கதை திரைக்கதை டைரக்ஷனுக்கு அடுத்தபடி நமது இணையவாதிகள் பாடல்களுக்குத் தாவுவதை தவிர்க்கவா முடியும்? இதோ கோலிவுட்டில் டைரிக்கட்டுகளோடும், கத்தை காகிதங்களோடும் நமது பேவரிட் இணைய பாடலாசிரியர்கள்:
மு. சுந்தரமூர்த்தி (
முசு): ஸார் அருமையான தத்துவப் பாடல் கைவசமிருக்கு
கங்கை அமரன் (
கஅ): இப்ப நான் படமே எடுக்கிறதில்லையேப்பா
முசு: அதனாலென்ன ஸார் பாட்டைக் கேளுங்க
கஅ: (மனதிற்குள்) என்ன எழவாப் போச்சி...
முசு:
மேதை மேதை
ஊரெல்லாம் மேதை டண்டநக்கர அட டண்டநக்கர
மேதை மேதை அவர் கிரேக்க மேதை
டண்டநக்கர அட டண்டநக்கரகஅ: சூப்பர். '
சலம்பாட்டக்காரன்'ன்னு ஒரு படமெடுத்தா யூஸ் பண்ணிக்கிறேன். கிரேக்க மேதைன்னா அது
சாக்ரடீஸ்தானே?
(
சாக்ரடீஸ் பேரைக் கேட்டவுடன் முசு சடாரென "யு" டர்ன் போட்டு மறைய, காரணம் தெரியாமல் கஅ விழிக்கின்றார்)
பாஸ்டன் பாலா (
பாபா): சார் பாரின் டச்சோட பாடல்களைத் தரேன் ஸார்
ஷங்கர்:
சிவாஜி படம் முடிய இன்னும் டயம் இருக்கு. ஒரு ஐந்தாண்டுகளுக்கு அப்புறம் வாயேன்.
பாபா:அன்பிரேக் மை ஹார்ட்
நீயொரு ஸ்பேர் பார்ட்
அண்டூ மை பாஸ்ட்
நான்தான் எவர் லாஸ்ட்
ஷங்கர்: (பிரமித்து) ஆஹா அருமையான தமிழ்ப் பாட்டு. சிவாஜிக்கு ஐஸ்வர்யாராய் இப்பக் கூட ரெடின்னாலும், உடனே ஷ்ரேயாவைத் தூக்கிட்டு ரஜினிக்கு இந்தப் பாட்டைப் போட்டுடலாம். பத்தாயிரம் அடி கிராபிக்ச்ஸுல போட்டு பின்னிடலாம். ஆனா
ரஜினிக்கு லாஸ்ட்'ன்னா பிடிக்காதே? கொஞ்சம் மாத்திப்
பாடறீங்களா ஸாரி போடறீங்களா?
பாபா: ஓ தாராளமா போட்டுடலாமே...
அண்டூ மை வொர்ஸ்ட்
நான்தான் எவர் பெஸ்ட்ஷங்கர்: ஐய்யோ ஐய்யோ பின்றீயேப்பா...நீதான் இண்டஸ்ட்ரியோட லேட்டஸ்ட் வைரமுத்து. பின்னி பெடலெடுப்போம்ப்பா பாபா
(பாபா'விற்கு உல்டா'ப் பாடலுக்கே இப்படியாவென ஜன்னி வராத குறை)
ராமச்சந்திரன் உஷா: வணக்கம் ஸார்
கௌதம்: அடடே வாங்க வாங்க.
தாமரைதான் உசிரெடுக்க வந்தாங்களோன்னு பயந்தே போயிட்டேன். என்ன விஷயம்?
உஷா: இல்லீங்க நானும் பாடல்கள் வடிப்பேன். அதான் ஸாம்பிள் சொல்லி சான்ஸ் கேக்கலாமுன்னு...
