கதை திரைக்கதை டைரக்ஷனுக்கு அடுத்தபடி நமது இணையவாதிகள் பாடல்களுக்குத் தாவுவதை தவிர்க்கவா முடியும்? இதோ கோலிவுட்டில் டைரிக்கட்டுகளோடும், கத்தை காகிதங்களோடும் நமது பேவரிட் இணைய பாடலாசிரியர்கள்:
மு. சுந்தரமூர்த்தி (முசு): ஸார் அருமையான தத்துவப் பாடல் கைவசமிருக்கு
கங்கை அமரன் (கஅ): இப்ப நான் படமே எடுக்கிறதில்லையேப்பா
முசு: அதனாலென்ன ஸார் பாட்டைக் கேளுங்க
கஅ: (மனதிற்குள்) என்ன எழவாப் போச்சி...
முசு:
மேதை மேதை
ஊரெல்லாம் மேதை
டண்டநக்கர அட டண்டநக்கர
மேதை மேதை அவர் கிரேக்க மேதை
டண்டநக்கர அட டண்டநக்கர
கஅ: சூப்பர். 'சலம்பாட்டக்காரன்'ன்னு ஒரு படமெடுத்தா யூஸ் பண்ணிக்கிறேன். கிரேக்க மேதைன்னா அது சாக்ரடீஸ்தானே?
(சாக்ரடீஸ் பேரைக் கேட்டவுடன் முசு சடாரென "யு" டர்ன் போட்டு மறைய, காரணம் தெரியாமல் கஅ விழிக்கின்றார்)
பாஸ்டன் பாலா (பாபா): சார் பாரின் டச்சோட பாடல்களைத் தரேன் ஸார்
ஷங்கர்: சிவாஜி படம் முடிய இன்னும் டயம் இருக்கு. ஒரு ஐந்தாண்டுகளுக்கு அப்புறம் வாயேன்.
பாபா:
அன்பிரேக் மை ஹார்ட்
நீயொரு ஸ்பேர் பார்ட்
அண்டூ மை பாஸ்ட்
நான்தான் எவர் லாஸ்ட்
ஷங்கர்: (பிரமித்து) ஆஹா அருமையான தமிழ்ப் பாட்டு. சிவாஜிக்கு ஐஸ்வர்யாராய் இப்பக் கூட ரெடின்னாலும், உடனே ஷ்ரேயாவைத் தூக்கிட்டு ரஜினிக்கு இந்தப் பாட்டைப் போட்டுடலாம். பத்தாயிரம் அடி கிராபிக்ச்ஸுல போட்டு பின்னிடலாம். ஆனா ரஜினிக்கு லாஸ்ட்'ன்னா பிடிக்காதே? கொஞ்சம் மாத்திப் பாடறீங்களா ஸாரி போடறீங்களா?
பாபா: ஓ தாராளமா போட்டுடலாமே...
அண்டூ மை வொர்ஸ்ட்
நான்தான் எவர் பெஸ்ட்
ஷங்கர்: ஐய்யோ ஐய்யோ பின்றீயேப்பா...நீதான் இண்டஸ்ட்ரியோட லேட்டஸ்ட் வைரமுத்து. பின்னி பெடலெடுப்போம்ப்பா பாபா
(பாபா'விற்கு உல்டா'ப் பாடலுக்கே இப்படியாவென ஜன்னி வராத குறை)
ராமச்சந்திரன் உஷா: வணக்கம் ஸார்
கௌதம்: அடடே வாங்க வாங்க. தாமரைதான் உசிரெடுக்க வந்தாங்களோன்னு பயந்தே போயிட்டேன். என்ன விஷயம்?
உஷா: இல்லீங்க நானும் பாடல்கள் வடிப்பேன். அதான் ஸாம்பிள் சொல்லி சான்ஸ் கேக்கலாமுன்னு...
கௌதம்: (அடப்பாவிங்களா விட மாட்டீங்களே என்ற நறநறத்தபடி) அப்பிடியா வடிங்களேன் ஸாரி படிங்களேன்
உஷா
காட்சிப் பிழைபோலே
இணையத்தில்
சாட்சிப் பிழையானேன்
கோபம் வருகின்றதே
என்மேல்
கோபம் வருகின்றதே
(அய்யய்யோ தாமரை ஜூனியர் வந்துட்டாங்க என்று ஜூட் விடுகின்றார் கௌதம்)
கால்கரி சிவா: (நாலுநாள் தாடியுடன் அசல் கவிஞராய்) அன்பர்களுக்கு நமஸ்காரம்
ஜேடி-ஜெர்ரி: யாருப்பா நீ?
