Wednesday, July 28, 2004

பிரசவ வலி

பிரசவக்காட்சியின் வலியை மூக்கர் எழுதியிருக்காரு. படிச்சுட்டு பின்னூட்டம் போங்க...

சுப்புலட்சிமியம்மா சூப்பரான கமெண்ட் விட்டிருக்காங்க. அசிங்கமா எழுதுறது ஆம்பளைங்க சொத்தா? எங்களாலும் முடியுமுன்னு வரிஞ்சு கட்டிட்டு எழுதுனாப்ல தோணுது.

கொஞ்ச நாளக்கி முன்னாடி "புணர்ச்சிக்கு கூப்பிடுவதாய் நினக்காதீர்கள்"னு ஆசிரியம்மா எழுதியிருந்தாங்க. நிசம் பொட்டுல அடிச்ச மாரி இருந்துச்சி. "யோனியில் குண்டு"ன்னு ஈழ தமிழச்சி கவித படிச்சப்போ ஈரக்குலை நடுங்கிச்சு.

ஆனா "அரிப்பு"? சகிக்கலை. கும்பிடும் தாம்பத்யத்தை கைதட்டி அழைக்கிற தன்மை கொடுமைக் குசும்பு. பெண் விடுதலைக்கு குரலு வுட்ட ராசா ராம் மோகன் ராய், பாரதி ஆத்மாக்கள் தூக்கு மாட்டிக்கும்.

ரொம்ப நல்லா எழுதுற பொண்ணு. நல்ல விதமாவும் எழுதுனா சந்தோஷம்.

2 comments:

Kusumban said...

பாட்டிலு,

புணர்ச்சி, யோனி' பிரயோகத்துல இருந்த நிஜம் சுட்டதுன்னு சொன்னேன். ஆட்சேபிக்கவேயில்லையே...ஜகா வாங்கலியே. ஒரு தபா மீண்டும் படிங்கோ. பதப்பிரயோகம் விரசமாவே தெரியலை. சூப்பரான, நிஜமான, சூடான பதிவுகள் அவை.

பரி பாசு,

"அரிப்பு" பிரயோகம் இந்த இடத்துல சரியில்லன்னு தோணுது. தாம்பத்யம் "அரிப்பு" எடுத்தால் "சொரியிற" சமாச்சாரமா? தாம்பத்யம்ங்ரது வெறும் "புணர்ச்சி" இல்லை. ஆரம்பத்தில் அப்படித் தோன்றலாம். ஆனால் "அந்த 7 நாட்களில்" பாக்கியராஜ் வசனம் போல் மனங்களும் இணையும்/சங்கமிக்கும் புனிதமானது தாம்பத்ய உறவு. அதை "அரிப்பு"ங்றது சீப் ஸ்டண்ட். அயோக்கியத்தனம்.

சுப்பம்மா சொல்ற மாதிரி ஒருவேளை அவங்களோட "கிராமத்துல" தாம்பத்யத்தை "அரிப்பு"ன்னு சொன்னாங்கன்னா எனக்கு ஓக்கே.

அப்புறம் பாலியல் கல்வி பேசறவன் "அரிப்பு"ன்னா ஆர்ப்பாட்டம் பண்றானே? நல்ல கேள்வி.

சொல்ற விதம்ன்னு ஒண்ணு இருக்கே. சுனா புனா'ன்னு சொல்ல/எழுத முடியுமா? அப்புறம் பாலியல் கல்விப் பாடங்கள் "விருந்து" பத்திரிக்கை ஆகிவிடாதா?

யோனியையும், புணர்ச்சியையும் விரசமில்லாம, விவரமா சொன்னதற்காக எழுதியவரைப் பாராட்டுகிறேன். "அரிப்பை" தவறான தருணத்தில் பன்படுத்தியதற்காக வருந்துகிறேன்.

நம்ம கருத்துக்கு ஆண்/பெண் வித்தியாசம் இல்லை. இதையே ஒரு ஆண் "அரிப்பு"ன்னு தாம்பத்யத்தை எழுதியிருந்தால் "பாட்டு"ப் பாடியிருப்பேன்.

குசும்பன்.

ரா.சு said...

குசும்பன்,

அசிங்கமாக எழுத வேண்டுமென எழுதியதல்ல அந்த வார்த்தை,கட்டுபாடில்லாமல் வனவிலங்குகளாய் இன்னும் திரிந்துக் கொண்டிருக்கும் மனிதர்களின்(?) இச்சையைக் குறிக்க மட்டுமே.

அந்த விலங்குகளின் அட்டகாசங்களை கண்ணூற்று ராய், பாரதியின் ஆத்மாக்கள் இன்னும் கண்ணீர் சிந்திக் கொண்டுதான் இருக்கின்றன(இருக்கிறார்கள்).