Tuesday, August 02, 2005

கதை விடும் காதை

நீண்ட நாட்களாகவே எனக்கும் அந்த ஆதங்கமிருந்தது. அமெரிக்காவிலோ, கனடாவிலோ அல்லது வேறு கண்டங்களிலோ (?) நடக்கும் இலக்கிய (வலைப்பதிவர் என்று வாசிக்க) கூட்டங்களின் போது பார்வையாளர்களாகவும், பங்கு பெறவும் வந்திருந்த இலக்கியவாதிகள் (அ·தாவது வலைப்பதிவர்கள்) பலரும் வெளியிலில் நின்ற படி ஆரஞ்சு ஜூஸ் குடித்தோ அல்லது கீழே மேலே சிந்தியபடி பியர் அடித்தோ தங்களுக்குள் பே(கீ)சிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து, ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசிக் கொள்வதற்கோ, சமீபத்தைய இலக்கியப் (வலை/வயிற்றுப்) போக்குகள் குறித்து பகிர்ந்து கொள்வதற்கோ சந்தர்ப்பம் இருப்பதேயில்லை என்று.

பொதுவாக தமிழ் வெகுஜன மற்றும் சிற்றிலக்கிய எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருப்பது அதுவும் தமிழில் வெகு அபூர்வமான ஒன்று. பொது இடங்களில் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசிக் கொள்வார்களேயன்றி நட்போடு பழகுவதோ, தங்களது படைப்புகள் பற்றி கலந்து பேசிக் கொள்வதோ சாத்தியமேயில்லை. சில்வியா பிளாத் சொல்வது போல இன்னொரு எழுத்தாளரைச் சந்தித்து நட்பு கொள்ளும் அளவு தான் இன்னமும் மனச்சிதைவு அடைந்துவிடவில்லை என்ற கூற்றைப் பொய்யாக்க விரும்பினேன். எஸ்.ரா. கூறுவது போல "ஒரு எழுத்தாளர் மற்ற வலைப்பதிவரோடு பழகுவதற்கு தடையாக இருப்பது அவரின் ஈகோ மட்டுமே. அதைக் களைந்து எறியும் போது நட்பும், பகிர்தலும் சாத்தியமே."

மேலும் வலைப்பூக்கள் ஒரு ஈகோ டிரிப் என்பதால் சமீபத்தில் 2 நாட்கள் வேகாத வெய்யிலில் வேகாஸில் கதை விடும் காதை என்ற இலக்கியச் சந்திப்பில் வலைப்பிரபலங்களையும், வெளியுலகப் பிரளயங்களையும் கூட்டாக இணைத்தேன். பல்வேறு உலக இலக்கியங்கள் குறித்தும், தமிழ் கூறும் நல்லுலகில் தவிர்க்க முடியாத சக்திகளான வலைஞர், பொருமா, இராமநீ(நே)சர், கோ.வை., ச்சூஜாதா ஆகியோரின் படைப்புலகம் பற்றியும் விவாதம் செய்தபடி, ஒன்றாக கேசினோவில் கேம்ளிங் செய்தபடி, ஆளரவமிக்க Crazy Horse'ல் அமர்ந்து விவாதம் செய்து கொண்டு இரண்டு நாட்கள் கூடியிருந்த சந்தர்ப்பம் ஏற்பட்டது.

வலைப்பிரபலங்களான சங்கட், கவி கருணாதாஸ், குன்னக்குடி ஓவியர், ஹல்வாசிட்டி பாபு, கவிக்குமார், பனாரஸ் பிரகாஷம், மாடர்ன் பொண்ணு , சிகப்பி (பெண்ணில்லாத சந்திப்பென்று யாரும் குறை கூறிவிடக்கூடாதல்லவா?) உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

