Wednesday, December 20, 2006

குசும்பன் கிராக்கர்ஸ்


(மூட்ஸ் காண்டம் ஹிந்தி விளம்பரம்)
டாக்டர்: யே கியா ஹூவா? கைய்ஸே ஹூவா? (இது என்ன நடந்தது? எப்படி நடந்தது?)
யானை: அட அத ஏன் கேக்கறீங்க டாக்டர்? பைக்ல போகும்போது மூட்ஸ் காண்டம் வேணுமின்னு தும்பிக்கையால காதைத் திருகிட்டா? அதான்
எதுத்தாப்புல வந்த லாரியில மோதிட்டேன்.

சிக்கன் வைக்கச் சொல்லி அடிச்ச கணவனை ஜெயில்ல போட்டு வாரத்திற்கு ரெண்டு தடவ சிக்கன் போடுறாங்களாமே? சிக்கனையே
அடிச்ச இந்த சேவலுக்கு என்ன தண்டனை யுவர் ஹானர்?

(சேவல் பண்ணைக்காரனைப் பார்த்து) ஏதோ ஒரு சம்சாரத்தைக் கட்டிக்கிட்டு இவ்வளவு அலுத்துக்கிறானே? என் நெலைமையை
என்னிக்காவது நெனைச்சிப் பாத்தானா?
புல்லரிக்கும் தத்துவம்: கார்த்திகை மாதத்தில் எப்போது ஒரு பெண்நாய் நள்ளிரவில் கூட சுதந்திரமாக நடமாட முடிகின்றதோ அப்போதுதான் நமக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாய் கருத முடியும்.
நீதிபதி: நீ ஏன் தொட்டியிலிருந்த அந்த மீனைச் சாப்பிட்டாய்?
பூனை: Cat Fish'ன்னு போட்டிருந்ததே எசமான்

என்னதான் தமிழ்ல தலைப்பு வைச்சா வரிவிலக்குன்னாலும், 101 Dalmations படத்துக்கு 101 புள்ளி ராசாக்கள்'ன்னு பேரு வைக்கிறது
கொஞ்சம் ஓவருங்க...


7 comments:

Boston Bala said...

---101 Dalmations படத்துக்கு 101 புள்ளி ராசாக்கள்'ன்னு ---

: )

மற்றதெல்லாம் கொஞ்சம் dry humor?!

மாயவரத்தான் said...

என்ன ஆச்சு சார்!?

Anonymous said...

இதுவரை முகமூடி பிரசுரிக்காத பின்னூட்டம்:-

பார்ப்பனர்கள் அப்பாவை மாமா என்றுதான் அழைப்பார்கள் என்று பொட்டிகடை எழுதினார். அவரை சிறந்த பதிவராக பாஸ்டன் பாலா சொல்கிறார். அந்த பதிவில் உஷாவை தாக்கிவிட்டு பின் உஷாரென்று எழுதியதாக கோழைதனமாக பின்வாங்கினார் பொட்டிகடை. பொட்டிகடை சிறந்த பதிவர் என்றால் போலி டோண்டுவும் விடாது கருப்புவும் கோபித்து கொள்ள மாட்டார்களா. அவர்களுக்கும் ஏன் சிறந்த பதிவர் பட்டம் தரவில்லை பாலா. பட்டங்கள் விற்று தீர்ந்து விட்டனவா? கோபிக்காமல் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பாலா. உங்கள் வீட்டில் அப்பாவை மாமா என்றுதான் அழைக்கிறீர்களா பாலா. அப்படியென்றால்தான் பொட்டிகடையின் கருத்தை ஏற்றுகொள்ள முடியும். இப்படிபட்ட தரங்கெட்ட பதிவர்களுக்கு விளக்கு பிடித்துதான் உங்கள் பதிவில் விளக்கு எரிய வேண்டுமா பாலா. முகமூடி அவர்களே, இந்த பின்னூட்டத்தில் தனிமனித தாக்குதல் இல்லை. பொட்டிகடை போன்றவர்கள் பயன்படுத்தும் முற்போக்கு தர்க்கவாதம்தான் இருக்கிறது. இதை தயவுசெய்து அனுமதிக்கவும்.

Anonymous said...

முகமூடி

பழையபடி ஃபார்முக்கு வந்துட்டீங்க போல. வரும் பொழுதே வெங்கலக் கடையில் புகந்த யானை போலக் கலக்கியிருக்கீங்க.

இந்த பாபாவுக்கு ஒரு கடுமையான வியாதி உண்டு, ஒரு விதத்தில் குணப்படுத்த முடியாத வியாதி அது. எமெர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ்காரர்கள் தங்கள் ஜால்ராக்களைக் குறித்துச் சொன்னது "நாங்கள் அவர்களைக் குனியத்தான் சொன்னோம் அவர்களோ தரையில் தவழ்கிறார்கள்' என்று, அது பாபாவுக்கும் அவரைப் போன்ற இன்னும் பல அல்லக்கைகளுக்கும் அப்படியே பொருந்துகிறது.

முன்பொரு முறை இன்னுமொரு மூத்த வலைப்பதிவர் பாபாவை மிகவும் அநாகரீகமாகத் திட்டியிருந்தார். அது குறித்து நான் மிகவும் வருத்தப் பட்டேன். ஆனால் நான் அன்று அப்படி வருத்தப் பட்டதற்காக இப்பொழுது மிகவும் வருத்தப் படுகிறேன்.

முதெகெலும்பு இல்லாமல் நெளியும் மனிதப் புழுக்களில் இவரும் ஒருவர் இவரிடமிருந்து இது போன்ற பதிவுகளைத்தான் எதிர் பார்க்க முடியும். எனக்கு இவரது பதிவைப் படித்தால் மலத்தை மிதித்த அருவருப்பு ஏற்படுவதால் அந்த திறந்த வெளிக் கக்கூஸின் அருகில் செல்வதும் இல்லை. நான் இதை பாபாவிடம் நேரிடையாகவே பல முறைகள் சொல்லி விட்டென், இது போன்ற அசிங்கங்களைச் செய்வதை அவர் பெருமைக் குரிய செயலாகக் கருதுகிறார். உங்களின் இந்தப் பதிவையும் தான் நடத்திவரும் குப்பைத் தொட்டிகளில் ஒன்றில் வெக்கம் இல்லாமல் சேகரித்தும் வைப்பார் பாருங்கள். நீங்கள் எழுதுவது எல்லாம் சூடு சுரணை மானம் மரியாதை உள்ள உப்புப் போட்டுச் சாப்பிடும் மனிதர்களிடம் ஏறும், இவர் எல்லாவற்றையும் துடைத்து எறிந்தவர். கேவலம் ஒரு பதிவு உலகில் காலம் தள்ளுவதற்கே இப்படி இழி பிறப்பு பிழைக்கும் பாபா போன்றவர்கள் அரசியலில் சேர்ந்தால் இதற்கும் கீழே இறங்கி என்ன என்ன செய்வார்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இவரைப் பற்றி ஆரம்ப காலத்திலேயே மிகச் சரியாக வலையுலக ஜாம்பவான்கள் பலரும் கணித்து வைத்திருந்தனர். பாபா வலைப் பதிய ஆரம்பித்த புதிதில் அவரின் புத்தி குறித்து ஒரு மூத்த (வயதில்) எழுத்தாளர் மிகக் கேவலமான ஒரு கமெண்ட் அடித்தார் அதன் அர்த்தம் எனக்கு சற்று கால தாமதமாகத்தான் உரைத்தது.

பாபா எனக்கு நல்ல நண்பர்தான் இருந்தாலும் நான் சொல்ல நினைத்ததை சொல்லாமல் இருப்பது ஒரு நல்ல நண்பருக்கு அழகல்ல என்பதால் சொல்லி வைக்கிறேன். எல்லாற்றையும் படித்து விட்டு ஹி ஹி ஹி நீங்க சொல்றதும் சரிதான் என்பார். இவருக்கு எல்லாம் எத்தனை வயதானாலும் முதுகெலும்பு மட்டும் வளர மறுக்கிறது. ஆண்டவன் இப்படியும் சில பிறவிகளைப் படைத்து விடுகிறான் என்ன செய்வது ?

அன்புள்ள
ச.திருமலை

Anonymous said...

