அன்புள்ள பனாரஸ் பிரகாஷத்திற்கு,
வணக்கம்.
வலைப்பூவில் ஊசிப்போன உப்புமாவை கிண்டியுள்ளீர்கள். இது குறித்து என்னுடைய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அ. வலைப்பூக்களில் உப்புமா குறித்து திரு. பூண்டி புஸ்பராசு ஒரு பதிவிலிட்டிருக்கின்றார். அது கிரியா-ஊக்கியால் வெளியானது. பயிற்றம் பருப்பு, பயித்தம் பருப்பு என்று உப்புமாவாக்கம் (நன்றி திரு.சங்கட்) செய்யப்பட்டு, அச்சிறு சொல் பல பெரிய பத்திரிக்கைகளில் கையாளப்பட்டுகிறது. 1980 களிலும் பின்னரும் மீந்தஇட்லியிஸம் குறித்தும் அதனை வைத்து இட்லி-உப்புமா கிண்டுவதை பற்றியும் சிறுபத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எழுதியிருக்கின்றீர்கள். உசிலியிசம், அதன் நீட்சியான மீந்தஇட்லியிஸம் என்ற சொற்கள் புழக்கத்தில் இருக்கும் போது நீங்கள் கொடுத்துள்ள சொல் (ஊசிப்போனயிஸம்) பொருத்தமானதாக இல்லை.
ஆ. நீங்கள் ஊசிப்போனயிஸம் தெரிந்தது போல அடிப்படையை விளக்குகிறேன் என்று கிண்டியிருப்பவை குமட்டுதற்குரியவை. ஏனெனில் பருப்பு, சமாச்சாரம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு புது விளக்கம் தர முனைந்துள்ளீர். அந்த விளக்கம் அசுத்தமாக இருக்கிறது. பருப்பு, பருத்தல் போன்றதே உப்புமா உப்புமா? (பெயராகவும், வினையாகவும் ஒரே சொல் என்பதையே தத்துவக் கண்ணோட்டத்தில் சமாச்சாரம் என்றேன்) எந்தக் கண்ணோட்டத்தில் காண்கின்றோம் (குவியமா குழியமா என்ற ஆடிகளின் (வ)கையிலும் வேறுபடலாம்) என்ற தெளிவு வேண்டும். உங்களிடம் அது இல்லை. மாறாக நீங்கள் உப்பு தேவையான அளவு எடுக்கச் சொல்லியிருப்பினும் அதைச் சமைக்கும் போது கலக்கச் சொல்லாத உங்கள் மனம் போன போக்கில் உப்பு-சப்பின்றி கொண்டு விளக்க முயல்கின்றீர்.
இ. சைடு-டிஷ் குறித்து எழுதியுள்ளதும் பொருத்தமற்றதாக உள்ளது. சைடு-டிஷ், ஆர்லிக்ஸ் பையன் முன் வைக்கும் தத்துவ பதார்த்தங்களை ஒரிரு வாக்கியங்களில் விளக்குவது கடினம். ஒரே கல்ப்பில் ஆரஞ்சு ஜூஸ¥ அடித்து விட்டு எழுப்பும் கேள்விகள், சைடு-டிஷ்ஷின் பிண்ணனி, போன்றவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஆர்லிக்ஸ் பையனைப் போல் ஒரே வாக்கியத்தில் 'அப்படியே சாப்பிடுவேன்' என்று உ(கி)ளறுவதாலோ, பாபுவின் அறுசுவை டாட் காம் குறித்த புகழ் பெற்ற உப்புமாவ¨ குறிப்பிடுவதலோ தெளிவான புரிதல் கிடைத்துவிடாது. நீங்கள் செய்துள்ளது காரட் அல்வாவை கால் நிமிடத்தில் (காரட்டை நறுக்கிக் கொட்டு... ஜீனியைக் கொட்டு... கிண்டு... கிட்டியதே அல்வா என்று கூறி) செய்வதெப்படி என்று பிதற்றுவதற்கு ஒப்பாகும். பிரச்சினை என்னவென்றால் அல்வாவின் அரசியல் கோட்பாடுகளை பற்றிய ஒரு குறைந்தபட்ச புரிதல் பெற வேண்டுமானால் ஹல்வாசிட்டி பாபு, ஹல்வாசிட்டி கம்மி, திருநெல்வேலி அயங்கரன் போன்றோர் கிண்டுதல் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். உமக்கு உப்புமாவும் கிண்டத் தெரியவில்லை. அல்வாவும் கிண்டத் தெரியவில்லை. சும்மாவா சொன்னார்கள் கால் நிமிடத்தில் காரட் அல்வா கிண்டத் தெரியாதவன், உத்திரம் மீதேறி உசிலை உப்புமா கிண்டப் போனானாம்...உமக்கு கிண்டுவது போல் நடிக்கத்தான் தெரிந்திருக்கின்றது
