப்பட்ட பஞ்ச் டயலாக்கானாலும், பஞ்சராகிய ட்யூப் போல் தேவையில்லாத இடைச் செருகல்.
5. எதைச் செய்தாலும் சொந்தமாக சொதப்புவேன் என்று கர்ஜித்து விட்டு, பிற பெயர்களில் போஸ்டர் ஒட்டுவதுதான் ஏனென்று புரியவில்லை. படத்தின் உப-பாத்திரமாக உலா வரும் சிங்கை ப்ரோவான மலரவன் கூற்று ஒருவேளை உண்மையாயிருக்குமோ? பெரியவன் தேவையில்லாததை மலரவ ப்ரோக்களிடமிருந்து கற்றுக் கொண்டு விட்டாரோ? இதுபோன்ற சகவாச சங்கடங்களின் கூறுகளை ஆணித்தரமாக அலசுகின்றார் பெரியவன்.
6. வெளியே தெரியவா போகின்றதென்று வேறிடத்தில், மாற்று பெயரில் போஸ்டர் ஒட்டும்போது அறியாமல் கைரேகை விட்டு விடுகின்றார் பெரியவன். வேறிடமோ நியாயஸ்தன் பட ஹீரோவுக்கு சொந்தமான காரணத்தால் சார்லி சாப்ளின் போல கனத்த மௌனம். இப்படத்தில் வரும் சும்பன் என்னும் காமெடியன் இதை சரியாக மோப்பம் பிடிக்கின்றான். இருப்பினும் பாப்பராஸி என்ற ஹாலிவுட் பட உளவு அதிகாரி போல் விட்டுப் பிடிக்கின்றான்.
7. ... பீ... என்று சும்பன் சுள்ளானாய்க் கத்தியபடி, அங்கதமாய்க் கீ...பேடில் தட்ட, பெரியவனின் ஆபீஸ் சூட் நம்பரே பப்பரப்பேன் என்று பல்லிளிப்பதாய் கம்ப்யூட்டர் ஸ்கீரினில் இயக்குநர் காட்டுவது நச். காலைப் பிடித்தது என்ன? வெந்நீர் ஊற்றியது என்ன? வேடமணிந்தது என்ன? காலைப் பிடித்தது என்ன என்ன?... என்ற எண்ண எண்ண பேக்கிரௌண்ட் பாடல் பலே ஜோர்.
8. இனியாவது பெரியவன் கும்பல் மனப்பான்மையை கைவிட்டு, சுயமாய் சுயம்புவாய் வெளிப்படுவாரா? இல்லை கைத்தொழிலை மறந்து "கக்கு"வான் இருமலென்று கதறி, அங்கீகார அரிப்பிலேயே சுகம் காணப் போகின்றாரா என்பதே படம் முடித்து வெளிவரும் ரசிகர்களின் கேள்வி.
9. பெரியவன் படத்திலும், டெக்னீஷியன்களே அவரை விட சொதப்பிவிடுபவர்கள் என்பதை அவர் உணரவேண்டும். இல்லாவிடில் தான் நம்பும் கரமே பு(உ)தைகுழி தோண்டுவதை படத்தில் காமெடியாக ரசிக்கப்பட்டாலும் அதுவே பெரியவனுக்கு டிராஜடி. தேவையின்றி வாழையிலை பிடித்து இட்லிவடை சாப்பிடும் பெரியவனின் மனோநிலை மேலும் குழப்புகின்றது.
10. பெரியவன். சிறுபிள்ளை. இந்திரஜித் பெயரிலும்.

பூனைப் பெண்

1. நாணயத்திற்கு இரு பக்கம் போல தனது நாணயத்திலும் இரு பக்கமுண்டு என்ற கறுப்பு உண்மையை இயக்குநர் இப்படத்தின் மூலம் விளக்குகின்றார்.
2. சமூக நீதிக்காக உண்மையிலேயே பாடுபடுவர் படத்தின் நாயகி. உறுதியுள்ளம் படைத்தவராக அவரைக் காணும் போது இன்றைய இள உள்ளங்கள் இவரிடம் கற்றுத் தெளிய நிறையவுண்டு என்பது வெள்ளிடை மலை.
3. அடித்தட்டிலிருந்து போராடி பல துறைகளிலும் பேசும்படி சாதித்து சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்கின்றாள் நாயகி. உயர வேண்டுமென்றால் போராட வேண்டும் என்ற கொள்கையை வித்திட்டதற்காக இயக்குநருக்கு ஒரு ராயல் சல்யூட்.
4. தான் நினைத்ததை தவறென்று பிறர் கருதினாலும், தயங்காமல் எடுத்துக் கூறும் நாயகியின் ஸ்பெஷாலிட்டிக்கு ஒரு ஷொட்டு.
5. இருப்பினும் இதே கொள்கையை அவர் செலக்டிவ்வாக பயன்படுத்துகின்றாரோ என்று ஒரு சிறு ஐயம் ஏற்பட வைப்பதுதான் படத்தின் லாஜிக்கையே உதைக்கின்றது. உதாரணமாக உள்வீட்டுப் பிரச்சினை ஒன்று வரும் போது உறைக்கும்படி உரைக்காமல், தனக்கே உடன்பாடு உண்டா என்று தெரியாமல், "உன் வீடு என் வீடு யுனிவீடு தனிவீடு" என்று
பொத்தாம்பொதுவாக ஜல்லியடிக்கின்றார். இது கதாபாத்திரத்தின் போக்கையே சிறிதேனும் மாற்றி விடுகின்றதெனலாம்.
6. உலகினுக்கே உரை நிகழ்த்தும் அம்மணி உள்வீட்டு நிலவரம் பற்றி முற்றிலும் அறிந்து வைத்திருக்கின்றாரா? சொந்த ஆசாரங்களை வாழ்க்கையில் கைவிடாமல், பொதுவில் புது பிம்பம் கட்டுமானம் செய்வது எதனால்? ஆமாம் அனைவரும் அதைத்தானேயப்பா செய்கின்றோம் என்ற மெசேஜை அழுத்தம் திருத்தமாக நாயகி நமக்கு உணர்த்துவது ஒரு நல்ல பாடம் .
7. தீவிரவாதி ஒருவனைக் கண்டவுடன் நாயகி மனம் கலங்குவதுதற்கு ஒரு சொட்டு கண்ணீர்.
8. தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்ட, நாம் கண்ணீர் வடித்தோமே தோழி என்ற பாட்டிற்கு தேசமே அழப்போவது உறுதி.
9. கோளாக மாறி உலகையே வலம் வர வேண்டிய இந்த வெள்ளி, நூலறுந்த பட்டம் போல் இலக்கு மறந்து அவ்வப்போது அடித்துச் செல்லப்படுவதுதான் காலத்தின் கட்டாயமா? இல்லை அரிதாரத்தின் அவல நிலையா?
10. பூனைப்பெண். யானை. மதில் மேல்!!!

செஞ்சோற்றுக்கடன்

1. முழுக்க முழுக்க செந்தமிழ்ச் சித்திரம்தான் செஞ்சோற்றுக்கடன்.
2.
வாழிய செந்தமிழ்
வாழிய நற்றமிழர்
வாழிய பாரத தனித்தமிழ்நாடு

என்ற தேய்ந்த கோஷம் தனித்தொலிக்க, பாரதியும் ஒரு பார்ப்பன திராவிடன்தான் என்பதை எடுத்தியம்பும் வகையில் படம் ஆரம்பிக்கின்றது.
3. காமெடிக்கு இரட்டையர் என்பது கோலிவுட் கலாச்சாரம். இப்படத்தில் கவுண்டமணி-செந்தில் இல்லாத குறையை மணி-வடிவேல் நிவர்த்தி செய்கின்றனர்.
4. 1992 கதையாடல் கேட்கும்போது பழைய புராணம் என்று கிண்டலடித்து விட்டு, அரதப் பழசான மனுப் பஞ்சாங்கத்தை கையில் தூக்கி வைத்து குத்தாட்டம் போடுவது இயல்பான காமடி.
5. தன் வீட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டும் காணாமல் போகும் இவர்கள், சமூக அவலங்களைக் கண்டதும் இரட்டைகுழல் துப்பாக்கியாய் வெடிப்பதுதான் ஏனென்று படம் முழுவதும் விளங்கேல்லை.
6. "கத்திரிக்காய் பிஞ்சு கத்திரிக்காய்" என்ற பாடலில் இருவரும் கவிச்சிக்கறியோடு கூட்டாஞ்சோறு சாப்பிடும் காட்சி உள்ளத்தைத் தொடுகின்றது.
7. ஜெய என்னும் prefix கேட்டவுடன் ஹிஸ்டீரியா பீடித்தது போல "ஏய்" பட சரத்குமார் ரேஞ்சுக்கு ஏன் கிறீச்சிடுகின்றார்கள்? சத்யமேவ ஜெயதே என்பதில் கூட ஜெய'வை எடுக்க வேண்டுமென்று ஏன் விருப்பப்படுகின்றார்கள் போன்ற கேள்விகளுக்கு படத்தில் விடைகளில்லை.
8. வீரபாண்டிய கட்டபொம்மன் போல் விலா வாரியாக வீரவசனங்களை மணி நீட்டி முழக்கும் போது வெலா வெடிக்கும் அளவிற்கு ஆடியன்ஸ் சிரிக்கப்போவது கியாரண்டி.
9. குறைந்த பட்ஜெட், நிறைந்த காமெடி என்ற இந்த இணைய இரட்டையர் படம் நீண்ட நாட்கள் இண்டஸ்ட்ரீயில் பேசப்படும்.
10. செஞ்சோற்றுக்கடன். கழிந்துவிட்டது. வாயுத்தொல்லையால்!!!

Saturday, November 19, 2005

Dr. ஈரப்பாய்


1. காலத்தால் அழியாத லலிதா ஜூவல்லர்ஸின் தங்க ஆபரணங்களைப் போல், அழியாப் புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் நடித்த படம் Dr. ஈரப்பாய். "எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா", என்ற தீம் மியூசிக்குடன் படம் ஆரம்பிக்கின்றது.

2. நிலைக்குத் தக்கவாறு நிலைபாட்டை மாற்றிக் கொள்ளும் கலையில் வல்லவரான ஜேம்ஸ், இப்படத்திலும் உளவு வேலை பார்ப்பவராக உலா வருகின்றார். ஒற்றனுக்கு தகுந்தவாறு பல மாறுவேடங்களிலும் அவர் வருவதைப் பார்க்கும் போது மகாநடிகனின் வாடை பலமாக அடிக்கின்றது.

3. பல இடங்களில் தனது நாயக அந்தஸ்துக்கு மிகவும் பொருத்தமானபடி டர் பட ஷாரூக்கான் போல பலரையும் கிலி கொள்ளச் செய்கின்றார். ஒரு தேர்ந்த சர்க்கஸ் மாஸ்டரைப் போல் அவர் படத்தில் புலிகளைக் கையாள்வதும், பின்னர் அதற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று பல்டியடிப்பதும் நல்ல பகிடி.

4. இப்படத்தில் போட்டியாக வருபவரும் ஒரு டாக்டரே. குணசித்திர வேடத்தில் வரும் Dr. பரமுவடிவேல Van Damme' பல இடங்களில் நாயகனை பின்னுக்குத் தள்ளி விடுகின்றார் என்பதே திகட்டாத உண்மை. ஜேம்ஸின் பிளவாளுமை எனப்படும் MPS பிரச்சினையை அழகாக பார்ப்பவர் கண்களுக்கு முன் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றார்.

5. இருப்பினும் பலருக்குத் தெரிந்த உண்மையை மீண்டும் மீண்டும் இவர் நிரூபணம் செய்ய முயற்சிக்கும் போது லேசான எரிச்சல் மூள்வதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

6. ஓரொண்ணு ஒண்ணு என்று வடிவேலர் பாட, கண்ணுனக்கு ரெண்டு என்று நாயகன் பிளவாளுமையை வெளிப்படுத்த, பரவை கறுப்பியம்மாவோ போடா என் பிழைக்கத்தெரிஞ்ச பதரு என்று ஜேம்ஸுக்கே டோஸ் விடுகின்றார்.

