
2. அநீதியினைக் கண்டு பொங்கியெழும் வழக்கமான ஹீரோ ரோலென்றாலும், அதை முற்றிலும் வித்தியாசமாய் செய்திருக்கின்றார் பெரியவன். முழுக்க முழுக்க திராவிடக் கருத்துகளை உள்வாங்கியதாய் நடிக்கும் நாயகன், அரிதாக ஓவராக்டிங் செய்த செவாலியரை நினைவுபடுத்துகின்றார்.
3. தனியாக பத்துபேரையடிக்கும் சராசரி நாயகனைப் போலன்றி, டூப்பின்றி பாதுகாப்பாக குழுமமாக கும்மும் ப்ராக்டிகல் செயல்பாட்டை நமக்கு அறிமுகம் செய்ததற்கு சலாம்.
4. இருப்பினும் என் வழி தனி வழியென்று அவ்வப்போது ஸ்டேட்மெண்ட் விடுவது காமெடிக்காக இணைக்கப்பட்ட பஞ்ச் டயலாக்கானாலும், பஞ்சராகிய ட்யூப் போல் தேவையில்லாத இடைச் செருகல்.
5. எதைச் செய்தாலும் சொந்தமாக சொதப்புவேன் என்று கர்ஜித்து விட்டு, பிற பெயர்களில் போஸ்டர் ஒட்டுவதுதான் ஏனென்று புரியவில்லை. படத்தின் உப-பாத்திரமாக உலா வரும் சிங்கை ப்ரோவான மலரவன் கூற்று ஒருவேளை உண்மையாயிருக்குமோ? பெரியவன் தேவையில்லாததை மலரவ ப்ரோக்களிடமிருந்து கற்றுக் கொண்டு விட்டாரோ? இதுபோன்ற சகவாச சங்கடங்களின் கூறுகளை ஆணித்தரமாக அலசுகின்றார் பெரியவன்.
6. வெளியே தெரியவா போகின்றதென்று வேறிடத்தில், மாற்று பெயரில் போஸ்டர் ஒட்டும்போது அறியாமல் கைரேகை விட்டு விடுகின்றார் பெரியவன். வேறிடமோ நியாயஸ்தன் பட ஹீரோவுக்கு சொந்தமான காரணத்தால் சார்லி சாப்ளின் போல கனத்த மௌனம். இப்படத்தில் வரும் சும்பன் என்னும் காமெடியன் இதை சரியாக மோப்பம் பிடிக்கின்றான். இருப்பினும் பாப்பராஸி என்ற ஹாலிவுட் பட உளவு அதிகாரி போல் விட்டுப் பிடிக்கின்றான்.
7. ஐ... பீ... என்று சும்பன் சுள்ளானாய்க் கத்தியபடி, அங்கதமாய்க் கீ...பேடில் தட்ட, பெரியவனின் ஆபீஸ் சூட் நம்பரே பப்பரப்பேன் என்று பல்லிளிப்பதாய் கம்ப்யூட்டர் ஸ்கீரினில் இயக்குநர் காட்டுவது நச். காலைப் பிடித்தது என்ன? வெந்நீர் ஊற்றியது என்ன? வேடமணிந்தது என்ன? காலைப் பிடித்தது என்ன என்ன?... என்ற எண்ண எண்ண பேக்கிரௌண்ட் பாடல் பலே ஜோர்.
8. இனியாவது பெரியவன் கும்பல் மனப்பான்மையை கைவிட்டு, சுயமாய் சுயம்புவாய் வெளிப்படுவாரா? இல்லை கைத்தொழிலை மறந்து "கக்கு"வான் இருமலென்று கதறி, அங்கீகார அரிப்பிலேயே சுகம் காணப் போகின்றாரா என்பதே படம் முடித்து வெளிவரும் ரசிகர்களின் கேள்வி.