ஈ. மீந்தஇட்லியிஸம் வேஷ்ட் செய்யா பொறுப்புகளையும், மறுபயன்படுத்தல் (reuse?) அறநெறிகளையும் குறித்துப் கிண்டிய/கிண்டும் தத்துவம், இட்லி உப்புமா வேண்டுமா என்ற தனிமனித சுதந்திரம், அட உப்புமாதானே தெரிவு, இருப்பு(மா), மதியீடுகள் போன்றவை முக்கியமானவை. உப்புமாவாதிகளை உசிலிசார் உப்புமாவா(வியா)திகளாகவும், உசிலி நம்பிக்கையற்ற, உசிலி வெறுப்பு இயல்பான ரவா நேசமிக்க உப்புமாவா(வியா)திகளாகவும், பிரிக்கலாம். உப்புமாவாதிகளை வெறும் கிண்டுபவர்கள் என்று சொல்வது அறிவிலித்தனம். அது அவ்வாறு கிண்டியவரின் பொறுப்பற்றதன்மையினை, அறியாமையினைக் காட்டுகிறது.
உ. கொள்ளுகாரப் பருப்பு, துளஸிஸ் ஸ்பெஷல் குருமா, முத்துப் புலவு, கோழிக்கறி பிரியாணி இவை குறித்தெல்லாம் விரிவாக எழுதியவர் பாபு. இன்னும் சொல்லப்போனால் கோங்குரா, கிச்சடி சோறு ஏன் காரட் பொங்கலையே கிண்டியவர் பாபு. ஆனால் உங்களுக்கு உப்புமா கூட சரிவர கிண்டத் தெரியவில்லை. கிண்ட முடியவில்லை என்றால் கூட பர்ருவாயில்லை. ஆனால் உப்புமா குறித்து ஏனிப்படி தப்பும் தவறுமான புரிதல்கள்? இந்த லட்சணத்தில் முக்கியமான ஷோ'பிஸ்ஸான' சேங்கர் சமூக விஞ்ஞானி குறித்து வேறு எழுதுகிறார்.
ஊ. (ஊஊஊஊஊ இன்னும் கொஞ்சம் ஊளைகள்)
எ. (என்னயென்ன என்னயென்ன பெயர்களை உதிர்ப்பது என்னயென்ன என்னயென்ன)
ஏ. ஏன்னா மொத்ததில் நீங்கள் எழுதியுள்ளது உளறல். தமிழில் அதிகம் பேர் படிக்கும் நடுநாயகமான உங்கள் பூவில் இப்படி ஒரு குறிப்பு வெளியாகியிருப்பது வெட்கக்கேடு.
நான் எழுதியுள்ளது குறித்து உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கலாம். தயவு செய்து நான் தனியஞ்சலிலே கொடுக்கப் போகும் இணைய முகவரிகளில் உள்ளவற்றைப் பாருங்கள். நான் சொல்வது எந்த அளவு சரி என்பது உங்களுக்குப் புலப்படும். பாபுவின் வலைப்பதிவினையும் பாருங்கள். அதில்பாபுவின் வலைப்பதிவினையும் பாருங்கள். அதில் புளி அவல் உப்புமா குறித்து ஒரு அத்தியாயம் உள்ளது. மேலும் மனோகரா போளி, கருப்பட்டிக் களி ஏன் பிள்ளை அல்வா குறித்தும் அவர் அதில் எழுதியிருக்கிறார்.
நீர் கிண்டியுள்ளது பதிவாகி வாசக/வாசகியர் வாயிலும் வயிற்றிலும், எழுதியுள்ளதில் பிழைகள்,தவறுகள் இருப்பதால் அதைப் பொருட்படுத்தி கிண்டாமல் கிளறாமல் இருக்க வேண்டாம் என்றும், இத்தகைய குறிப்பு வெளியானது குறித்து வருத்தம் தெரிவித்தும் கிண்டியவர் என்ற முறையில் நீங்கள் மீண்டும் கிண்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (அட நொக்காமக்கா :-) மீந்தஇட்லியிஸம், ஊசிப்போனயிஸம் குறித்து வலைப்பூவில் யாரேனும் போட்டி வைக்கலாம். இக்கடிதம் என் தனிப்பட்ட முறையில் எழுதப்படுகிறது. இதற்கு எந்த ஒரு அமைப்பிற்கும், நிறுவனத்திருக்கும் தொடர்பில்லை.
