Wednesday, February 09, 2005

ஆபாசம், வக்கிரம், அளவுகோள்

அப்பாடி சூப்பர் பௌல் அமெரிக்காவுல எந்த mal-function'னும் (அதாங்க அசம்பாவிதம் சே...ஏமாத்திட்டானுங்க பாசு) இல்லாம முடிஞ்சு போச்சி. புட்பாலுன்னு சொல்லிட்டு முக்கா நேரம் கைல பந்தை எடுத்திட்டு ஓடறானுங்க. ஓடறவனை ஜல்லிக்கட்டு மாடு புடிக்கிற மாதிரி மத்தவுங்க விரட்டறானுங்க. நம்ம மர-மண்டைக்கு இலக்கியம் ஒருநாளு புரிஞ்சாலும் புரியலாம். ஆனா இந்த அழுகுணி ஆட்டம் மட்டும் புரியவே புரியாது. அப்ப எதுக்கு எட்டரை கோடி மக்களோட நீயும் பாத்தேன்னு கேக்காதீக...இதுக்கு மட்டும் பதில் வைச்சிருக்கேன்.

ஆட்டத்தைவிட சுவாரஸியமா இடைவேளைல நடக்கும் 'ஆட்டம்' பாக்கத்தான் டிவி முன்னாடி ஒக்காந்தேன். போனதடவை ஜேனட் ஜாக்ஸனும், ஜஸ்டின் டிம்பர்லேக்கும் (அதாம்ப்பா நம்ம பிரிட்டினி ஸ்பியர்ஸோட எக்ஸ் டாவு) 'தப்பாட்டம்' போட்டாங்க. ஆட்ட முடிவுல ஜஸ்டின் 'தெரியாத்தனமா' ஜேனட்டோட ஜாக்கெட்டை இழுக்க... ஒருபக்கம் கிழிந்து ஜஸ்டின் கையில் வந்துவிட... அப்புறமென்ன கோடானு கோடி ரசிகப் பெருமக்களுக்கு இலவச தரிசனம் கிடைத்தது. (ஏம்ப்பா பா.பா. அந்த போட்டோபடம் எங்கேப்பா கிடைக்கும்?) அப்புறம் பெடரல் அரசு தார்க்குச்சியோட அலைய ஆரம்பிச்சிருச்சி. ஆபாசத்தை ஊடகங்களில் பரவ விட மாட்டோம்'னு சபதம் போட்டு சகட்டுமேனிக்கு NFL, Fox TV'களுக்கு பைனை போட்டு தாளிச்சது. ஜேனட்டோ கூலா அது 'ward robe mal-function'னு சொல்லிட்டு போயிட்டாக. ஆஹா இப்போ புரியுணுமே நான் ஏன் நாக்கைத் தொங்கப்போட்டு பாத்தேன்ங்ற ரகஸியம்.

இந்த தடவை வயசான சர்.பால் மெக்கார்ட்டினியை (ஏதோ பீட்டில்ஸ் குழுவுல பாடினதா நெனைப்பு) போட்டு பாட உட்டாங்க. நல்லவேளை அவர் முழு டிரஸ்ஸோட பாடி முடிச்சுட்டார். பாக்ஸ் டிவி ஏதோ கொஞ்சம் ரசிகர்களுக்கு தீனி போட்டது. இடைவேளையில் பிட்டுப் படம் போட்டாங்க. GoDaddy.com என்பதே அந்த பிட்டுப் படம். வளமையான, வாளிப்பான (இந்த தினமலர் படிச்சுப் படிச்சு கெட்டுப் போயிட்டேன் பாசு) பெண்ணொருத்தி மீடியா சென்ஸார் செய்யும் கிழட்டு ஜட்ஜ்கள் முன்னால் விசாரணைக்கு வருவது போல் காட்சி அமைய, திடீரென்று மேலாடை ஏறக்குறைய ஸ்நாப் ஆக, ஏறத்தாழ ஜேனட் தரிசனம் கிட்டியது. ஜன்ம சாபல்யம் பலருக்கு. ஊடக தணிக்கையை (அய்யோ தமிழு வார்த்தை கெடைச்சிருச்சி) கிண்டல் செய்து வந்த வெளம்பரப் பிட்டுப் படம் இது. ஆனா ரெண்டாவது பகுதி இடைவேளையில மறுஒளிபரப்பா வரவேண்டிய அதே பிட்டுப் படத்தை பாக்ஸ் போடல. ஏன்னா பாக்ஸ¤க்கு புட்டுக்கிச்சி.