9. பெரியவன் படத்திலும், டெக்னீஷியன்களே அவரை விட சொதப்பிவிடுபவர்கள் என்பதை அவர் உணரவேண்டும். இல்லாவிடில் தான் நம்பும் கரமே பு(உ)தைகுழி தோண்டுவதை படத்தில் காமெடியாக ரசிக்கப்பட்டாலும் அதுவே பெரியவனுக்கு டிராஜடி. தேவையின்றி வாழையிலை பிடித்து இட்லிவடை சாப்பிடும் பெரியவனின் மனோநிலை மேலும் குழப்புகின்றது.
10. பெரியவன். சிறுபிள்ளை. இந்திரஜித் பெயரிலும்.
தமிழ்ப்பதிவுகள்
10 comments:
--எண்ண எண்ண--
pinnitel
resetroom in வாழையிலை... still 'smelly'?
-kasht city deer (கஸ்தூரி மான்)
colourfulla irukkutha... intha tubelighttkku thaan onnum puriyalai :-)
Ponit 9 poottaallum naan confuse akavillai. Periyavan = Indrajit = hahahahaha
கொஞ்சமாச்சும் இக்ளூ குசும்புங்க :)
இதுக்கு முன்னாடி போஸ்ட் எல்லாம் இப்போதான் பாத்தேன். ஆதி காலத்துல அரட்டை அட்டகாசம்(அட, அடுக்கு வசனம்'பா) பண்ணினவங்கதானே நாம?(அதான் சும்மா கலாய்க்கிறது).
இப்போல்லாம் அப்பாவித்தனமா எதையும் சொல்ல முடியறதில்ல. அதுல எதாச்சும் உள்குத்து வெளிகுத்து இருக்கான்னு தோண்டித் துருவிப் பாக்கிற காலமா இருக்கு.
குதுர என்ன நாஞ்சொல்றன்னா, இந்த சக்திய எல்லாம் வேற வழில ஓடுறதுக்கு வழிபண்ணலாமேன்னு. நான் ஓடுனா எதோ ஒலிக்குமாமே அந்த வழியில.
வர்ட்டா?
உனக்கே மாஸ்க் போடுவதெப்படி என சொல்லிக் கொடுத்த எனக்கு தெரியாதா அதைச் செய்ய..? :-). தெரிந்தவுடன், நீ அதை மட்டுமெ செய்து உன் சொந்த சக்தியை வீணடித்துக் கொள்கிறாய். அது சரி, உசுப்பிவிட ஆள் இருந்தால் உனக்குக் கண்மண் தெரியாது என்று எனக்கு இப்போதுதானா தெரியும்..?? :-)
முகமூடிகளிடத்தில் சொந்தப் பெயரில் பேசி என்ன பிரயோசனம்..? ஆகவே
"அது அப்படித்தான்"
இப்படிக்கு
(அதே) பெரியவன்
பி.கு:
( இந்திரசித்து மட்டுமா..?? வேறு பெயர்கள் தெரியாதா.?? தேடு. தேடு.இப்போது அதுதானே முழுநேர வேலை :-) }
குசும்பரே
படம் ஷோக்காகீது பா. ஒரே மஜா. நீ என்னபா கதைய ஒரேடியா குன்சா சொல்லிக்கினே? படிகிற செனங்களுக்கு ஒன்னும் பிரியல்லயாங்காட்டியாம். அக்காங். படத்திலே ஈரோ வில்லனு எல்லாம் ஒரே ஆளுதான். அத்தும் அந்த மொதோ சீன்லே ஈரோ சும்மா பால் குடி பாப்பாக் கணக்கா வர்ர சீனு படா ஜோர்பா. அப்ப பாரு ஈரோ பேரு ஏதோ எலிலரசன்றாங்க. அப்பாலே ஈரோ மூஞ்சியே அப்படியே