Thursday, April 20, 2006

பயணக்கட்டுரை for Dummies

அட என்னாபா அல்லாரும் பயணக்கட்டுரைன்னு பிலிமு காட்றானுங்கோ... நம்மாள ஒண்ணுமே கீச முடியலியேன்னு வருத்தமா கீறியா நைனா/நைனி... இந்தா இன்னையோட கவலைய உடுங்றேன். குசும்பன் தரான் இன்ஸ்டண்ட் பாயிண்ட்ஸ். கபால்னு புடி. கஸ்மாலம் கட் & பேஸ்ட் பண்ணிடாத. கட்டுரை கும்முன்னு வந்தா ஒரு டேங்ஸ் வரி கீசிப் போடு. சும்மா சுத்தி வளைக்காம சுகுற்றா மேட்டருக்கு வரேன்... ஆகே படோ (ஹிஹி டில்லி தமிழ்ல்ல மேல படிங்க/போங்க'ன்னு சொன்னேன்)

1. பயணக் கட்டுரை என்றவுடன் அண்டார்ட்டிக், ஆர்ட்டிக் போன்ற துருவங்களுக்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. தேனாம்பேட்டை சிக்னலிலிருந்து, பாண்டி பஜார் சென்றதைக் கூட விலாவாரியாக எழுதினால் அதுவும் பயணக் கட்டுரை வகைகளிலேயே அடங்கும் என்று அறிக.

2. சும்மா பல்லவன் பஸ் ஏறினேன். ரிக்கெட் எடுத்தேன். ஷ்டாப் வந்ததும் இறங்கினேன் என்றால் ஒருவரும் சீந்த மாட்டார்கள். ஒரு சிறு சம்பவத்தையாவது சுவையோடு கோர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக நீங்கள் பாண்டி பஜாரில் பேஜாரான நாதன் கபேயில் டீ குடித்தீர்கள் என்று கொள்வோம். "சீனி சேர்க்காமல் சாருக்கு டீ ஒன்று", என்று உரிமையாளர், (சர்க்கரை வியாதியுள்ள) உங்களைக் கண்டவுடன் உணர்ச்சி பொங்க மாஸ்டரிடம் கூறினார். உடனே அதைப் பற்றி முன்னுரை, விளக்கவுரை, பதவுரை, முடிவுரை என்ற ரேஞ்சுக்கு "நாதனண்ட சாயா" என்ற ரேஞ்சில் டீ அடிக்கத் தெரிந்தால் உத்தமம்.

3. பயணக்கட்டுரை எழுதுபவர்க்கு 3CCD TRV Sony 950 கேம்கார்டர் இல்லாவிட்டாலும், காமெரா பொறுத்தப்பட்ட மோட்டாலுல்லாவோ(?!*), நோக்கியாவோ குறைந்தபட்சத் தேவை. ஆத்திர அவசரத்துக்கு செல்பேசி காமெரா போல துணைவன் கிடையாது. கன்னாபின்னா படமெடுத்து கம்பியெண்ண நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல. யார் கண்டது நீங்கள் போகும் போது பிரிட்டினி ஸ்பியர்ஸ் போல ஹாலிவுட் கட்டைகள் கோயிலுக்கு வந்தால் செல்-போனாலாவது போட்டோ சுட்டு நீங்கள் இணையத்தில் போட்டால் ஹிஹிஹி நீங்கதான் அல்டிமேட் பயணக் கட்டுரையாளர்.

4. சரித்திரம் பற்றி எழுதினால்தால் நீங்கள் பயணக்கட்டுரை வடிப்பவர் என்பது ஆதிகாலத்துச் சம்பவம். சரி அப்படியே ஆகட்டும். வேறொரு நாட்டில் கண்ணாத்தாள் கோயிலைப் பார்க்கின்றீர்கள். உடனே எடுங்கள் செல்போனை. எதுக்கு யாரிடமாவது கோயில் பற்றி விளக்கம் கேட்கவா என்றால் நீங்கள் உருப்படவே வழியில்லை. உடனே போனின் கேமராவைக் கிளிக்குங்கள். "கலவர நாட்டில் கண்ணாத்தாள் கோயில்" என்று நீங்கள் பிலிம் காட்டினால் ஏதோ ஒரு பெரிய ரேஞ்சுக்குப் போகின்றீர்களென்று அர்த்தம்.

