Thursday, July 29, 2004

எதிரெதிர் வினை

பத்து வரிப் பாட்டெழுதி பத்தி பத்தியா பொழிப்புரை எழுதின ரூமி சாரோட நிலைமை நேக்கு புரிஞ்சிபோச்சிப்பா. பாட்டில் பாலா, பரி அப்புறம் கார்த்திக் அல்லாருக்கும் அநேக கோடி நமஷ்காரங்கள். கோடு போட்டா ரோடு போடுவேள், சந்து முனையில் சிந்து பாடுவேள்'ன்னு நினச்சுட்டன். இதோ என் பதிவிற்கான என்னோட பொழிப்புரை...குசும்பன் (கோனார்) நோட்ஸ்???

பாலாத் தம்பி...//அசிங்கமா பேசினா தப்பில்லைன்னு நினச்சாத்தான் மனப்பான்மை மாறும்//'ன்னு சொல்றேள். இதுக்கு உதாரணம் தரேன்.

எய்ட்ஸ் பத்தி எழுதும்போது "ஏம்பா அரிப்பெடுத்தா விலைமாதுகிட்டத்தான் போகணுமா? ஏன் கைத்தொழில் ஒன்றும் கத்துக்கலையா?"ன்னு கேட்கலாம். "அரிப்பு", "கைத்தொழில்" போன்ற கெட்ட வார்த்தைகள் "எய்ட்ஸ்" போன்ற அதி-தீவிர நோயைக் கண்டிப்பதானால் "பதப் பிரயோகம்" தப்பில்லை கண்ணா. நேக்கு.

அதே வகையில் சுகிர்தாராணியின் "புணர்ச்சி"ப் பிரயோகம் நோக்குங்கோ.

நிஜம் பொட்டில் அடித்த மாதிரி இருக்கும். அப்படின்னா, கவிதையைப் படிச்சிட்டு, நிஜம் நெஞ்சைச் சுட்டது மாதிரி. "கனவு கேள் என்று சாயத் தோள் கேட்கும் பெண்ணை புணர்ச்சிக்கு அழைகிறாளென தப்பர்த்தம் கொள்ளாதே", சுகிர்தாராணியின் வெளிப்பாடு படு நியாயமானது. இன்னும் மேலே சென்று சுயபுணர்ச்சி, பன்னாடை, பரவியபோது மனம் களித்தவன் நீதானே, என்று விளாசுகிறார். முற்றிலும் விரசமே இல்லாமல். கருத்துடன் சாடுவது சாட்டையால் விளாறுவதற்கு சமம். இதைப் படிக்கும்போது எழுதியவரைப் போற்றத் தோன்றும். கைதட்டிக் கூப்பிடத் தோன்றாது. தூற்றத் தோன்றாது.

அடுத்து ஈழத்து கொடுமைகளில் உச்சமாய், தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவம் பாலியல் பலாத்காரம், கூட்ட கற்பழிப்பு செய்தபின் "யோனியில்" குண்டு வைத்து கொன்றதை கவிதையாய் படித்தது. பெண்கள் யோனி'யென்று எப்படி எழுதலாமென்ற விவாதம் எனக்கு இங்கு பைத்தியக்காரத்தனமாய் பட்டது. கவிதையைப் படித்தவுடன் ஈரக்குலை நடுங்கியதென்றால் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி... "யோனி" என்ற வார்த்தைப் பிரயோகத்தால் அல்ல.

இம்மையிலிருந்து மறுமை வேண்டிய பட்டினத்தார் பாடல்களில் இல்லாத ந(ளின)யமான கெட்ட வார்த்தைகளா? ஏன் பெண்புலவர்கள் அக்காலத்திலே சுகிர்தாராணி போல் எழுதவில்லையென அடிக்கடி தோன்றியதுண்டு. ஆண் சுகம் தவிர்த்தால் பெண்களுக்கும் மறுமை கிட்டுமென ஒரு காரைக்கால் அம்மையாரோ , ஔவையாரோ (இருவரும் பாவம் அழகிய உருவத்தை கடவுளை வேண்டிப் போக்கிக் கொண்டார்கள்) ஏன் எழுதவில்லை?