வேகாஸில் சீசன் இல்லாத காலமென்றில்லையென்பதால் வெறிச்சோடாமல் இருந்தது. தேஜாவூ மகளிர் மட்டும் ஷோ காட்டும் இடத்தில் பகலிலும் கூட்டமிருந்தது. இரண்டு நாட்களும் ஸீஸர்ஸ் பேலஸ் பயணியர்(?) விடுதியொன்றில் தங்குவதற்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதல்நாள் காலை அமர்வில் பார்த்திபனும், வடிவேலுவும் பொத்தாம் பொதுவாக ஒரு உரையாடலைத் துவங்கி வைத்தனர். வடிவேலு 'குண்டக்க மண்டக்க' என்னும் தமிழ்த்திரையுலகில் புதிய புரட்சி செய்யப் போகும் திரைப்படம் குறித்து நீண்ட சொற்பொழிவொன்றை ஆற்றினார். குன்னக்குடி ஓவியர் அதிதீவிரமாக குறிப்பெழுதிக் கொண்டிருந்தார். இடையிடையே ஸீஸனில்லாத குற்றாலத்தில் ஐந்தருவியில் விழும் நீர் போல அரிதாக ஆங்காங்கே நகைச்சுவைக்கும் பங்கம் வைக்கவில்லை. குறிப்பாக அவர் பார்த்திபனிடம்," ஏய்யா குடைக்குள்ளே மழை ஏன் ஓடல?" என்று வினவ அதற்கு பார்த்திபன், "ஏண்டா நக்கலா... குடைக்குள்ளேயே மழை. எப்படியும் நனைஞ்சிட்டோம். அப்புறம் ஏன் ஓடணும்?" என்று பதிலுறுக்க வேகாஸே சிரிப்பு பயர் வொர்க்ஸில் குலுங்கியது.

அதைத் தொடர்ந்து சமகாலப் பதிவுகள், புனைவுகள், சிறுகதைகள் பற்றிய விவாதமாக அது வளர்ந்தது. ச்சூஜாதாவின் அறியா'யியல் பதிவுகள் பற்றி உரையாடல் திரும்பிய போது சங்கட்டின் பேச்சு வரா'லாற்றில் பொறிக்கத் தக்கது. "தினமணி கதிரில் ச்சூஜாதாவின் சிலிக்கன் சில்லுப் புரட்சி படித்து அதன்பின்னர் பல பக்கங்கள் கொண்ட பதில் எழுதினேன். அது உப்புமாவில் போட்ட உப்பைப் போல இடமே தெரியாமல் சென்று விட்டது. இன்று சிலிக்கன் செய்யும் புரட்சியினை 'கண்ணார' நமக்குக் காணக் கிடைக்கின்றது. இவரிடம் கருத்துக்காக இன்னும் கையேந்தி நிற்பவரைக் காணக் கண் கூசுகின்றது" என்றார். கவிக்குமார் சிறிதே உணர்ச்சி வயப்பட்டவராய்," பிரபலங்களின் பிழைகள் பிரசுரிக்கப்படுகின்றன. சாமான்யர்களின் நல்ல வலைப்பூக்கள் கூட புறக்கணிக்கப்படுகின்றன. வெகுஜன ஹோட்டலில் எளிமையாய்த் தருகின்றேன் என்று அரை வேக்காட்டு உப்புமா பரிமாறுவது ஆபத்தானதுதான்" என்றார்.

மதிய அமர்வில் எழுத்துகளும் மையின் நிறங்களும் என்ற தலைப்பில் மாடர்ன் பொண்ணு பேசினார். "இவ என்ன சொல்றான்னா, ச்சோவின் எழுத்தில் காவி நிறம், காநியின் எழுத்தில் (தற்சமயம்) பச்சை நிறம், பாரு நிவேதிதா எழுத்தில் எப்போதும் ஒரே பச்ச்ச்சை நிறம், சாலன் எழுத்தில் மஞ்சள் நிறம் பாருங்க பார்வையாளர்களே பாருங்கங்றா", என்று தனது தத்துவார்த்த கண்டுபிடிப்பாக்கத்தை சமர்ப்பித்தார்.

