என்னாங்கடா அல்லாரும் டாப் பத்துன்னு பட்டயக் கெளப்பும்போது நீ மட்டும் டாப் டௌன் பத்துன்னு கத்துறியே கஸுமாலங்றேளா? நமக்கு டாப் டூ டௌன் குசும்புதானுங்களே... இதோ 2006 டாப் டௌன் டென் அவார்ட்ஸ்...
10. எட்டுப்பட்டி ராசா: பத்ரின்னா ஆருன்னே தெரியாத ஆளுங்க இருக்க முடியாது. இவுரு பொழுது போகாம பதிவு போடுறாரா இல்லே பொழுதைப் போக்குறதுக்கு பதிவு போடுறாரான்னு பலருக்கு கொயப்பம் இன்னும் இருக்கு. பிரச்சினையைப் போர்வையாப் போட்டு தூங்கற நம்ம மேரி ஆளுங்க இடையில கான்ரோவர்ஸின்னா ஸ்பெல்லிங் கூட தெரியாதும்பார் நம்ம பத்ரி ஸாரு. அப்பிடியிருக்கறச்சே எல்லாப் பிரச்சினைக்கும் அவர இழுத்து நீ ஜட்ஜா இரு, நீயே தீர்ப்புச் சொல்லுன்னு இணையத்துல இவர கட்டாய நாட்டாமையா ஆக்குறாங்க மக்கள்ஸ். இவுரோ சுத்தியலில்லாத நீதிபதியா இருக்க விரும்பாட்டியும், கையில சொம்பைக் கொடுத்து "எட்டுப்பட்டி ராசா" ஆக்கிட்டாங்கோ. புது வருஷத்துல இவர கண்டிப்பா பதினெட்டுப் பட்டிக்கும் ராசா ஆக்கிடுங்கப்பா. புண்ணியமாப் போகும். இதோ உங்களுக்காக சரத்குமார் வடிவேலுவுக்கு பெண் பார்க்கப் போன நகைச்சுவைக் காட்சி...
"(நீட்டி முழங்குறார்) ஐய்யா பத்ரி ஐய்யா! உங்ககிட்ட பிராது கொடுக்க பீர் வாயன் டமிள் பார்டெண்டர் வந்திருக்காக. வீரமான வன்னியன் வந்திருக்காக. சைக்கிள் கேப்புல வீரமணி வந்திருக்காக. எவர்கிரீன் இளைஞன் டோண்டு வந்திருக்காக. ஜெர்ஸிப் பசு திவ்யா வந்திருக்காக. இன்னும் அனானிமஸா அம்பது பேர் வந்திருக்காக. பத்ரி ஸார் கொஞ்சம் இப்பிடி வர்ரீயளா?" (கணப்பொழுதில் மின்னலாய்த் தோன்றி மறைகின்றார் பத்ரி)
9. புதுப்பேட்டை கண்ணன்: பிரச்சினைன்னா மின்னலாய் மறையும் பத்ரி பத்தாவது இடத்துலேன்னா, பிரச்சினைக்கு பின்னாடி எப்பவுமே இருக்குறவர் பிகேஎஸ்'ன்னு நெட்டுல பிட்டப் போடுறாய்ங்க. எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னா எல்லாப் பிரச்சினைப் புகழும் பிகேஎஸ்'க்கேன்னு சொல்றாங்கோ. இணையத்துல ஒருத்தன் இன்னொருத்தன போட்டுச் சாத்துனா அதுக்கும் இந்த பிகே"ஏசு" தான் காரணம்; அவருக்கு இவருதான் உந்துசக்தி; பிந்து சக்தி'ன்னு எச்ட்"ராவா"ஒளர்றாங்கோ. இவர வைச்சு பிரபலமான 2006 சொலவடை "ஆமை புகுந்த வீடும், பிகேஎஸ்ஸு பின்னூட்டம் உட்ட பதிவும் உருப்படாது". இதோ இவருக்காக இவரை இணையத்தில் மிகவும் விரும்பும் இரு நண்பர்களான சொனா சனாவும், சுனா மூனாவும் 'சூச்சூ'வென மியூசிக் போட்டு கோரஸாய்ப் பாடுகின்றார்கள்:
"எங்கும் இணையத்தில் உனைத் தேடி
இரவும் பகலும் அலைகின்றார்
எங்கும் உளது உன் வேலையாம்
எனினும் குருடர் காண்பாரோ?