7. பஞ்ச் டயலாக்குகளுக்கு படத்தில் பஞ்சமேயில்லை. போட்டி டாக்டர், நாயகனின் பல அவதாரங்களைக் கண்டு வெறுப்புறவே, அவங்களிடை சண்டை மூள்கின்றது. தோற்றுப் போகும் நாயகனைப் பார்த்து இரக்கமுடன் "இன்று போய் ஈரப்பாயில் தேய்த்து, நாளை எழுந்திருந்தால் திரும்ப வா" என்று கூறுவதுதான் கிளைமாக்ஸ். தியேட்டரே விசில் சப்தத்தால் அதிரப்போவது நிச்சயம்.

8. பீட்டர் ஹேய்ன்ஸ் பல ஹாலிவுட் படங்களின் ஸ்டண்டுகளை மனதில் நிறுத்தி சண்டைக்காட்சிகளை வடிவமைத்ததற்கு ஒரு சபாஷ். ரண்டக்க பிராண்டிக்க என்று தொடங்கும் பாடலில் "உன்னைப் பனை மரத்தின் நெறியைப் போல மறைச்சேன்" என்னும் வரிகள் சுகம்.

9. நாயகனின் படங்கள் அதி பிரும்மாண்டமாய், காண்போரை கலக்குமுற செய்வதாய் தெரிந்தாலும், உள்ளேயிருப்பது உச்சபட்ச Hi-Fi அபத்த காட்சிகளென்பதை இப்படம் மீண்டும் நிரூபிக்கின்றது.

10. Dr. ஈரப்பாய் நனைத்து விட்டார். மீண்டும்.

பி.கு. நமது நாயகர் அடுத்த பிளவாளுமையை அதற்குள் எடுத்து விட்டதாய் ரகஸிய செய்தி. இதோ அடு(டி)த்த வடிவம் ;-)


'The நியாயஸ்தன்'

படத்த பாத்துப்புட்டா ஜூடா விமர்சனம் தரலேன்னா எப்டிங்கோ? இதோ கோட், சூட் போட்டு சண் டிவி பாணியில் திரை விமர்சனம்:

1. வெகு சமீபத்தில் 1921'ல் சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த படம் 'The நியாயஸ்தன்'. தமிழுக்காக போராடுவர் அப்போது இல்லாத காரணத்தால் எந்தப் பிக்கல் பிடுங்கலுமின்றி இப்படம் வெளியானது.

2. வழக்கம் போல் காசிலியாக வரும் சார்லி தனது சொந்த செலவில் ஒரு தண்ணீர்ப் பந்தல் வைக்கின்றார். வருவோர் போவோர் அனைவரும் தாகசாந்தி செய்து வாழ்த்தி விட்டுப் போகின்றனர். சார்லியும் மகிழ்கின்றார். ஆனால் மகிழ்ச்சி நிலைத்ததா?

3. ஒருநாள் நள்ளிரவில் சிலருக்கு மட்டும் தண்ணீர் மறுக்கப்பட, சிறு கலவரம் மூழ்கின்றது. மௌனப்படம் ஆதலால் சார்லி வாய் திறக்கவில்லையா? இல்லை வாய் திறந்தும் நமக்குத்தான் கேட்கவில்லையா? என்ன காரணமென்று புரியாமல் வாசகர்கள் நியூஜிலாந்து வரை தலையைப் பிய்த்துக் கொள்கின்றார்கள்.

4. அப்போது நுகர்வோரில் ஒருவர் எனக்கும் தண்ணீர் வேண்டாம் எனக் கூற, அதற்கும் வழக்கம் போல நரசிம்ம ராவாக வாய்மூடி மௌனியாய் சார்லி.

5. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். அதுவும் இப்படத்தில் கழைக்கூத்தாடிகளுக்கு பஞ்சமேயில்லை. பேக்கிரௌண்டில் சிண்டு முடியும் வேலையும் சிறப்பாக நடந்தேறுகின்றது.

6. பாதிக்கப்படாமலும் குரல் கொடுத்தவர் நிலைமை மரத்தடி வரை நாறடிக்கப்படுகின்றது. அய்யா என் பெயரில் போலிக் குரல் கொடுக்கும் அந்த முறை கெட்ட சீனை எடுத்து விடுங்கள் என்று அவர் கூப்பாடு போட்டாலும், சார்லியின் கவனத்துக்கு மட்டும் அது வருவேனா என்று அடம் பிடிக்கின்றது.

7. கடைசியில் விஷயஞானி ஒருவர் தண்ணீர்ப் பந்தல் உனதானாலும் முறை கெட்ட சீன்கள் வந்தால் அதற்கு நீதான் பொறுப்பாவாய் என்று எச்சரிக்கை கொடுக்கின்றார். எதற்கும் கலங்காத சார்லி அத்தகைய சீன்களை களை எடுத்து பொதுவிலும் சொல்கின்றார்.

8. நகைச்சுவைப்படம் என்று செல்பவர்க்கு இப்படத்தின் மூலம் சீரியஸ் காமெடியை விருந்து படைக்கின்றார் சார்லி.

9. உலக அளவில் பேசப்படும் இப்படத்திற்கு ஓஸ்கர் கிடைக்கலாமென்றும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

10. 'The நியாயஸ்தன்' பிழைத்துக் கொள்வான். தக்கியாவது.

பி.கு. பட விமர்சனங்கள் தொடரும்...

Tuesday, November 15, 2005

விட்டு விடுதலையாவோம்

சுதந்திரமென்பது அவரவர் கண்ணோட்டத்திலென்று பெரியவா இணையத்துல ஷொன்ன அருள்வாக்கு. வாஸ்தவந்தான். ரெயிலுல முன்பதிவு செஞ்சவனுக்கு ஒரே ஒரு பெர்த் சொதந்திரம். பதிவே செய்யாதவனுக்கு வோணுங்ற ரயிலேறும் சொதந்திரம்.

சொதந்திர சொகத்தோட இருக்கோமின்னு நெனச்சிருந்தா ஒரு புத்தனோ ஏன் நம்மூரு சித்தன் கூட ஒலகுக்கு கெடச்சிருக்க மாட்டான்பா. அல்லாருக்கும் வாய்க்கையில ஒரு (கேடுகெட்ட) காலகட்டத்துல கேள்வி வரும். இன்னா பாஸு லைபு இம்ம்புட்டுதானான்னு... அப்ப சில பேருக்கு சுத்தமா புட்டுக்கிட்டு போயிடும். இன்னா கருமமான கேள்வி இதுன்னு, கெடச்சுதுலேயே உசந்த சரக்கா உள்ளே இறக்கிப்புட்டு "பழைய குருடி கதவ தொறடி'ன்னு கெடந்த இடத்துலேயே வாழ்க்கை உழல ஆரம்பிக்கும். செக்குமாடோ, கெணத்துத் தவளையோ, குண்டுச்சட்டி குதிரையோ மனுசப்பயலுவோல்ல பலரும் இப்பிடித்தானே கண்ணு காலத்தைக் கழிக்கிறோம்... இன்னும் சில பேரு கத வேற. அட இப்பவாவது வெளங்கிச்சே... கண்ணை மூடிக்கினே வாழ்வைத் தொலைச்சிப்புட்டோமேன்னு சுள்ளுன்னு உறைக்கும். செலந்தின்னா வல பின்னித்தான் வாழோணுமா? வலையைக் கிழிச்சிப்போட்டு வெளியே போனா ஒலகம் ஒத்துக்காதா? விஷப்பரீச்சதான். ஆனா செலந்தியோட முடிவு அதுக்கு மட்டுமா வெசப்பரீச்ச?

ஆஹா கொஞ்ச நாளா ஆளக் காணோம். வந்து வெயாக்கினாம் பண்றானேன்னு கோவிக்காதீங்க. இது வெந்த மனத்தின் வேதாந்தமல்ல...

நம்ம ஜப்பான் இளவரசி சயாகோ, "கல்யாணந்தான் கட்டிக்கினு ஓடிப் போலாமா"ன்னு திரிஷா மாமி போல பாட ஆரம்பிக்க, அவங்களோட ராஜகுடும்ப விதிகள் "கல்யாணந்தான் கட்டிகினு ஓடியே போயிடு"ன்னு முடிச்சிருச்சி. ஏன்னா சாதாரண குடிமகன் ஒருத்தர கண்ணாலம் கட்ட ஆசைப்பட்டாங்கோ... ராசா பரம்பரையில கட்டினா கட்டு; இல்லேன்னா அரண்மனை வாழ்வு CUT'ன்னு சொல்லிட்டாங்க. சயாகோ கலங்காம நேத்திக்கு கண்ணாலம் முடிச்சு பேலஸுக்கு பெப்பே சொல்லிட்டு கெளம்பிட்டாங்க. இப்போ சொந்தமா காரு ஓட்ட கத்துக்கினு, கடத்தெருவுக்கு ஷாப்பிங் போயின்னு சாதாரண 'குடி'மகளாய் வாழப்போறாங்களாம்.

ஙௌக்காமக்கா..."குடி உயர கோன் உயர்வான்"ன்னு எங்க தமிழ்ப்பாட்டி என்னிக்கோ சொன்னாங்க... சயாகோ விட்டு விடுதலையானதற்கு வாழ்த்துக்கள்.

சயாகோ மாமி (ராணிதான் இல்லே மாமின்னாவது சொல்வோமே :-)



Friday, November 04, 2005

கூகிள் குசும்பு

அடப் பாவிங்களா... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?

Miserable Failure அப்பிடின்னு கூகிள்ல தேடச் சொல்லி பிரண்டு சொன்னாருப்பா... ஏதோ ஸீரியஸ் மேட்டருன்னு தேடினா மொதோ பேரா நம்ம புஷ்ஷய்யா... நீங்களும் கிளிக்குங்கள்... :-)

இதுதாண்டா திண்ணை

வலைப்பூ ஆரம்பித்து ஏறத்தாழ 17 மாதங்கள் முடிந்து விட்டன. கடந்த சில நாட்களாக ராத்தூங்க முடியலப்பா... அச்சுலகம் வேறு வாவாவா'ங்கிறது. பல தாளிகைகள் "வா ராசா பலரை தாளிக்கலாம்", என்று கூப்பாடு போடுகின்றன. இதில் எக்ஸ்குளூசிவ் செவ்வி கேட்டு பிரபல டிவி நிறுவனம் வேறு பீச்சே படுகயா (யோவ் பின்னாடியே தொரத்துதுன்னு சொல்றேன்). மேலும் பல வலைத்தளங்கள் .... ஓவர்நைட்டுல பேமஸானாலே இப்பிடி சிலபல ப்ராப்ளம்ஸ் வரத்தானே செய்யும் :-) (வேண்டாம் குசும்பா விட்டுடு'ன்னு யாரோ கதறுவது கேட்கின்றது)

விஷயம் ஒண்ணுமில்லைங்கோ... ஏதோ நான்பாட்டுக்கு கிறுக்கி ரெண்டு பதிவுகளை திண்ணைக்கு அனுப்பி வைச்சா, ப்ளுக்கா அதை பப்ளிஷ் வேறு பண்ணிட்டாங்கோ. இன்னிக்கு காலேலதான் பாத்தேன். இதோ அப்பதிவுகளின் சுட்டிகள்:

வெள்ளமும் நிவாரணமும்
புஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவச சேவை

பதிவுகளை வெளியிட்ட திண்ணைக்கு நன்றிகள் !!!

மேலும் புஷ்ஷைப் பற்றி அறியத்தந்த நண்பர் துணை ஜனாதிபதி டிக் சேனிக்கும், உள்குத்து அரசியலை எனக்கு வெளிச்சம் போட்ட ஸ்கூட்டர் லிபிக்கும், இன்னபிற இணையத்தளங்களுக்கும், ஊக்கம் கொடுத்த உண்மையானவர்களுக்கும், சப்பை மேட்டர் கூட எழுதத்தெரியாததாய் குறை கூறிய முகமிலிக்கும் திண்ணைப் பதிவுகள் சமர்ப்பணம் !!!

Monday, October 31, 2005

பண்டிகை வாழ்த்து

அது ஒரு குக்கிராமம். கப்பி சாலை இப்போது நிறைய ஓட்டைகளுடன் தார்ச்சாலையாய் மட்டுமே மாறியிருக்கின்றது. மற்றபடி பேருந்து நிலையம் கூட அப்படியே காட்சியளிக்கின்றது.

கைத்தறியை மட்டுமே நம்பியிருந்த ஏழைக்குடும்பம் அது. அக்கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு காரணப்பெயர் உண்டு. கடைக்கார வூடு, பண்ணை வூடு, மச்சி வூடு, மரமூடு, கேணி வூடு இப்படிப் பல. ஊருக்கே கடைக்கோடியில் அக்குடும்பம் வசித்ததால் அவர்கள் வீட்டின் பெயர் கடைசி வூடு.

வீட்டின் தலைவர் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தாரே தவிர வருமானத்தை அல்ல. பெண்களே அதிகமாகப் பிறந்தது வேறு கவலை. கடைசியாய் ஒரு ஆண் மகவைப் பார்த்து விட்டு அதற்கு விவரம் தெரிவதற்கு முன்னாலேயே கண்ணை மூடி விட்டார்.

குசேலரும் இல்லை. புரவலர் கண்ணனும் இல்லை. இருப்பினும் வீட்டுப் பெண்கள் தைரியசாலிகள். கைத்தறி, களை பறித்தல், விறகு வெட்டுதல் என்று உழைப்பிற்கு ஒரு குறையும் வைக்கவில்லை. ஒரு வேளை உணவிற்காவாவது உத்திரவாதம் தந்தது அவ்வீட்டுப் பெண்கள்தான். வீட்டுத் தலைவிக்கு ஒரு வைராக்கியம். எப்படியும் ஒரே மகனை கைத்தறியில் உட்கார விடக்கூடாது. படிக்க வைக்க வேண்டுமென்பது அந்த படிக்காத ஏழைத் தாயின் கனவு. பிள்ளையும் படிப்பில் குறை வைக்கவில்லை.

அன்று தீபாவளிக்கு முந்திய இரவு. எதிர்த்த வீடோ அப்போது பெரிய நிலக்கிழாருக்கு சொந்தமானது. மிகப்பெரிய குடும்பம். செல்வச் செழிப்பிற்கு குறைவில்லை. ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி அந்த ஏழைப்பிள்ளைக்கு புரியாத பருவம். மத்தாப்பும், வெடிகளும் அதம் பறந்து தன்வீட்டு லாந்தர் வெளிச்சத்தை தூக்கிச் சாப்பிட, வீட்டுத் திண்ணையில் ஏக்கமுடன் அப்பிள்ளை வேடிக்கைப் பார்க்கும். தாயும் தன்னால் இயன்ற அளவு சந்தையிலிருந்து துணிமணிகள் வாங்கி வந்தாலும் எதிர் வீட்டோடு போட்டியா போட முடியும்? முதல் நாள் ஆட்டம் முடிந்தது எதிர் வீட்டுக் குழந்தைகள் தூங்கியதும் ரகஸியமாய் வெடிக்குப்பைகளை பொறுக்கியெடுத்து தன் வீட்டின் முன்னால் போட்டு களிப்படியும் அப்பிள்ளை. இப்படி பல தீபாவளி(லி)கள் கடந்தது.

காலச் சக்கரம் சுழன்றது. பிள்ளை வளர்ந்து பெரியவனாகி, மத்தியத்தரத்தை அடைந்து பிள்ளைகளும் பெறுகின்றான். திராவிடப் பாரம்பரியத்தை தன்னுள்ளே வாங்கிக் கொண்டு, தீபாவளி கொண்டாட மாட்டேன் என்பதில் அவருக்கு தீராத அடம்தான். பொங்கலென்றால் பிள்ளைகளுக்கு இரு புத்துடைகள் வாங்கித் தந்தாலும் தீபாவளிக்கு வாங்க மாட்டேன் என்பது அவரது கொள்(ல்)கை.

"டேய் வேணாம்டா. பச்சப்பிள்ளைங்க ஏங்கிப்போயிடும்டா", என்பதே அந்த முன்னாள் ஏழைத் தாயின் அந்நாள் ஓலமாய் அமைந்தது. எறும்பூர கல்லும் தேயும். சரி பட்சணங்கள் செய்து கொள்ளலாம், வெடியும் உண்டு என்று தனது கொள்கைகளை பிற்காலத்தில் சற்றே தளர்த்தினாலும் புத்தாடை மற்றும் பல வருடங்கள் தளரவேயில்லை. பொருளாதாரம் உயர உயர பட்சணங்கள், வெடிகளின் செலவீனங்கள் தாராளமயமாக்கப்பட்டன. தமிழர் திருநாள் பொங்கலென்றால் ஒரே கோலாகலம்தான்.

காலச்சக்கரம் மேலும் சுழல்கின்றது. பிள்ளைகள் வளர்ந்து பெரிதாக திருவிழாக் காலங்களில் மட்டுமே அனைவரும் சந்தித்துக் கொள்ளும் நிலை. முதன்முறையாக தன் பேரப்பிள்ளைக்காக தீபாவளிக்கு புத்தாடை வாங்குன்றார் அவர். அதுவும் ஸ்டோன்வாஷ். தனது பிள்ளை கல்லூரியில் படிக்கும்போது தலைகீழாக நின்ற போது கூட அந்த கழிசடையை வாங்கித்தரமாட்டேன் என்றவர் அவர்.

இதோ இன்று தீபாவளி. புத்தாடை எடுக்கவோ, வெடி வெடிக்கவோ தங்கு தடையில்லை. கொள்கைத் தடைகளும் இல்லை. கணி முன்னே அமர்ந்து, நிரலி வெடி வெடித்து, இந்தியா ஸ்டோர்ஸில் வாங்கிய பழைய ஸ்வீட் சாப்பிட்டு, துலக்கி வைக்கப்பட்ட பளிங்குக் கல் கோயிலுக்குச் சென்று பிரசாதம் சாப்பிட்டு வந்தால் தீபாவளி போயே போச்.

பாட்டி என் அப்பாவிடம் சொன்னது மட்டும் பசுமையாய் மனதில். "டேய் வேணாம்டா. பச்சப்பிள்ளைங்க ஏங்கிப்போயிடும்டா"

அனைவருக்கும் பண்டிகை வாழ்த்துக்கள்!!!

Wednesday, October 26, 2005

வில்மாவும் வேதனைகளும்

புயலடித்து ஓய்ந்தார் போலுள்ளது என்பதற்கான அர்த்தமே இப்போதுதான் விளங்கியது. கேட்டகரி ஒன்றிலிருந்து ஐந்தாக எகிறி பின்னர் இரண்டாகி தென் புளோரிடாவை குத்திய போது மூன்றானது. ப்ரோவோர்டு மற்றும் மயாமி (மியாமி) டேட் கவுண்டியையும் கதற அடித்தது வில்மா. சண்டமாருதத்தை பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம். சூறாவளியின் தீவிரத்தை ஒன்று முதல் ஐந்து வரை வகைப்படுத்துவார்கள். வரையறை ஒன்று என்றால் குறைத்து மதிப்பிட வேண்டாம். என்ன சூறாவளிக் காற்றின் வேகம் கொஞ்சம் குறைவு. ஆனால் ராகுல் திராவிட் போல நின்று விளையாடும். அப்புறமென்ன வெள்ளக்காடுதான். பள்ளப்பகுதியானால் கோவிந்தா கோவிந்தா!!! வரையறை ஐந்து என்றால் பழைய உலகக்கோப்பை நாயகனான ஜெயசூர்யா போல. விளாசிக் கடாசி விட்டுப் போய்விடும். நியூ ஆர்லியன்ஸ் போல் கடலைவிடத் தாழ்வான பகுதியில்லை என்பதாலும், வில்மா என்ன பெரிய கில்மாவென அசால்ட்டாக இருந்த பல மடையர்களில் அடியேன் பிரதானமானவன். வில்மா எங்களை கைமா செய்து விட்டது. இதோ ஒரு லேட்டஷ்ட்:

1. 16,00,000 மக்கள் மேற்கூறிய இரண்டு கவுண்டிகளில் மின்சாரமின்றி தவிக்கின்றனர். எங்களின் மின்சார வழங்கியான FPL (Florid Power & Lights வெறும் 7,500 ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் (ஹிஹி Contractors) படை கொண்டு சித்து வேலைகள் செய்கின்றார்கள். எங்கள் வீட்டை ஒளிரச் செய்ததற்கு டாங்ஸ் மாமே! ஆனா மத்தவா நெலமை :-(
2. நிறைய இடங்களில் குடிநீர் மற்றும் ஐஸ் வழங்குகின்றார்கள். நேற்றைய நிலையிலிருந்து நிறைய முன்னேற்றம்.
3. பப்ளிக்ஸ், விண்டிக்ஸி போன்ற பல்பொருள் அங்காடிகளில் மலைப்பாம்பு வரிசை இப்போது கிடையாது.
4. ஓரிரு கொள்ளைகள் தவிர சட்ட ஒழுங்கு பிரச்சினை இதுவரை இல்லை.
5. அலுவலகங்கள் மூடியுள்ளன. வீட்டிலிருந்துதான் மின்சாரமிருக்கும் வரை வலைப்பதிய வேண்டும்(!)
6. பெரிய பன்னாட்டு முனையமான போர்ட் லாடர்டேல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. மியாமி நிலையத்தில் போக்குவரத்து தொடர்கின்றது.
7. எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
8. வெள்ள நிலை இல்லாததால் நினைத்த இடத்திற்கு வண்டியில் செல்ல முடிகின்றது.
9. வாடகைக்கார்கள் கிடைக்கவில்லை என்று தகவல்.
10. நுகர்பொருட்களுக்கு செயற்கை விலையேற்றம் செய்யப்பட்டதாய் இதுவரை புகாரில்லை. (நேற்று சைனீஸ் உணவகம்தான் பலருக்கு சோறிட்டது)
11. மின்சாரம் தொடர்ந்து கிட்டுமென்று நம்பிக்கையில்லை. நிலைமை சீர்பட(கெட) குறைந்தது 4 வாரங்களாகலாம்.
12. புழங்குவதற்கு நீர் தவணைமுறையில் தரப்படுகின்றது. நாடோடி நாதாரியான நானென்ன ஜெனரேட்டர், கிரில், பெட்ரோல் தொட்டி, தண்ணீர் டாங்க்கா வைத்துக் கொள்ள முடியும்? இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால் மாதிரி, பில்லிங் கட்டுன்னா மூட்டையைக் கட்டுன்னு வாழற அநேக கோடி அற்ப ஜீவன்களில் அடியேனும் ஒருவனல்லவா :-) கடந்த இரண்டு இரவுகளாக எதிர்த்த வூட்டு ஸ்பானிஷ் மக்கள் அடித்த லூட்டிஸ் இருக்கின்றதே? அட தேவுடா மூணு வேளை சூடு கூடப்பண்ணாம சைனீஸ் சாப்பிட்டு, மூன்று தடவை அடக்கி நான்காம் முறை மட்டுமெனில் பாத்ரூம் சென்று டங்குவார் கிழிந்து போன நிலையில் ஜே லோ பாட்டிற்கு லோ லோ வென்று குத்துப் போட்ட மக்களை (ம்கூம்... ஒண்ணும் பண்ண முடியல... நாக்கத் தொங்கப்போட்டு பார்க்கத்தான் முடிந்தது. அட "கிரில்லை" சொல்றேங்க. கோழிகள் சூப்பராய் வெக வைத்துக் கொண்டிருந்தன)
13. அதிவிரைவு சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்களில் 90 சதவீதம் மூளியாகி நிற்கின்றன (ப்ரோவோர்டு நிலை பரிதாபம்). நிறைய இடங்களில் டிராபிக் சிக்னல்கள் காலி.
14. அவன் காலி. இவன் காலி இல்லை. ஆனால் பல மரங்கள் காலி. நல்லவேளையாக முறிந்த கிளைகள் ஏவுகணையாகி வீட்டைத் தாக்கவில்லை.
15. பலரும் வீட்டினைப் பாதுகாக்க ஷட்டர்கள் போடவில்லை (நானும்தான்!). மெத்தையை திண்ணைக் கதவிற்கு முட்டுக் கொடுத்து ஹாலில் படுத்து இரவைக் கழித்தவர் பலர்.
16. கிழக்கிலிருந்தே அடிவாங்கிப் பழகிப்போன புளோரிடா வாசிகளுக்கு மேற்கிலிருந்து ஆப்படித்தது வில்மா. பல அறிவுக் கண்கள் திறந்திருக்கும் (நமக்குத்தான் அந்தப் பிரச்சினை இல்லையே :-)
17. இப்போ பவர் புட்டுக்கிட்டு விளக்குகள்(!) அணைந்து போனாலும் இரு நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கலாம். கட்டிசோறு கட்டிப்புட்டோம்ல. அப்புறம் என்ன செய்றதுன்னுதான் இல்லாத மூளையை கசக்கிக்கிட்டு பதிவு போட்டுக்கிட்டு இருக்கேன்.
18. ஹிஹி படம் போடலியேன்னு கோவிச்சுக்கிற ப்ரோக்களுக்கா மயாமி மாமி (வெறும் ரைமிங்காக... குண்டாந்தடி தூக்கிகிட்டு ஓடியாறாதீகப்பு)