வெளம்பரப் படம் எடுத்த கம்பெனியோ இப்போ குய்யோ-முறையோ'ன்னு கூப்பாடு போடுது. அமெரிக்கா டிவியில இதைப் பத்தி விவாதம் அனல் பறக்குது. இந்த நாட்டுல எல்லாமே கோல்மால்தான். பெரிய பெரிய ஆட்டங்கள்ல 'cheerleaders' (அதாம்ப்பா ஆட்டக்காரர்களை உற்சாகப்படுத்துபவர்கள்) பெயரில் பொண்ணுங்க போடும் ஆட்டம் இருக்கே... சிலுக்கு எல்லாம் பிச்சை வாங்கணும். அது ஆபாசமில்லையாம். ரேடியோப் பொட்டியில F*** வார்த்தை பேசினா ஆபாசமாம். பொப்பிசை பாடகிகளான ஸிம்ப்சன் சகோதரிகளை அவர்களது அப்பாவே 'ஏடாகூட' போட்டோ செஸனுக்கு ஏற்பாடு செய்வார். அது ஆபாசமில்லையாம். கேட்டால் மார்க்கெட்டிங் தந்திரமாம் (மீனாக்ஸ் கவனிக்கணும்).

ஆபாசம்னா என்னா லிமிட்டுன்னு அமெரிக்கா குழம்புது. குழப்புது. (குழம்புற...குழப்புற'ன்னு பாட தோணுது).

கிளிண்டன் ஜிப்பை அவிழ்த்ததால டெமாக்கிரடிக் கட்சிக்கு வெள்ளை மாளிகை கதவை எட்டு ஆண்டுகளுக்கு மூடி விட்டார்கள். மோனிகா லீவின்ஸ்க்கி வெவகாரத்தை விசாரிச்ச செனட்டர் ஸ்டார் அறிக்கையைப் படிங்க. இணையத்துல இலவசமா உலா வந்துச்சு. சும்மா போர்னோ பத்திரிக்கை கதை தோற்கும். டீடெயில்ஸ் வரும் பாருங்க. அடா அடா அடா (பாரா சார் இந்த அறிக்கை படிக்க வோணாம். ஏன்னா பொம்மை ஏதும் இல்ல) அது ஆபாசமில்லையாம்.

அப்ப ஆபாஸத்துக்கு லிமிட் என்ன?

நம்மூரில பாய்ஸ், நியூ படங்கள் ஆபாசமானவைகளா? சிற்றிதழ்களில் குழூஊக்குறி போடாமல் 'WYSIWYG' முறையில் 'உள்ளது உள்ளபடி' எடுத்துரைப்பது ஆபாசமானதா? ஆம்பளை எழுதினா சரி ஆனா அதையே பொம்பளை எழுதினா ஆபாசம்'ன்னு ஆணாதிக்க போக்கை கடைபிடிப்பது ஊடக தர்மமா? அழகிப்போட்டி சீனாவிலேயே நடத்தி விட்டார்கள். பெண்ணியம் பேசும் (அல்லது பெருமை காப்பதாய் கதைக்கும்) குழுக்கள் இத்தகைய போட்டிகள் ஆபாசமானது என்று போர்க்கொடி பிடிப்பது சரியா? ஆபாசத்துக்கும், வக்கிரத்துக்கும் வித்தியாசம் என்னா?

அதே அளவுகோலை வைத்து 'இடுப்புல மச்சத்தை இப்ப காட்டுறேன். மிச்சத்தை அப்புறமா காட்டுறேன்'ன்னு நாட்டுப்புற பாணியில் திரைப்படப் பாடல் எழுதுவது சரியா? 'சிந்திய வெண்பனி சிப்பியில் முத்தாச்சு', 'எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன்', 'பூவில் வண்டு மோதும் கண்டு பூவும் கண்கள் மூடும்' என்று பூடகமாக, சூசகமாக 'அந்த விஷயங்களை' சொன்னால் சரியா? இல்லை ஙொய்யா மக்கா ஓப்பனாவே 'மேஜரானதும் பேஜாரானேன்', 'டேய் கையை வைச்சுக்கிட்டு சும்மா இருடா', 'யாழ்ப்பாணம் யானைத் தந்தம் என் மேல முட்டியது; நாகப்பட்ணம் கப்பல் தரையே லேசா தட்டியது' ன்னு பாடிக்கிட்டே போனா சரியா?

போன பதிவுல சொன்ன மாதிரி எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும். வாங்க மக்களே... நீங்க என்னா நினைக்கிறீங்க?

8 comments:

குசும்பன் said...