Expert Comments:

வடிவேல்: "ஏம்ப்பு இம்பூட்டு கலர்லேயா எழுதுவாய்ங்க?"
பார்த்திபன்: "டேய் வீணாய்ப்போனவனே. குமுதம் அரசு பேனாவுல என்னா மையி தெரியுமா?"
வடிவேல்: "என்னா மையி?"
பார்த்திபன்: "ம்ம்ம்ம்... ஏதோ லேகிய வைத்தியரு சொல்றா மாதிரி சொப்பன ஸ்கலிதமாம்"
வடிவேலு: "அது யாரு வைச்ச மையி? ஒரே சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு"

அதைத் தொடர்ந்து இன்றைய இ(சி)ந்திய இலக்கியப் போக்குகள் பற்றிய பார்வைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

மாலையில் வேகாஸ் ஷோக்களில் ஒன்றான நீராடியின் (Water Dance) முன்னால் யாவரும் ஒன்றாக கூடி பொருமா பற்றியும் குற்றால குறவஞ்சி பற்றியும் பேசியபடி சில்லென்று பியர் (காநி மதுவருந்தக் கூடாதென்றும் பியர் அருந்தலாமென்றும் கூறியிருந்தமையால்) அருந்தினோம். குற்றால குறவஞ்சியில் எத்தனை முறை 'கொங்கை'ப் பிரயோகம் வந்துள்ளதென்று புள்ளி விவரப் புலியான பெயரீதரன் கூற சபையே வியப்பில் ஆழ்ந்தது.

'இரவு இலக்கியத்தில்' (ஒண்ணாப் படிச்சு உசுரை வாங்காதீங்க :-) பெருகிவரும் அரசியல் பற்றிய விவாதம் சூடுபிடித்தது. பேச்சு முடிந்து யாவரும் உறக்கத்திற்கு திரும்பும் போது மணி காலை நான்காகியது. வேகாஸிற்கு விடியலேது? மறுநாள் காலை பத்து மணிக்கு மப்புக் கலையாமல் மீண்டும் ஏதேதோ உளராடல். இரவு வீடு திரும்பும் பயணம்.

இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற கதை விடும் காதை என்ற இலக்கியச் சந்திப்பில் நான் புரிந்து கொண்டது வலைப்பூ மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்குள் ஆரோக்யமான மாற்றங்கள் உருவாகி வந்து கொண்டிருக்கின்றன. எப்போதும் வலைப்பூக்காளர்க்கு வெகு ஜன ஊடகங்களின் வாயிலாக அருளாசிகளை சொல்லிக் கொண்டிருப்பதை விடவும் தனிப்பட்ட இது போன்ற சந்திப்புகளின் வழியாக புதிய படைப்பிலக்கியம் பற்றி பேசவும், புரிந்து கொள்ளவும் தயராகயிருக்கிறார்கள் என்பதே.

இதே போல இன்னொரு இலக்கிய முகாமை இந்த ஆண்டின் இறுதியில் நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

இந்த கூட்டம் முன்மொழிந்த சில விஷயங்கள் குறித்து தனியே பதிந்து தங்களது ஆலோசனைகளை பின்னூட்டத்தில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

21 comments:

முகமூடி said...

குமகடியும் நேம்லெஸ்ஸும் போன்ற பெரு இலக்கிய வாதிகள் இல்லாமல் கத்துக்குட்டிகள் எல்லாம் சந்திப்பு நடத்தியிருக்குகள்... அதற்கு ஒரு பதிவு வேற...

குசும்பன் said...

//குமகடியும் நேம்லெஸ்ஸும் போன்ற பெரு இலக்கிய வாதிகள் இல்லாமல் கத்துக்குட்டிகள் எல்லாம் சந்திப்பு நடத்தியிருக்குகள்... அதற்கு ஒரு பதிவு வேற... //

குமகடி சரி... அடுத்த ரவுண்டுல போட்டுக்கலாம். ஆனால் நேம்லெஸ் இருந்தாரேப்பா... நேம்லெஸா இருந்ததாலே பேரைப் போடலே...ஹிஹி :-)

Anonymous said...