வாஷிங் பௌடர் வில்மா

நிர்மா விளம்பரத்திற்கு ஆடிய சிறுமி கண்முன் வந்து போகின்றாள். வில்மா தென் பிளோரிடாவை துடைத்துப் போட்டு விட்டுப் போய்விட்டது.
மின்சாரமில்லை. ஐஸ் இல்லை (தண்ணி எப்பிடி அடிப்பதாம்?). குடிநீர் இல்லை. அத்தியாவசிய பொருட்களுக்குப் பஞ்சம். இரவு 7 முதல் காலை 7 வரை ஊரடங்கு சட்டம். தொண்டு நிறுவனங்கள் தொலை தூரத்தில் இருப்பதாய் தகவல். எமர்ஜன்ஸி நம்பரான 911 இப்போது அதிதீவிர எமர்ஜன்ஸிக்கு மாத்திரமே. தொலை பேசி இணைப்புகள் அவ்வப்போது வேலை செய்கின்றன. செல்போன் சேவையும் அவ்வாறே. டிராபிக் லைட்டுகள் மறைந்து போயின. ஹைவேக்கள் பறந்த குப்பைகளால் நிறைக்கப்பட்டுள்ளன. அரசு இயந்திரங்கள் ஸ்தம்பித்துப் போயின. பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுப்பு. அருகே கொள்ளை நடந்ததாய் பேட்டரி ரேடியோவில் பீதித் தகவல். கழுவிக் கொள்வதாய் பீத்திக் கொள்பவர்கள் பேப்பரில் துடைத்து காய்ந்து போய்க் கிடக்கின்றார்கள். கீழே இப்படி என்றால் மேலே கேட்கவே வேண்டாம். ஆண்களனைவரும் முள்தாடி வேந்தர்தாம். முடிந்தவர் ஊர்களை விட்டு ஓடிப்போயினர். முடியாதவர் ஒடுங்கிப் போய் உட்கார்ந்துள்ளனர்.

ஒரு வாரத்திலிருந்து நான்கு வாரங்கள் ஆகலாமாம் மற்றவர்க்கு மின்சாரம் கிடைக்க...நமக்கு உடம்புல மச்சம்லா.

செய்ப் அலி கான் ஏ தில்லகி படத்தில் பாடுவார் பெண்களைப் பார்த்தவுடன் அவரது இதயம் பைத்தியம் பிடித்து பாடுமாம் "ஓலே ஓலே ஓலே ஓலே". காத்ரீனா, ரீட்டா, வில்மா... புளோரிடாவிற்கு பைத்தியம் பி(பீ)டித்து விட்டது எனலாம். அடுத்து கிரேக்க பெயர்கள் புயலுக்கு வைக்க ஆரம்பித்து விட்டனர். ஆல்பா புறப்பட்டு விட்டது. நல்ல கிரேக்க பெண்கடவுள்களின் பெயர்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

பி.கு:

1. பெண்களுக்கு எதிரான பதிவல்ல இது.
2. இது முதல் தகவல் அறிக்கை மட்டுமே.
2. "கரீக்டான ஐபீ மற்றும் அற்றஸ் வேண்டுமெண்டால் மசக்கைசூசட்ஸ் செல்ல வேண்டாம். மோப்ப ஷக்தியில் ஏதோ பெரிய கோளாறாம் !!!" ஏற்கெனவே சொன்னேன். பாவம்...-/ராம்வோச்சருக்கு ப்ரோவைப் பற்றி தெரியவில்லை போலும் :-).

Friday, October 21, 2005

அங்கதம் For Dummies

அங்கதம் எழுதுவது எப்படி என்ற பச்சையாய் விளக்கும் கையேடு இது. இவையனைத்தையும் ஒழுங்காகப் பின்பற்றிய பின்னால் உங்கள் வாழ்வில் பச்சை விளக்கு ஓளிரும்.

1. முதலில் கருத்தாவையும், அவரது கருத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பாடுபொருள் அனைவராலும் ஏறுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். வேண்டுமெனில் இது குறித்து ஒரு கருத்துக் கணிப்பு நடத்தலாம். எ.கா. ஆயாவிற்கு பாயா வாங்கித் தரலாமா என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானது. இத்தலைப்பிற்கு கூட மனிதாபிமான சங்(க)பரிவார்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழ வாய்ப்புண்டு. எனவே சனநாயகத்திற்கு விரோதமான தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்த தலைப்பைப் பற்றி யோசிக்க வேண்டும்.

2. பலராலும் அங்கீகரிக்கப்பட்ட தலைப்புடன், கருத்தாவிடம் அங்கதம் செய்யலாமவென்று ஒரு விண்ணப்பம் போட வேண்டும். அங்கதம் செய்யப்படுபவரின் அங்கீகார சகிப்பின் எல்லையை முதலில் வரையறுத்துக் கொள்ள இது உதவும் (இது பத்துமா பத்தாதாம்மா பத்துமாம்மா?). கருத்தாவின் அநுமதி இல்லாவிட்டால் பின்னாளில் பிரச்சினைக்கு ஆளாக நேரிடலாம். மேற்கண்ட தலைப்பை ஆயாவிற்கு பாயா வாங்கித் தரலாமா என்று கோயா(ன்) என்பவர் எழுதியிருந்ததாய் கொள்வோம். கோயாவை தொடர்பு ஊடகங்கள் மூலம் சென்றடைந்து உங்களது அங்கதத்தின் நோக்கம், பயன், பின்விளைவுகள் பற்றி ஒரு சினாப்ஸிஸ் அனுப்ப வேண்டும். பின்னர் பேக்ஸ் மூலமாகவாவது அவரது ஒப்புதல் ஒப்பமிட்ட ஆவணத்தைப் பெறவேண்டும். ஓப்புதல் கிட்டாவிடில் பாயிண்ட் ஒன்றுக்கு (!) செல்லவும்.

3. மேற்கண்ட இரண்டு ஸ்டெப்களின் மூலம் வரைவு ஆவண விதிகளை வகைப்படுத்தி, ஒரு பொதுக் குறை(ரை)ப்பு முறைமை CMP (Common Minimum Program) ஆவணம் தயாரிக்க வேண்டும். நாளை உங்களது பதிவு பட்டையையோ சாராயத்தையோ கிளப்புமானால் பதிப்பிக்கும் மணமோ/குழுமமோ தனது தணிக்கை விதிகளுடன் ஒப்பு நோக்க இந்த ஆவணம் உதவும். இந்த ஸ்டெப்பை ஆங்கிலத்தில் CYA (Cover Your As*) என்பார்கள். இவ்வாவணத் தயாரிப்பிற்கு பொதுநோக்கர்களின் உதவிகளைப் பெறலாம். கவனிக்க: இப்பொதுநோக்கர்கள்தான் பின்னாளில் கருத்தாவின் பாதுகாவலர்கள் அவதாரம் பூண்டு அங்கதத்தானை பின்னிப் பெடலெடுப்பார்கள். பொதுவாக இவர்கள் பிரச்சினையைக் கிளப்பும் போது குழப்பமானவர்களாகவே இருப்பார்கள். பல இடங்களில் சென்று குழப்பி, குழம்பி பின்னர் யாரேனும் ஒரு பொதுநோக்கர் இவர்களோடு ஒத்து எழுதினால் ஓடிச்சென்று பலமாக ஒத்து ஊதுவார்கள். பொதுநோக்கரில் இன்னொரு வகையுண்டு. இவர்களிடம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். தனது ஒரே கருத்திற்கு "+" என்று ஒரு இடத்திலும் "-" என்று இன்னொரு இடத்திலும் குத்துவார்கள். இப்போது புரிகின்றதா பொதுநோக்கர்களின் அங்கதத்தில் பங்கென்ன என்பது?

4. என்ன கடுமையான வரைமுறைகளாகவே இருக்கின்றன என்று கலங்க வேண்டாம். இதுதான் மிகவும் ஈஸியான ஸ்டெப். CMP விதிகளுக்கு உட்பட்டு உங்களது அங்கதத்தை எழுதுவது(!).

5. அங்கதப்பதிவு எழுதி முடித்தவுடன் கருத்தாவிடம் எடுத்துச் செல்லவும். அவரின் முழு ஒப்புதல் (கையெழுத்துடன்) பெறவேண்டும். ஒப்புதல் பெறாவிடில் மேல்ல்லே செல்லவும். கவனிக்க: கருத்தா உங்களின் ஆக்கத்தை விரிக்கவோ/சுருக்கவோ அதிகாரம் உண்டு.

6. ஒப்புதல் பெற்றபின் மணத்தின் தணிக்கைகுழுவின் (இது ஒன்மேன் ஆர்மியாகக் கூட இருக்கலாம்) பார்வைக்கு, கருத்தாவின் ஒப்புதல் கடிதத்தோடு பதிப்பிற்கான விண்ணப்பத்துடன் செல்ல வேண்டும். இந்த தணிக்கை குழு/அதிகாரி உங்களது அங்கதத்தை பரிசீலித்து அது நேர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருக்கின்றதா அல்லது தன(ம)து சுய நம்பிக்கையின் அடிப்படையில் பதிப்பிக்கக் கூடியதா என்று ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து, முகர்ந்து, ரசித்து, சுவைத்து ஒரு முடிவுக்கு வருவார். பின்னர் தனது சொந்த த(வ)ர்க்க ஞானத்தையும், தார்மீக நியாத்தின் அளவுகோல்களால் அளப்பீடு செய்து உங்களின் பதிவை வெளியிடும் தனது சுதந்திரத்தைப் பயன்படுத்தி வெளியிடுவார். வெளியிட்டபின் பரீட்சையில் பாஸா பெயிலா எனக் கண்டறியும் மாணாக்கனைப் போல விரைந்தோடி பதிவின் முன்னே என்ன விளக்கெறிகின்றதென்று பார்க்க வேண்டும். பச்சை என்றால் "ஆத்தா(டி) நான் பாஸாயிட்டேன். தணிக்கை அதிகாரிக்கு நன்றி" என்ற பின்னூட்டம் கட்டாயம் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் மேல்ல்லே முருங்க மரம் சென்று விக்ரமாதித்தனாய் இன்னொரு அங்கத வேதாளம் பிடிக்க வேண்டும். மீண்டும் கவனிக்க: உங்களின் ஆக்கத்தை விரிக்கவோ/சுருக்கவோ அதிகாரம் தணிக்கை அல்லது தன்னிச்சை அதிகாரிக்கு உண்டு.

7. அப்பா(டி) நான் பாஸாயிட்டேன்; எனது அங்கதம் பதிவாகிவிட்டது என்பதோடு உங்களது கடமை முடிந்து விடாது. இந்தப் பொதுநோக்கர்களின் கருத்துப் பின்னூட்டங்களை கவனமாகப் படித்து தேவைப்படின் விளக்கம் கொடுக்கத்தயாராக இருக்க வேண்டும். எ.கா. ஆயாவிற்கு பாயா தேவையா என்ற தலைப்பில் திரு.கோயா(ன்) எழுதிய பதிவிற்கு அங்கதப்பதிவு போட்ட பேயா(ன்)வாகிய நான் எனது பதிவினை "சுயபரிசீலனை" செய்ததற்கான ஆய் அறிக்கை இதோ என்று எடுத்துப் போட்டு திருப்திப் படுத்த வேண்டும். தேவைப்பட்டால் பிற ஒப்புதல் ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பொதுவில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களது பதிவென்ன, பட்டியலிலிருந்தே காணாமல் போகும் அபாயம் உண்டு.

