Tuesday, August 03, 2004

புதிதாக வலை பதிபவர்களுக்கு

ஒரு 50 பதிவு போட்டுட்டா பெரியவனாயிட்டதா நினைப்பான்னு முணு-முணுக்காதேள். இது டெக்னிகல் விஷயமல்ல. சொ(நொ)ந்தஅனுபவ விஷயம்.

சிவப்பு விளக்கு:
=================

புதிய பதிவுன்னு ஊருக்குக் காட்ட வலைப்பூக்களின் வலைபூ பதிவுல உங்க பேருக்குத் தாண்டி சுத்தும். ப்ளாக் போட்ட ஜோரில ஆராவது நம்ப சைட்டுக்கு வரமாட்டாளான்னு மனசு அடிச்சிக்கும். கவுண்டர் போடுவேள். அப்புறம் கடைசி 24 மணி நேரம், 5 நாள் அப்படி யிப்படின்னு ட்ராக் பண்ணுவேள். ஒரு மண்ணும் நடக்கலேன்னா வெறுத்துப் போய் மத்த சிவப்பு விளக்கு பதிவுகளைப் (!@#) படிச்சுட்டு கமெண்ட்ஸ் விடுவேள். ஆனா இந்த பாயிண்டுலதான் சாக்கிரதையா இருக்கோணும்.

இப்படித்தான் உணர்ச்சி வசப்பட்டு வதனா அப்படிங்கறவங்க ப்ளாக்குல, "மிக நல்லா எழுதிறீங்க. வாழ்த்துக்கள். வலைப்பூவிற்கு வருக!", அப்படின்னு போடலாம்னு பார்த்தேன். நல்லவேளை, இதே பேர்ல இன்னொரு ப்ளாக் பாத்தா மாரி இருந்துச்சு. எட்டிப் பார்த்தா ஏழு பூக்கள். மவனே குசும்பன் கதை நாறியிருந்திருக்கும். இப்படித்தான் இன்னும் நிறைய பேர்: மீனாக்ஸ், சந்திரமதி, ரமணீதரன்,....கமெண்ட் போடறச்சே பாத்துப் போடுங்கோ... இவாள்ளாம் இணையத்துல பழம் தின்னு கொட்டையும் ஜீரணம் பண்ணவா...

முகமூடித் தொல்லை:
======================

அப்புறம் பின்னூட்டத்துல முகமூடித் தாக்குதலோ/தொல்லையோ (பாவி இதை நானா சொல்றது???) இருந்தா கவனமா பாருங்க. என்னை மாதிரி சில்லுவண்டுகளை விட்டுடுங்க. ஆனா வெயிட்டான ஐட்டங்கள் முகமூடி பேருல வந்தா அது எங்களுக்கு ஒரு அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்த பெயரிலி ஐயாவா இருக்கலாம். அவர் வந்தார்னா ஏதோ விசயம் இருக்கும். எப்படி வருவாரு, எந்த பேருல வருவாருன்னு அவருக்கே சில சமயம் தெரியாது. அதுனால சாக்கிரதையா முகமூடிகளுக்கு பதில் போடுங்க. யாரு கண்டா உங்க பக்கத்துல இருந்துகிட்டே முகமூடி தாக்குதல் நடக்கலாம்...

டெஸ்க்ரிப்ஷன்:
================

இங்கே சுட்டுங்கோ...

சுட்டிகள்:
==========

அதிதீவிரமா தேவைப்பட்டாலொழிய சுட்டிகள் கொடுக்காதீங்கோ. சுட்டிகள் வேண்டுவோருக்கென்று ஒரு வலைபோ (ஆமாம் அங்கே போனாலே போ'வெனத் துரத்திடுவாரு லின்க் போட்டு) இருக்கிறது. இங்கே சுட்டுங்கோ...

இரவல் சமாச்சாரங்கள்:
========================

இணையத்தில் பார்த்ததை, படித்ததை தமிழிலேயே கொடுங்கோ. பன்மொழி வித்தகனாக நீங்களிருக்கலாம். படிப்பவரை சோதிக்கவேண்டாம். ஆப்படிக்கிறாங்கோ !!!

வலைப்பூ சுட்டிகள்:
====================

நிறைய, நன்னா எழுதவா இருக்காங்கோ. அவா சுட்டிகளைக் கொடுங்கோ உங்க ப்ளாக்குல. தப்பித் தவறி உங்க ப்ளாக் பாத்தவாக்கு ஒரு நல்ல விஷயமாவது வேண்டாமா?

மேலே சொன்னதெல்லாம் சொந்த அனுபவம்தாம். மத்தபடி ப்ளாக்'ங்றது உங்க இடம். பூந்து வெள்ளாடுங்கோ !!!

3 comments:

அன்பு said...

குசும்பரே... ஒங்களோட பதிவ படிச்சுட்டுருக்கும்போதே ஒரு சந்தேகம் - பின்னாள குசும்பர் நிக்கிற மாதிரி ஒரு உணர்வு. அப்புறம், சுற்றும், முற்றும் வெப்கேம் ஏதும் இருக்குதான்னு பார்த்தேன். அப்புறம் ஒரு நம்பிக்கை, ஒருவேளை எல்லாருமே நம்பள மாதிரி Go Statisticsஐ ஆராய்ச்சி பண்ணுவாங்க போலன்னு மனச தேத்துண்டேன்...
நல்ல பயனுள்ள பதிவு, என்னை மாதிரி ஆளுகளுக்கு.

குசும்பன் said...

எல்லாம் சரி அன்பர்வாள்,

மின்னஞ்சல், வீட்டு முகவரி மறைச்சிட்டேளே??? இப்போ நான் சுற்றும், முற்றும்,...

குசும்பன்.

அன்பு said...

மன்னிக்கவும், ஏதோ நினைவில் enable செய்ய மறந்துவிட்டேன்...(எதாவது சொல்லவேண்டியதுதான்!) இப்போ நீங்க சொல்லுங்க...