சிவா: ஜில்லென்று ஒரு ஜிகர்தண்டா மாதிரி ஒரு பாட்டு ஸார். கேளுங்க...
இணையம் செஞ்ச தப்புல
ராத்திரி அடிச்ச மப்புல
போட்டிருக்கேண்டி
பதிவு போட்டிருக்கேண்டி
சௌதியத்தான் வெட்டிக்கோ
ஷேக்கையெல்லாம் திட்டிக்கோ
என்னை மட்டும் ஒட்டிக்கோ
பின்னூட்டத்த தட்டிக்கோ
கண்ணோரம் அச்சம் காட்டவா?
அப்புறமா மிச்சம் காட்டவா?
(ஜிகர்தண்டாவே இப்பிடின்னா என்று வாயைப் பிளந்தபடி ஜேடி-ஜெர்ரி கிர்ரடிக்கின்றனர்)
ரோஸாவசந்த்: (கொஞ்சம் நிலவு பாடலை ஹம் செய்தபடி) வணக்கம் ஐயா. என் பாடலைக் கேட்கின்றீர்களா?
மணிரத்தினம்: (ஜெர்க்காகி) என்னது வந்ததுமே கச்சேரிய ஆரம்பிக்கிங்றீங்களே? யாரு நீங்க?
ரோஸா: (மனதிற்குள் ஹீம் காலத்தின் கட்டாயம். வந்தேறிகளுக்குள்ளேயே கேள்விகள் கேட்கின்றார்) அதுதான் எம் பாணி
கொஞ்சம் வெறுப்பு
கொஞ்சம் குரோதம்
ஒன்றாய்ச் சேர்த்தால்
எந்தன் நெஞ்சம்
கொஞ்சம் மனிதன்
கொஞ்சம் மிருகம்
ஒன்றாய்ச் சேர்த்தால்
ஆளவந்தான்
(கோரஸ் குரலில்)
ஆளவந்தான் ன்ன்ன் அது நாந்தான் ன்ன்ன்
மணி: ஆஹா ஆஹா ஆஹா குரு படத்தில் பிட்டைப் போட்டுட வேண்டியதுதான். ஆனா இதை Rock இசையில் போடலாமா? இல்லை Rap'பா ஆக்கிடலாமா?
ரோஸா: என்னது ரேப்பா? மவனே உன்னய அறுக்ககாம விடமாட்டேன்
(ரோஸா பிளேடுடன் மணிரத்தினத்தைத் துரத்த, மணி எஸ்கேப் ஆகின்றார்)
ஆஸாத் பாய்: மிஷ்கின் பாய் சலாம் குலாமு
மிஷ்கின்: அய்த்தலக்கடி ஆஸாத் பாய்
ஆஸாத்: சூப்பர் கானா கைவசமிருக்கு போட்டுத் தாக்கிடலாமா?
மிஷ்கின்: (வேண்டான்னா விட்டுடவா போறீங்க) குத்துங்க பாய்
ஆஸாத்:
எணையத்துல போடாதீங்க சண்டைங்கோ
சண்டையில ஒடையிறது மண்டைங்கோ
மனுசனுக்கு தேவயில்ல மதமுங்கோ
பூவாவுக்கு முக்குறோங்க நிதமுங்கோ
வலைப்பூவில அடிக்கிறாங்க லூட்டிங்கோ
மரத்தடியும் நாறடிக்கும் பார்ட்டிங்கோ
வலைதிரட்டி வாங்கிட்டாங்க சேட்டுங்கோ
எப்பவுமே நெலைச்சி நிக்கும்....
என்னோட பாட்டுங்கோ
(மிஷ்கின் ராவாக கிடைத்த சரக்கை அடித்து விட்டு ஆஸாத் பாயுடன் குத்தாட்டம் போடுகின்றார்)
பத்ரி: (கொஞ்சம் பயத்துடன்) ஸார் உள்ளே வரலாமா?