எங்கும் ஒலிப்பது உன் குரலாம்
எனினும் செவிடர் கேட்பாரோ?
எங்கும் எதிலும் எப்போதும்
எல்லாமான பிகேஎஸ்ஸே"
8. பாசமலர்: இணையத்துல நேசமுடன் வெங்கடேஷ் கழண்டு போனாலும், பாசம் குறையாம வளர்க்கும் எங்கள் இணைய அக்கா துளசி கோபால் எட்டாவது இடத்தில். ஒருத்தர் பட விமர்சனம் எழுதினா ஹீரோவுக்கு என்னாச்சும்பார். கொஞ்சம் கசமுசான்னா எல்லாரும் ஒரு குடும்பம்ன்னு நெனைச்சிருந்தேன்ம்பார். பிரச்சினை வெடிச்சு அடங்கிப் போனவுடனே 'ஓ! இதுதானா விஷயம்'னு வெகுளியாக் கேப்பார். இவரு இந்த வருஷம் இன்னும் நெறைய ஊருக்கு டூரு போகணும். நெறைய பதிவுகள் போட்டு பேரும் பின்னூட்டமுமாய் வாழ வாழ்த்துவோம். இதோ இவருக்காக முதல் மரியாதை படத்திலிருந்து ராசாவே உன்னை நம்பி என்ற பாடலின் உல்டா:
அக்காவே உன்னை நம்பி
இந்த இணைய உலகு இருக்குதுங்க
பல பின்னூட்டந்தான் போட்டுட்டீங்க
அவை உசுர ரொம்ப எடுக்குதுங்க
பல புரியிற பதிவை
நாங்க பாடுபட்டு எழுத
அது புரியாத பதிவா?
உங்க பின்னூட்டப் பிழையா?
7. இம்சை அரசன் கடலூர் புலிகேசி: இவரோட அங்கத உணர்ச்சி அதீதமாக பொங்கி வழிவதை ஸமீபத்தில் பலரும் படித்து மகிழ்ந்தனர். இமேஜூ, டேமேஜு'ன்னு குதிப்பார். மரம் வளரும்னா தண்ணிய ஊத்தலாம். ஆனா இணையத்துல உங்க இமேஜு வளருமின்னா இந்த கடலூர் கண்ணாயிரம் சொல்றதக் கேளுங்க; அப்பிடியேFullலரிச்சுப் போவீங்க; "ஊட்டுப் பொண்டுகளையெல்லாம் அசிங்க அசிங்கமாத் திட்டி சுய பின்னூட்டம் போட்டுக்கணுமாம்". பாவம் ஒரு சங்கத் தலைவரா இருந்துகிட்டு இவரு இமேஜு டேமாஜாச்சுன்னு வைச்சுக்குங்க... இவரு வூட்டுப் பொண்ணுங்களுக்கு கஷ்ட திசைதான் போங்க. இவர் இன்னும் பல காமெடிப் பதிவுகளுடன் கனஜோராய்த் தொடர புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஒரு சின்ன பாடல்:
Fullலாங்குழலி கொடுத்த கடலூராரே
எங்கள் புரு"சோ"த்தமன் புகழ் பாடுங்களேன்
விழுப்புரத்தில் வெட்டுப் பட்ட தெருமரங்களே
எங்கள் கடலூர் காட்டான் சா"கசங்களை"ப் பாடுங்களேன்