8. பொதுநோக்கர்களின் பின்னூட்டங்கள், மற்ற வலது/இடது/மைய (Right/Left & Center) நோக்கர்களின் கருத்துத் தொகுப்போடு தணிக்கை அதிகாரி மற்றும் கருத்தாவுக்கு பின்-ஆய்-அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இது உங்கள் மீதான நம்பகத்தன்மை வளர உதவும். TIPS: முடிந்தால் இந்த ஆய்-அறிக்கையின் ஒப்புதலைப் பெற முயற்சிக்கவும். இத்தகைய ஒப்புதலையும் பொதுவில் வைத்தால் மக்கா நீ பெரிய அங்கதனப்பா...

9. இதில் சம்பந்தமே இல்லாமல் பாஸிஸம், ரேஸிஸம், பாயாசம், ஆயாசம் போன்ற பல இலக்கிய விமர்சனங்களையும் எதிர்நோக்க வேண்டும். ஒவ்வொரு இஸத்திற்கும் ஒரு மாற்று மருந்து உள்ளது. அதைப்பயன்படுத்தி ஒவ்வாமையை குணப்படுத்த முயற்சிப்பது அங்கதனாகிய உங்கள் தலையாய கடமை. இல்லாவிடில் ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதை உணராத அரசு அதிகாரிகளைப் போல காத்திருப்போர் பட்டியலில் காய வேண்டியதுதான். இது மிக மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய ஸ்டெப்.

10. இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ஏதாவது ஏடாகூடமாக நடக்க வாய்-ப்புண்டு. எ.கா. ஆயாவிற்கு ஏன் வெறும் பாயா மட்டும் கொடுக்க வேண்டும்? கூடவே சல்னா கொடுக்க ஏன் அங்கதப்பதிவர் முயலவில்லை. இது ignorance is bliss என்ற high handedness'ஐ குறிக்கின்றது என்பதற்கு நீங்கள்....

ஹலோ...ஹலோ... ஏன்ப்பா இப்பிடி தலை தெறிக்க ஓடுற? நான் இந்தா முடிக்கப்போறேன். என்ன நீயும் முடியெடுக்கப் போறியா? என்ன முடிவெடுக்கப் போறியா? என்னாப்பா சொல்ற? அங்கதமா ஆளை வுடுன்னா? ஏம்ப்பா நான் சிம்பிளாத் தானே சொன்னேன்.

பி.கு. நல்லதுக்கு காலமில்லைப்பா.

Thursday, October 20, 2005

கோயின்சிடென்ஸ் குசும்பு

படம் பாருங்க. இது சமீபத்தில் வெளியான திரு. அனுராக் அவர்களின் பதில் வெளியான பின்னூட்டங்கள்:

படம் 1: அனுராக் பின்னூட்டம்: //...நோய் முற்றிப் போன பிறகு அறுவை சிகிட்சை தவிர வேறு வழியில்லை.//



படம் 2: அநேகமாக ஸ்பாம் பின்னூட்டம்: //...I have a natural cancer supplements site. It covers everything about natural cancer supplements as well as colon cancer prevention, warning signs, and the treatment for colon cancer. You'll find it very informative.//


இதுதான் இசைவு எனப்படும் கோயின்சிடென்ஸோ?

அட்றா சக்கை அட்றா சக்கை

இது ஒரு போட்டி. இப்பொன்மொழிகளை உதிர்த்த வலைபதிவர்களை கண்டுபிடித்தால் பச்சை விளக்கு ஒன்று பரிசாக அனுப்படும். தபால் செலவு இலவசம்.

1. மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாம் தான் வரையும் கோடுகளுக்குள்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதுவும் ஒரு சர்வாதிகாரப் போக்கே.

2. பத்துவரி எழுதினால் ஒரு வரியாவது பயனுள்ளதாக இல்லாமல் வெறும் அரட்டை அடிக்கவும் சிலர் வலைப்பதிவுகளை பயன்படுத்தி வருவதால் தான் ** என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத் தேவையில்லாதவை என்று தணிக்கை செய்யும் முடிவுக்கு வந்திருப்பார் என நினைக்கிறேன்.

3. I dont think we have a right to condemn anything that has sole proprietership. If we dislike, we can leave...

4. தொழில்நுட்பக் காரணங்களுக்காக சில முடிவுகளை எடுப்பது **யின் உரிமை. ஆனால் கொள்கை முடிவுகளை பயனர்களை கலந்தாலோசித்தே எடுப்பது ஜனநாயகம். முன்பு செய்ததைப் போல ("ஆபாசப் பதிவுகள்" சம்பந்தமாக)வாக்கெடுப்பு நடத்தி புதிய கொள்கைகளை வகுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் செய்தது சரியில்லை. வாக்கெடுப்பில் அவருடைய நம்பிக்கை வெற்றி பெற்றாலும் பெறலாம். ஆனால் அதைச் செய்யாத வரையில் தற்போதைய
நடவடிக்கைகள் சர்வாதிகாரத் தன்மை கொண்டவையே.

5. இப்போது புதுத்திரட்டிகளின் தேவை வந்துவிட்டால் அத்திரட்டிக்கான தொழிநுட்ப விசயங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. எல்லோருக்கும் அந்த அனுபவம் இருக்கப்போவதுமில்லை. எனவே **யோ அல்லது தமிழ்மணத்திரட்டியின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களோ அந்தத் திரட்டிச்செயலிக்கான அடிப்படைத் தொழிநுட்பத்தை வெளியிட முடிந்தால் அது பலனளிக்கும். இதைவைத்து அவரவர்கள் தாமே அவற்றை மேன்மைப்படுத்த முடியும். இந்தத் தொழிநுட்பம் வெளியிடுதலென்பது நிச்சயமாக நிர்வாகிகளின் சொந்த முடிவே.

6. நீ மறைந்தாலும்
உன் சகாப்தம்
மறைவதில்லை


7. பழங்காலத்துப் பழமொழி இதுதான்: தானங் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்க்கறது. அவ்வளவு ஆர்வமோ குறைந்தபட்ச தயவுதாட்சண்யமோ இல்லாதவர்கள் தமிழ்மணத்தில் தங்கள் வலைப்பதிவுகளைச் சேர்க்காமல் இருந்தாலே பெரிய உதவியாக இருக்கும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது ஓரளவு சொதப்பலாகப் பட்டாலும், அதைத் தாண்டிக்கூட இன்னும் யாரும் வரத் தயாராயில்லை என்பது, ஏன் தமிழ்மணத்துக்குத் தொடுப்புக் கொடுக்கவேண்டும் என்ற கேள்வியிலேயே தெரிகிறது! இரண்டு நிமிடங்கள் எடுக்கும் ஒரு வேலையை, பிரதியுபகாரமாகச் செய்யக்கூடியதாகக் கருதக்கூடிய ஒரு சிறு அங்கீகரிப்பை நோக்கிக் கேள்விகளெழுப்புவதைவிட, பேசாமல் இதில் இணைக்கப்படாமல், தங்கள் URLஐ தமிழ்மண இணைப்புப் பெட்டியில் தட்டாமலிருப்பதே நலம். காசுக்கேற்ற தோசை என்றாலும்
குற்றம், காசில்லாமல் தோசை என்றாலும் குற்றம் - எங்கே போய் முட்டிக்கொள்வது.

8. நான் நினைப்பதையே நீ நினைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அடக்குமுறையாகும். இன்னொறு வகையில் சொன்னால் கருத்துத் தீவிரவாதம்.

9. சமீபத்தில் தமிழ்மணம் திரட்டியில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சில வலைப்பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கம் செய்யப்படுகின்றன என்றுத் தெரிய வருகிறது. தமிழ்மண நிர்வாகிகளின் இம்முடிவுடன் நான் உடன்படாவிட்டாலும், இதனை அவர்களது் சொந்த முடிவாகக் கருதி மதிக்கிறேன். எனினும், தமிழிணையத்தில் கருத்துச் சுதந்திரம், பன்மைத்தன்மை ஆகியவற்றின் வருங்காலம் குறித்த கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

10. நேற்றைக்குவரை போன ஒரு மாதமாகப் பண்ணிய உருப்படியான காரியமென்னவென்றால், பதிவுகளின் பக்கம் அடிக்கடி வராமலிருந்தது. குஷ்பு விவகாரம், சுந்தரராமசாமி மரணம் இதிலெதிலுமே நானும் ஒரு தனிப்பதிவு போட்டேனென்று எண்ணிக்கைக்குப் போடாதிருந்தது சொந்த நிம்மதிக்கும் நேரச்சேமிப்புக்கும் உதவியது. தமிழ்மணத்திலே பதிவுகளை நெறிப்படுத்துவது குறித்து சர்ச்சையை நேற்றைக்கு வாசிக்க நேர்ந்ததால் தனியே சொந்த நலனை முன்னிட்டு மூன்று பந்திகளில் சின்னக்குறிப்பு எழுதவேண்டிய அவசியம்.

11.

Diskகிளைமர்: எல்லாப்புகழும் பொன்மொழிகளை உதிர்த்தவர்க்கே. மறுபதிப்பு செய்யும் உரிமம் வாங்கவில்லை. காப்புரிமை வயலேஷன்னா சொல்லிடுங்க தூக்கிடறேன். ஆனா கரீக்டா கண்டுபிச்சவங்களுக்கு பச்சை விளக்கு பரிசு கட்டாயம் உண்டு. மேலேயுள்ள 11 பொன்மொழிகளில் ஒன்று கொஞ்சம்(மும்) மற்றதுடன் சம்பந்தப்படாதது. மேலும் 11'ல் ஒண்ணுமே தெரியலியேன்னு கேப்பீங்களே கேள்வியின் நாயகர்களே. அதாம்பா net'l பெரிய ஆளுங்கெல்லாம் உதிர்த்த பொன்மொழிங்கோ !!!

Wednesday, October 19, 2005

உள்ளே வெளியே

கெடு(ம்) நேரம் முடிந்து விட்டது. காசி மற்றும் ஏனைய தமிழ்மண நிர்வாகிகளிடம் நான் விண்ணப்பித்துக் கேட்டது இரு விதயங்கள்.

1. எனது பதிவு நீக்கப்பட்டுவிட்டதா?
2. அப்படியானால் காரணிகள் என்ன?

பதிலாக பதிவினை இட்டுள்ளார். பச்சை விள(ல)க்கு முறையை அமுல்படுத்தியுள்ளார். நீக்குதல்/தணிக்கை முறைக்கு 4 காரணிகளும் கூறப்பட்டிருந்தன. அப்பதிவினையே அவர் எனக்களித்த பொதுவில் வைக்கப்பட்ட பதிலாக எடுத்துக்கொள்வோம். முதல் கேள்விக்கு பதில் பச்சை விலக்கு (!) பிரகாசிக்காத போதே புரிந்து விட்டது. இரண்டாவது கேள்விக்கு அவர் அளித்த நான்காவது காரணமாகத்தான் (என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத்தேவையில்லாதவை) இருக்க வேண்டும். ஒரு வேடிக்கை பாருங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் பதிவில் திரு பத்மாவின் பின்னூட்டம்



அதற்கு காசியின் பதில்:


"...ஆனாலும் ஒரு மின்னஞ்சல் முகவரி என்று பொதுவில் வைத்தபின், எவரை எங்கு நியமித்தால், என்ன அறிவுரைத்தால், வரும் மின்னஞ்சல்களைக் கையாள முடியுமோ, அதைச் செய்யவேண்டிய கடமை அவருக்கோ அல்லது அவரின் அலுவலகத்தை நிர்வகிப்பவருக்கோ வந்துவிடுகிறது. அதன்பேரில் வரும் விமர்சனத்துக்கும் அவர் ஆளாகிறார். அதில் எந்த விலக்கும் அளிக்கும் சாத்தியம் இல்லை. "

நல்ல கருத்து. மின்னஞ்சல் முகவரியை பொதுவில் வைத்தற்காக இந்தியக் குடியரசின் தலைவரின் பதிலை (அல்லது அவரது உதவியாளர்களின் பதிலை) காசி எதிர்நோக்குகின்றார். ஆனால் தனது சுயமுயற்சியில் வளர்த்த (கண்டிப்பாக பாராட்டுக்குரிய செயல்) தமிழ்மணம் என்னும் திரட்டியை பொதுவில் வைத்த பின்னர் விமர்சனங்களையோ (கவனிக்க பொதுவில் வைத்த பின்னர் ஒரு 100 கோடி மக்களின் தலைவரே விமர்சனத்துக்கு ஆளாகலாம்), கேள்விகளையோ காசியால் கையாள முடியவில்லை. ஆமாம் இதற்கு சகவலைபதிவர்கள் என்ன கூற விழைகின்றார்கள்? ஒரு வேளை இதுதான் ஹிப்போகிரஸி என்பதோ?