கமல்: (கனைத்தபடி) அதான் வந்துட்டீங்களே (ட்ரேட்மார்க் சிரிப்பு) சொல்லுங்க
பத்ரி: ஒரு நல்ல பாட்டு. அத உங்கள விட்டா அருமையா திரையில கொண்டுவர ஆளேயில்ல
கமல்: இந்தப் பிரபஞ்சத்துல நாமெல்லாம் ஒரு அணுவை விட சாதாரணமானவங்க. ஆப்பிரிக்கக் கவிஞன் சொல்றான்..
பத்ரி: (அவசர அவசரமாக)
உன்னை நெனைச்சே பெட்டிஷன் போட்டேன்
தங்கமே ஞானத் தங்கமே
உன்னை நெனைச்சே நல்லது செஞ்சேன்
தங்கமே ஞானத் தங்கமே
என் குணம் தெரிஞ்சாத்தான்
என் மனமே புரியும்
அந்த மனம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
கமல்: ரொம்ப அடிபட்டிருக்கீங்க போலருக்கு. இதாங்க சவால். ஆரோகணம் சரியா இருக்கு. ஆனா அவரோகணத்த கொஞ்சம் டச்சப் செய்யணும். செஞ்சுடலாம். இதக் கானடா'வுல செய்யச் சொல்லி ரஹ்மானக் கேக்கலாம். இல்ல கீரவாணியாப் போட்டுலலாமா?
பத்ரி: ரஹ்மானோ கீரவாணியோ ரெண்டு பேருமே நல்ல மியூஸிக் பண்றாங்க. நீங்களே டிசைட் பண்ணிடுங்களேன்
கமல்: தப்புப் பண்றீங்க நான் சொன்னது கீரவாணி 21ஆவது மேளகர்த்தா இராகம். அதாவது 72 தாய் இராகங்களில் ஒன்று. அதுல பாருங்க அவரோகணம்...
பத்ரி: (இடைமறித்து) இந்த நூல் பிடித்து பின்னர் எழுதுகின்றேன்
கமல்: (இணைய அரசியல் புரியாமல்) என்ன எனக்கே நூல் விடுறீங்களா? நான் எத்தனை நூல் விட்டிருப்பேன்? சரி அத விடுங்க. நம்மவர் மாதிரி சூப்பர் சப்ஜெக்ட். படம் பேரு நல்லவர். அட... இங்க பாருங்க சப்ஜெக்ட்டுக்கு ஏத்த மாதிரி நீங்க இருக்கீங்க. ஹீரோவா உங்களயே போட்டுடலாம். நம்ம கலைப்புலி தாணு தயாரிப்புல 100 கோடி புரடக்ஷனுல பூஜை போட்டுடுவோம். என்ன சொல்றீங்க?
(ஒரு சேஞ்ச்சுக்காக இப்போது பத்ரி தெறிக்கின்றார்)
(மற்ற பாவேந்தர்கள் நான் நானென்று இன்னும் ரேஷன் கடைக் கியூவாய் அணி வகுக்க எனக்கோ ஸ்ஸப்பா இப்பவே கண்ணக் கட்டுது. அதனால இப்போதைக்கு அப்பீட்டு.)
Friday, September 15, 2006
Subscribe to:
Post Comments (Atom)
49 comments:
{**}
கானா வெல்லாம் கட்டி வுட்டார்
. எங்க குசும்பனாரு
பாயி மட்டும் தானா இங்க
. கொஞ்சம் விசும்புனாரு :)
நகல் எடுக்கும் வேகத்துல
. குசும்பன் குதுப்மினாரு
பேர மட்டும் மறச்சு வெச்சு
. அய்யா பதுக்கினாரு :)
ஷேர் ஹைதோ ஐஸா
குசும்பன் ஜீ ஜைஸா
மார்தியா ஹை ஐஸா
கே தீர் கமான் ஜைஸா :)
உங்களுக்கு அர்த்தம் புரியும் அய்யா.
அன்புடன்
ஆசாத்
உங்க பதிவுக்கு addict ஆக வச்சிட்டீங்க. ஆசாத் அய்யாவோட ஹிந்திதான் புரியலை ( Northல 6 வருஷம் இருந்தாலும், ஆங்கிலத்திலேயே ஓட்டிட்டேன்). உங்க பதிவு வந்தா தேன்கூடுல 1 ஆ வருது, ஆனா நிறைய பேர் பின்னூட்டம் விடுறதில்லை. படிச்சுட்டு ஒதுங்கீருவாங்களோ? தொடர்ந்து போடுங்க. Silent readersஓ, என்னை மாதிரியோ, நிறைய பேர் ரசிக்கிரோம்னு நினைக்கிறேன்.
