Sunday, August 15, 2004

காணாமல் போனவர் அறிவிப்பு - ஒன்று

கீழ்க்கண்டவா ரொம்ப நாளாக் காணவில்லை. கண்டுபிடிச்சா நேக்கு பின்னூட்டம் போடுங்கோ.


ஆப்பு
வயது தெரியாது. கடைசியாய் ஹாலிவுட் நகரில் "வில்லுடன்" பார்த்ததாய் செய்திகள் கசிகின்றன. கற்பிற்கு பெயர்போன கதாபாத்திரத்தின் நாயகன், ஏக பத்தினி அவதாரத்தின் பேர் கொண்டவரென்னும் நம்பப்படுகின்றது. டி.ராஜேந்தரே...மன்னிக்க விஜய ராஜேந்தரே மயங்கும் வகையில் டங்டனக்கா போட்ட இவர் 19 மே 04'லிருந்து காணவில்லை.

பாட்டில் பாலா

"மை டூம்" என்று 28 ஜூலை கடைசியாய் கடிதமெழுதிவிட்டு இவரைக் காணவில்லை. இவர் வயது 22 (கடைசியாச் சொன்னப் பொய்). கூடவே சிக்(கன்) இருக்கலாமென நம்பப்படுகின்றது. ஹட்சன் மற்றும் கூவம் நதிக்கரைகளில் தேடுதல் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

மன்மதன் (அவ்வப்போது அடிக்கடி காணாமல் போபவர்)

தனது புரட்சி(???)கரமான காதல் கவிதைகளால் காமினி மற்றும் சுடலைமாடசாமி போன்றோரைக் கவர்ந்தவர். நான்கு மாதத்தில் மூன்றே கடிதம் போட்டிரிக்கும் இவர் காதல் நெருப்பில் வீழ்ந்ததாய் சொல்வது நம்புமாறு இல்லை. கடைசியாகப் பார்த்தது 06 ஆகஸ்ட் 04.

தும்பை

தும்பை விட்டு வாலை பிடிக்கும் இந்தப் பாலா கடைசியாக "Spontaneous Emission" (தப்பா நினக்கிறீளே...அவரோட கடேசிக் கடிதமப்பா) செய்தது 20 பிப்ரவரி 04.

சேரலாதன்

இந்த சைவமின்பிள்ளை அடிக்கடி திருவிழாவில் காணாமல் போய்விடுகிறது. இணைய விக்ரம்/12 மாதிரி மாதமொரு (அட 12'ண்டால வகுத்திருக்கேன்பா) பதிவு செய்றாரு போல. அதுவும் வலைப்"போ"ங்றாமாரி சுட்டிகளாத் தரார். கடைசியா இவர் இலவச மென்பொருட்களைத் திருடுவது (download) எப்படின்னு கடுதாசி போட்டிருந்தாரு.

ஓடை

பாலம் கட்டிட்டாளா? பாபா கடேசிப் பின்னூட்டத்துல சிரிக்கிறார். துரைசாமியய்யா ரிப்போர்டிங் ஆபீஸர் வந்தாரா இல்லையா? பத்து நாள் இடைவேளை கேட்டக் கடைசிக் கடிதம் 07 ஜூன் 04.

தமிழ்க்கொங்கு

கரடி முழுத்தேனையும் குடிச்சிடுச்சா? 23 மே 04 முதல் என். (யோவ் இனிஷியல் ...) கணேசனைக் காணலைங்கோவ்

நினைவுகள்

கணேசா??? வாருமய்யா. ஜூலை 16 பாத்தது...

எண்ணங்கள்

என்னாங்க...30 மே'லேர்ந்து அம்போன்னு உட்டுட்டு போயிட்டீக...அசரீரி (யோவ் கடேசி பதிவு) சொல்லுது நீர் என் போல முகமூடிதான்...

நேர நிர்வாகம்

என்ன கடியாரம் காணாமப் போடிச்சா? போங்கடாங்கோ...

கார்த்திக்ரமாஸ்

ஏம்பா அடுத்த காண்ட்ரோவெர்சிக்காக காத்திருக்காதேப்பு. நன்னா எழுதுற. அடுத்து எழுது. 29 ஜூலைல போட்டுப்பாத்த. வா திரும்பி மோதுவம்.

தெர்மாமீட்டர்

ஏம்பா எம்மா நாள் சோதனை? பாத்து தெர்மாமீட்டர் பின்னாடி வெடிச்சிரப் போவுது??? ஹி ஹி என்னோட "நீங்கள் செய்யும் வேலை போரடிக்கிறதா?" பதிவு ஞாபகம் வந்திடுச்சி...

No comments: