ஆங்கிலம் வளர்ப்பது எப்படி?
என்ன இழவுடா இது? ஆச்சரியப்படுபவர்கள் தொடர்ந்து படிக்கவும்...
1. ஆங்கிலம் இங்லீஷ்காரன் கண்டுபுடிச்சதுன்னு ஷொல்லுங்கோ. மேல் நாட்டு மோகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஆங்கிலம் மணக்கும்.
2. அப்புறம் தொண்டரடிப்பொடியான், காக்கைப்பாடினியார் அப்படின்னு நச்சுன்னு புனைபெயர்லே, தப்பும் தவறுமா ஆங்கிலக் கட்டுரை போடுங்கோ. ஆங்கிலம் நச்சுன்னு வளரும்.
3. செம்மொழியில எவனாவது கட்டுரை போட்டா, சட்டையை உருவி அவன் நடுமுதுகை எப்படி சொரியிறான், கால்ல சப்பாத்து போட்டிருக்கானா என்று புலம்/குலத்தையே குடைஞ்சு வெள்ளாடுங்க. ஆங்கிலம் தகதகன்னு வளரும்.
4. ஆங்கிலத்துல இலக்கியம் படிக்கச் சொல்ல ஆளில்ல, ஆங்கிலத்துல படிச்சா கம்ப்யூட்டர்/டாலருன்னு அள்ளலாம், போன்ற சரித்திர உண்மைகளை புட்டு புட்டு வைங்கோ. சும்மா சூடு வெச்ச ஆட்டோ மீட்டர் மாதிரி ஆங்கிலம் ஜிவ்வுன்னு வளரும்.
5. இங்லீஷ் புலமை வேணுமின்னா ஷேக்ஸ்பியர் படிப்பா, கம்யூட்டருக்கும் ஆங்கிலப் புலமைக்கும் என்னா சம்பந்தம்? ஜாவா படிக்க இங்லீஷ் புலம என்னாத்துக்கு? அப்படின்னு எவனாவது நக்கலடிச்சா, அவனை உட்டுடு. ஏன்னா அதைக் கேக்கறது நாந்தான். குசும்பிடுவேன்.
ஆங்கிலம் தான் ஜோரா வளருதே? அப்புறமெதுக்கு குசும்புங்கிறீங்களா? அவா அவா ஏதோ தமிழ் தர்மாஸ்பத்திரியில் ஐசியு'ல அவஸ்தைப் படறா மாதிரி எழுதுறாளே?
இந்த மாதிரி கட்டுரை எழுதி தமிழை கருணைக்கொலை சேய்யாதீர்கள். கரம் சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்(ல்)கிறேன்.
Friday, August 06, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அந்தக கட்டுறய ஏன் டமில்ல எலுதினார்னு தெர்லயே!
Post a Comment