கௌதம்: (அடப்பாவிங்களா விட மாட்டீங்களே என்ற நறநறத்தபடி) அப்பிடியா
வடிங்களேன் ஸாரி படிங்களேன்உஷா
காட்சிப் பிழைபோலே
இணையத்தில்
சாட்சிப் பிழையானேன்
கோபம் வருகின்றதே
என்மேல்
கோபம் வருகின்றதே(அய்யய்யோ
தாமரை ஜூனியர் வந்துட்டாங்க என்று ஜூட் விடுகின்றார் கௌதம்)
கால்கரி சிவா: (நாலுநாள் தாடியுடன் அசல் கவிஞராய்) அன்பர்களுக்கு நமஸ்காரம்
ஜேடி-ஜெர்ரி: யாருப்பா நீ?
சிவா: ஜில்லென்று ஒரு ஜிகர்தண்டா மாதிரி ஒரு பாட்டு ஸார். கேளுங்க...
இணையம் செஞ்ச தப்புல
ராத்திரி அடிச்ச மப்புல
போட்டிருக்கேண்டி
பதிவு போட்டிருக்கேண்டி
சௌதியத்தான் வெட்டிக்கோ
ஷேக்கையெல்லாம் திட்டிக்கோ
என்னை மட்டும் ஒட்டிக்கோ
பின்னூட்டத்த தட்டிக்கோ
கண்ணோரம் அச்சம் காட்டவா?
அப்புறமா மிச்சம் காட்டவா?
(ஜிகர்தண்டாவே இப்பிடின்னா என்று வாயைப் பிளந்தபடி ஜேடி-ஜெர்ரி கிர்ரடிக்கின்றனர்)
ரோஸாவசந்த்: (கொஞ்சம் நிலவு பாடலை ஹம் செய்தபடி) வணக்கம் ஐயா. என் பாடலைக் கேட்கின்றீர்களா?
மணிரத்தினம்: (ஜெர்க்காகி) என்னது வந்ததுமே கச்சேரிய ஆரம்பிக்கிங்றீங்களே? யாரு நீங்க?
ரோஸா: (மனதிற்குள் ஹீம் காலத்தின் கட்டாயம்.
வந்தேறிகளுக்குள்ளேயே கேள்விகள் கேட்கின்றார்) அதுதான் எம் பாணி
கொஞ்சம் வெறுப்பு கொஞ்சம் குரோதம்
ஒன்றாய்ச் சேர்த்தால்
எந்தன் நெஞ்சம் கொஞ்சம் மனிதன் கொஞ்சம் மிருகம்
ஒன்றாய்ச் சேர்த்தால்
ஆளவந்தான்
(கோரஸ் குரலில்)
ஆளவந்தான் ன்ன்ன் அது நாந்தான் ன்ன்ன்
மணி: ஆஹா ஆஹா ஆஹா குரு படத்தில் பிட்டைப் போட்டுட வேண்டியதுதான். ஆனா இதை
Rock இசையில் போடலாமா? இல்லை
Rap'பா ஆக்கிடலாமா?
ரோஸா: என்னது
ரேப்பா? மவனே உன்னய
அறுக்ககாம விடமாட்டேன்
(ரோஸா
பிளேடுடன் மணிரத்தினத்தைத் துரத்த, மணி எஸ்கேப் ஆகின்றார்)
ஆஸாத் பாய்: மிஷ்கின் பாய் சலாம் குலாமு
மிஷ்கின்: அய்த்தலக்கடி ஆஸாத் பாய்
ஆஸாத்: சூப்பர் கானா கைவசமிருக்கு போட்டுத் தாக்கிடலாமா?
