Tuesday, March 13, 2007

இண்டெர்நெட் இருட்டுக்கடை

"குதடா குதடா குதடா ஷாக்கடிக்குதடா" என்று திருமகன் பாட்டு ஸ்பீக்கரில் எகிறிக் கொண்டிருக்கின்றது.

கொலைவெறியோடு குலவை போட்டுக் கொண்டிருந்த வலைப்பதிவாளர்கள், கத்தியின்றி ரத்தமின்றி தற்சமயம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பதிவு போட்டாலே பத்திக் கொள்ளும் நிலையில் இருந்தது மாறி, ஒயிட் பாஸ்பரஸ் தூவினாலும் ஒதுங்கிப் போகும் மக்களைக் குறித்து விசனப்பட்டு வெந்து நொந்து போன சில வலைப்பதிவர்கள் ஒன்று கூடினார்கள். நாயகனாய் நமது கன்னட பிரசாத் ஐடியாக்களை அள்ளித் தர வந்தால் அவர்களுக்குக் கசக்கவா செய்யும்? இதோ இண்டெர்நெட் இருட்டுக்கடை ஆரம்பம்...

பிகேஎஸ்: இதென்ன கூட்டம் இவ்வளவு கம்மியாயிருக்கு? விளக்கு விருது வழங்கும் விழாவுக்குக் கூட ஆளுங்க அதிகமா இருந்துச்சு போலருக்கே?
முகமூடி: (முனகுகின்றார்) க்கும் நீங்க வர்றீங்கன்னு முன்கூட்டியே நியூஸ் கசிஞ்சுடுச்சி போலருக்கு
பெயரிலி: என்னங்க பிகேஎஸ்ஸு குளோபல் டெலிவரி டயத்துல பதிவு போட்டு அடிச்சுக்குவோமே அதெல்லாம் பழங்கனவாகிடுமோ? அமைதிப்படையிலிருந்து, அட்லாண்டிக்கு அப்பால் வரை அடிச்சிக்கிட்டு நாறினதெல்லாம் "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே"
முகமூடி: அட ஆமாம் உபிச! உங்க பதிவு வர்றதுக்கு முன்னாடியே கமெண்ட்டுப் போட்டுக் கலக்கும் கார்த்திக் ரமாஸ், அப்பிடி இப்பிடின்னு பின்னூட்டப் பெட்டியிலேயும் பின்னி பெடலெடுப்போமே... இப்ப வர்றவனுங்கெல்லாம் சப்பிப் போட்ட மாங்கொட்டைக் கணக்கா சவசவன்னு இருக்கானுங்களே...வெசனமாயிருக்கு...ஏதாச்சும் பண்ணணுமே?
பெயரிலி: அட மூதித்தம்பி... நீயும் அருக்காணி, குந்தானின்னு பதிவைப் போட்டு கலக்கிக்கிட்டு இருந்தே. கண்ணுப்பட்ட மாதிரி உன்னை இண்டிபிளாக்கீஸ்ஸுக்கு ஜட்ஜாப் போட்டு இண்டலக்ச்சுவல் ரேஞ்சுக்கு ஒசத்தி நாஸ்திப் பண்ணிட்டானுங்க. கலி முத்திடுச்சிபா
குசும்பன்: பெயரிலி அண்ணாச்சி...கன்னட பிரசாத்துக்கு எத்தினி பொண்டாட்டின்னு கூட என்ணி கண்டுபிடிச்சுடலாம்... ஆனா நீங்க எத்தினி பதிவுகள் மெயின்டெயின் பண்றீங்கன்னு கண்டுபிடிக்கவே முடியாதுங்ற ரேஞ்சுக்கு கலக்குனியே ராசா... இப்போ என்னாச்சு பாரு... நம்மள எல்லாத்தையும் கௌதம் மேனன் பட வில்லனுங்க பண்ற காமெடி ரேஞ்சுக்கு இப்ப நெட்டுல ட்ரீட் பண்றானுங்க...
தமிழ்பார்: ஏதோ நான் பாட்டுக்கு பீரு, பீட்டரு திவ்யான்னு கத வுட்டு கலாய்ச்சிட்டு இருந்தேன். அதுக்கும் ஆப்படிச்சு ஆக்கர் வேற குத்திட்டானுங்க. பரபரப்பா ஏதாச்சும் செய்யணும். பிரசாத் அண்ணே ஐடியா கொடுங்கண்ணே.