6. மிஸ்டர் பஞ்சாபகேசன்: சேதியைச் சூடாத் தரேன்; சுவையாத் தரேன்னு கலக்கிக்கிட்டு இருப்பவர் இவருதான்னு ஆப்பண்ணா கைகாட்ட வுயுந்து அட்சிக்கினு நானில்லே அதுன்னு அலறும் ஆசாமி ஆறாவது இடத்தில். அது சரி இணையத்துல தகவலத் துழாவுறதென்ன அவ்வளவு கஷ்டமான விஷயமா என்னா? சங்கரா சங்கரா !!! சரி நீரே இட்லிவடையாகவும் ஆகுக! ஒன்றும் குடி முழுகி விடப் போவதில்லை! இல்லை ஐந்தவதாரத்தில் ஒரு ஓரமாய் நீவிர் இருப்பதாய்க் கூறினாலும் அடியேனுக்கு ஓகேதான். இவருக்காக ஆப்பண்ணாவின் ஸ்பெஷல் பாட்டு:
ஓரொண்ணு ஒண்ணு
ஈரெண்டு மேல்கைண்டு
புரிஞ்சிக்கடா என்னோட பிரெண்டு
பேருனக்கு ரெண்டு
கரும்பு கையில உண்டு
பஞ்ச பாண்டவரு ரோலு கூட உண்டு
5. முருகேசன் In திருவிளையாடல் ஆரம்பம்: கடகடா குடுகுடு பாஷயில, கலக்கல் தலப்பாக்கட்டு பிரியாணியில மாட்டுன கல்லு மாதிரி மேட்டருக்கு மேல மீட்டரு போடுற இந்த செந்திலாண்டவர் ஐந்தாவது இடத்தில். பேரில்லாதவரெல்லாம் பெயரிலி என்ற காலம் போயி, அழும்பு ஆர்ப்பாட்டத்துக்கெல்லாம் அடியேன்தான் காரணமென்று சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் மாமனிதர்களை நினைத்தால் சிரிப்பாய் சிரிக்கத் தோன்றுகின்றது. பன்மொழி வித்தகரே! உம்மைப்பற்றி எழுதியதற்காக
மீட்டருக்கு மேலப் போட்டுக் குடுக்காததால
மேட்டர் கொடுக்காம இருந்துடாதீங்கண்ணா!!!
4. பத்ரகாளி : கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்துச்சாம்'ங்ற மாதிரி இந்த மாமி போற இடத்துலெல்லாம் ஒரே ஜிங்கா டான்ஸ் போட, பின்னாடியே ஓடற பார்டிங்க இருக்குதுங்கோ. நாலாவது இடத்துல இருந்தாலும் இவரு எப்ப வேணாலும் மொதோ இடத்தை பிடிக்கலாம். இவருக்கு என்னா பிரச்சினைன்னா தான் இப்போ இணையத்துல எந்த கூட்டணியில இருக்குறோங்றதக் கூட இவரு முடிவு செய்ய முடியறதில்ல. நீங்க இப்போ இந்தக்கட்சிதான்னு முன்னாடி சொன்ன அதே பார்ட்டியே முடிவு செய்யுது. ஆஹா என்னா ஜனநாயகம் என்னா ஜனநாயகம்? மாமியும் ஸ்மைலி போடறாங்க; அப்புறம் அதையே முறுக்கி அழுவாச்சி காட்டுறாங்க. நம்ம வைரமுத்து ஸார் கூட இவங்க கதையை 'அழுவாச்சி காவியம்'ன்னு எழுத யோசிக்கிறாராம். இதோ இவருக்காக ஒரு பின்னூட்ட ஜிங்கா டான்ஸ் பாட்டு:
கேட்டேளா இங்கே
பதிவப் பாத்தேளா அங்கே
எதையோ நெனைச்சி
அதையே நெனைச்சேனா?
இணையமக்கள் மனசு போல இருப்பேன்
வேறெதுக்கு நுனிப்புல்லா இருக்கேன்?