அட அப்பாவி அனானியே

உங்களுக்கு விபரமே தெரியாதா ? முதலில் பாபா 2006 10 சிறந்த பதிவுகளாக ஆப்பு, காமலோகம், கருப்பு பையன், விடாது கருப்பு, டூண்டு, போலி டோண்டு, போலி மாயவரத்தான், போலி ஹரிஹரன், அசுரன், மூர்த்தி என்றுதான் தேர்ந்தெடுத்து வைத்து போலி டோண்டுவாகிய மலேசிய மூர்த்தியிடம் கொடுத்து அப்ரூவல் கேட்டதாகவும்,மூர்த்திதான் பெரிய மனது பண்ணி இந்த முறை முதல் பத்து எல்லாம் என் கூட்டாளிகளுக்கே கொடுத்து விடுங்கள் என்று ஒப்புதல் கொடுத்ததால் அவர் சொன்ன புதிய லிஸ்டை போட்டு விட்டதாக பாபாவே தன் நண்பர்கள் குழாமிடம் சொல்லி சொல்லி, மூர்த்தி சாருக்கு எவ்வளவு பெருந்தன்மை பார்த்தீங்களா என்று புல்லரித்திருக்கிறார். பாபா என்ன அப்படியெல்லாம் தன்னிச்சையாக லிஸ்டு போட்டு விடுவார் என்று நினைத்தீர்களா ? போங்க சார் உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு.

PKS said...

திருமலை, உங்கள் கமெண்ட்டைப் படித்தேன். அப்போது மிகவும் கடுமையான வார்த்தைகளில் இருப்பதாகத் தோன்றியது. கடுமையை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். முகமூடி பிரசுரிக்காதது சரியே. குசும்பனும் ஏன் இன்னும் கமெண்ட் மாடரேஷன் போடாமல் இருக்கிறார். நேரில் சொல்லுவது வேறு. பொதுவில் எழுதும்போது - அதுவும் நண்பர்களைப் பற்றி எழுதும்போது - இந்தக் கடுமை தேவையில்லை என்பது என் எண்ணமாக இருக்கிறது. இதே மாதிரியான விமர்சனங்களை தனிப்பட்ட உரையாடல்களில்/மடல்களில் நாம் வைத்தபோது, தலையாட்டியும் ஒத்துக் கொண்டும், கன்சிஸ்டன்ஸியும் தைரியமும் இல்லைப்பா என்றும் சொன்னதற்கெல்லாம் சாட்சிகளும் ஆதாரங்களும் உண்டுதானே. ஆனால், இப்போது அனானி அவதாரம் எடுத்து, முகமூடி பதிவில் என்னைத் தாக்கி வந்திருக்கிற சில கமெண்ட்டுகளைப் பார்த்தபோது, "இவர்களுக்கு எல்லாம் உங்களைபோல எழுதுவதுதான் சரியோ என்று தோன்றுகிறது. :-) ஆனாலும், நான் முன்னரே சொன்னதுபோல, இது நேர விரயம். நேரடி பதில் வராது. அனானி பதில்தான் வரும். ..bble-ல் இருந்து பல அவதாரங்களில் பல பெயர்களில் வரும். நமக்குத் தெரியாதா என்ன இதுவெல்லாம். நியூ ஜெர்ஸியிலிருந்து தமிழறியாத ஓவியர், ....மேரூர்காரர் ஒருவர் என்றும் சிலர் அனானியாக ஆடலாம். பலமுறை பார்த்த விஷயம்தானே. யோசிக்கும்போது, அவருக்கும் அவர் இமேஜை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் செய்கிறார் என்று தோன்றுகிறது. அதனால் பழைய மாதிரி ஒதுக்கிவிட்டுப் போங்கள். காலப்போக்கில் கண்டுணர்வது யார் என்று பார்க்கத்தானே போகிறோம். பி.கே.எஸ். அலம்பலை எப்படித்தான் இன்னும் தாங்கறீங்களோ என்று ஓர் அனானி முகமூடி பதிவில் கேட்டிருந்தார். பி.கே.எஸ். அலம்பலை மக்கள் தாங்குகிறார்கள் என்று அவர் அறிந்து வைத்திருக்கிறார் போல. எனக்கே தெரியாத விஷயம் இது. அதற்காக தன்னை மறந்து தான் அறிந்த உண்மையைச் சொன்ன அந்த அனானிக்கு நன்றி.

- பி.கே. சிவகுமார்

சிறில் அலெக்ஸ் said...

படங்கள்பற்றிய குறிப்புக்கல் ரெம்ப நல்லா இருந்துச்சு.


:)