கவி கருணாதாஸ்
:)

மாயவரத்தான் said...

யாமரவாத்தான்?

குசும்பன் said...

//யா'மர'வாத்தான்? //

கட்சி மாறியட்டியளா? :-)

குசும்பன் said...

அநானி,

எதுக்குப்பா ஸ்மைலி? *;*

குசும்பன் said...

சரி சரி அடுத்த எலக்கிய கூட்டத்துக்கு யாராரு வர விருப்பம்னு புடிச்ச பேரோட போடுங்க (குமகடி, யாமரவத்தான் போல...)

Anonymous said...

Gr8 laugh riot kusuvamban

Anonymous said...

//குற்றால குறவஞ்சியில் எத்தனை முறை 'கொங்கை'ப் பிரயோகம் வந்துள்ளதென்று புள்ளி விவரப் புலியான பெயரீதரன் கூற சபையே வியப்பில் ஆழ்ந்தது.//
:0)))

Boston Bala said...

வழி மொழிகிறேன்....

(Gr8 laugh riot kusuvamban) :))

குசும்பன் said...

//Gr8 laugh riot kusuvamban//

Thanks Anony and BB

குசும்பன் said...

Ganesan,

Visiting after a long time... Howdy?

yeppaa ekalappai velai seyyalai.. athan.. peteru... ithO ippavE sari paNNidurEn.

Thankspa!!!

Anonymous said...

//கதை விடும் காதை என்ற இலக்கியச் சந்திப்பில் வலைப்பிரபலங்களையும், வெளியுலகப் பிரளயங்களையும் கூட்டாக இணைத்தேன். //

kusumba kusumba ... :-)

துளசி கோபால் said...

குசும்பு கூடிக்கிட்டே போகுதே:-))))

துளசி.

குசும்பன் said...

Akka,

vaanga vaanga Nalamaa?

pari'Naama vaLarchi Akka ithu

:-)

தகடூர் கோபி(Gopi) said...

//சரி சரி அடுத்த எலக்கிய கூட்டத்துக்கு யாராரு வர விருப்பம்னு புடிச்ச பேரோட போடுங்க (குமகடி, யாமரவத்தான் போல...)//

நமது ச்சின்ன ஐய்யா டாக்ட்டரு கோ.பிருந்தாவனத்தாரை அழைக்காமல் இன்னுமொரு கூட்டம் நடக்குமேயானால் அதைப் பார்த்துக்கொண்டு கோடானுகோடி தொண்டர்களின் கைகள் பூப்பரித்துக் கொண்டிருக்காது என இந்த நேரத்திலே ஆணித்தரமாய் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்

குசும்பன் said...

அய்ங் ஜெய்ஸ்ரீயா?

என்னாப்பா நடக்குது இங்கே? தன்யனானேன். தன்யனானேன்.

அப்பப்ப இப்பிடி ஊட்டம் (?) கொடுங்க. பொளந்து கட்டிப் போடுவோம்ல.

:0)))

குசும்பன் said...

கண்ணா கோபிக் கண்ணா,

இப்ப என்ன ஆயிடுச்சி? அது பொதுக்குழுப்பா... நீங்க இல்லாம செயற் பொதுக்குழு கூடாதுப்பா.

ஆமாம் பூப்பறிக்க கோடரி எதற்கு?

LoL !!!

Anonymous said...

Gr8 fryin fe2dbac kusuvamban

குசும்பன் said...

//fe2dbac kusuvamban//

ஆஹா அநாநி... அதென்னப்பா feedback'ஆ?

மொத்தமா சேந்து என் பெயரிலி'யே குசும்பு பண்ணீட்டியளே :-)

Anonymous said...

This is TERRIFIC 'kusumbu' :)

உங்களை யாரும் மிஞ்ச முடியாது !!!!

enRenRum anbudan
BALA