Monday, August 30, 2004

அன்புடன் அந்தரங்கம்

சும்மா குசும்பு பண்ணலாம்னு வலைய மேஞ்சுகிட்டு இருந்தேன். துணுக்கு மூட்டை பொன்னையா'வை (அதாங்க தினமலர்-வாரமலர் சினிமா கிசுகிசு அவுத்துவிடுவாரே) படிக்கப் போனா 'அன்புடன் அந்தரங்கம்' பகுதி கண்ணுல மாட்டுனது. ஆஹா விஸேஷமாயிருக்குமேன்னு படிக்க ஆரம்பிச்சா...அட சூப்பரா அட்வைஸ் பண்றா அனுராதா ரமணன். கொஞ்சு(ணூண்டு) தமிழ்ல 'பெப்சி'ப் பொண்ணு குமுதத்துல பேத்திண்டு இருந்தது. இந்த மாதிரி அட்வைஸ் தொடரே வேஸ்டோன்னு நினைக்கிறச்சே அனு மாமி கலக்கறாங்கோ!!!

நடுநிலைமையோட, பிராக்டிகலா பேசறவா கம்மியாயிண்டே வரச்சே, அனு வித்தியாசமானங்கதான்.
வி ஐ பி யார்?

ஏய் யவ்னிகா
Crete'டிலிருந்து வந்தவுடன் எழுதுகிறேனென்றேன்.
அச்சமுண்டு அச்சமுண்டு அச்சமான அச்சமுண்டு.
ஒரு போத்தல் ஒயின்
அலெக்ஸ் பாயில்
பேப்லோ நெருடா

போன்ற பல க்ளுக்கள் கொடுத்தும் யாருமே விஐபியை கண்டுபிடிக்கலியே...அவரு பேரு 'சாரு நிவேதிதா'.

இட்லிவடையை சரியா கண்டுபிடிச்ச பரிக்கு ஒரு 'ஓ'.

அடுத்த வலம் விரைவில்...

Monday, August 23, 2004

VIP வலைவலம் - 1

எதிர் பார்த்தேன். இப்படி ஏடாகூடமாக ஏதாவது செய்வார்கள் என்று. ரொம்ப நாளாச்சே அப்படின்னு chat பண்ணப் போனா விநோதமான புனைப் பெயரில் ஒரு உருவம் 'அரட்டை அழைப்பு' விட்டிருந்தது. என்னையும் நண்பனாய் ஏற்பாயாவெனெ. இதே 'குசும்பி' என்றால் உடனே ஏற்றுக் கொண்டிருப்பேன். ஏய் யவ்னிகா ஏன் பல்லைக் கடிக்கின்றாய்? 'குசும்பன்' என்றதும், யோசித்துதான் 'yes' என்றேன்.

உடனே அரட்டைக்கு ஆள் வந்தாயிற்று. சும்மா சொல்லக்கூடாது. குசும்பு பரவாயில்லை. net'ல தமிழ் பிளாக்ஸ் இருக்கிறதா சொன்னவுடன் ஒரு சிறிய ஆச்சரியம். அதுவும் நூற்றுக்கு மேற்பட்டவர் தொடர்ந்து எழுதுகிறார்கள் என்பது வியப்பின் உச்சம்.

குசும்பனோ உடனே 'விமர்சனம் செய்யுங்கள்' என்றவுடன் யோசனையாயிருந்தது. Crete'டிலிருந்து வந்தவுடன் எழுதுகிறேனென்றேன். மனிதன் விடவேயில்லை. சரி ஒழிந்து போகட்டுமென்று செய்வதாய் சொல்லித் தப்பித்தேன். ஒன்றிரண்டு விமர்சனத்துடன் தப்புவதாய் சித்தம். எதிர்(ரி)வினைகள் மற்றும் பின்னூட்டத்தில் எனக்கு எப்போதுமே அச்சமுண்டு அச்சமுண்டு அச்சமான அச்சமுண்டு.

குசும்பன் கேட்டுக் கொண்டதற்கிணங்க பெயர் ஊர் மறைத்து என் வலத்தைத் தொடங்குகின்றேன்.

========================================================
இவருடைய பழைய குப்பையைக் கிளறிப் பார்த்தால் ஏகப்பட்ட மாணிக்கங்கள். இப்போது ஏனோ வேகம் குறைந்துவிட்டது. நேப்பிள்ஸில் இருக்கும் நண்பர் முருகனிடம் சொல்லி ஒரு போத்தல் ஒயின் அனுப்பச் சொல்ல வேண்டும். கிரிக்கெட் குரு சொன்னபடி எழுத்துப் பிழையை குறைக்கச் சொல்ல வேண்டும். அலெக்ஸ் பாயில் கூட ஆரம்பத்தில் பிழையோடுதான் எழுதுவார். பின்னர் திருத்திக் கொள்ளவில்லையா?

கவிப்பேரரசின் கவிதையை கைமா செய்து காட்டிய கைவரிசையைப் படித்தவுடன் 'வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வாக்கு ஞாபகத்துக்கு வந்தது.