//ஆனா அரிப்பு சகிக்கலை//

அப்படின்னா "புணர்ச்சி", "யோனி" போன்றவற்றை ஒத்துக்கிட்ட குசும்பனுக்கு "அரிப்பு" சொல்லப்பட்ட இடம்/பொருள்/ஏவல் சகிக்கலை.மூக்கர் எழுதினது பிரசவம் பற்றி. அதன் வலி, மகத்துவம், பக்கத்திலிருந்து பார்க்க கணவனால் முடியுமாவெனும் உணர்வுப்பூர்வமான கேள்வி, பெண்ணின் வலி தாங்கும் பெருமை, நேசித்த மனைவிக்கு வலி தந்தாயே என்று பிள்ளக்கு பிருஷ்டத்தில் ரெண்டு வைப்பேன் என்னும் குடும்பக் காதல்...ஆஹா மஹோன்னதம். இந்த இடத்துல "அரிப்பு" எங்கப்பா வந்தது?

//எனக்கென்னவோ இந்த ஏற்பாட்டை நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என தோன்றுகிறது. காரணம் பெருகி வரும் மக்கள்தொகை. ஒரு பிரசவம் என்பது பெண்ணை பொருத்தமட்டில் மறுபிறவி. ஆனால், நிறைய ஆண்களுக்கு அது புரிவதில்லை, தெரிவதில்லை. அதனால்தான் ஒரு வருட இடைவெளி கூட இல்லாமல் வாரிசுகளாய் பெற்றுத் தள்ளுகிறார்கள். பிரசவ வேதனையையும் அவஸ்தையையும் அருகில் இருந்து பார்ப்பவனுக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு "அரிப்பு" வராது, மக்கள்தொகையும் மட்டுப்படும்.//

//அருகிலிருந்து பார்ப்பவனுக்கு அரிப்பு//

பார்ப்பவன் கணவன். பார்க்குமிடம் மனைவியின் யோனி (சிசேரியன் இல்லை என்றால்). யோனியைக் கிழித்துவரும் அவன்/அவள் சிசு. அதனால் ஆறு மாதம் அரிப்பு வராது. ஆகா..என்ன ஒரு புரட்சிகரமான சிந்தனை வெளிப்பாடு? என்னே ஒரு ஈனத்தன்மை?

மயான வைராக்கியம் ஆம்பிளைக்கு, பிரசவ வைராக்கியம் பெண்களுக்கு'ன்னு சொல்வா. அது கூட விரசமில்ல. வாழ்வின் பற்றுதலில் இதெல்லாம் சஜமப்பா. இதே பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததை வெறுப்புடன் பார்த்த கணவனை "பரவிய போது மனம் களித்தவன்" என்கிறார் சுகிர்தாராணி. ஆனால் சுப்புராணியோ??? கண்டிப்பாய் அப்பிராணியில்லை.

ஐயய்யோ....ரெண்டு படம் போட்டு ஆறு வித்தியாசம் காமிக்க வைச்சுட்டாளே...ஈ(ஏ)சுவரா...

ஒரு நல்ல பதிவு கேனத்தனமான பின்னூட்டத்தால் திசை திரும்புமென்பதற்கு மூக்கரின் "பிரசவ காட்சி" பதிவு சிறந்த எடுத்துக்காட்டு. புணர்ச்சி, யோனி ஒத்துக்கிட்ட குசும்பன் அரிப்புக்கு ஜகா வாங்கின காரணம் இதுதான்.

பரி பாசு... நீரும் புரிஞ்சிண்டேளா??? "அரிப்பு" தப்பில்ல கண்ணா...சுப்புலொட்சுமி "சொறிஞ்ச" இடம்தான் தப்பு.

கார்த்திக்காரு... நீரு என்னோட பெரிய கமெண்டைப் பார்க்கலை போலிருக்கு. அதான் ஆணாதிக்கம், ஆண் பதிவாளர் எழுதியிருந்தா, அப்படி யிப்படின்னு பதில் பதிவுல சொல்லியிருக்கேள்.

நாந்தான் சொன்னேனையா "பாட்டுப் பாடியிருப்பேன்"ன்னு. நம்பிக்கையில்லன்னா மூக்கரோட பதிவுல "அரிப்பு சொறிஞ்சு" பாரும். அந்தாதி எழுதுறேன். அ(ஆ)ப்புறம் சொல்லுங்கோ குசும்பனோட ஆணாதிக்கத்தை...

No comments: