Wednesday, December 20, 2006

குசும்பன் கிராக்கர்ஸ்


(மூட்ஸ் காண்டம் ஹிந்தி விளம்பரம்)
டாக்டர்: யே கியா ஹூவா? கைய்ஸே ஹூவா? (இது என்ன நடந்தது? எப்படி நடந்தது?)
யானை: அட அத ஏன் கேக்கறீங்க டாக்டர்? பைக்ல போகும்போது மூட்ஸ் காண்டம் வேணுமின்னு தும்பிக்கையால காதைத் திருகிட்டா? அதான்
எதுத்தாப்புல வந்த லாரியில மோதிட்டேன்.

சிக்கன் வைக்கச் சொல்லி அடிச்ச கணவனை ஜெயில்ல போட்டு வாரத்திற்கு ரெண்டு தடவ சிக்கன் போடுறாங்களாமே? சிக்கனையே
அடிச்ச இந்த சேவலுக்கு என்ன தண்டனை யுவர் ஹானர்?

(சேவல் பண்ணைக்காரனைப் பார்த்து) ஏதோ ஒரு சம்சாரத்தைக் கட்டிக்கிட்டு இவ்வளவு அலுத்துக்கிறானே? என் நெலைமையை
என்னிக்காவது நெனைச்சிப் பாத்தானா?
புல்லரிக்கும் தத்துவம்: கார்த்திகை மாதத்தில் எப்போது ஒரு பெண்நாய் நள்ளிரவில் கூட சுதந்திரமாக நடமாட முடிகின்றதோ அப்போதுதான் நமக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாய் கருத முடியும்.
நீதிபதி: நீ ஏன் தொட்டியிலிருந்த அந்த மீனைச் சாப்பிட்டாய்?
பூனை: Cat Fish'ன்னு போட்டிருந்ததே எசமான்

என்னதான் தமிழ்ல தலைப்பு வைச்சா வரிவிலக்குன்னாலும், 101 Dalmations படத்துக்கு 101 புள்ளி ராசாக்கள்'ன்னு பேரு வைக்கிறது
கொஞ்சம் ஓவருங்க...


Tuesday, December 19, 2006

கணக்கு பண்ணுவோமா

நேக்கு ஸமீபத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கணக்குப் போடுவதில் இஷ்டமே கெடையாது. இம்பூட்டு ஏன் கணக்கு பண்றதுல கூட கஷ்டப்படுறவன் நானாக்கும். பின்னே இப்பிடியெல்லாம் கணக்குப் பண்ணுனா நாடு தாங்குமா என்ன?





பி.கு. கணக்கு பண்ண உதவிய தோழிக்கு நன்றி :-)

Thursday, December 07, 2006

குழந்தைகள் நேரம்

ஸன் டிவியில் அனிதா குப்புசாமி நடாத்தும் நிகழ்ச்சியினை ஸமீபத்தில் காணும் பாக்கியம் கிட்டியது. குட்டீஸ் பல்வேறு ஆடை அலங்காரங்களுடன், மழலை மொழியில் பேட்டி கொடுக்க, அடடே இது நன்றாக இருக்கின்றதே சில பிரபலங்களை வரவழைத்து குசும்பு நேரமாக்க்கினோம். இதோ முதல் குழந்தைப் பிரபலம்:

அனிதா: வாங்க வாங்க கிரேக் சேப்பல். நீங்க போட்டிருக்கிறது கோமாளி வேஷமா?
சேப்பல்: ஆமாங்க
அ: சரி நீங்க என்ன செய்யப் போறீங்க? ஓகோ பாட்டுப் பாடப் போறீங்களா?
சே:
கோச்சாய் பிறக்க வைத்தான்; எங்களை
கோமாவில் இருக்க வைத்தான்
கோச்சாய் பிறக்க வைத்தான்; எங்களை
கோமாளி ஆக்கி விட்டான்

ஒருநாள் தோற்பார்
டெஸ்ட்டில் தோற்பார்
ஒவ்வொரு மேட்ச்சும் துயரம்
ஜெயித்தால் ஓடும்
தோற்றால் வாடும்
இதுதான் கோச்சின் வாழ்க்கை
இதுதான் கோச்சின் வாழ்க்கை

(ஓ'வென்று கதறி மன்னிக்கவும் ஓ'வென்று' என்பதில் கூட சேப்பல் வெல்லவில்லை... கதறுகின்றார். அடுத்ததாக...)

