Thursday, May 04, 2006

மு.வ.வ.மா

{செவ்வகமேசை மாநாடே சிறந்தது என்று முகமூடியார் திருவாய் (பீர் ஊற்றிக்கொள்வதற்காக) திறந்தவுடன் முற்போக்கு வலைப்பதிவர்களுக்கு பொத்துக் கொண்டு வந்துவிட்டது. இதோ வட்டமேசை மாநாடே சிறந்தது என்று நிலை நாட்ட முற்போக்கு வலைப்பதிவர் வட்டமேசை மாநாடு. வழமை போல பார்த்திபன்+வடிவேல் ஆஜர்}

வடி: அடி ஆத்தீ... தமுக்கம் மைதானத்தையே வளைச்சுப் போட்டிருக்காய்ங்க. அம்பூட்டு முற்போக்கு ஆளுங்களா?
பார்: அடச்சீ நல்லா பாரு... அதோ தூரத்துல ஒரு சின்ன மரத்தடி தெரியுது பாரு. கீழ 10-15 சேரு இருக்குதுல்ல. அவ்வளவு பேர்தான். கவலைப்படாத
வடி: அதுசரி... சரி வாப்பா... கவரேஜ் பொழப்பப் பாக்கலாம்.

(மாநாட்டுத் தலைவரான அலாஸ்கா மணி கணீர்க்குரலில் தொடங்குகின்றார்)

மணி: சாதிகள் இல்லையடி பாப்பா
வடி: ஆஹா அப்பிடியே முண்டாசு பாரதி நேர்ல வந்த மாதிரி இருக்குப்பா
பார்: டேய் அடங்கு. மேல கவனி
மணி: சாதிகள் ஒழிய இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்
(பிகில் பறக்கின்றது. சத்மா என்பவர் "நன்றி" என்று உரத்துக் கூவுகின்றார்)
வடி: அட என்னாப்பா இது சிலேட்டுல எச்சித் துப்பி அழிக்கிற மாதிரி சின்னப்புள்ளதனமால்ல இருக்கு
மணி: மனு சொன்ன சாதிகள் இந்து மதத்தில் மட்டும் இருப்பதினால்...
வடி: அண்ணே மத்த மதத்திலும் சாதி இருக்குறதா மா. வெங்கடேசன் புக்குல படிச்சு இருக்கேனே
பார்: பாத்தியா கொஞ்சம் படிச்ச உனக்கே புரியுது. பாரு இந்தாளைச் சுத்தி இருக்கிறவனுங்களை...
மணி: சாதி அடிப்படையில் தொழில் செய்வது இந்து மதத்தில் மட்டுமே...
வடி: அடப்பாவிங்களா அப்பிடி கூட இருக்குதா? அண்ணே அப்ப நம்ம ஜாதி என்னாண்ணே?
பார்: ம்ம்ம் நடிக்கிற ஜாதி. இப்ப ரொம்ப முக்கியம்.
வடி: அண்ணே எனக்கென்னவோ அந்தாளுதான் நம்மை விட நல்ல பெர்பார்மென்ஸ் கொடுக்கிறாப்புள. உன்னோட பச்சமண்ணு படத்துல சான்ஸ் குடேன்பா
பார்: ஏண்டா எனக்கே ஆப்பா? நான் நல்லா இருக்குறது புடிக்கல?

(அடுத்ததாக சிங்கைக் காட்டான் எழுகின்றார். "தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது..." என்ற 'ஜெய்ஹிந்த்' படப்பாடல் ஒலிக்க...)

சிகா: ஜெய்ஹிந்த்!
வடி: ஆஹா ஆஹா என்னா நாட்டுப்பற்று என்னா நாட்டுப்பற்று
பார்: டேய் அடங்க மாட்ட நீ
சிகா:
'கருநாடகம்
காவிரிநீர் தரவில்லை
ஜெய்ஹிந்த்'

