Sunday, December 04, 2005

புறக்கணிப்பும் புறந்தள்ளலும்

தேர்தலை புறக்கணிப்பதால் இலாபம் யாருக்கு என்று இதுவரை விளங்கேல்லை. இவரை தேர்ந்தெடுத்தால் நன்மை விளையும் என்று நம்ப முடியாவிடினும், மற்றொருவரை தேர்ந்தெடுத்தால் தீங்கு அதிகம் விளையாது என்ற அளவுகோளில்தான் உலக அரசியலே நடக்கின்றது. பொது மக்களின் நம்பிக்கைகள் பல நேரம் பொய்த்துப்புப்போவதுதான் நிதர்சனமென்றாலும், தேர்ந்தெடுப்பவர்கள் அதீத கவனத்துடன் அடுத்த முறை நடந்து கொள்ள வாய்ப்பளிப்பதுதான் தேர்தல். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை. முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஜனாதிபதி பொதுவாக வாக்களிக்க மாட்டார்கள் என்கின்ற சம்பிரதாய நியதியைக் களைந்து விட்டு தேர்தலில் வாக்களித்தார்.

வெனிஜுவேலாவில் நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பங்குபெறாததால் அதிபர் ஹ¤யுகோ சாவெஸிற்கு முழு வெற்றி! ஹ¤யுகோ இந்திய நாட்டின் அரசியல்வாதிகளைப் போலவே தடபுடல் தகிடுதத்தம் செய்வதில் சமர்த்தர். அவர் வீட்டு மாடு பால் குறைவாகக் கொடுத்தால் கூட அமெரிக்காதான் காரணமென்று கூசாமல் கூறிவிடுவார். புது பார்லிமெண்ட் பல அதிரடி திட்டங்களை வைத்திருக்கின்றதாம். முதலாவது ஒரே அதிபர் எத்தனை முறை தேர்ந்தெடுக்கப்படலாமென்னும் எண்ணிக்கைத் தடையை அகற்றுவது. ஹ¥ம்ம்ம்... ஹ¤யூகோதான் நிரந்தர அதிபர் என்னும் சட்டம் இயற்றாமலிருந்தால் சரி. எதிர்க்கட்சிகள் இல்லாமல், குறைவான அளவு மக்களே வாக்களிக்க உருவான பார்லிமெண்ட் ஜனநாயகத்தின் கேலிக்குழந்தைதான்!

சின்னப் புள்ளையா இருக்கிறச்சே கொஞ்சம் லேட்டா வூட்டுக்குப் போனாலும் பாட்டி கேக்கும்," என்னடா சிலோனுக்குப் போயிட்டு வரியா?" சிலோன் எங்க இருந்ததுன்னு பாட்டிக்கு தெரியுமோ தெரியாதோ... ஆனா கொஞ்ச தூரத்துல இருப்பது மட்டும் தெரியும். அட இப்ப வலைப்பதிவர் கண்களில் கூட அடிக்கடி அகப்படும் தூரத்தில் இருப்பதக் காண்பதற்கு வியப்பாய் இருக்கின்றது. எங்கியோ இருக்கிற வெனிஜூவேலா தேர்தல் கண்ணிற்கு பட்டபோது சிலோன் என்கின்ற சிறீலங்கா என்கின்ற இலங்கை படாமலா? "எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்" என்று ஒருகாலத்தில் தெளிவாய் (ர.ரா மன்னிக்க) பாடிய ரசினிகாந்து போல "எமக்கு ரணிலும் வேண்டாம் ரஜ ப§க்ஷயும் வேண்டாம்" என்று ஈழத் தமிழர்கள் யாருக்கும் ஆதரவாக வாக்களிக்காமல் ஒதுக்(ங்)கி விட்டார்கள். விளைவு பின்னவர் இன்று அதிபர். "இவரை தேர்ந்தெடுத்தால் நன்மை விளையும் என்று நம்ப முடியாவிடினும், மற்றொருவரை தேர்ந்தெடுத்தால் தீங்கு அதிகம் விளையாது என்ற அளவுகோளில்தான் உலக அரசியலே நடக்கின்றது" என்று தீர்க்கமாக நம்பிய ஒருவரின் (ஹிஹி நாந்தான்) கருத்து கட்டுடைக்கப்பட்டது. இலங்கையில் மீண்டும் போர் மூண்டால் அதற்கு ரஜப§க்ஷ மட்டும் தான் பொறுப்பாவாரா?

பி.கு. சொல்லாமல் விட்டது "எங்கு வாய்ப்புக் கிடைத்தாலும் ஓட்டுப் போடுங்கள்" :-)

3 comments:

ஏஜண்ட் NJ said...

நீவிர் (பின்)குறிப்பால் உணர்த்தியுள்ளதை யாம் சரியாகவே புரிந்து கொண்டோம்!

ஓட்டு போட்டுப் போட்டுக் கருத்த
(not சிவந்த) கரங்கள் யாருடையதென்று சொல்ல ஆழக்குத்தெழுத்துச் சித்தன் வரவேண்டும்!!
:-)

Anonymous said...

Srilankan election throw open the sick minds of tigers. Tiger's chief does not want any solution for the imbroligo except for keeping the status quo. Any peaceful soultion will undermine his military power and hamper his narcotics trade and ransom money that he and his army are enjoying. He is so obssessed with his dictatorship rule. He would not settle for any democratic setup. If Ranil comes back, international peacemakers will force Tigers for an amicable settlement that Tigers dont want to happen. They dont want any peaceful solution, that will bring deathknell to their pyrrhic rule. So Prabakaran strategically prevented Tamils from voting. Under his gun which Tamil will dare voting. That led to the election of a hardcore than Ranil. Now it will be easy for Tigers to justify their violent war path and they will happily continue their killings, drug trade, ransom collection, illicit arm trade and so on and so on. As long as Prabhakaran lives, there is nver going to be any peace. India or America should intervene and cleanse Tigers so that peace will prevail in the entire sub continent.

ஜெ. ராம்கி said...

//எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்" என்று ஒருகாலத்தில் தெளிவாய் (ர.ரா மன்னிக்க) பாடிய ரசினிகாந்து போல "எமக்கு ரணிலும் வேண்டாம் ரஜ ப§க்ஷயும் வேண்டாம்" என்று ஈழத் தமிழர்கள் யாருக்கும் ஆதரவாக வாக்களிக்காமல் ஒதுக்(ங்)கி விட்டார்கள்.

:-) How dare you to compare Srilankan tamils afterall with Rajinikath?!