குசும்பன்: ஏம்ப்பா காவேரிக்கு அவனவன் அடிச்சிக்கிறானுங்க. ஆனா கன்னடக்காரங்கிட்டே போயி ஒரு வலைத்தமிளன் ஐடியா கேக்கலாமா?
பிரசாத்: என்னது காவேரிக்கு அடிச்சிக்கிறானுங்களா? என்கிட்ட சொல்லவே இல்லியே? இதோ இப்பவே போனப் போடுறேன் (செல்போனை எடுக்கின்றார்)
குசும்பன்: அட கசுமாலம் அது நடிகை காவேரி இல்லப்பா...காவேரி ரிவர்பா
பிரசாத்: அடச்சே அந்த மாதிரி தம்மாத்தூண்டு மேட்டருல நான் கைய வைக்கிறதேயில்ல. இருந்தாலும் காவேரி எனக்கு பேக்கு.
குசும்பன்: ஆமாம்ப்பா உனக்கு காவேரி பேக்கு. நெட்டுல எல்லாருக்கும் தமிழ் பேக்கு. எனக்கு நீ மட்டும் பேடா...
இளவஞ்சி: அண்ணாத்தே... இப்பிடி டா போட்டுப் பேசாத. ஏதோ ஒரு காலத்துல நாமெல்லாம் அடிச்சிக்கிட்டு ஆட்டம் போட்டு சந்தோஷமா இருந்தோங்றத மறந்துடாதப்பா குசும்பா. இப்போ பரபரப்பா பத்திக்கிற மாதிரி ஏதாவது செய்யணும். அதுக்கு ஐடியா சொல்லு
டோண்டு: அதுக்குத்தான் இந்த இருபது வயது இளைஞன் இருக்கேன்ல. நேத்திக்கு ICICI டெலிமார்க்கெட்டிங் பிகர் ஒண்ணு...
பிரசாத்: பிகரா எங்கே எங்கே? எங்கே? போன் நம்பர் கொடுங்க...
போலி: அட எழவெடுத்தவனுங்களா...போன் நம்பர்லேயே குறியா இருக்குறானுங்களே...
ரோஸாவசந்த்: என்னது குறியா? அத அறுத்தா சரியாடும்ல. ஸ்வீட் கொடுத்து கரெக்ட் பண்ணுப்பா. சேச்சே பொது வாழ்வுக்கு போனதுலேர்ந்து எனக்கும் நிம்மதியே போயிடுச்சி...நெட்டுல சண்டியரா சலம்பம் பண்ணிட்டு இருந்தவன இப்பிடி குந்தானி மேல குந்த வைச்சிட்டானுங்களே
பொட்டீக்கடை: கடை விரித்தேன் கொல்வாரில்லை. அம்பறாத்துணியை அவுத்துவுட்டு வாடா சண்டைக்குன்னு கூப்டாலும் கூலா டீ அடிச்சிட்டு போய்க்கினே இருக்கானுங்கப்பா. கிரி பட வடிவேலு மாதிரி எல்லாரும் நெட்டுல எல்லாரும் நல்லவனா மாறிட்டானுங்களா?
முகமூடி: டம்ஸ், வாழைப்பழம்னு பேதிக்கு வழி சொன்னப்பவே பேஸ்தியாக்கி நாஸ்தி பண்ணின நல்லவங்களேல்லாம் இப்போ எங்கேப்பா இருக்கீங்க? வாங்கப்பா ஏதாவது செய்ங்க. "பத்திக்கிச்சு பத்திக்கிச்சுடா கண்ணாளா கண்டபடி பத்திக்கிச்சுடா" அப்பிடின்னு பதிவைப் போட்டாலும் "போங்கண்ணே கிச்சுகிச்சு காட்டாதீங்க"ன்னு பம்முறானுங்களே... இப்பிடியே காந்திகிரி போச்சுன்னா எப்பிடி நாமெல்லாம் காலம் தள்ள முடியும்?
தமிழ்பார்: எல்லோரும் வண்டியை எடுங்க. இசிஆர் போவோம்...
குசும்பன்: ஆஹா கெளம்பிட்டானுங்கடா...இந்தாளு நம்மள ஐசியூ'வுல அட்மிட் பண்ணாம ஓயமாட்டான் போலருக்கே
பிகேஎஸ்: தமிழ்பார்தான் தமிழ்சசி என்று வந்தியத்தேவன் அடையாளம் கண்டு ப்ரூப் காட்டிய பின்னும்...
பெயரிலி: யோவ் நெட்டு கெட்டுப் போனதுக்கு மொதோ காரணமே நீதான். "பத்து மைல் டிஸ்ரென்ஸ்" பதிவைப் போட்டு முகமூடியும், குசும்பனும் ஒண்ணே அப்பிடின்னு நானொரு பிட்டைப் போட்டேன். அதுமாதிரி அறிவியல் பூர்வமா ஐடெண்டிபிகேஷன் இல்லாம வெறும் ஐபி அட்ரெஸ் கொடுத்தால் என்ன கிட்டும்? சூச்சூன்னு அந்தாண்ட போங்க. அடையாளம் காட்டறேன்னு ஆளுங்கள அம்பேல் பண்ணதுலேர்ந்து நெட்டுல சுவாரஸியமே இல்லாமப் போச்சி
குசும்பன்: அண்ணாத்தே ரிலாக்ஸ் ப்ளீஸ். மோப்ப பல்லாவை மாத்து எண்டு ரிக்வெஸ்ட் செஞ்சும் ஐடெண்ட்டிடி தெப்ட் போல அடுத்தவா ஐபி போட்டு என்னைய கொச்சைப் படுத்தியதை நான் மறக்கலை காணும் ஓய்
குழலி: ஐய்யா பத்திக்கிச்சு பத்திக்கிச்சு. திராவிடன் இதை மறக்க மாட்டான்.
குசும்பன்: மரம் சம்பந்தபடாத விஷயத்துலயும் வெட்டுறதுக்கு குழலி ஐய்யா கோடாலியோட வராருப்பா. இந்த டாபிக்க பிக்கப் பண்ணி டகால்டியா டக்கர் பண்ணலாமா? என்ன சொல்றேள்?
பிரசாத்: ஐய்யய்யோ இவனுங்கள விட போலீஸ் டார்ச்சரே பெட்டரா இருக்கே...குஷூம் அன்பே குஷூம் (அழ ஆரம்பிக்கின்றார்)
குழலி: குசும்பன் குஷூம் ரெண்டுமே "கு"வுல ஆரம்பிக்குது. அப்பிடின்னா...
குசும்பன்: ஏன் குழலில கூட "கு" இருக்கு. இவ்வளவு ஏன் "கு"வுல பலது ஆரம்பிக்குது. அப்பிடின்னா..(தொடர்கின்றார்)
உஷா: (பி.டி. உஷா ரேஞ்சில் ஓடிவந்தபடி) போதும் அப்பிடியே நிறுத்துங்க. அன்னியன் அம்பி ஸ்டைல்ல தல சுத்துது.
குழலி: சூப்பர். இந்த டாபிக்க தொடரலாமே...அம்பி விஷயம்னு சொன்னோமின்னா கூடி கொட்டமடிக்க ஒரு கூட்டமே இருக்கு. என்ன சொல்றீங்க?
பத்ரி: "சுட்டாச்சு சுட்டாச்சு"
முகில்: அண்ணே அப்பிடி சத்தமா கத்தாதீங்க தப்பாயிரப்போவுது
குமார்: ஸ்வீட்டாச் சொல்றேன். அதான் சுட்டுட்டீங்களே. அப்புறமென்ன? என்ஞாய் மாடி. ஆமாம் பிரசாத் நீங்க நல்லவரா கெட்டவரா?
பிரசாத்: (நாயகன் ஸ்டைலில்) நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எதுவுமே தப்பில்லே.
(டோண்டு மேசையைத் தட்டுகின்றார்) என்னது நாலு பேருக்கு நல்லதா? எங்கிட்ட சொல்லவேயில்லியே? நெட்டுல நாந்தான் போலியப் பத்தி எடுத்துச் சொல்லி நாலு பேருக்கு நல்லது செஞ்சேன்
போலி: (அடுத்த பதிவுக்கு அச்சாரம் போட்டு நாலு பேரை வைத்து "கதை"யை படபட வென்று டைப்புகின்றார்)
குசும்பன்: சே முன்னாடியாவது போலியைத் திட்டு, அனானிகளைத் திட்டு பின்னர் ஏன் டோண்டுவையே திட்டு என்று பதிவுகள் பல போட்டு எல்லாரும் வாழ்ந்தாங்க. இப்ப என்னடான்னா போலி வசனத்தையே மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற ரேஞ்ச்சுக்கு மரத்துப் போயிட்டாங்களா?
குழலி: அட சங்கம் வைச்சுக் கூட பாத்துட்டோங்க. சீரியஸான சங்கத்தையே அங்கதமா ட்ரீட் பண்றாங்க. இப்போ என்னா பண்றதுன்னு தெரியலியே?
பிரசாத்: பேசாம நீங்க எல்லாரும் என்னோட நீலாங்கரை பங்களாவுக்கு வாங்க. பார்ட்டியோட பார்ட்டியா டிஸ்கஷன வைச்சிக்கலாம்.
குசும்பன்: இந்தாளு எப்பவுமே கோக்குமாக்காவே பேசுறானே... பார்ட்டிங்கறான் வைச்சிக்குவோம்ங்றான் டிஸ்கஷன்ங்றான்
குழலி: ஆமாம் எல்லாமே ஒரே டிஸ்கஷன்தான். சினிமாவுல கூட டிஸ்கஷன தடை பண்ண ஒரு சட்டம் போடணும்
ஹரிஹரன்: இதுக்கெல்லாம் சட்டமா? முருகா...
இரவுக்கழுகார்: முருகனப் பத்தி நீங்க பேசுனத ஸ்கீரீன் ஷாட் போட்டுருக்கேன். உஷாராயிடுங்க
ஹரிஹரன்: வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. ஆனால் முருகன் வேறு. முத்துக்குமரன் வேறு.
பிரசாத்: மயிலா எங்கே எங்கே?
குசும்பன்: சே முருகன் மேட்டரும் முடிஞ்சி போச்சே. அரோகரா கோவிந்தா கோவிந்தா
பெயரிலி: நாமெல்லாம் இன்னமும் சேவாக் மாதிரி ரொம்ப நாளா பார்முக்கு வராமலே இருக்கோம். இந்த ரேஞ்சிலேயே போனா அப்புறம் அனாதையா ஆக்கிடுவானுங்க
சின்னவன்: பாருங்க நம்ம ஞானபீடம் மாதிரி ஆளுங்களெல்லாம் திருப்பி அழைச்சி எழுதச் சொல்லணும்
பெயரிலி: அப்ப நீங்க ஞானபீடம் இல்லியா?
சின்னவன்: நான் குசும்பந்தான்னுல நெனச்சிட்டு இருந்தேன்
குசும்பன்: அப்ப குசும்பன் நானில்லையா? என்னையா கதையா இருக்கு? ஊருல உள்ளவனெல்லாம் நான்னா அப்ப நான் யாரு?
பிகேஎஸ்: இப்பிடியே பேசிட்டு இருந்தா கதைக்கு உதவாது. யாராவது ஒரு ஐடியாவ சட்டு புட்டுன்னு அவுத்து வுடுங்க.
குசும்பன்: ஆங் ஐடியா. நாம புதுசா ஒரு இழைய ஆரம்பிப்போம். மொதல்ல நான் ஒருத்தர திட்டி பதிவைப் போட்டு, அவரையே கையைக் காட்டி ரெண்டு பேரத் திட்டச் சொல்வேன். அவரும் திட்டி இன்னொருத்தரு கிட்ட சேர்ப்பிப்பார். இப்பிடியே தொடர்ந்தா நெட்டே பத்தி எரியும். நாமெல்லாம் என்னிக்கோ முன்னூறு அடிச்ச சேவாக் மாதிரி சந்தோஷமா இருக்கலாம். என்ன சரியா?
முகமூடி: ஆமாம் ஏதோ ஒலிம்பிக் ஜோதிய கைமாத்தி எடுத்துட்டுப் போற ஆளுங்க மாதிரி என்னமா சந்தோஷப் படுறாங்கப்பா? சரி சரி மொதல்ல யாரைத் திட்டி ஜோதிய கொளுத்தப் போறீங்க?
(அனைவரும் மொதல்ல என்னையத் திட்டுங்க என்று ஒரே நேரத்தில் கத்த அமளி துமளியாகின்றது. அப்போது முரளி மனோகரைப் பிடித்து விட்டேன் என்று ஒரு குரல் வருகின்றது. உடனே "தர்மயுத்தம்" என்று மறு குரல் ஒலிக்க கடமையே கண்ணாய் வலைப்பதிவாளர்கள் இன்னொருகுத்தாட்டத்தை ஆரம்பிக்கின்றார்கள். ஐடியா கொடுக்க வந்த பிரசாத் தனது கதைக்கு I-Cash கிடைக்குமா என்று ஒருவரிடம் வினவிக் கொண்டிருந்ததுதான் வேதனை.)