தமிழ்மணம் என்பது ஒரு வெறும் செய்தியோடை திரட்டி மட்டுமே. அது ஒரு வலைவாசல் என்று பல இடங்களில் தமிழ்மணம் என்பது ஒரு வெறும் செய்தியோடை திரட்டி மட்டுமே. அது ஒரு வலைவாசல் என்று பல இடங்களில் காசி கூறியிருக்கின்றார். http://kasi.thamizmanam.com/?item=205 மேலும் இது ஒரு இலவச சேவை என்பதை காசியும், தமிழ்மண நிர்வாகிகளும் கவனத்துடன் சொல்லி வந்திருக்கின்றார்கள். பொதுவில் வைத்தற்கு பாராட்டுப் பட்டயம் கண்டிப்பாக உண்டு. ஆனால் அதற்காக படியளக்கும் தவச தானியம் மற்றும் கசையடிகள் என்ற வெற்று சொல்லாடல்கள் எதற்கு? பிரீயா கொடுத்த பினாயிலைக் கூட குடிக்கிற கூட்டத்துலதான நீயும் (அதாவது நான்) இருக்க? உனக்கெதுக்கு விமர்சனம், கேள்வி கேட்கும் உரிமை என்ற நோக்கத்திற்கு என்ன பெயரிட்டு அழைப்பது? பாசிசமா? போட்டத வாங்கிட்டு போவியா சும்மா தானம் கொடுத்த மாட்டை பல்லைப் புடிச்சு பதம் பாக்குற என்ற கூற்று நியாயமானதுதான். பொதுவில் வராதவரை. கொடுக்கும் கரம் உயர்ந்தே இருக்கும். ஒத்துக் கொள்கின்றேன். அது உங்கள் வீட்டுப் புழக்கடை சமாச்சாரமாகவே இருக்கும்வரை.


உங்களது தமிழ்மண முயற்சிகளுக்கு தேவைப்பட்டால் நிதியுதவி செய்ய பலரும் கேட்டிருந்தது அனைவரும் அறிந்த விதயம். சுனாமி, பூகம்பம், ஏழை மாணவிக்கு படிப்புதவித் தொகை என்று தங்களால் இயன்ற வரையில் தமிழ் வலைபதிவர்கள் தாராளமாக உதவி செய்து வந்து கொண்டிருக்கும் காலத்தில், உங்கள் பொதுப்பட்ட முயற்சிக்கு யாரும் உதவமாட்டேன் என்று கூற மாட்டார்கள். நிதி மட்டுமல்ல தொழில்நுட்டத்தில் கூட உதவ வல்லுநர்கள் தயாராக இருப்பதாக அடிக்கடி கூறினார்கள். உதவி வேண்டாமென்று பிடிவாதமாக இருந்து விட்டு இன்று எதற்கு தவச தானிய ஓலம்? பிச்சைக்காரர்களாவே விட்டு வைத்தால் நாளை கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற நிலக்கிழாரிய தத்துவமா? உங்களின் தனிப்பட்ட/ குடும்பத்தோடு செலவிடும் நேரத்தை இழுத்துப் பிடித்தற்காக மன்னியுங்கள். அது என் நோக்கமன்று. உதவிகளை உதறிவிட்டு இன்று உங்களின் பதிவு முழுக்க முழுக்க ஹிப்போகிரிஸியை கொடி பிடித்து நிறுவுகின்றது.


பச்சை விலக்கு முறையைப் பார்ப்போம். சொந்த கைகாசில் தளம் நடத்துபவரிடம் யாரும் சென்று நீ அதைச் செய். இதைச் செய்யாதே என்று கூறுமளவிற்கு மதி கெட்டவன் நானில்லை. இங்கே நாம் கண்கூடாக பார்ப்பது தமிழ்மண சேவை (இலவசம்) என்பது இன்று காசி என்பவரின் சொந்த தளமாகிவிட்டது. இதில் எனக்குப் பிடித்ததைத் தான் நான் செய்வேன் என்று கூறினால் அதற்கு மறு பேச்சுக் கிடையாது. அது அவரது சுதந்திரம். என்ன விளக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளும் உரிமை அவருக்கு பரிபூரணமாக ஒன்று. அதை நேரடியாகத் தெரிவித்து விட்டு செய்யலாமே? ஒருபக்கம் இலவச சேவையென்று படம் காட்டுவதும் மறுபுறம் மட்டுறுத்துவேன் என்று பயமுறுத்துவதுமான பாசாங்க நாடகம் ஏன்?


குசும்பனின் இந்தப் பதிவால் அல்லது அந்தப்பதிவால் தூக்கிவிட்டார்கள் என்று ஏகப்பட்ட ஊகங்கள். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. நீங்கள் தான் சொல்ல வேண்டும். இதில் கட்டாயம் ஏதுமில்லை. பொதுவில் கேட்கப்பட்டதால், பல தமிழ் வலைபதிவர்களின் பிரதிநிதி என்று நீங்கள் கருதும் காரணத்தால், தார்மீக நியாயத்தில் நம்பிக்கை உடையவராக (உங்களது தனிப்பட்ட நம்பிக்கை எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியாது) இருந்தால் சக வலைப்பதிவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் விடையோ விளக்கமோ தரலாம். மறுபடியும் தானியம், கசையடி, படம் பார்க்கவேண்டும் என்று ஜல்லியடிப்பதோ மட்டையடிப்பதோ உங்கள் விருப்பம். என்ன செய்வது காசி? பொதுவில் வந்தால் நேயர் விருப்ப(மு)ம் கேட்டுத்தானே ஆக வேண்டும் (உங்களின் குடியரசுத்தலைவருக்கு மடல் போல).


மதத்துவேஷம், ஆபாசம், இனவெறி, தீவிரவாதம், இந்திய/ஈழ/புலி ஆதரவு/எதிர்ப்பு, மொழிவெறி, தனிப்பட்ட காழ்ப்புணர்வு, வன்முறை, போலிப்பிரச்சாரம் (பிறர் கண்ணோட்டத்தில்) தாங்கி வரும் பதிவுகள் எல்லா மொழிகளிலும் உண்டு. முழுமையான கருத்துச் சுதந்திரம் வேண்டுமென்பதே பெரும்பாலான வலைப்பதிவர்களின் ஆவல். இன்றைய வாசகர்கள்/பதிவர்கள் விபரமானவர்கள். தமக்குப் பிடித்ததை அவர்கள் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.


For any new system to grow we need Falilitators not Moderators என்று யார் கூறினார்கள் என்று மறந்து விட்டது. இந்தியாவில் IT அறிமுகமான காலகட்டத்தில் தடுப்புச் சட்டங்களைத்தான் முதலில் போட்டார்களாம். அப்போது யாரோ ஒரு வல்லுநர் கூறினாரென்று ஞாபகம். இன்று என்னைப் பொறுத்தவரையில் தற்சமய சூழலுக்கு இக்கண்ணோட்டம் ஒத்துப் போகலாம் மென்பது என் தனிப்பட்ட கருத்து.


அமெரிக்காவில் வசித்த நீங்கள் அங்கதம் என்ற காரணத்தால் எனது பதிவை நீக்கினீர்களா என்று தெரியாது. ஜார்ஜ் கார்லின் போல பெரிய ஆளாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் என்னால் பகிடி செய்யப்பட்டவர்கள் பின்னூட்டங்களிலும், தனியஞ்சல்களிலும் குசும்பை ரசித்ததாகவே கூறினார்கள். பழைய பின்னூட்டங்கள் மறைந்து விட்டன. இருப்பினும் குசும்பனின் நோக்கமே மென்மையான அங்கதம்தான். இதனால் யாரேனும் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். இது மீண்டும் தமிழ்மணத்தில் சேர்த்துக் கொள்ள விடுக்கப்படும் விண்ணப்பம் அல்ல. தமிழ்மண பதிவர் பட்டியலிருந்து(ம்) 'இணையகுசும்பன்' தொடுப்பையும் தயவு செய்து அகற்றி விடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எனது பதிவிவின் செய்தியோடையை நேற்று வரை இலவசமாக திரட்டியமைக்கும், பிற தமிழ்மண சேவைகளுக்கும் காசி மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. இணையகுசும்பன் உள்ளே இல்லாவிட்டாலும் வெளியே இருப்பான்.


பின்னூட்டங்களிலும், வலைப்பதிவுகளிலும், தனியஞ்சலிலும், தொலைபேசியிலும் ஊக்கம் தந்த, தரும் சகவலைப்பதிவு நண்பர்களுக்கும் (எனது கருத்துகளில் முழு உடன்பாடு இல்லை என்று தெரிவித்த நண்பர்களையும் சேர்த்துத்தான்) எனது வணக்கமும் நன்றிகளும் உரித்தாகுக.

பி.கு. எனது 'நடவடிக்கைகளை' பொதுவில் வைக்கும் உத்தேசமில்லை. வாசகர்க்கு ஜாலியான ஜூகல் பந்தி மட்டுமே :-)

காசி/தமிழ்மண நிர்வாகிகளுக்கு

எனது இணைய குசும்பன் பதிவு தமிழ்மணத் திரட்டியில் கடந்த 7 நாட்களில் எழுதப்பட்டவற்றில் சிறந்த 25 - வாசகர் பரிந்துரை- பகுதி, மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள் பகுதி மற்றும் இன்று புதிதாய் எழுதப்பட்டவை 20 நிமிடத்துக்கு ஒருமுறை திரட்டப்படுகிறது பகுதிகளிலிருந்து திடீரென்று காணாமல் போய்விட்டது. முகமூடி என்பவர் மன்றத்தில் காணவில்லை : குசும்பன் என்று எழுப்பிய கேள்விக்கு தற்சமயம் வரை காசி & கோ'விடமிருந்து பொறுப்பான பதிலில்லை. எனது பதிவில் பின்னூட்டமாக திருமிகு. துளசிகோபால் "உங்களைத் தூக்கிட்டாங்களாமே உண்மையா?" என்று வினவினார். அப்போதுதான் காசியின் "ஒரு அறிவிப்பு" பதிவினைப் பார்த்தேன். அதன் பின்னூட்டங்களையும் படித்தேன். யாருடய பதிவாவது கவனக்குறைவாக நீக்கப்பட்டிருப்பதாக எண்ணினால் அதை இங்கேயே அல்லது மன்றத்திலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று காசி அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்மண மன்றத்திலே குசும்பனைக் காணோமென்று முகமூடி என்ற பதிவில் எழுதுபவர் ஏற்கெனவே பதிந்து விட்டார். எனவே எனது கருத்துகளை எனது வலைப்பூவிலேயே பதிகின்றேன் (தமிழ்மணத்தால் திரட்டப்படாவிடினும்). இப்பதிவே பின்னூட்டமாய் தொடுப்புடன் காசியின் ஓர் அறிவிப்பு பதிவிலும் வைக்கப்படும்.