(ஹைக்கூ கேட்டு கூட்டத்தின் கரகோஷம் விண்ணைப் பிளக்கின்றது. சத்மா என்பவர் "நன்றி" என்று பரபரக்கின்றார்)
வடி: ஏம்ப்பா இதுக்கு என்னாத்துக்கு ஜெய்ஹிந்த்?
பார்: அதாவது தண்ணி தராத அந்த ஸ்டேட்டோட சேந்து இந்தியாவுல நாம ஏன் இருக்கோணுமின்னு நக்கல்
வடி: இதப்பார்டா வென்ரு. ஏண்டா முத்தம் கேட்டு பொண்டாட்டி குடுக்கலேன்னா அது ஊடலாக் கூட இருக்கலாமுல்ல. சும்மா ஒரு முழம் மல்லீப்பூ, கால்கிலோ அல்வா கொடுத்து அதுவும் முடியாட்டி அட்லீஸ்ட் அன்பா பேசினாவாவது மீட்டருதானப்பா. அதுக்காக டைவர்ஸா பண்ண முடியும்?
பார்: டேய் நீ ஓவரா புரிஞ்சு பேசுற. இது முற்போக்கு இடம். ஞாபகம் இருக்கட்டும். அல்வா கொடுத்தேன்னு சத்தமா சொன்னே (கக்)கூஸாவஸந்த் வந்துடுவாரு. அப்புறம் பொழப்பு நாறிடும்
சிகா: கொஞ்ச நாட்களாக நான் ஏர்போர்ட்டைச் சுற்றி வந்தவரை எனக்குத் தெரிந்து 95% விமானங்கள் வெள்ளையாக உள்ளன. 3% சிவப்பு வர்ணமடித்தும், 2% பச்சை வர்ணம் அடித்தும் இருந்தன. மீதி 1% கூட இவற்றின் கலவையாகவே இருந்தன.
வடி: சரி அதுக்கென்ன இப்போ?
சிகா: திராவிட நிறமான நமது நிறத்தில் ஒரு விமானம் கூட விடக்கூடாதா? ஏனிந்த ஆரிய நிறவெறி பிடித்து அலைகின்றனர்? ஜெய்ஹிந்த்.
வடி: அட வீணாப்போனவனுங்களா... இப்பிடியெல்லாம் கூட யோசிக்க முடியுமா? ஜெய்ஹிந்த்
பார்: பாரு பாரு உனக்குக் கூட ஒட்டிக்கிடிச்சு. எப்பிடியோ இப்பிடியாவது இந்த நாதாரிங்க ஜெய்ஹிந்த் சொல்லட்டும்

(கூஸாவசந்த் செருமியபடி)
கூஸா: ஜலம், திருக்கன்னமுது, சாத்தமுது, ஆத்து போன்ற நீச பாஷையை இளவயதிலேயே விஷவித்தாக பதியவைக்கும் அவாள்களை அடித்துத் துரத்த வேண்டும்

(கூட்டம் குன்ஸாகக் கத்துகின்றது. சத்மா என்பவர் "நன்றி" என்று உரத்துக் கூவுகின்றார்)

(வழியில் போய்க்கொண்டிருந்த போக்கன் ஒருவர் வெகுண்டு "டேய் நான் உன் கிட்ட கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாம என்னா மறுபடியும் மறுபடியும் இங்க பிலிம் காட்டுறியா. நீ **** பொய்யா... நீ **** பொய்யா எனக்கொரு உம்மை தெரிஞ்சாகணும்" என்று எகிற அவரை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்துகின்றார்கள். கூஸா கூலின்றி சைலண்ட் ஆகின்றார்)

வடி: அண்ணே யாருண்ணே அந்த டென்ஷன் பெர்வழி?
பார்: யாரோ பாவம் வழிப்போக்கன்னாம். கூஸாவோட என்ன காண்டோ தெரியல. கூஸா சவுண்ட் வுட்டாலே ஆஜராகி பேஜார் பண்றாரு

(குறுந்தாடியுடன் பெயரின்றி ஒருவர் எழுகின்றார்)

பெய: அதிகாலைச் சலசலப்பு; பகல் நேரங்களில் பல்லிகள் கிறீச்சிடும்; விழித்தெழுந்து அறிந்த ஒரு செயல் அதுவேயென அலறுகின்றன சேவல்கள்; எரியும் வயிறோடு நான் பசியுடன் நினைவுகள் கிளறி அழுகின்றேன்; நானிட்ட மீதத்திற்காக பட்டப்பகலில் பாதாளக் கண்களுடன் அலைகின்றன தெரு நாய்கள். அவசரமான அவசரம்; வேண்டாதோர் எறிந்த எச்சிலின் எச்சங்களை நாடவும்; வெற்று இலைகளில் ஒட்டிய உணவுத்துகள்களை ஓரவும்; வெறியைப் போர்த்துக்கொண்டு ஆடுகின்றன அம்பலமான துன்பியல் நிருத்தம் வைரவன்கள்; அது கண்டு...