இதைப் படித்தமைக்கு நன்றி
இவண்
Kவி கருணாதாஸ்
இக்கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பபட்டது.
------------------------------------------------------------------------------------------
இது போன்று எழுதுவது மகிழ்ச்சியினைத் தரும் காரியமல்ல. தமிழ் வலைப்பதிவுகளில் யாரேனும் இது குறித்து எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.யாரும் எழுதவில்லை. பனாரஸ் பிரகாஷத்தின் பதிவு வெளியாகி 24 மணி நேரங்கள் கழித்(ந்)தே இதை எழுதி அனுப்பினேன். நேற்று வலைப்பதிவாளர் ஒருவர் முகமூடிக் கதிரில் கோஸ்ட்டா ராஜா என்பவர் எழுதியிருந்த கட்டுரையினை இட்டிருந்தார். அதிலும் இது போல் பல உப்புத், தப்புப் பிழைகள். அக்கட்டுரை ஒபன் கு(தி)ருமா குறித்தும், கூண்டு ரவா குறித்தும் தவறான தகவல்களைத் தருகிறது. இப்படிப்பட்ட சப்பை மேட்டரை தமிழில் வெளிவருவது வாசகர்கள் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தும். எளிமையாக கிண்டுகின்றேன், சாப்பிட சுவாரசியமாக பரி'மாறுகின்றேன் என்று எழுதும் போது பொறுப்புடன் தகவல்,கருத்துப் பிழைகள் இன்றி கிண்ட வேண்டும். நாம் கிண்டியது சரிதானா என்பதை குறைந்தது இரு முறையாவது ருசி பார்க்க வேண்டும்.
இப்படிப்பட்ட கேட்டுரைகள் வெளியாவதை விட தமிழில் இவை குறித்து எழுதப்படாமல் இருப்பதே ஒருவிதத்தில் மேல்.தவறான கிண்டுதலை விட கிண்டாமையே பரவாயில்லை என்று கருக'க் கூடிய வகையில் கிண்டுதல்கள், கிளறுதல்கள் தமிழில் எழுதப்படுவதும், அவை வெளியாவதும் கேலிக்கூத்துக்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
Wednesday, July 27, 2005
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
எல்லாம் இருக்கட்டும்,
//Kவி கருணாதாஸ்// இதுலே வ்ர்ற
'Kவி' க்கு என்ன அர்த்தம்?
எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகணும்!
// இப்படிப்பட்ட கேட்டுரைகள் வெளியாவதை விட தமிழில் இவை குறித்து எழுதப்படாமல் இருப்பதே ஒருவிதத்தில் மேல்.தவறான கிண்டுதலை விட கிண்டாமையே பரவாயில்லை //
நீங்கள் சொல்வது மிகவும் சரி... சாப்பிடுவதற்கு கடினமாகவும் பார்ப்பதற்கு குமட்டலாகவும் உள்ளது... இது போன்றே அடுத்த கட்டுறையும் எழுதுங்கள்...
முகமூடி
அக்கா அக்கா மாட்டி வுட்டுடாதீங்கக்கா...
அப்புறம் நான் கேவி கேவி அழுகோணும்! விசி(த்)தா அக்கா அழ முடியும்?
புரியாதது மாதிரி நீங்க கமெண்ட் அடிச்சது எனக்குப் புரியாதா என்ன?
என்ன சந்தேகம் தீர்ந்ததா?
:-)
உசிலியிசம், அதன் நீட்சியான மீந்தஇட்லியிஸம் என்ற உங்கள் முழக்கமெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்... பேசாமல் போய் நல்ல படம் ஒன்று பாருங்கள்... இன்றைக்கு என் சிபாரிசு :: பாட்டி சொல்லை தட்டாதே (அ) கரகாட்டக்காரன்
ஆஹா முகமூடி சார் கோவமா இருக்கார் யாராவது குளுகுளுன்னு 'மாம்பழ' ஸூஸ் கொடுங்கடே!!!
