Monday, August 23, 2004

VIP வலைவலம் - 1

எதிர் பார்த்தேன். இப்படி ஏடாகூடமாக ஏதாவது செய்வார்கள் என்று. ரொம்ப நாளாச்சே அப்படின்னு chat பண்ணப் போனா விநோதமான புனைப் பெயரில் ஒரு உருவம் 'அரட்டை அழைப்பு' விட்டிருந்தது. என்னையும் நண்பனாய் ஏற்பாயாவெனெ. இதே 'குசும்பி' என்றால் உடனே ஏற்றுக் கொண்டிருப்பேன். ஏய் யவ்னிகா ஏன் பல்லைக் கடிக்கின்றாய்? 'குசும்பன்' என்றதும், யோசித்துதான் 'yes' என்றேன்.

உடனே அரட்டைக்கு ஆள் வந்தாயிற்று. சும்மா சொல்லக்கூடாது. குசும்பு பரவாயில்லை. net'ல தமிழ் பிளாக்ஸ் இருக்கிறதா சொன்னவுடன் ஒரு சிறிய ஆச்சரியம். அதுவும் நூற்றுக்கு மேற்பட்டவர் தொடர்ந்து எழுதுகிறார்கள் என்பது வியப்பின் உச்சம்.

குசும்பனோ உடனே 'விமர்சனம் செய்யுங்கள்' என்றவுடன் யோசனையாயிருந்தது. Crete'டிலிருந்து வந்தவுடன் எழுதுகிறேனென்றேன். மனிதன் விடவேயில்லை. சரி ஒழிந்து போகட்டுமென்று செய்வதாய் சொல்லித் தப்பித்தேன். ஒன்றிரண்டு விமர்சனத்துடன் தப்புவதாய் சித்தம். எதிர்(ரி)வினைகள் மற்றும் பின்னூட்டத்தில் எனக்கு எப்போதுமே அச்சமுண்டு அச்சமுண்டு அச்சமான அச்சமுண்டு.

குசும்பன் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெயர் ஊர் மறைத்து என் வலத்தைத் தொடங்குகின்றேன்.

========================================================
இவருடைய பழைய குப்பையைக் கிளறிப் பார்த்தால் ஏகப்பட்ட மாணிக்கங்கள். இப்போது ஏனோ வேகம் குறைந்துவிட்டது. நேப்பிள்ஸில் இருக்கும் நண்பர் முருகனிடம் சொல்லி ஒரு போத்தல் ஒயின் அனுப்பச் சொல்ல வேண்டும். கிரிக்கெட் குரு சொன்னபடி எழுத்துப் பிழையை குறைக்கச் சொல்ல வேண்டும். அலெக்ஸ் பாயில் கூட ஆரம்பத்தில் பிழையோடுதான் எழுதுவார். பின்னர் திருத்திக் கொள்ளவில்லையா?

கவிப்பேரரசின் கவிதையை கைமா செய்து காட்டிய கைவரிசையைப் படித்தவுடன் 'வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வாக்கு ஞாபகத்துக்கு வந்தது.

New Roman Empire என்பார்கள். There is nothing new and nothing Roman in it. ஆனால் எழுத்து ஜிகிடியால் சிரிக்க வைத்து, செய்தியாய் மாறிப் போய்விட்டது பேப்லோவுக்கும் பொறுக்காது. இவரது சேகரிப்புகளைப் (பேப்லோவின்) பார்த்துவிட்டு ஒரு நண்பர் குறிப்பிட்டது: 'இந்த உலகிலேயே இவ்வளவு அதிகமான குப்பைகளை ஒரே கூரையின் கீழ் பார்ப்பது இதுவே எனக்கு முதல் முறை!'

பி.கு. VIP யார்? (ஐய்யா VIP நடைய காப்பியடிச்சு நாந்தான் எழுதினேன்) அப்புறம் விமர்சனம் செய்யப்பட்ட வலைப்பூ யாது?

1 comment:

பரி (Pari) said...

என்ன ஓய்,
கொஞ்ச நாளைக்கு முன்னாடி கருத்து மோதல் செஞ்சீரே, அந்தம்மணிக்கு கண்ணாலமாமே, வாழ்த்து சொன்னீரா?
(இந்தக் குசும்பு எந்த வகை? :-) )