பிடித்தது - தலைவர் ரஜினிகாந்த்
'பிடி'ப்பது - பெரிசு கருணாநிதி
படித்தது - மாயூரம் (மயிலாடுதுறைன்னு யார்ப்பா பேரை மாத்தினது? நல்லவேளை பெரிசில்லை? ;-))
பிடிக்காதது - முரசொலி
பார்ப்பது - சன் டிவி
கனவு - சந்திரமுகி
நண்பர்கள் - ஏனைய ரஜினி ரசிகர்கள்
எதிரிகள் - கருணாநிதியை அண்டியிருப்பவர்கள்
நிரந்தர எதிரி - ஐய்யா ராமதாஸ்
வீட்டுக் குசும்பர் - Master R. சந்தோஷ் (வீட்டில் கணிணியின் பவர் ஆப் பட்டனை அடிக்கடி அமுக்குவதால்!)
புதிய நண்பர் - போட்டுத்தாக்கு விஜய்
எப்போதும் நண்பர் - ரஜினி ராம்கி
விரும்பும் வாசஸ்தலம் - இமயமலை
வழக்கம் போல - 'ஊருக்குத்தானா உபதேசம்'
நமக்கப்புறம் வலைப்பூவுக்கு ஒருமாசம் அப்புறமா வந்து டகால்ட்டி வேலை காட்டி மாயூரத்தார் குசும்பனை கவர்ந்துவிட்டார். ('லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா?'). அதற்காக இணைய குசும்பன் பேரவை (?) சார்பாக இவ்வார 'குசும்புத் திலகம்' பட்டம் பெறுபவர் நமது பெருமதிப்பிற்குறிய அண்ணன் கி.ரமேஷ் குமா(சும்ப)ர்!!!
அப்பப்போ பட்டம் வழங்கி வலைப்பூ மக்களை அசத்தலாம்னு திட்டம். ஆனா காசு கொடுத்து வாங்கற விருதில்ல இது. அதுனால காசனுப்பி ஏமாறாதீங்க. திருப்பி அனுப்ப மாட்டேன்!!!
Wednesday, December 15, 2004
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நாங்க காசனுப்பி ஏமாறுவதா?! அந்தக் கதையே வேணாம்...பட்டம் கொடுத்தீங்க சரி..பொன் முடிப்பு எங்கே?! ஹிஹி!
(அப்புறம் நம்ம பேரை க்ளிக்கினா அது http://pari.mayavarathaan.blogspot.com அப்படீன்ற இல்லாத லிங்க்குக்கு ஓடுது...அதை http://mayavarathaan.blogspot.com அப்படீன்னு மாத்துங்க 'தலை'!)
கடைசியா 'பெரிசு' பாணியிலே சொல்லனும்னா...பட்டத்துக்கு மிக்க நன்றி...என்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்தப் பட்டம் கொடுத்ததற்காக இணையத் தமிழர்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று சொன்னால் அது மிகையல்ல..ஆனால் 'இவன் இந்தப்பட்டத்திற்கு தகுதியானவன் தானா?' என்று ஊமத்தம் கொண்ட சிலர் ஏளனம் செய்கிறார்கள். எள்ளி நகையாடுவதகும், ஏளனம் செய்வதற்கும் நான் அவர்களுக்கு வகையாக மாட்டிக் கொண்டேன் என்று எண்ணிவார்களேயானால் அதற்காக அஞ்சுபவன் அல்ல இந்த அஞ்சா நெஞ்சன்..! (அடச்சே....'பெரிசு' மாதிரி அப்படீன்னு நெனச்ச உடனே அவரு மாதிரியே உடான்ஸ் அருவியா கொட்டுதுப்பா!)
மாயூரனாரே,
இப்போ விருது வாங்கத்தான் காசே தவிர 'பொற்கிழி' எல்லாம் கொடுக்கிறதில்ல ;-)
அப்புறம் 'CTRL-C, CTRL-V' ல தப்பாயிடுச்சு. மன்னிச்சுகுங்க. லிங்கை இப்போ சரி செஞ்சிட்டேன்.
குசும்பன்.
சரி எங்கய்யா சரி செஞ்சிருக்கீரு?
அண்ணாத்தே..
தேங்ஸ¤ப்பா...அப்படியே மேலே இருக்கிற மேட்டரிலேயும் லிங்க் சரி பண்ணிடுங்களேன்..
அது சரி...நம்மள பத்தின மேட்டருக்கு ஒருத்தரும் 'காமெண்ட்' தரல போலருக்கே?! 'திருப்பதிக்கே லட்டா?!' அப்படீன்னு விட்டுட்டாங்களா..?! (டேய்...உதாரணம் அரதப்பழசு...புதுசா எதுவுமே தோணலயா?)
ஓகே...ஓகே...புதுசு தானே..சன் டி.வி.யையே நக்கலா?! ஹிஹி..இது எப்படி!?!
ஆஹா...சைடுல லிங்கை மட்டும் சரி பண்ணிட்டு ஆர்டிகிள்லிங்கை சொதப்பிட்டேனே...
வர வர சீரியஸ்னெஸே எனக்கு இல்லமப் போச்சு.
சாரி பரி!!!
Post a Comment