(இதற்கு மேல் பொறுக்க முடியாமல் கூட்டம் கைதட்ட, சத்மா என்பவர் "நன்றி" என்று மறுபடியும் உரத்துக் கூவுகின்றார்)

வடி: அண்ணே புள்ளியே வைக்காம, மூச்சு முட்ட பேசுறானே இந்தாளு பேசினது என்னா பாஷை? தமிளா? எழவு எனக்குத்தான் புரியலியா?
பார்: இது முற்போக்கின் முன்நவீனத்துவம். அவருக்கே புரியுமாங்றது கஷ்டம். சும்மா புரியாவதி மாதிரி தொணதொணக்காதே
வடி: அது சரிப்பா. நன்றி நன்றி'ன்னு ஒரு பொம்பளை ஏன் எப்பவுமே கூவிக்கினே இருக்கு?
பார்: அதுவா? அது வந்து முற்போக்கின் முன்விமர்சனம்
வடி: அது என்னா எழவு?
பார்: இந்த மாதிரி இடத்துல "உள்ளேன் ஐய்யா" போட்டா நீயும் முன்னேறிய முற்போக்குவாதிதான் புரியுதா?
(மயங்கிய வடிவேலுவிற்கு நீர் தெளிவிக்கப்படுகின்றது)
பார்: பாத்தியா இதுக்கே அசந்துட்டியே. இம்மாம் நாள் இவிங்களோட அட்டகாசத்தை பொறுத்துக்கிட்டு இருக்கானுங்களே அவனுங்களுக்கு என்னாத்த தெளிக்கிறது?
வடி: அத வுடுப்பா. அதாவது பரவாயில்ல. இவனுங்களோட கூடவே இருந்து குலவை போடுறவனுங்களுக்கு என்னா குலை அடிச்சு தெளிவிக்கிறது?
பார்: கஷ்டம்தான். சரி சரி வா. நாளைக்குதான் மாநாடு முடியுதாம். கவரேஜ் கொடுக்கலின்னா ஜனங்க கோவிச்சுவாங்கள்ல
வடி: (நொந்தபடி) அது சரி....

(தொடரும்)

9 comments:

ஜெ. ராம்கி said...

உள்ளேன் ஐயா! :-)

Muthu said...

//(கூஸாவசந்த் செருமியபடி)//

:)

நெறைய பேர் யாருண்ணே தெரியலையெ...

குசும்பன் said...

ரரா,

நீங்க 'யெஸ் ஸார்'ன்னு டெல்லி தமிழ்லேயே சொல்லலாம். :-)

குசும்பன் said...

தமிழினி,

அய்யய்யோ வாங்க முத்து பாஸு! உங்களுக்கே நெறைய பேர் யாருன்னே தெரியலியா?

இத்தான வோணாங்றது? ;-)

முகமூடி said...

// அண்ணே எனக்கென்னவோ அந்தாளுதான் நம்மை விட நல்ல பெர்பார்மென்ஸ் கொடுக்கிறாப்புள //

// திராவிட நிறமான நமது நிறத்தில் ஒரு விமானம் கூட விடக்கூடாதா? ஏனிந்த ஆரிய நிறவெறி பிடித்து அலைகின்றனர்? //

// இதற்கு மேல் பொறுக்க முடியாமல் கூட்டம் கைதட்ட //

// அது சரிப்பா. நன்றி நன்றி'ன்னு ஒரு பொம்பளை ஏன் எப்பவுமே கூவிக்கினே இருக்கு? //

:))

**

// நெறைய பேர் யாருண்ணே தெரியலையெ... //

:))))))))))))))))

Anonymous said...

/புரியாவதி..../
யாருப்பா அது 'சதி' லீலா 'வதி' யா?

doondu said...

அந்நியன் என்ற வெங்கட்ரமணிக்கு பதில்:-

//நான் என் ஜாதியை பெருமையாக சொல்பவன் இல்லை என்பது என் பதிவுகளை படித்தாலே தெரியும். சொல்லப்போனால் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உயர்வுக்கு பாடுபடும் ஒரு லாபத்துக்கல்லாத அமைப்பில் சில ஆண்டுகள் தன்னார்வலராக (volunteer) பணிபுரிந்தேன். என்னை ஒரு Moderator ஆக கருதி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.//

வெங்கட்ரமணி, நீங்கள் பிறப்பால் ஒரு பார்ப்பனன் என்பது எங்கள் இயக்கத்திற்கு முன்பே தெரியும். உங்களின் தன்னார்வத் தொண்டுகளுக்கும் அது சார்ந்த செயல்களுக்கும் மரியாதை செலுத்துகிறோம். நீங்கள் இன்னமும் செயல்படுவ்தாக இருந்தால் தயவு செய்து எமக்கு மின்மடல் இடவும். நாங்களூம் எம்மை இணைத்து தொண்டுகள் செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்.