New Roman Empire என்பார்கள். There is nothing new and nothing Roman in it. ஆனால் எழுத்து ஜிகிடியால் சிரிக்க வைத்து, செய்தியாய் மாறிப் போய்விட்டது பேப்லோவுக்கும் பொறுக்காது. இவரது சேகரிப்புகளைப் (பேப்லோவின்) பார்த்துவிட்டு ஒரு நண்பர் குறிப்பிட்டது: 'இந்த உலகிலேயே இவ்வளவு அதிகமான குப்பைகளை ஒரே கூரையின் கீழ் பார்ப்பது இதுவே எனக்கு முதல் முறை!'

பி.கு. VIP யார்? (ஐய்யா VIP நடைய காப்பியடிச்சு நாந்தான் எழுதினேன்) அப்புறம் விமர்சனம் செய்யப்பட்ட வலைப்பூ யாது?
புதிய முயற்சி

இது புதுசு கண்ணான்னு சொன்னா பிலிமு காட்றதா பரி பாசு சொல்லிட்டார். ஆரம்பத்திலேயே பின்னூட்டமா? பலே பலே...

சமீபத்தில் ஒரு VIP'யின் தொடர்பு கிடைச்சது. பேசிண்டே இருக்கிறச்சே தமிழ் ப்ளாக்ஸ் பத்தி சொன்னேன். ஆளுக்கு பயங்கர ஷாக். உடனே நம்ம

லீலைகளை சும்மா அவுத்துவுட்டேன். மனுஷன் 'ஒரு மாதிரி' குசும்பர்தான். ரொம்ப ரசிச்சார்.

அவர் வலை வலம் வரப்போவதாய் சொன்னோன்னெ நேக்கு ஐடியா பிளாஷியது. நமக்குத் தெரிந்த VIP'க்களை வலைப்பக்கம் வலம் வரவைச்சா? ஓப்பனா இவா இவா இன்னின்ன பண்றா'ன்னு சொல்றதுக்குப் பதில் சூசகமா எழுதினா?...அதுவும் என் பதிவிலேயே...கொஞ்சம் 'ஹிட்ஸ்' (தர்ம அடிகள்பா) கூடுமே!

முதல் VIP நறநற'த்தபடி ஒத்துண்டுட்டார்.

ஆமாம் VIP(க்கள்) யாரு? எப்படி வலை மேயப் போறாரு(ங்கோ)?

உஷ்...பாக்கத்தானே போறேள். சீக்கிரம் சூப்பர் சூப்பரா எழுதுங்கோ. யாரு கண்டா? You are being read as I blog (we speak?).

Sunday, August 22, 2004

முற்றிலும் புதுமையான முயற்சியில் குசும்பன். அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும். பின்னூட்ட சக்தி பெரும்பாலும் வேண்டுகின்றேன்.

Wednesday, August 18, 2004

உஷாரான சீன அதிபர்

சீன அதிபர் அமெரிக்கா வந்தப்போ:

bush

அமெரிக்க அதிபர் சீனா சென்றப்போ:

bushjiang1412

உஷார் பார்ட்டிதான் !!!
அக்கம் பக்கம்

பீகார் பிரண்ட் வந்திருந்தார். சும்மா ஜோக்கு மேலா ஜோக்கா போட்டுத் தாக்கிட்டார். அதிலே ஒண்ணு உங்களுக்கு:

லல்லூவும் ராப்ரியும் தமது கல்யான நாளை கொண்டாடும் வேளை (குசும்பா ... ஆனலும் ஓவர் பிட்-அப்)

லல்லூ கொஞ்சலாய் கெஞ்சலாய் கேட்டார். ராப்ரியம்மா வாழ்க்கையில எப்பவாவது "அப்படி யிப்படி"ன்னு இருந்தியா?

ராப்ரி "சொன்னா கோவிக்க மாட்டியளே"

லல்லூ "இல்லடி செல்லமே"

"மூணு தபா இருக்கும்"

"சொல்லும்மா"

"ஞாபகமிருக்கா...நம்ம வீட்டு லோன் பிரச்சினை வந்துதே...அப்ப பேங்க் பிரசிடெண்ட் கிட்ட பேசப் (?) போனேனே? அப்புறம் பிரச்சினையே தீந்துடுத்தல்லவா?"

"என் செல்லமே (கில்லி பிரகாஷ்ராஜ் போல) அது நம்மோட வீட்டை காக்க காக்க அல்லவா? அடுத்தது?"

"உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ ஆபரேஷனுக்கு காசு பத்தாம போச்சே. அப்புறம் காசே வாங்காம ஹெட் டாக்டர் ஆபரேஷன் பண்ணினாரே?"

"அடடே அது என் உயிரை காப்பாத்த அல்லவா? பரவாயில்லை. கடைசியா?"

"அது வந்து...வந்து..."

"பரவாயில்லை சொல்லும்மா"

"பார்டி பிரசிடென்ட் ஆக உங்களுக்கு 174 வோட்டு தேவப்பட்டதே...?"