அனிதா: அடடே என்.சொக்கனா வாங்க வாங்க. என்னது லெட்டர் பேடும் கையுமா? ஓகோ எழுத்தாளர் வேடமா?
சொக்கன்: வேடமில்லை மேடம். இதுதான் ஒரிஜினலே.
அ: அப்படியா? நீங்க சொன்னா சரிதான். இப்ப என்ன பண்ணப் போறீங்க.
சொ: நானா. நானொரு கடிதம் வாசிக்கப் போகின்றேன். (கலைஞரின் கரகர குரலில்)
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே! தினமொரு கவிதை மூலம் உங்களைச் சந்தித்து வந்த என்னை நிந்தித்து இணையத்தில் எழுதி விட்டார்கள் என்பதறிந்து நீ எவ்வாறெல்லாம் துடிதுடித்திருப்பாயென்று எண்ணி எண்ணி மாய்ந்து போகின்றேன். அச்சுலகமென்னை அரவணைத்து ஆண்டுகள் சிலவானதால் இணையத்தில் நானொதுங்கி நாட்கள் பலவானதை நீயறிவாயென்றாலும், காற்றில் காகித வாட்கள் வீசப்படுவதைக் கண்டு நான் அஞ்சிவிடப்போவதில்லை என்பதை எண்ணிப் பார்த்து நீ கண் துஞ்சலாம். கண்ணில் படும் மதங்களையெல்லாம் காதலித்து வந்த இந்த வேசமில்லா தாசனுக்கு துவேசம் பட்டம் கட்டினாரே அய்யகோ! இதை விண்ணும், மண்ணும் தாங்காதே என்று நீ இறைஞ்சுவது என் காதிற்கு கேட்டது. நேற்று இணையத்தை மேய்கையிலே இன்று இருக்கிறதோ இல்லையோ அக்பர் கண்ட "தீன்-இலாஹி" மதத்தைக் கூட நான் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். எதிர்காலத்தில், இனி வரும் காலத்தில் உதிக்கப் போகும் மதங்களைக் காதலிக்கக் கூட என் இரும்பு இதயத்தில் இடமுண்டு என்று கூறிக் கொண்டு விடை பெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

(அனிதா மைக்கை அவசர அவசரமாக உருவிக் கொள்ள அடுத்தவர் உதயம்)

அனிதா: வாங்க வாங்க என்ன திருவோடும் கையுமா? நீங்க என்ன பிச்சைக்காரர் வேடமா?
ஈவிகேஎஸ் இளங்கோவன்: ஸாரி மேடம். நான் ஒரு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காரன்.
அ: (ஆஹா சன் டிவியில் தனக்கு ஆப்படிக்கப் போகின்றார் என நடுங்குகியபடி) நீங்க என்ன செய்யப் போறீங்க?
இ: வழக்கமான பஜனைப் பாட்டுதான் மேடம். (திருவோட்டை ஆட்டியபடி)

கலைஞரே கலைஞரே
கபடி ஆடும் கலைஞரே
ஆட்சியில் நீ
எந்த வகை கூறு

ஆட்சியிலே ரெண்டுவகை
மந்திரியுண்டு வாரியமுண்டு
ரெண்டில் நீ எந்தவகை கூறு

(பேக்கிரௌண்டில் கலைஞர் வாய்ஸ்; கபடி என்பது அவர் ஆட்டம். ஆட்சியில் பங்கில்லை என்பது எம் நாட்டம். இளங்கோவன் அழுதபடி "அம்மா ஆஆஆ அம்மா" என்று கண்ணைக் கசக்க வாசன் என்னும் குழந்தை சாந்தப்படுத்துகின்றது. இன்னுமொரு இணையப் பிரபலம்)