//நீங்கள் நிஜமாகவே ஜாதியில்லாத சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்தை கொண்டவர்களாக இருந்தால் ஏன் ஒரு தீவிரவாத இயக்கம் போல் செயல்படுகிறீர்கள்?//

பிரச்னையின் ஆரம்பம் தெரியாமல் நீங்கள் உளறுகிறீர்கள்! முதன்முதலில் எங்கள் இயக்கம் அருமையாகத்தான் ஆரம்பமானது. முதன்முதலில் நல்ல கருத்துக்களாக முன்வைத்தோம். ஆனால் கேடுகெட்ட சில பார்ப்பன வெறி பிடித்த பைத்தியக்கார பார்ப்பனர்கள் பிரச்னையை திசைதிருப்பவே நாங்கள் சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளைப் பின்பற்றினோம். எங்கள் இயக்கம் தீவிரவாத வழிமுறைகளைப் பின்பற்ற மாயவரத்தான் ரமேஷ்குமாரும் டோண்டு ராகவனும் முழுமுதற்காரணம். இன்றைக்கும் எம் இயக்கம் ஜாதி, மதம் கடந்த தொலைநோக்குப் பார்வையோடுதான் சிந்திக்கிறது, எழுதுகிறது. சில இடங்களில் தன் ஜாதியை பெருமையாகச் சொல்லும் பார்ப்பான்களை தீவிரமாக எதிர்க்க வேண்டி இருக்கிறது.

//இத்தனை பேரை, குறிப்பாக பிராமணர்களை ஏன் குறி வைக்கிறீர்கள்? அவர்கள் எல்லாரும் ஜாதிவெறியர்கள் என்று என்னால் நம்பமுடியவில்லை.//

அது என்ன குறிப்பாக பார்ப்பனர்களைச் சொன்னதும் உங்களுக்கு பீறிக் கொண்டு வருகிறது??? உங்களின் பார்ப்பன புத்தி எப்படிச் சிந்திகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். நாங்கள் குறிப்பாக எல்லாம் பார்ப்பனர்களைக் குறிவைக்கவில்லை. நான் வடகலையில் பிறந்த ஒரு ஐயங்கார், இந்த ஜாதியில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று தமிழ் வலைப்பதிவர்கள் முன்னிலையில் முதமுதலில் சொன்னது உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன். அதனாலேயே நாங்கள் எதிர்க்க ஆரம்பித்தோம். எந்த தலித்தாவது நான் தலித்தாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று வலைப்பதிவில் எழுதி இருக்கிறானா? ஏன் மிருகத்தினைவிட மிகக்கேவலமான பாப்பான் மட்டும் இந்த இழிசெயலைப் புரிந்தான்? அதுபற்றி கொஞ்சமாவது நீ ங்கள் சிந்தித்தீர்களா? உம் கூட்டம் சிந்தித்ததா??? முதன்முதலில் வலைப்பதிவு உலகில் நான் இந்த ஜாதி என்று எவன் கூறினான்? உங்கள் ஜாதியைத்தவிர வேறு யாராவது கூறி இருக்கிறானா? அப்படி எவனும் சொன்னால் தயவு செய்து தெரிவிக்கவும்.

//ஏன் தமிழ்மணம் போன்ற ஒரு ஆக்கபூர்வமான வலைத்தளத்தில் பெண்களை நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என்கிறீர்கள்? ஏன் உங்கள் கொள்கைக்கு ஒத்துப்போகாத விவகாரமான பின்னூட்டங்கள்?//

எது கொள்கைக்கு ஒப்பாத பின்னூட்டங்கள்? நீங்கள் பாப்பான் நல்லவன் வல்லவன் என்பீர்கள். கைகொட்டி வாய்பொத்திக் கேட்டுக் கொண்டிருக்க நாங்கள் என்ன மட ஜென்மமா? அந்தக் காலமெல்லாம் மலையேறி விட்டது வெங்கட்ரமணி ஐயங்கார்! வேற உலகம் போங்க. கைபர் போலன் கணவாய் வழியாக பிழைக்க வந்த வந்தேறிக் கூட்டத்திற்கே அவ்வளவு இருக்கும்போது இந்த மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?

தமிழ்மணம் போன்ற ஆரோக்கியமான வலைத்தளத்தில் முதன்முதலில் என் ஜாதி இதுவென்று மார்த்தட்டிச் சொன்னது ஒரு அய்யங்கார். அன்று அவனைத் தட்டிக் கேட்காமல் எங்கே நீங்கள் சென்று இருந்தீர்கள்? செரைக்கவா? அன்றே அவனைத் தட்டி அவனை தனது தமிழ்மணத்தில் இருந்து நீக்காமல் காசி என்ற ஒரு இழிபிறவியும் அவனை வைத்திருந்ததால்தான் சண்டை பெரிதானது. இன்னமும் சண்டை நிறைவுறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உங்களைபோன்ற இன்னும் ஓராயிரம் மென்பொருளாளர்கள் வந்தாலும் எங்கள் இயக்கத்தின் மயிரைக்கூட உங்களால் புடுங்க முடியாது! எங்கள் இயக்கமும் மென்பொருளில் ஊறியது. எனவே உங்களுக்கு பெரிய சவாலை நாங்கள் கொடுப்போம் என்பது உண்மை.

தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டின்மூலம் தம்மை இணைத்துக் கொண்டு எழுதும் பெரும்பாலான பதிவாளர்கள் இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்வது? அல்லது நிறுத்துவது? ரொம்ப சிம்பிள். முதலில் டோண்டு என்பவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள். எங்கள் இயக்கம் தாமாகவே அடங்கிவிடும். எங்கள் தலைமைக் கழகம் மூலம் ஒவ்வொருவருக்கும் சொல்லி அனுப்பி எங்கள் இயக்கத்தினரை நேர்மையுடன் கருத்துகள் எழுதச் சொல்கிறோம். ஒன்று தெரியுமா உமக்கு? பார்ப்பான்களின் தீவிரவாதம் அதிகமாக அதிகமாக எங்களின் இயக்க தோழர்களும் அதிகமாகிறார்கள். ஆப்பு, போலி அன்னியன் போன்றோர் எம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து செய்தி அனுப்பி இருக்கிறார்கள்.

முதலில் டோண்டுராகவனையும் மாயவரத்தான் ரமேஷ்குமாருக்கும் உங்கள் ஆலோசனையைச் சொல்லுங்கள். அப்படி இல்லாமல் அவர்களோடு சேர்ந்துகொண்டு பார்ப்பன சமுதாயத்துக்காக நீங்களும் குரைப்பீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்கியாள்வது என்று எங்களுக்கும் தெரியும்.


//என் பேரில் உள்ள போலி உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர் இல்லை என்றால் உங்கள் இயக்கம் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்.//

உண்மைதான். இவ்வளவுக்கும் காரணம் யார்? மிருகத்தினை விடவும் கேவலமாகச் செயல்பட்ட நரசிம்மன் ராகவன் என்ற வடகலை அய்யங்காரால்! ஏன் சாவதானமாக அவனை மறந்து விடுகிறீர்கள்? ஏன் மாயவரத்தான் ரமேஷ்குமாரை மறந்து விடுகிறீர்கள்? இந்த இருவரும்தானே எம் இயக்கம் வளர முக்கிய காரணமானவர்கள்!!!


//கீழ்க்கண்ட புனைபெயர்களில் எவர்கள் உங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லமுடியுமா?
மத்தளராயன்
திருப்பாச்சி
போலியன்//

இவர்கள் எம் இயக்கம் இல்லை. விட்டால் ஊரில் உள்ள எல்லா பார்ப்பன எதிர்ப்பாளர்களையும் எம் இயக்கம் என்பீர்கள் போலத் தெரிகிறது! உங்களுக்கு என்ன? வலைப்பதிவாளர்கள் எல்லோரும் பார்ப்பான் வாழ்க என்று கோஷம்போட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா??? உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா???