வாங்கோணா
பின்னூட்டம்
தாங்கோணா
3. The Mask : 'எப்பிடியிருந்தா நான் இப்பிடி ஆயிட்டேனே'ங்ற விவேக் மாதிரி மொடங்கிப் போயி மூணாவது இடத்துல முகமூடி இருக்காரு. நேரில் ஆஜானுபாகுவாய் (நன்றி: டோண்டு ஸார்) இருந்தாலும், வருடி வருடி காய்த்துப் போன கரங்கள் (நன்றி: மூக்கனார்) கொண்டவராய் இருப்பார் என்று நினைத்தால் மனிதர் கை ஸாப்ட்டாய்த்தான் இருக்கின்றது. புச்சா அட்ச்சு ஆடாம, டௌன் பத்து For Dummies'ன்னு புளிச்சுப் போன பதிவுகளாய்ப் போடுறதுக்கு பின்னாலயும் புதுப்பேட்டை கண்ணன்தான் என்று ஊர்க்குருவியொன்று உச்சுக் கொட்டுகின்றது. அட ராமா ராமா!!! இவருக்கு காணாமல் போன ஏஜெண்ட் ஞானபீடம் ஒருமுறை பதிவிலிட்ட மாஸ்க் பாட்டை நீங்களே போட்டு கேட்டுக் கொள்ளுங்கள்.
2. கண்டதை (கட்&பேஸ்ட்) செய்கின்றேன்: ஒன்று இரண்டு மூன்றென்று பாடுவெனக் கட்டளையிடக் கந்தன் இல்லாவிட்டாலும், ஒ'ள'வையாராய் கண்டதுக்கும் நம்பர் போட்டாலும் போட்டார்... இவருக்கு நான் ஒரு நம்பர் போடாம இருக்க முடியுமா? இந்தா புடிங்க இரண்டாவது இடம். கண்டநாள் முதல் கடுப்பான திருமவுண்ட்டன் அடிகளாரின் 'Babble'ஆய் கவிதை ஒன்று இவருக்காக:
BaBa Blaksheep
Have You any Soup?
Yes Sir Yes Sir
Ten Cheap Soup(s)
Nine for my Masters
One for myself
None for the bloggers
who really worth the slot
1. மொதோ இடத்தை யாருக்குத் தர்றதுன்னு டைம் மேக'ஜின்' கணக்கா ரோசிச்சுப் பாத்ததுல மேல உள்ள ஆளுங்களைத் தவிர்த்து மத்த அல்லாரும் இந்த இடத்துக்கு ஒத்து வர்றாங்க. பார்ப்பன ஈயம், பித்தளை, துத்தநாகம், ஈழம், இலங்கை, உள்குத்து, பின்னூட்டக் கயமை, போலி, கொலசாமி என்று சொந்த செலவில் சூனியம் செய்து கொள்ளும் நம்மள விட்டா மொதோ இடத்தை யாருக்கு வுட்டுத் தர்றது?
அல்லாருக்கும் லேட்டானாலும் லேட்டஸ்ட்டா பு(கு)த்தாண்டு வாழ்த்துக்களோடு ச்சீய் யூ !!!
Friday, January 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
குசும்பரே
டெம்ப்ளேட்டை கொஞ்சம் சரி செய்யுங்கள். பாதி பதிவு எதுவுமே தெரியவில்லை.
குசும்பரே, மொதல்ல ஒரு நன்னி வெச்சிக்கிறேன். பாருங்க, எல்லாரும்தான் போட்டாங்க, ஆனா யாருமே எம் பேரை சேர்க்கலையேன்னு பீல் ஆயுட்டேன். பழைய கழிதலும், புதியன புதுதலும்
மனச தேத்திக்கிட்டாலும் நீங்க மட்டும் பழைய ஆளுங்களை (பெருச்சாளிங்கன்னு சொன்ன பொருத்தமா இருக்காது) ஞாபகம் வெச்சிருக்கீங்களே!!!
