Friday, July 22, 2005

இஸ்கா மத்லஃப் க்யா ஹை

இதுவொரு தமிழ்ப்பதிவா? ஞானத்தின் பீடங்கள் கூறுகின்றது. தூய தமிழை தார்பூசி யாம் வளர்க்கும் நேரத்தே பின்னூட்டங்களில் பேதமை வளர்க்கும் ஏஜண்ட் பீடங்களை நினைத்தால் எமக்கு சிரிப்பு வருகின்றது. பேதமை பேதமை...

ரமேஷ் பாசு... ஷாந்தி ஷாந்தி ஷாந்தி...

கொஞ்சம் நிதானமா பேசுவோம்

அநாகரிக பின்னூட்டங்களை வேண்டி விரும்பியவர் வலைப்பதிவில் யார்? அதை எதிர்த்து குற்றம் சாட்டவில்லை என்ற ஒரே காரணத்திற்காக புஷ்ஷைப் போல் "Either you are with US or with them" என்று பொத்தாம் பொதுவாக கூறுதல் என்ன நியாயம்?

பரி "என்பவரோடு" இணையத்தில் எனக்கு பரிச்சயம் உண்டென்பதால் (உடனே அவர் வீட்டில் தக்காளி ரசம் சாப்பிட்டேன் என்னும் பின்னூட்டு வரக்கூடும் !!!) இவ்விடயத்தைக் கூறுகின்றேன். ஒருவகையில் உமது பின்னூட்டம் "எரிதம்" தான். என்னைப் பொறுத்த வரையில் உமது பின்னூட்டம் ஜீஜுபி... ஆனால் பரிக்குப் பிடிக்கவில்லை என்பதைத்தான் அவர் வெளிப்படுத்தியதாக நான் உணர்கின்றேன். அவரது புழக்கடையில் அவர் புழங்குவதின் விதிகளை நாம் மதிப்போம். அ·து அனைவர்க்கும் பொருந்தும். எனக்குத் தெரிந்தவரை ஆபாசத்தை அடியோடு வெறுப்பவர் பரி. ஆகையால் கண்டிப்பாக அவரது பதிவின் நோக்கம் ஓரிடம். உங்களுடைய எதிர் வினை ஓரிடம்.

மாயவரத்தாரே... உமது பதிவுகளையும், உமது பின்னூட்டங்களையும் தொடர்ந்து வாசித்து வருகின்றேன். உங்களது நேர்மையையும் அறிவேன். பரியையும் இணையத்தின் வாயிலாகவே அறிவேன். அவரும் என் மதிப்பில் உள்ளவர்.

Shake Hands BUDDIES !!!!

நான் சொல்ல வந்ததில் தவறிருப்பின் என்னை நீங்கள் இருவரும் மன்னிக்கவும்.

இணைய வலைப்பூவில் நட்பூ வளர்ப்போம் !!!

5 comments:

மாயவரத்தான் said...

நன்றி குசும்பனாரே..

இது குறித்து வெளி பதிவுகளில் நான் வாய் திறப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். ஆனாலும் உங்கள் மீதுள்ள மரியாதையின் காரணமாக தான் இங்கு வந்தேன். உங்கள் கருத்துக்கு நன்றி.

முகமூடி said...

// ஏஜண்ட் பீடங்களை நினைத்தால் எமக்கு சிரிப்பு வருகின்றது // நாரதர் வேலை செய்து சிண்டு முடிந்து சண்டை வளர்த்து குளிர் காயும் இந்த மாதிரி ஏஜண்டுகளைத்தான் CIA ஏஜண்ட் என்பார் எம்தலைவர் சுசா... இந்த ஏஜண்டுகளை கண்டால் உள்ளம் கொதிக்க முரசு முழங்க போர், போர், வெற்றிவேல், வீரவேல் என தமிழன் எல்லாம் போருக்கு செல்ல, இங்கே சிலருக்கோ சிரிப்பு வருகிறதாம்... பேதமை பேதமை

பரி (Pari) said...

நன்றி குசும்பன்.

>>>>
அவரது பதிவின் நோக்கம் ஓரிடம். உங்களுடைய எதிர் வினை ஓரிடம்.
>>>>
ஆத்திர அவசரத்தில் இதெல்லாம் புரியாது. நான் செய்ய ஒன்றுமில்லை.

குசும்பன் said...

ஒரு பின்னூட்டம் விடுவதற்காகவும், பதிவு போடுவதற்காகவும் நான் இவ்வளவு சிந்தித்ததேயில்லை. புரிதலுக்கு நன்றிகள்'ன்னு போட்டுட்டு ஓடிப்போயிடலான்னு எண்ணம்தான். ஆனாலும் முடியவில்லை.

மாயவரத்தார் கேள்விக்கு ஒரே பதில். 'பின்னூட்டம் உமதுடையது' என்ற ஒரே காரணம் தான் பரி, செல்வராஜ் போன்றோரின் ஆதங்கமென்பது என் எண்ணம்.

பரி அவர்களுக்கு //நான் செய்ய ஒன்றுமில்லை.// ஏன் அப்படி சொல்லணும்? நான் வேண்டுவதெல்லாம் கைகுலுக்கல். ஒரு ஸ்மைலி! மாயவரத்தார் கொலைக் குற்றம் புரியவில்லையே?

மாயவரத்தாரிடமும் இதே வேண்டுகோள்... தயவு செய்து ஸ்மைலியுங்கள்.

ஆபாசப் பின்னூட்டம் இட்டவர்க்கும் ஒரு வேண்டுகோள். வேண்டாம் அன்பரே... ஸ்மைலியுங்கள்... உங்களோடு உலகும் ஸ்மைலிக்கும்....

Vijayakumar said...

//இணைய வலைப்பூவில் நட்பூ வளர்ப்போம் !!!//

இஸ்கா மத்லஃப் குசும்பு ஹை

//ஒரு பின்னூட்டம் விடுவதற்காகவும், பதிவு போடுவதற்காகவும் நான் இவ்வளவு சிந்தித்ததேயில்லை. //

உஸ்கா மத்லஃப் அல்வா ஹை