//இதைப்போல் நிறைய பேர் கிளம்புவதால்தான் தமிழ்மணத்தின் நலன்மேல் அக்கறை கொண்ட எங்களைப்போன்றவர்கள் இதற்கு தொழில்நுட்ப தீர்வுகள் கொண்டுவர வேண்டியதாய் இருக்கிறது. உங்கள் பதிலுக்கு காத்திருப்பேன்.//

டோண்டுராகவன் போன்ற கீழ்த்தரமான இழிபிறவிகள் தங்கள் ஜாதியைப் பெருமையாகச் சொன்னதால்தான் எங்கள் இயக்கமே ஆரம்பமானது. அவன் முன்வந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எங்கள் இயக்கம் முற்றாக கலைக்கப்படும். அவனுக்கு ஆதரவுக்கரம் அளிக்கும் காசி போன்ற கீழ்த்தரமானவர்கள் என்னதான் நினைத்தும் எங்கள் முடியைக்கூட அசைக்க முடியவில்லை!!! நான் முன்பே சொன்னதுபோல எத்தனை மென்பொருள் வல்லுனர்கள் வந்து தீர்வுகள் கண்டாலும் இதனைக் கட்டுபடுத்த இயலாது. காரணம் எமக்கும் மென்பொருள் தெரியும் என்பதை நீங்கள் வசதியாக மறந்து விடுகிறீர்கள். நம்மைவிட எதிரி பன்மடங்கு வலுவானவன் என்று நினைத்து நீங்கள் உங்கள் முயற்சியைத் தொடங்கினால் எளிதில் எங்களை வென்றுவிடலாம். ஆனால் கேவலமான பார்ப்பன இனம் அவ்வாறு நினைக்க மறுக்கிறது. இதுதான் உண்மை.

நீங்கள் மட்டுமில்லை, இன்னும் ஓராயிரம் மென்பொருள் வல்லுனர்கள் வந்தாலும்கூட எம் இயக்கத்தினை அழிக்க முடியாது. டோண்டுராகவன், மாயவரத்தான் ரமேஷ்குமார் போன்ற இழிந்த பிறவிகள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே எம் இயக்கம் கலைக்கப்படும். அதுவரையில் எம் விளையாட்டு தொடரும். முடிந்தால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்.

போலிடோண்டு தலைமைக் கழகம்
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி
துபாய்.

முகமூடி said...

கிழிஞ்சிது லம்பாடி லுங்கின்னு கேள்விப்பட்டிருக்கியா வாத்யாரே... இங்கன ச்சூடு ::

பெரும்பான்மையான முகமூடிப் பதிவுகள் நகைச்சுவை உணர்வை வெளிக்காட்டவும் கிண்டலுக்காகவும் உருவாகுகின்றன. இத்தகைய பதிவுகளில் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து பதிந்து வருபவர்களில் தவறாமல் நம் நினைவுக்கு வருபவர்களில் ஒருவர், 'இணைய குசும்பன்'. படிக்கிற எவரும் அந்த நிமிடம் முறுவலித்துவிட்டு பின் மறந்து போகிற மாதிரி நையாண்டியும் நக்கலும் தெறிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் வலைப்பதிவுகளில் இவரது குசும்புப் பதிவுகள் பிரபலம். நகைச்சுவைத் துணுக்குகள் நிறையவே இவரது பதிவில் இருக்கும். அதிலும் முக்கியமாக சக வலைப்பதிவர்களை இவர் கிண்டல் செய்யும் விதமே அலாதி! இதற்கென்று ஒரு ரசிகர் வட்டமே உண்டு.

பலநேரங்களில் புதிய வலைப்பதிவர்களுக்கு, ஏன் சில மூத்த வலைப்பதிவர்களுக்குமே கூட இவரது எழுத்துக்கள் புரிவதில்லை. இருந்தபோதும் இவரது எழுத்துக்களை யாரும் படிக்கத் தவறுவதில்லை! அதிகம் பார்வையிடப்படும் பதிவுகளில் இவரது பதிவும் ஒன்று!

இணையக் குசும்பனின் கிண்டல்களின் எல்லையும், அவை பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்பதும் இன்றும் கேள்விக்குறியாக இருந்தாலும், அவர், நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து எழுதி வருபவர் என்பது அவரைத் தொடர்ந்து படித்து வரும் பலரின் கருத்து. படிக்க:
இணைய குசும்பன்

ரவி said...

யாரையோ தாக்குறீங்க தெரியுது...ஏன் ?

நடுவுல காமெடி பதிவுக்கு சம்மந்தமே இல்லாம ஒருத்தர் வந்து கடுகடுக்கிறாரு...

என்ன ஆச்சி...???