5. வலைபதிவுகளில் பயணக்கட்டுரையாளராக முக்கியத் தேவை "உசுப்பிவிடும் பின்னூட்டங்கள்". அடப்பாவி பண்டைக்காலத் தமிழன் கால்வைச்சு நூற்றாண்டுகளுக்கு மேலான நாட்டுல கண்ணாத்தாள் கோயில் கண்டிப்பா இருக்கும்யா என்று ஏதாவது அநானி அநாவசியமாய் ஊளையிடலாம். கண்டு கொள்ளாதீர்கள். "ஐய்யா எனக்கு வரலாறு ரொம்பப் பிடிக்கும்ங்க. உங்க பதிவுல நான் நிறையக் கத்துக்கிட்டேன். இனிமே நீங்க எங்க போனாலும் செல்லும், கையுமாவே போங்க", போன்ற ரேஞ்சில் பின்னூட்டங்கள் வந்தால் நீங்கள் பயணக் கட்டுரை ஜாம்பவானாகி வருகின்றீர்கள் என்று அர்த்தம்.

6. சமீபத்தில் முப்பது வருடம் கழித்து வெளிநாட்டிலிருந்து இந்தியா வருகின்றீர்களா? கொடுங்கள் கையை. ராஜயோகம் உங்களுக்கு. சும்மா டிவி சீரியல் ரேஞ்சுக்கு கொறைஞ்சது 120 எபிஸோடுகள் போட்டுத் தாக்கிடலாம். குறிப்பா முப்பது வருஷத்துக்கு முன்னாடி பார்த்த "எங்கே போச்சு என் வேப்பமரம்?" என்று செண்டிமெண்ட் பதிவு போட்டால் ஐய்யோ எல்லோருக்கும் காலங்காத்தாலேயே கண்ணைக் கட்டுமே!

7. உங்க பயணக் கட்டுரைக்கு நடுநடுவே "வெள்ளைக் காக்கா மல்லாக்கப் பறக்குது", அப்பிடின்னு கிராபிக்ஸ் வேலையைக் காட்டிக் கலக்குங்க. யார் கண்டா? மார்க்கோபோலோ கூட பெரிய யானையைப் பறவை தூக்கிக் கொண்டு போய் பொத்தென்று போட்டது என்று எழுதியவர்தானே? எப்பிடி உங்க ரேஞ்சை எங்க கொண்டு போறேன் பாத்தீங்களா?

8. யுவான் சுவாங்கிற்கு ஒரு ஹர்ஷவர்த்தனர். மார்க்கோபோலோவிற்கு ஒரு குப்ளாய்கான். ஆனால் உமக்கு புரவலர் யாருமில்லை என்று தெளிக. உங்களது பயணக்கட்டுரை "நமக்கு நாமே" திட்டம் போல் சோகமயமானது. ஆதலினால் பார்த்து செலவு செய்க. ஏதோ போற இடத்துல போட்டோ புடிச்சோமா, ஏதாவது எழுதினோமா, பின்னூட்டம் படிச்சோமா'ன்னு இருப்பது ஷேமம்.

9. எங்கன போனாலும் பொறுக்குற வேலையை உத்தமமா பார்க்க வேண்டும். அது என்னவென்று வினவுகின்றீர்களா? லீப்லெட்ஸ், பாம்(ப்)லெட்ஸ் போன்ற எந்த குப்பையைக் கண்டாலும் உடனே பொறுக்கிக் கொள்ள வேண்டும். கைடுகள் சொல்வதை, ஆங்காங்கே பொறிக்கப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகைகளை சின்சியராக நோட்ஸ் எடுக்க வேண்டும். அப்போதுதான் அத்தெண்டிசிடி கூடும். இந்த வெளங்கா வேலையைச் செஞ்சு போட்டு போன இடத்துல ஒரு இழவையும் ரசிக்க முடியலியேன்னு பின்னாடி வருத்தப்பட்டா நீங்கள் பயணக் கட்டுரையாளராவது பெரும் சிரமம்.

