வலைப்பூ ஆரம்பித்து ஏறத்தாழ 17 மாதங்கள் முடிந்து விட்டன. கடந்த சில நாட்களாக ராத்தூங்க முடியலப்பா... அச்சுலகம் வேறு வாவாவா'ங்கிறது. பல தாளிகைகள் "வா ராசா பலரை தாளிக்கலாம்", என்று கூப்பாடு போடுகின்றன. இதில் எக்ஸ்குளூசிவ் செவ்வி கேட்டு பிரபல டிவி நிறுவனம் வேறு பீச்சே படுகயா (யோவ் பின்னாடியே தொரத்துதுன்னு சொல்றேன்). மேலும் பல வலைத்தளங்கள் .... ஓவர்நைட்டுல பேமஸானாலே இப்பிடி சிலபல ப்ராப்ளம்ஸ் வரத்தானே செய்யும் :-) (வேண்டாம் குசும்பா விட்டுடு'ன்னு யாரோ கதறுவது கேட்கின்றது)
விஷயம் ஒண்ணுமில்லைங்கோ... ஏதோ நான்பாட்டுக்கு கிறுக்கி ரெண்டு பதிவுகளை திண்ணைக்கு அனுப்பி வைச்சா, ப்ளுக்கா அதை பப்ளிஷ் வேறு பண்ணிட்டாங்கோ. இன்னிக்கு காலேலதான் பாத்தேன். இதோ அப்பதிவுகளின் சுட்டிகள்:
வெள்ளமும் நிவாரணமும்
புஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவச சேவை
பதிவுகளை வெளியிட்ட திண்ணைக்கு நன்றிகள் !!!
மேலும் புஷ்ஷைப் பற்றி அறியத்தந்த நண்பர் துணை ஜனாதிபதி டிக் சேனிக்கும், உள்குத்து அரசியலை எனக்கு வெளிச்சம் போட்ட ஸ்கூட்டர் லிபிக்கும், இன்னபிற இணையத்தளங்களுக்கும், ஊக்கம் கொடுத்த உண்மையானவர்களுக்கும், சப்பை மேட்டர் கூட எழுதத்தெரியாததாய் குறை கூறிய முகமிலிக்கும் திண்ணைப் பதிவுகள் சமர்ப்பணம் !!!
தமிழ்ப்பதிவுகள்
Friday, November 04, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Purinthathu Bro !
:-)
Congrats, Vazhthukkal, pinneeeteenga, Great achievement, Dhool kilapureenga. Please add more.
Shall we expect your next article to come in Aval Kumudham. Kilappungaa. Ippadi neenga ellaam thaalikka poiteenga enraal naangal enna seigirathu.
Chola Otran
கட்டுரையில "காத்ரீனா, ரீட்டா, வில்மான்னு" அப்படீன்னு ஒரே பொம்பள புள்ளங்க பேரா இருக்கறதால இது அவள் விகடன்ல வருமா இல்ல கட்டுரை சிறுபுள்ளதனமா இருக்குன்னு சுட்டி விகடன்ல வருமா..
டிஸ்க்ளெய்மர் :: காத்ரீனா, ரீட்ட போன்ற விஷயங்களை கூட பின்னூட்டத்தில் குறிப்பிடும் முகமூடியின் வக்கிர மனசை திட்டுகிறேன்னு சொல்லிடாதீங்கப்பு... ஏதோ தெரியாம எடுத்தாண்டுட்டேன்...
அடடே... வாழ்த்துக்கள் குசும்ப ராயரே...
# posted by icarus prakash : 10:37 AM
Congrats! தல, நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா? கூடிய சீக்கிரம் வலைப்பூவுக்கு குட்பையா?
# posted by ஜெ.ரஜினி ராம்கி : 10:49 AM
வாழ்த்துக்கள் குசும்பர்
# posted by தேன் துளி : 11:22 AM
வாழ்த்துக்கள் குசும்பர்.
என்கியோஓஓஓஓஓஓ போயிட்டீங்க.
நல்லா இருங்க.
# posted by துளசி கோபால் : 11:50AM
நல்ல செய்தி. பாராட்டுகள். இன்னும் நிறைய உங்கள் படைப்புகள் திண்ணையேற வாழ்த்துகள்.
அன்புடன்
சுந்தர்.
# posted by சுந்தர் : 12:29 PM
second innings ...
congrats
#posted by "Anamikaa" Meyyappan : 3:08 PM
கட்டுரை நல்லா இருக்கு. Compact and Crisp. :)
# posted by Jsri : 6:56 PM
மேலும் நிறைய - தொடர்ச்சியாக - எழுத வேண்டுகிறேன்.
# posted by Badri : 7:49 PM
என்னுடைய வாழ்த்துகளையும் பிடிங்க... தொடர்ந்து எழுதவும்தான்!
# posted by Ramya Nageswaran : 9:06 PM
குசும்பரே வாழ்த்துக்கள். இருங்க, இருங்க. உங்க நண்பர் ராஜாராம் , திண்ணைக்கு எழுத கேட்டு இருக்காங்கன்னு ஒரு வருடத்திற்கு முன்பே நீங்க சொன்னதாய் ஞாபகம்? சரியா?
#posted by ramachandranusha : 9:28 PM
வாழ்த்துக்கள்!
கட்டுரைகள் 'சும்மா நச்சு'ன்னு இருக்கு. :-)
பாரா, என்.சொ, பத்ரியைத்தொடர்ந்து இன்னொருவரா?
///பீச்சே படுகயா ///
இதான வேணாங்கிறது!
எம்.கே.
#posted by எம்.கே.குமார் : 9:44 PM
வாழ்த்துக்கள்!
#posted by a
வாழ்த்துக்கள்!
#posted by b
வாழ்த்துக்கள்!
#posted by c
... ... ....
வாழ்த்துக்கள்!
#posted by z
அடப்பாவி அநாநிங்களா...
போறபோக்கைப் பாத்தா பிளாக்ஸ்பாட்லேர்ந்தே பியூஸ் புடிங்கிட்டுதான் தூங்குவீங்க போல. எனக்கு ஒதுங்க இடங்கொடுத்த திண்ணைக்கு நன்றி சொன்னத எங்கேயோ கொண்டு போயிட்டீங்களேப்பா...
யப்பா ஒற்றா... நான் உனக்கு என்னப்பா தீங்கு செய்தேன்? எங்கேயோ என்னமோ நடக்குதுங்றது மட்டும் புரியுது. கண்டுபுடிக்கிறேன் ராசா விரைவில் :-)
வாருமையா முகமூடி...
என்னைப்போட்டுத் தாக்காம உமக்கு தூக்கம் வராதே :-)
மேலும் "-" ஓட்டுகள் பிராப்திரஸ்து (*;*)
Post a Comment