Tuesday, May 31, 2005

கழு(த்)தை அறுக்கும் கவிமாலைகள்

நாட்டிலொரு கவித்திருவிழா
காட்டுவாசிகளாய்ப் போன கவிஞர்களின் 'கக்கும்' திறனையும்
போனால்போகிறதென அங்கீகரிக்கின்றன நாட்டு (அ)சிங்கங்கள்
கவிஞர்கள் கூடி 'கக்கி'க் கொல்கின்றார்கள்
புதிதாய் எழுதிய கவியைப்பின்னிச் செய்த மாலையைச் சுழற்றி
அங்கீகார அரிப்பெடுக்கும் தினவு'வெடுத்த தோள்களில்
சாரைப்பாம்புகளாய் இறங்குகிறது (அ)சிங்கம்
மேடையில் நின்றபடி

சென்னை டவுன்பஸ்ஸின் ஜீன்ஸ் சரசரப்புகளையும்
கலங்கரைகோபுர உச்சியிலிருந்து சேரிக்கட்டிலின் சமரசத்தையும்
நாரி'களின் கறுத்த'லியலையும் தொடர்ந்த மீள்பார்வைகள்
கழற்றாத கவிமாலை கழுத்தில் கதற
அறுத்துக் கிழித்து அலங்காரம் கலைய
(அ)சிங்கம் சுழற்றுகிறது

சட்டையிலிருந்து பிரிந்த பொத்தான்
ஓரங்களில் தேய்ந்துபோய் உருண்டு வீழ்கிறது தன்னைத்தானே
நொந்துகொண்டும் வெந்துகொண்டும்
உருண்டு ஓடும் பொத்தான்களைநோக்கி
செல்கின்றன தைய'லூசிகள்
வேறுநாதியற்ற நாதாரிகள் போல்
உபயோகமற்ற இக் கவிதைகள்மூலம்
தன் இயலாமையைக் காட்டமுயலும்
இந்த அசட்டு முயற்சிபோல்

குசும்பு வலைவழித் தெறிக்கிறது
விளைவுபாரா'மல் விடப்பட்ட பின்னூட்டம் போல்

-- சி(ந)க்கல் சிங்கம்

பின்குறிப்பு: என்னைப் பார் ;-) சிரி :-))

1 comment:

Anonymous said...

Nanna irukku.