Sunday, August 15, 2004

காணாமல் போனவர் அறிவிப்பு - ரெண்டு

தமிழ்குடில்

கருணாகரமூர்த்தி என்ன ஓய் வாடகைக்கு விட்டு விட்டீரா? உம்ம வலைப்பூ பேரையும் விட்டுப்போன திகதியும் (13 டிசம்பர் 03) சந்தேகப்பு(கி)லி கிளப்புதும் ஓய்...

தேர்தல் 2004


மாலன்னய்யா மறுபடி பார்ப்பம். 2009'ல. இல்லன்னா சீக்கிரமே. 10 மே 04 காணவில்லை. முகமூடிடோய்...

முத்துப் பனிப்பூக்கள்

அய்யா முத்தய்யா...பனி காஞ்சு காலமாகுது...22 மார்ச் 04 கோடீஸ்வரன் கருத்தோட காணாம போயிட்டீரே?

கட்டைப் பஞ்சாயத்து

ஐயா பிராது கொடிக்கோணுமையா? எங்க போயிட்டீக? பொறணி எக்கிப்போச்சய்யா?

ஹீம்...இருக்கீயளா...தொலைஞ்சீட்டியளா?

ராஜா

ஒண்ணுமே வரல...சுட்டும் போது... என்னாச்சுபா????

மழைச்சாரல்

ரா.சுப்புலட்சுமியம்மா சுகுற்ரா பின்னூட்டம் விட்டதோட சரி...25 ஜூலை சின்னச் சின்ன தழும்புகளோட காணாமப் பூட்டாங்க...அம்மா வாங்க...நிறய எழுதுங்கோ...அதான் ஸ்மைலி பரிமாறிட்டோமே?
காணாமல் போனவர் அறிவிப்பு - ஒன்று

கீழ்க்கண்டவா ரொம்ப நாளாக் காணவில்லை. கண்டுபிடிச்சா நேக்கு பின்னூட்டம் போடுங்கோ.


ஆப்பு
வயது தெரியாது. கடைசியாய் ஹாலிவுட் நகரில் "வில்லுடன்" பார்த்ததாய் செய்திகள் கசிகின்றன. கற்பிற்கு பெயர்போன கதாபாத்திரத்தின் நாயகன், ஏக பத்தினி அவதாரத்தின் பேர் கொண்டவரென்னும் நம்பப்படுகின்றது. டி.ராஜேந்தரே...மன்னிக்க விஜய ராஜேந்தரே மயங்கும் வகையில் டங்டனக்கா போட்ட இவர் 19 மே 04'லிருந்து காணவில்லை.

பாட்டில் பாலா

"மை டூம்" என்று 28 ஜூலை கடைசியாய் கடிதமெழுதிவிட்டு இவரைக் காணவில்லை. இவர் வயது 22 (கடைசியாச் சொன்னப் பொய்). கூடவே சிக்(கன்) இருக்கலாமென நம்பப்படுகின்றது. ஹட்சன் மற்றும் கூவம் நதிக்கரைகளில் தேடுதல் முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

மன்மதன் (அவ்வப்போது அடிக்கடி காணாமல் போபவர்)

தனது புரட்சி(???)கரமான காதல் கவிதைகளால் காமினி மற்றும் சுடலைமாடசாமி போன்றோரைக் கவர்ந்தவர். நான்கு மாதத்தில் மூன்றே கடிதம் போட்டிரிக்கும் இவர் காதல் நெருப்பில் வீழ்ந்ததாய் சொல்வது நம்புமாறு இல்லை. கடைசியாகப் பார்த்தது 06 ஆகஸ்ட் 04.

தும்பை

தும்பை விட்டு வாலை பிடிக்கும் இந்தப் பாலா கடைசியாக "Spontaneous Emission" (தப்பா நினக்கிறீளே...அவரோட கடேசிக் கடிதமப்பா) செய்தது 20 பிப்ரவரி 04.

சேரலாதன்

இந்த சைவமின்பிள்ளை அடிக்கடி திருவிழாவில் காணாமல் போய்விடுகிறது. இணைய விக்ரம்/12 மாதிரி மாதமொரு (அட 12'ண்டால வகுத்திருக்கேன்பா) பதிவு செய்றாரு போல. அதுவும் வலைப்"போ"ங்றாமாரி சுட்டிகளாத் தரார். கடைசியா இவர் இலவச மென்பொருட்களைத் திருடுவது (download) எப்படின்னு கடுதாசி போட்டிருந்தாரு.

ஓடை

பாலம் கட்டிட்டாளா? பாபா கடேசிப் பின்னூட்டத்துல சிரிக்கிறார். துரைசாமியய்யா ரிப்போர்டிங் ஆபீஸர் வந்தாரா இல்லையா? பத்து நாள் இடைவேளை கேட்டக் கடைசிக் கடிதம் 07 ஜூன் 04.

தமிழ்க்கொங்கு

கரடி முழுத்தேனையும் குடிச்சிடுச்சா? 23 மே 04 முதல் என். (யோவ் இனிஷியல் ...) கணேசனைக் காணலைங்கோவ்

நினைவுகள்

கணேசா??? வாருமய்யா. ஜூலை 16 பாத்தது...

எண்ணங்கள்

என்னாங்க...30 மே'லேர்ந்து அம்போன்னு உட்டுட்டு போயிட்டீக...அசரீரி (யோவ் கடேசி பதிவு) சொல்லுது நீர் என் போல முகமூடிதான்...

நேர நிர்வாகம்

என்ன கடியாரம் காணாமப் போடிச்சா? போங்கடாங்கோ...

கார்த்திக்ரமாஸ்

ஏம்பா அடுத்த காண்ட்ரோவெர்சிக்காக காத்திருக்காதேப்பு. நன்னா எழுதுற. அடுத்து எழுது. 29 ஜூலைல போட்டுப்பாத்த. வா திரும்பி மோதுவம்.

தெர்மாமீட்டர்

ஏம்பா எம்மா நாள் சோதனை? பாத்து தெர்மாமீட்டர் பின்னாடி வெடிச்சிரப் போவுது??? ஹி ஹி என்னோட "நீங்கள் செய்யும் வேலை போரடிக்கிறதா?" பதிவு ஞாபகம் வந்திடுச்சி...
ஷாராக்னோ என்றால் என்ன?

அப்படின்னா ஒளிக்கற்றை. மேலும் இளமை, செக்ஸி, இன்னும் பல...

பேஷன் டிசைன் கம்பெனினியின் கான்செப்ட்: "உலகிற்கு நலமும், மகிழ்ச்சியும் இவ்வாறு ஆடை தந்து பரப்ப வேண்டும்"
sharango
ஆமாம் அம்மணியைப் பாத்தா தெரியல...

அப்புறம் கேர்ல் பிரண்டுக்கு (யோவ் எரிச்சலைக் கிளப்பாதேன்னு திட்டாதீங்க...) வாங்கிக் கொடுக்கலான்னு நினச்சா சாக்கிரதை. அம்மணி மேல போட்டிருக்கிறது (வேண்டாம் பாசு...அந்தக் கேள்விய நானே கேட்டுக்கிட்டேன்) மட்டும் $100.

வுடு ஜீட்...
நீங்கள் செய்யும் வேலை போரடிக்கிறதா?

அடப்பாவி...MS உதயமூர்த்தி, லேனா லெவல்லுக்குப் பேசறான்னு தப்பா நீனக்காதீங்கோ. ஆபீஸ்லேர்ந்து வர்றச்சே J & J (ஜான்ஸன் & ஜான்சன்) ரெக்டல் தெர்மாமீட்டர் வாங்கிட்டு வாங்கோ. அப்புறம் நிதானமா குளிச்சி முடிச்சி, சாப்டுட்டு ராத்ரி டிரஸ் போட்டுக்கோங்கோ.

அப்புறம் வசதியான பொசிஸன்லே உக்கார்ந்துண்டு தெர்மாமீட்டர் பேக்கிங்கை கவனமா பிரிங்கோ. பிரிச்சப்புறம் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எல்லாத்தையும் கவனமா படிங்கோ. க்வாலிட்டி அறிக்கைதான் முக்கியம். ஒவ்வொரு தெர்மாமீட்டரும் ஜான்ஸன் & ஜான்சன் இன்ஸ்பெக்டர்களால் பெர்ஸனலாக சோதிக்கப்பட்டது.

இப்ப மல்லாக்க சாஞ்சி யோசிச்சுப் பாருங்க. உங்க வேலை அவாளைவிட அவ்வளவு வலி தர்றதா என்ன?
இரவல் குசும்பு

ஒரு இறுதி ஊர்வலம். சும்மா 200 பேர் கறுப்பு கோட்டோட போறாங்க. முன்னாடி 2 சவப் பொட்டிங்க. அப்புறம் ஒரு நாயோட ஒருத்தர். அவர் பின்னாடி மத்தவாள்ளாம். நம்மைப் போல ஒர்த்தர் ஓடிப்போய் நாய் வச்சிருக்றவா கிட்ட,"சார் முத சவப் பொட்டியில யாரு?" ன்னாரு.

அவர்,"என் மனைவி"

"எப்படி இறந்தாங்க?"

"என்னோட நாய் கடிச்சி"

"இரண்டாவதுல?"

"என் மாமியார்"

"எப்படி இறந்தாங்க?"

"என்னோட நாய் கடிச்சி"

ஒரு நிமிஷம் கழிச்சி ரகஸியமாய் கேட்டார், "சார் ஒரு நாளைக்கு உங்க நாய் வேணுமே"

பதில் "யோவ் போய் பின்னாடி கியூவுல சேருய்யா"
ஆறு வேண்டாத வேலைகள் (?)

