Saturday, October 09, 2004

விரதம் முடிந்தது

அப்பப்பா...நேக்கு ஒரே களைப்பா இருக்கு. பாராவும், ஐகாரஸ் பிரகாஷ¤ம் வலைப்பூவில் மீண்டும் எழுத ஆரம்பிக்கும் வரை நானும் எழுதுவதில்லை என்று (அட சும்மானாசுக்கும் தாங்க!!!)

நம்ம ஞானதேவன் சார் சென்னைக்குப் போன சம்பவம் படிச்சவுடனே பயம் வந்துடுச்சு பாசு. எங்கே நமக்கும் ஆபீஸ¤லேர்ந்து ஆப்பு அடிச்சுடுவாளோன்னு... அதான் கொஞ்ச நாளு 'மறைந்திருந்து பார்க்கும்' மனிதாயிருந்தேன்.

இன்னொரு சுவாரசியமான விசயம். கவிதை ஒண்ணு எழுதினேன் பாசு. நம்ம பரி கடியாயுட்டு 'குசும்பு மட்டும் செய்தல் நலம்' அப்படின்னு செப்டம்பர் 13 சொல்லிட்டுப் போயிட்டாரு.

ஆனா அதே பரி பேர்ல இன்னோரு பின்னூட்டம். அக்டோபர் எட்டுல 'குசு விடாமல் இருத்தல் நலம்' அப்படின்னு சொல்றா.

பின்னூட்ட அறையில 'குசு' விடுமளவுக்கு நாகரிகம் தெரியாதவரில்லை பரி'ன்னு நம்பறேன். தொடக்கத்திலேர்ந்து ஊக்கப்படுத்திண்டு வந்த்தவா உண்மையிலேயே விட்ட பின்னூட்டமா (குசுவா) இது?

நாஞ்சில் நாடன் சார் சொல்வது போல் 'பீ', 'மூத்திரம்' அப்படின்னு எழுத விரும்புற யாரோ ஒரு 'இலக்கியவாதி' தான் பின்னூட்டம் கொடுத்திருக்கணும். அது கண்டிப்பா பரியா இருக்காதுண்ணு வேண்டிக்கறேன்.

அப்புறம் ஹேலோஸ்கேன கொஞ்சம் கிண்டிப் பாத்தேன். முதல் பரி கமெண்டு வந்த IP Address: 66.26.48.41 Raleigh North Carolina
ரெண்டாவதா வந்தது 65.69.81.2 St.Louis Missouri

ஹாலோஸ்கேன் பின்னூட்டத்தில் விரும்பும் பெயர், மின்னஞ்சல் முகவரி, இணையதள முகவரி தர முடியும். அதைப் பயன்படித்திட்டாளா? இல்லை பரியே அமெரிக்க ஜனாதிபதி விவாதம் பார்க்கப் போயி கடியாயி பின்னூட்டம் விட்டாரா?

அட தேவுடா!!! ரொம்ப நாளு கழிச்சு நல்லதா குசும்பு பண்ணாலாம்னா 'குசு' பத்தி எழுத வைச்சுட்டாளே???

தெகிரியமா உம்மையா மன்ஸ¤ல மாஞ்சாவோட வா பாசு... யாருன்னாலும்... கலக்கிப்புடுவோம்...

2 comments:

பரி (Pari) said...

கொஞ்ச நாளா தமிழ்மணத்துல 'தலைப்பு' பாத்துட்டு ஓடிடறது(வேலை தான், வேறென்ன.)
சிரிக்க எதுவுமே கெடைக்கலியே, குசும்பனாவது எதாவது பண்ணிருப்பாரான்னு இன்னிக்கு தமிழ்மணத்துல பாத்ததும் ஒரு எட்டு எட்டிப் பாத்தேன். என் தலை உருளும் நேரம் போல இருக்கு.

>>
அப்புறம் ஹேலோஸ்கேன கொஞ்சம் கிண்டிப் பாத்தேன். முதல் பரி கமெண்டு வந்த IP Address: 66.26.48.41 Raleigh North Carolina
ரெண்டாவதா வந்தது 65.69.81.2 St.Louis Missouri
>>
நீங்க சொன்ன வரிசை தப்பு. 65.69.81.2 என்னோடது.

65.69.81.2 தவிர வீட்லேர்ந்து வர்ற IPயும் Missouri ன்னுதான் காட்டும்(இதுக்காகவே, இப்போ Halsoscanல ஒரு கமெண்ட் போட்டு வைக்கிறேன்.) City பேரு வேற காட்டும்(லோக்கல் சிட்டி).

வேற எங்கெல்லாம் 'உருளைக் கிழங்கு' வேலை நடந்திருக்கோ தெரியலை.

என்னோட மூஞ்சியும் ஒரு மூஞ்சின்னு மரியாதை குடுத்து தன் மூஞ்சியில ஒட்டிக்கிட்ட அந்த மகான் ரொம்ப நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு நான் ஜூட் வுட்டுக்கிறேன்.

குசும்பன் said...

பரி,

விளக்கத்திற்கு நன்றி. ஆமாம் IP அட்ரஸ் மாத்தி தந்துட்டன். மற்றபடி நான் நினச்சது போலத்தான் நடந்திருக்கு.

ராலேயில் வசிக்கும் கனவானின் தெரியத்தை பாராடுகின்றேன். மூஞ்சி காமிக்க பிரியப்படலேன்னா பரவாயில்ல. முகமூடி போட்டுக்கங்க பாசு. வீணா அடுத்தவா பேரை அசிங்கப்படுத்தாதேள். குசும்பனின் தாழ்மையான வேண்டுகோள்.

குசும்பன்.