அடுத்து இந்த பதிவை படிச்சதும் இன்னொரு உண்மை பளிச்சின்னு புலப்பட்டச்சுதுங்க. என்னான்னா, அவங்க அவங்க, உஷா இந்த
கட்சி, அந்த கட்சின்னு கையைக் காட்டுராங்களே தவிர, யாராவது எங்கட்சின்னு அன்பா சொல்ராங்களான்னு பாருங்க, அந்தளவு
நல்ல பேரூ வாங்கி வெச்சிருக்கேன்
:-) அது சரி சொ.செ.சூ வெச்சி, அவுங்களுக்கு அந்தளவுக்கூட அறிவு இல்லையா என்ன?
அப்பால, அது என்ன அழுவாச்சி காவியம், :-))))))))))))))), இப்படி போடாதே, ஸ்மைலியானாலும் அளந்துப்போடுன்னு அட்வைஸ் வாங்கிவளை, அழுமூஞ்சின்னு சொல்வதை, என்னால ஏத்துக்க முடியாது :-)
பத்ரகாளி... ம்ம்ம்
பி.கு இது அட்டனஸ் கையெழுத்து இல்லைங்க. என்னமோ பாவம், பின்னுட்டம் இல்லையேன்னு வருத்தப்பட்டா மாதிரி
இருந்துச்சு. அதனால, விவரமா நாலு வரி எழுதியிருக்கேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
செல்வனாரே!
ஸமீபத்தில் பயர்-பாக்ஸில் கூட நம்ம பிளாக் ஜிலேபியா இல்லாமப் பாத்தேன். இன்னுமா டெம்ப்ளட்டுல பிரச்சினை? பாத்துச் சொல்லுங்க ராசா... டெக்னிக்கல் முடமான நான் முட்டுக் கொடுத்தாவது சரி செய்யிறேன்.
யக்கோவ்,
//பி.கு இது அட்டனஸ் கையெழுத்து இல்லைங்க. என்னமோ பாவம், பின்னுட்டம் இல்லையேன்னு வருத்தப்பட்டா மாதிரி
இருந்துச்சு. அதனால, விவரமா நாலு வரி எழுதியிருக்கேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் //
மொதல்ல புடிங்க புத்தாண்டு வாழ்த்துக்களை...
'ஆப்பு'றமா உங்களோட பின்னூட்டப் பதிவுக்கு நன்றி!!! :-)
நல்லவேளை பத்ரகாளின்னதுக்கு கும்முவீங்களோன்னு நெனைச்சேன். தப்பிச்சேன் !!! அட அப்பிடியாவது ஒரு விஜயசாந்தி ரேஞ்சுக்கு அடிச்சு ஆடுவேளான்னு ஒரு நப்பாசைதான் :-)
பழசான்னாதான் மீன் கொழம்பு ருசிக்கும்ங்கோ... ஆயிரம் டூப்ளிகேட் வந்தாலும் நம்மள மாதிரி ஆளுங்கள அசைக்க முடியுமா என்ன? :-)
அட எந்த கட்சின்னு தெரியிலியே? கிழிஞ்சது கிருஷ்ணகிரி... அப்ப நம்ம கச்சி இல்லியா? இன்னாமோ போங்க அநியாயத்துக்கு அழும்பு பண்றீங்க! :-)
அட ஸ்மைலிய அப்பப்ப முறுக்கிப் போட்டு கமெண்டு விடறீங்களே... அதுதான் அழுவாச்சி கமெண்டு. மத்தபடி நீங்க எப்பவுமே "ஸ்மைலீஸ் ராணி" :-))))))))))
திருப்தியா?
மறக்காம அட்டெண்டன்ஸ் போட்டதுக்கு நன்னி (அட ஒரு சின்ன பொடி கூட வைக்கிலேன்னா எப்பிடி?)
:-))))))))))))))
Post a Comment