வாங்க கணேசன்,

தங்கபஸ்பமோ, சிட்டுக் குருவி லேகியமோ சாப்பிடுற 'வயசுக்கு இன்னும் வரல' (ஹிஹி டபுள் மீனிங்'ணா).

அன்புடன்,
குசும்பன்.

Boston Bala said...

'ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்...' (பாலைவனச் சோலை) பாடலையும் சேர்த்துக்குங்க.

(அப்புறமா, இந்த பா.பா. என்பவரிடம் படம் கேட்டிருக்கீரே; உங்க பதிவில் எவனாவது போதிய எச்சரிக்கை செய்யாமல் சுட்டி கொடுத்தால், இந்தியாவில் உள்ளே தள்ளப்படும் வாய்ப்பிருக்கிறதாமே? அப்படியா??)

Anonymous said...

//'எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன்'//

புரியலியே?

குசும்பன் said...

வந்தனம் பாபா,

ஆஹா சந்தனக் கிண்ணம் மறந்து போச்சே ;-)

அப்புறம் தாராளமா சுட்டியைக் கொடுங்கோன்னா. 'பிரேம்ஸ்' கண்ணாவை நான் பாத்துக்குறேண்.

முக்கியமா லிமிட்டைப் பத்தி ஒண்ணும் சொல்லலியே :-(

குசும்பன்.

குசும்பன் said...

ஐயா அனானிமஸு,

குசும்பன்கிட்டேயே குசும்பா? உம்மையிலேயே உமக்கு அர்த்தம் புரியாது? இதான்னே வேணாங்றது!!!

குசும்பன்.

dondu(#11168674346665545885) said...

செனட்டர் ஸ்டாரின் அறிக்கையின் சுட்டியைத் தர இயலுமா? அவரது ஆங்கிலம் அபாரமாமே. படிக்கலாம் என்றுதான். ஹி ஹி ஹி.

வெண்ணிற ஆடையில் சித்திரமே சொல்லடி என்றப் பாட்டில் ஒரு பல்லவி:
"பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம்
நீ செய்தக் கோலமல்லவா"

அன்புடன்,
டோண்டு ராகவன்

Boston Bala said...

லிமிட் எல்லாம் லிமிட்லெஸ்ஸா இருக்கணும்னு உங்க பதிவே கோடிட்டு காட்டுதே...?

கற்பூர புத்தி இருப்பவங்களுக்கு விவகாரமா பாட்டு எழுதவில்லை என்றால் கூட உள்ளே பொதிந்திருக்கும் 'மேட்டர்' புலப்படும் ;-)

>>>'இடுப்புல மச்சத்தை இப்ப காட்டுறேன். மிச்சத்தை அப்புறமா காட்டுறேன்

இதில் இறுதிப்பகுதியை சென்சார் வெட்டிவிட்டார்கள்!? ஒலிவட்டுக்களில் முழுதாகவும், சன் டிவியில் 'அமைதியான' இசையுடனும் காட்டப்படுகிறது.

எல்லாவிதமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், பாடல்களுக்கும் (அமெரிக்காவில் இருப்பது போல்) ரேட்டிங் கொண்டுவரலாம். 'மெட்டி ஒலி'யில் வசவு வார்த்தை வரப்போகிறது, மாமியார் மிதிபடப் போகிறார், ஆண்ணியம் பேசப்படப் போகிறது என்று பலவித வக்கிரங்களுக்கும் ஒரேழுத்து சின்னம் (சிம்பல்?) கொடுத்து திரையோரத்தில் வெளியிடலாம்.

பரி (Pari) said...

'சிந்திய வெண்பனி சிப்பியில் முத்தாச்சு', 'எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன்', 'பூவில் வண்டு மோதும் கண்டு பூவும் கண்கள் மூடும்'
>>>>>>>
:-O அடங்கொக்கமக்கா! இம்புட்டு இருக்குதா? :-O

நமக்கெல்லாம் சூரியன் படத்துல வர்ற மாதிரி
'மாங்கனிச்சாறும் செவ்விள நீரும'்...-இப்டி இருந்தாத்தான் புரியுது :(

அமெரிக்காவுல இருந்துகிட்டு இது பத்தியெல்லாம் கேக்கக்கூடாது. இந்தியாவுல பெரிய பெரிய ஊர்ல இருந்தா, இதப் பத்தி கேக்கணும்னு நெனைக்கவே கூடாது :P

'புள்ளி' தெரியாம 'பனியன்'(வடிவேலு பாணி) போட்டா நார்மல, அது மட்டும் தப்பித்தவறி தெரிஞ்சுட்டா 'ஆபாசம்'ங்றதுதான் நான் கண்ட அமெரிக்க அளவுகோல் :)