தமிளு தமிளுன்னு மக்கள் கூவிக்கினு இர்க்காங்கோ. சினிமா டைடிலு, ஷாப்புக்கடை போர்டு'ன்னு தமிளகமே திமிலோகப்படுது. டாக்டர் ஐய்யாவும், சமீபத்து உடன்பிறவா சகோதரன் திருமாவும் கூத்துக்கட்டி அடிக்றாங்கோ.
செம்மோழி சகோதரர்களே! சமீபத்துல வந்த விகடன் படிச்சேளா? சும்மா சூப்பரா தமிழ் வளர்க்கறா...டைடில்ஸ் மட்டும் படிங்கோ...சும்மா சுகுற்ரா தமிளு வளருது...
கார்ட்டூன்
க்ளிக்ஸ்
இந்தியாவின் இளமை ராக்கெட்
ஸ்பாட்லைட்
ஐ லவ் யு விகடன்
லவ் பண்ணுடா மவனே
லவ்வோகிராபி
ஐ லவ் ராம்போ
லவ்வர் பாய்
ஜோக்ஸ்
பிட்ஸ் (யோவ் பிட்டுப் படம் இல்லையா)
காமெடி கிளப்
புது டிரஸ் புது டிப்ஸ்
குட்டி விஐபி
பலகாரம் உங்கள் சாய்ஸ்
கிச்சன் ஷோ
ஹாய் மதன்
உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ்
விகடன் புக் கிளப்
இதுல என்னமோ குமுதம் பத்திரிக்கை ஒரு சோமாறி...குங்குமம் ஒரு முடிச்சுமாறி (நன்றி சு.ரா.) அப்படின்னு குய்யோ முறையோ'ன்னு கத்தல். பாய்ஸ் படத்துக்கு 'சீய்'னு விமர்சனம் போட்டா சரியாயிடுமா? ஜூனியர் விகடன் போட்டோவெல்லாம் சும்மா கும்முன்னு தூக்கல? சிட்டுக்குருவி லேகிய வைத்தியர் விளம்பரம் வரல?
தமிளு பத்திரிக்கை, குடும்ப பத்திரிக்கை அப்படின்னு டகால் பாஜி வேலெ வேணாம்லே... சர்க்குலேஷன் தான் முக்கியம். எல்லோரும் அதைத்தான் பண்றாங்கோ..
அருமையான பத்திரிக்கையா விகடன்... வாசன் ஸாரோட வாசனை மங்கிப்போச்சி...
அட காலி பெருங்காய டப்பாதான். ஆனா வாசனையும் (டபுள் மீனிங்) தொலை(ச்)ஞ்சிப்போச்சே...
கஸ்டமா கீதுபா...
:-(
Tuesday, November 09, 2004
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அப்டியே சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி.... இதுங்களோட 'புரோகிராம்' பேர் எல்லாத்தையும் போட்டா சும்மா இன்னும் தூக்கலா இருக்கும்.
This program was sponsored by-ன்னு சொல்வாளே, அப்புறம் To advertise in this program, please contact-ன்னு சொல்வா.
'இந்த நிகழ்ச்சிக்குப் பிரதான அனுசரணை வழங்கியவர்கள்'-ன்னு இலங்கைலயும், 'இந்த நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள்'-ன்னு(சரியா ஞாபகம் இல்ல) சிங்கப்பூர்லயும் சொல்றா. எனக்கு இது என்ன மொழின்னு புரியவே இல்லே போங்கோ!
ஹாப்பி விகடன், லேடீஸ் விகடன், சில்ட்ரன்ஸ் விகடன், காட்(God) விகடன்-ன்னு - டைட்டில்ஸ் மாத்திடலாமா?
சரியாச் சொன்னேள் போங்கோ.
இந்த டிவி கருமத்தை லீவில மட்டும் கட்டியழறேன். வெங்கட் நச்சுன்னு 'மேனுவல்ஸ்' அதாம்பா மின்னணு கருவிகளின் கையேடுகள் ஏன் பிராந்திய மொழியில இல்லேன்னு கேட்டுருக்கார். சரியான கேள்விதான்.
தமிழ் விஷயத்துல இலங்கை, சிங்கப்பூரார் கிட்ட நிறைய கத்துக்கிடனும் பாசு!
அதே விகடனில்தான் இலக்கியம் என்றொரு பகுதி உள்ளது. அதில் அசோகமித்திரனின் கட்டுரையும் வாலியின் கிருஷ்ண விஜயம் கவிதைகளும் வெளிவருகின்றன. தன் "கலைப் பயணத்தில்" மஞ்சள் துண்டு தமிழ்க் காவலர் "மண்ணாய்ப் போன பணத்தைப்" பற்றி எழுதியிருக்கிறார்.
வேண்டும் நடு நிலை குசும்பிலும்!
கோணியதைச் சொல்லும் போதுதான் குசும்பு வரும் என நினைக்கிறேன், என்ன சொல்றீங்க இணைய குசும்பரே!!!
SK அண்ணா,
பாருங்க விகடன்ல 'தமிழ' தேடவேண்டியிருக்கு. அதுதான் கஷ்டமா கீதண்ணே!!!
பாயிண்டைப் பிடிச்சேள் ஜான்!!!
கோணியதைத் சொன்னால் குசும்பு கொஞ்சம் எகிறும்ல?
;0
Post a Comment