Monday, June 07, 2004

வாருங்கள் குசும்புவோம்

ஒரே இரவில் (!) புகழ் (famous Overnight) என்பது இதுதானா? பிளாக் லிஸ்ட்ல இப்போதான் சிவப்பு விளக்கு சுத்துது.

அதுக்குள்ள பல (???) பேரு குசலம் விசாரிச்சுட்டாங்க.

முதலாமவர் சங்கர். இவரே சொல்லிக்கோள்வது போல் இவருக்கு திரு(ட்டு) முகம். ஒண்ணும் தெரியாத பாப்பா...ஆனா ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புத்தகம் படிப்பவர். தேங்கா மாங்கா பட்டாணி வேணுன்னா இவரைக் கேளுங்க...ஸாரி படிங்க...

இரண்டாமவர் பரி. அவரது பதிவில சின்ன குசும்பு செஞ்சேன். நம்ம சைட்டுக்கு (முருகா ... பதிவுக்கு) வந்தார். சூப்பர் குசும்பர்'னு பட்டமும் தந்துட்டார். பெ(ப)ரியவா சொன்னா பெருமாள் சொன்னதா எடுத்துக்கிறேன். அவரோட பதிவு எனக்கு சுரங்கம். வேறெதுக்கு குசும்பு பண்ணத்தான்...

சத்தமில்லாம எட்டிப்பாத்துட்டு எச்சமே (ஹிஹி கமெண்ட்ஸ் பாசு) போடமல் போன குப்ஸாமி, பரியோட பதிவுல எழுதியிருக்கார். இவரோட பதிவைப் படித்தேன். ஆஹா...விவகாரமான ஆளு. சுருக்கமாச்சொன்னா கொடைச்சல் பார்ட்டி. இவரது சென்னைத் தமிழ் பதிவுக்கு நான் அடிமை !!!

திரு வாசன் தனது ஹோம் பேஜே குடுக்கல. குசும்பு செய்வேனோன்னு பயம் போல...இன்னும் எட்டிப்பார்த்தவர்கள் சுந்தரவடிவேல், தங்கமணி, முல்லை, முத்து, சுரேன், கார்த்திக்ரமாஸ், சுரதா, இளையதாசன் இன்னும் பலர் (அதாவது... பலருக்காக காத்திருக்கிறேன்).

சுரதாவோ தமிழில் முதன்முறையாக நான் அறிந்து ஙௌ வன்னா தமிழில் பாவித்த முதல் மனிதர் நீங்கள்தான் அசத்துங்க.. என்று வாழ்த்தியுள்ளார். நன்றி. (பொறுப்பு கூடுதுப்பா)

குசும்பனோட வேலையே யாரையும் காயப்படுத்தாமல் நிறைய சிரிக்கவும், அவ்வப்போது சிந்திக்க வைப்பதும் தான். சிந்திச்சாலும் சரி...சிரித்தாலும் சரி...காயப்பட்டாலும் (அதாங்க அப்பப்போ கடிக்கறதுனால)...கமெண்ட்ஸ் எழுதுங்க...

அப்பத்தான் தெளிவா (?) குசும்பு பண்ண முடியும்.

நன்றியுடன்,
குசும்பன்.

1 comment:

பரி (Pari) said...

குசும்பனோட வேலையே யாரையும் காயப்படுத்தாமல் நிறைய சிரிக்கவும், அவ்வப்போது சிந்திக்க வைப்பதும் தான்.
>>>
இது தான் இன்னிக்குத் தேதிக்குத் இணையத்துல முக்கியமான தேவை. இத யார் பண்ணினாலும் 'ஓ' போட்டு உற்சாகப்'படுத்தறது'தான் என் வேலை :-)

பெ(ப)ரியவா சொன்னா பெருமாள் சொன்னதா எடுத்துக்கிறேன். அவரோட பதிவு எனக்கு சுரங்கம். வேறெதுக்கு குசும்பு பண்ணத்தான்...
>>
நான் ஒரு பொடியனுங்க :(

வாங்க வாங்க வந்து நிறைய குசும்பு பண்ணுங்க :-)