Wednesday, November 23, 2005

ஸாரி Giving வாழ்த்துக்கள்

ஏழையின் ஸாரி
ஐயா என்னை மன்னிச்சுடுங்க
எலே என்ன தப்பு பண்ணிணவே?
தெரியாம நான் தப்பு ஏதாவது பண்ணியிருப்பேன்யா. அதுனால மன்னிச்சுடுங்க
நேத்திக்கு ஏத்துன டாஸ்மேக்கு சரக்கு எறங்கலியாக்கும்? வேற சோலி ஏதாச்சும் பாருலே
இல்லேய்யா நீங்க மன்னிச்சுட்டேன்ன்னு ஒரு வார்த்தை சொன்னாத்தான்...
என்ன எழவுலே சரி மன்னிச்சுட்டேன் ஒழி

புரொபஷனல் ஸாரி
டேய் என்னடா கண்ணை மூடி நடுநெத்தியிலே ஆள்காட்டி விரல வெச்சிட்டு...
ஸாரிடா. என்னை மன்னிச்சிடு
ரெண்டும் ஒண்ணுதானே. நீயென்ன நடிகர் சுந்தர்ராஜனா? எதுக்கு ஸாரி மன்னிப்பெல்லாம்?
எல்லாத்துக்குந்தான்
எந்த எல்லாத்துக்கு?
எல்லாருக்கும் சேத்துத்தான்
எங்கிட்ட சொல்லிட்டே. அப்ப மத்தவங்களுக்கு
அதுதான் டெலிபதி மெஸேஜில சொல்றேன்

அரசியல் ஸாரி
மக்களே என்னை மன்னிச்சிடுங்க
புச்சா ஏதாச்சும் நல்லது பண்ணீட்டியளா?
இல்ல மக்கா
அப்ப திருந்திட்டீயளோ?
யோவ் அதுவும் இல்லையா
பின்ன என்ன *யித்துக்கு ஸாரி?
அத இப்ப சொல்ல முடியாது ஸாரி

டீக்கடை ஸாரி
என்ன கெரகமடா இன்னிக்கு ஸாரி சொல்ற தினமாம்
அப்பிடீன்னா?
ஏம்ப்பா பொது அறிவே ஒனக்கு கெடையாதா?
இருந்தா உங்கிட்ட போயி கேப்பேனா?
என்ன நிக்கலா? அறிஞ்சும் அறியாமலும், தெரிஞ்சும் தெரியாமலும் பண்ணின தப்புக்கெல்லாம்...
ஸாரி
அடடே கற்பூர புத்திடா ஒனக்கு
ஆனா உனக்கெப்படி வாசனை தெரிஞ்சது? ஹிஹி ஸாரி

வீட்டு ஸாரி
என்னங்க ஸாரிங்க
அடிப்பாவி தீபாவளிக்குத்தான் ரெண்டா வாங்கினியே
அதில்லைங்க இது வேற ஸாரி
சந்திரமுகியா இல்ல வேற மாடலா?
அதில்லன்னு சொல்றேன்ல
ஏண்டி உசுரை வாங்குற. புரியிற மாதிரி சொல்லித் தொலை
அதான் ஸாரி சொல்லிட்டேன்ல. அப்புறம் ஏன் கத்துறீங்க?
ஸாரி சொன்னியா. நான் ஸாரி கேட்டதால்ல நினைச்சேன். ஸாரி.

பி.கு. என்ன நீங்களும் ஸாரி கேட்டாச்சா? இல்லாவிடில் இன்றே கேளுங்கள். இப்பதிவின் பின்னூட்டத்தில் ஸாரி கேட்டு உங்கள் ஸாரிப் பற்றை நிரூபியுங்கள். மேலும் ஆன்லைனில் ஸாரி கேட்க முகவரி: http://tamilkushboo.com. மின்னஞ்சலிலும் தள நிர்வாகிகளுக்கு அனுப்பலாம். பிரசுரத்திற்கேற்ற ஸாரிகளே பிரசுரிக்கப்படும். ஸாரி

7 comments:

Boston Bala said...

குசும்பு மன்னிப்பு
எதற்கு நன்றி கேட்கவேண்டும், எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும், எதற்கு ஸாரி சொல்லணும் என்று தெரியாதவர்களிடம் வாய் கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

இந்த பதிவை படித்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள்

Anonymous said...

:-)

Anonymous said...

please forgive me...!

I want to say sorry for not reading your post all this while.

you seemed to be a genius. you are a god.

thank you for allowing me to leave my comment in your blog

please forgive me and thanks again

Jayakumar said...

மன்னியுங்கள், I'm not sorry.

முகமூடி said...

சரி சரி வளக்கம் போல ஏத்துத்தொலைக்கிறேன்...

ஏ... இருக்கும்... இவர்களை மன்னி.. யும்

ஏஜண்ட் NJ said...

.

смущенный, Жаль!


.