ஹி...ஹி...புரியுமே உங்களுக்கு (ரொம்ப நாளாச்சேன்னு)

1. ஏரோப் ப்ளேன் பாத்ரூமில்

வேண்டாப்பா...அப்புறம் சுளுக்கெடுக்கவே சொத்தழிஞ்சிடும்

2. பீச்ல

போல்ட் அண்டு பியூட்டிபுல்தான். ஆனா "அதுவும்" ஸேண்டும் (மண்ணும்) ஒத்துப்போகாது

3. காம சூத்ரா படிச்சுண்டே

முதல் பதில் படிக்கவும்

பி.கு. என்ன வேலைன்னு ஜொள் விட்டுண்டே கேட்காதேள். அப்புறம் மீதி மூணை சென்ஸார் பண்ணிட்டேன். வழக்கம் போல இது வெளி நாட்டுச் சரக்கு. "கிளாமர்லேர்ந்து" உருவினது. வர்ட்டா...
அமரிக்க "அங்கிள்கள்" (தொடர்ச்சி)

நம்ம பிரண்டு பெரிய ஐஸ்பாக்கெட்டை கண்ணைச் சுத்தி பொத்திக்கிட்டிருந்தார். தள்ளி விட்டுப் பார்த்தா சும்மா பாட்டில் சரக்க உட்டா மாதிரி கண்ணு ஜிவுஜிவுன்னு வரமொளகா கலருல. சுத்தி ஆரியோல் மாதிரி கரும் வளையம். தண்ணிலேர்ந்து தூக்கிப் போட்ட மீன் மாரி உடம்பு துடிச்சிக்கிட்டே (தூக்கிவாரி) போட்டிக்கினு இருந்துச்சி.

நம்ப மெக்ஸிகன் போலீஸ் வயக்கமான விசாரணை நடத்த, வெள்ளக்காரன் வித்தியாஸன் காட்னான். இதே ஆக்ஸிடெண்ட் ஆனப்புறம் இன்னொரு வெள்ளைக்காரர் (கவனிக்க: மரியாதை) விசிட்டிங் கார்டு கொடுத்து. "யப்பா அவசரமா போறேன். அந்த பொம்பளை மேலதான் தப்பு. போலீஸ் வந்தா என்னைக் கூப்பிடு. சாட்சி சொல்றேன்னு" போயிட்டார்.

வெள்ளைப் போலீஸ¤, குதிரை மாதிரி நின்ன பொம்பளைகிட்ட பத்து தடவையாவது "ஏம்மா நன்னாயிருக்கியா? ஏதாவது வேண்டுமா?" அப்பிடினு கெக்கே பிக்கே பேச, நம்ம தலீவரை கண்டுக்கவே இல்ல. ஏம்பா சட்சி கிட்ட பேசுன்னப்ப வேண்டா வெறுப்பா நம்பரை வாங்கி, அந்தப்பக்கம் பிஸின்னு சொல்ல எனக்கு டாப் எகிறியது. என்னோட செல்லில் நம்பரைப் போட்டு, சாட்சிக்காரரை மெக்ஸிகன் போலீஸோடு பேச வச்சேன்.

இடிச்சம்மாவோட சாட்சி யாரு தெரியுமா? பக்கத்திலே உட்கார்ந்திருந்த இன்னொரு அம்மா. இதென்ன நியாயம்? படமெல்லாம் போட்டிக்கினு, ரிவ்யூ கமிட்டி 2 வாரத்துல தீர்ப்பளிக்கும். சாட்சிகள் (?) கோக்கு மாக்கா (?) இருக்கறதால நான் யாருக்கும் டிக்கெட் தரல'ன்னு பெருந்தன்மையா சொல்லி போலீஸ் ஜீட் விட்டுச்சி.

2 வாரங்கழிச்சி இப்போதான் தீர்ப்பு வந்துச்சி. "Failed to yield Left Turn". அதாகப்பட்டது பிரண்டு பொண்ணோட காருக்கு வழி தரலையாம். பாவிங்களா...ரெட் லைட் ஜம்ப் பண்ணும் போது வழியெப்படிடா கொடுக்றது?

வக்கீல்ண்ட கேட்டா லெப்ட் டர்ன் கேஸ்ல எப்பவுமே இப்படித்தான். கோர்ட்டுக்குப் போனா ரெண்டு பேருக்கும் டிக்கெட் தருவா. தேவையா?

காரு போச்சி. கண்ணு நொள்ளைக் கண்ணாகயிருந்து தப்பிச்சுது. போலீஸ் புத்தி பயமாயிருக்கு.

வேற யாருக்கோ நடந்திருந்தா, "Stray Incident" அப்படின்னு விட்டுடலாம். ஆனா நானே பார்த்ததாலே லேசா "புட்டுக்கிச்சி".

அமெரிக்க அன்பர்களே...ஜாக்கிரதையாயிருங்கோ...

Saturday, August 14, 2004

அமரிக்க "அங்கிள்கள்"

ஏதோ நம்மவூர்ல இருக்கிற போலீஸை நக்கலடிப்பவாரா நீர்? இப்போ மேலே படியும்...

அமெரிக்காவில் போலீசைக்கண்டா "புட்டுக்கும்" அல்லாருக்கும். அவா நீதி/நேர்மை (கறுப்பர்கள் தவிர்த்து) பிரபல்யம். ஷெரீப், பார்டர்/ஹைவே பெட்ரோல், லோகல் போலீஸ் இப்படீன்னு வித விதமான போர்டு காராப் பாத்தாலே கண்ணு ஸ்பீடாமீட்டர் மேல ஆட்டோமேடிக்கா போகும்.