மிஷ்கின்: (வேண்டான்னா விட்டுடவா போறீங்க) குத்துங்க பாய்
ஆஸாத்:எணையத்துல போடாதீங்க சண்டைங்கோ
சண்டையில ஒடையிறது மண்டைங்கோ
மனுசனுக்கு தேவயில்ல மதமுங்கோ
பூவாவுக்கு முக்குறோங்க நிதமுங்கோ
வலைப்பூவில அடிக்கிறாங்க லூட்டிங்கோ
மரத்தடியும் நாறடிக்கும் பார்ட்டிங்கோ
வலைதிரட்டி வாங்கிட்டாங்க சேட்டுங்கோ
எப்பவுமே நெலைச்சி நிக்கும்....
என்னோட பாட்டுங்கோ(மிஷ்கின் ராவாக கிடைத்த சரக்கை அடித்து விட்டு ஆஸாத் பாயுடன் குத்தாட்டம் போடுகின்றார்)
பத்ரி: (கொஞ்சம் பயத்துடன்) ஸார் உள்ளே வரலாமா?
கமல்: (கனைத்தபடி) அதான் வந்துட்டீங்களே (ட்ரேட்மார்க் சிரிப்பு) சொல்லுங்க
பத்ரி: ஒரு நல்ல பாட்டு. அத உங்கள விட்டா அருமையா திரையில கொண்டுவர ஆளேயில்ல
கமல்: இந்தப் பிரபஞ்சத்துல நாமெல்லாம் ஒரு அணுவை விட சாதாரணமானவங்க. ஆப்பிரிக்கக் கவிஞன் சொல்றான்..
பத்ரி: (அவசர அவசரமாக)
உன்னை நெனைச்சே பெட்டிஷன் போட்டேன்
தங்கமே ஞானத் தங்கமே
உன்னை நெனைச்சே நல்லது செஞ்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என் குணம் தெரிஞ்சாத்தான்
என் மனமே புரியும்
அந்த மனம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
கமல்: ரொம்ப
அடிபட்டிருக்கீங்க போலருக்கு. இதாங்க சவால்.
ஆரோகணம் சரியா இருக்கு. ஆனா அவரோகணத்த கொஞ்சம் டச்சப் செய்யணும். செஞ்சுடலாம். இதக் கானடா'வுல செய்யச் சொல்லி ரஹ்மானக் கேக்கலாம். இல்ல கீரவாணியாப் போட்டுலலாமா?
பத்ரி: ரஹ்மானோ கீரவாணியோ ரெண்டு பேருமே நல்ல மியூஸிக் பண்றாங்க. நீங்களே டிசைட் பண்ணிடுங்களேன்
கமல்: தப்புப் பண்றீங்க நான் சொன்னது கீரவாணி 21ஆவது மேளகர்த்தா இராகம். அதாவது 72 தாய் இராகங்களில் ஒன்று. அதுல பாருங்க அவரோகணம்...
பத்ரி: (இடைமறித்து)
இந்த நூல் பிடித்து பின்னர் எழுதுகின்றேன்கமல்: (இணைய அரசியல் புரியாமல்) என்ன எனக்கே நூல் விடுறீங்களா? நான் எத்தனை நூல் விட்டிருப்பேன்? சரி அத விடுங்க.
நம்மவர் மாதிரி சூப்பர் சப்ஜெக்ட். படம் பேரு
நல்லவர். அட... இங்க பாருங்க சப்ஜெக்ட்டுக்கு ஏத்த மாதிரி நீங்க இருக்கீங்க. ஹீரோவா உங்களயே போட்டுடலாம். நம்ம கலைப்புலி தாணு தயாரிப்புல 100 கோடி புரடக்ஷனுல பூஜை போட்டுடுவோம். என்ன சொல்றீங்க?
(ஒரு சேஞ்ச்சுக்காக இப்போது பத்ரி தெறிக்கின்றார்)
(மற்ற பாவேந்தர்கள் நான் நானென்று இன்னும் ரேஷன் கடைக் கியூவாய் அணி வகுக்க எனக்கோ ஸ்ஸப்பா இப்பவே கண்ணக் கட்டுது. அதனால இப்போதைக்கு அப்பீட்டு.)