நான் என்ன 'தொல்'பெறுமால் ஆராய்ச்சியிலே இர்க்கிறதா அம்சமா கதைய அளந்துட்டு இங்கன 'கட்டுறை' ன்னு சொலிட்டியே தல? கட்டு உரையோ கட்டுடைக்கும் உரையோ சத்தியமா எனக்குத் தெரியாதும் ஓய். அப்புறம் உம்மளோட இ(க)ஷ்டம்
ஷ்மைலி இல்லை உமக்கு
Disclaimer: நான் பனாரஸிடம் பானிபூரி பற்றிய சந்தேகங்கள் கேட்டபோது அவர் ஷோலாபூரியில் தண்ணீர் (இந்தியில் பானியை) ஊற்றி சாப்பிட வேண்டும் என்று சொன்ன போதே அவருக்கு சமையல் அறிவு பூச்சியம் என்று முடிவுக்கு வந்துவிட்டேன்... போன பின்னூட்டம் நான் ஊசிப்போன இட்லி பக்கத்தில் நின்றுகொண்டு பேசியது... யார் வாயிலும் அதை திணிக்கவில்லை...
(காபி.. ச்சே.. கோபி காப்பி ரைட்டு ப்ரச்னை எதுவும் இல்லியே ??)
//பேசாமல் போய் நல்ல படம் ஒன்று பாருங்கள்... இன்றைக்கு என் சிபாரிசு :: பாட்டி சொல்லை தட்டாதே (அ) கரகாட்டக்காரன்//
என்னடா அடிச்சாடும் ஆட்டக்காரர் பம்மறாரேன்னு அடடே கரகாட்டமா? தேரோட்டமா... சுப்பர் தல சூப்பர்
இந்தா ஸ்மைலிக்கள் :-) :-) :-)
// நீங்கள் சொல்வது மிகவும் சரி... சாப்பிடுவதற்கு கடினமாகவும் பார்ப்பதற்கு குமட்டலாகவும் உள்ளது... //
நான் இட்லியை சொன்னேன் ஓய்... உமக்கு உம் கட்டுரை (றை அல்ல) அப்பிடி தெரிஞ்சா நான் என்ன செய்வதாம்... அதான் டிஸ்க்ளெய்மர் வேற உட்டுட்டனே...
நான் போட்டுக்கறேன் ஷ்மைலி :))))
//நான் இட்லியை சொன்னேன் ஓய்... //
வெறும் இட்லி மட்டுமா? இல்லை தமிழர் சேர்க்கும் சைடு-டிஷ் கூடவுமா?
ஹிஹி குடும்பு...
வலைப்பூ தயவால் சமுதாயத்திற்கு கிடைக்கும் வெளிச்சத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் - விரல் விட்டு எண்ணக்கூடிய - மின்மினிப்பூச்சிகளின் ஒன்றான இந்த கட்டுரை பற்றி சிற்றிலக்கிய மொழிநடையில் பின்னூட்டம் இட என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும் (ஜாக் டேனியல்ஸ் எங்கேப்பா...) சித்த நாழி கழிச்சி வரேங்காணும்... அதுக்குள்ள உம்ம #-% உ.பி.செ. வந்தா பிடிச்சி வையும்... ரெண்டு கேள்வி பாக்கியிருக்கு...
இன்னொரு விஷயம்... நான் மாம்பழ சூஸ் சாப்பிடுறதில்லை ஓய்... வாங்குறப்போ இனிப்பாவும் பச்சையாவும் இருக்கற மாம்பழம் சூஸ் புழிஞ்சா சிவப்பாவும் கசப்பாவும் மாறிடுது.. மேலும் எப்போ சூடாயி புடுங்கி உடும்னும் சொல்ல முடியாது...
ஒரு அம்பு..பல இலக்குகள்..நல்ல கிண்டல்(நான் உப்புமாவைத்தான் சொல்கிறேன்)
நானொரு சாதாரண தெருக் கிண்டன் ஸார்!!!
வருகைக்கு நன்றி :-)
//உம்ம #-% உ.பி.செ. //
நடுராத்திரியிலே இப்பிடி பிடுங்காதேங்காணும்.
நல்ல பதிவு.
நன்றி குசும்பன்.
