Description Kusumbu
புது ப்ளாக் போடRaவாக்கு 400 எழுத்து description' படா பேஜார். நான் பட்ட பாடு இருக்கே... மூளையை (?) கசக்குனதுல ஒரு கன்சல்டன்ட் அளவுக்கு அறிவு முத்திப்போச்சு. அப்புறமென்ன...இவா description இப்படி இருந்தான்னு குசும்ப கலந்தப்ப....
ஆப்பு
எழுத்துப்போக்கு (அதாம்பா Verbal Dysentery) உள்ள தமிழ் வியாதியஸ்தருக்கு இங்கே இலவச ஆப்பு வைத்தியம் செய்யப்படும்
Arun's Views (அருண் வைத்தியநாதன்):
பேனாவைப் பிடுங்கினால்
பென்சிலால் எழுதுவேன்
பென்சிலைச் சிதைத்தால்
மார்க்கரால் வரைவேன்
மார்க்கரை நசுக்கினால்
கணிணியால் ப்ளாக்குவேன்
கணிணியை உடைத்தால்
பொளந்துபுடுவேன் பொளந்து
mynose (மூக்கன்)
Opinion is like a "nose". And everybody has one.
சோடா பாட்டில் (பாலா Jaya)
இறைவா இணயக் குசும்பனிடமிருந்து என்னைக் காப்பாற்று. மற்றவர்களை நான் வகுந்துடறேன்.
e-Tamil (பாஸ்டன் பாலா)
சென்றிடுவேன் இணையமெல்லாம். சுட்டிகள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பேன்.
என் வீட்டுத் தோட்டத்தில், படக் களஞ்சியம்(பாலா)
வணக்கம். எண்ணங்கள் இங்கே எழுத்தாகவும், வண்ணங்கள் அங்கே படமாகவும்...நன்றி....மீண்டும் சந்திப்போம்...விடை பெறுவது...உங்கள் பாலா.
/* அப்பாடி...மூச்சு வாங்குகிறது*/
மனவோசை (சந்திரவதனா)
அலை வந்து கரை சேரும். மனம் இன்னொரு வலைப்பூ செய்யும்.
* அஷ்டாவதானி அவதாரமெப்போ? :-)
ஒரு சைவமின் பிள்ளையின் தமிழ்க் குறிப்புகள் (சேரலாதன்)
* மாத்தாதேள். நேக்கு அசைவ கமெண்ட் அடிக்க மனசு கேக்கலை.
பிருந்தாவனம் (சின்ன கண்ணன்)
கொஞ்சம் கலக்கலாம் வாங்க
இட்லிவடை
A tamilblog named after the great tamil people who are fond of eating Idly & Vadai. Best eaten with Sambar2k, GunpowderXP and LinuxChatni.
நேர நிர்வாகம் (இளையதாசன்)
இது மற்றவர்களுக்காக எழுதப்பட்டது. எனக்காக இல்லை. (* கடைசியாகப் பதிந்தது 06 ஜூன் 04 ;-)
Karthik's Nothing but Blogs (கார்த்திக்ரமாஸ்)
இங்கே எனது பத்து சென்ட்டும், இந்தியா பேச பன்னிரெண்டு சென்ட்டும்
கரும்பு ஜீஸ் (கிருபாசங்கர்)
மொ(மு)த்துக்கள் இலவசம் அல்லது
உதவாக்கரையின் உரைகள் அல்லது
தேடியவை.குடித்தவை.சாப்பிட்டவை. (* சுவடு சங்கர் மன்னிக்க)
காதல் உலகம் (மன்மதன்)
இங்கே சுட்டி நான்காவது பின்னூட்டம் படிக்கவும்.
மனத்துக்கண் (பாரா)
கெட்ட மின்பையனின்(பிள்ளையின்?) ஒன்பது கட்டளைகள்...அல்லது
ஒரு கெட்ட மின்பையனின் அசைவ குறிப்புகள்
கொசப்பேட்டை டாட் காம் (KV ராஜா)
கொசப்பேட்டை தாதாவின் குண்(ஸ¤)டுகள்
சுவடு (சங்கர்)
அமுல்பேபியின் அக்குறும்புகள் அல்லது
திரு(ட்டு) முகத்தானின் திருவிளையாடல்கள் அல்லது
(தேவதையை) தேடியவை.....(தேவதையை) பார்த்தவை.......(தேவதையை) பதித்தவை.
மாஜிக் கற்றுக் கொள்ளுங்கள் (சின்னப்பையன்)
அப்ரக்க டப்ரா ... ஜீபூம்பா
சரித்திரப் பதிவுகள் (வந்தியத்தேவன்)
மூழ்கும் கலத்தின் சத்தம் நின்றுவிட்டது
வலைப்பதிவுகளுக்கான வலைபதிவு (வலைமதி???)
வலைஞர்களின் கூட்டாஞ் சோறு
டமாசு (வசந்த்)
இது உங்கள் பொழுதை போக்க இல்லை. எனது காதலை காட்ட எழுதப்பட்டது.
இந்தப் பதிவுல ஒரு மிஷ்டேக் உண்டு. கண்டுபிடிச்சிட்டேளா?
Wednesday, July 14, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஹீ, ஹீ,ஹீ. உங்கள் உழைப்பு ப்ரமிக்க வைக்கிறது "பாஸ்".இந்த பதிவு மட்டும் சொல்லலை, பக்கத்துல தொகுத்து இருக்கீங்களே வலைப்பதிவுகளை, அந்த அழகையும்தான் சொல்றேன்.
என்னோடதுலயும் லின்க்ஸ் சேர்க்கணும். RSS அப்டேட்டோட போடணும்னு ரொம்ப நாளா காலதாமதம் ஆச்சு.
அப்படியே என்னோடதுல போட அனுமதி please? வேணும்னா "தொகுப்பு உதவி: குசும்பர்"ன்னு போட்டுடறேன்? :-)
க்ருபா
Post a Comment