முகமூடியின் கேள்வி பதிந்து 14 மணி நேரமாகிவிட்டது. இன்னும் 10 மணி நேரம் காசி & குழுவினர்க்கு அவகாசம் தருகின்றேன். எனது பதிவு நீக்கப்பட்டுவிட்டதா என்பதையும், அதற்கான காரணிகளையும் தெரியப்படுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். இன்றிரவு 19 Oct 05 10:30 EST (8:00 PM IST) வரை எனக்கு பதில் கிட்டாவிடில் (மின்னஞ்சல் முகவரி: podankho@yahoo.com) எனது அடுத்த நடவடிக்கை இருக்குமென்பதையும் அறியத்தருகின்றேன்.

நன்றி,
இணையகுசும்பன்.

Tuesday, October 18, 2005

தூற்றுச்சங்கதி



The Damn Thing

நிர்மூலமாகிய நிலப்பரப்பிருந்து
சட்டென் றெழுந்து வருகிறது
இழந்தகாலிரண்டை இழுத்தபடி
ஆற்றா வலியுடன் அலறும்
பிசுபிசு பெருவெக்கை
ஆள் தின் அதிர்ச்சி
பிளந்த நிலக்கண்
பொட்டு நீர் கூடப் போதும்
உள்நாக்கண்ணம் உயிர்பெறும்

உற்றுப் பார்த்தோமானால்
மிடுக்கு தோரணையிலொரு நரகாசுரத்தோற்றம்
மிடுக்கோடு செப்பி
மேலேவொரு தொப்பி
மேலோ ரிலச்சினை
பேர்ப்பலகை
பளபளக்கச் சீருடை
சொட்டாத விழியன்பு
பாலீஷான பாதுகை

கத்தைத்தாள்
மேடைஒலிபெருக்கி
கை(ப்)பற்றிக்
காதை மட்டும்
கிழித்து சுழற்றி
குரலொலி கடக்கும்.

ஊளைச்சத்தத்தில்
கூட்டப்பிணங்களுக்குள்
பின்னிப் பிணையும்
இன்னோர்
அங்கதனாய்
ஆதாமாய்
இழியனாய்
ஈயானாய்
உக்கிரனாய்
ஊழ்பிறவியாய்
எரிதனாய்
ஏற்பில்லாதவனாய்
மொத்தப்படித்தாரின்
மெத்த ஊழியனாய்

செரித்துக் கரைகழுவும்
கால் கசகசப்பு
பற்றாமலே
போகும்
ஓலை


பி.கு. வழமையான பதிவல்ல இது. இந்தியாவின் உதவியை வேண்டாமெண்டு உதறித் தள்ளிய பாக் அதிபருக்கான கண்டன கவிதை.

சின்ன மாப்ளே'யின் சித்தாந்தங்கள்

அண்மையில் வலைப்பதிவர்கள் பலர் வரிந்து கட்டிக் கொண்டு அந்நியன் மற்றும் காதல் படங்களை விமர்சனம் செய்திருந்தார்கள். சக வலைப்பதிவர் இன்னும் ஒரு படி மேலே சென்று மண்ணின் மைந்தனான இராம.நாராயணனை ஏன் யாரும் விமர்சனம் செய்ய முன் வருவதில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இதைத்தான் திரை வர்ணம் என்பது. நான் அனைத்து திரைப்படங்களையும் ஒரே தராசில்தான் வைத்துப் பார்க்கின்றேன். சமீபத்தில் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 'சின்ன மாப்ளே' என்னும் திரைக் காவியத்தை கண்டு பூரித்த எண்ணம் நினைவிற்கு வந்தது. சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், சின்னவர் என்ற வரிசையில் வந்தாலும் சிறந்த திரைக்கதையாலும், கூரிய வசனத்தாலும், இனிய பாடல்களாலும், உயரிய படப்பிடிப்பாலும் சின்ன மாப்ளே பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது என்றால் அது மிகையாகாது.

படத்தலைப்பில் உள்ள மாப்ளே என்னும் பதம் Mall Play என்னும் ஆங்கில சொற்களின் தாக்கத்தால் விளைந்தது. 'மால்' என்றால் சந்தை. இதுவே கல்லூரித் தமிழில் 'பெண்' என்றும் அர்த்தம் கொள்ளலாம். 'பிளே' என்றால் வழமை போல 'விளையாடு' அல்லது 'ஆடு' என்னும் பொருள் கொள்ளலாம். அதாவது பெண்ணைப் பெற்றவர் தனது மருமகனிடம் "இதோ என்னுடைய மால் (பெண்). இனி அவள் சொல்படி பிளே (ஆடு)", என்பதைக் குறிக்கும் விதமாகவே மால்+பிளே=மாப்ளே ஆக கிளர்ந்தது. சின்ன என்னும் சொல்லை ஒருங்கு நோக்கினால் அது சிறிய என்னும் அர்த்தம் கொடுக்கும். எனவே இப்படம் சிறிய மருமகனைப் பற்றியது என்று தெள்ளத் தெளிவாக முன்கூட்டியே உணர்த்தி விடுகின்றார் இயக்குநர் இமயம் திரு. சந்தான பாரதி.

முதல் காட்சியிலேயே ஏற்றிக் கட்டிய அழுக்கான லுங்கியையும், சிவப்பு முண்டாசையும், வெளிறிய சட்டையும், தெருவோர வாழ்க்கையும் என்று கதாநாயகனின் பின்புலத்தை வெளிப்படுத்துகின்றார். தாழ்குடி அல்லது தாழ்த்தப்பட்ட குடியென்பதை இதை விட அழகாக யாரும் திரைப்படங்களிலே காட்டியிருக்க முடியாது. வில்லனோ நிலக்கிழாரிய குமுகாயத்தில் ஒரு ஓவர். இவரது பின்புலத்தையும் வெள்ளையும், சொள்ளையும், நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாய் உயர்குடிக்கான அத்துனை அடையாளங்களையும் கொண்டிருக்குமாறு இப்பாத்திரத்தைப் படைத்திருக்கின்றார்.

அந்நியன் படத்தில் அம்பி என்னும் உயர்குடி பாத்திரப் படைப்பு சோம்பேறி என்று வருணிக்கப்படும் தாழ்குடி பாத்திரத்திற்கு மரண தண்டனை தருகின்றது. இன்னும் ஒருபடி மேலே போய் 'காதல்' படத்தில் ஈனசாதி நாயே என்று கதாநாயகனை எட்டி உதைத்து, தாழ்குடி என்ற ஒரே காரணத்திற்காக 'முதலிரவு' கூட வைக்காமல் போகின்றது. ஆனால் சின்ன மாப்ளேயில் தாழ்குடி நாயகன் உயர்குடி வில்லனை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றார் என்ற கருவை, புரட்சிக் கருத்தை, சமுதாய சிந்தனையை சந்தான பாரதி விதைக்கின்றார்.

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி போன்ற இலக்கிய சிந்தனை வளர்க்கும் இனிய பாடல்களுடன் வெள்ளித் திரையில் சொலித்ததுதான் சின்ன மாப்ளே. இத்தகைய உயர்ந்த இயக்குநரை பின்னாளில் பினாமியாய் மாற்றியவர் ஒரு உயர்குடி நாயகன் என்பதையும் உலகமறியும். இந்நிகழ்வால் இழப்பென்பது சராசரி ரசிகனுக்குத்தான். இத்திரைபடத்தினைப் பற்றிய எனது ஆராய்ச்சி நூல் விரைவில் பித்தளைப்பச்சான் தலைமையில் வெளியாகவுள்ளதென்பதையும் இத்தருணத்தில் அறியத் தருகின்றேன். மேலதிக விபரங்களை அப்புத்தகத்தில் தொகுத்துள்ளேன்.

பி.கு. சின்ன மாப்ளே: ச(கா)ப்தமா? ஆசிரியர்: குசும்பு கும்கி. வடகிழக்கு பதிப்பகம். (இணையத்தில் சாமதேனு தளத்தில் வாங்கலாம். எந்த இந்தியன் தளம் பக்கம் போக வேண்டாம் :-)

நன்றி பொறுக்குதிலையே

அம்மாவிற்கு பின்னால் அரோகரா போடும் கும்பல் வெறும் அரசியலில் மட்டும் இல்லை. எங்கே பார்த்தாலும் காணக் கிடைக்கும். எடுத்துக்காட்டாக:

பதிவு: இலந்தையின் இன்றைய நிலை என்ற புத்தகம் முனியாண்டி விலாஸில் கிடைக்கின்றது. அதன் முதற்பாகத்தின் ஆங்கிலப் பதிப்பை இதோ இங்கு வெளியிடுகின்றேன்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. கட்டாயம் வாங்க வேண்டும்.

பதிவு: இன்றைக்கு நவம்பர் 1 தீபாவளி. மாரியாத்தா கோயிலில் கஞ்சி காய்ச்சி ஊத்தினோம்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. கஞ்சி டேஸ்டாக வந்ததா? படமிருந்தால் போடுங்கள்.

பதிவு: போன வெகேஷனுக்கு எங்கு போனோமெண்டு நினைக்கிறியள். எல்லாம் மரக்கறி புடுங்கத்தான்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. கவிச்சிக்கறியோட சாப்பிட்டேளா?

இதெல்லாம் சரி. அவங்க பதியறாங்க. இவங்க பாராட்டுறாங்க. ஆனா இதைப் பாருங்க:

பதிவு: ஸோ அண்ட் ஸோ இன்று மறைந்து விட்டார். அன்னாருக்கு அநேக நமஸ்காரங்கள்.
கொமண்ட்: தகவலுக்கு நன்றி தமக்கையாரே. ப்ளா ப்ளா ப்ளா

அடப்பாவிங்களா இதுக்கும் நன்றியா? நிர்மலா பெரியசாமி டிராஜிக் நியூஸ் வாசிக்கிற மாதிரில்ல இருக்கு... நன்றியை இடம் பாத்து காமிங்ணா(கா). புண்ணியமாப் போகும்.

ஆக்கமும், ஆக்கியவனும்

"எழுத்தை பாத்தா என்னைப் பாக்காதே. என்னைப் பாத்தா எழுத்தைப் பாக்காதே", அப்பிடின்னு நம்ம சா(பா)ரு நிவேதிதா சார் பொன்மொழி வுட்டாரு. (அப்புறம் அவரே நான் எழுதுவது என் வாழ்க்கை ரகஸியம்னு பீலா வுட்டு அப்பீட் ஆனது வேற விஷயம்)

சரி... ஒருத்தரோட எழுத்தை எப்படிப்பா எடை போடறது? இப்ப என்னையே எடுத்துக்குங்க. ஏதோ ஆரம்ப காலத்துல நம்ம செட்டுங்க வந்து படிச்சுட்டு அப்பப்ப கமெண்ட்டு குத்திட்டுப் போயிடுவாங்க. இப்போ எல்லை கொஞ்சம் விரிவடைஞ்சிருக்கு(ன்னு நெனைக்கிறேன் :-). இருந்தாலும் 'இணைய குசும்பன்' என்னாத்த எழுதி கீசியிருப்பான்'ன்னு பலர் பல பதிவுகளைப் பாக்காமலேயே போயிருப்பாங்க (இதிலிருந்தே தெரியவில்லை. ஜெயமோகன் சும்மாவா சொன்னார். இணையத்தில் தீவிர வாசகர்கள் குறைவென்று! ;-))

என்னோட புல்லறிவுக்கு (அதாவது 'full'அறிவிற்கு) எட்டியவரை ஆளைப் பாத்துதான் எழுத்தைப் படிக்கிறாங்க. எழுதுற எல்லார் மேலேயும் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒரு 'முத்திரை' (எ.கா. சோழ முத்திரை) அல்லது 'இலச்சினை' இலவசமாய் குத்தப்படுகின்றது. இவனா இவன் இப்படித்தான் எழுதுவான் என்ற அபிப்பிராயமே அவனெ(ளெ)ழுதிய ஆக்கத்திற்கு விமர்சனமாய் கிடைக்கின்றது. அதாவது ஆக்கமென்பது இரண்டாம் பட்சமாய், ஆக்கியவனே(ளே) மூலமாக ஆகிப்போகின்றான்(ள்).