நன்றி பா நூற்றான் (அருமையான பேருபா :-)
கும்தலக்கடி கும்மாவா
ஆஸாத்பாய்னா சும்மாவா
கலக்கல் கானா (மறுபடியும்) எங்கே அய்யா கோவிச்சுகுவீயளோன்னு கொஞ்சம் ஒதறலாத்தேன் இருந்திச்சி.. ஏன்னா அங்கததுக்கு ஸ்டேண்டேர்ட் யாருமே கொடுக்க மாட்டேன்றாங்க...
:-)
ஒரு சின்ன சந்தேகம். ஷேர் என்பதை கானாவோடு ஒப்பிடலாமா? சீரியசான சந்தேகமிது. நீங்கள் கண்டிப்பாக ஆராய்ச்சி செஞ்சிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். (உங்க கானா புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை).
சுவாமி,
நம்ம பதிவுக்கே அடிக்ட்'ஆ? ரொம்ப பயமாயிருக்குங்க :-)
நம்ம ஆஸாத் பாய் தமிழ்ல பாடுன கானாவையே "ஷேர்"ரா (ஹிந்தி குறும்பா அஃதாவது குறும்-பா) வடித்துள்ளார். அதை மொழி பெயர்த்தா எனக்கே புகழ் போதை (!) தலைக்கேறி விடும்.
வருகைக்கு நன்றி.
நமக்கு எப்பவுமே பின்னூட்டம் வறட்சிதான். யாராவது வீராணம் கொழாய் போட்டாதான் தீரும் போல ;-)
/நமக்கு எப்பவுமே பின்னூட்டம் வறட்சிதான். யாராவது வீராணம் கொழாய் போட்டாதான் தீரும் போல ;-) /
வீராணம் குழாய் போட்டாச்சு.அப்புறமா ஊழல்,அது இதுன்னு சொல்லப்படாது.ஆமா.
$சல்வன்,
//வீராணம் குழாய் போட்டாச்சு.அப்புறமா ஊழல்,அது இதுன்னு சொல்லப்படாது.ஆமா.//
யம்மாடியோவ்...
//நடந்தது நடவாதது,அறிந்தது அறியாதது, தெரிந்தது தெரியாது,பிறந்தது பிறவாதது,என அனைத்தையும் யாம் அறிவோம்.எல்லாம் எமக்கு தெரியும்.//
புதிய கடவுள் நீங்க சொன்னா சரியாத்தாம்ப்பா இருக்கும்
;-)
//புதிய கடவுள் நீங்க சொன்னா சரியாத்தாம்ப்பா இருக்கும் //
ஒன்றே இணையம்,ஒருவனே குசும்பன்
வாழ்க குசும்பு,வாழ்க குசும்பன்:-)
tamilbar.blogspot.com by peyarili,karnatic damas. script idea peyarili. tamilnadu style text karnatic damas. peyarili attack badri in noolaham. tamilbar attack badri. rajniramki write against ltte. kusumban fight against peyarili,his friends. if u read tamilbar, it attack badri,rajniramki,kusumban. peyarilis 1000 avatar tamilbar. when he,his friends go behind the bars. tamilmanam added tamilbar. tamilmanam kootukalavani to tamilbar.
fart-tender = peyarili or his adipodi
somebody tell me which LADY vomits often in the internet?
Vomitting Lady u don't know?
ஆட்டமா
மறுபடியும்
தேரோட்டமா?
அநாமத்து அநாநிகள் முன்னேற்ற கழகம்
உன்னை நெனைச்சே
வாந்தியெடுத்தேன்
தங்கமே
ஞானத் தங்கமே
தமிழ்ல எப்பிடிங்க வாந்தியெடுக்கிறது?
//தமிழ்ல எப்பிடிங்க வாந்தியெடுக்கிறது? //
போயி ரோஸாவைக் கேளுடா பண்ணாடை
ஜின்னு ஜின்னு ஜின்னு
அரே பாபா ஜின்னு
ஓ மை டார்லிங்
கிவ் மி ஏ ஜின்னு
ஸாரி உள்ளே வரலாமா?
டேய் உங்களையெல்லாம் கவுத்து போட்டு நசுக்கணும்டா
//ஸாரி உள்ளே வரலாமா?//
வெளிய போடா நாயே
ரம் ரம்
ஆரம்பம்
ரம் ரம்
பேரின்பம்
உவ்வேக்
என்னாச்சு?
