Wednesday, December 15, 2004

காரு வாங்கலியோ காரு

நம்ப நேரம் பாருங்கோ கண்ணுல இப்படிப்பட்ட செய்தி/விளம்பரந்தான் விழுந்து தொலைக்கிறது. இப்பெல்லாம் அமெரிக்கா விமானத்துல கொரிக்க கடலையும், ஒரு மிடக்கு சோடாவையும் கூட நிறுத்திட்டா. நம்ம ஊரு சகாரா பிளேனு ஞாபகம் வருது. அடடா என்ன உபசரிப்பு.

டெல்டா விமான கம்பெனி டல்லாஸ் இல்லேன்னா இன்னோரு பெரிய இடத்தை மூடறதாம். அதாவது 7,000 பேருக்கு வேலைலேர்ந்து ஆப்பு. இப்படி வெண்ணிற ஆடை நிர்மலா மாதிரி 'மஞ்சக் கடுதாசு' கொடுக்கிற டெல்டா நிலைமைதான் மத்தவாக்கும்.

அப்பத்தான் இந்த செய்தி முடிஞ்சி விளம்பரம் வந்திச்சு. "எங்க ஷோ ரூமுக்கு வாங்க. கோர்மே காப்பி மற்றும் Small Snak (ஙொப்ரான கடலை அல்லது மல்லாக் கொட்டைப்பா) தரோம்". அது டயோடா ஷோ ரூம். காரு பேரு லெக்ஸஸ் LX I 2005. விலை சுமார் முப்பது லட்ச ரூபாய்க்கு மேல்.

C:\Documents and Settings\Sam\Desktop\Blog\Kusumban\lexus

ஒரு காப்பி, கடலை பாக்கெட் விலை உமக்குத்தான் தெரியுமே?

அட ஈஸ்வரா...இந்த மார்க்கெட்டிங் பேரு என்னாப்பா?

1 comment:

துளசி கோபால் said...

குசும்பரே,
உங்க 'டெல்டா' விமான சர்வீஸ் கொஞ்சம் பேஜார்தான். ஒருதடவை, நாங்க L.A.லே இருந்து NY
போறப்ப வெஜிடேரியன் சாப்பாடு கேட்டு வச்சிருந்ததுக்கு, ஒண்ணு கொடுத்தாங்களே. பதினைஞ்சு மணி யாத்திரை செஞ்சு, L.A.லே
ட்ரான்ஸிட்லே 5 மணி காத்திருந்து நியூயார்க் போறதுக்குள்ளே பாதி உயிர் போயிருச்சு!

நீங்க சொல்ற மல்லாக் கொட்டைதான் உயிரை அப்பத் தக்க வைச்சது!

என்றும் அன்புடன்,
துளசி.