பலதுறைகளில் வீச்சிருக்கவேண்டுமென்பவரே, சுஜாதா புறநானூறுக்கு புக் போட்டால் விழுந்து கடிக்கின்றனர். ஏம்பா வெறும் 'கணேஷ்-வசந்த்' கிரைமோடும், ஸ்ரீரங்கத்து தேவதை தரிசனத்தோடும், அப்பப்போ சிலிகன், செல்லுலாய்டு ஜின்ஜினக்காவோடு நிப்பாட்டக் கூடாதுன்னு போர்க்கொடி பிடிக்கிறாங்க. ஏனுங்க இலக்கிய வட்டத்தை பட்டா போட்டு குறிப்பிட்ட கூட்டத்திற்கு வித்துபோட்டாங்களா?

கதை, வசனத்தோட கட்டிலில் படுத்துக் கெடக்காமா எம்பது வயசுல கொடைக்கானல் போயி தொல்காப்பியம் உரை ஏன் கருணாநிதி எழுதோணும்?

இவர்களெல்லாம் இலக்கியவாதிகள் கெடையாது. இலக்கிய வியாதிகள்'ன்னு கடும் கண்டனம் தெரிவிக்கப்படும் காரணம் யாது?

இதே புறநானூறு மற்றும் தொல்காப்பிய விளக்கத்தை நானே எழுதியிருந்தா (மவனே அடங்கமாட்டே!) என்னவாயிருக்கும்? மேலே நான் சொன்ன கதையாடலுக்கு (நன்றி: கோல்டுபெல்) கொஞ்சம் அடியுரமாய் இது தெரிகின்றது.

முனைவர் தொ.பொ. தவிர யாரும் ஆக்கப்பூர்வமாய் சுஜாதாவின் புறநானூறு ஆக்கத்தை அணுகியவரில்லை எனலாம். 'கருணாநிதி' பெயராலேயே எதிரிகள் அதிகமாதலால் விட்டு விடலாம்.

இணையம் குறிப்பா வலைப்பூக்களிலும் இதே ட்ரெண்ட் தென்படுகின்றது (நம்ம 'full'அறிவிற்கு). முதல்ல ஆளைப் பாத்துட்டுதான் படிக்கவே செய்றோம் (அட்லீஸ்ட் நான் அப்படித்தான் ஆரம்பித்தேன்). ஒரு பத்து பதிவுகள் படிச்சப்புறம் ஆளைப் பத்தி ஒரு படம் போட்டு வைச்சுக்கறோம். அதுக்கப்புறம் மவனே நீ 'குனிஞ்சு குத்தடி ஜைனக்கா' போட்டாலும் 'படம்' மட்டும் மாறவே மாறாது. 'அவனா நீ'ன்னு ஒரு மாதிரி ஆளைப்பாத்து அரண்டு அலறும் வடிவேல் கதைதான் இங்கேயும்.

சரி.. யெளவு சொல்ல வந்ததை சொல்லித்தொலை'ன்னு டமாஸ் கத்துறாரு. வரேன். வரேன்.

சுனாமிக்கு நன்னின்னு ஒருத்தர் சொன்னா குத்தம். பாஞ்சு புடுங்கலாம். இது சொயநலமான்னா இன்னொருத்தர் கேட்டா கரீக்டு. பச்சாதாபம் காட்டோணும். மேட்டரு என்னான்னு பாக்காம மீட்டரு என்னான்னு கேக்குற உலகமய்யா. அது சரி... இத்த கேட்டதால நம்ம ஆறுமூலம் துறவிமூலம் தேடாதீங்காணும். ஆனானப்பட்ட அரநங்கல்லூராரே பால் தரும் பசுவென்ற வித்தியாசம் பாராது சுக்கா சாப்பிடுவதாய் வாசகர்க்கு வாயு தந்து சுயஅடையாளம் காட்ட மறு(ற)க்கும்போது அடியேன் எம்மாத்திரம்? அவர் சமீபத்தில் போட்டுத் தாக்கிய Kவி கருணாதாஸ் ஸ்பெஷல் தரிசனத்தில் ஏடுகொண்டலவாடாவை தரிசித்து, வாசிப்பவர்க்கு நாமம் போடும்போது நான் எம்மாத்திரம்? பருப்புக்கூட்டமென மாமாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமி என்றால் ரகஸிய மெயில் அனுப்பும் இணைய தா(த்)தாக்களை என்னவென்று சொல்வது?

நான் புரட்சியாளன் என்று வெற்று கூச்சலிடுவது புரட்சியில்லை. புரட்சி என்பதற்கு டெசிபல் அளவுகோளில்லை. மௌனமாய் கேட்டுப்பாருங்கள்.

(பினா.குனா. தீவிரமா ஆராய நம்மால முடியாதுன்னு ஜெயமோஹன் சார் சொன்னதை கவனத்தில் கொள்(ல்)க! குசும்பா உன்னைப் பத்தி தெரியாதான்னு வெறும் சவுண்ட் விட்டால் அப்புறம் இலக்கியத்துக்குத்தான் ஆபத்து! ஏன்னா என்னோட குசும்பு தொடரும்...:-0)

Monday, October 17, 2005

பரிசுத்த பதிவு - மட்டையடித்தல்



இது மரத்தடி கலகமல்ல. மட்டையடித்தல் என்ற பதம் செம்மொழியாக்கத்தின் விளைவேயன்றி வேறு பொருள் கிடையாது. மட்டை என்பது ஆங்கிலத்தில் Bat என்பார்கள். Batsman என்றால் மட்டையாளர். தமிழரின் பழங்கால ஆட்டமான கில்லிதண்டாவே கிரிக்கெட் என்று நீட்சியடைந்ததாய்க் கொள்ளலாம். இப்போது சொல்லுங்கள் மட்டையடித்தல் என்பது கேவலமா? தமிழ்க் கடவுளான முருகனுக்கே அடுக்காது. கிருட்டிணனே சாட்சி !!!

இப்பதிவின் நோக்கம் முழுக்க முழுக்க மட்டையடித்தலே! கிரிக்கெட் எனப்படும் பந்து விளையாட்டில் தற்போது இந்தியத் துணைக்கண்டத்தில் நேரும் அரசியல் காய் நகர்த்துதல்களை பதிவு செய்தலே முழு நோக்கம்.

சவுரவ் கங்கூலி முன்னாள் இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் அணித்தலைவர் ஆகிவிட்டார். தமிழக அமைச்சரின் ஆயுளைப் போல் ராகுல் திராவிட் இந்நாள் அணித்தலைவர். பதவிக்காலம் இரு தொடர்களுக்கென்று அறிவிக்கப்பட்டாலும் அது கராத்தே தியாகராச சொர்க்கம்தான் (திரிசங்கு சொர்க்கம் என்றும் கூறலாம்).

இந்திய அணியில் இளைஞர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கப்படுவதில்லை என்பது மட்டையடித்தலில்லை. ஆனால் கல்கத்தா இளவரசன், பொடாவில் போட முடியாத தாதா கங்கூலி சாதித்ததாய் கதைப்பவர் உண்டு. எதிர்வினையாய் சின்னவர்களை (!) ஊக்குவிப்பதால் பெரிய இடைஞ்சல் தனக்கு பிற்காலத்தில் நேராதென்ற குறுகிய மனப்பான்மைதான் காரணமென்று உதைப்போருமுண்டு.

ஆக தற்போது நடந்ததுதான் என்ன? உங்களுக்குத் தெரியாத குழலிகுத்து (உள்குத்து எனவும் கூறலாம்) அரசியலையா தெரியப்படுத்த முடியும்.

நீதி: ரைட்டுக்கு லெப்ட் ரைட் போட்ட கங்கூலிக்கு செப்பல் செப்பல் கொடுத்து வெளியேற்றி விட்டார். அ·தாவது முற்பகல் ரைட்டின் பிற்பகல் செப்பல்.

டார்வினும் விருதுப்பட்டி சனியன்களும்

கொரங்கிலிருந்து மனுசப்பய வந்தானான்னு தெளிவா தெர்லப்பா. சயின்டிஸ்ட்டும், மதமிஸ்ட்டும் மோதிக்கொண்டிருக்க நம்ம மட்டும் சபலிஸ்ட்டா இந்த டாபிக்க கையாளப் போறோம். (அட ஒரு நாளைக்கு 25 விஷயமாவது எழுதாட்டியும் பர்வாயில்லப்பா... 5-6'வது போட வேண்டாமா?)

ஷேன்னன். வயது 35. ஜேக்சன்வில். புளோரிடா: ஆறு இன்ச் ராக்கெட் (தப்பா நெனைக்காதீங்கப்பு. இது சிவகாசி மேட்டரு) ஒண்ணை கேர்ள் பிரண்டு வூட்டுல, போர்டு மஸ்டாங் காரிலிருந்து ஏவி வெள்ளாட்டா பயங்காட்ட நெனைச்சார். கொரங்கு புத்திப்பா. விருதுப்பட்டி சனியன் ராக்கெட் வடிவில். ராக்கெட்டுக்கே ரவுசு தாங்க முடியல. U டர்ன் அடிச்சு காருக்குள்ளே கால்களுக்கிடையே டமார் ஆனது. வெளிச்சமும், சத்தமும் ஷேன்னனை செயலிழக்கச் செய்தன. ஆஸ்பத்திரியில் 2 டிகிரி எரிப்புண்ணுடன் ஷே(சே)ன்னன். காயம் முழுதும் இடுப்பிலிருந்து கால் கணு வரை. இனிமே ஙௌப்ரானே ராக்கெட் வுடமாட்டேன்னு புலம்பியதா தகவல்.

டெர்ரி கேத். 23 ஜனவரி 78. 32'வது பிறந்த நாள். சிக்காகோ கிதார் மேதைக்கு துப்பாக்கி மோகம் (அட தேவுடா). சும்மா பிலிம் காட்றதுக்கு பார்ட்டியில தன்னோட கன் கலெக்ஷன்லேர்ந்து ஒண்ணு ஒண்ணா உருவி நெத்திப் பொட்டுல வெச்சி சுட ஆரம்பிச்சாரு. குண்டுக் குடுவை (magazine'க்கு தமிழ்ங்ணா) நீக்கிவிட்டுதான் இந்த பிலிம். 9 மிமீ (யோவ் இது மீமீ இல்ல மில்லி மீட்டர்) செமி ஆட்டோமேட்டிக் பிஸ்டலை எடுத்தார் டெர்ரி. பார்ட்டியை நடத்தியவர் தடுக்கத் தடுக்க நெத்தியில் வைத்தார். கிளிக். டுமீல். ஆள் அந்த இடத்திலேயே காலி. அட டெர்ரி மாம்ஸே ஆட்டோமேட்டிக் பிஸ்டலில் குண்டுக் குடுவையை நீக்கினாலும் ஒரு குண்டு லோட் ஆயிருக்கும். என்னா பண்றது? பேசாம கிட்டாரிலியே காலம் கழித்திருக்கலாம்.

குஷி பட விஜய் மேரி, பங்கி ஜம்ப் பண்ணி கயிறு நீளம் ஜாஸ்தியாகப் போக தரை சமாதியானவர், அடுத்தவனை கொல்லப் போக கோலிவுட் காமடியைப் போல் தங்களுக்குள்ளே குத்திக் கொண்டோர், கிறிஸ்துமஸ் மரத்தை சரியாகக் கட்டாமல் காரோட்டி மூன்று முறை பிழைத்தாலும் அடுத்த முறை ஹைவேயில் அடிபட்டு செத்த அறுபத்தாறு வயது அவுஸ்திரேலியா பாட்டி என்று டார்வின் கொள்கையை உறுதிபடுத்தும் மக்களுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்துகின்றார்கள் (சிபாரிசின்றி).

நம்மூரு தினத்தந்தியில கூட ஒரு மெக்கானிக் அவசர அவசரமா குளிச்சிட்டு துவட்ட நேரமில்லாம ஹைபிரஷர் ஏர் டியூபால் துவட்டும் போது ஆசன துவாரம் வழியாக சென்ற உயரழுத்த காற்று உள்ளுறுப்புகளை துவம்சம் செய்ய... அடப்போங்கப்பா நாங்க மட்டும் சளைச்சவங்களாங்காட்டியும்.

நீதி: தெரியாம நடந்தா அது ஆக்ஸிடெண்ட். தெரிஞ்சே நடந்தா அது இன்ஸிடெண்ட்.