கொழந்த அழறது
பாஸ்டன்லேயும் மாலா கெடைக்குதா?
வடபழனி ஆண்டவா
வில்ஸ் உதட்ட பாருடா
திவ்யா எனக்கு
கிஸ் கொடுத்தா பாருடா
பார்டெண்டர் முன்னேற்ற முன்னணி
XXX, திவ்யா நகர்
ஏவ் குறுக்குத் தெரு
உவ்வேக் நகர்
மாலா சந்து
'ஜின்''ரம்' கார்னர்
TAMILNADU
//மதி 'ஜின்'னா said...
பாஸ்டன்லேயும் மாலா கெடைக்குதா?
//
என்னா மிஸ்.ஜின்னா.
மாலா கெடைக்காத ஊரில்லையே
மாலா இல்லாமல் உலகில்லையே
வந்தேண்டா பார்காரன்
டமிள் பாரப் பத்தி பாடப்போறேன்
பீரு அடிச்சா வாந்தியெடுப்பேன்
உன்னால முடியாது அம்பி
ஆரம்பிச்சுட்டீங்களேடா அடங்கவே மாட்டீங்களாடா நீங்கெள்ளாம் உர்ருப்பட போறதில்லடா
**மாலா கெடைக்காத ஊரில்லையே
மாலா இல்லாமல் உலகில்லையே**
மாலா இல்லாட்டிதான் உலகமேடா
மூக்காண்டி வந்துட்டாண்டா இனிமே ஆட்டம் களைகட்டும்டா
டேய் முகமூடி நீ உருப்படமாட்டே
{*:*}
{*;*}
தேவனா இவன்?
இது கூட தெரியாதா தேவா?
அநாநி அநாமத்துகளே,
வரம்பு கெடாதவரை தொடரும். நான் மணத்திலுமில்லை. கூடிலுமில்லை.
நான் தனித்துவமானவன்.
;-)
அய்டியா அய்யர்=பத்மநாப அய்யர் ?
சரோசாதேவி லெவலுக்கு கிளுகிளு என்று எழுதுகிற மவராசன் டமில்-பார்-தண்டு-ஆர் வால்க.
அவர் உவ்வேக் ஆக்கிய திவ்யா குட்டி வால்க.
இப்படிபட்ட பதிவுகளை திரட்டி
டமில்சேவை செய்யும் டமில்"மணம்" வால்க.
டமில்-பார்-தண்டு-ஆர் சீக்கிரம் போலியாரை எழுத்தில் ஜெயிப்பார்.
1000 பொற்காசுகள் பெட்டு. any takers?
டமில்"மணம்" கூட்டுகளவாணி என்று கமெண்ட் வந்ததும்
பார்-தண்டர் டமில்மணத்தை செல்லமாக
தட்டியதை பார்த்தீர்களா
டமில்மணத்தையும் விமர்சிக்கிறாராம்
நம்புங்கோ சார் நம்புங்கோ
கஜினி காம்கி
நல்லவர்க்கு நல்லவர்
கெட்டவர்க்கும் நல்லவர்
ரோசா வசந்தில் இருந்து
முத்து தமிழினிவரை
கஜினி காம்கியை பிடிக்காதவர் இல்லை
கஜினி காம்கிமீது
காண்டு கொண்ட கூட்டம்
தென்திசையிலிருந்து வந்ததொரு சிறுகூட்டம்
தமிழ் பார்டென்டர் யார் என்று புரிகிறதா?
டேய் மூதேவி
மூக்கனும் மாயூரம்
கஜினிகாம்கியும் மாயூரம்
மாயூரம் மாபியாக்கள்
பிரச்னை என்றால்
பரஸ்பரம் பேசி தீர்த்துக்குவாங்க.
கஜினிகாம்கி இரண்டுபுக்கு போட்டா மூக்கன் எதுக்கய்யா வயிறு எரியணும்.
வாழ்த்ததான் செய்யுவார்.
டிசே தமிழன் கவிதையை பிரசுரிக்க வேண்டும் என்று கர்னாடிக்டமாஸ் பத்ரியை கேட்டார். ஈழ புத்தகங்களை பத்ரி பதிப்பிக்காத வெறி barலிருந்து பாருக்கு வருகிறதோ.