10. சரிங்க... உங்களுக்கு எழுத வராதுன்னு வைச்சுக்குங்க. வெறுமனே போட்டா புடிக்கத் தெரிஞ்சாக் கூட போதும். அட்சீஸ் பண்ணிடலாம். ஒரே ஒரு வழியிருக்கு. அலாஸ்காவில் அந்துமணி என்று ஆங்கிலப் பதிவு ஆரம்பித்து வெறும் பிலிமாய் காட்டவேண்டியதுதான் அது. "அடப்பாவிங்களா இதுக்கு ஆங்கில வலைப்பதிவு எதுக்கு? ஒரு புகைப்படம் ஒரு கோடி சங்கதியை எந்த பாஷையிலேயும் சொல்லுமே?" என்று நீங்கள் என்னைக் கேள்வி கேட்டால், என்னை வம்பில் மாட்டி விடப்பார்க்கின்றீர்கள் என்று அர்த்தம்.

பி.கு. இப்பிடித்தான் பாஸு ஒரு வெளங்காத ஆளு வேகாஸுல கூத்தடிச்சார். சுத்தி முத்தி ரசிச்சுப் பாக்காம எல்லாத்தையும் கடமையே கண்ணாய் படம் பிடித்துக் கொண்டிருந்தார். கேட்டால் கேப்சர் பண்றேன்னாரு. அட இது பரவாயில்லைன்னு எங்க கும்பல் ஜாலியா சுத்திட்டு, கடைசியில கேப்சர் பண்ணியதுல நாங்க ஆளுக்கொரு பிரிண்ட் போட்டுக்கிட்டோம். இத்தெப்பிடி இருக்கு? (அய்யய்யோ யாரோ செல்போன் தூக்கிக்கிட்டு அடிக்க ஓடியாரேங்களே? அடச்சே அது நம்ம கேப்சர் பண்ண பிரண்டுதான். எனக்கு யாரிடமிருந்தோ போனாம். கொடுக்கத்தான் வந்தாராம். ஜீட்டேய்!)

போட்டோ: நன்றி-கூகுளார்

15 comments:

PKS said...

டிக்கெட்டை ரிக்கெட் என்று எழுதிவிட்டு, டீயை ரீ என்று எழுதாதது நீங்கள் Dummies (ரம்மீஸ்) எழுதுவது எப்படி என்று ஒரு கட்டுரையைப் படிக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது :-)

சினிமா விமர்சனம் ஃபார் ரம்மீஸ் என்ற கட்டுரையின் அளவுக்கு இல்லாவிட்டாலும், இது அங்கங்கே புன்முறுவலை வரவைத்ததால், குசும்பரே நீங்க பாஸாயிட்டீங்க...

அன்புடன், பி.கே. சிவகுமார்

குசும்பன் said...

ராஉ பின்னூட்டம் (ஹாலோஸ்கேனொலிருந்து):

இகு,
அது என்ன கிருபாவுக்கும், துளசி பதிவுக்கு மட்டும் லிங்கு? நா எங்க வாரேன் என்று புரியாமல் தவிக்கும்,
புரியாவதி
Ramachandranusha | 04.21.06 - 5:47 am | #

குசும்பன் said...

//அது என்ன கிருபாவுக்கும், துளசி பதிவுக்கு மட்டும் லிங்கு? நா எங்க வாரேன் என்று புரியாமல் தவிக்கும்,
புரியாவதி //

ஏனுங்க புரியாவதியாரே!

ஹாலோஸ்கேனில் கமெண்டுகள் 3 மாதத்திற்கு அப்புறம் காணாமப்பூடும்'னு பூச்சாண்டி காட்றங்கோ. அதனால உங்க கமெண்டை இவிட சேமிச்சுக்கிறேன்.