அதென்னா அதாங் மார்ப்பு பண்னி ஜாதி வெறி பிடிச்ச ஓநாய் மூஞ்சி "மூக்கை"யாத் தேவனா காண்பிக்கிறாரு பாரு டைரடக்கரு, ஒரே பிகில் சவுண்டுதான் போ. அப்பாலிக்குதான் தெரிய்து எலிலரசன்தான் மூக்கையாத் தேவன்னு. அதில பாரு தன சாதி சனத்த யாரினாச்சும் எங்கிட்டாச்சும் ஏசிப் பிட்டாய்ங்கன்னா சும்மா வெளி வந்த பூசாரி மாரி சாமியாடுறாரு. சூப்பர். ஒரே ஆளு ரெண்டு ரோலு அந்நியன் மாரி. அதில்லேயும் அந்த தண்ணீர் பந்தல் சார்லி ஆளுங்களத் தொரத்துறப்போ என்ன் மாரி அப்பாவி மூஞ்சி காண்பிச்சிக்கினிருக்காரு, இந்த ஆஸ்காரா, பாஸ்கரா அத்ல ஒண்ணு கொடுக்கணும்பா அந்த ஆளுக்கு. நானு தர்மனு, உத்தமனுன்னு பீட்டர் விட்டுகுனே பெயர மாத்திகினு முக்காடு போட்டுகினு தன்னி பந்தல்ல வச்சி தம்ம அடி போடுறாரே அப்பத்தான் தெர்ர்யுது இந்த ஆளு ஒரு டுபாக்கூருன்னு. அத சும்பரு எடுத்து விடுறாரு பாரு, சும்மா டக்கர் பா. அப்பப் பாக்கணுமே ஈரோ முஞ்சிய அக்காங் இந்த "மூக்க"றுந்த சூர்ப்பன்ன்னக்க அதாம்பா நம்ம ராவ்ணரு சிஸ்டரு அத்த மாரியே இருந்திசுப்பா. அப்புறமாலிக்கு அந்த ஆளு என்னனவோ வாந்தி எடுக்கிறாருபா, ஏதோ கக்குவானா,கிக்குவானோன்னு சொல்றாங்க, ஒரே வெறி பிடிச்ச நாத்தம், நம்ம கூவமாண்ட பர்வால்ல "மூக்க" பொத்திகிடுதுங்கோ சனங்கல்லாம். அத்லியும் பாரு இந்த பாப்பாரா ஆலுங்கலக் கண்டுகினார்னா சும்மா மூக்கு விடைச்சுகினூ ஆடுற ஆட்டம் இர்க்குதே அதுக்குன்னே வெள்ளி பெல்லு, மந்துர கீர்த்தி, எலிலு வடியிற வேலு எல்லாம் சும்மா பிகில ஊதித் தள்றானுங்க பா. டமாரம் பிஞ்சி போகுது. ஈரோதான் வில்லனுமாங்காட்டி ஒரே கள்ளத்தனம். முகமூடி கிழிக்கிற சத்தம் படா டாமசுப்பா.
அப்பால பாக்கலாம்
குசும்பேட்ட முகமூடிதாசு
தியேட்டர் விட்டு வெளியேறூம் பொதுஜனம் ::
சாப்ளின் படம் புரிஞ்சுதுங்க.. மத்ததெல்லாம் இன்னும் ரெண்டு தபா பாக்கணுங்க... பாத்துட்டு சொல்றேங்க..
அட்றா..அட்றா...
வண்ட்டாருய்யா கக்குற கொமாரு..!!
உசுப்பிவிடற வேலையோட. பல்லாக்கு தூக்குற வேலையோட, அடிவருடுற வேலயோட, வியாபார வேலையோட சேத்து விசிலடிக்கிற வேலையுமா.ம்..ஜோரா நடக்கட்டுமப்பேய்...!!
பெரியவன்
Thalai, nethe oru tuition vathiyaarai puditchi... ella padathyum oootti pathutten... innikum antha vathiyaar ambuduvaanannu paarkaanum! :-)
Post a Comment