எவனோ புக்கு எழுதறான்
எவனோ போடறான்
எவனோ வாங்குறான்
உங்களுக்கு என்னடா.
நீங்களும் போடுங்கடா
அதுவும் இல்லைன்னா
மூடிட்டு போங்கடா
வயிறெரிஞ்சி சாகாதீங்கடா.
"பாயும் புலி" துப்பறியும் சோம்பு பாஸ்டனிலிருந்து தருகிற ஸ்பெஷல் ரிப்போர்ட்:
டமில் பார்டென்டருக்கு கில்லி மீது என்ன காண்டு?
விடுதலை புலிகளை எதிர்க்கும் இட்லிவடையை கில்லியில் guest column எழுத வைத்தது சமீபத்திய காண்டு.
"சாவு செய்தியிலும் துண்டு போட்டு பேர் தேடி கொல்லும்" மதியக்கா கில்லியில் சேர ஆசைபட்டாராம். பாஸ்டன் சாமியார் நோ சொல்லிவிட்டாராம். இது ஆரம்ப காண்டு.
மதியக்காவிற்கு நோ சொல்லிவிட்டு வெங்கிட்டு அண்ணாவையும் விட்ச்சி ஏஞ்சலையும் சேர்த்து கொண்டது அடுத்த காண்டு.
தேன்கூட்டை ஆரம்பித்து தமிழ்மணத்தைவிட சிறப்பாக நடத்துகிற பாஸ்டனார் கில்லியிலும் இருப்பது இன்னொரு காண்டு.
தமிழ்மணத்தை விட்டு போனவர்களுக்கு தேன்கூட்டில் அதிகம் வாசிக்கபட்ட பதிவுகளில் பெயர் வருவதை அனுமதிப்பது அடுத்த காண்டு.
"நம்பகமான கிசுகிசுகளுக்கு" அணுகவும் - துப்பறியும் சோம்பு
100% கேரண்டி தரும் ஒரே கிசுகிசு நிறுவனம்
ஈழ தமிழன் துயர் துடைக்க
குரல் கொடுக்கும்
அ(ஆ)ரிய தமிழர் பத்ரி
வங்காலை படுகொலையை
தயங்காமல் எதிர்த்த தீரர்
ஈழ தமிழனென்றால்
ஈயம் பித்தளையென்று ஒதுக்கும்
தமிழ்நாட்டு மனம்மாற்ற
மனுக்கள் அனுப்பிய மாவீரர்.
பத்ரியை திட்டும் பார்லிபதர்களை
ஈழ தமிழரென்று அழைக்க மாட்டோ ம்
ஈழ தமிழரை இழிவு செய்வதாம் அது
ஈன தமிழரென்று அழைப்போம்.
வன்னிவேந்தன்
தமிழீழம்
அப்டிப் போடு போடு
டம்ஸ்ஸைப் போடு தன்னாலே
இப்டிப் போடு போடு
இடிச்சிப் போடு ஒய்யாலே
//பத்ரியை திட்டும் பார்லிபதர்களை//
தாலிபான் மாதிரி என்னாது இது?
//ஈழ தமிழரென்று அழைக்க மாட்டோ ம்
ஈழ தமிழரை இழிவு செய்வதாம் அது
ஈன தமிழரென்று அழைப்போம்.//
கவுஜ கவுஜ
//அப்டிப் போடு போடு
டம்ஸ்ஸைப் போடு தன்னாலே//
அப்டிப் போடு மாப்ள
//கால்கரி சிவா: (நாலுநாள் தாடியுடன் அசல் கவிஞராய்) அன்பர்களுக்கு நமஸ்காரம்//
ஆஹா...செலவை மிச்சப் படுத்தி சரக்கடிக்க காசு சேர்க்கும் தாடிக்கு இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா
//ஜேடி-ஜெர்ரி: யாருப்பா நீ?
சிவா: ஜில்லென்று ஒரு ஜிகர்தண்டா மாதிரி ஒரு பாட்டு ஸார். கேளுங்க...//
சாரி குசும்பா.. ரோலை மாத்தீட்டிங்க சான்ஸ் குடுத்துதான் பழக்கம் கேட்டல்ல
வாங்க கால்கரியாரே,
//சாரி குசும்பா.. ரோலை மாத்தீட்டிங்க சான்ஸ் குடுத்துதான் பழக்கம் கேட்டல்ல //
குசும்பே அதுதானே :-)
Post a Comment