அனிதா: ஓ என்னது கையில் விளக்கோடு வருகின்றீர்களே... நீங்கள் கைவிளக்கேந்திய காரிகையா?
மு.சுந்தரமூர்த்தி: (இன்னொரு கையால் நடுங்கியபடி மைக் பிடித்து சுற்று முற்றும் நோக்குகின்றார்)
அ: ஏன் இப்பிடி நடுங்கிறீங்க?
சு: பயம். எதைக் கண்டாலும், கேட்டாலும், படித்தாலும் பயம்.
அ: என்னங்க நீங்க? ஸ்டூடியோ லைட் வெளிச்சத்திலேயும் "விளக்கோட" அலையறீங்களே... பிறகென்ன பயம்? வீர...
சு: (தடாலடியாய் குறுக்கிட்டு) என்னது வீரமணியா? எங்கே எங்கே?
அ: அட வீரத்தோடு இருக்கச் சொன்னேங்க. இப்பிடி திரா...
சு: என்னது திராவிடமா? தமிழா? தமிழ் மட்டுமல்ல எனக்கு கன்னடம் தெரியும். தெலுங்கு தெரியும். (மூச்சிரைக்கின்றது)
அ: திராபையா இருக்குறீங்களேன்னு சொல்ல விடாம தடுக்கிறீங்களே...சாக்ரடீஸ் என்ன சொன்னார் தெரியுமா?
சு: அய்யய்யோ இது திட்டமிட்ட சதி. எனக்கு சாக்ரடீஸ் தெரியாது. டயாபடீஸ் தான் தெரியும். கொஞ்சம் கொஞ்சம் ஆர்க்கிமிடீஸ் தெரியும்.
அ: சூர்ய...
சு: நாசமாய்ப் போச்சி. என்கிட்ட எப்பவோ படிச்ச சூர்யகலாவை ஏன் இங்க இழுக்கறீங்க?
அ: அட தேவுடா? நான் சூர்யனுக்கே விளக்கு பிடிப்பீங்க போலிருக்கே அப்பிடின்னு சொல்ல வந்தேன். ஆமாம் உங்க ஊரு MLA பேராவது தெரியுமா ?
சு: ஹிஹிஹி அதான் சூர்யகலா விஷயமா? என்னது MLA'வா? (மறுபடியும் நடுங்க ஆரம்பிக்க... அனிதா வாழ்க்கையையே வெறுக்கின்றார்)

(பிளாஷ் லைட்டுகள் மின்ன மின்ன "ரேம்ப்" என்றில் ரெமோவுடன் மின்னலுடன் கேட் வாக் செய்கின்றார் ஒருவர்)
கொஞ்சம் பருத்தி
கொஞ்சம் கஞ்சி
ஒன்றாய் சேர்த்தால்
கைத்தறி புடவை

கொஞ்சம் வேஷம்
கொஞ்சம் ராயல்
ஒன்றாய்ச் சேர்த்தால்
எந்தன் வாழ்க்கை

வசுந்த ராஜே ஏஏஏஏஏ
வசுந்த ராஜே ஏஏஏஏஏ

அனிதா: வாங்க வாங்க நீங்க என்ன மலைக்கா அரோரா கானா?
வசுந்தரேஜே சிந்தியா: இல்லீங்க மேடம். நான்தான் முதலமைச்சர்.
அ: என்னது தெலுங்கு பட டைட்டில் மாதிரி இருக்கே?
வ: மன்னிக்கணும். "நான்தாண்டி முதலமைச்சர்"
அ: என்னாது?
வ: மன்னிக்கணும். அப்டீன்னாதான் தெலுங்கு பட டைட்டில்ன்னு சொல்ல வந்தேன். நானொரு பாட்டுப் பாடப் போறேன்.