//(காபி.. ச்சே.. கோபி காப்பி ரைட்டு ப்ரச்னை எதுவும் இல்லியே ??)//
அடப்பாவி முகமூடி.. கட்டு உரைய படிக்கரப்ப எங்கயோ படிச்சயிசம் தெரியுதேன்னு பாத்தேன். உம்ம டிஸ்க்ளெய்மரிசப் பின்னூட்டத்த படிச்சதும் கோபிரைட்டிசம் என்னன்னு புரிஞ்சிடிச்சி.
:-D
பனாரஸ் மாதிரி சமையல் அடுப்பின் உச்சியில் இருப்போருக்கு சமையல் அறிவை Update செய்துகொள்ள வாய்ப்பே கிடைப்பதில்லை.
கூவம்.. வேறென்ன சொல்ல..
கிருபா,
//நல்ல பதிவு. நன்றி குசும்பன்.//
பாராட்டா? இல்லை வேறேதவதா? பயமாக்கீதுப்பா :-)
கோபி,
////(காபி.. ச்சே.. கோபி காப்பி ரைட்டு ப்ரச்னை எதுவும் இல்லியே ??)//
முகமூடியோட டெக்னிக்கு புல்லரிக்குதப்பா... உம்மை வரவழைச்சிட்டாரு...
இருந்தாலும் (சகோதர பாசத்தில்)...
கோபி,
//பனாரஸ் மாதிரி சமையல் அடுப்பின் உச்சியில் இருப்போருக்கு சமையல் அறிவை Update செய்துகொள்ள வாய்ப்பே கிடைப்பதில்லை.//
ஸ்மைலி போடாததால கொஞ்சம் குழப்புது. பதிவோட நோக்கம் (?!@#) திசை மாற சான்ஸ் கீதுப்பா...
:-) (இப்போ சரியா விளக்கிட்டேனா?
"நல்லா பதிவு" பாராட்டு. "நன்றி குசும்பன்" வேறெதாவது.
அந்த "ஊ. (ஊஊஊஊஊ இன்னும் கொஞ்சம் ஊளைகள்)" படிச்சதும் சிரிச்சேனே சிரிப்பு, சிரிச்சு சிரிச்சு கண்ல எல்லாம் ஒரே நன்றி (தண்ணி என்று அ(ரி)றிக).
ஆனால் ரொம்ப யோசிச்சு எழுதி எழுதி மூளை சூடாக்கிடப்போது, பாத்து. :-) சூப்பர் சூப்பர்
ஹப்பாடி இப்பத்தான் நிம்மதியாச்சு... இப்பெல்லாம் வலைப்'பூ சுத்தறத விட பின்னூட்டங்கள்லதான் அதிகமா 'சுத்த' விடறாங்க.
//ஆனால் ரொம்ப யோசிச்சு எழுதி எழுதி மூளை சூடாக்கிடப்போது, பாத்து.//
'உப்பு பெறாத மா'ன்னு வுட்டுட்டு போகமுடியாம ரெஸ்பான்சிபிளிட்டிஸம் தடுக்கின்றது.
(தேவையேயில்லாம 'ஞங்ஞங்ஞங்ஞங்'ன்னு காதல் முருகன் அடிக்கடி ஞாபகத்துக்கு வாராருபா)
//வலைப்பூ தயவால் சமுதாயத்திற்கு கிடைக்கும் வெளிச்சத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் - விரல் விட்டு எண்ணக்கூடிய - மின்மினிப்பூச்சிகளின் ஒன்றான இந்த கட்டுரை பற்றி சிற்றிலக்கிய மொழிநடையில் பின்னூட்டம் இட என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும் (ஜாக் டேனியல்ஸ் எங்கேப்பா...) //
வானத்து நட்சத்திரங்கள் கூட புவியிலிருப்போர்க்கு மின்மினிதான். பரவாயில்லை.
ஜேக் டானியல்ஸ் உதவி செய்தாரா? இல்லை உபத்திர(வ)மா? எதற்கும் ப்ளடி மேரி உதவலாம்... என்ன ஒரே கல்ப்பில் அடிக்க வேண்டாம் :-)
திண்ணையிலே பதிவு வந்திருக்கு?
தலை சுத்தி விழாததுதான் குறை!
//தலை சுத்தி விழாததுதான் குறை! //
Akkaa,
I suggested not to try Uppumaa
:-)
ஜாக் டானியல்ஸ் ப்ளடி மேரி எல்லாம் புஸ்ஸுன்னு பூட்டாங்கோ, உம்ம திண்ணை மேட்டர ரெண்டு லைன் லுக்கு வுடுறதுகுள்ளோ...
Post a Comment