நம்ம பிரண்டுக்கு போன வாரம் ஒரு ஆக்சிடெண்ட் ஆயிப்போச்சி. நம்மவூரு மாரி இல்லாம இங்க டிராபிக் எல்லாமே "Keep Right". அப்படின்னா தலைகீழே (எல்லாமே).

பிரண்ட் லெப்ட் எடுக்கக் காத்திருக்க, எதிர்புறம் சிவப்பாக மாற திரும்பினார். விதி யாரை விட்டது? வெள்ளைக்காரியொருத்தி சட்டென்று ரெட் லைட் ஜம்ப் செய்ய நடுரோட்டில் பயங்கர மோதல். மோதியது வேன். நண்பரோடது மிட் சைஸ் கார். மூன்று முறை ரோட்டைச் சுற்றியபின் நின்றது.

நல்லவேளை உயிர் சேதமில்லை. ஏர் பேக் வெடித்துக் கிளம்ப மனிதனுக்கு தலை கிர்ரடித்து நடு ரோட்டிலேயே அமர்ந்துவிட்டார். புத்திசாலித்தனமாய் காரிலிருந்து செல்லை எடுத்துக் கொண்டே வெளியே வந்த்தால் முதல் போன் நமக்குப் போட்டார்.

ஸ்பாட்டுக்குப் போனா 2 போலீஸ் கார் இருந்துச்சு. ஆம்புலன்சும் கூடவே...ஒரு போலீஸ் வெள்ளைகாரர். இன்னொருத்தர் மெகிகன் (அட மெக்ஸிகனப்பா). அடுத்து நடந்ததை அடுத்த பதிவில சொல்றேன்.

Friday, August 13, 2004

கிருபா சங்கரர்

ஒரு வாரமா ஊர்ல இல்லை. வந்து பழைய கமெண்டைப் பார்த்தா கரும்பு சங்கரர் நமது லின்க்ஸ் தொகுப்பை ரசிச்சதோட தனது பதிவில போட்டுக்கலாமான்னு கேட்டிருக்கார். தன்னியனானேன். தாராளமா போட்டுக்கோங்கோ. அட...என்னை மாதிரி அறிவிலிகளிடம் அழகு இருக்கிறதா?

பாசு கிண்டலா கேட்டிங்களா? நெசம்மாவா?

குசும்பன்

Friday, August 06, 2004

ஆங்கிலம் வளர்ப்பது எப்படி?

என்ன இழவுடா இது? ஆச்சரியப்படுபவர்கள் தொடர்ந்து படிக்கவும்...

1. ஆங்கிலம் இங்லீஷ்காரன் கண்டுபுடிச்சதுன்னு ஷொல்லுங்கோ. மேல் நாட்டு மோகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஆங்கிலம் மணக்கும்.
2. அப்புறம் தொண்டரடிப்பொடியான், காக்கைப்பாடினியார் அப்படின்னு நச்சுன்னு புனைபெயர்லே, தப்பும் தவறுமா ஆங்கிலக் கட்டுரை போடுங்கோ. ஆங்கிலம் நச்சுன்னு வளரும்.
3. செம்மொழியில எவனாவது கட்டுரை போட்டா, சட்டையை உருவி அவன் நடுமுதுகை எப்படி சொரியிறான், கால்ல சப்பாத்து போட்டிருக்கானா என்று புலம்/குலத்தையே குடைஞ்சு வெள்ளாடுங்க. ஆங்கிலம் தகதகன்னு வளரும்.
4. ஆங்கிலத்துல இலக்கியம் படிக்கச் சொல்ல ஆளில்ல, ஆங்கிலத்துல படிச்சா கம்ப்யூட்டர்/டாலருன்னு அள்ளலாம், போன்ற சரித்திர உண்மைகளை புட்டு புட்டு வைங்கோ. சும்மா சூடு வெச்ச ஆட்டோ மீட்டர் மாதிரி ஆங்கிலம் ஜிவ்வுன்னு வளரும்.
5. இங்லீஷ் புலமை வேணுமின்னா ஷேக்ஸ்பியர் படிப்பா, கம்யூட்டருக்கும் ஆங்கிலப் புலமைக்கும் என்னா சம்பந்தம்? ஜாவா படிக்க இங்லீஷ் புலம என்னாத்துக்கு? அப்படின்னு எவனாவது நக்கலடிச்சா, அவனை உட்டுடு. ஏன்னா அதைக் கேக்கறது நாந்தான். குசும்பிடுவேன்.

ஆங்கிலம் தான் ஜோரா வளருதே? அப்புறமெதுக்கு குசும்புங்கிறீங்களா? அவா அவா ஏதோ தமிழ் தர்மாஸ்பத்திரியில் ஐசியு'ல அவஸ்தைப் படறா மாதிரி எழுதுறாளே?

இந்த மாதிரி கட்டுரை எழுதி தமிழை கருணைக்கொலை சேய்யாதீர்கள். கரம் சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்(ல்)கிறேன்.
குழந்தைங்க சமாச்சாரம்
==========================

கடந்த அஞ்சு நாளா ஒரே பிஸி. வழக்கம் போல கோக்கும் கையுமா, டிவி முன்னாடிதான்...ஒரே ஒரு வித்தியாசம் நான் பார்த்த சேனல்களைச் சொன்னால்

நம்பமாட்டேள்... ஷொல்றேன்.