"காந்தி மகான் என்ற
காலைக்கதிரவன்
கைத்தறி அணிந்து
உலவச் சொன்னான்"

அ: ஆனால் காந்தியென்றால் RSS'ற்கு பிடிக்காதே மேடம்.
வ: (தெலுங்கு வில்லி பாணியில்) ஏஏஏஏய்ய்ய்ய்ய் இசுக்கு (என்று எகிற அடுத்த பிரபலம் திரையில் தோன்றுகின்றார்)

(கால்கரி சிவாவின் பத்து நாள் முள் தாடியுடன், கோர்த்துப் பின்னப்பட்ட தலைமுடிக் கற்றைகளுடன் சிம்பு)
அனிதா: வாங்க நீங்க யாரு? ரேப்பிசைப் பாடகரா?
சிம்பு: நாந்தாங்க சிம்பு. எங்கிட்ட வேண்டாம் வம்பு. நான் பத்து பிகரைப் பாத்தேன். மூணை ரவுண்ட் கட்டினேன். ஆனா ஒண்ணுகிட்ட ஒதை பட்டேன்.

லூஸுப் பெண்ணே லூஸ¤ப் பெண்ணே லூஸுப் பெண்ணே
லூஸுலதான் என்னைய உட்டே
லூஸா சுத்துறேன்

யம்மாடி ஆத்தாடி ஒன்னய எனக்குத் தர்றியாடி
கடிச்ச ஒதட்ட கடிப்போமா?
கிழிச்ச கையைக் கிழிப்போமா?
ஏ யம்மா யம்மா யம்மம்மா

(என்றவுடன் "குழந்தைகளை எண்ணி கட் செய்யப்படுகின்றார் சிம்பு. அடுத்து கலக்கல் காஸ்ட்யூமில் 60 வயது மதிக்கத்தகுந்த ஒருவர்)

அனிதா: என்னது ஜில்லுன்னு புறப்பட்டு வந்திருக்கீங்களே... அதென்ன சட்டையில யாரு இப்பிடி ஹோலி விளையாடி இருக்காங்க?
டோண்டு: நான்தான் டோண்டு. சட்டையில இவ்வளவு விளையாடி இருக்காங்கன்னா நானொரு தமிழ் வலைப்பதிவரென்று அர்த்தம்.
அ: (குழம்பியபடி) அப்படியா?
டோ: ஏன் சந்தேகமிருந்தால் எலிக்குட்டியை ஹைபர் லின்க்கின் மேல் வைத்துப் பார்த்தால் என் பிளாக்கர் எண் தெரியும். இதை உண்மையான டோண்டுதான் கூறினான் என்பதற்காக எனது பின்னூட்டப்பதிவிலும் நகலாய் இடுகின்றேன்.
அ: என்னாது எலிக்குட்டியா?
டோ: இப்படித்தான் ஸமீபத்தில் ஒரு டெலிமார்க்கெட்டிங் பிகரொன்று...
அ: (டென்ஷனாகின்றார்) வேறென்ன சொல்லப் போகின்றீர்கள்?
டோ: எனது கன்சூமர்களைக் கவர்வது எப்படி என்று பதிவிட்டதற்கு மொத்தமாய் முப்பது பின்னூட்டங்களே வந்தது. ஆனால் அந்தப் பதிவிற்கு ஏறக்குறைய...

(உடனே வெளியிலிருந்து ஒருவர் ஓடி வந்து " என்ன டோண்டு ஸார் இங்க வந்துட்டீங்க? வலைப்பதிவர் சந்திப்பு பக்கத்து ஹோட்டல்ல", என்று சொன்னவுடன் தனது கருத்துக்களை எந்த இடமானாலும் ஆணித்தரமாய் வைத்து விட்ட திருப்தியுடன் டோண்டு விடை பெறுகின்றார்)