கை துறுதுறு, பறபற'ன்னுச்சுங்க. உங்களை எப்பிடி குசும்பு பண்ணலாமுன்னு ரோசனையும் வந்துச்சு. அப்புறம் பாருங்க என்னோட "குறட்டை அரங்கம்" பதிவு ஞாபகம் வந்துச்சு. சரி எதுக்கு வம்பு. உஷா அக்காவ உட்டுடுடலாம்னு மனசு சொல்லிச்சு. அக்கா உத்தரவு கொடுத்தா ஒரு Sequel பதிவு போட்டுட்டாப் போச்சு. என்ன சொல்றீங்க? (ஹிஹிஹி நீங்க போடாத பயணக் கட்டுரைகளா என்ன? :-))

குசும்பன் said...

செந்தில்நாதன் எழுதிய ஹாலோஸ்கேன் பின்னூட்டம்:

appa antha nathan cafe naan illaya?
Chenthil Nathan | Homepage | 04.21.06 - 7:17 am | #

குசும்பன் said...

பாவிப்பய... பட்டிக்கிடப்பேன்... அட ப்ளாக்கர் பயலைத் திட்டினேன் செந்தில். உங்களைப் பத்தி லேட்டா தெரிஞ்சுக்கிட்டேனே...

அட நீங்கள் எல்லாம் எப்பிடி குசும்பன் பக்கம்? ஆச்சர்யம்தான். அய்யா "சும்மா" சொல்லக்கூடாது... கண்ணுல ஒத்திக்கிற போட்டோ கோனாப்பட்டிலிருந்து கோவிலூர் வரை எடுத்திருக்கியள்.

அப்புறம் அப்பச்சி, இப்போல்லாம் அன்னபூரணாவைவிட "ஹோட்டல் பிரஸிடெண்ட்"தான் சூப்பருன்னு பேசிக்கிறாகளே அது தெரியுமா?

டைமிருந்தா podankho@gmail.com'ற்கு ஒரு மயில் தட்டுங்கோ. ஐடி ஒரிஜினல்தான். சந்தேகம் வேண்டாம்.

ஆச்சிக்கு அநேக நமஸ்காரங்கள்!

ramachandranusha(உஷா) said...

என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க? ஆனானப்பட்ட பெரிய ஆளுங்கள கலாய்க்கும்பொழுது, ஐ மீன் துளசி, க்ருபாவை
சொல்லலைங்க- சின்ன துரும்பு என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டதுக்கு நான் டாங்ஸ் இல்லே சொல்லணும் :-)

Boston Bala said...

அடுத்து என்ன தலைப்பு ஃபார் டம்மீஸ்? "குசும்பன் for Dummies" என்று ஒரு செல்ஃப்-பால் போடுங்களேன் :P

PKS said...

Some suggestions for Dummies Series:

1. Mask Poduvathu Epadi? :-)
2. IP Track Pannuvathu Epadi? :-)
3. Kavuja (kavithai) poduvathu Epadi? ;-)
4. Ilakiyayvaathi aavathu epadi? :-)
5. Isai Rasikar aavathu epadi? :-)
6. Blogger of the day (Thenkoodil) aavathu epadi? :-)
7. How to get your post selected in Gilli? :-)
8. Inaiyathil Sandai poduvathu Epadi? :-)

PS: If Kusumban or others write on these topics, they are most welcome. Copyright of topics, PKS :-))

Anbudan, PK Sivakumar

குசும்பன் said...

வந்தனம் பிகேஎஸ்ஜீ,

//டிக்கெட்டை ரிக்கெட் என்று எழுதிவிட்டு, டீயை ரீ என்று எழுதாதது நீங்கள் Dummies (ரம்மீஸ்) எழுதுவது எப்படி என்று ஒரு கட்டுரையைப் படிக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது :-)
//
சொற்குற்றத்தைப் பொறுத்தருளவும் ;-) மெட்ராஸ் தமிழை மறந்த குற்றத்திற்காக கரும்பு சங்கரர் ஒருமுறை வருத்தப்பட்டதால், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஆயுள் சந்தா கட்டுபவன் என்ற முறையில் தவறிழைத்து விட்டேன்.

