Sunday, July 30, 2006

பேசாத பேச்செல்லாம் பேசவந்தார்

எவ்வளவு நாள்தான் குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டுவது? சரி ஊரையும் அடித்து ஒரு உலை வைப்போமே என்று கிளம்பியபோது நம்ம கண்ணகி கண்ணில் மாட்டினார்.

'என்னங்க மறுபடி மெரீனாவுல ஹாயா கடற்கரை காத்து வாங்குறீங்க போலருக்கு?' என்று ஆரம்பித்தேன்.
'ஆமாம் காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்'ன்னு பாடற மாதிரியா கடற்கரை இருக்கு? அதுவும் ராத்திரியாச்சுன்னே இங்கே நிற்பதற்கு எனக்கே பயமாக இருக்கிறது. பேசாம குடோனிலேயே இருந்திருக்கலாம் போல...
'எப்பிடியோ வரவிருந்த இன்னொரு சுனாமிய தடுத்துட்டீங்க போலருக்கே?'
'அடப்பாவிங்களா இந்த பகுத்தறிவு ஆளுங்களோட ரோதனை தாங்க முடியலப்பா!'

பேசிக்கொண்டிருந்தபோதே நடிகர் திலகம் சிவாஜி தென்பட்டார். அழுதழுது கண்களெல்லாம் ரத்தச் சிவப்பாய் தோன்றின.
'என்னங்க ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடேசியில உங்களையும் கடிச்சிட்டாங்க போலருக்கு?'
'அட அத ஏன்பா கேக்குற? தமிழுக்கு என்ன சேவை செய்தேன்? அப்பிடின்னு ஜாதி சொல்லி அடிக்கிறாங்கப்பா... இவங்க முன்னேற்றத்திற்காக தமுமு ஆரம்பிச்சு கையில இருந்த மோதிரத்தக் கூட இழந்தேன். எல்லாரும் கேட்டாங்க முன்னேற்றத்துலேயே முன்னணி இருக்கேன்னு... அட தமிழனுக்கு ஒரு முன்னேற்றம் பத்தாதுன்னுதன் ரெண்டு வச்சி கச்சி நடத்தினேன். ஹூம் எல்லாம் என் நேரம்' என்றபடி 'ஜிஞ்ஞினக்கா சின்னக்கிளி சிரிக்கும் பச்சக்கிளி' என்ற சோக கீதம் இசைக்க ஆரம்பித்தார் செவாலியே. உண்மைக் கலைஞனுக்கே இந்த கதியென்றால் நான் எம்மாத்திரம் என்று நொந்து கொண்டேன்.

சைடில் 'சிவ சிவ சிவ சங்கரா நமக்கு எல்லாம் சாமிடா' என்ற பாடல் ஒலிக்க சிவன் சைடு வாக்கில் நடந்து போய்க் கொண்டிருந்தார்.
'என்ன மிஸ்டர் சிவன் நலமா?' என்றேன்
'அட நீ வேற குசும்பா... சிதம்பரசாமியான என்னை விட இப்ப ஆறுமுகச்சாமிதான் பேமஸ்'. பேசாம அவரோட சிலையை சித்சபையில வைச்சுடலாம்'
'ஓஹோ சிற்றம்பலத்தைத்தானே சொல்றீங்க?'
'அதான் வலைப்பதிவுல ஆர்க்கிடெக்சர் படமே போட்டிருந்தாங்களே. இப்போ எது பொன்னம்பலம்'னு கூட எனக்கே தெரியாது.'
'என்னது அப்ப பொன்னம்பலம் நீங்க இல்லியா?'
(சிவன் டென்ஷனாகிறார்)
'சரி சரி சபிச்சுடாதீங்க வரேன் என்று நழுவினேன்.

பாட்டு திடீரென 'யப்பா யப்பா அய்யப்பா கண்ணுல பிரஸ்னம் காட்டப்பா' உச்சஸ்தாதியில் அலறியது.

'வாங்க லார்டு அய்யப்பன். எப்பிடி இருக்கீங்க? ஆமாம் புலி எங்க கூட்டிட்டு வரலியா' என்று கிண்டினேன்.
'ஏம்ப்பா புலியப் பத்தி பேசி கிலி ஏத்துற? பொடாவுல புடிச்சி கிடிச்சு போட்டுடப் போறாங்க. இப்பதான் தம்பி படம் 110 நாள் விழாவுல கலந்த கையோட வரேன். அதான் புலிய கொஞ்ச நாளைக்கு ப்ளூ கிராஸுல கொடுத்துட்டு வந்திருக்கேன்'
'என்ன கோடம்பாக்கத்துக்கு நீங்களும் வந்திருக்கீங்க? உங்க தேவஸம் போர்டு தலைமை தந்திரி மோகனகண்டரு சொல்லி வந்தீங்களா?'
'அய்யப்ப சாமிக்கு இருக்குற மரியாதையே தவணை முறையில ஏலம் போடுறாங்க குசும்பா. இப்பதான் பிரஸ்னம் பிரச்சினை பின்னே போனது. மறுபடி மோகனரோட மோகப் பிரச்சினை. கல்லும் முள்ளும் மெத்தையாய் நடந்து வர என் உண்மை பக்தர்களை நினைத்து ஆறுதலடைகின்றேன்'
'ஜெய...'
'என்னது மறுபடி ஜெயமாலா பிரச்சினையா? ஆளை வுடு சாமி'
'இல்லீங்க ஐய்யப்பன். ஜெயம் என்றும் உங்களுக்கேன்னு சொல்ல வந்தேன்'
அய்யப்பன் ஆசுவாசமாகின்றார்.

பாடல் மாறுகின்றது...

உடலினை உறுதி செய்
ஏறு போல் நட
நேர்ப்படப் பேசு
நையப்புடை
நினைப்பது முடியும்

'யாரது யாரது தம்பி படப்பாடலை பா(போ)டுறது? உடனே ஆப் பண்ணுங்க' என்று பதறுகின்றார் அமைச்சர் பரிதி இளம்வழுதி.
'ஏங்க அது தம்பி படப்பாடல் இல்லீங்க பாரதியார் பாட்டு' என்றேன்.
'என்னது ஏங்கிட்டயே குசும்பா? ஏற்கெனவே நான் தம்பி பட 110 நாள் விழாவுல கலந்துகிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கேன். நீ வேற?'
'அதான் சொல்லிட்டீங்களே. நான் யாரோட பேச்சையும் கேக்கலேன்னு'
'தவறு. நான் தலைவர், தளபதி பேச்சை மட்டுமே கேட்பேன்'
'அப்போ கேக்கலைன்னு பேட்டி கொடுத்தீங்களே?'
'யோவ் அது மீட்டிங்லயா..."
'அப்போ தலைவரையோ, தளபதியையோ மீட் பண்ணினாலும் அவங்க பேச்சை கேக்க மாட்டீங்க அப்பிடித்தானே?'
'யப்பா தாவு தீந்து போச்சி ஆளை வுடு'


அப்போதுதான் கலை வாக்கிங் முடித்து கலைஞர் திரும்புகின்றார்.
'தல கலக்கிட்டீங்க. கலர் டிவி, அரிசி, ரெண்டு முட்டை'ன்னு கலக்குறீங்களே?'
'செப்பிஞ்சே நேனு சேஸ்த்தானு. சேஸிஞ்சே நேனு செப்தானு என்றான் பெத்தராயுடுவில் என் தம்பி ரஜினி. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குமென்று நான் அதை சுவீகரித்துக் கொண்டேன்'
'மிடாஸே யாருக்கு சொந்தம்னு கண்டு பிடிச்ச உங்களுக்கு சிறுதாவூர் பங்களா மட்டும் யாருதுன்னு கண்டுபிடிக்க முடியலியாக்கும்? உங்களோட முன்னாள் தம்பிகளான வைகோ, திருமா ரெண்டு பேரும் அது ஜெ'வோடது இல்லேன்னு சர்ட்டிபிகேட் கொடுக்கிறாங்க?'
'நான் கேட்கும் கேள்வியிலேயே பொதிந்துள்ள பதிலை உடன்பிறப்புகள் அறிவார்கள்'
'சட்டசபையை வாஸ்துபடி திருத்தியமைத்துள்ளாய் ஜெ கூறும் குற்றச்சாட்டு குறித்து?'
'மஞ்சள் துண்டால்' முகத்தை துடைத்தபடி 'பட்ஜெட் கூட்டத்தொடர் நலமாய் முடிந்ததிலிருந்து தெரியவில்லையா குசும்பா? மற்றபடி வாஸ்து பார்த்தது யாரென்று கண்ணகிக்கே தெரியும். வரட்டுமா?'

'கண்ணகி என்ன சொல்றீங்க?'ன்னு கேட்கத் திரும்பினால் அவர் சிலையாய் சமைந்து விட்டிருந்தார்.

3 comments:

Boston Bala said...

---ஏற்கெனவே நான் தம்பி பட 110 நாள் விழாவுல கலந்துகிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கேன். நீ வேற?'----

என்ன விஷயம் இது... புரியலியே! (செய்தியைத் தவறவிட்டு விட்டேனா?)

Unknown said...

//என்ன விஷயம் இது... புரியலியே! (செய்தியைத் தவறவிட்டு விட்டேனா?) //

தம்பி திரைப்பட விழாவிலே பரிதி இளம்வழுதி கலந்துகிட்டு இப்போ ஞே'ன்னு முழிக்கிறாரே, விஷயம் தெரியாதா பாபா?

குசும்பன் said...

என்னது பாபாவிற்கே செய்தி தெரியவில்லையா? அப்போ சூட்டோட சூடா நான் பதிவு போட்டு முந்திக்கிட்டேனா? நம்ப முடியலியே ;-) வீக்கெண்டுல பிஸியாயிருந்தாலே இப்பிடித்தான் ;-) ஆவி, ஜூவி படியுங்கோ ஜல்தி...

நன்றி KVR...