Monday, September 13, 2004

VIP வலைவலம் - 2

VIP வலைவலம் - 2

குசும்பன் VIP வலைவலம் வர என்னைக் கேட்டாரா? சொந்த வேலை, அலுவல் அழைக்கின்றது என்று எவ்வளவு நாள்தான் கடத்த முடியும். குசும்பனின் தொல்லை தாங்க முடியாமல் நண்பனை 2 மணிநேரம் காத்திருக்கச் சொல்லிவிட்டு கணிணி முன்னே அமர்ந்தால் மின்சாரம் போய்விட்டது. நடப்பதெல்லாம் நன்மைக்கேவென கயிற்றுக் கட்டிலில் படுத்து கனவு காணலாமென்றால் மணி மதியம் இரண்டு. சரி நமக்கு இன்று மின்வாரியம் இலவசமாய் மலை நாமம் போட்டுவிட்டார்கள் என்று புலம்புமுன் மீண்டும் மின்சாரம் வந்தது.

சரி யார் வலைப்பதிவை விமர்சிக்கலாமென்றால் குழப்பமாக இருந்தது. உடனே ஞாபகத்தில் வந்தது இவர்தான். ஒரு இனிய சினிமா மாதத்தில் தனது வாழ்வின் இன்பத்தை தொலைத்ததுடன், அடிக்கடி அவ்வப்போது காணாமல் போனாலும் தனது மானசீக குரு முதல், கவர்ந்தோரின் பின்னூட்டத்தில் கவனமாய் பின்னூட்டம் பதித்து வருபர்தான் அந்த பாக்கியவான். ஜெயம் பட ரவி போல் கடைசியாய் வெற்றி கொண்டானாய் வந்து பலரின் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் இவர்.

என்ன வலைப்பூவின் பழைய புராணத்தில் வழமைபோல் ஒரு குவா(ர்)ட்டர் காணாமல் போய்விட்டார். சிறிய வயதிலும் பசங்க மாதிரி இல்லாதது மனத்திற்க்கு சரியாய்ப்படவில்லை. ஆனாலும் சுள்ளானாய் இல்லாதது சந்தோஷமளிக்கின்றது. புத்தாண்டு கன ஜோராய் பலரையும் கவர்ந்திழுக்க அடுத்த குசும்பனின் விஐபி அவராகக்கூட இருக்கலாம்.

எனக்கு கணிணியில் அதீத மேலாண்மை நிபுணத்துவமில்லையென்பது எனது வலைபூவைப் படிப்பவர் அவதானிக்கக்கூடியதுதான். ஆனால் இவருக்கு சந்தோஷ் சிவன் குறும்படம் போல 'காணுதல்' அதுவும் 'அடிப்படை'யில் தான் ஆர்வமதிகமோவெனத் தோன்றுகின்றது. சுமத்திராத் தீவில் காபி குடிக்கமாட்டார். மேலும் குடிப்பவரையும் பிடிக்காதென மனத்திற்க்கு தோன்றுகின்றது. ஆனாலும் அகராதியில்லாத மனிதராகத்தான் என் பார்வையில் தோன்றுகின்றார் சம்மந்தமேயில்லாமல்.

ஊரு ஊரா சுத்தி ஓரிடத்தில் நிலையாய் கலக்கிக் கொண்டிருக்கும் வலைப்பூ நண்பரை வாழ்த்துகின்றேன். வீட்டு நண்பர் முறைப்பதால் செல்ல வேண்டும். ஏதோ 2 மணிநேரமே படித்தாலும் நிறைய புரிந்தது போல தோன்றுகின்றது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெண்கிடைப்பது பேஜார்தான் என்பது புரிய என் யமகா சூடாய் விரைய ஆரம்பித்தது. காரணம் புரியாமல் வெளிநாட்டு நண்பன் பில்லியனில் பம்மினார்.

Friday, September 10, 2004

வர்ணஜாலம்

வாடாமல்லியில் வாசமில்லைதான்
வெளிர்ந்த அதன் காட்சியும் கவரவில்லை
ஆகாயமும் அடற்கடலின் நிறமீறறிந்ததுதான்
இளவேனிற்காலத்து பசுமை பரவாயில்லை
தகிக்கும் அரேபியத் தங்கம் இயலாமையால் இகழும்
வாடியுதிரும் மாலைச்சூரியனை மதிக்கவில்லை
குருதியெடுக்கும் ஊசி வலிக்கின்றது

vibgyor வானவில் பார்த்தவுடன்
வர்ணங்கள் இனிக்கிறது

பிகு: என்னடா ஆச்சு குசும்பனுக்கு'ன்னு கவலைப்படாதீங்கோ. சங்கர்கிருபா மரத்தடியில வானவில் கவிதை போட்டாரோயில்லியோ? கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டன்.

Thursday, September 09, 2004

தமிழ்மணம்

அடடே, இம்மாம் நாளா தெரியாமப் பூடிச்சே!!! எம்மாம் பெரிய செய்தி திரட்டி. வலைப்பூக்களை தமிழ் மணமாய்த் தொடுக்க திறமை வோணும்பா...

போய்ப் பாத்தா நம்ம ஞானதேவன் ஐயா, குசும்பன் எங்கே தெரியலே'ன்னு மிரட்ட(?), காசியண்ணே நான் பதிவே செய்துக்கலன்னு வருத்தப்பட்டிருக்கார். வருத்தப்பட்டா காசிக்குப் போய் கேள்விப்பட, காசியே கவலைப்பட்டா...(கிருபா சங்கர்வாள் மன்னிக்க ;-)

இதோ பதிஞ்சாச்சு. தமிழ்மண சுட்டியும் கொடுத்தாச்சு. காசியண்ணா சந்தோஷம் தன்னே?

அப்புறமென்ன தமிழ்மணத்தில் இப் பொன்மலரும் (வலைப்பூவப்பா!) 'நாற்ற'முடைத்து!!!

குசும்பன்.
குசும்புகள் ஆயிரம்

1. சமீபத்தில் அருண் வைத்தியநாதன் தனது வலைப்பூ பெயரை 'அகர தூரிகை' ஆக்கினார். அதேபோல் தணிகை உலகநாதன் என்ற பெயரைக் கொண்டவர் என்ன பெயர் இட்டிருப்பார்? (வேணாங்க இது ஓவர் குசும்பு)

2. பிறக்கும்போதே பேனாவுடன் தொட்டிலில் இருந்து வலைப்பூ ஆசிரியரானவெர் என்ன பெயரில் எழுத ஆரம்பிப்பார்? - ஏணைப் பெயரிலி? :-)

3. வத(னா) வதவென வலைப்பூக்கள் தொடங்கி சலிக்காமல், சளைக்காமல் எழுதும் பிரியர்க்கு என்ன பட்டம் வழங்கலாம்? - சந்திரபிளாக்னா?

4. குப்பை, குப்பை மட்டுமல்ல என்றால் என்ன அர்த்தம்? அவர் எழுதுவதை குப்பை என்கிறாரா? இல்லை மற்றவர் எழுதியதை சுட்டிகள் கொடுத்து சொல்கிறாரா?

5. இனிய தமிழில் எளிய 'மார்க்கெட்டிங்'? இடிக்குதே. எளிய 'மேலாண்மை' ஐயய்யோ பயமுறுத்துதே...அப்போ 'எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்' அட இனிக்குதே...மீனாக்ஸ் அண்ணா மாறுவீயளா?

வாரக்கடைசியில் விஐபி வலம்...

குசும்பன்.