ஆமாம் உங்கள் பின்னூட்டத்தில் கொப்பிரைட் மீறல் ஏதுமில்லையே? ;-)

//இது அங்கங்கே புன்முறுவலை வரவைத்ததால், குசும்பரே நீங்க பாஸாயிட்டீங்க...//

அங்கங்கே உங்கள் கடைவாய் இதழோரத்தில் புன்முறுவலை வரவழைத்ததில் நான் தன்யனானேன். இப்படி அடி'க்'கடி வந்து போகவும் :-)

குசும்பன் said...

//என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க? ஆனானப்பட்ட பெரிய ஆளுங்கள கலாய்க்கும்பொழுது, ஐ மீன் துளசி, க்ருபாவை
சொல்லலைங்க- சின்ன துரும்பு என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டதுக்கு நான் டாங்ஸ் இல்லே சொல்லணும் :-)//

ஆஹா அக்காவும் ஜோதி'யில ஐக்கியமாகிட்டீங்கன்னு சொல்றீங்க! நடாத்துங்க! வாழ்த்துக்கள்!!!

:-)

குசும்பன் said...

பாபா,

//"குசும்பன் for Dummies" என்று ஒரு செல்ஃப்-பால் போடுங்களேன்//

ஐடியா சூப்பர்தான்.

ஆனா நாந்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்பா. "நமக்கு நாமே" திட்டத்துல நான் ரொம்ப வீக்குன்னு.

ஆமா இதுக்கு தோதா சுட்டி ஒண்ணும் கிடைக்கலியா? :-)

குசும்பன் said...

பிகேஎஸ்ஜீ,

//6. Blogger of the day (Thenkoodil) aavathu epadi? :-)
7. How to get your post selected in Gilli? :-)//

புல் பார்முல இருக்கீங்கன்னு தெரியுது ;-))

//8. Inaiyathil Sandai poduvathu Epadi? :-)//
//Copyright of topics, PKS :-))//

ஹூம் இப்ப புரியுது பாஸு :-)

Boston Bala said...

பிகேயெஸ் அறிவிப்பு!
அடுத்த வெளியீடு...

ஸ்மைலி போடுவது எப்படி?
எமது அறிவிப்பை இணையத்தில் வெளியிடுவது என்பதை முதல்முறையாக வலையிலே அறிவித்த எம்மிடம் இருந்து இருந்து புத்தம் புதிய புத்தகம்.

எந்த நகைக்குறியை, எப்படி உபயோகிக்க வேண்டும்;
நிறுத்தற் குறிகளுகக்கும் நகைக்குறிகளுக்கும் உள்ள ஒற்றுமைகள்;
குறிப்பால் உணர்த்துவதற்கும் நகைக்குறிகளுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்கள்;
குழூஉக் குறியை அறுத்தல் ஏன் வேண்டும்?

குசும்பனுக்காக அதிகாரக்குறி சுட்டி: :: Thirukural - DR.KALAIGNAR URAI ::

:-) \:D/ :P ;-) :)) (*) >:D< $-) >-) =:) 8-X ^:)^ ^:)^ ^:)^

\\\///
/ \
| \\ // |
( | (.) (.) |)
-----o00o--(_)--o00o--

தேவையான ஸ்மைலிகளை வேண்டிய இடங்களில் தயவு செய்து வாசகரே பொறுத்திக் கொள்ளவும் :-)

ஏஜண்ட் NJ said...

பஞ்ச கல்யாணி
அழகாக
இருக்கிறாள்!

;-)

துளசி கோபால் said...

குசும்ப்ஸ்,

இப்படி 'தூள்' கிளப்பி இருக்கயேப்பா! நான் எப்படி
இத்தனைநாள் இதை விட்டேன்னு தெரிலையே(-:

அந்த 'வேப்பமரத்துலே'தான் முனி இருக்கு. பார்த்து. பத்திரம்.