போனவாரம் குழந்தை குட்டியோட பேஷா வாழற நண்பர் கூப்பிட்டிருந்தார். ஆஹா சோறு கண்ட இடம் சொர்க்கமல்லவா? உடனே ஒட்டிக் கொண்டேன்.

தமிழ்க் குடும்பம்தான். பிரீ ஸ்கூல் செல்லும் பெரிய பிள்ளை அருகே வந்து "அமீகோ"ன்னு சொல்லி கைகுடுக்க ஆச்சரியம். கொஞ்சம் ஸ்பானிஷ் (5
வார்த்தைகளே அறிந்தாலும்) தெரியுமாதலால் குழந்தையிடம் போட்டுப் பார்த்தேன் (குசும்பன் புத்தி சும்மா இருக்குமா?).

1-10 வரை கவுண்டிங், நடைமுறைச் சொற்கள், அடிப்படைக் கேள்வி/பதில் என்று பின்னியெடுத்தான். ஆனா தமிழ் மட்டும் தட்டுத் தடுமாறி...ஏம்பான்னு என் அமீகோவை (நண்பன்) கேட்க, கிடைத்த பதில் வித்தியாசமாயிருந்தது. "பெற்றோர் கற்றுக் கொடுப்பதை விட அண்டை வீடு, தாத்தா/பாட்டி இல்லாவிட்டால் டிவி இதில்தான் ஈடுபாட்டோடு கற்றுக் கொள்கிறார்கள் குழந்தைகள். என் பையன் ஸ்பானிஷ் கற்றுக் கொண்டது டோரா - தி எக்ஸ்ப்ளோரர் (Dora - The Explorer) என்னும் குழந்தைகள் நிகழ்ச்சி பார்த்துத்தான்".

வேற என்னென்ன குழந்தைகள் நிகழ்ச்சின்னப்போ, சாமி தலையே கிர்ரடிச்சிப் போச்சி...PBS Channel (ஆர்தர், பார்னி, பெரென்டைன் பியர்ஸ், கிலிப்போர்டு,

டிராகன் டேல்ஸ், செசாமெ ஸ்டீர்ட், டெலி டப்பிஸ்...) பார்னி என்கிற டைனாசோர் மூலம் குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை சொல்லிக் குடுக்கிறாங்க.

Sesame Street லாஜிக்கான சமாச்சாரத்தை அழகா சொல்லுது.

டிஸ்கவரி ஸ்கூல், நாக்கின் (புளூஸ் குளூஸ், ஊபி, டிவீனிஸ்), கார்ட்டூன் நெட்வொர்க், நிக்டூன்ஸ், நிக்கலோடியன், டிஸ்னி சேனல், இப்படி பல சேனல்கள், ஆயிரக்கணக்கான ப்ரொகிராம்கள்...

நம்ம ஊர நெனச்சா பத்திண்டு வரலே???
பாலியல் கல்வி
=================

Safe Sex is no Sex --- இதெப்படி இருக்கு? டெக்ஸாஸ் மாநிலத்தின் மேல்நிலை பள்ளிகளில் பாலியல் பாடமாய் வைக்கப் போகும் புத்தகங்கள் பற்றி மேலும் படிக்க இங்கே சுட்டுங்கோ...

Tuesday, August 03, 2004

புதிதாக வலை பதிபவர்களுக்கு

ஒரு 50 பதிவு போட்டுட்டா பெரியவனாயிட்டதா நினைப்பான்னு முணு-முணுக்காதேள். இது டெக்னிகல் விஷயமல்ல. சொ(நொ)ந்தஅனுபவ விஷயம்.

சிவப்பு விளக்கு:
=================

புதிய பதிவுன்னு ஊருக்குக் காட்ட வலைப்பூக்களின் வலைபூ பதிவுல உங்க பேருக்குத் தாண்டி சுத்தும். ப்ளாக் போட்ட ஜோரில ஆராவது நம்ப சைட்டுக்கு வரமாட்டாளான்னு மனசு அடிச்சிக்கும். கவுண்டர் போடுவேள். அப்புறம் கடைசி 24 மணி நேரம், 5 நாள் அப்படி யிப்படின்னு ட்ராக் பண்ணுவேள். ஒரு மண்ணும் நடக்கலேன்னா வெறுத்துப் போய் மத்த சிவப்பு விளக்கு பதிவுகளைப் (!@#) படிச்சுட்டு கமெண்ட்ஸ் விடுவேள். ஆனா இந்த பாயிண்டுலதான் சாக்கிரதையா இருக்கோணும்.

