
பஞ்சதந்திரம் முடிஞ்சோன்ன கமலஹசன் குறுந்தாடியோட கனடா விமான நிலையத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ¤க்கு புறப்பட்டாராம். ஏம்ப்பா LA போற அப்பிடின்னு இம்மிகிரேஷன் அதிகாரிங்க கேட்டப்போ "ஷ¥ட்டிங்"ன்னு வெள்ளந்தியா பதில் சொல்ல கொண்டு போயி உள்ள (அட ரூமுக்குள்ளப்பா) வைச்சு கொடாஞ்சுட்டாங்களாம்.
இன்னிக்கு மத்தியானம் மயாமி ஏர்போர்ட்டுல "குண்டு ஒண்ணு வைச்சிருக்கேன்" அப்பிடின்னு நிசம்மாவே கூவிக்கினு ஒருத்தர் ஓட, ஏர் மார்ஷல்ஸ் பொட்டுனு சுட்டுப் போட ஆள் ஸ்பாட்லேயே காலி. 44 வயது Rigoberto Alpizar அமெரிக்க குடிமகன். சுட்டுக் கொன்றபின் பேக்கைச் செக் பண்ணினா ஒண்ணும் கெடைக்கலே... கொலம்பியாவிலிருந்து ஓர்லாண்டோ
போகும் வழியில் நடுவில் மயாமியில் நின்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது மனைவியோ தனது கணவர் மனநிலை சரியில்லாதவரென்றும், அன்று மருந்து எடுத்துக் கொள்ளவிள்ளை என்றும் கூறுகின்றார். ஏர் மார்ஷல்களோ அவர் எங்களை நோக்கி aggressive'வாக வந்தார். அதனால வேற வழியில்லாம போட்டுத் தள்ளிட்டோம்ங்றாங்க. 9/11'க்கு அப்புறமா நடக்குறது கொஞ்சம் பீதியாத்தான் இருக்கு. என்ன இழவுன்னு மேலும் படிக்கப் போனா எற்மார்ஷல்களுக்கு பயிற்சி அதிகம் கொடுக்கப்பட்டாலும் உண்மைக் களத்தில் செயல்படும் வாய்ப்பு குறைவாம் (Air marshals get lots of training but little action). அது சரி...
படம்: நன்றி CNN
தமிழ்ப்பதிவுகள்
3 comments:
இதுல ஒரு கொடுமை என்னன்னா, பொட்டியில வெடிக்கிற மாதிரி ஒண்ணும் இல்லேன்னு தெரிஞ்சதுக்கப்புறமும் அத வெடி வச்சி பீஸ் பீஸா ஆக்கிட்டாங்க.
உள்ள ஜட்டி பனியன் மட்டும் இருந்தா ஒழிஞ்சி போவட்டும், முக்கியமான பேப்பர் எதாச்சும் இருந்திருந்தா?
மன்னிச்சுக்கோங்க ஏசுவர்;-)!
http://www.cnn.com/2005/US/12/08/airplane.gunshot/index.html
http://abcnews.go.com/GMA/story?id=1385143
இன்னும் நிறைய இருக்குதுங்காணும். ஆனா மூலம் இதுதான் :-)
பரி,
இன்னிக்கு இறந்தவரோட மனைவி " எம் புஷனுக்கு புத்தி சரியில்லன்னு" கத்திக்கிட்டே அவர் பின்னாடி ஓடினதா சக பயணிகள் சொல்றாங்க...
ஆனா பாதுகாப்புங்ற போர்வையில எல்லாமே மறைக்கப்பட்டுவிடும்னுதான் தோணூது :-(
Post a Comment