Sunday, August 15, 2004

அமரிக்க "அங்கிள்கள்" (தொடர்ச்சி)

நம்ம பிரண்டு பெரிய ஐஸ்பாக்கெட்டை கண்ணைச் சுத்தி பொத்திக்கிட்டிருந்தார். தள்ளி விட்டுப் பார்த்தா சும்மா பாட்டில் சரக்க உட்டா மாதிரி கண்ணு ஜிவுஜிவுன்னு வரமொளகா கலருல. சுத்தி ஆரியோல் மாதிரி கரும் வளையம். தண்ணிலேர்ந்து தூக்கிப் போட்ட மீன் மாரி உடம்பு துடிச்சிக்கிட்டே (தூக்கிவாரி) போட்டிக்கினு இருந்துச்சி.

நம்ப மெக்ஸிகன் போலீஸ் வயக்கமான விசாரணை நடத்த, வெள்ளக்காரன் வித்தியாஸன் காட்னான். இதே ஆக்ஸிடெண்ட் ஆனப்புறம் இன்னொரு வெள்ளைக்காரர் (கவனிக்க: மரியாதை) விசிட்டிங் கார்டு கொடுத்து. "யப்பா அவசரமா போறேன். அந்த பொம்பளை மேலதான் தப்பு. போலீஸ் வந்தா என்னைக் கூப்பிடு. சாட்சி சொல்றேன்னு" போயிட்டார்.

வெள்ளைப் போலீஸ¤, குதிரை மாதிரி நின்ன பொம்பளைகிட்ட பத்து தடவையாவது "ஏம்மா நன்னாயிருக்கியா? ஏதாவது வேண்டுமா?" அப்பிடினு கெக்கே பிக்கே பேச, நம்ம தலீவரை கண்டுக்கவே இல்ல. ஏம்பா சட்சி கிட்ட பேசுன்னப்ப வேண்டா வெறுப்பா நம்பரை வாங்கி, அந்தப்பக்கம் பிஸின்னு சொல்ல எனக்கு டாப் எகிறியது. என்னோட செல்லில் நம்பரைப் போட்டு, சாட்சிக்காரரை மெக்ஸிகன் போலீஸோடு பேச வச்சேன்.

இடிச்சம்மாவோட சாட்சி யாரு தெரியுமா? பக்கத்திலே உட்கார்ந்திருந்த இன்னொரு அம்மா. இதென்ன நியாயம்? படமெல்லாம் போட்டிக்கினு, ரிவ்யூ கமிட்டி 2 வாரத்துல தீர்ப்பளிக்கும். சாட்சிகள் (?) கோக்கு மாக்கா (?) இருக்கறதால நான் யாருக்கும் டிக்கெட் தரல'ன்னு பெருந்தன்மையா சொல்லி போலீஸ் ஜீட் விட்டுச்சி.

2 வாரங்கழிச்சி இப்போதான் தீர்ப்பு வந்துச்சி. "Failed to yield Left Turn". அதாகப்பட்டது பிரண்டு பொண்ணோட காருக்கு வழி தரலையாம். பாவிங்களா...ரெட் லைட் ஜம்ப் பண்ணும் போது வழியெப்படிடா கொடுக்றது?

வக்கீல்ண்ட கேட்டா லெப்ட் டர்ன் கேஸ்ல எப்பவுமே இப்படித்தான். கோர்ட்டுக்குப் போனா ரெண்டு பேருக்கும் டிக்கெட் தருவா. தேவையா?

காரு போச்சி. கண்ணு நொள்ளைக் கண்ணாகயிருந்து தப்பிச்சுது. போலீஸ் புத்தி பயமாயிருக்கு.

வேற யாருக்கோ நடந்திருந்தா, "Stray Incident" அப்படின்னு விட்டுடலாம். ஆனா நானே பார்த்ததாலே லேசா "புட்டுக்கிச்சி".

அமெரிக்க அன்பர்களே...ஜாக்கிரதையாயிருங்கோ...

2 comments:

Boston Bala said...

நண்பர் தற்போது நலம்தானே?

எனக்கும் இது போன்று ஒரு சம்பவம் நடந்தது. இரண்டு வித்தியாசங்கள்:

1. நான் நேரே சென்று கொண்டிருந்தேன்; இடப்பக்கம் திரும்பியவர், என்னுடைய காரில் இடித்தார்.

2. போலீஸ் வந்தது. நாங்கள் வாய் திறப்பத்ற்கு முன்பே, இரு காரின் நிலையையும் கண்ணால் பார்த்துவிட்டு, 'அவன் மேல்தான் குற்றம்' என்று டிக்கெட் கொடுத்து, என்னை அனுப்பிவைத்து விட்டார்கள்.

இந்த ஊர் 'மாமா'க்களுக்கு சில டெக்ஸ்ட்புக் கோட்பாடுகள் இருக்கிறது. அதை வைத்து யார் குற்றமற்றவர்கள், யார் விபத்திற்கு காரணம் என்று முடிவு 'கட்டி' விடுகிறார்கள்.

'டிஃபன்ஸிவ் ட்ரைவிங்' செய்வது நன்மை பயக்கும் :-)

குசும்பன் said...

பாலா,

கிழியவிருந்த ரெட்டீனா க்லோஸா தப்பிச்சது. இப்போ ஆளு ஓK. ஆனா லெப்ட் எடுக்கவே அலற்ராங்க...ரெட் லைட் "ஜம்ப்"லிங்கங்களிடம் என்ன டிபன்ஸிவ் டிரைவிங் போங்கோ...கலி முத்திடுத்து...

குசும்பன்.