10 comments:

Anonymous said...

aahaa Prasadthaik kUda vidaliyaa?

Anonymous said...

;-)))))))

லக்கிலுக் said...

குசும்பன்!

உங்களுடைய பரமரசிகனான என்னைத் தவிர வேறு யாராவது இந்த ப்ளாக்கை படிக்கிறார்களா?

குசும்பன் said...

லக்கியாரே,

படிக்கிறவா உண்டுங்றது என்னோட அபிப்பிராயம்!

பின்னூட்டம் போடுவாங்றது என்னோட அபிலாஷை!

மத்தபடி நீங்க என்னோட பரமரசிகன்'ங்றதுல நேக்கு திவ்ய சந்தோஷம்!

அட நமக்கு கூட ஒன் மேன் ரசிகரா? ஆச்சர்யம் ஓய்! ;-)

முகமூடி said...

ரொம்ப நாளக்கி அப்புறம் ஒரு தமிழ் பதிவு படிச்சி வாய்விட்டு சிரிச்சேம்பா... (அதாவது நிறைய தமிழினி பதிவு படிச்சா சிரிப்பு வரும்னாலும் அது வேற டைப் சிரிப்பு).. ஞாபகம் வருதே ஞாபகம் வருதேதான்... இத படிச்சா நெறய பேருக்கு புரியாதுன்ற அளவு பழசாயிடுச்சி வலைப்பதிவு காலம்.

குசும்பன் said...

வாங்க முகமூடி,

//ஞாபகம் வருதே ஞாபகம் வருதேதான்... இத படிச்சா நெறய பேருக்கு புரியாதுன்ற அளவு பழசாயிடுச்சி வலைப்பதிவு காலம். //

அப்ப என்னைய மூத்த வலைப்பதிவர்'ன்னு சர்டிபை பண்றீங்களா? ;-)

Anonymous said...

அன்புள்ள குசும்பன்,

க்ஷேமம். க்ஷேமத்திற்கு லெட்டர் போடவும். அல்லது ப்ளாக்/பின்னூட்டம் போடவும்.

இங்கு அனைவரும் சௌக்யமாக இருக்கிறோம். அங்கு எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா.

இப்பவும் க்ருபா ப்ளாக் படித்து 15 நாட்களாகிறது. ஒயிட் பாஸ்பரஸ் விவரம் என்னவென்று புரியாததால் இந்த முறையும் ஃபெயிலாகி வீட்டிலேயே உட்கார்ந்திருக்கிறான்.

இந்த முறையும் குசும்பன் பள்ளித்தேர்வில் தேறாவிட்டால் பேசாமல் வலைப்பதிவு வேலையையே பார்க்குமாறு தந்(டங்)தை கண்டிப்பாக சொல்லிவிட்டார்.

வேறொன்றும் விசேஷமில்லை. உடம்பைப் பார்த்துக்கொள்ளவும்.

வேணும் நமஸ்காரம்,
க்ருபா

குசும்பன் said...

"சிரஞ்சீவி" கிருபாவிற்கு,

ஷே(ம)ம். அஃதே விழைகின்றேன். நேக்கு ஒரே ஒரு பரமரஸிகரதான் வேறெவரேனும் உண்டா என்று லக்கிலுக் வினவியவுடன், கலாரஸிகரே உண்டு என்று காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

கவனமாகப் படித்தால் தேர்வில் வெற்றி உறுதி என்று கூறிக் கொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

இன்னபிற விஷேஷங்கள் உண்டா?

உடம்பென்ன உடம்பு? ஆட்டோக்கள் தான் கொஞ்சம் அலர்ஜி!

அனைவரையும் விசாரித்ததாக கூறவும்.

அதே நமஸ்காரத்துடன்
குசும்பன்

குசும்பன் said...

க்ருபா,

ஸ்மைலி போட விட்டுப் போச்சி...

:-)

rv said...

//ரொம்ப நாளக்கி அப்புறம் ஒரு தமிழ் பதிவு படிச்சி வாய்விட்டு சிரிச்சேம்பா... (அதாவது நிறைய தமிழினி பதிவு படிச்சா சிரிப்பு வரும்னாலும் அது வேற டைப் சிரிப்பு).. ஞாபகம் வருதே ஞாபகம் வருதேதான்... இத படிச்சா நெறய பேருக்கு புரியாதுன்ற அளவு பழசாயிடுச்சி வலைப்பதிவு காலம்.//

அதே அதே...


பின்ன.. நாய் வேற என்ன சொல்லும்??? சரிதானே??? :)))