Friday, August 06, 2004

குழந்தைங்க சமாச்சாரம்
==========================

கடந்த அஞ்சு நாளா ஒரே பிஸி. வழக்கம் போல கோக்கும் கையுமா, டிவி முன்னாடிதான்...ஒரே ஒரு வித்தியாசம் நான் பார்த்த சேனல்களைச் சொன்னால்

நம்பமாட்டேள்... ஷொல்றேன்.

போனவாரம் குழந்தை குட்டியோட பேஷா வாழற நண்பர் கூப்பிட்டிருந்தார். ஆஹா சோறு கண்ட இடம் சொர்க்கமல்லவா? உடனே ஒட்டிக் கொண்டேன்.

தமிழ்க் குடும்பம்தான். பிரீ ஸ்கூல் செல்லும் பெரிய பிள்ளை அருகே வந்து "அமீகோ"ன்னு சொல்லி கைகுடுக்க ஆச்சரியம். கொஞ்சம் ஸ்பானிஷ் (5
வார்த்தைகளே அறிந்தாலும்) தெரியுமாதலால் குழந்தையிடம் போட்டுப் பார்த்தேன் (குசும்பன் புத்தி சும்மா இருக்குமா?).

1-10 வரை கவுண்டிங், நடைமுறைச் சொற்கள், அடிப்படைக் கேள்வி/பதில் என்று பின்னியெடுத்தான். ஆனா தமிழ் மட்டும் தட்டுத் தடுமாறி...ஏம்பான்னு என் அமீகோவை (நண்பன்) கேட்க, கிடைத்த பதில் வித்தியாசமாயிருந்தது. "பெற்றோர் கற்றுக் கொடுப்பதை விட அண்டை வீடு, தாத்தா/பாட்டி இல்லாவிட்டால் டிவி இதில்தான் ஈடுபாட்டோடு கற்றுக் கொள்கிறார்கள் குழந்தைகள். என் பையன் ஸ்பானிஷ் கற்றுக் கொண்டது டோரா - தி எக்ஸ்ப்ளோரர் (Dora - The Explorer) என்னும் குழந்தைகள் நிகழ்ச்சி பார்த்துத்தான்".

வேற என்னென்ன குழந்தைகள் நிகழ்ச்சின்னப்போ, சாமி தலையே கிர்ரடிச்சிப் போச்சி...PBS Channel (ஆர்தர், பார்னி, பெரென்டைன் பியர்ஸ், கிலிப்போர்டு,

டிராகன் டேல்ஸ், செசாமெ ஸ்டீர்ட், டெலி டப்பிஸ்...) பார்னி என்கிற டைனாசோர் மூலம் குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை சொல்லிக் குடுக்கிறாங்க.

Sesame Street லாஜிக்கான சமாச்சாரத்தை அழகா சொல்லுது.

டிஸ்கவரி ஸ்கூல், நாக்கின் (புளூஸ் குளூஸ், ஊபி, டிவீனிஸ்), கார்ட்டூன் நெட்வொர்க், நிக்டூன்ஸ், நிக்கலோடியன், டிஸ்னி சேனல், இப்படி பல சேனல்கள், ஆயிரக்கணக்கான ப்ரொகிராம்கள்...

நம்ம ஊர நெனச்சா பத்திண்டு வரலே???

No comments: