Thursday, January 11, 2007
இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பு
"பசுமை நிறைந்த நினைவுகளே" என்று பாடிப் பிரிய மனமில்லைதான். இருப்பினும் "போகுமிடம் வெகுதூரமில்லை" என்று பாட வருவதுதான் என்னுடைய இயல்பான குசும்போ?
பிரிவோம் வேறெதற்கு மறுபடியும் சந்திப்பதற்கா? ஆடிய கால்களையும், டைப்பிய கைகளையும் நிறுத்த முடியுமா?
225வரை அட்டெண்டன்ஸ் போட்ட உள்ளங்களுக்கு நன்றி! என்னால் காயம்பட்ட உள்ளங்களிடம் மனப்பூர்வமான மன்னிப்பு! குறிப்பாக கிராஸ்பயரில் மாட்டிய இளவஞ்சியிடம் தனிப்பட்ட மன்னிப்பு!
எப்படியோ ஆரம்பித்தது இப்படியாக இளைப்பாற வேண்டியிருக்கின்றது. இளைப்பா இல்லை களைப்பா? கண்டிப்பாகத் தெரியவில்லை. காலம் பதில் சொல்லட்டும்.
வாழ்த்துக்கள் வளமாய் வாழ !!!
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
உட்கார்ந்து கப்பற்படை பற்றி திட்டமிட்ட அந்தப் புத்தகத்தை எழுதப் பாருங்கள். புத்தகம் எழுதிட்டுப் பதிப்பாளர் இல்லையே என்று தேடுபவர்கள் அதிகம். இதிலே உங்களுக்குப் பதிப்பாளர் கிடைத்தும் எழுதாமல் இப்படி குசும்பு செய்து கொண்டிருந்தீர்கள். இந்த ஆற்றலைப் புத்தகத்தில் காட்டுங்கள்.
- பி.கே. சிவகுமார்
வருத்ததையும் வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்கிறேன். You may not miss anything, but you will be missed.
சுவாமி
குசும்பரே,
என்ன இது?மிகவும் வருத்தமாக இருக்கிறது.சற்று ஓய்வெடுத்த பிறகு மீண்டும் வாருங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன்.
நீங்கள் எந்த முயற்சி எடுப்பினும் அதில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
குசும்பரே,
என்ன இது?மிகவும் வருத்தமாக இருக்கிறது.சற்று ஓய்வெடுத்த பிறகு மீண்டும் வாருங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன்.
நீங்கள் எந்த முயற்சி எடுப்பினும் அதில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
(The previous post was mine.Got published as anonymous somehow)
பொண்ணு எந்த ஊர்ன்னு சொல்லவே இல்லயே...?
தம்பி, கல்யாணம் ஆவாத ஆறியாத புள்ளையா நீ? அண்ணாச்சி சொல்லீட்டாரேன்னு மோட்டு வளைய பார்த்த மேனிக்கு போட்டோ புட்சி வெச்சிக்கிகீனு, பொத்தகம் எய்தரேன்னுன்னு சிந்திக்க ஆரமிச்சிடாதே. வாய்கையில
அதுவும் வேணும், இந்த குசும்பும் வேணும்.இளவஞ்சிக்கிட்ட மன்னிப்புன்னு ஒரு வார்த்த கேட்ட பாரூ, அது போதும், என்ன
செய்ய யாரா இருந்தா என்ன? ஏதோ என்னிய மாதிரி ரெண்டு பொம்பளைங்க கொஞ்ச தைரியமா எழுத வந்திருக்கோம்.
உங்க சண்டையில எங்கள அசிங்கப்படுத்துணுமான்னுதான் என் வருத்தம். அன்னிக்கும், இன்னி வரை நீ யாரூ என்ன உன்னோட
உண்மையான பெயர் என்னன்னு நான் தெரிஞ்சிக்க, முயற்சிக்கும் இல்லை. அது எனக்கு தேவையும் இல்லை .இவை எல்லாம் ரயில் சிநேகம் போல, அந்த நேரத்துக்கு மட்டுமே! நல்லா இருங்க- வார்த்தை உபயம் துளசி :-)
இதுக்குத்தான் மப்புல இருக்கும் போது ப்ளாக்க கூடாதுன்றது... தெளிஞ்சவுடனே கலர் கோடோடு வாரும் குஷும்பர்...
குசும்பரே!
வலைதளங்களில் நுழைந்து பிரகாசிக்க என்ன செய்ய வேண்டும்?
கொஞ்சம் கற்றுத் தாருங்கள்.
நானும் ஒரு வலையைப் பின்னியுள்ளேன். இதனைப் பிரித்து மேய்வதற்கு யாரும் இல்லை.
என் வலைப்பதிவுகளைப் பார்வையிட தட்டுங்கள் இந்த இணைப்பை http://manthodumanathai.blogspot.com/
என்னைத் தொடர்பு கொள்ள pugazhan@gmail.com
நன்றி
Post a Comment