இப்படித்தான் உணர்ச்சி வசப்பட்டு வதனா அப்படிங்கறவங்க ப்ளாக்குல, "மிக நல்லா எழுதிறீங்க. வாழ்த்துக்கள். வலைப்பூவிற்கு வருக!", அப்படின்னு போடலாம்னு பார்த்தேன். நல்லவேளை, இதே பேர்ல இன்னொரு ப்ளாக் பாத்தா மாரி இருந்துச்சு. எட்டிப் பார்த்தா ஏழு பூக்கள். மவனே குசும்பன் கதை நாறியிருந்திருக்கும். இப்படித்தான் இன்னும் நிறைய பேர்: மீனாக்ஸ், சந்திரமதி, ரமணீதரன்,....கமெண்ட் போடறச்சே பாத்துப் போடுங்கோ... இவாள்ளாம் இணையத்துல பழம் தின்னு கொட்டையும் ஜீரணம் பண்ணவா...

முகமூடித் தொல்லை:
======================

அப்புறம் பின்னூட்டத்துல முகமூடித் தாக்குதலோ/தொல்லையோ (பாவி இதை நானா சொல்றது???) இருந்தா கவனமா பாருங்க. என்னை மாதிரி சில்லுவண்டுகளை விட்டுடுங்க. ஆனா வெயிட்டான ஐட்டங்கள் முகமூடி பேருல வந்தா அது எங்களுக்கு ஒரு அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்த பெயரிலி ஐயாவா இருக்கலாம். அவர் வந்தார்னா ஏதோ விசயம் இருக்கும். எப்படி வருவாரு, எந்த பேருல வருவாருன்னு அவருக்கே சில சமயம் தெரியாது. அதுனால சாக்கிரதையா முகமூடிகளுக்கு பதில் போடுங்க. யாரு கண்டா உங்க பக்கத்துல இருந்துகிட்டே முகமூடி தாக்குதல் நடக்கலாம்...

டெஸ்க்ரிப்ஷன்:
================

இங்கே சுட்டுங்கோ...

சுட்டிகள்:
==========

அதிதீவிரமா தேவைப்பட்டாலொழிய சுட்டிகள் கொடுக்காதீங்கோ. சுட்டிகள் வேண்டுவோருக்கென்று ஒரு வலைபோ (ஆமாம் அங்கே போனாலே போ'வெனத் துரத்திடுவாரு லின்க் போட்டு) இருக்கிறது. இங்கே சுட்டுங்கோ...

இரவல் சமாச்சாரங்கள்:
========================

இணையத்தில் பார்த்ததை, படித்ததை தமிழிலேயே கொடுங்கோ. பன்மொழி வித்தகனாக நீங்களிருக்கலாம். படிப்பவரை சோதிக்கவேண்டாம். ஆப்படிக்கிறாங்கோ !!!

வலைப்பூ சுட்டிகள்:
====================

நிறைய, நன்னா எழுதவா இருக்காங்கோ. அவா சுட்டிகளைக் கொடுங்கோ உங்க ப்ளாக்குல. தப்பித் தவறி உங்க ப்ளாக் பாத்தவாக்கு ஒரு நல்ல விஷயமாவது வேண்டாமா?

மேலே சொன்னதெல்லாம் சொந்த அனுபவம்தாம். மத்தபடி ப்ளாக்'ங்றது உங்க இடம். பூந்து வெள்ளாடுங்கோ !!!

Monday, August 02, 2004

போதுமடா சாமி

காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின்மேலே
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின்மேலே
ஆரிரொ ஆரோரோ ஆரிரொ ஆரோரோ

இது மூக்கரின் பதிவு.

வந்துத்துப்பா அரிப்பு, சுப்பம்மா சொரி(றி)யும் விளக்கம்

இருட்டறையில் பிணம் தழுவி
கலவிச் சுகத்திற்கு கட்டாயப்படுத்தி
இன்புறும் ஈன மனிதர்களின்
இரக்கமற்ற இச்சைகள்

சுப்பம்மா அவர்களே,

இடம்/பொருள்/ஏவல்'ன்னா என்னான்னு திரும்பி படிங்க (ERC' சோதரி). "If Rape is inevitable..." அப்படின்னு (மூக்கர் வேறு விதத்தில் சொன்னதை) உஷா என்பவர் சொல்லி தோழியரில் பின்னூட்டம் கொடுத்து, பிறகு பொழிப்புறை கொடுத்தபோதுதான் உண்மையான கருத்து விளங்கியது.

நான் நீங்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன். சொன்ன (சொறிஞ்ச) இடத்தைத்தான் இடிக்கிறேன்.

குழந்தை யோனியை கிழித்துவருவதைப் பார்க்க முடியாத இளகிய மனம் படைத்து, அதற்காக பிள்ளையின் ப்ருஷ்டத்தில் போடுவேனென குடும்பக் காதல் காட்டிய பதிவிலா பிணம் தழுவி, கலவிச் சுகம், ஈன மனிதர்கள்....இன்னும் பல CRAP.....

சொறிந்த இடம் தப்பு சுப்பம்மா. பொழிப்புறை இல்லாமலே புரிந்த கார்திக்ரமாசுக்கும், பொழிப்புறை எழுத வைத்த சொப்புலொட்சுமிக்கும், அள்ளிப் போட்டு அமைதி காக்கும் மூக்கருக்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்.

வைதேகி காத்திருந்தாள் வசனம் போல.....

போங்கடா உங்க பிரவக் காட்சியும்..பின்னூட்டமும்...